• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
ampanai

இன்றில் இருந்து கஞ்சா கலந்த பண்டங்களை கனடாவில் வாங்கலாம்

Recommended Posts

இன்றில் இருந்து கஞ்சா கலந்த பண்டங்களை கனடாவில் வாங்கலாம்

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னதாக சட்டபூர்வமாக்கப்பட்ட கஞ்சா பாவனை, இன்று அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.

1120508525.jpg

 

இதன்மூலம், சட்டாபூர்வமாக ஒருவர் கஞ்சா கலந்த தின்பண்டகளை விற்கலாம், உண்ணலாம். விற்பனைக்கு வர சில மாதங்கள் ஆகும் என்கிறார்கள். ஆனால், அவை சில சட்ட வரையறைகளுக்கு உட்பட்டவை. அவற்றை மீறினால், பெரிய தண்டனைக்கு  உள்ளாகலாம். இருந்தும் சட்டத்திற்கு புறம்பான கஞ்சா வளர்ப்பு குறையவில்லை. காரணம், விலை மற்றும் நுகர்வோருக்கு கொண்டுசேர்க்கும் வேகம்.

இது சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுனர் குற்றங்கள் பெரிதாக அதிகரிக்கவில்லை என்கின்றனர் காவல்துறை. அதேவேளை, ஒருவர் போதையில் உள்ளாரா என அறிவதற்கான கருவிகள் முழுமையாக திறன்பெறவில்லை எனவும் கூறப்படுகின்றது.

'வேப்பிங்' புகைத்தலில் உள்ள டி.எச்.சி. கஞ்சாவிலும் உள்ளது. அதன் அளவும் பாதிப்பும் பற்றி பல வேறு கருத்துக்கள் உள்ளன.

https://www.cbc.ca/news/canada/british-columbia/cannabis-edibles-bc-1.5321886

https://www.680news.com/2019/10/17/pot-edibles-legal/

 

அமெரிக்காவில் கஞ்சா மத்திய அரசு அளவில் தடை செய்யப்பட்டது. ஆனால், பல மாகாணங்கள் பாவனையை தடை செய்யவில்லை.

கனடாவில் இருந்து அமெரிக்க செல்லுபவர்கள் பலவேளைகளில் சுங்க அதிகாரிகளால் கேட்கப்படும் ஒரு கேள்வி : நீங்கள் கஞ்சா நுகர்ந்தீர்க்களா? என. இல்லை என்றால் மட்டுமே நாட்டிற்குள் அனுமதிக்கும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு.

 

Edited by ampanai

Share this post


Link to post
Share on other sites

ஒரு தடவை கனடா விசிட்டிங் செய்யத்தான் வேண்டும் சிவ மூலிகையை இழுத்துப்பார்க்க

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites
57 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு தடவை கனடா விசிட்டிங் செய்யத்தான் வேண்டும் சிவ மூலிகையை இழுத்துப்பார்க்க

கஞ்சாவுக்கு ஏன் கனடா  நிறைய செலவு.....கேரளாவுக்கு போனால் கஞ்சாவும் கிடைக்கும்........!  😂

Image associée

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, suvy said:

கஞ்சாவுக்கு ஏன் கனடா  நிறைய செலவு.....கேரளாவுக்கு போனால் கஞ்சாவும் கிடைக்கும்........!  😂

Image associée

 

அங்கே போனால் பொலிஸ் பிடிக்கும் அங்கும் தடைதான் ஆனால் கனடாவில் தடையில்லையே

Share this post


Link to post
Share on other sites

அண்மையில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு தமிழர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். தொட்டியில் 4 கஞ்சாச் செடிகளை வளர்த்துள்ளார்கள். பார்த்தவுடன் விக்கித்து போனேன். வீட்டுக்கு நாலு கஞ்சாச்செடியை சட்டப்படி வளர்க்கலாமாம்... ஒரு செடியின் விலை குறைந்தபட்சம் 800 டொலர்கள் வரை போகிறது. நம்மாட்கள் நாட்டிலேயே புகையிலை வளர்த்த சனமெல்லோ இனிவருங்காலங்களில் வீட்டுக்கு வீடு கஞ்சா மரம் நிற்கும். புத்திசாலிகள் காலத்தைப்பயன்படுத்தி கோடீஸ்வரர்கள் ஆக வாய்ப்பிருக்கிறது.

