Jump to content

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’

Recommended Posts

On 10/16/2019 at 9:51 AM, Jude said:

பெற்ற தாய் விபச்சாரியானால், குடிகாரியானால், கொள்ளையடித்து சிறைக்கு போனால், தாய்க்கு நோய் வந்தால், பெற்ற தாயை மாற்றி வேறு தாயை கொடுத்து இவ்வாறான தாய் இருந்ததே தெரியாமல் செய்வதது தான் குழந்தைக்கு நாம் செய்யும் நன்மையாக இருக்கும்.

அசிங்கமான, அருவருப்பான ஒரு பின்னூட்டம்.

Link to comment
Share on other sites

  • Replies 412
  • Created
  • Last Reply
20 hours ago, Justin said:

எந்த மதத்தை யார் தங்கள் தனியார் வீட்டில் நடத்தினாலும், ஊரவர் என்ற போர்வையில் குண்டர்கள் வீடு புகுந்து தாக்குவது தவறு என்று சொல்ல மூக்கு வேர்க்க வேண்டியதில்லை! உங்களுக்கு அடிப்படையான சுதந்திரத்தை மதிக்கும் பண்பு இருந்தால் போதும் எ.த!

இந்த அடிப்படைச் சுதந்திரத்தை வேண்டி விரும்பி நாடி மேற்கு நாடுகளில் வந்து குடியிருப்போர் தான் தாய்நாட்டில் இப்படியான பிற்போக்கு ரவுடியிசத்தை ஆதரித்து இங்கே எழுதுகின்றனர்!  

இந்த திரியிலுள்ள செய்தியில் வீட்டிற்குள் குண்டர்கள் புகுந்து தாக்குவதாக இல்லை. நீங்கள் அது பற்றி கருத்தெழுதியிருக்கவுமில்லை.

தனியார் வீட்டில் யாரும் மத போதனை செய்யலாம் என்பது தவறு. கடந்த தடவை தனியார் வீட்டில் மதபோதனை நடைபெற்ற போது அதற்கு அனுமதி தேவை என பொலிஸ் கூறியது.

இத்திரியில் கூறப்படும் செய்தியில் அவர்கள் அனுமதி இல்லாமல் மத போதனை செய்கிறார்கள் என்று உள்ளது.

”வீடொன்றில் வைத்தே மதபோதனைகள் இடம்பெற்றாலும், அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு அது பெரும் தொந்தரவை ஏற்படுத்தி வருகின்றது. எனினும், வீடொன்றில் வைத்து மதபோதனைகளை முன்னெடுப்பதற்கான எவ்விதமான அனுமதியும் கிராம அலுவலகரிடமோ, ஏனைய உரிய அதிகாரிகளிடமிருந்தோ, அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை என அறியமுடிகின்றது.”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/15/2019 at 7:03 PM, Justin said:

இது வீட்டின் உரிமையாளர் கிளை நிறுவனம் என்று பெயர் பலகை போடாமல் தனது நண்பர்களை, வர விரும்புவோரை வைத்து கூட்டம் நடத்தினால் அனுமதி தேவையில்லை என்பது தான் அர்த்தம்!

On 10/15/2019 at 9:52 PM, Justin said:

அப்படியா? இலங்கைச் சட்டத்தில் எங்கே இப்படி இருக்கிறது என்று சுட்டிக் காட்டினால் தொடர்ந்து உரையாடலாம்! காட்டுவீர்களா?

இலங்கையில் சட்டங்கள் பிரித்தானியரால் கொண்டுவரப்பட்டவை, பெரிய  மாற்றங்கள் பாரிய அளவில் இதுவரையில் இல்லை.

குறிப்பாக, வதிவிட சட்டங்கள்.

பிரித்தானியாவில், ஓர் எழுதப்படாத வதிவிட சட்டங்கள், விதிகள்  பற்றிய சட்ட அடிப்படையிலான தத்துவமும், புரிதலும் உண்டு.

இது எனது அனுபவத்தில் நான் அறிந்தது.

பிரித்தானியாவில், குறிப்பாக விதிவிடங்களில், எது உண்மையில்  நடைபெறுகிறது, எப்படி உண்மையில் வதிவிடங்கள் பாவிக்கப்படுகிறது என்பதை வைத்தே எந்த சட்டங்களின் கீழ் தீர்ப்புகள் அடையப்பட முடியும் என்பதை பலதடவை நீதிமன்றங்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.

பிரித்தானியாவை பொறுத்தவரை, வதிவிடதை  வாடகைக்கு பெற்று விட்டு,  வதிவிடங்களில் தொழில் நடத்தினால், எப்படி, எவ்வளவு  காலம் நடத்தப்பட்டது, முறையான உரிமையாளர் அதை (தொழில் செய்வதை) தடுப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் மேற்றுக்கொண்டார்  என்பவற்றை  பொறுத்து வாடகை ஆளருக்கு வதிவிட உரிமை மறுக்கப்படலாம், அல்லது அது business  tenancy ஆக தீர்மானிக்கப்படலாம்.

இலங்கையிலும், நீதி மன்றங்கள், சொறி சிங்கள பாகுபாடை தவிர்த்து, இது போன்றே முடிவுகளை எடுப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

அதாவது, பெயரிடப் படாமல், மத போதனைகள் செய்தாலும், உண்மையில் நடப்பது மத போதனையானால், அதற்கு அனுமதி தேவை அல்லது அவர்கள் செய்தது சட்ட விரோதம் என்று நீதி மன்றம் முடிவுக்கு வருவதற்கு மிகுந்த வாய்ப்புகள் உண்டு.   

