Jump to content

முதிர்ச்சியான அரசியல் தலைமை எங்களிடம் உண்டு


Recommended Posts

காரை துர்க்கா   / 2019 ஒக்டோபர் 17 ,

இனிமையான ஒரு மாலைப் பொழுது; மழையோ வெயிலோ இல்லாத இ(மி)தமான ஒரு காலநிலை. யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள சனசமூக நிலையத்தில், புதினப் பத்திரிகைகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன்....  

சனசமூக நிலையத்துக்கு வெளியே இருந்த வேப்பமரத்தடி நிழலில், சிலர் அரசியல் உரையாடலில் மூழ்கிப் போயிருந்தனர். கலகலப்பாகவும் ஆனால், அர்த்தங்கள் நிறைந்ததாகவும் உரையாடல் போய்க் கொண்டிருந்தது. கதைக்கின்ற அவர்களைக் காட்டிலும், கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி கிடைத்த மாதிரியான உணர்வு ஏற்பட்டது.  

“என்ன, எங்கட சுமந்திரன் ஐயா, தங்களிடம் முதிர்ச்சியான அரசியல் தலைமை உண்டு எனக் கூறியுள்ளாராமே” என ஒருவர் கூறினார்.   

“அங்கு தலைமையில் உள்ளவர்கள் எல்லாரும், எங்களைப் போல முதியவர்கள் தானே; அதைத்தான் சுமந்திரன் சொல்லியுள்ளார் போலும்” எனச் சொன்னார் இன்னொரு முதியவர். வேடிக்கையாகச் சொன்னாலும், உள்ளே மறைமுகமாக ஆழமான கருத்து உள்ளதுதானே?  

யாழ்ப்பாணம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி வகுப்பறைக் கட்டடத் தொகுதி திறப்பு விழா, கடந்த மாத இறுதியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் ஊடகப் பேச்சாளருமான சுமந்திரன், “எங்களிடம் முதிர்ச்சியான அரசியல்த் தலைமை உண்டு” எனக் கூறியிருந்தார்.   

மேலும், அங்கு அபிவிருத்தி நடவடிக்கைகளின் முக்கியத்துவம், கம்பெரலியவின் நோக்கம் எனப் பல விடயங்களைத் தொட்டுப் பேசி உள்ளார். அபிவிருத்தி நடவடிக்கைகள், முக்கியத்துவம் நிறைந்தனவே; அவை விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டியவைகளே; அதில் மாறுபட்ட கருத்துகளுக்கு இடம் கிடையாது.  

இன்னும் சிறிது காலங்களில், நிறைவுக்கு வரவுள்ள நல்லாட்சி அரசாங்கத்தில், அரசியல்த் தீர்வு விடயத்திலும் கூட, கூட்டமைப்பு பல விட்டுக் கொடுப்புகளைச் செய்துள்ளது. என்ன விதத்திலாவது, புதிய அரசமைப்பை உருவாக்குவதன் ஊடாக, நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என முழுமையாக நம்பி நடந்துள்ளது.  

இந்நிலையில், “ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்குவோம் என, எழுத்து மூலமான உறுதி மொழியை வழங்கத் தயங்கினால் அல்லது தவறினால், ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்” என, இலங்கைத் தமிழரசுகக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் அவைத் தலைவருமான சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.  

சி.வி.கே சிவஞானம் சிரேஷ்ட அரச அதிகாரியாகப் பணியாற்றியவர். அத்துடன், நீண்ட காலமாக அரசியலிலும் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார். தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக, முக்கிய பதவியில் உள்ளார். இவரது இந்தப் பேச்சு, ‘முதிர்ச்சி’யான அரசியல் பேச்சா என விளங்கவில்லை.  

மேலும், “தேர்தல் பகிஷ்கரிப்பு, தமிழ் மக்களுக்கு ஒன்றும் புதிய விடயம் அல்ல; 2005ஆம் ஆண்டிலும் செய்து காட்டியிருந்தார்கள்” எனவும் கூறி உள்ளார்.   

