Jump to content

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’

Recommended Posts

5 hours ago, புங்கையூரன் said:

உண்மை...தான்!

இவர்கள் தானே.....யேசுநாதர்....ஒரு மீனையும் , ரொட்டியயையும் வைத்து....எல்லோரது பசியையும் போக்கினார் என்று கூறுகின்ற அறிவியலாளர்கள்...!

ஜெகோவா.....கடலைப் பிளந்து மறுகரைக்குப் போனார் என்னும் போது....வாய்களை....அகலப் பிளந்து...ஆமோதிப்பவர்கள்!

இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது....மற்றைய மதங்களை விமரிசிப்பதற்கு?

யேசு நாதரின்.... பிறப்பே....கிருஷ்ணனிடமிருந்து கடன் வாங்கியது....!

புங்கை  இவை எல்லாம் அறிவியல் என்று  உங்களுக்கு யார்  சொன்னது?  அதை கூறியது மதங்கள் அல்லவா? அறிவியலாளர்கள் யாராவது  அப்படி கூறினார்களா? இல்லையே!  இவற்றை எல்லாம் அறிவியல் என்று நீங்களே  கற்பனை செய்து அதற்கு அதற்கு நீங்களே பதில் அளித்துள்ளீர்கள். 

நான் கூறியது ஒரு மதம் கூறிய முட்டாள் தனங்களை கண்ணை மூடிக்கொண்டு உண்மை என்று நம்புபவர்கள் தான்  அதிகமாக  மதம் மாறுபவர்கள். எனக்கு  தெரிந்து இந்து மதத்தை தீவிரமாக கடைப்பிடித்து புலம்பியவர்கள்  மதம் மாறி இன்று  அல்லோயா என்று புலம்புபவர்கள். 

  அறவே மத்ததை நம்பாதவர்கள்  அல்லது இவை எல்லாம் பொய்கள் மூடத்தனங்கள்   என்று மனதுக்குள்  தெரிந்தும் சமூகத்திற்காக formality யாக கடைப்பிடிக்கும்,  மதங்களை  சீரியஸாக எடுக்காத எமது  சாதாரண மக்கள்   என்றுமே மதம் மாற மாட்டார்கள் . 

ஒரு மதம் கூறிய வடிகட்டிய முட்டாள் தனங்களை  அப்படியே ஏற்றுக்கொளபவர்களுக்கு தான்  மற்றய மதங்கள் கூறும் அதே போன்ற முட்டாள்த்தனங்களை விமர்சிக்கும் தார்மீக உரிமை இல்லை.

 கிருஷன்ர் பிறப்பு என்ற தமிழர் வாழ்வியலுக்கு சற்றும் தொடர்பில்லாத மூடத்தனம் போன்றதே யேசு நாதர் மீனையும், ரொட்டியையும் வைத்து  பசியை போக்கிய மூடத்தனமும்.  

எனது மதமான இந்து மத மூடத்தனங்களை நான் சுட்டிக்காட்டும் போதெல்லாம்  வெகுண்டெழுந்து அவனும் முட்டாள் தானே நான் மட்டுமா ஏன்று பொங்குவது அடிக்கடி நடப்பது தான். எம்மால்  தற்போது intensiv ஆக   கடைப்பிடிக்கப்படும் பல மூடத்தனங்களுக்கு வக்காலத்து வாங்குவதற்காக  ஐரோப்பாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே காலாவதியான மூடத்தனங்களை  உதாரணமாக காட்டுவதும் இங்கு வழமையாக நடப்பது தான். 

Link to comment
Share on other sites

  • Replies 412
  • Created
  • Last Reply
17 hours ago, ஈழப்பிரியன் said:

இது இன்று நேற்றல்ல காலாகாலமாக வெற்றி நடைபோடுகிறது.

ஏன் வெற்றி நடை போடுகிறது என்றும் சொல்லலாமே? எப்படி தோல்வி அடையச் செய்வது என்றும் சிந்திக்க வேண்டும் அல்லவா?

14 hours ago, அருள்மொழிவர்மன் said:

மதமாற்றத்தை திணிக்கும் விஷமிகளின் இச்செயல்கள் கண்டிக்கத்தக்கது. ஈழப்பிரியன் குறிப்பிட்டதுபோல இது காலங்காலமாக நடந்து வருகிறது.

கண்டிப்பது மட்டும் காணுமா? காலம் காலமாக கண்டித்து விட்டு ஒதுங்கி கொள்ளலாமா?

13 hours ago, Paanch said:

மதம் மாறுவது பெற்ற தாயை மாற்றுவதற்கு சமமாகும்.

பெற்ற தாய் விபச்சாரியானால், குடிகாரியானால், கொள்ளையடித்து சிறைக்கு போனால், தாய்க்கு நோய் வந்தால், பெற்ற தாயை மாற்றி வேறு தாயை கொடுத்து இவ்வாறான தாய் இருந்ததே தெரியாமல் செய்வதது தான் குழந்தைக்கு நாம் செய்யும் நன்மையாக இருக்கும்.

13 hours ago, குமாரசாமி said:

மதம் மாறுவது அவரவர் சொந்தவிடயம். ஆனால் அரிசி பருப்புக்கும், சொத்து சுகங்களுக்காகவும் மதம் மாறுவது கேவலம்.  அது மட்டுமில்லாமல் ஒரு மனிதனின் பலவீனத்தை சாதகமாக்கி மதம் மாற்றுவது சுத்த கேணைத்தனம்.

