Jump to content

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’

Recommended Posts

8 hours ago, satan said:

ஷஹ்ரான் கிறிஸ்தவர்களை சாத்தான் என்றான். ஒரு கிறிஸ்தவ குழு மற்றவர்களை சாத்தான் என்று கூறியதாக இங்கு ஒரு தடவை வாசித்தேன். இங்கு யார் சாத்தான்? தமக்கு பிடிக்காதவர்ளை, தலை ஆட்டாதவர்களை சாத்தான் என்று அழைக்கிறார்கள். சாத்தானுக்கு சாத்தான் கடவுள் என்று நான் நினைக்கிறேன். நான் நினைப்பதெல்லாம் சரியென்றல்ல. 

8 hours ago, satan said:

ஏனென்றால் அவன், தான் மட்டுமே கடவுள், தன்னை  மட்டுமே எல்லோரும் வணங்க வேண்டும் என்று கட்டளை இடுகிறான். மறுக்கிறவர்களை அழிக்கிறான்.

சஹ்ரான் கிறிஸ்தவர்களை அல்ல, அல்லாவை தவிர ஏனைய கடவுள்களை வணங்கும் அனைவரையுமே காபீர்கள் என கூறினார். ஏனைய இஸ்லாமிய குழுக்களுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வந்தவர். சஹ்ரானின் தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, சவுதி உட்பட சில நாடுகள் உள்ளன.

இலங்கையில் தாக்குதல் நடைபெற்றது அரசியலுக்காகவும் இன்னும் சில காரணங்களுக்காகவும். ஆனால் தாக்குதலுக்கு கிறிஸ்தவ தேவாலயம் தேர்ந்தெடுக்கப்பட்டது சஹ்ரானை பின்னணியில் இயக்கியவர்கள் கிறிஸ்தவ மதத்தை இல்லாமல் செய்யும் agenda இல் இயங்குபவர்கள் என்பதால். மற்றும்படி எந்த மத மக்களையும் கொல்வார்கள்.

உலக அரசியல்வாதிகள் பலரும் சாத்தானை ஏற்றுக்கொண்டு தான் அரசியலுக்கு வருபவர்கள்.

மகிந்த & கோ கூட சாத்தானை ஏற்றுக்கொண்டவர்கள். இந்த படத்தில் க்ளூ உள்ளது. கண்டு பிடிக்க முடிந்தால் கண்டு பிடியுங்கள்.

Sri Lankan presidential candidate and former defense chief Gotabaya Rajapaksa gestures to media as he leaves the election commission with his brother and former president Mahinda Rajapaksa, left, after filing his nomination in Colombo, Sri Lanka, Monday, Oct. 7, 2019. A record 35 candidates filed nominations Monday for next month’s Sri Lankan presidential election, but the incumbent has opted not to seek a second term with the entry of Rajapaksa, who is considered the favorite. (AP Photo/Eranga Jayawardena)
 
கிறிஸ்தவ மதமாற்ற குழு யேசுவை தவிர ஏனைய கடவுள்கள் அனைவரும் சாத்தான் என கூறி பிரச்சாரம் செய்வதுண்டு. மதம் மாற்றும் நோக்கிலும் இரு மதங்களை பின்பற்றுவோரிடையே பிரச்சினைகளை உருவாக்குவதற்கும் அவ்வாறு கூறுகிறார்கள். அதற்கு அவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் கொடுக்கிறார்கள். நீங்கள் வாசித்த திரி இதுவாக இருக்கலாம்.

https://yarl.com/forum3/topic/226226-சிவனையும்-புத்தரையும்-சாத்தான்கள்-எனும்-மத-நிகழ்வுக்குத்-தடை…/

உலகமே இப்ப எங்கும் சாத்தான், எதிலும் சாத்தான் எனும் போக்கில் சென்று கொண்டிருக்கிறது. அது கிறிஸ்தவ மதமாற்ற குழுக்களுக்கு கூட தெரியும். ஆனால் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு தெரியாது. 😂

Link to comment
Share on other sites

  • Replies 412
  • Created
  • Last Reply
6 hours ago, satan said:

ஏனென்றால் அவன், தான் மட்டுமே கடவுள், தன்னை  மட்டுமே எல்லோரும் வணங்க வேண்டும் என்று கட்டளை இடுகிறான். மறுக்கிறவர்களை அழிக்கிறான்.

1. ஜெஹோவா தன்னை விட்டு விட்டு வேறு கடவுளை வணங்க சொன்னாரா?

2. அல்லா தன்னை விட்டு விட்டு வேறு கடவுளை வணங்க சொன்னாரா?

3. கிறீஸ்தவர்களின் கடவுள் தன்னை விட்டு விட்டு வேறு கடவுளை வணங்க சொன்னாரா?

இந்து மதம் மட்டுமே எந்த கடவுளையும், எத்தனை கடவுள்களையும், ஏன் ஜெயலலிதாவையும் கூட கடவுளாக்கி வழிபடும் சுதந்திரத்தை கொடுத்து இருக்கிறது. சுதந்திரம் உள்ள ஒரே சமயம் இந்து மதம் மட்டுமே. 

Link to comment
Share on other sites

On 10/18/2019 at 2:07 AM, குமாரசாமி said:

இலங்கை உட்பட பல நாடுகளில் ஏழைகளுக்கு ஆசை காட்டியே மதமாற்றம் செய்கின்றார்கள். இது வெள்ளையர்களின் படையெடுப்புக்காலங்களிருந்தே நடை பெறுகின்றது.வன்முறையாகவும் மதமாற்றம் செய்யப்பட்டனர் என்பது வரலாறுகளில் உள்ளது.