சரி பிழைகளுக்கு அப்பால், 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் கடுமையான விளைவுகளை, இன்னமும் தமிழினம் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றது என்பதையும் நாம் உணர வேண்டிய நிலையில் உள்ளோம்.  

மறுபக்கத்தில், கடந்த காலங்களில் இனப்பிரச்சினை விடயத்தில், இந்த நாடு பல உடன்படிக்கைகளை, ஒப்பந்தங்களை எழுத்து வடிவில் கண்டது. அவற்றுக்கு எல்லாம் ஈற்றில் என்ன நடந்தது?  

ஓப்பந்தங்களைத் தூக்கியெறிவதும், எரிப்பதும், கிழிப்பதும் பேரினவாதிகளுக்குக் கடினமான காரியங்கள் அல்ல; இவற்றை விவரிக்க வேண்டிய தேவைப்பாடு இல்லை.  

இந்நிலையில், அன்று தமிழ் இளைஞர்கள் கரங்களில் மட்டும் இருந்த ஆயுதம், இன்று அனைத்துத் தமிழ் மக்கள் கைகளிலும் உள்ளன. ஆம்! அதுவே வாக்கு எனும் ஆயுதம். அதுவே, தற்போது தமிழ் மக்களிடம் எஞ்சியுள்ள பலமான ஆயுதம்; அத்துடன் உரிமையும் கூட.  அதை எவ்வாறு உத்தமமாகப் பயன்படுத்தலாம் எனத் திட்டம் தீட்டுவதும், அதை உச்சமாகப் பயன்படுத்துவதும் அதற்கான ஊக்கத்தைக் கொடுக்க வேண்டியவர்களும் வாக்கு என்ற ஆயுதத்தை வெற்றுக் காகிதங்களாகப் பார்க்கின்றார்களா?  

தமிழ் மக்கள் விரும்பியோ, விரும்பாமலோ தேர்தலில் வாக்களித்தோ, புறக்கணித்தோ பௌத்த சிங்களவரே இந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வரவுள்ளார். இந்த நிதர்சனமான உண்மையை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.  

ஆகவே, தமிழ் மக்கள் வாக்களிக்காது ஒதுங்கி, விலகி இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, ஒற்றுமையாகக் கணிசமான தமிழ்க் கட்சிகள் ஒன்று கூடித் தீர்மானம் எடுத்து, தமிழ்த் தலைமை சுட்டு விரல் காட்டும் சிங்கள வேட்பாளருக்கு, வாக்களிக்க வேண்டும்.  

இதனூடாக, இலங்கைத் தீவின் ஐனாதிபதியைத் தீர்மானிக்கும் வல்லமை பொருந்தியவர்களாகத் தமிழினம் மாற வேண்டும். மாறாக, ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் விடயத்தில் ஒ(ப)துங்கி இருக்கக் கூடாது.   கொழும்பிலிருக்கும் சிங்களத் தலைமை, திருகோணமலையில் இருக்கும் தமிழ்த் தலைமையிடம் நேராகச் சென்று ‘வாக்கு’க் கொடுத்து, வாக்குக் கேட்க வைக்க வேண்டும். 

எதிர்காலத்தில், தமிழ் மக்களது வாக்குகளைப் பெற்று, ஐனாதிபதியாகிய பின்னர், தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்காமலும் போகலாம் என்ற பயமும், தமிழர்களுக்கு உள்ளூர உண்டு.   

மறுபுறத்தில், தமிழ் மக்கள் வாக்களிக்காது விடுவதால், தெரிவு செய்யப்படும் வேட்பாளராலும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படலாம் தானே?  

ஆனால், சி.வி.கே. சிவஞானம் கூறுவது போல, “நாம் தேர்தலைப் புறக்கணித்து, ஒதுங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், யார் அதன் பின் ஆட்சிக்கு வருகின்றார்களோ, அவர்களுக்குச் சர்வதேச சமூகத்தின் ஊடாக, எமது பிரச்சினைக்குத் தீர்வை வழங்க அழுத்தம் கொடுப்போம்” என்பது எந்தளவு சாத்தியப்பாடானது?  