உங்களுக்கு வறுமை இருக்கும் போது அந்த பொருளாதார பலவீனத்தை சாதகமாக்கி முதலாளி வேலை வாங்குகிறான். நாய் மாதிரி வேலை செய்கிறீர்கள். அரிசி பருப்புக்கும், சொத்து சுகங்களுக்கும் இந்த அடிமை பணம் உதவுகிறது - கேவலம் இல்லையா?

பொய் சொல்லி, ஏமாற்றி அகதி கோரிக்கை வைத்து அந்நிய மதம் பரப்பும், அந்நிய மொழி பேசும் அந்நிய கலாச்சாரத்தில் பிள்ளைகளையே விற்று கொடுத்து சுகவாழ்வு கண்டீர்கள் - - கேவலம் இல்லையா?

அங்கே பரம ஏழை - சாதி கீழ் என்று சொல்லி நீங்கள் ஒதுக்கி வைக்க, நீயும் என் கடவுளின் பிள்ளை தான் என்று அந்த அந்நிய நாட்டு மதம் சார்ந்தவன் இந்த பரம ஏழையை அணைத்து அரிசியும், பருப்பும் சுகவாழ்வும் கொடுக்கிறான். பார்க்க கஷ்டமாக இருக்கிறது இல்லையா?

நான் யாழ் பல்கலைக்கழ மாணவனாக இருந்த போது - உயர் சாதி அரசியல்வாதியின் பணக்கார சைவ மாணவ நண்பன் கேட்டான்,  " நீங்கள் இந்த குப்பனையும், சுப்பனையும் சமயம்  மாத்தி வீடு கட்டி கொடுத்தால் எங்களுக்கு குப்பை அள்ளவும், கான் கழுவவும் எவன் வருவான்?" 

உண்மையை சொன்னால் இலங்கையில் உள்ள தமிழன் திமிர் அடங்க ஒரு முள்ளிவாய்க்கால் போதாது. இன்னும் பல வேண்டும். இந்த மத வெறியை முற்றிலும் தலை காட்டாமல் வைத்திருந்த பிரபாகரனாலேயே இதை அழிக்க முடியவில்லையே? கோத்தபாயாவால் முடிகிறதா என்று பார்க்கலாம். வரதரும் டக்ளசும் இந்த மதம் மாறும் பரம ஏழைகளுக்கு ஆதரவானவர்கள். அவர்கள் வழியிலாவது இந்த சாதி மத திமிர் அடங்குகிறதா என்று பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Jude said:

ஏன் வெற்றி நடை போடுகிறது என்றும் சொல்லலாமே? எப்படி தோல்வி அடையச் செய்வது என்றும் சிந்திக்க வேண்டும் அல்லவா?

கண்டிப்பது மட்டும் காணுமா? காலம் காலமாக கண்டித்து விட்டு ஒதுங்கி கொள்ளலாமா?

பெற்ற தாய் விபச்சாரியானால், குடிகாரியானால், கொள்ளையடித்து சிறைக்கு போனால், தாய்க்கு நோய் வந்தால், பெற்ற தாயை மாற்றி வேறு தாயை கொடுத்து இவ்வாறான தாய் இருந்ததே தெரியாமல் செய்வதது தான் குழந்தைக்கு நாம் செய்யும் நன்மையாக இருக்கும்.

உங்களுக்கு வறுமை இருக்கும் போது அந்த பொருளாதார பலவீனத்தை சாதகமாக்கி முதலாளி வேலை வாங்குகிறான். நாய் மாதிரி வேலை செய்கிறீர்கள். அரிசி பருப்புக்கும், சொத்து சுகங்களுக்கும் இந்த அடிமை பணம் உதவுகிறது - கேவலம் இல்லையா?

பொய் சொல்லி, ஏமாற்றி அகதி கோரிக்கை வைத்து அந்நிய மதம் பரப்பும், அந்நிய மொழி பேசும் அந்நிய கலாச்சாரத்தில் பிள்ளைகளையே விற்று கொடுத்து சுகவாழ்வு கண்டீர்கள் - - கேவலம் இல்லையா?

அங்கே பரம ஏழை - சாதி கீழ் என்று சொல்லி நீங்கள் ஒதுக்கி வைக்க, நீயும் என் கடவுளின் பிள்ளை தான் என்று அந்த அந்நிய நாட்டு மதம் சார்ந்தவன் இந்த பரம ஏழையை அணைத்து அரிசியும், பருப்பும் சுகவாழ்வும் கொடுக்கிறான். பார்க்க கஷ்டமாக இருக்கிறது இல்லையா?

நான் யாழ் பல்கலைக்கழ மாணவனாக இருந்த போது - உயர் சாதி அரசியல்வாதியின் பணக்கார சைவ மாணவ நண்பன் கேட்டான்,  " நீங்கள் இந்த குப்பனையும், சுப்பனையும் சமயம்  மாத்தி வீடு கட்டி கொடுத்தால் எங்களுக்கு குப்பை அள்ளவும், கான் கழுவவும் எவன் வருவான்?" 

உண்மையை சொன்னால் இலங்கையில் உள்ள தமிழன் திமிர் அடங்க ஒரு முள்ளிவாய்க்கால் போதாது. இன்னும் பல வேண்டும். இந்த மத வெறியை முற்றிலும் தலை காட்டாமல் வைத்திருந்த பிரபாகரனாலேயே இதை அழிக்க முடியவில்லையே? கோத்தபாயாவால் முடிகிறதா என்று பார்க்கலாம். வரதரும் டக்ளசும் இந்த மதம் மாறும் பரம ஏழைகளுக்கு ஆதரவானவர்கள். அவர்கள் வழியிலாவது இந்த சாதி மத திமிர் அடங்குகிறதா என்று பார்க்கலாம்.