இது வரலாறு. இந்த உண்மை அடிமை மனநிலையில் இருந்தே சுகம் கண்டு பழகிய சிலருக்கு இங்கு புரியவில்லை. 

அவர்கள் இந்த உண்மையைப் புரியாமல் எழுதுவதாக எனக்குப் புலப்படவில்லை. வெள்ளையினத்தவரின் ஆதிக்க மோகத்தை ஆதரிக்கும் கூட்டம் தான் இது. அடக்குமுறைகளைப் பல தசாப்தங்களாக சந்தித்த ஒரு இனம் பயன்படுத்தும் இந்த இணையத்தில் இவ்வாறான மனோநிலையில் இருப்பவர்கள் கருத்து எழுதுவது விந்தையாக உள்ளது!

On 10/18/2019 at 7:56 PM, குமாரசாமி said:

தாங்கள் சகல மதங்களுக்கும் அதன் கொள்கைகளுக்கும் எதிரானவர் என்று தப்புக்கணக்கு போட்டு விட்டேன்.சைவ/இந்து சமயத்திற்கு மட்டும்தான் தாங்கள் எதிரானவர் என்பது இப்போது தெட்டத்தெளிவாக தெரிகின்றது.
பூனக்குட்டி வெளியிலை வந்துட்டுதடோய்....

பூனைக்குட்டி வெளியே வந்து பல நாளாச்சு அண்ணை! 😊

இந்தத் திரியின் கருத்துக்களை வாசிக்கும் முன்பே யார் யார் எந்த மாதிரியான கருத்துக்களை எழுதியிருப்பார்கள் என்ற அனுமானம் எனக்கிருந்தது. வாசித்த பின் அதை உறுதி செய்துகொண்டேன்! 'சேம் ரெம்பிளேட்', 'சேம் பற்ரேர்ண்' ... பெரிய மாற்றம் ஏதுமில்லை... வழமையான மதத் திரிகளில் நிகழும் கருத்தாடல் வடிவம் தான் இங்கும். 

Link to comment
Share on other sites

On 10/18/2019 at 3:21 AM, Justin said:

ஆனால், இனி உங்கள் கருத்துகள் இணைப்புகளின் நம்பகத் தன்மை பற்றிய ஒரு முன்னெச்சரிக்கையை யாழ் வாசகர்களுக்கு இந்தத் திரி தெளிவு படுத்தி விட்டது என நினைக்கிறேன்!

நன்றி.

ஆனால், மதம் தொடர்பான திரிகளில் ஒருதலைச் சார்பான உங்கள் விதண்டாவாதம் செய்யும் கருத்துக்களை இங்கே பலர் இனங்கண்டு பல நாட்களாயிற்று என்பதையும் குறிப்பிடவேண்டும். பலர் இதை ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன்! 😊

இத்திரியில் எழுதப்பட்ட அனைத்துக் கருத்துக்களை வாசித்த பின்பும், முந்தைய திரிகளில் எனது அவதானிப்பின் மூலம் பெற்ற அனுபவங்களை வைத்தும் தான் இவ்வாறு சொல்கிறேன்; உங்களுக்கு அமெரிக்கன் உட்பட்ட வெள்ளையன் செய்தால் சரி. ஒரு நாட்டின் பூர்வீக குடிகள் செய்வது குற்றம். இதுவே உங்கள் வாதங்களின் சாராம்சம். இதற்கு வெள்ளைக்காரன் பத்திரிகையில், வெள்ளைக்காரச் சட்டத்தின் கீழ் ஆதாரம் வேண்டுமாம். அடிமை மனோநிலை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மல்லிகை வாசம் said:

உங்களிடம் இலகுவான  கேள்வி ...
பதிலில் உங்கள் எண்ணத்தை பதிவு செய்யுங்கள்.

தரவு:  இன்னொரு கடவுளை ஏற்கனவே கொண்டவனுக்கு .. இன்னொருவன் வந்து சொல்கிறான் 
இது உண்மை இல்லை .... நீ என்னுடன் வா உனக்கு உண்மையான கடவுளை காட்டுகிறேன் என்று. 
ஓகே பார்க்கலாம் என்று அவன் போகிறான் ... பின்பு ஆம் என்று ஏற்று அங்கேயே இருந்துவிடுகிறான். 

கேள்வி 1: மதம் மாறியவன் ஏன் முன்னைய கடவுளை பின்பு மறுக்கிறான்? 

கேள்வி 2: இன்னொரு கடவுளை தேடி போகிறவனை ...... இழுத்து வைத்திருக்க நீங்கள் பெரும்பாடு படுவது ஏன்?
(இதில் இந்துமதம்தான் சுதந்தரமானது என்ற பினாத்தல் வேறு எழுதுகிறார்கள்) 

கேள்வி 3: உங்களுடைய மதம் என்ன? அதன் கொள்கை தத்துவம் என்ன? உங்கள் மதத்தை நான் அறிய விரும்பினால் படிக்க வேண்டிய புத்தகம் என்ன? .... 