ஓர் சோதனை வழக்கு தேவை.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்தளவில் இலங்கையில் வீடுகளில் கூட்டம் நடத்துவதற்கு இப்படியான அனுமதி தேவையில்லை. இலங்கையில் உள்ள எல்லா திருச்சபைகளிலும் ஞாயிரு தவிர்ந்து வாரகாட்களில் சபை ம‌க்கள் சிலர் யாரவது ஒரு சபை அங்கத்தவரின் வீட்டில் கூடிவந்து மாலை நேரங்களில் வேதகம படிப்பு / பாடல்கள் பாடுதல் / ஜெபித்தல் போன்ற ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவார்கள். பின்பு இரவுணவின் பின் கலைந்து செல்வார்கள். இது ஒரு ஆன்மீக ஒன்று கூடல் பல பக்கத்து வீட்டு பிறமத மக்களும் இதில் கலந்து கொள்வார்கள். அவர்களது தேவைகளுக்காகவும் பிரார்திக்கப்படும். இது மதபோதனை அல்ல. குடும்ப பிரார்த்தனை

இதை யாரும் பக்கத்து வீட்டிட்டிற்கு தொந்தரவாக இருக்கின்றது என சண்டித்தனம் செய்வதில்லை. இதற்கெல்லாம் அனுமதி பெறவும் தேவையில்லை. அப்படியானால் பொலீசாருக்கு இவ்வாறு வருபவர்களுக்கு அனுமதி கொடுப்பதே வேலையாகி போகும். 

எதுவும் பகிரங்கமாக செய்வதானால் அதற்கு அனுமதி தேவை. உதாரணமாக காலிமுத்திடலில் ஒர் சுவிசேச கூட்டம் எற்பாடு செய்வது.

ஓருவரது தனிப்பட்ட வீட்டிற்குள் குடுப்பமாக கூடி, ஒரே சத்தியத்தை விசுவாசிகின்றவர்களால் 
செய்யப்படும் பிரார்த்தனையை, மதபோதனை என குறிப்பிட்டு குண்டர்கள் மொட்டை கடிதம் எழுதி இவ்வாறு மக்களை கலைப்பது கண்டிக்கத்தக்கது.
  
Link to comment
Share on other sites

29 minutes ago, colomban said:

“யுத்தம், சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு, வறுமையின் கீழ் வாடுகின்ற மக்களை மிக இலாவகமாக, ஏமாற்றி மதத்தை மாற்றிவிடுவதாகவும், ஒரு சிறு குழுவினரே, இந்தச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.”

அங்கு நடந்தது குடும்ப பிரார்த்தனை அல்ல. அங்கு மதம் மாற்றியுள்ளார்கள்  என்பதை மேலுள்ள வரி கூறுகிறது.

உங்களுக்கு தெரிந்தளவில், தெரியாத அளவில் என்பது ஒரு புறமிருக்கட்டும்.

பொன்னாலையில் வீட்டில் மதபோதனை செய்தவர்களுக்கு பொலிஸ் கூறியது இது.

“உரிய அனுமதி இன்றி பொன்னாலையில் மதச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என குறித்த கிறிஸ்தவ சபையின் போதகருக்கு காவல்துறைபொறுப்பதிகாரி தெரிவித்தார்.”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Jude said:

இப்படி பொய் சொல்லி சொல்லி உங்களை நீங்களே ஏமாற்றி கொள்ளுங்கள். 

நீங்கள் குப்பை அள்ள என்று சாதி காட்டி ஒதுக்கி வைத்தவர்களை நாங்கள் மதம் மாற்றி எங்கள் கல்லூரிகளில் படிக்க வைத்து வைத்தியர்களாக்கி பெருமை கொள்கிறோம். “ஐயோ சிங்களவன் அடிக்கிறான்” என்று நீங்கள் எங்கள் கிறீஸ்தவ நாட்டுக்கு ஓடிவர உங்களுக்கு கக்கூசு களுவும் வேலை தந்து அகதிக்கு உதவிய மகிழ்ச்சியையும் எமதாக்கி கொள்கிறோம்.

உங்கள் குடும்ப தொழிலை மதமாற்றிகளுக்கு கொடுக்கிறீர்கள். அவ்வளவுதான்

3 hours ago, Paanch said:

அசிங்கமான, அருவருப்பான ஒரு பின்னூட்டம்.

அவருடைய மூதாதையர் மதமாற்றம் செய்யதமைக்கான காரணங்கள் அது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

இது போலத்தான் பாரம்பரிய அல்லது சமய சடங்குகள், சம்பிரதாயங்கள், வேண்டுதல்களில்  எதை செய்யலாம் எதை செய்யாது விடலாம் என்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தெரிவே (மற்றவர்களின் நிர்ப்பந்தத்தில் செய்யாதவரை). இனியாவது அவர்களை கொச்சைப்படுத்துவதையும், மேலைத்தேய நாட்டவர்களுடன்  ஒப்பிடுவதையும் நிறுத்தலாமே!!!