மிகவும் கேவலமான கருத்து. உங்கள் மததிமிருக்காக உயிர்களை பலி கொடுக்காதீர்

19 minutes ago, Jude said:

பெற்ற தாய் விபச்சாரியானால், குடிகாரியானால், கொள்ளையடித்து சிறைக்கு போனால், தாய்க்கு நோய் வந்தால், பெற்ற தாயை மாற்றி வேறு தாயை கொடுத்து இவ்வாறான தாய் இருந்ததே தெரியாமல் செய்வதது தான் குழந்தைக்கு நாம் செய்யும் நன்மையாக இருக்கும்.

உங்கள் தாய் அல்லது மனைவி விபச்சாரியானால் குடிகாரியானால் சிறைக்கு போனால் நோய் வந்தால் இப்படி செய்வீர்களா?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Thumpalayan said:

அறிவுக் கொழுந்துகளே, பத்து வரிய நியூஸ் சார். வாசிக்க பஞ்சியோ, இங்கிலீஸ் மட்டு மட்டோ

பாராளுமன்றத்திலே இதை கடாசி குப்பைக்குள் போட்டு கனகாலம்.

தும்பலையான்

எதொ பெரிய ஆங்கிலம் தெரிந்தமாதிரி எல்லாரையும் நக்கல் அடிக்க வேன்டாம் 

னிரைகுடம் தலும்பாது குரைகுடம்தான் இப்படி கதைக்கும்

PS: (apologies for the spelling mistake in my tamil as I don't know how to type Tamil font  in Computer (I use my iPhone usually)

Thanks Tulpan for pointing out my mistake and I have corrected now 

Link to comment
Share on other sites

13 minutes ago, ragaa said:

ஜுட்

எதொ பெரிய ஆங்கிலம் தெரிந்தமாதிரி எல்லாரையும் நக்கல் அடிக்க வேன்டாம் 

னிரைகுடம் தலும்பாது குரைகுடம்தான் இப்படி கதைக்கும்

PS: (apologies for the spelling mistake in my tamil as I don't know how to type Tamil font  in Computer (I use my iPhone usually)

என்ன ராகா தும்பளனை quote பண்ணி ஜீட்டிற்கு பதில் எழுதியுள்ளீர்கள்.  இங்கை இப்ப காலை நேரம்.  அங்கை மாலை நேரமோ இப்ப. 😂 எனக்கும்  இப்படி அனுபவம் உண்டு மாலை நேர மயக்கத்தில். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

அங்கே பரம ஏழை - சாதி கீழ் என்று சொல்லி நீங்கள் ஒதுக்கி வைக்க, நீயும் என் கடவுளின் பிள்ளை தான் என்று அந்த அந்நிய நாட்டு மதம் சார்ந்தவன் இந்த பரம ஏழையை அணைத்து அரிசியும், பருப்பும் சுகவாழ்வும் கொடுக்கிறான். பார்க்க கஷ்டமாக இருக்கிறது இல்லையா?

உங்களைப்போன்ற ஜாம்பவான்களுக்கு பதில் எழுதுறதெண்டால் ஒரு வரிசமும் காணாது...இருந்தாலும் உதாரணத்துக்கு கொஞ்சம்.....
பம்பலப்பிட்டி/வெள்ளவத்தை கோயிலிலை சாதி திமிர் இருக்கா?
மட்டக்களப்பு கோயில்களிலை சாதித்திமிர் தெரியுதா?
திருகோணமலை கோணேஸ்வரர் கோயில்லை சாதி வன்மை தெரியுதா?
மன்னார் திருக்கேதீஸ்வரத்திலை சாதி பாக்கினமா?
யாழ்ப்பாணம் நல்லூரிலை சாதி பாக்கினமோ?
செல்வச்சன்னதியிலை?
வல்லிபுரக்கோயிலிலை??
மாவிட்டபுரத்திலை???
நயினாதீவிலை????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா கோவில்களிலும் திருவிழாக்காலங்களில் அன்னதானம், 

சாதியும் இல்லை ஏழை பணக்காரன் வித்தியாசமும் இல்லை...

Link to comment
Share on other sites

4 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் சொன்ன மேற்படி  கோவில்களில் செல்வச்சன்னதி தவிர ஏனைய கோவில்களில் மிக மிக  கடவுள் பக்தியுள்ள ஒரு சைவமகன் ஆகமங்களை முறையாக  கற்று  கருவறையில் பூசை செய்ய, கொடியேற்ற, தேரில் வலம் வர  அனுமதிப்பார்களா? உனக்கு எவ்வளவு கடவுள் பக்தி இருந்தாலும் எப்படித்தான் ஆகமங்களை கற்று தேர்ந்தாலும்  பிறப்பால் பிராமணனாக பிறக்காமல்  விட்டால் கடவுளுக்கு கிட்ட வர அனுமதி இல்லை என்பது தான் பதில்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

உண்மையை சொன்னால் இலங்கையில் உள்ள தமிழன் திமிர் அடங்க ஒரு முள்ளிவாய்க்கால் போதாது. இன்னும் பல வேண்டும். இந்த மத வெறியை முற்றிலும் தலை காட்டாமல் வைத்திருந்த பிரபாகரனாலேயே இதை அழிக்க முடியவில்லையே? கோத்தபாயாவால் முடிகிறதா என்று பார்க்கலாம். வரதரும் டக்ளசும் இந்த மதம் மாறும் பரம ஏழைகளுக்கு ஆதரவானவர்கள். அவர்கள் வழியிலாவது இந்த சாதி மத திமிர் அடங்குகிறதா என்று பார்க்கலாம்.

