Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

100 நபர்கள்

ஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா!

5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்ற அறிவிப்பினால், இன்று காலை முதலே பிரியாணி கடையில் கூட்டம் முண்டியக்க ஆரம்பித்துவிட்டது.

2 வாரத்துக்கு முன்பு வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் பரவியது. அதில், திண்டுக்கல் முஜீப் பிரியாணி கடையில், அக்டோபர் 16-ம் தேதி உலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசா கொடுத்து பிரியாணியை வாங்கிச் செல்லுங்கள்" என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அப்போது இதை யாருமே பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. விளையாட்டுக்கு சொல்கிறார்கள் என்றுதான் நினைத்தார்கள். ஏனென்றால் 5 பைசா புழக்கத்திலேயே இல்லை.. அதை இப்ப இருக்கும் தலைமுறையினர் பார்த்ததுகூட இல்லை. 5 பைசாக்கு எங்க போவது என்று நினைத்து கொண்டு இதை கண்டுக்காமல் விட்டுவிட்டனர்.

ஆனால், இது உண்மையான விளம்பரம் என்பது இன்றைக்குதான் மக்களுக்கு தெரிந்தது. 5 பைசா கொண்டு வந்தால் அரை பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும், என்றும், முதலில் வரும் 100 நபர்களுக்கு பார்சலில் இந்த பிரியாணி பொட்டலம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது மக்கள் மனதில் விரைந்து சென்றது.

5 பைசா நாணயம்

வழக்கமாக மதியம் 12 மணிக்குமேலதான் எந்த பிரியாணி கடையிலும் பிரியாணி கிடைக்கும். ஆனால் இந்தஅறிவிப்பினால், காலை 10 மணிக்கே கடை முன்பு மக்கள் கூடிவிட்டனர். ஆண், பெண் என எல்லாருமே வரிசையில் வந்து நின்றனர். அவர்களின் கையில் 5 பைசா நாணயம் இருந்தது. அறிவித்தபடியே 5 பைசா நாணயத்தை வாங்கி கொண்டு, முதல்100 பேரக்கு பிரியாணி பொட்டங்கள் வழங்கப்பட்டன.

பழமை பொருட்கள்

இப்படி ஒரு விளம்பரமா என்று கடை ஓனர் ஷேக் முஜிபூர் ரகுமானிடம் கேட்டதற்கு, "நாம் உணவின் தேவையை அறிந்து கொள்ள வேண்டும். அதே சமயத்தில் பழமையான பொருட்களின் பெருமையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

பெருமை

செல்லாத நாணயத்தை கூட சேமித்து வைத்தால் பெருமையை தரும் என்பதை உணர்த்தும் வகையில் 5 பைசா நாணயத்தை கொண்டு வந்து கொடுத்தால் பிரியாணி தரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டோம். எப்படியும் வீட்டு பெரியவர்கள் வைத்திருந்து இருப்பார்கள், அல்லது பொக்கிஷம் போல சேமித்து இருப்பார்கள் என்று தெரியும், அதனால்தான் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டோம். நல்ல வரவேற்பு. எல்லார் கையிலும் 5 பைசாவை பார்க்கும்போது ஆச்சரியமாகவும் இருந்தது" என்றார்.

Read more at: https://tamil.oneindia.com/news/dindigul/biriyani-for-5-paisa-in-mujib-biriyani-shop-365792.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு ப்ளான், செம மார்க்கெட்டிங்..புதுசு புதுசா கண்டுபிடிக்கறாங்க..யாராவது சாப்பிட்டுப் பார்த்து சொல்லுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட விடுங்கப்பா.. உன்னிகிருஷ்ணன் குரல் வராத வரைக்கும் சந்தோசம்..☺️