கேள்வி 3இன் தொடர்ச்சிதான்: நான் இந்துவாக மாற விரும்பினால் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? பின்பு முழுதாக மாறுவதும் எவ்ளவு காலம் எடுக்கும்? எதை பின்பற்ற வேண்டும்? இதை நீங்கள் பின்பற்றுகிறீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Lara said:

சஹ்ரான் கிறிஸ்தவர்களை அல்ல, அல்லாவை தவிர ஏனைய கடவுள்களை வணங்கும் அனைவரையுமே காபீர்கள் என கூறினார். ஏனைய இஸ்லாமிய குழுக்களுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வந்தவர். சஹ்ரானின் தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, சவுதி உட்பட சில நாடுகள் உள்ளன.

இலங்கையில் தாக்குதல் நடைபெற்றது அரசியலுக்காகவும் இன்னும் சில காரணங்களுக்காகவும். ஆனால் தாக்குதலுக்கு கிறிஸ்தவ தேவாலயம் தேர்ந்தெடுக்கப்பட்டது சஹ்ரானை பின்னணியில் இயக்கியவர்கள் கிறிஸ்தவ மதத்தை இல்லாமல் செய்யும் agenda இல் இயங்குபவர்கள் என்பதால். மற்றும்படி எந்த மத மக்களையும் கொல்வார்கள்.

உலக அரசியல்வாதிகள் பலரும் சாத்தானை ஏற்றுக்கொண்டு தான் அரசியலுக்கு வருபவர்கள்.

மகிந்த & கோ கூட சாத்தானை ஏற்றுக்கொண்டவர்கள். இந்த படத்தில் க்ளூ உள்ளது. கண்டு பிடிக்க முடிந்தால் கண்டு பிடியுங்கள்.

Sri Lankan presidential candidate and former defense chief Gotabaya Rajapaksa gestures to media as he leaves the election commission with his brother and former president Mahinda Rajapaksa, left, after filing his nomination in Colombo, Sri Lanka, Monday, Oct. 7, 2019. A record 35 candidates filed nominations Monday for next month’s Sri Lankan presidential election, but the incumbent has opted not to seek a second term with the entry of Rajapaksa, who is considered the favorite. (AP Photo/Eranga Jayawardena)
 
கிறிஸ்தவ மதமாற்ற குழு யேசுவை தவிர ஏனைய கடவுள்கள் அனைவரும் சாத்தான் என கூறி பிரச்சாரம் செய்வதுண்டு. மதம் மாற்றும் நோக்கிலும் இரு மதங்களை பின்பற்றுவோரிடையே பிரச்சினைகளை உருவாக்குவதற்கும் அவ்வாறு கூறுகிறார்கள். அதற்கு அவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் கொடுக்கிறார்கள். நீங்கள் வாசித்த திரி இதுவாக இருக்கலாம்.

https://yarl.com/forum3/topic/226226-சிவனையும்-புத்தரையும்-சாத்தான்கள்-எனும்-மத-நிகழ்வுக்குத்-தடை…/

உலகமே இப்ப எங்கும் சாத்தான், எதிலும் சாத்தான் எனும் போக்கில் சென்று கொண்டிருக்கிறது. அது கிறிஸ்தவ மதமாற்ற குழுக்களுக்கு கூட தெரியும். ஆனால் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு தெரியாது. 😂

சாத்தான் எங்கேயும் இல்லை. இங்கேயே நிறைய சாத்தான்களை பாத்துவிட்டேன் ஆளை விடுங்கோய் 

Link to comment
Share on other sites

பிரேமாநந்தாவையும் நித்தியாநந்தாவையும்   இது போன ற பல அயோக்கியர்களை கடவுளாக அருள் பாலிப்பவர்களாக நம்பும் அளவுக்கு பலவீனமான மக்கள் கூட்டம் இருக்கும் வரை இபடியான மத மற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும். தங்கள் சம்பாத்தியத்திற்காக தாம்  விதைத்துவிட்ட மூடத்தனங்களை மற்றவன் அறுவடை செய்யும் போது  கோபம் வருவது இயற்கை தான். 

மத மாற்றத்தை தடுக்க ஒரே வழி மக்களின் அறியாமை மீது இந்து மதம் விதைத்திருக்கும் விதைத்துக்கொண்டு இருக்கும்  மூடத்தனங்களை  மக்களை அறிவூட்டுவதன் மூலம் தடுத்து நிறுத்துவது மட்டும் தான். கடவுள் என்பது ஒரு சம்பிரதாயம் தான். அதை விட அதில் ஒரு மண்ணும் இல்லை நம் உழைப்பில் தான் எல்லாம்  தங்கி உள்ளது  என்ற உண்மையை  உணர்த்தி  தன்னம்பிக்கையை மக்களிடம் கட்டியெழுப்பி பாருங்கள் மத மாற்ற கும்பல்களால் மக்களை அணுகக கூட முடியாது. அதை செய்யாமல் மதம் மாற்றுகிறாரகள்  என்று புலம்பி எந்த பயனும் இல்லை. 

Link to comment
Share on other sites

13 hours ago, Maruthankerny said:

தரவு:  இன்னொரு கடவுளை ஏற்கனவே கொண்டவனுக்கு .. இன்னொருவன் வந்து சொல்கிறான் 
இது உண்மை இல்லை .... நீ என்னுடன் வா உனக்கு உண்மையான கடவுளை காட்டுகிறேன் என்று. 
ஓகே பார்க்கலாம் என்று அவன் போகிறான் ... பின்பு ஆம் என்று ஏற்று அங்கேயே இருந்துவிடுகிறான். 

கேள்வி 1: மதம் மாறியவன் ஏன் முன்னைய கடவுளை பின்பு மறுக்கிறான்? 