இந்த பாரம்பரிய சடங்குகள் மற்றவரைப் பாதிக்கும் போது அதை பிற்போக்குத்தனமாக நான் சுட்டிக் காட்டுவதுண்டு! உதாரணமாக உங்கள் பாதுகாப்பில் இருக்கும் மைனர் பிள்ளைகளை நீங்கள் சடங்கு என்று அலகு குத்தினால் அதை யாரும் பிற்போக்கு சட்ட விரோதம் என்று சொல்ல முடியும். உங்கள் வாதப் படி மேற்கு நாடுகளில் நடக்கும் FGM ஐக் கூட நாம் தனியுரிமை என்று விட்டு விட வேண்டும்! அப்படி முடியாது! மற்றவருக்கு பாதிப்பில்லாத சம்பிரதாயங்களை அவற்றுக்கு போலி விஞ்ஞான விளக்கம் கொடுக்காமல் செய்யுங்கள்! மற்றவரைப் பாதிப்பவற்றை  செய்யும் போது கேள்விகள் வரவே செய்யும்!

3 hours ago, Lara said:

இந்த திரியிலுள்ள செய்தியில் வீட்டிற்குள் குண்டர்கள் புகுந்து தாக்குவதாக இல்லை. நீங்கள் அது பற்றி கருத்தெழுதியிருக்கவுமில்லை.

தனியார் வீட்டில் யாரும் மத போதனை செய்யலாம் என்பது தவறு. கடந்த தடவை தனியார் வீட்டில் மதபோதனை நடைபெற்ற போது அதற்கு அனுமதி தேவை என பொலிஸ் கூறியது.

இத்திரியில் கூறப்படும் செய்தியில் அவர்கள் அனுமதி இல்லாமல் மத போதனை செய்கிறார்கள் என்று உள்ளது.

”வீடொன்றில் வைத்தே மதபோதனைகள் இடம்பெற்றாலும், அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு அது பெரும் தொந்தரவை ஏற்படுத்தி வருகின்றது. எனினும், வீடொன்றில் வைத்து மதபோதனைகளை முன்னெடுப்பதற்கான எவ்விதமான அனுமதியும் கிராம அலுவலகரிடமோ, ஏனைய உரிய அதிகாரிகளிடமிருந்தோ, அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை என அறியமுடிகின்றது.”

"இலங்கையில் மத போதனை செய்ய எந்த தடையும் சட்ட ரீதியில் இல்லை. இது fact. சட்ட ரீதியில் தடையில்லாத ஒன்றை ஒருவரின் தனியார் வீட்டில் வைத்துச் செய்வதற்கு கிராம சேவகரின், பொலிசாரின் அனுமதி வேண்டும்!"இந்த இரண்டு வசனங்களுக்கும் இருக்கும் முரண்பாட்டைப் புரிந்து கொள்ள இயலாதவர் அல்ல நீங்கள்!

இலங்கையின் எந்த சட்டம் மத போதனையை நெறிப்படுத்துகிறது என்று காட்டும்ப் படி கேட்டிருந்தேன்! வழமை போல பதில் இல்லாததால் நீங்கள் வழுவல் நழுவல் என்று ஓடிக் கொண்டிருப்பது தெரிகிறது!

சட்டங்களுக்கு சரத்து எண் இருக்கிறது! அதைச் சுட்டிக் காட்டுங்கள் பேசலாம்! இல்லையெனில் தனியே நின்று பேசிக் கொண்டிருங்கள்!  

Link to comment
Share on other sites

20 minutes ago, Justin said:

“இலங்கையில் மத போதனை செய்ய எந்த தடையும் சட்ட ரீதியில் இல்லை. இது fact. சட்ட ரீதியில் தடையில்லாத ஒன்றை ஒருவரின் தனியார் வீட்டில் வைத்துச் செய்வதற்கு கிராம சேவகரின், பொலிசாரின் அனுமதி வேண்டும்!"இந்த இரண்டு வசனங்களுக்கும் இருக்கும் முரண்பாட்டைப் புரிந்து கொள்ள இயலாதவர் அல்ல நீங்கள்!

இலங்கையின் எந்த சட்டம் மத போதனையை நெறிப்படுத்துகிறது என்று காட்டும்ப் படி கேட்டிருந்தேன்! வழமை போல பதில் இல்லாததால் நீங்கள் வழுவல் நழுவல் என்று ஓடிக் கொண்டிருப்பது தெரிகிறது!

சட்டங்களுக்கு சரத்து எண் இருக்கிறது! அதைச் சுட்டிக் காட்டுங்கள் பேசலாம்! இல்லையெனில் தனியே நின்று பேசிக் கொண்டிருங்கள்!  

இலங்கையில் மத போதனை செய்ய சட்ட ரீதியில் தடை உள்ளதா இல்லையா என்பதை பற்றி நான் கருத்து தெரிவித்திருக்கவில்லை. அனுமதி இல்லாமல் மதபோதனை செய்கிறார்கள், அனுமதி தேவை என்பது பற்றியே நான் எழுதியிருந்தேன்.

உங்களுக்கு தமிழ் சரியாக வாசித்து புரிந்து கொள்ள முடியாவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இலங்கையில் சட்டங்கள் பிரித்தானியரால் கொண்டுவரப்பட்டவை, பெரிய  மாற்றங்கள் பாரிய அளவில் இதுவரையில் இல்லை.

குறிப்பாக, வதிவிட சட்டங்கள்.

பிரித்தானியாவில், ஓர் எழுதப்படாத வதிவிட சட்டங்கள், விதிகள்  பற்றிய சட்ட அடிப்படையிலான தத்துவமும், புரிதலும் உண்டு.

இது எனது அனுபவத்தில் நான் அறிந்தது.

பிரித்தானியாவில், குறிப்பாக விதிவிடங்களில், எது உண்மையில்  நடைபெறுகிறது, எப்படி உண்மையில் வதிவிடங்கள் பாவிக்கப்படுகிறது என்பதை வைத்தே எந்த சட்டங்களின் கீழ் தீர்ப்புகள் அடையப்பட முடியும் என்பதை பலதடவை நீதிமன்றங்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.