file-20181115-194500-9vsv6z.jpg?ixlib=rb

பாம்பு தின்னும் ஊருக்குப் போனா நடுமுறி நமக்கு😜

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, Paanch said:

 

பாஞ்ச் சார்! பிரசர் உள்ள ஆக்களும் இதை பாவிக்கலாமா?
கேட்டுச்சொல்லுங்க சார்? 😂

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, குமாரசாமி said:

பாஞ்ச் சார்! பிரசர் உள்ள ஆக்களும் இதை பாவிக்கலாமா?
கேட்டுச்சொல்லுங்க சார்? 😂

சா முன், சா பின் என்பதுபோல் இதனை க முன், க பின் என்று கவனித்துப் பாவிக்கலாம். 😛🤣

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
15 hours ago, குமாரசாமி said:

பாஞ்ச் சார்! பிரசர் உள்ள ஆக்களும் இதை பாவிக்கலாமா?
கேட்டுச்சொல்லுங்க சார்? 😂

நமக்கேன் இந்த விளையாட்டு சாமியோவ்

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

நமக்கேன் இந்த விளையாட்டு சாமியோவ்

நாலு இழுவை இழுத்து பாக்கலாம் யோசிச்சன் அதுதான்......

Share this post


Link to post
Share on other sites

தடை இருந்தபொழுது, சட்டத்திற்கு வாலைக்காட்டி விட்டு களவாக வேண்டி அடித்ததில் இருந்த 'கிக்கு' தடை நீக்கப்பட்ட பின்னர் இல்லை என்கிறார்கள் பழைய பாவனையாளர்கள். அதனால், சட்டத்திற்கு புறம்பான சந்தை இன்றும் ஒளிர்விட்ட வண்ணமே உள்ளது.    

Share this post


Link to post
Share on other sites
35 minutes ago, குமாரசாமி said:

நாலு இழுவை இழுத்து பாக்கலாம் யோசிச்சன் அதுதான்......

ஊரில தகரப்பேணிக்குள்ள வச்சி இழுப்பானுகள் ஓலைக்குழல் வச்சி இது தெரியுமா குமாரசாமி அண்ண  ஆனால் சிலருக்கு இரவில் நல்ல தூக்கமாம் என்பார்கள் ஆனால் இப்ப இல்லை கஞ்சா தடை இருந்தும் வானத்திலிருந்து கொட்டுவது போல கடத்தல்களில் மிதக்கிறது 

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, ampanai said:

தடை இருந்தபொழுது, சட்டத்திற்கு வாலைக்காட்டி விட்டு களவாக வேண்டி அடித்ததில் இருந்த 'கிக்கு' தடை நீக்கப்பட்ட பின்னர் இல்லை என்கிறார்கள் பழைய பாவனையாளர்கள். அதனால், சட்டத்திற்கு புறம்பான சந்தை இன்றும் ஒளிர்விட்ட வண்ணமே உள்ளது.    

எல்லாம் அப்படித்தான் 
மூட மூடதான் மவுசு.

திறந்தால் அம்மூட்டுதான் 

23 hours ago, வல்வை சகாறா said:

அண்மையில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு தமிழர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். தொட்டியில் 4 கஞ்சாச் செடிகளை வளர்த்துள்ளார்கள். பார்த்தவுடன் விக்கித்து போனேன். வீட்டுக்கு நாலு கஞ்சாச்செடியை சட்டப்படி வளர்க்கலாமாம்... ஒரு செடியின் விலை குறைந்தபட்சம் 800 டொலர்கள் வரை போகிறது. நம்மாட்கள் நாட்டிலேயே புகையிலை வளர்த்த சனமெல்லோ இனிவருங்காலங்களில் வீட்டுக்கு வீடு கஞ்சா மரம் நிற்கும். புத்திசாலிகள் காலத்தைப்பயன்படுத்தி கோடீஸ்வரர்கள் ஆக வாய்ப்பிருக்கிறது.

file-20181115-194500-9vsv6z.jpg?ixlib=rb

பாம்பு தின்னும் ஊருக்குப் போனா நடுமுறி நமக்கு😜

விஷயம் தெரிந்தவர்கள் வளர்த்தால் .. பின்பு விக்கலாம் என்றால் நன்று.
ஆனால் இது வளர்ப்பது கடினமான வேலை 

விஷயம் தெரிந்தவர்கள் வளர்த்தால் .. பின்பு விக்கலாம் என்றால் நன்று.
ஆனால் இது வளர்ப்பது கடினமான வேலை 

இப்பிடி பூ அடிச்சா அதிர்ஷ்டாம்தான். ...
நீங்களும் நல்ல மகிழ்ச்சியா இருக்கிறீர்கள் நடு முறி தருவதாக வாக்கு தந்திருக்கிறார்கள் போல ?

