Jump to content
nunavilan

திறக்கப்பட்டது யாழ். விமான நிலையம் – தரையிறங்கியது முதல் விமானம்

Recommended Posts

திறக்கப்பட்டது யாழ். விமான நிலையம் – தரையிறங்கியது முதல் விமானம்

palaly-first-flight-2-300x200.jpg

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமான, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து இந்திய நகரங்களுக்கான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இ தன் முதற்கட்டமாக சென்னையில் இருந்து, வந்த அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் விமானம் இன்று முற்பகல் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அந்த விமானத்தில் எயர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகள் 30 பேர் பலாலியில் வந்திறங்கினர்.

இந்த விமானம் தரையிறங்கிய போது, நீரைத் தாரை வரவேற்பு அளிக்கப்பட்டது. திறப்பு விழா நிகழ்வில் வெளிநாட்டுத் தூதுவர்களும் பங்கேற்றனர்.

JIA-open-1.jpgJIA-open-2.jpgpalaly-first-flight-1.jpg

palaly-flight-land.jpg

palaly-first-flight-2.jpg

http://www.puthinappalakai.net/2019/10/17/news/40689

Share this post


Link to post
Share on other sites

யாழ் விமான நிலையத்தில்  A320  ரக விமானங்கள் தரையிறங்கக கூடிய வசதி தற்கோது  உண்டா? அல்லது  அடுத்த கட்ட விரிவாக்க பணி முடிந்த பின்னர் தான் A320 ரக விமானங்கள் தரையிறங்கலாமா?

Share this post


Link to post
Share on other sites

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியால் இன்று திறந்துவைப்பு - செய்தி!சும்மாவே எங்கட யாழ்ப்பாண சனம் படம் காட்டும். இப்ப ஒரு மணித்தியாலத்தில சென்னையில நிக்கலாமாம். எங்கட ஆட்கள் காட்டப்போற பயாஸ்கோப் படத்தை நினைச்சால் இப்பவே கண்ணைக்கட்டுதே

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்கால சம்பவங்கள்!

திருமணங்கள், பதிவுத் திருமணங்கள் மட்டுமில்லாமல் பொம்பிளை பார்த்தல் வடபழனியில் நடக்கும்.

யாழ்ப்பாணத்தில் தீபாவளி ரிலீஸ் படத்திற்கு
முதல் காட்சி ரிக்கெட் இல்லையா? அப்ப அடுத்து சென்னை சத்தியம்தான்.

கல்யாண வீட்டு மாப்பிள்ளை, பொம்பிளை மாலை ஓடர் ரெடி. மல்லிகைப்பூ சரம், கொண்டை மாலையும் சேர்த்துத்தான்.

சாமத்திய வீட்டுக்கு சீலை எடுக்க ரவுணுக்கு (சென்னை) போறம்.

இண்டைக்கு ஆடிச் செவ்வாய் எல்லோ? கோயிலுக்கு போறம். என்ன தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கோ? இல்லை சென்னை அக்ஷ்டலட்சுமி கோயிலுக்கு.

அப்பா இப்பவே கண்ணைக்கட்டுதே.

 

FB

  • Like 3
  • Haha 4

Share this post


Link to post
Share on other sites

நாங்கள் பலாலி விமான நிலையத்திலிருந்து திருச்சி விமானநிலையத்திற்கு அன்று பறந்தபோது தடுப்பு ஊசி ஒன்று குத்தி அனுப்பினார்கள். தற்போது சர்வதேச விமான நிலையமானதால், எந்த நாட்டுக்கு என்ன ஊசி குத்தி அனுப்புவார்களோ....!! 😲

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, tulpen said:

யாழ் விமான நிலையத்தில்  A320  ரக விமானங்கள் தரையிறங்கக கூடிய வசதி தற்கோது  உண்டா? அல்லது  அடுத்த கட்ட விரிவாக்க பணி முடிந்த பின்னர் தான் A320 ரக விமானங்கள் தரையிறங்கலாமா?

இன்னும் இல்லை.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Ahasthiyan said:

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியால் இன்று திறந்துவைப்பு - செய்தி!சும்மாவே எங்கட யாழ்ப்பாண சனம் படம் காட்டும். இப்ப ஒரு மணித்தியாலத்தில சென்னையில நிக்கலாமாம். எங்கட ஆட்கள் காட்டப்போற பயாஸ்கோப் படத்தை நினைச்சால் இப்பவே கண்ணைக்கட்டுதே

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்கால சம்பவங்கள்!