பிரித்தானியாவை பொறுத்தவரை, வதிவிடதை  வாடகைக்கு பெற்று விட்டு,  வதிவிடங்களில் தொழில் நடத்தினால், எப்படி, எவ்வளவு  காலம் நடத்தப்பட்டது, முறையான உரிமையாளர் அதை (தொழில் செய்வதை) தடுப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் மேற்றுக்கொண்டார்  என்பவற்றை  பொறுத்து வாடகை ஆளருக்கு வதிவிட உரிமை மறுக்கப்படலாம், அல்லது அது business  tenancy ஆக தீர்மானிக்கப்படலாம்.

இலங்கையிலும், நீதி மன்றங்கள், சொறி சிங்கள பாகுபாடை தவிர்த்து, இது போன்றே முடிவுகளை எடுப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

அதாவது, பெயரிடப் படாமல், மத போதனைகள் செய்தாலும், உண்மையில் நடப்பது மத போதனையானால், அதற்கு அனுமதி தேவை அல்லது அவர்கள் செய்தது சட்ட விரோதம் என்று நீதி மன்றம் முடிவுக்கு வருவதற்கு மிகுந்த வாய்ப்புகள் உண்டு.   

ஓர் சோதனை வழக்கு தேவை.     

கடஞ்சா,

1. வீடுகளில் வைத்து சட்ட விரோத செயற்பாடுகள் (கஞ்சா விற்றல்), வரி ஏய்க்கும் செயல் பாடுகள் (வியாபாரம்) என்பன செய்தல் இப்படி அனுமதியை வேண்டும் நிலைக்கு நீதிமன்றங்களைத் தள்ளுகின்றன. அந்த உதாரணங்களைத் தான் நீங்கள் உங்கள் பிரிட்டிஷ் நடைமுறையில் காட்டியிருக்கிறீர்கள்.

2. மேலே சுட்டிக் காட்டியிருப்பது போல இலங்கையில் மத போதனைக்குத் தடை கிடையாது. இது ஒன்றும் கவனிக்காமல் விடப் பட்ட விடயமல்ல! 2004 இல் கடற்கோள் நிவாரணப் பணிக்கு உதவ வந்த  என்.ஜி.ஓக்களை கட்டுப் படுத்த உறுமயவும், சந்திரிக்காவின் அரசும் இரண்டு சட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்ற முற்பட்டன! இரண்டும் உள்ளூர், சர்வதேச எதிர்ப்பினால் கைவிடப்பட்டன! எனவே இது ஏற்கனவே சமூக மட்டத்தில் பரீட்சிக்கப் பட்ட சட்ட முயற்சி. இனியும் இப்படியான ஒரு சட்டத்திற்கு இது தான் நிலையாக இருக்கும்!

3. இவ்விடயத்தில் நீதிமன்றிற்குப் போய் ஒரு precedence உருவாக்குவது நல்ல விடயம்! அப்படிப் போனால், தனியார் வீட்டில் கட்டாயமாக அடைத்து வைக்கப் படாமல் மத போதனையைச் செய்வதை இலங்கையின் நீதிமன்றங்கள் தடுக்காது என்பது தான் என் நம்பிக்கை. கீழ் நிலை நீதிமன்றங்கள் அப்படித் தடை போட்டாலும்  உயர் நீதிமன்றம் இப்படியான சட்டத்தை அரசியலமைப்பு மீறலாகப் பார்க்கும் என்பது என் நம்பிக்கை மட்டுமே!  

4. இந்த மதமாற்றத் தடைச் சட்டங்கள் பற்றிய என் இன்னொரு பிரச்சினை, இதை எப்படி வரையறை செய்வது என்பது தான்: ஒருவன் என்ன காரணத்திற்காக மதம் மாறலாம் என்று தீர்மானிக்கும் உரிமை அவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது என் நிலைப்பாடு! இதில் அரசு சொல்ல சட்டம் விதிக்க ஒன்றும் இல்லை! அப்படியொரு நிலையை மதமாற்ற விடயத்தில் ஏற்படுத்தினால் வேறு பல விடயங்களில் அரசுக்கு தனிமனிதன் மீது அதிகாரத்தை வழங்கும் போக்கை நாம் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். இது government overreach இன் ஒரு போக்கு!

1 minute ago, Lara said:

இலங்கையில் மத போதனை செய்ய சட்ட ரீதியில் தடை உள்ளதா இல்லையா என்பதை பற்றி நான் கருத்து தெரிவித்திருக்கவில்லை. அனுமதி இல்லாமல் மதபோதனை செய்கிறார்கள், அனுமதி தேவை என்பது பற்றியே நான் எழுதியிருந்தேன்.

உங்களுக்கு தமிழ் சரியாக வாசித்து புரிந்து கொள்ள முடியாவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

மீண்டும்: சட்டத்தால் நெறிப்படுத்தப் படாத ஒன்றை தனியார் வீட்டில் நடத்த யாரின் அனுமதியும் தேவையில்லை! இதை உங்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது! நீங்கள் தமிழையும் சமூகக் கல்வியையும் இன்னொரு முறை போய் படித்து விட்டு வருவது நல்லது!

Link to comment
Share on other sites

3 minutes ago, Justin said:

நீங்கள் எதையும் தலைகீழாக தான் வாசித்து புரிந்து கொள்வீர்கள்.