memees.php?w=650&img=dml2ZWsvdml2ZWstYml

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிழக்கு மாகாண ஆளுநராக மறுபடியும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி யொருவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்! கிழக்கு மாகாண ஆளுநராக மறுபடியும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி யொருவர் நியமிக்கப்பட உள்ளதாக கிழக்கு வாழ் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்றது. கிழக்கில் அரச நிலங்களை அபகரிதது அரபு தனவந்தர்களுக்கு விற்பனை செய்த ஒரு அரசியல்வாதியே புதிய ஆளுநராக நியமிக்கப்பட இருப்பதாக கிழக்கு மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது. முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக கிழக்கு மகாண ஆளுநரைத் தொர்புகொண்டு வினவியபோது, தான் இன்னும் பதவி விலகவில்லை என்று மாத்திரம் தெரிவித்தார். கிழகக்கில் தமிழ் மக்களின் கோயில் காணிகளை அபகரித்து பள்ளிவாசல் கட்டி இன விரோதத்திற்கு வித்திட்டு, பல இன வன்முறைகளை நேரடியாக மேற்கொண்டவரும், இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுக்கு பக்கபலமாக இருந்தவரும், ஈஸ்டர் குண்டுவெடிப்பின் முக்கிய சந்தேகதாரயுமான அந்த குறிப்பிட்ட அரசியல்வாதி கிழக்கின் ஆளுனராக நியமிக்கப்படுவது, மீண்டும் கிழக்கில் வன்முறைகள் பாரிய அளவில் வெடிப்பதற்கு வகைதேடித்தரும் என்று அச்சப்படுகின்றார்கள் கிழக்கு வாழ் தமிழ்- முஸ்லிம் மக்கள்.     https://www.meenagam.com/கிழக்கு-மாகாண-ஆளுநராக-மற/
    • ஏதோ இதில் ம‌ட்டும் தான் பிழையா க‌ணித்து ம‌ற்ற‌ விளையாட்டுக்களில் எல்லாம் வீறு ந‌டை போட்ட‌ மாதிரி இங்கை  இருந்து ஒருத‌ர் புல‌ம்புகிறார் உற‌வுக‌ளே இவ‌ருக்கு யாராவ‌து கொஞ்ச‌ம் ஆறுத‌ல் சொல்லுங்கோ லொள் இந்த‌ திரியில் கூட‌ முட்டை கேஸ்சுக‌ள் தான் மூடிட்டு வேடிக்கையை ம‌ட்டும் பாரும்................😁😀
    • யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளியூட்டக்கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டும் பொலிஸார் யாழ் நகரில் வாகன போக்குவரத்தினால் விபத்துக்கள் அதிகரித்த நிலையில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளியூட்டக்கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியினை யாழ்.பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்து பொலிஸார் இணைந்து துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணியினை முன்னெடுத்திருந்தனர். இரவில் துவிச்சக்கர வண்டியில் பயணிக்கும்போது பின்னால் வரும் வாகனத்திற்கு துவிச்சக்கர வண்டியினை சரியாக தெரியதக்கதாக ஒளியூட்டப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டும் வேலை திட்டம் இவ்வாறு நேற்று இரவு ஆரம்பிக்கப்பட்டது.குறித்த வேலை திட்டமானது யாழ்.பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உஜித் லியனகேயின் வழிகாட்டுதலின் கீழ் யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.(15)   http://www.samakalam.com/யாழ்ப்பாணத்தில்-துவிச்ச/
    • ”ராஜபக்‌ஸக்கள்’ வீதிக்கு இறங்க முடியாத நிலை ஏற்படும்! October 25, 2021 இன்றைய ஆட்சியாளர்களின் உருவப்பொம்மைகளை மாத்திரமே மக்கள் அடிப்பதாகவும், எரிப்பதாகவும் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ர, எதிர்வரும் நாள்களில் ‘ராஜபக்‌ஸ’ என்ற குடும்பப் பெயர் கொண்டவர்கள் வீதிக்கு இறங்க முடியாத நிலை ஏற்படும் என்றார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (24.10.21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பென்டோரா அக்காவும் அவரது கணவரும் சேர்ந்து 160 மில்லியன் டொலர் மோசடியாக சம்பாதித்துள்ளனர். எனவே, பென்டோரா அக்காவின் பணத்தை எடுத்தால் உரப்பிரச்சினை, ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை, அரிசி பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்றார். இவர்களின் வீடு, பிள்ளைகள் உள்ளிட்டவர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். எவ்வளவு சரி சம்பாதிக்கவே ஒவ்வாரு காலத்துக்கும் இந்த ராஜபக்‌ஸ குடும்பத்தினர் இலங்கைக்கு வருகிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவர்களுக்கும் இங்கிருந்து வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்களுக்கும் சிறு வித்தியாசமே உள்ளது. வீட்டுப் பணிப்பெண்கள், தாம் சம்பாதிக்கும் பணத்தை இலங்கைக்கு அனுப்புகிறார்கள். ஆனால், ராஜபக்‌ஸ குடும்பத்தினர் இங்கிருந்து அமெரிக்காவுக்க கொண்டு செல்கின்றனர் என்றார். அரிசி, பருப்பின் விலை பற்றி பற்றி பேச தன்னை ஜனாதிபதியாக நியமிக்கவில்லை கோட்டாபய ராஜபக்‌ஸ கூறுகிறார். ஆனால் நியமிக்கப்பட்டவுடனேயே அரிசி கடைகளுக்குச் சென்று அரிசியின் விலையை கேட்டார். நாட்டு மக்களிடம் பருப்பு, செமன் பற்றி பேசினார். ”எனவே கடவுளே! உண்மையில் இன்று என்ன பேசுகிறாம். நாளை என்ன பேசுகிறோம் என்று கூட இந்த ராஜபக்‌ஸ குடும்பத்துக்கு தெரியாமல் போய்விட்டது. ஆகவே எழுதி வைத்துக் கொள்ளுங்கள் சந்தர்ப்பம் வரும் போது, ராஜபக்‌ஸ குடும்பத்தினர் ஒவ்வொருத்தராக கையில் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு, நாட்டை விட்டு தப்பியோடுவார்கள். அவர்கள் அவ்வாறு தப்பியோடாவிட்டால் இனி ஊடக சந்திப்பை நடத்துவதில் பயனில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.   https://globaltamilnews.net/2021/167664
    • நேற்றையான் தோல்விக்கு ந‌ண்பா இந்தியாவின் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் தான் கார‌ண‌ம் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்து இருக்க‌னும் ர‌ன்ஸ் கூடி இருக்கும் ஒரு விக்கேட்டும் எடுக்காம‌ வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் ர‌ன்ஸ்ச‌ விட்டுக் கொடுத்த‌தை நினைக்க‌ விச‌ர் பிடிக்குது இர‌வு நேர‌ம் ப‌ல‌ மைதான‌ங்க‌ளில் ப‌ந்து வீசுவ‌த‌ சிர‌ம‌ம்.............. நாண‌ய‌த்தில் வின் ப‌ண்ணி பாக்கிஸ்தான் க‌ப்ட‌ன் ப‌ந்து வீச்சை தெரிவு செய்ய‌ இது தான் கார‌ண‌ம்.............😁😀  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.