கிறிஸ்தவ மதமாற்றம் செய்வோர் கஷ்டப்பட்டோருக்கு பணம் போன்ற அற்ப சலுகைகளை வழங்கி அவர்களைத் தம் மதத்துக்குள் இழுக்கின்றனர். ஒரு கொள்கையும் இல்லாமல் அற்ப சலுகைக்காக மதம் மாறிய இவர்கள் முன்னைய மதம் மட்டுமல்ல தாம் புதிதாக இணைந்த மதத்தின் மீது உண்மையான நம்பிக்கையாலா இணைகிறார்கள்? எனவே.இது அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி.

Link to comment
Share on other sites

13 hours ago, Maruthankerny said:

கேள்வி 2: இன்னொரு கடவுளை தேடி போகிறவனை ...... இழுத்து வைத்திருக்க நீங்கள் பெரும்பாடு படுவது ஏன்?

மதம் மாறியவர்களை நாம் ஒன்றும் இழுத்துவைக்கப் பாடுபடவில்லை. தவறு உங்கள் பார்வையில் தான் உள்ளது.

நமது தாய்மண்ணில் தொன்று தொட்டு நமது முன்னோர்கள் பின்பற்றிய சைவ சமயத்தை என் போன்றவர்கள் பின்பற்றுகிறோம். அதற்காக கிறிஸ்தவ மதம் பரப்புவோர் போல் நாம் மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடவும் இல்லை. முதற் கேள்விக்கான பதிலில் நான் கூறியது போல் "மத மாற்ற வியாபாரம்" எம் மண்ணில் நிகழும் போது அதை எதிர்த்துக் கேள்வி கேட்கும் உரிமை எமக்கு உண்டு. ஏழை எளியவர்கள், பாமரர்களை ஆசை காட்டி மயக்கி தம் மதத்துக்குள் இழுக்க வேண்டிய அவசியம் என்ன? அத்துடன், முன்னர் குறிப்பிட்டது போல் வெள்ளையினத்தவர் தமது மதத்தை நம் தாய் மண்ணில் பரப்பிய முறை கொடுமையானது. அன்று அவர்கள் செய்ததை இன்று அவர்களின் வழி வந்தவர்கள் செய்கிறார்கள். எனவே இதை நாம் கேள்வி கேட்பது இயல்பானது. 

இதை விடுத்து காலங்காலமாக நம் தாய் மண்ணில் சைவ சமயத்தைப் பின்பற்றி வரும் எம்மை நோக்கி கேள்வி கேட்பது கண்டிக்கத்தக்கது. 

Link to comment
Share on other sites

14 hours ago, Maruthankerny said:

கேள்வி 3: உங்களுடைய மதம் என்ன? அதன் கொள்கை தத்துவம் என்ன? உங்கள் மதத்தை நான் அறிய விரும்பினால் படிக்க வேண்டிய புத்தகம் என்ன? .... 

கேள்வி 3இன் தொடர்ச்சிதான்: நான் இந்துவாக மாற விரும்பினால் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? பின்பு முழுதாக மாறுவதும் எவ்ளவு காலம் எடுக்கும்? எதை பின்பற்ற வேண்டும்? இதை நீங்கள் பின்பற்றுகிறீர்களா? 

எனது சைவ சமயம் இந்து மதத்தின் ஒரு கிளையாகும். அதற்காக மற்றய பிரிவுகளை எதிர்ப்பவன் அல்ல. உண்மையில், மற்றைய மதங்களை மதிக்க விரும்புவன் நான், அவை சொல்லும் நல்ல கருத்துக்களுக்காக. ஆனால் மதமாற்ற வியாபாரத்தை வெறுப்பவன் நான். 

நீங்கள் மதம் மாறுவது உங்கள் இஷ்டம். நான் இங்கு மதப்பிரச்சாரம் செய்ய வரவில்லை. முன்பு ஒரு திரியில், சைவ சமயம்/இந்து மதம் பற்றி அறிய உங்களுக்கு உண்மையான ஆர்வம் இருந்தால் உங்கள்் அருகிில் உள்ள பெரியவர்கள், நண்பர்கள், உறவினர்கள் போன்றோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே என்று கூறியிருந்தேன். 

இன்றைய இணைய உலகில் உங்களுக்குத் தேவையான அறிவைத் தேடிப் பெறுவது இலகு. தொன்மையான சைவசமயம், இந்து மதம் தந்த நூல்கள் எண்ணற்றவை. வெள்ளைக்காரனே தேடித் தேடி அவற்றைப் படிக்கிறான். ஈழத்தவரான நீங்கள் இப்படியான தேடல்களில் ஈடுபடுவது மிக மிக இலகுவாக இருக்கும். யாழ் கள விவாதத்தின் மூலம் எல்லாவற்றையும் அறிய முடியாது. உண்மையான ஊக்கம் இருப்பின் சுய தேடல் ஈடுபடுங்கள்.

எனது நம்பிக்கையில் நான் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளேன்; அது என்னை பல இடங்களில் காத்தது. இதனால் நான் மகிழ்ச்சியாக உள்ளேன். எனவே எனது நம்பிக்கையைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. 😊

Link to comment
Share on other sites

14 hours ago, Maruthankerny said:

கேள்வி 3இன் தொடர்ச்சிதான்: நான் இந்துவாக மாற விரும்பினால் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? பின்பு முழுதாக மாறுவதும் எவ்ளவு காலம் எடுக்கும்? எதை பின்பற்ற வேண்டும்? 