மதபோதனை செய்வதற்கு சட்ட ரீதியாக தடை உள்ளதா இல்லையா என்பது பற்றி கருத்து தெரிவித்திருக்கவில்லை என கூறியிருந்தேன்.

மற்றும்படி ஒரு வீட்டில் மத போதனை செய்வதற்கு அனுமதி தேவை. அனுமதியில்லாமல் கண்டபடி யாரும் மதபோதனை செய்ய முடியாது.

நீங்கள் தான் தமிழை படிக்க வேண்டும். உங்களுக்கு தான் தமிழை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Justin said:

 சட்டத்தால் நெறிப்படுத்தப் படாத ஒன்றை தனியார் வீட்டில் நடத்த யாரின் அனுமதியும் தேவையில்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

29 minutes ago, Lara said:

நீங்கள் எதையும் தலைகீழாக தான் வாசித்து புரிந்து கொள்வீர்கள்.

மதபோதனை செய்வதற்கு சட்ட ரீதியாக தடை உள்ளதா இல்லையா என்பது பற்றி கருத்து தெரிவித்திருக்கவில்லை என கூறியிருந்தேன்.

மற்றும்படி ஒரு வீட்டில் மத போதனை செய்வதற்கு அனுமதி தேவை. அனுமதியில்லாமல் கண்டபடி யாரும் மதபோதனை செய்ய முடியாது.

நீங்கள் தான் தமிழை படிக்க வேண்டும். உங்களுக்கு தான் தமிழை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது.

யாழில் மிகச் சிலருடன் உரையாடுவது மூளை அழற்சியை உருவாக்கும் செயல்! இப்ப நீங்கள் தான் இந்த லிஸ்ரில் லீடிங்!

விட்டுருங்கள் தாயே!🤗

Link to comment
Share on other sites

33 minutes ago, Lara said:

நீங்கள் எதையும் தலைகீழாக தான் வாசித்து புரிந்து கொள்வீர்கள்.

மதபோதனை செய்வதற்கு சட்ட ரீதியாக தடை உள்ளதா இல்லையா என்பது பற்றி கருத்து தெரிவித்திருக்கவில்லை என கூறியிருந்தேன்.

மற்றும்படி ஒரு வீட்டில் மத போதனை செய்வதற்கு அனுமதி தேவை. அனுமதியில்லாமல் கண்டபடி யாரும் மதபோதனை செய்ய முடியாது.

நீங்கள் தான் தமிழை படிக்க வேண்டும். உங்களுக்கு தான் தமிழை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது.

லாரா,

ஏழை மக்களை ஏமாற்றி செய்யும் மதமாற்றத்துக்கு நான் எப்பவும் எதிர் என்பதை முதலில் சொல்லிக் கொண்டு மிகுதியை தொடர்கின்றேன்.

ஒரு வீட்டில் மத போதனை செய்வதற்கும், மதம் சம்பந்தமாக மக்களை கூட்டி பிரார்த்தனை செய்வதற்கும் எந்த அனுமதியும் தேவையில்லை,. இதனால் தான் சாயிபாபா பஜனை தொடக்கம் அம்மா பகவானுக்கான வாராந்திர மாதாந்திர பூசை வரைக்கும் ஆட்களை திரட்டி தனியார் வீடுகளில் நடத்த முடிகின்றது. கொழும்பில் இராமகிருஸ்ண வீதியில் அமைதிருக்கும் வீட்டில் ஒவ்வொரு வாரமும் இவ்வாறுதான் அம்மா பகவான் பூசைகளை நடாத்துகின்றனர். இந்த வீட்டுக்காரர்கள் எமக்கு சொந்தம் என்பதால் இது தொடர்பாக கேட்டு விட்டே எழுதுகின்றேன்.

பொன்னாலையில் நடந்த நிகழ்வுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்பதை பொலிசார் கூறியிருந்தனர். அதை கேள்விகுட்படுத்தி நீதிமன்றம் போயிருந்தால் அவ்வாறு அனுமதி தேவையில்லை என்றுதான் தீர்ப்பும் வந்து இருக்கும். இலங்கையில் இருக்கும் பொலிசாருக்கு அனேகமான சட்டமும் தெரியாது அதை மதிக்கவும் தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

எனக்கு தெரிந்தளவில் இலங்கையில் வீடுகளில் கூட்டம் நடத்துவதற்கு இப்படியான அனுமதி தேவையில்லை. இலங்கையில் உள்ள எல்லா திருச்சபைகளிலும் ஞாயிரு தவிர்ந்து வாரகாட்களில் சபை ம‌க்கள் சிலர் யாரவது ஒரு சபை அங்கத்தவரின் வீட்டில் கூடிவந்து மாலை நேரங்களில் வேதகம படிப்பு / பாடல்கள் பாடுதல் / ஜெபித்தல் போன்ற ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவார்கள். பின்பு இரவுணவின் பின் கலைந்து செல்வார்கள். இது ஒரு ஆன்மீக ஒன்று கூடல் பல பக்கத்து வீட்டு பிறமத மக்களும் இதில் கலந்து கொள்வார்கள். அவர்களது தேவைகளுக்காகவும் பிரார்திக்கப்படும். இது மதபோதனை அல்ல. குடும்ப பிரார்த்தனை

இதை யாரும் பக்கத்து வீட்டிட்டிற்கு தொந்தரவாக இருக்கின்றது என சண்டித்தனம் செய்வதில்லை. இதற்கெல்லாம் அனுமதி பெறவும் தேவையில்லை. அப்படியானால் பொலீசாருக்கு இவ்வாறு வருபவர்களுக்கு அனுமதி கொடுப்பதே வேலையாகி போகும். 