மத வெறி   பிடித்திருப்பது நவநாகரீக மேலைத்தேயங்கள்  தான்.
இது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை.

7 minutes ago, tulpen said:

நீங்கள் சொன்ன மேற்படி  கோவில்களில் செல்வச்சன்னதி தவிர ஏனைய கோவில்களில் மிக மிக  கடவுள் பக்தியுள்ள ஒரு சைவமகன் ஆகமங்களை முறையாக  கற்று  கருவறையில் பூசை செய்ய, கொடியேற்ற, தேரில் வலம் வர  அனுமதிப்பார்களா? உனக்கு எவ்வளவு கடவுள் பக்தி இருந்தாலும் எப்படித்தான் ஆகமங்களை கற்று தேர்ந்தாலும்  பிறப்பால் பிராமணனாக பிறக்காமல்  விட்டால் கடவுளுக்கு கிட்ட வர அனுமதி இல்லை என்பது தான் பதில்.   

அவைகள் படிப்படியாக களையப்படும்.....
 எனது ஊரில் உள்ள நான்கு கோவில்களில்  சைவர்களே தமிழில் ஆராதனை செய்கின்றனர்.

Link to comment
Share on other sites

31 minutes ago, குமாரசாமி said:

மத வெறி   பிடித்திருப்பது நவநாகரீக மேலைத்தேயங்கள்  தான்.
இது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை.

அவைகள் படிப்படியாக களையப்படும்.....
 எனது ஊரில் உள்ள நான்கு கோவில்களில்  சைவர்களே தமிழில் ஆராதனை செய்கின்றனர்.

உங்கள் வழமையான மழுப்பல் பதில்கள் தான். பரவாயில்லை. எதைப்பற்றி உரையாடினாலும் தேவையில்லாமல்  மேலைதேயத்தவர்களை இழுத்து அவர்ககளை கடுமையாக திட்டுவதில் குறியாக உள்ளீர்கள்.  எத்தனை திரிகளில்  மேலைதேய மக்களைத்  திட்டி இருப்பீர்கள். அவ்வளவு  ஆத்திரம் உங்களுக்கு மேலைமேய மக்கள் மீது . அதெப்படி  அவர்கள்  நாட்டின் சுகபோகங்களை  அனுபவித்து ஜாலியாக வாழ,  அனுபவிக்க முடிகிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைக்கப்பட்ட திரியில் எந்த மதம்? யார் நடத்தினார்கள்? என்று எதுவுமே குறிப்பிடப்படாமல் இருக்கும்போது இங்கே மூன்று  பேருக்கு  மட்டும் ஏன் மூக்கு வேர்க்குது? மனசாட்சி உறுத்துதோ!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14 hours ago, vaasi said:

http://www.sundaytimes.lk/090222/Plus/sundaytimesplus_08.html

Anti-conversion Bill paving the way to ‘therocracy’

The anti-conversion bill, introduced by the Jathika Hela Urumaya (JHU) in 2004, was approved in January 2009, and the Sri Lanka Parliament is to vote on the Bill in February or March.....................................................

இது தீமையான சட்டம் என்ற கருத்தில் இணைத்தீர்களோ தெரியாது!, ஆனால் தும்பளையான் சொன்னது போல இதை 2005 இலேயே கைவிட்டு விட்டனர். காரணங்கள்: உள்ளூரில் ஜே.வி.பியினதும், த,தே.கூவின் சுமந்திரனது தலைமையிலான எதிர்ப்பு. மேலும், அமெரிக்கா உட்பட சிறிலங்கா காசுக்குக் கையேந்தும் வெளிநாடுகளின் எதிர்ப்பு.

சிறிலங்காவில் மதமாற்ற தடைச் சட்டம் என்று  நீங்கள் கூகிளில் தேடும் போதே மேலே வரும் கார்டியன் (https://www.tamilguardian.com/content/sri-lanka-drops-anti-conversion-bill) இணைப்பைப் புறக்கணித்து விட்டு, கீழே இருக்கும் சண்டே ரைம்ஸ் இணைப்பை இங்கே இணைத்திருக்கிறீர்கள்! அதில் ஆண்டுகள் கூட (2009) தவறாக இருக்கின்றன. இதை தான் fake news என்பதோ? 😂

3 hours ago, Eppothum Thamizhan said:

இணைக்கப்பட்ட திரியில் எந்த மதம்? யார் நடத்தினார்கள்? என்று எதுவுமே குறிப்பிடப்படாமல் இருக்கும்போது இங்கே மூன்று  பேருக்கு  மட்டும் ஏன் மூக்கு வேர்க்குது? மனசாட்சி உறுத்துதோ!!!

எந்த மதத்தை யார் தங்கள் தனியார் வீட்டில் நடத்தினாலும், ஊரவர் என்ற போர்வையில் குண்டர்கள் வீடு புகுந்து தாக்குவது தவறு என்று சொல்ல மூக்கு வேர்க்க வேண்டியதில்லை! உங்களுக்கு அடிப்படையான சுதந்திரத்தை மதிக்கும் பண்பு இருந்தால் போதும் எ.த!