திருமணங்கள், பதிவுத் திருமணங்கள் மட்டுமில்லாமல் பொம்பிளை பார்த்தல் வடபழனியில் நடக்கும்.

யாழ்ப்பாணத்தில் தீபாவளி ரிலீஸ் படத்திற்கு
முதல் காட்சி ரிக்கெட் இல்லையா? அப்ப அடுத்து சென்னை சத்தியம்தான்.

கல்யாண வீட்டு மாப்பிள்ளை, பொம்பிளை மாலை ஓடர் ரெடி. மல்லிகைப்பூ சரம், கொண்டை மாலையும் சேர்த்துத்தான்.

சாமத்திய வீட்டுக்கு சீலை எடுக்க ரவுணுக்கு (சென்னை) போறம்.

இண்டைக்கு ஆடிச் செவ்வாய் எல்லோ? கோயிலுக்கு போறம். என்ன தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கோ? இல்லை சென்னை அக்ஷ்டலட்சுமி கோயிலுக்கு.

அப்பா இப்பவே கண்ணைக்கட்டுதே.

 

FB

இது பற்றி நான் இரவு படுத்திருந்து யோசித்தேன் 
இப்போது எழும்பி வந்து பார்க்க நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்.

பவுசு காட்டுபவர்கள் காட்டிக்கொண்டே இருப்பார்கள் 
அந்த பவுசுகளை ஏழைகளுக்கு சாதகமாக மாற்றிவிடவேண்டும் 
இதனால் தமிழகத்தில் ஏழ்மையில் இருப்பவர்கள் லாபம் பெற கூடிய மாதிரி 
என்ன செய்யலாம் என்பதுதான் சரியான சிந்தனையாக இருக்கும். 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Lara said:

இன்னும் இல்லை.

இனியும் இல்லை.
சொந்த செலவில் சூனியம் செய்ய சிங்கள சகோதரர்கள் அவ்வளவு முட்டாள்கள் இல்லை.
அவர்களுக்கு புலம்பெயர் தமிழர்களின் பலம்  நன்றாகவே தெரியும்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

என்னைக் கவர்ந்த நிழற்படம் 🙂 

பல கருத்துக்கள் கூறக்கூடிய படம், ஆனால், கூறமுடியாது .

 

image_7d1aa12a50.jpg

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, ampanai said:

என்னைக் கவர்ந்த நிழற்படம் 🙂 

பல கருத்துக்கள் கூறக்கூடிய படம், ஆனால், கூறமுடியாது .

 

image_7d1aa12a50.jpg

சம்பந்தன், சுமந்திரனை காய் வெட்டி விட்டு... ஸ்ரீதரன்  தனிய வந்து இருக்கிறார். :grin:

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, ampanai said:

என்னைக் கவர்ந்த நிழற்படம் 🙂 

பல கருத்துக்கள் கூறக்கூடிய படம், ஆனால், கூறமுடியாது .

 

image_7d1aa12a50.jpg

.
.
நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்
.
.
 கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் 
இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்
பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா

.

.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, தமிழ் சிறி said:

சம்பந்தன், சுமந்திரனை காய் வெட்டி விட்டு... ஸ்ரீதரன்  தனிய வந்து இருக்கிறார். :grin:

சம்பந்தன் கலந்து கொண்டாரோ தெரியவில்லை. சுமந்திரன் கலந்து கொண்டிருக்கிறார்.

EHDrI_MU0AEv_Ss?format=jpg&name=medium

சிரித்துக்கொண்டு வேறு நிற்கிறார்.

EHDrJlzVUAEwWqu?format=jpg&name=medium

இதில் சித்தார்த்தனும் உள்ளார். மாவைக்கு பக்கத்தில்.

