Jump to content

இளம்பராயத்தினர் 30 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்துக் குறைவு அல்லது உடற்பருமனால் பாதிப்பு – UNICEF


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bangladesh-UN0266662-hero-720x450.jpg

இளம்பராயத்தினர் 30 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்துக் குறைவு அல்லது உடற்பருமனால் பாதிப்பு – UNICEF

சர்வதேச ரீதியாக 5 வயதுக்குக் குறைவான சுமார் 700 மில்லியன் குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர், போதிய ஊட்டச்சத்து இன்றியோ அல்லது அதிக உடல் பருமனுடனேயோ இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக குழந்தைகள் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக UNICEF எனப்படும் ஐக்கிய நாடுகளின் துணை நிறுவனமான சிறுவர் நல அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஊட்டச்சத்து இன்றி உணவு உற்கொள்ளும் பிள்ளைகளின் வாழ்க்கைத் தரம் மோசமாகவே இருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

1999 ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுனிசெப் அமைப்பு வெளியிட்ட முதல் குழந்தைகள் நல அறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

வறிய நாடுகளிலும், குறைந்த வருவாய் கொண்ட நாடுகளிலும் இந்தப் பிரச்சினை மிக உயர்வாக காணப்படுகின்றது.

5 வயதுக்குக் குறைவான சுமார் 150 மில்லியன் சிறார்களின் உயரம், வயதுக்கேற்ற அளவுக்கு இல்லாமல் இருப்பதற்கு மூளை, உடல் வளர்ச்சியைப் பாதிக்கும் மருத்துவக் கோளாறே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 50 மில்லியன் சிறார்கள் மிகவும் மெலிந்த உடலமைப்போடு காணப்படுகின்றனர். அதேவேளையில், 5 வயதுக்கும் குறைவான பிள்ளைகளில் பாதிப்பேருக்கு அத்தியாவசிய ஊட்ச் சத்துகள் கிடைப்பதில்லை என்பதை UNICEF சுட்டியது.

http://athavannews.com/இளம்பராயத்தினர்-30-சதவிகி/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.