எந்த ஒரு நம்பிக்கை / மதம் மீதும் உங்களுக்கு உண்மையான ஆர்வம் இருந்திருந்தால் மேலுள்ளவாறு கேட்டிருக்கமாட்டீர்கள். இந்துவாகவோ, கிறிஸ்தவனாகவோ, பௌத்தனாகவோ, முஸ்லிமாகவோ, வேறு எதுவுமாகவோ மாற விரும்பினால் முதலில் உங்களைத் தான் நீங்கள் தொடர்புகொள்ள வேண்டும்! 😃 இந்து மதத்தை கிறிஸ்தவ மத மனநிலையில் பார்க்கும் உங்கள் தவறான பார்வையே இவ்வாறு உங்களை எழுதவைத்தது என நினைக்கிறேன். 

இதற்கு முதல் நான் எழுதிய பதிலே இதற்கும். நன்றி 😊

3 hours ago, tulpen said:

பிரேமாநந்தாவையும் நித்தியாநந்தாவையும்   இது போன ற பல அயோக்கியர்களை கடவுளாக அருள் பாலிப்பவர்களாக நம்பும் அளவுக்கு பலவீனமான மக்கள் கூட்டம் இருக்கும் வரை இபடியான மத மற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும்.

ருல்பென்,

ஆக, உங்கள் பார்வையில் நித்தியானந்தா, பிரேமானந்தா போன்றவர்கள் தான் இந்துமதக் கடவுளாக நாம் கொண்டாடுவதாகத் தெரிகிறது. அது உங்கள் பார்வையில் உள்ள தவறு. இந்து மதத்தில் உள்ள நல்ல பல விடயங்களை மறைப்பதற்கு நீங்கள் பாடுபட்டு வருவது யாழ் களம் நன்கறிந்ததே! 😊

Link to comment
Share on other sites

10 hours ago, satan said:

சாத்தான் எங்கேயும் இல்லை. இங்கேயே நிறைய சாத்தான்களை பாத்துவிட்டேன் ஆளை விடுங்கோய் 

இதற்கு நான் இணைத்த பாடலை காணவில்லை, சரி, வேறு விதத்தில் பதிலளிக்கிறேன்.

சாத்தான் உண்மையில் உள்ளதா இல்லையா என்பது பற்றியல்ல எனது கருத்து. கடவுளை வழிபடுபவர்கள் எவ்வாறு உள்ளார்களோ அவ்வாறே சாத்தானை வழிபடுபவர்களும் உள்ளார்கள்.

பலர் சாத்தான் உள்ளதாக நம்புவதில்லை, ஆனால் சில காரணங்களுக்காக சில அமைப்புகளில் இணைந்து சாத்தானை பரப்புகிறார்கள். 

நீங்கள் சாத்தான் என்று பெயர் வைத்து, profile படமும் போட்டுள்ளீர்களே தவிர, சாத்தானை வைத்து இந்த உலகில் நடக்கும் பல விடயங்கள் உங்களுக்கு தெரியாது என்பதை உங்கள் கருத்துகளை வாசிக்கும் போதே புரிந்து கொண்டேன். 😀

Justin Bieber ஏன் இதை அணிந்துள்ளார் என உங்களுக்கு புரியாது, colomban போன்றோருக்கு புரியும்.

3acab7eca1152db2b7096d12f2c7a372.jpg

Link to comment
Share on other sites

On 10/20/2019 at 2:34 PM, குமாரசாமி said:

நான் வேலை தேடுறன்.:cool:
பெயர்:- குடாரப்பு குமாரசாமி
வயது: 59
பிறந்த இடம்:- செல்வச்சன்னதி அடியார் மடம்.
படிப்பு:- ஐந்தாம் வகுப்பு சித்தியடையவில்லை.
தெரிந்த தொழில்:- ஆடுமாடு மேய்த்தல்,பூக்கன்றுக்கு தண்ணி ஊத்துதல்.
அனுபவங்கள்:-யாழ்களத்தில் குமுறுதல்,குத்திமுறிதல்,கொழுவுப்படுதல்,வெறுப்பேத்துதல்.
தகமைகள்:- யாழ்களத்தில் இரண்டு செம்புள்ளி.
எதிர்பார்க்கும் ஊதியம்:- ஏதோ முடிஞ்சதை பாத்து தரலாம்.
 
உங்கள் ஊரிலே ஆடு மாடு மேக்கவும் பூக்கன்றுக்கு தண்ணி ஊத்தவும் ஆட்கள் தேவையாக இருக்கிறது. நீங்கள் அற்ப சலுகைகளுக்காவும் பணத்திற்காகவும் மதம் மாறி .. ஒ.. மன்னிக்கவும் தவறாக எழுதி விட்டேன் .. தாயை மாற்றி ... மீண்டும் மன்னிக்கவும் தவறாக ... தாய்நாட்டை மாற்றி எங்கோ ஒரு கிறீஸ்தவ நாட்டில் வந்து இருந்து கொண்டு என்ன செய்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

On 10/20/2019 at 11:34 PM, குமாரசாமி said:

நான் வேலை தேடுறன்.:cool:
பெயர்:- குடாரப்பு குமாரசாமி
வயது: 59
பிறந்த இடம்:- செல்வச்சன்னதி அடியார் மடம்.
படிப்பு:- ஐந்தாம் வகுப்பு சித்தியடையவில்லை.
தெரிந்த தொழில்:- ஆடுமாடு மேய்த்தல்,பூக்கன்றுக்கு தண்ணி ஊத்துதல்.
அனுபவங்கள்:-யாழ்களத்தில் குமுறுதல்,குத்திமுறிதல்,கொழுவுப்படுதல்,வெறுப்பேத்துதல்.
தகமைகள்:- யாழ்களத்தில் இரண்டு செம்புள்ளி.
எதிர்பார்க்கும் ஊதியம்:- ஏதோ முடிஞ்சதை பாத்து தரலாம்.
 