இந்த அடிப்படைச் சுதந்திரத்தை வேண்டி விரும்பி நாடி மேற்கு நாடுகளில் வந்து குடியிருப்போர் தான் தாய்நாட்டில் இப்படியான பிற்போக்கு ரவுடியிசத்தை ஆதரித்து இங்கே எழுதுகின்றனர்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

உங்கள் வழமையான மழுப்பல் பதில்கள் தான். பரவாயில்லை. எதைப்பற்றி உரையாடினாலும் தேவையில்லாமல்  மேலைதேயத்தவர்களை இழுத்து அவர்ககளை கடுமையாக திட்டுவதில் குறியாக உள்ளீர்கள்.  எத்தனை திரிகளில்  மேலைதேய மக்களைத்  திட்டி இருப்பீர்கள். அவ்வளவு  ஆத்திரம் உங்களுக்கு மேலைமேய மக்கள் மீது . அதெப்படி  அவர்கள்  நாட்டின் சுகபோகங்களை  அனுபவித்து ஜாலியாக வாழ,  அனுபவிக்க முடிகிறது.  

தாய் நாட்டில் இல்லாத சுகபோகம் மேலைத்தேயத்தில் இருக்கின்றதா? எங்கே காட்டுங்கள் பார்க்கலாம்? இங்கு அரசியல் சுதந்திரம் மட்டுமே உண்டு.சகலரும் சம உரிமையுடன் வாழலாம் அம்புட்டுத்தான். மற்றும் படி சீரழிந்தவாழ்க்கை.
அது சரி மேலைதேயத்தவரை நான் எங்கே திட்டினேன்? காட்டுங்கள் பார்க்கலாம்?
உங்களுக்கு சுகபோகத்தின் அர்த்தம் தெரியாவிட்டால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.சில வேளைகளில் ஒரு நாள் கணவன் ஒரு நாள் மனைவி கலாச்சாரத்தை சுகபோக வாழ்க்கை என நினைக்கின்றீர்களோ தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

இது தான் நான் அமெரிக்காவில் விரும்பும் சுகபோகம்! இது இல்லாமை தான் நான் இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்பாமைக்குக் காரணம்!

மற்றபடி நீங்கள் குறிப்பிடுகிற "சீரழிந்த வாழ்க்கை" என்பது உங்கள் பார்வை! உங்களுக்கு சம உரிமையை விட சீரழியாத வாழ்வு  முக்கியம் என்றால் நீங்கள் அயோத்தியில் போய் வாழவும் உங்களுக்கு தெரிவுண்டு! ஏன் இங்கே இருந்து சீரழிந்த வாழ்வு வாழுவான்? இது தான் உங்களிடம் மட்டுமன்றி மேற்குலக வாழ்வின் சுதந்திரத்தை விமர்சிப்போரிடம் நான் கேட்பது! பதில் ஒருவரிடமும் இல்லை!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Thumpalayan said:

அறிவுக் கொழுந்துகளே, பத்து வரிய நியூஸ் சார். வாசிக்க பஞ்சியோ, இங்கிலீஸ் மட்டு மட்டோ

பாராளுமன்றத்திலே இதை கடாசி குப்பைக்குள் போட்டு கனகாலம்.

உதெல்லாம் இருக்கட்ம்.உங்களை இந்தப்பக்கம் ஏன்  காணக்கிடைக்குதில்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Justin said:

இது தான் நான் அமெரிக்காவில் விரும்பும் சுகபோகம்! இது இல்லாமை தான் நான் இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்பாமைக்குக் காரணம்!

மற்றபடி நீங்கள் குறிப்பிடுகிற "சீரழிந்த வாழ்க்கை" என்பது உங்கள் பார்வை! உங்களுக்கு சம உரிமையை விட சீரழியாத வாழ்வு  முக்கியம் என்றால் நீங்கள் அயோத்தியில் போய் வாழவும் உங்களுக்கு தெரிவுண்டு! ஏன் இங்கே இருந்து சீரழிந்த வாழ்வு வாழுவான்? இது தான் உங்களிடம் மட்டுமன்றி மேற்குலக வாழ்வின் சுதந்திரத்தை விமர்சிப்போரிடம் நான் கேட்பது! பதில் ஒருவரிடமும் இல்லை!  

நாங்கள் பொருளாதார அகதிகள் (மற்றவர்கள் பற்றி தெரியாது எனது தனிப்பட்ட காரணம்)
எமது முதல் இலக்கு பொருளாதாரமே இதற்குத்தான் குடும்பத்தை பிரித்து சிதறடித்து சீரழிந்தோம் 
நாம் சீரழிந்தாலும் எமது அடுத்த சந்ததி சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எம்மிடம் 15-20 வருடம் முன்பு 
இருந்ததே எமது வெளிநாட்டு பயணத்துக்கு அத்திவாரம் போட்டது.

எம்மிடம் ஊரில் எதுவும் இல்லாத போது எம்மை நம்பி எமது குடும்பம் மட்டுமே இருந்தது 
எம்மிடம் பொருளாதாரம் வந்ததால் (வெளிநாட்டில்) எம்மை நம்பி இப்போ பல குடும்பம் இருக்கிறது 
இதே பொருளாதாரம் என்னால் ஈட்டிட முடியும் என்றால் நிச்சயமாக நான் அமெரிக்காவில் இருக்க மாட்டேன் 
எனக்கு இந்த வாழ்க்கை முறை துளியளவும் பிடிக்கவில்லை. இங்கே சுதந்திரம் கூட டிவியில்தான் இருக்கிறது 
ரோட்டில் வைத்து கறுப்பினத்தவரை போலீசே சுடுகிறது வீடியோ ஆதாரம் இருந்தும் எந்த தண்டனையும் இன்றி 
நிரபராதியாக வெளியில் வருகிறார்கள். அடுத்த பொருளாதார வீழ்ச்சி நிற வேற்றுமை வெளிநாட்டவர் மேல் மேலும் மேலும் வெறுப்பை உண்டாக்கி இன்னும் சீரழிக்கும். புத்தனை போல அடுதத்தவரை பற்றி எண்ணாது கிளம்பி போக கூடிய யதார்த்தமான காரணம் ஒன்றும் இல்லை ..... அங்கு போய் அதை நினைத்து வருந்த கூடியதுதான் யதார்த்தமானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, சுவைப்பிரியன் said:

உதெல்லாம் இருக்கட்ம்.உங்களை இந்தப்பக்கம் ஏன்  காணக்கிடைக்குதில்ல.