 

Share this post


Link to post
Share on other sites
8 minutes ago, Maruthankerny said:

 

விஷயம் தெரிந்தவர்கள் வளர்த்தால் .. பின்பு விக்கலாம் என்றால் நன்று.
ஆனால் இது வளர்ப்பது கடினமான வேலை 

இப்பிடி பூ அடிச்சா அதிர்ஷ்டாம்தான். ...
நீங்களும் நல்ல மகிழ்ச்சியா இருக்கிறீர்கள் நடு முறி தருவதாக வாக்கு தந்திருக்கிறார்கள் போல ?

 

வாக்குறுதி கிடைச்ச உடனேயே இப்படி மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றால் கிடைத்த பிறகு............................. சிவலோகமே தெரியுமோ.

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, tulpen said:

வாக்குறுதி கிடைச்ச உடனேயே இப்படி மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றால் கிடைத்த பிறகு............................. சிவலோகமே தெரியுமோ.

பின்பு ஒரே ஓம் நமச்சிவாய தான் ..........

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அப்ப எனிக் கனடாவை.. கஞ்சாக் கனடா என்று அழைக்கலாம். 

Share this post


Link to post
Share on other sites

கஞ்சாவை உலக நாடுகளுக்கு எவ்வாறு மருத்துவ ரீதியாக, சட்ட வடிவமைப்புக்களுக்கு இணங்க மற்றும் சமூக தாக்கங்களுக்கு ஏற்ப தயார்ப்படுத்தக்கூடிய நாடாக கனடா பார்க்கப்படுகின்றது. 

அதனால் நாட்டுக்கு (வரி) வருமானமும் கிடைக்கின்றது.  

பல நாடுகளிலும், கனேடிய 'நிறுவனங்கள்' தமது தொழில் நுட்பங்களை வழங்கி வருகின்றன.   