Link to comment
Share on other sites

2 hours ago, மல்லிகை வாசம் said:

நமது தாய்மண்ணில் தொன்று தொட்டு நமது முன்னோர்கள் பின்பற்றிய சைவ சமயத்தை என் போன்றவர்கள் பின்பற்றுகிறோம். அதற்காக கிறிஸ்தவ மதம் பரப்புவோர் போல் நாம் மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடவும் இல்லை. முதற் கேள்விக்கான பதிலில் நான் கூறியது போல் "மத மாற்ற வியாபாரம்" எம் மண்ணில் நிகழும் போது அதை எதிர்த்துக் கேள்வி கேட்கும் உரிமை எமக்கு உண்டு. 

 "மத மாற்ற வியாபாரம்" என்று எழுதி இருக்கிறீர்கள். இலாபம் இல்லாமல் வியாபாரம் இல்லை. இங்கே மதம் மாற்றும் 'வியாபரிகளுக்கு' எவ்வளவு இலாபம் எப்படி கிடைக்கிறது என்று எழுத முடியுமா?

2 hours ago, மல்லிகை வாசம் said:

ஏழை எளியவர்கள், பாமரர்களை ஆசை காட்டி மயக்கி தம் மதத்துக்குள் இழுக்க வேண்டிய அவசியம் என்ன?

இந்த கேள்வி,  உங்களுக்கு இது  எப்படி  'வியாபாரம்' ஆகிறது என்று புரியவில்லை என்று காட்டுகிறது. இந்து மதத்தில் பெருமளவு வியாபாரம் இருக்ககூடும். நீங்கள் தான் அதை தெளிவு படுத்த வேண்டும்.

கிறீஸ்தவமும் இஸ்லாமும் இந்து மதத்தில் இருந்து பெருமளவில் வேறுபடும் மதங்கள். அவை இரெண்டுமே ஆபிரகாம் / இப்ராகிம் வழி வந்த மதங்கள். இந்த மதங்களின் அடிப்படையே இரண்டு தான்:

  1. ஏழை எளியவர்கள், பாமரர்களுக்கு உதவுதல்.
  2. முடிந்த அளவு மற்றவர்களுக்கு தமது மதத்தை பரப்புதல். 

IFRC_logo.svg

இதுதான் அவர்களின் மதக்கடமை. கிறீஸ்தவர்களும் முஸ்லிம்களும் இப்படி ஏழை எளியவர்கள், பாமரர்களுக்கு உதவ, அந்த ஏழை எளியவர்கள், பாமரர்கள் தமக்கு உதவும் மக்களுடன் இணைந்து கொள்கிறார்கள். இது மனித இயல்பு.

எங்கள் மண்ணில் உங்கள் மதத்தை கொண்டு வராதீர்கள் என்று நீங்கள் சொல்லலாம். அவர்களும் அவ்வாறே எங்கள் மண்ணில் நீங்களும் இருக்ககூடாது, வரகூடாது என்று சொல்ல ஆரம்பிப்பார்கள்.  அப்படியானால் என்ன நடக்கும்?

எல்லா இந்துக்களும் ஐரோப்பா, அமரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளை விட்டு வெளியேற வேண்டி வரும்.

கிறீஸ்தவர்களும் முஸ்லிம்களும் இந்தியா போன்ற இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளை விட்டு வெளியேற வேண்டி வரும்.

உண்மையில் இது சாத்தியம் இல்லை. இந்தியாவில் உள்ள இந்து தீவிரவாதிகளே இப்படி வெளியேற கேட்கவில்லை. ஆகவே கிறீஸ்தவர்களும் முஸ்லிம்களும் தங்கள் மத கடமைகளை செய்ய நீங்கள் தடையாக இருப்பது அர்த்தம் அற்றது.. உங்கள் மதம் வித்தியாசமானது, அதில் இப்படி ஏழை எளியவர்கள், பாமரர்களுக்கு உதவுதல், மற்றும் முடிந்த அளவு மற்றவர்களுக்கு தமது மதத்தை பரப்புதல் போன்ற கடமைகள் இல்லை என்பதற்காக கிறீஸ்தவர்களும் முஸ்லிம்களும் தமது மதக்கடமைகளை விட்டுவிட வேண்டும் என்று நீங்கள் கேட்பது பயனற்றது. கிறீஸ்தவர்களும் முஸ்லிம்களும் தங்கள் மதக் கடமைகளை கைவிட போவதில்லை. நான் கேட்கிறேன் என்பதற்காக நீங்கள் இந்து சமய கடமைகளை கைவிட மாட்டீர்கள் இல்லையா? அது போல தான் கிறீஸ்தவர்களும் முஸ்லிம்களும் தங்கள் மதக் கடமைகளை கைவிட போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Jude said:
  1. ஏழை எளியவர்கள், பாமரர்களுக்கு உதவுதல்.
  2. முடிந்த அளவு மற்றவர்களுக்கு தமது மதத்தை பரப்புதல். 