எதுவும் பகிரங்கமாக செய்வதானால் அதற்கு அனுமதி தேவை. உதாரணமாக காலிமுத்திடலில் ஒர் சுவிசேச கூட்டம் எற்பாடு செய்வது.

ஓருவரது தனிப்பட்ட வீட்டிற்குள் குடுப்பமாக கூடி, ஒரே சத்தியத்தை விசுவாசிகின்றவர்களால் 
செய்யப்படும் பிரார்த்தனையை, மதபோதனை என குறிப்பிட்டு குண்டர்கள் மொட்டை கடிதம் எழுதி இவ்வாறு மக்களை கலைப்பது கண்டிக்கத்தக்கது.
  
உங்களுக்கும் எனக்கும் இது தெரிந்திருப்பது போல இங்கே இருக்கும் பலருக்கு தெரியாது. "கிறிஸ்தவம்" என்ற நம்பிக்கையின் கீழ் உலகம் முழுவதும் 20,000 இற்கு மேற்பட்ட சபைகள் இருப்பதோ, ஒவ்வொரு சபையின் வழிபாட்டு முறைகளும் மற்றையதை விட வித்தியாசமானது என்பதோ இங்கே பலருக்குத் தெரியாது. இது எல்லோருக்கும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை! ஆனால், அப்படித் தெரியாத ignorance ஐ அடிப்படையாக வைத்துக் கொண்டு மொட்டைக் கடதாசி போடுவதும், இல்லாத சட்டங்களை வைத்துக் கொண்டு அச்சம் கிளப்புவதும் தவறு!

இது ஒரு கிறிஸ்தவ சபையென்பதால் இந்த அயலுக்குத் தொந்தரவு என்ற சப்பை வாதமெல்லாம் வலுவான காரணங்களாகத் தூக்கிப் பிடிக்கப் படுகிறது! நாளைக்கு இதே காரணத்தை வைத்துக் கொண்டு தென் சிறிலங்காவில் அல்லது மேற்கு நாடொன்றில் ஒரு தேரிழுப்பை சாயி பஜனையை நகர சபை தடை செய்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இதே ஆட்கள் சைட் மாறி நின்றி "மத சுதந்திரம்" பற்றி முழங்குவர்! நானும் நீங்களும் அப்பவும் அவர்கள் பக்கம் நின்று முழங்குவோம்!

Link to comment
Share on other sites

இலங்கை வாழ் மக்கள் உலகில் ஏழ்மையில் உள்ள நாடுகளில் ஒன்று.

உலகின் அதிக பலம், பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு கொண்டது கிறிஸ்தவ மதம். வத்திக்கான் என்ற ஒரு நாட்டையே கொண்டது.  அவர்களுக்கு தலையிடியாக இருப்பது இஸ்லாம்.

இருந்தும் கிறிஸ்தவ மத வழிபாட்டாளர்கள் உலகில் குறைந்த வண்ணம் உள்ளார்கள். அறிவியல், பொருளாதாரம் அதிகரிக்க அவர்கள் நாஸ்திகர்களாக மாறி வருகிறார்கள்.

இஸ்லாம், கிறிஸ்தவம் இரண்டும் உலகில் ஏமாற்றக்கூடியவர்களை இலக்கு வைத்து மாற்றுகின்றது.  இதில் ஜெயின் மற்றும் யூத மதங்கள் பலமாக உள்ள படியால் அவர்களை மாற்றுவது கடினம்.

ஆர்.எஸ்.எஸ். பல தவறான கொள்கைகளை கொண்டுள்ள இந்துத்துவா மதம். ஒருவேளை அவர்களை 'இவ்வாறு' மாற்றுவது வெளி சூழல்களாகவும்  இருக்கலாம்.

கனடாவும் பிரித்தானிய சட்ட முறைகளை பின்பற்றும் ஒரு நாடு.

இங்கு வீடுகளில் மத வழிபாடு செய்வதானால், அதற்கு பதிவு வேண்டும். நகர விதிமுறைகளை பின்[அற்ற வேண்டும். உதராணத்திற்கு சத்தம், நேரம், மற்றும் நெருப்பு விதிமுறைகள். அதற்கு வரி விதிவிலக்கும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நிழலி said:

ஏழை மக்களை ஏமாற்றி செய்யும் மதமாற்றத்துக்கு நான் எப்பவும் எதிர் என்பதை முதலில் சொல்லிக் கொண்டு மிகுதியை தொடர்கின்றேன்.

இலங்கை உட்பட பல நாடுகளில் ஏழைகளுக்கு ஆசை காட்டியே மதமாற்றம் செய்கின்றார்கள். இது வெள்ளையர்களின் படையெடுப்புக்காலங்களிருந்தே நடை பெறுகின்றது.வன்முறையாகவும் மதமாற்றம் செய்யப்பட்டனர் என்பது வரலாறுகளில் உள்ளது.

Link to comment
Share on other sites

6 minutes ago, ampanai said:

இங்கு வீடுகளில் மத வழிபாடு செய்வதானால், அதற்கு பதிவு வேண்டும். நகர விதிமுறைகளை பின்[அற்ற வேண்டும். உதராணத்திற்கு சத்தம், நேரம், மற்றும் நெருப்பு விதிமுறைகள். அதற்கு வரி விதிவிலக்கும் உண்டு.

இது உண்மையா அம்பனை? என்னுடன் கூட வேலை செய்கின்ற தமிழர் தாம்  இங்கு மாதாந்திர சாயி பஜனை செய்வதாகவும் அப்படி செய்ய அனுமதி பெறுவதில்லை எனவும் சொல்கின்றார்.

