திறக்கப்பட்டது யாழ். விமான நிலையம் – தரையிறங்கியது முதல் விமானம்

palaly-first-flight-2-300x200.jpg

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமான, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து இந்திய நகரங்களுக்கான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இ தன் முதற்கட்டமாக சென்னையில் இருந்து, வந்த அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் விமானம் இன்று முற்பகல் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அந்த விமானத்தில் எயர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகள் 30 பேர் பலாலியில் வந்திறங்கினர்.

இந்த விமானம் தரையிறங்கிய போது, நீரைத் தாரை வரவேற்பு அளிக்கப்பட்டது. திறப்பு விழா நிகழ்வில் வெளிநாட்டுத் தூதுவர்களும் பங்கேற்றனர்.

JIA-open-1.jpgJIA-open-2.jpgpalaly-first-flight-1.jpg

palaly-flight-land.jpg

palaly-first-flight-2.jpg

http://www.puthinappalakai.net/2019/10/17/news/40689