EHIc2gRXYAAzFjg?format=jpg&name=medium

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

பிறகென்ன யாழ்ப்பாணம் இனி ஒரு சிங்கப்பூர் போல் மிளிரப்போகுது இனி ஹோட்டல்கள் சுற்றுலா தலங்கள் , என அனைத்தும் சனக்கூட்டம் நிறைந்து வழியப்போகிறது அப்படியே இந்திய வியாபாரிகளின் படையெடுப்பும் ஏன் உணவகங்களும் உடுப்புக் கடைகளும் வந்து பேமஸ் ஆகிடும் காலப்போக்கில் நம்ம சாப்பாடுகள் எல்லாம் மறந்து பூரி, சப்பாத்தி , பொங்கல் , பன்னீர் என மாறிடுவோம் 

Share this post


Link to post
Share on other sites
31 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பிறகென்ன யாழ்ப்பாணம் இனி ஒரு சிங்கப்பூர் போல் மிளிரப்போகுது இனி ஹோட்டல்கள் சுற்றுலா தலங்கள் , என அனைத்தும் சனக்கூட்டம் நிறைந்து வழியப்போகிறது அப்படியே இந்திய வியாபாரிகளின் படையெடுப்பும் ஏன் உணவகங்களும் உடுப்புக் கடைகளும் வந்து பேமஸ் ஆகிடும் காலப்போக்கில் நம்ம சாப்பாடுகள் எல்லாம் மறந்து பூரி, சப்பாத்தி , பொங்கல் , பன்னீர் என மாறிடுவோம் 

இது நடந்தாலும், பயன் தமிழரின் கைகளுக்கு வராது.

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, Kadancha said:

இது நடந்தாலும், பயன் தமிழரின் கைகளுக்கு வராது.

அதை பெற்றுக்கொள்ள முயல வேண்டும் அது காசுக்காரரின் கைகளில் உள்ளது ஆனால் இங்கே முதலிட மாட்டார்கள் சிங்களவன் , முஸ்லீம் முதலீட்டாலும் பிரச்சினை வேறு ரூபத்தில் வரும் 

Share this post


Link to post
Share on other sites
39 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பிறகென்ன யாழ்ப்பாணம் இனி ஒரு சிங்கப்பூர் போல் மிளிரப்போகுது இனி ஹோட்டல்கள் சுற்றுலா தலங்கள் , என அனைத்தும் சனக்கூட்டம் நிறைந்து வழியப்போகிறது அப்படியே இந்திய வியாபாரிகளின் படையெடுப்பும் ஏன் உணவகங்களும் உடுப்புக் கடைகளும் வந்து பேமஸ் ஆகிடும் காலப்போக்கில் நம்ம சாப்பாடுகள் எல்லாம் மறந்து பூரி, சப்பாத்தி , பொங்கல் , பன்னீர் என மாறிடுவோம் 

மட்டக்களப்பிற்கும் இந்தியாவுக்குமிடையில் விரைவில் விமான போக்குவரத்து நடக்கப்போகுதாம். இதே Alliance Air மூலம். கேள்விப்படவில்லையா?

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அதை பெற்றுக்கொள்ள முயல வேண்டும் அது காசுக்காரரின் கைகளில் உள்ளது ஆனால் இங்கே முதலிட மாட்டார்கள் சிங்களவன் , முஸ்லீம் முதலீட்டாலும் பிரச்சினை வேறு ரூபத்தில் வரும் 

 

2 minutes ago, Lara said:

மட்டக்களப்பிற்கும் இந்தியாவுக்குமிடையில் விரைவில் விமான போக்குவரத்து நடக்கப்போகுதாம். இதே Alliance Air மூலம். கேள்விப்படவில்லையா?

இதெல்லாம், இனொமொரு கோணத்திலும் கிந்தியா கணக்கு போடுகிறது, அதாவது காலப்போக்கில் தமிழர் உரிமைகளை மறந்து, நுகர்வு பொருளாதாரத்தில் சிக்கிவிடுவார்கள் என்று.

கிந்தியவிற்கு, ஒரு வித உறுத்தலாக இருப்பது, புலம் பெயர் தமிழரின் அரசிய கூட.

Share this post


Link to post
Share on other sites
12 minutes ago, Lara said:

மட்டக்களப்பிற்கும் இந்தியாவுக்குமிடையில் விரைவில் விமான போக்குவரத்து நடக்கப்போகுதாம். இதே Alliance Air மூலம். கேள்விப்படவில்லையா?

நாங்கள் எங்கப்பா போகப்போறம் போறவன்முழுதும் காத்தான்குடியானாத்தான் இருப்பான் ஏற்கனவே புடவைகளை ரகம் ரகமா இறக்கி விற்கிறான் நம்ம சனமும் வெளிநாட்டிலிருந்து வந்தால் 1 லட்சம் 2லட்சம் கூறைகள் வாங்கி இங்க்குள்ள சனத்தை திண்டாட வைக்கிறது அவனுகளுக்கு இன்னும் இறக்கி யாவாரம்ம் செய்ய நல்லதா போச்சு.