பக்கத்து வீட்டுக்கு கேட்கும் வண்ணம் 10 மணிக்கு பிறகு சத்தம் போடுவதில்லை போன்ற நகரசபையின் பொதுவான சட்டங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே அம்பனைக்கும், கு.சா வுக்கும்:

ஏழை மக்கள் பொருளாதார நோக்கங்களுக்காக மதம் மாறினாலும் அது அவர்களின் தெரிவு தானே? இதில் தலையிடவும் புலம்பவும் ஒரு காரணமும் இல்லை. ஒருவன் பண ஆசையில் மாறுகிறானா அல்லது உண்மையாக புதிய மதத்தில் இருக்கிற செய்தியை விரும்பி மாறுகிறானா என்று கண்டறிய ஒரு பரிசோதனையும் இது வரை வரவில்லை!  இதனால் தான் சட்ட ஆட்சியில் சிறந்த நாடுகள் மதமாற்றத்தை சட்டத்தால் நெறிப்படுத்துவதில்லை! சட்ட ஆட்சியில் சிறப்பாக இல்லாத இந்தியாவின் சில மாநிலங்களில் இருக்கும் மதமாற்றத் தடைச்சட்டங்கள் இது வரை துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கின்றன,மதம் மாறுவோரின் எண்ணிக்கையைக் குறைக்கவில்லை! இது நிறுவுவது என்னவெனில், இது தனிப்பட்டவரின் விருப்பு வெறுப்பு! இதை எந்த சட்டத்தாலும் கட்டுப் படுத்த இயலாது என்பது தான்!

19 minutes ago, ampanai said:

இலங்கை வாழ் மக்கள் உலகில் ஏழ்மையில் உள்ள நாடுகளில் ஒன்று.

உலகின் அதிக பலம், பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு கொண்டது கிறிஸ்தவ மதம். வத்திக்கான் என்ற ஒரு நாட்டையே கொண்டது.  அவர்களுக்கு தலையிடியாக இருப்பது இஸ்லாம்.

இருந்தும் கிறிஸ்தவ மத வழிபாட்டாளர்கள் உலகில் குறைந்த வண்ணம் உள்ளார்கள். அறிவியல், பொருளாதாரம் அதிகரிக்க அவர்கள் நாஸ்திகர்களாக மாறி வருகிறார்கள்.

இஸ்லாம், கிறிஸ்தவம் இரண்டும் உலகில் ஏமாற்றக்கூடியவர்களை இலக்கு வைத்து மாற்றுகின்றது.  இதில் ஜெயின் மற்றும் யூத மதங்கள் பலமாக உள்ள படியால் அவர்களை மாற்றுவது கடினம்.

ஆர்.எஸ்.எஸ். பல தவறான கொள்கைகளை கொண்டுள்ள இந்துத்துவா மதம். ஒருவேளை அவர்களை 'இவ்வாறு' மாற்றுவது வெளி சூழல்களாகவும்  இருக்கலாம்.

கனடாவும் பிரித்தானிய சட்ட முறைகளை பின்பற்றும் ஒரு நாடு.

இங்கு வீடுகளில் மத வழிபாடு செய்வதானால், அதற்கு பதிவு வேண்டும். நகர விதிமுறைகளை பின்[அற்ற வேண்டும். உதராணத்திற்கு சத்தம், நேரம், மற்றும் நெருப்பு விதிமுறைகள். அதற்கு வரி விதிவிலக்கும் உண்டு.

7 minutes ago, நிழலி said:

இது உண்மையா அம்பனை? என்னுடன் கூட வேலை செய்கின்ற தமிழர் தாம்  இங்கு மாதாந்திர சாயி பஜனை செய்வதாகவும் அப்படி செய்ய அனுமதி பெறுவதில்லை எனவும் சொல்கின்றார்.

பக்கத்து வீட்டுக்கு கேட்கும் வண்ணம் 10 மணிக்கு பிறகு சத்தம் போடுவதில்லை போன்ற நகரசபையின் பொதுவான சட்டங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.

அம்பனை சொல்வது தவறு என்று தான் நினைக்கிறேன்! அவர் வீடுகளில் மதநிறுவனங்கள் மதப்பள்ளிகள் நடத்துவதையும் மதவழிபாடு செய்வதையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்!முன்னையது சிறுவர்கள், வெளியார் போன்றோர் கலந்து கொள்ளும் பொது நிகழ்வென்பதால் பாதுகாப்பு காப்புறுதி நோக்கங்களுக்காக பதிவு செய்ய வேண்டும். இப்படிப் பதிவு செய்தால் வருமான வரியில் சலுகையும் கிடைக்கும். பின்னையது (சாயி பஜனை, பெந்தகோஸ்து) என்பன தனியார் நிகழ்வுகள். அனுமதியும் பதிவும் தேவையில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

மேலே அம்பனைக்கும், கு.சா வுக்கும்:

ஏழை மக்கள் பொருளாதார நோக்கங்களுக்காக மதம் மாறினாலும் அது அவர்களின் தெரிவு தானே? இதில் தலையிடவும் புலம்பவும் ஒரு காரணமும் இல்லை. ஒருவன் பண ஆசையில் மாறுகிறானா அல்லது உண்மையாக புதிய மதத்தில் இருக்கிற செய்தியை விரும்பி மாறுகிறானா என்று கண்டறிய ஒரு பரிசோதனையும் இது வரை வரவில்லை!  இதனால் தான் சட்ட ஆட்சியில் சிறந்த நாடுகள் மதமாற்றத்தை சட்டத்தால் நெறிப்படுத்துவதில்லை! சட்ட ஆட்சியில் சிறப்பாக இல்லாத இந்தியாவின் சில மாநிலங்களில் இருக்கும் மதமாற்றத் தடைச்சட்டங்கள் இது வரை துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கின்றன,மதம் மாறுவோரின் எண்ணிக்கையைக் குறைக்கவில்லை! இது நிறுவுவது என்னவெனில், இது தனிப்பட்டவரின் விருப்பு வெறுப்பு! இதை எந்த சட்டத்தாலும் கட்டுப் படுத்த இயலாது என்பது தான்!