ஏழை எளிய மக்களுக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர்கள் ஏன் மதம் மாறிய பின்னர் உதவ வேண்டும்?
இது சம்பந்தமாக எனக்கு ஜேர்மனி வந்த புதிதில் ஒரு சில அனுபவங்கள் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Jude said:

உங்கள் ஊரிலே ஆடு மாடு மேக்கவும் பூக்கன்றுக்கு தண்ணி ஊத்தவும் ஆட்கள் தேவையாக இருக்கிறது. நீங்கள் அற்ப சலுகைகளுக்காவும் பணத்திற்காகவும் மதம் மாறி .. ஒ.. மன்னிக்கவும் தவறாக எழுதி விட்டேன் .. தாயை மாற்றி ... மீண்டும் மன்னிக்கவும் தவறாக ... தாய்நாட்டை மாற்றி எங்கோ ஒரு கிறீஸ்தவ நாட்டில் வந்து இருந்து கொண்டு என்ன செய்கிறீர்கள்?

நீங்கள் மீண்டும் மீண்டும் விளக்கம் குறைந்து தவறு தவறாக எழுதுவதால் நல்லதொரு  வைத்தியரை நாடுவது நல்லது.

Link to comment
Share on other sites

On 10/20/2019 at 11:13 PM, Jude said:

பாராட்டுகள், கடைசியாக கண்டுபிடித்து விட்டீர்கள்.😄 உங்களால் உங்கள் மதத்தை காப்பாற்றவே முடியாது.

யூதரான யேசுவை யூதர்கள் ஏற்கவில்லை. கிறிஸ்தவர்கள் வழிபடுகிறார்கள். 

யூதர்களிடமிருந்து உங்கள் மதத்தை முதலில் காப்பாற்ற முடியுமா என பாருங்கள். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Lara said:

யூதரான யேசுவை யூதர்கள் ஏற்கவில்லை. கிறிஸ்தவர்கள் வழிபடுகிறார்கள். 

யூதர்களிடமிருந்து உங்கள் மதத்தை முதலில் காப்பாற்ற முடியுமா என பாருங்கள். 😀

இயேசு யூதர் அல்லர் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள்.

1 hour ago, குமாரசாமி said:

ஏழை எளிய மக்களுக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர்கள் ஏன் மதம் மாறிய பின்னர் உதவ வேண்டும்?
 
ஈழப் போராட்டத்திற்கு உதவியவர்கள், கிறிஸ்தவ நாடுகள்.

ஈழத்தில், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருந்திருந்தால், ஈழம் எப்போதோ மலர்ந்திருக்கும் -  தெற்கு சூடான், தீமோர் போல.

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

நீங்கள் மீண்டும் மீண்டும் விளக்கம் குறைந்து தவறு தவறாக எழுதுவதால் நல்லதொரு  வைத்தியரை நாடுவது நல்லது.

யாழ் களத்தை படிக்கும் வரை மருந்து வேலை செய்யாது என்கிறார் வைத்தியர்😩

3 hours ago, குமாரசாமி said:

ஏழை எளிய மக்களுக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர்கள் ஏன் மதம் மாறிய பின்னர் உதவ வேண்டும்?
இது சம்பந்தமாக எனக்கு ஜேர்மனி வந்த புதிதில் ஒரு சில அனுபவங்கள் உண்டு.

நீங்கள் மதம் மாறிய பின்னா அகதி காசு கிடைத்தது? மதம் மாற்றாமலே உதவி இருக்கிறார்கள் இல்லையா?

3 hours ago, Lara said:

யூதரான யேசுவை யூதர்கள் ஏற்கவில்லை. கிறிஸ்தவர்கள் வழிபடுகிறார்கள். 

யூதர்களிடமிருந்து உங்கள் மதத்தை முதலில் காப்பாற்ற முடியுமா என பாருங்கள். 😀

யூத மதமா, கிறீஸ்தவமா பெருமளவு மக்களால் பின்பற்ற படுகிறது? யூதம் தான் கிறீஸ்தவத்திடம் இருந்து தன்னை காத்து கொள்ள கஷ்ரப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மல்லிகை வாசம் said:

கிறிஸ்தவ மதமாற்றம் செய்வோர் கஷ்டப்பட்டோருக்கு பணம் போன்ற அற்ப சலுகைகளை வழங்கி அவர்களைத் தம் மதத்துக்குள் இழுக்கின்றனர். ஒரு கொள்கையும் இல்லாமல் அற்ப சலுகைக்காக மதம் மாறிய இவர்கள் முன்னைய மதம் மட்டுமல்ல தாம் புதிதாக இணைந்த மதத்தின் மீது உண்மையான நம்பிக்கையாலா இணைகிறார்கள்? எனவே.இது அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி.

ஏற்கனவே ஒரு மதத்தில் இருந்து இருக்கிறார்கள் ....
அந்த மத்தில் கொள்கை ஏதும் இருந்து இருந்தால் ... இப்படி போயிருக்க மாடடார்களே?
ஒன்றும் இல்லாதவற்றில் ... தொற்றிக்கொண்டு நிர்ப்பதைவிட அங்கு அற்ப சலுகைக்காவது 
ஏதாவது கொடுப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள் ... அங்கு போவதுதானே சரியானது. 

Link to comment
Share on other sites

48 minutes ago, Jude said:

யூத மதமா, கிறீஸ்தவமா பெருமளவு மக்களால் பின்பற்ற படுகிறது? யூதம் தான் கிறீஸ்தவத்திடம் இருந்து தன்னை காத்து கொள்ள கஷ்ரப்படுகிறது.