 

12 minutes ago, Kadancha said:

கிந்தியவிற்கு, ஒரு வித உறுத்தலாக இருப்பது, புலம் பெயர் தமிழரின் அரசிய கூட.

என்னத்த அரசியல் செய்யுறாங்கள் கூட்டமைப்பு கூப்பீட்டு மாலை போட்டு சோறும் போட்டு பேச்சுவார்த்தை நடத்தினம் பேசச்சொல்லி என்று செய்தியும் போட்டோவும் போடுவாங்கள் இதுவரைக்கும் என்ன செய்திருக்கிறார்கள்  அரசியல் விடயங்கள் மாத்திரம் சொல்லவும் 

Share this post


Link to post
Share on other sites
21 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நாங்கள் எங்கப்பா போகப்போறம் போறவன்முழுதும் காத்தான்குடியானாத்தான் இருப்பான் ஏற்கனவே புடவைகளை ரகம் ரகமா இறக்கி விற்கிறான் நம்ம சனமும் வெளிநாட்டிலிருந்து வந்தால் 1 லட்சம் 2லட்சம் கூறைகள் வாங்கி இங்க்குள்ள சனத்தை திண்டாட வைக்கிறது அவனுகளுக்கு இன்னும் இறக்கி யாவாரம்ம் செய்ய நல்லதா போச்சு.

 

 

ஏன் இதை காத்தான்குடிக்காரர் மட்டும்தான் செய்ய வேண்டும்? தமிழர்களும் செய்ய தொடங்கலாம் தானே? சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள மறுப்பது ஏன்? தக்கண பிழைக்கும் அல்லவா?

Share this post


Link to post
Share on other sites
Just now, நிழலி said:

ஏன் இதை காத்தான்குடிக்காரர் மட்டும்தான் செய்ய வேண்டும்? தமிழர்களும் செய்ய தொடங்கலாம் தானே? சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள மறுப்பது ஏன்? தக்கண பிழைக்கும் அல்லவா?

நமக்கு வியாபாரம் செட் ஆகாது என்பார்கள் மட்டக்களப்பில் இருந்த கடைகளை விற்று வெளிநாடு போனவர்களும் விலகி சென்றோரும் அதிகம் மட்டக்களப்பில் இப்ப புடவைக்கடை என்றால் அது சத்தார் என்று குமியுற சனம் தான் அதிகம் 

வியாபாரம் செய்ய வராது அந்த யுக்திகளை கற்றுகொள்ள நாள் எடுக்கும் ஆனால் தற்போது யாழில் உள்ளவர்களுக்கு இலகுவாக இருக்கும்  சென்னை போய் வருவதால் விமானம்  இந்தியாவில் இருந்து நேரடியாக பொருட்களை இறக்கலாம் அதை இங்கேயும் மட்டக்களப்பிலும் விநியோகிக்கலாம் பார்ப்போம் என்ன நடக்கிறது என்று 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, நிழலி said:

ஏன் இதை காத்தான்குடிக்காரர் மட்டும்தான் செய்ய வேண்டும்? தமிழர்களும் செய்ய தொடங்கலாம் தானே? சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள மறுப்பது ஏன்? தக்கண பிழைக்கும் அல்லவா?

பெரும்பாலான தமிழர்கள் வியாபாரத்தில் ஈடுபடுவதில்...  தயக்கம் காட்டுவார்கள்.
காரணம், போட்ட  முதலுக்கே... மோசம் வந்து விடும் என்றும்,
மனச்  சாட்சிக்கு... விரோதமாக, பொய்  சொல்லி விற்றால்.....
தெய்வ குற்றத்துடன்... அந்தப் பழி, 
பிள்ளைகளுக்கு வந்து சேர்ந்து  விடும் என்றும் பயப்பிடுவார்கள்.

உலகத்தில் உள்ள அனைத்து,  முஸ்லீம்களிடமும்... 
வியாபார மூளை,  உடம்பில் ஊறியிருக்கும்.
அத்துடன்.... அவர்கள் மதத்தில்,  எத்தனை முறை தவறு செய்தாலும்,
அவர்களின், கடவுள் மன்னித்து விடுவாராம்.

தமிழருக்கு, அதுதான்... இடைஞ்சலாக இருப்பதால்,
வியாபாரம்.. சரிப்பட்டு  வரமாட்டுது, என நினைக்கின்றேன் 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...