கிட்டத்தட்ட காசுக்கு வாக்களிப்பது மாதிரி....

Link to comment
Share on other sites

7 minutes ago, நிழலி said:

இது உண்மையா அம்பனை? என்னுடன் கூட வேலை செய்கின்ற தமிழர் தாம்  இங்கு மாதாந்திர சாயி பஜனை செய்வதாகவும் அப்படி செய்ய அனுமதி பெறுவதில்லை எனவும் சொல்கின்றார்.

பக்கத்து வீட்டுக்கு கேட்கும் வண்ணம் 10 மணிக்கு பிறகு சத்தம் போடுவதில்லை போன்ற நகரசபையின் பொதுவான சட்டங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.

https://www.canada.ca/en/revenue-agency/services/charities-giving/giving-charity-information-donors/about-registered-charities/what-difference-between-a-registered-charity-a-non-profit-organization.html

Registered charities

Registered charities are charitable organizations, public foundations, or private foundations that are created and resident in Canada. They must use their resources for charitable activities and have charitable purposes that fall into one or more of the following categories:

  • the advancement of religion

Examples of registered charities

  • advancement of religion (places of worship and missionary organizations)

The Region of Peel provides eligible charities with a rebate of 40 per cent of their property taxes (local, Regional and education tax portions). The Province of Ontario passed legislation requiring municipalities to provide tax rebates to eligible charities starting in the 2001 tax year

https://www.peelregion.ca/finance/tax-handbook/property-tax-rebate-program.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

கிட்டத்தட்ட காசுக்கு வாக்களிப்பது மாதிரி....

ஆனால்  இரண்டினதும் விளைவுகள் வித்தியாசம். காசுக்கு ஒரு தமிழர் கோத்தாவுக்கு வாக்களித்தால் தமிழர்களின் உயிரைக் காசுக்காக கொடுத்து விட்ட வேலையைச் செய்கிறார். காசுக்கு ஒருவன் மதம் மாறினால், யாருடைய உயிரை, உடைமையை அவன் அச்சுறுத்தலுக்குள்ளாக்குகிறான்? எனவே இது யாரையும் பாதிக்காத தனி மனித நடவடிக்கை!

3 minutes ago, ampanai said:

நன்றி, மத நிறுவனமாக நடத்தினால் மட்டுமே பதிவும் அனுமதியும்! இருக்கிற மதத்தின் வழிபாட்டை நடத்துவதற்கும் இந்த இணைப்புகளுக்கும் தொடர்பில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

ஆனால்  இரண்டினதும் விளைவுகள் வித்தியாசம். காசுக்கு ஒரு தமிழர் கோத்தாவுக்கு வாக்களித்தால் தமிழர்களின் உயிரைக் காசுக்காக கொடுத்து விட்ட வேலையைச் செய்கிறார். காசுக்கு ஒருவன் மதம் மாறினால், யாருடைய உயிரை, உடைமையை அவன் அச்சுறுத்தலுக்குள்ளாக்குகிறான்? எனவே இது யாரையும் பாதிக்காத தனி மனித நடவடிக்கை!

சூட்கேசோடை பின்னாலை முன்னாலை வந்து தொல்லை குடுக்காதவரைக்கும் சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

சூட்கேசோடை பின்னாலை முன்னாலை வந்து தொல்லை குடுக்காதவரைக்கும் சந்தோசம்.

இல்லை என்று சொல்லி விட்டு நகரும் உரிமை உங்களுக்கு உண்டு! சொன்னா பிறகும் தொடர்ந்தால் stalking என்று காவல் துறையில் முறைப்பாடு செய்ய முடியும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

இல்லை என்று சொல்லி விட்டு நகரும் உரிமை உங்களுக்கு உண்டு! சொன்னா பிறகும் தொடர்ந்தால் stalking என்று காவல் துறையில் முறைப்பாடு செய்ய முடியும்!

அதே........ ஊரில் காவல்துறைக்கு போகாமல் மக்கள் தாங்களே முடிவெடுக்கின்றனர். ஐ மீன் ஓட....ஓட விரட்டியடிக்கின்றனர். இருந்தும் வறுமையால் சிலர்.......

Link to comment
Share on other sites

10 minutes ago, Justin said:

நன்றி, மத நிறுவனமாக நடத்தினால் மட்டுமே பதிவும் அனுமதியும்! இருக்கிற மதத்தின் வழிபாட்டை நடத்துவதற்கும் இந்த இணைப்புகளுக்கும் தொடர்பில்லை!

இருக்கின்ற மத்தை வீட்டில் நடாத்த உள்ள சட்டமுறைதான் இது.

சீக்கியர்கள் இதை அதிகம் செய்கிறார்கள். அதனால் தான் பல தலைமுறைகளையும் தாண்டி அவர்களிடம் மதம் உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.