இப்பதானே லைட்டா திரி எரிய ஆரம்பிக்கிறது இன்னும் வருவார் வருவார்😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Maruthankerny said:

நாங்கள் பொருளாதார அகதிகள் (மற்றவர்கள் பற்றி தெரியாது எனது தனிப்பட்ட காரணம்)
எமது முதல் இலக்கு பொருளாதாரமே இதற்குத்தான் குடும்பத்தை பிரித்து சிதறடித்து சீரழிந்தோம் 
நாம் சீரழிந்தாலும் எமது அடுத்த சந்ததி சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எம்மிடம் 15-20 வருடம் முன்பு 
இருந்ததே எமது வெளிநாட்டு பயணத்துக்கு அத்திவாரம் போட்டது.

எம்மிடம் ஊரில் எதுவும் இல்லாத போது எம்மை நம்பி எமது குடும்பம் மட்டுமே இருந்தது 
எம்மிடம் பொருளாதாரம் வந்ததால் (வெளிநாட்டில்) எம்மை நம்பி இப்போ பல குடும்பம் இருக்கிறது 
இதே பொருளாதாரம் என்னால் ஈட்டிட முடியும் என்றால் நிச்சயமாக நான் அமெரிக்காவில் இருக்க மாட்டேன் 
எனக்கு இந்த வாழ்க்கை முறை துளியளவும் பிடிக்கவில்லை. இங்கே சுதந்திரம் கூட டிவியில்தான் இருக்கிறது 
ரோட்டில் வைத்து கறுப்பினத்தவரை போலீசே சுடுகிறது வீடியோ ஆதாரம் இருந்தும் எந்த தண்டனையும் இன்றி 
நிரபராதியாக வெளியில் வருகிறார்கள். அடுத்த பொருளாதார வீழ்ச்சி நிற வேற்றுமை வெளிநாட்டவர் மேல் மேலும் மேலும் வெறுப்பை உண்டாக்கி இன்னும் சீரழிக்கும். புத்தனை போல அடுதத்தவரை பற்றி எண்ணாது கிளம்பி போக கூடிய யதார்த்தமான காரணம் ஒன்றும் இல்லை ..... அங்கு போய் அதை நினைத்து வருந்த கூடியதுதான் யதார்த்தமானது. 

இது பலருக்கு உண்மை! எந்த வழியிலாயினும், ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடத்தில் வேரூன்றும் போது சில நல்ல விடயங்களை இழந்து சில நல்ல விடயங்களைப் பெறுகிறோம் என்பதே உண்மை! இதில் எதை விட்டுக் கொடுக்கலாம் எதை விட்டுக் கொடுக்காமல் வைத்திருக்கலாம் என்பது தனிப்பட்ட மனிதர்களின் தெரிவு என்பதையே மேலே கு.சா அண்ணைக்குச் சொல்ல முயன்றேன்! இதை விட யார் எங்கே, என்ன காரணங்களுக்காக வசிக்கிறார்கள் என்பதில் எனக்கு ஒரு அக்கறையும் இல்லை!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

உங்களைப்போன்ற ஜாம்பவான்களுக்கு பதில் எழுதுறதெண்டால் ஒரு வரிசமும் காணாது...இருந்தாலும் உதாரணத்துக்கு கொஞ்சம்.....
பம்பலப்பிட்டி/வெள்ளவத்தை கோயிலிலை சாதி திமிர் இருக்கா?
மட்டக்களப்பு கோயில்களிலை சாதித்திமிர் தெரியுதா?
திருகோணமலை கோணேஸ்வரர் கோயில்லை சாதி வன்மை தெரியுதா?
மன்னார் திருக்கேதீஸ்வரத்திலை சாதி பாக்கினமா?
யாழ்ப்பாணம் நல்லூரிலை சாதி பாக்கினமோ?
செல்வச்சன்னதியிலை?
வல்லிபுரக்கோயிலிலை??
மாவிட்டபுரத்திலை???
நயினாதீவிலை????

இதெல்லாம் மாறுகிறது என்பதுதான் கவலையானது 
இந்த கோவில்களில் உங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவர் அர்ச்சகர் ஆக முடியுமா?
ஏன் முடியாது இருக்கிறது?
நீங்கள் மேற்கூறியவை பெரும்பான்மை முருகன் கோவில்கள் 
முருகனுக்கு தமிழை தவிர வேறு மொழி தெரியாது 
உங்கள் குடும்பத்தாருக்கு தமிழ் தெரியாதா?