யூதர்கள் தானே உலகை கைக்குள் வைத்திருக்கிறார்கள்.

நீங்கள் கிறிஸ்தவ நாடுகள் என நினைக்கும் நாடுகள் அனைத்திலும் யூதர்கள் பெரும் பதவியில் உள்ளார்கள். அந்நாட்டு தலைவர்கள் யூத ஆதரவு கொள்கையில் இயங்குகிறார்கள்.

கிறிஸ்தவர்களை சாத்தானை வணங்குபவர்களாக மாற்றுவதும் தமது மதத்துக்கு மாற்றுவதும் என கிறிஸ்தவத்தை அழித்தும் வருகிறார்கள். 

கத்தோலிக்கரான Ariana Grande அதை கைவிட்டு யூதர்களின் Kabbalah ஐ நோக்கி சென்றதும் “God is a woman” என்ற பாடலை உருவாக்கியது போன்ற கொமடிகளையும் பார்த்து வருகிறேன். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Maruthankerny said:

ஏற்கனவே ஒரு மதத்தில் இருந்து இருக்கிறார்கள் ....
அந்த மத்தில் கொள்கை ஏதும் இருந்து இருந்தால் ... இப்படி போயிருக்க மாடடார்களே?
ஒன்றும் இல்லாதவற்றில் ... தொற்றிக்கொண்டு நிர்ப்பதைவிட அங்கு அற்ப சலுகைக்காவது 
ஏதாவது கொடுப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள் ... அங்கு போவதுதானே சரியானது. 

 ஐயனே! சைவ/இந்து மதத்தில் இல்லாத  கொள்கைகளை இதர மதத்தில்  இருந்து வேறுபடுத்தி காட்டமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மல்லிகை வாசம் said:

மதம் மாறியவர்களை நாம் ஒன்றும் இழுத்துவைக்கப் பாடுபடவில்லை. தவறு உங்கள் பார்வையில் தான் உள்ளது.

நமது தாய்மண்ணில் தொன்று தொட்டு நமது முன்னோர்கள் பின்பற்றிய சைவ சமயத்தை என் போன்றவர்கள் பின்பற்றுகிறோம். அதற்காக கிறிஸ்தவ மதம் பரப்புவோர் போல் நாம் மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடவும் இல்லை. முதற் கேள்விக்கான பதிலில் நான் கூறியது போல் "மத மாற்ற வியாபாரம்" எம் மண்ணில் நிகழும் போது அதை எதிர்த்துக் கேள்வி கேட்கும் உரிமை எமக்கு உண்டு. ஏழை எளியவர்கள், பாமரர்களை ஆசை காட்டி மயக்கி தம் மதத்துக்குள் இழுக்க வேண்டிய அவசியம் என்ன? அத்துடன், முன்னர் குறிப்பிட்டது போல் வெள்ளையினத்தவர் தமது மதத்தை நம் தாய் மண்ணில் பரப்பிய முறை கொடுமையானது. அன்று அவர்கள் செய்ததை இன்று அவர்களின் வழி வந்தவர்கள் செய்கிறார்கள். எனவே இதை நாம் கேள்வி கேட்பது இயல்பானது. 

இதை விடுத்து காலங்காலமாக நம் தாய் மண்ணில் சைவ சமயத்தைப் பின்பற்றி வரும் எம்மை நோக்கி கேள்வி கேட்பது கண்டிக்கத்தக்கது. 

உங்கள் பதில் வெறும் குழப்பமாக இருக்கிறது ...

முதலில் மாறுவோரை ஒருவரும் கட்டிவைக்கவில்லை என்கிறீர்கள் 
பின்பு கண்டிக்கிறோம் என்கிறீர்கள் 

ஏன் ஒரு தரிசனமான  முடிவை எடுத்து சொல்லமுடியாமல் இருக்கிறீர்கள் என்பது புரியவில்லை?

ஒருவன் தனக்கு பிடித்த மதத்துக்கு போவதில் உங்களுக்கு என்ன நஷடம் இருக்கிறது? 
கிறிஸ்த்தவரை சாடுகிறீர்கள் மறைமுகமாக நீங்களும் அதைத்தானே செய்கிறீர்கள்?
அவர்கள் கூட்டம் சேர்க்கிறார்கள் ........ நீங்கள் கூட்டத்தை வலுகட்ட்யமாக கண்டனங்கள் மூலம் 
கட்டிவைக்க பார்க்கிறீர்கள். 
எனது பார்வையில் அவர்கள் கொஞ்சம் அன்பை ஆதரவை என்றாலும் கொடுக்கிறார்கள் 
நீங்கள்தான் எதுவுமே கொடுக்காது வீம்புக்கு இழுத்துவைத்து வன்முறை செய்கிறீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

நீங்கள் மதம் மாறிய பின்னா அகதி காசு கிடைத்தது? மதம் மாற்றாமலே உதவி இருக்கிறார்கள் இல்லையா?

 நான்  ஜேர்மனிக்கு வந்த புதிதில் என்னுடன் கூட இருந்த கிறிஸ்தவ நண்பர்களுக்கு  படிப்பதற்கு ஒரு சபை உதவி செய்தது.எனக்கும் என்னை சார்ந்த ஒரு சிலருக்கு மட்டும் கை விரித்து விட்டார்கள்.ஆனால் நத்தார் தினத்திற்கு பாகுபாடில்லாமல்  தோடம்பழமும் இனிப்பு வகையளும் தந்தார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.