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இந்த காற்றாலைகள் அமைவது பிழையானதே வடகிழக்கில் ஆளரவமற்ற இடங்கள் எவ்வளவோ இருக்க மக்கள் குடியிருப்பு பகுதியை ஏன் தெரிவு செய்தார்கள் ? இல்லாவிடின் இந்த மக்களின் கொந்தளிப்புக்கு பின்னால் காசு சம்பாதிக்கும் அரசியல் வாதி பின்னுக்கு நிட்கிறார் தனியார் அமைப்புத்தானே மக்களை தூண்டி விட்டு பணம் சம்பாதிக்க வழி செய்கிறார் போல் உள்ளது .ஏற்கனவே உள்ள மின் ஆலைகளை அமைக்கும்போது எந்த பிரச்சனையும் வரவில்லையே ? இதற்கு இலகுவான வழி  உள்ளூர் ஊடகங்களில் காற்றாலைகளின்  நன்மை தீமைகளை ஒப்பிட்டு பொது மக்களுக்கு விளக்கம் கொடுப்பது ஒரு அனல் மின் நிலையத்தை விட காற்றாலைகளின்  நன்மையை விளங்கப்படுத்துவது இலகுவானது .
  • திருச்சியில்  குழந்தைகளின் ஆபாசப்படங்களை தரவிறக்கம் செய்த குற்றத்திற்காக கிறிஸ்தோபர் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையத்தில்; சிறுவர் சிறுமியர்களின் ஆபாசப்படங்ளை தரவிறக்கம் செய்து பார்ப்பவர்களின் எண்ணிக்கை திருச்சியிலேயே அதிகம் என அமெரிக்க அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிற்கு தகவல் வழங்கியுள்ளனர். அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலை தொடர்ந்து ஆபாசப்படங்கள் குறிப்பாக குழந்தைகளின் ஆபாசப்படங்களை தரவிறக்கம் செய்து பார்ப்பவர்களை தமது கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்த காவல்துறையினர் இது தொடர்பில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்தொபர் என்பவரை கைது செய்துள்ளனர். குறிப்பிட்ட நபரின் கையடக்க தொலைபேசியை ஆராய்ந்தவேளை பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரின் கையடக்க தொலைபேசியை ஆராய்ந்தவேளை அவர் போலி பெயரில் முகநூல் ஆரம்பித்து  அதில் குழந்தைகள் சிறுமிகள் தொடர்பான ஆபாசப்படங்களை பகிர்ந்துகொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. அவரது முகநூலில் ஆயிரக்கணக்கான படங்களும்  வீடியோக்களும் காணப்பட்டுள்ளன. கிறிஸ்டொபர் கடந்த நான்கு வருடங்களாக இதனை செய்துள்ளதுடன் அவர் 150 பேருடன் தொடர்பில் இருந்துள்ளார்.  இவர் திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் சிறுமிகளை ஏமாற்றி படமெடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவருக்கு பல அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் திருச்சியில் அரசியல்வாதிகள் உட்பட 30ற்கும் அதிகமானவர்களை கைதுசெய்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் https://www.virakesari.lk/article/70993
  • (செ.தேன்மொழி) கறுப்பு நிற ஆடையில் சிலாபம் பிரேதச சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அனுமதியில்லை என்று சிலாபம் பிரதேச சபை உறுப்பினர் ஜே. கோகிலநாத் சிங்கிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் ஜே.என். ஜனித்த தேவப்பிரிய எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சிலாபம் பிரதேச சபையின் 21 ஆவது அமர்வு நேற்று இடம்பெற்றது. இத் கூட்டத்தொடரில் கலந்துக் கொள்வதற்காக சென்ற பிரதேச சபை உறுப்பினருக்கே இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது கூட்டத்தெடரில் கலந்துக் கொள்ளாமல் வெளியேறியுள்ள குறித்த உறுப்பினர் புத்தளத்திலுள்ள சர்வமத குழுவின் தலைவர் சுந்தரம் குருக்களிடம் முறைபாடொன்றையும் அளித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பிரதேசசபை உறுப்பினர் கூறுகையில்,  14 வருடங்களாக ஐயப்ப தரிசனம் மேற்கொண்டுவருகின்றேன் ,கடந்தவருடமும் ஐயப்பன் தரிசனத்தை மேற்கொள்ள மாலை அணிந்திருந்தேன் . அப்போது நான் கறுப்பு நிற ஆடைகளை அணிந்தே பிரதேச அமர்வுகளில் கலந்துக் கொண்டேன். ஆனால் அப்போது எனக்கு எவ்வித எதிர்புகளும் தெரிவிக்கப்படவில்லை. ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பின்னரான முதல் அமர்வே நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.இதன்போது நான் கறுப்பு நிற ஆடையில் வந்திருப்பதினால் எனுக்கு அனுமதியில்லை என்று  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் ஜே.என். ஜனித்த தேவப்பிரிய தெரிவித்தார்.  பின்னர் நான் அமர்வில் கலந்துக் கொள்ளாது அங்கிருந்து வந்து விட்டேன். இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் சர்வஜன மத குழுவின் புத்தளம் பகுதி தலைவரிடமும் முறைப்பாடளித்துள்ளேன். எதிர்வரும் திங்கட்கிழமை குருணாகல் பிரதேசத்தின் தேர்தல் ஆணைக்குழுவிடமும் முறைப்பாடளிக்க தீர்மானித்துள்ளளேன்.https://www.virakesari.lk/article/71007