இப்போ அனுமான் கோவில் ராமர் கோவில் எல்லாம் புதிதாக வருகிறது 
சாதியை இலங்கையில் புகுத்தியவர்கள் ஆறுமுகநாவலர் போன்றவர்கள் 
இப்போது குறிப்பிட்ட காலத்துக்கு முன்புதான் 
ஈழத்தை பொறுத்தவரை சாதி ஆதிக்கம் என்பது அவர் அவர் பிரதேசங்களில் மட்டுமே 
வேகும் பருப்பாக இருந்ததுதான் உண்மை ... அதுக்கு இந்துமதம் என்ற போலியின் அன்பு பேணுதல் 
காரணம் இல்லை. அவனவனும்  கத்தி கோடாலி எடுத்து வீசியதுதான் உண்மை காரணம். 
உங்கள் சாதி ஆதிக்கம் என்பது நீங்கள் பெரும்பான்மையாக இருக்கும் பிரதேசத்தில் மட்டுமே வேகும்.
மற்றவன் பெரும்பான்மையாக இருக்கும் பிரதேசம் போகும்போது பொத்திக்கொண்டுதான் போகவேண்டும். 

இது எல்லாவற்றுக்கும்  முக்கிய காரணம் 
இந்துமதம் என்ற போலிமதம் இலங்கையில் பெரிதாக எடுபடவில்லை என்பதுதான் 
சைவமதம் வேரூன்றி இருந்தது சைவ மதத்தை புத்த மதத்தை இந்தியா போல் ஈழத்தில் 
சோழ மன்னர்களால் சீரழிக்க அழிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை காரணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Jude said:

ஏன் வெற்றி நடை போடுகிறது என்றும் சொல்லலாமே? எப்படி தோல்வி அடையச் செய்வது என்றும் சிந்திக்க வேண்டும் அல்லவா?

திருடனாக பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

Link to comment
Share on other sites

மதம் மாற்றிகளும் மதம் மாறிகளும் தங்கடை கீழ்த்தர பிழைப்புகளை கொண்டு நடத்தோணும் என்டா இல்லாதா சாதிகளை உருவாக்கோணும், அல்லது எங்கையோ ஒரு மூலைல இருக்கிறத உலகம் முழுதும் இருக்கிறதா புளுகவேணும், .......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, colomban said:

நான் இயேசு கிறிஸ்துவின் அற்புதமான போதனைகளை / சத்தியங்களை பின்பற்றுகின்றவன் /

இயேசு எந்த மதத்தையும் தாபிக்க வரவில்லை 

இயற்கையே கடவுள் என நம்புகின்றவன்.
 
ஆன ஒரு மனிதனையும் நம்புவதில்லை. போதகர்கள் / பாதிரிகள் /  ஊழியக்காரர்கள் எல்லோரும் திருடர்கள். உழைக்காமல்  இறைவனின் சத்தியத்தை தங்கள் வாசிக்கு எற்ற விதமாக போதித்து வாழும் கயவர்/சோம்பேறி கூட்டம். கோட்டும், சூட்டும், அலங்காரங்களும், விலையுர்ந்த கார்களும் வெளிநாட்டு பயணங்களும் அவர்களது வாழ்க்கை பகட்டானது. தனி மனித பலவீனங்களை தாங்களுக்கு சாதகமாக பாவித்து கொள்வார்கள்.   தாங்களுக்கு தாங்களே Reverent, Bishop, Pastor, Evangelist, Prophet போன்ற பட்டங்களை சூடிகொள்வார்கள்.  

google ஐத‌ட்டிப்பார்த்தால் தெரியும் இவர்கள்து சொத்து மதிப்பு 

பக்கத்து வீட்டில் நோயுற்று / வறுமையில் வாடும் ஒருவரையும் சந்திக்க நேரம் இருக்காது. அனாதைகளை அரவணக்க நேரம் கிடைகாது / பசியால் வாடுபவர்க்ளுக்கு ஒரு நேரம் உணவளிக்க மாட்டார்கள். உன்னை நேசிப்பது போல உன் அயாலனையும் நேசி என்ற அடிப்படை தத்துவத்தையும் மறந்து விடுவார்கள். இந்த ஊத்தை வியாபரிகளினாலேயே சமூகத்தில் இத்தனை பிரச்சினை. 

மனிதன் என்று தன் சகமனிதனை நேசிக்க ஆரம்பிக்கிறானோ அன்று இந்த உலகம் சொர்க்கமாக மாறும். மாறாக நல்லுர் கந்தனுக்கு பாலபிசேகம் செய்வதாலோ அல்லது மக்காவிற்கு சென்று கல் எறிவதாலோ, புத்தங் சரணங் கச்சாமி என்று பனை ஓதுவாதலோ ஒரு மண்ணும் நடக்காது.

இதை எந்த மதவாதியும் செய்யப்போவதில்லை 
அவன் மதத்தை பற்றி பிடிப்பதே இப்படி ஒரு நிலை வந்திடுமோ எனும் பயத்தில்தான்.

ஒருவனின் மதம் ஊடக கடவுள் இருக்கிறார் என்று ஏற்றுக்கொண்டால் 
கடவுள்தானே எல்லாவற்றையும் படைத்தவர் ... கடவுளின் எல்லா படைப்புகளையும் 
ஏற்றுக்கொள்வதில் ஏன் இவாறு முரண்பட வேண்டும்?

உண்மையை  ஆழமாக பார்க்க போனால் .... 
கடவுளை நம்பாதவன்தான் மதங்களை பற்றி பிடித்திருக்கிறான்  
கடவுளை நம்பிய ஒருவன் ஏன் மதங்களை பற்ற வேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

புங்கை  இவை எல்லாம் அறிவியல் என்று  உங்களுக்கு யார்  சொன்னது?  அதை கூறியது மதங்கள் அல்லவா? அறிவியலாளர்கள் யாராவது  அப்படி கூறினார்களா? இல்லையே!  இவற்றை எல்லாம் அறிவியல் என்று நீங்களே  கற்பனை செய்து அதற்கு அதற்கு நீங்களே பதில் அளித்துள்ளீர்கள். 

நான் கூறியது ஒரு மதம் கூறிய முட்டாள் தனங்களை கண்ணை மூடிக்கொண்டு உண்மை என்று நம்புபவர்கள் தான்  அதிகமாக  மதம் மாறுபவர்கள். எனக்கு  தெரிந்து இந்து மதத்தை தீவிரமாக கடைப்பிடித்து புலம்பியவர்கள்  மதம் மாறி இன்று  அல்லோயா என்று புலம்புபவர்கள். 

  அறவே மத்ததை நம்பாதவர்கள்  அல்லது இவை எல்லாம் பொய்கள் மூடத்தனங்கள்   என்று மனதுக்குள்  தெரிந்தும் சமூகத்திற்காக formality யாக கடைப்பிடிக்கும்,  மதங்களை  சீரியஸாக எடுக்காத எமது  சாதாரண மக்கள்   என்றுமே மதம் மாற மாட்டார்கள் . 

ஒரு மதம் கூறிய வடிகட்டிய முட்டாள் தனங்களை  அப்படியே ஏற்றுக்கொளபவர்களுக்கு தான்  மற்றய மதங்கள் கூறும் அதே போன்ற முட்டாள்த்தனங்களை விமர்சிக்கும் தார்மீக உரிமை இல்லை.

 கிருஷன்ர் பிறப்பு என்ற தமிழர் வாழ்வியலுக்கு சற்றும் தொடர்பில்லாத மூடத்தனம் போன்றதே யேசு நாதர் மீனையும், ரொட்டியையும் வைத்து  பசியை போக்கிய மூடத்தனமும்.  

எனது மதமான இந்து மத மூடத்தனங்களை நான் சுட்டிக்காட்டும் போதெல்லாம்  வெகுண்டெழுந்து அவனும் முட்டாள் தானே நான் மட்டுமா ஏன்று பொங்குவது அடிக்கடி நடப்பது தான். எம்மால்  தற்போது intensiv ஆக   கடைப்பிடிக்கப்படும் பல மூடத்தனங்களுக்கு வக்காலத்து வாங்குவதற்காக  ஐரோப்பாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே காலாவதியான மூடத்தனங்களை  உதாரணமாக காட்டுவதும் இங்கு வழமையாக நடப்பது தான். 

உங்கள் புரிதலுக்கும்....விளக்கத்துக்கும் நன்றி....துல்பன்..!

கிறிஸ்துவ மதத்தின் பெயராலும்......இஸ்லாம் மதத்தின் பெயராலும்..புத்த மதத்தின் பெயராலும் கொல்லப்பட்ட உயிர்களை விடவும்....சைவ மதத்தின் பெயரால் கொல்லப்ப்ட்ட உயிர்கள்....ஒப்பீட்டளவில்...மிகவும் குறைவானவையே!

எதையும் உதாரணத்துக்கு எடுக்கும் போது.....சம்பந்தரும்...அப்பரும் தான் உங்கள் கண்ணுக்குப் படுவார்கள் போல கிடக்குது..!

முட்டாள் தனங்களைப் பரப்புபவர்கள்...எப்போதும் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்!

அவற்றை வேறு படுத்தி அறிந்து கொள்ளும் அறிவு எல்லோருக்கும் உண்டல்லவா?

Link to comment
Share on other sites

17 hours ago, MEERA said:

எல்லா கோவில்களிலும் திருவிழாக்காலங்களில் அன்னதானம், 

சாதியும் இல்லை ஏழை பணக்காரன் வித்தியாசமும் இல்லை...

இப்படி பொய் சொல்லி சொல்லி உங்களை நீங்களே ஏமாற்றி கொள்ளுங்கள். 

நீங்கள் குப்பை அள்ள என்று சாதி காட்டி ஒதுக்கி வைத்தவர்களை நாங்கள் மதம் மாற்றி எங்கள் கல்லூரிகளில் படிக்க வைத்து வைத்தியர்களாக்கி பெருமை கொள்கிறோம். “ஐயோ சிங்களவன் அடிக்கிறான்” என்று நீங்கள் எங்கள் கிறீஸ்தவ நாட்டுக்கு ஓடிவர உங்களுக்கு கக்கூசு களுவும் வேலை தந்து அகதிக்கு உதவிய மகிழ்ச்சியையும் எமதாக்கி கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Justin said:

இது பலருக்கு உண்மை! எந்த வழியிலாயினும், ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடத்தில் வேரூன்றும் போது சில நல்ல விடயங்களை இழந்து சில நல்ல விடயங்களைப் பெறுகிறோம் என்பதே உண்மை! இதில் எதை விட்டுக் கொடுக்கலாம் எதை விட்டுக் கொடுக்காமல் வைத்திருக்கலாம் என்பது தனிப்பட்ட மனிதர்களின் தெரிவு என்பதையே மேலே கு.சா அண்ணைக்குச் சொல்ல முயன்றேன்! இதை விட யார் எங்கே, என்ன காரணங்களுக்காக வசிக்கிறார்கள் என்பதில் எனக்கு ஒரு அக்கறையும் இல்லை!  

இது போலத்தான் பாரம்பரிய அல்லது சமய சடங்குகள், சம்பிரதாயங்கள், வேண்டுதல்களில்  எதை செய்யலாம் எதை செய்யாது விடலாம் என்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தெரிவே (மற்றவர்களின் நிர்ப்பந்தத்தில் செய்யாதவரை). இனியாவது அவர்களை கொச்சைப்படுத்துவதையும், மேலைத்தேய நாட்டவர்களுடன்  ஒப்பிடுவதையும் நிறுத்தலாமே!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.