  • படத்தின் காப்புரிமை BEDMACHINE/UCI/BAS Image caption டென்மென் பனிப்பாறை பகுதி பூமியின் நிலப்பரப்பில் மிக ஆழமான பகுதி எது என கண்டறியப்பட்டுள்ளது. கிழக்கு அண்டார்டிகாவில் டென்மென் பனிப்பாறைக்கு கீழே கிட்டத்தட்ட 3.5 கிலோமீட்டர் (கடல்மட்டத்தில் இருந்து 11,500 அடி ஆழம்) உள்ள பள்ளத்தாக்குதான் பூமியின் நிலப்பரப்பில் மிக ஆழமான இடம் என்று கண்டறியப்பட்டுள்ளது. கடல்கள் மற்றும் சமுத்திரங்களில் மட்டும் தான் இதை விட ஆழமான பகுதிகள் உள்ளன. இந்த பகுதி 20 கிலோமீட்டர் அகலமும், 100 கிலோமீட்டர் நீளமும் கொண்டதாக உள்ளது. இந்த இடம் பனிக்கட்டிகளால் நிரப்பப்பட்டு மிக அடர்த்தியாகவும், இருட்டு பிரதேசமாகவும் காட்சியளிப்பதாக இது குறித்த ஆராய்ச்சியில் நீண்டநாள் ஈடுபட்டிருந்த அறிவியலாளர் மார்லிகம் தெரிவித்தார். அதேவேளையில், நீர்பரப்பையும் உள்ளடக்கிய பூமியின் ஆழமான இடம் டெட் ஸியின் (Dead Sea) மையப்பகுதிக்கு அருகே உள்ள இடம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து 1355 அடி ஆழத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.   https://www.bbc.com/tamil/global-50768711
  • படத்தின் காப்புரிமை Getty Images பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வல்லுறவு மற்றும் அமில வீச்சு போன்ற கொடூரமான குற்றச் செயல்களில், அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தால் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டம் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம் திஷா சட்ட மசோதா 2019 (ஆந்திரா குற்றவியல் சட்டத் திருத்த மசோதா 2019) என்றழைக்கப்படும் இந்த சட்டத்துக்கு ஆந்திரப் பிரதேச அமைச்சரவை நேற்று (வியாழக்கிழமை) ஒப்புதல் வழங்கிய நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) அது அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெலங்கானாவில் `திஷா' எனும் புனை பெயரால் அழைக்கப்படும் பெண் கால்நடை மருத்துவர் கடந்த மாதம், பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியிருந்தது. இது தொடர்பாக ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தில் பேசிய அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இந்தச் சம்பவம் அண்டை மாநிலத்தில் நடந்திருந்தாலும், இதை முக்கியமானதாக தமது அரசு எடுத்துக் கொண்டுள்ளது என்று கூறினார். தற்போது ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்டம், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படவுள்ளதாகவும், அதன் மூலம் இந்த சட்டத்தின் அவசியம் குறித்து மற்ற மாநிலங்களுக்கும் விழிப்புணர்வு கிடைக்கும் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார். படத்தின் காப்புரிமை Getty Images இந்த புதிய சட்டத்தின்படி, பாலியல் வல்லுறவு வழக்குகளில் அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தால், குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் 21 நாட்களுக்குள் மரண தண்டனை விதிக்கும். காவல் துறையினர் 7 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும். அடுத்த 14 நாட்களுக்குள் நீதிமன்ற விசாரணையை முடிக்க வேண்டும். மொத்தத்தில் 21 நாட்களில் அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும். முன்னதாக, `திஷா' சட்டத்துடன் சேர்த்து, இந்திய தண்டனைச் சட்ட நடைமுறைகளில் 354 (e) மற்றும் 354 (f) பிரிவுகளைச் சேர்க்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு 10 முதல் 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க 354 (f) பிரிவு வகை செய்யும். அதுமட்டுமின்றி, கொடும் குற்றச் செயல்களுக்கு ஆயுள் சிறை விதிக்கவும் இது வழிவகை செய்கிறது. இப்போதுள்ள நிலையில், இதுபோன்ற குற்றச் செயல்களுக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. இ-மெயில், சமூக வலைத்தளம் மற்றும் பிற இணையதளங்களில் பெண்களின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் தகவல்கள் பதிவிட்டால், 354 (e) பிரிவின் கீழ் கடுமையான தண்டனை விதிக்கப்படும். முதல் முறையாக குற்றஞ்சாட்டப்படும் நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். இரண்டாவது முறையாக அதே குற்றத்தைச் செய்தால் நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். விரைவான நீதி கிடைக்க தொடக்க நிலை நடவடிக்கைகள் ஆந்திரப் பிரதேச `திஷா' சட்டம் 2019 உருவாக்கும் முடிவுக்கு திரைப்பட நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிரஞ்சீவி வரவேற்பு தெரிவித்துள்ளார். "பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்படும் பிரிவினராக உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான நம்பிக்கை மற்றும் பாதுகாப்பைத் தருவதாக இந்தச் சட்டம் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. `திஷா' சம்பவம் நம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துவிட்டது. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட உணர்வுகள், உடனடி நீதி தேவை என்ற அவசியத்தை உணர்த்தின. உடனடி நீதி என்பதைவிட, விரைவான நீதி என்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எல்லோரும் நம்புகின்றனர். இந்நிலையில், ஆந்திரப் பிரதேச அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது'' என்று தன்னுடைய அறிக்கையில் சிரஞ்சீவி கூறியுள்ளார். படத்தின் காப்புரிமை VAMSIKAKA / TWITTER Image caption சிரஞ்சீவி ``4 மாதங்களுக்கும் மேல் என இருந்த விசாரணை காலத்தை 21 நாட்கள் குறைப்பது, சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது, மற்ற கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது முதலிய முயற்சிகளை பாராட்டுகிறேன். குற்றம் செய்யக் கூடிய சூழ்நிலையில் இருப்பவர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சட்டங்களை உருவாக்கும் அரசுக்கு முழு மனதுடன் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பெண்கள் சுதந்திரமாக, அச்சமின்றி வாழ முடியும் என நம்புகிறேன்'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். `பிரச்சனையின் வேரை தொடவில்லை' பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவுகட்டத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல், உணர்ச்சிகளின் அடிப்படையில் சட்டங்களை உருவாக்குவது புத்திசாலித்தனமானது அல்ல என்று ஆந்திரப் பிரதேச பார் கவுன்சில் உறுப்பினர் முப்பல்ல சுப்பாராவ் கூறியுள்ளார். பிபிசி செய்தியாளரிடம் பேசிய அவர், விரைவான நீதி வழங்குவது தொடர்பாக பல ஆணையங்கள் மற்றும் நாடாளுமன்ற கமிட்டிகளின் ஏராளமான பரிந்துரைகள் உள்ளதாகத் தெரிவித்தார். ``10 லட்சம் மக்கள் தொகைக்கு குறைந்தது 50 நீதிபதிகள் இருக்க வேண்டும் என்று தேசிய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இப்போது 13 பேர் என்ற நிலைதான் உள்ளது. அதிலும்கூட, பல இடங்கள் காலியாக உள்ளன. ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் 24 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால் 13 பேர் மட்டுமே உள்ளனர். நிலைமை இப்படி இருக்கும் போது 21 நாட்களுக்கு தீர்ப்பளிக்க வேண்டும் என்பது எப்படி சாத்தியமாக இருக்கும்'' என்று அவர் சந்தேகங்கள் எழுப்பினார். Image caption நாடு முழுக்க ஒவ்வொரு ஆண்டும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. ``பாலியல் பலாத்கார குற்றம் நடந்தால், தடயவியல் துறையின் அறிக்கையைப் பெறுவதற்கே பல நாட்கள் ஆகும். இந்த நிலையில், இதுபோன்ற வழக்குகளில் ஒரு வாரத்திற்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று மசோதா கூறுகிறது. அது எப்படி சாத்தியம்? இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்வது நல்லது'' என்று அவர் கருத்து தெரிவித்தார். `நடவடிக்கைகள் தேவையின் அடிப்படையில் அமையவில்லை' ``குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப தண்டனை வழங்க வேண்டியது அவசியம். ஆனால், அதை செயல்படுத்தத் தேவையான அமைப்புகள் பற்றி மசோதாவில் எதுவும் கூறப்படவில்லை'' என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் (AIDWA) தேசியச் செயலாளர் டி. ரமாதேவி கூறியுள்ளார். ``100 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டால், பதில் அளிப்பதற்கு போதிய அலுவலர்கள் கிடையாது. இதுபோன்ற விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நீதித் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை. தேவைக்கு ஏற்ப பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். பெண்கள் கடத்தப்படும் குற்றச் செயல்களின் பட்டியலில் ஆந்திரப் பிரதேசம் 4வது இடத்தில் உள்ளது. இவற்றில் எதுவுமே இந்த மசோதாக்களில் குறிப்பிடப்படவில்லை'' என்று அவர் கூறினார். ``கௌரவக் கொலைகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி இந்த மசோதாக்களில் எதுவும் இல்லை. அவர்களை ஏன் இந்த அரசு புறக்கணித்துள்ளது? பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் பற்றியும் மசோதாக்களில் எதுவும் குறிப்பிடவில்லை'' என்று ரமாதேவி கருத்து தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-50782421