தமிழ் மக்கள் விடயத்தில், சர்வதேசம் என்பது, எப்போதோ முடிந்த காரியம் என்றாகி விட்டது என்றே, தமிழ் மக்கள் கருதுகின்றார்கள். ‘சீவன் துடிக்கத் துடிக்கப் போன போது, வேடிக்கை பார்த்தவர்கள், அந்தியேட்டிக்கு வந்தது போல’ போர் முடிந்தும் பத்து ஆண்டுகளில், தமிழ் மக்கள் விரும்பும்படியாகக் குறிப்பிட்டுக் கூறும்படியாக, சர்வதேசத்தால் என்னத்தைச் சாதிக்க முடிந்தது?   

ஆகவே, சர்வதேசம் என இன்னும் எத்தனை நாள்களுக்குக் கூறிக் கொண்டு இருக்கப் போகின்றோம். களத்தின் தோற்றப்பாடும், காலத்தின் தேவைப்பாடும் தமிழர்கள், தங்களது சர்வ வல்லமையைப் பெருக்குவதிலேயே முற்றிலும் தங்கி உள்ளது.  

இதேவேளை, பேரினவாதம் தங்களுக்குள் கதிரைக்கான அரசியல் போட்டி என்று வரும் போதே, குடும்ப ஆட்சி வேண்டுமா, நாட்டைக் கட்டி எழுப்பும் தலைவர் வேண்டுமா, அராஜக ஆட்சி வேண்டுமா, சமாதான ஆட்சி வேண்டுமா எனக் கேள்வி கேட்பார்கள்.  

ஆனால், நாடு என்று வரும் போது, வேற்றுமைகளை மறந்து, ஒற்றுமை வட்டத்துக்குள் வந்து விடுவார்கள். “பயங்கரவாதத்தை முறியடித்தவரை, மின்சாரக் கதிரையிலிருந்து நானே காப்பாற்றினேன்” எனக் காப்பாற்றவும் அடைக்கலம் கொடுக்கவும் முண்டியடிப்பார்கள். அதுவே, முதிர்ச்சியான அரசியல்த் தலைமைத்துவம் ஆகும்.  

தமிழ் மக்களிடம், முதிர்ச்சியான அரசியல் தலைமை இல்லை என்றே கூற வேண்டும். தற்போது, தமிழர்கள் அரசியலில் வெறுமையே நிலவுகின்றது. தகுதியான தமிழ்த் தலைமைக்கான பதவி, இன்னமும் வெற்றிடமாகவே உள்ளது.  

“தமிழ்க் கட்சித் தலைவர்களே தயவு செய்து ஓரணியில் அணி திரளுங்கள். ஒன்றுபட்டுத் தேர்தலை எதிர்கொள்வோம்” எனத் தமிழ்ச் சமூக சமயத் தலைவர்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என ஒட்டுமொத்தச் சமூகத்தினரும் கோரிக்கை விடுத்தும், ஒற்றுமை என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.  

எந்தத் தமிழ்க் கட்சியும் தங்களது கட்சி நலனையும் தங்களது சொந்த நலனையும் விட்டுக் கொடுக்கத் தயார் இல்லை. அதேவேளை, தமிழ் மக்களும் எந்தத் தமிழ்க் கட்சியையும் எந்தத் தமிழ்த் தலைவரையும் தனியாக முன்னுரிமைப்படுத்தவும் தயார் இல்லை.  

அநியாயமாகக் கொல்லப்பட்ட தமிழ்ச் சமூகத்தில், அதன் அரசியல்த் தலைவர்கள் தங்களது மக்களது விடிவுக்காக அணியாகச் செயற்பட இன்னமும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவில்லை. மாறி மாறி மற்றவர்கள் மீது குறைகளைச் சொல்லுவதும் குழிபறிப்பதும் குறுக்கே நிற்பதும் தொடர் கதையாகவே உள்ளது.  

இதற்கிடையே, முல்லைத்தீவு மாவட்டத்தில் அம்பாள்புரம், பாலைப்பாணி, கொல்லவிளாங்குளம், வடகாடு ஆகிய பகுதிகளில் சீரான போக்குவரத்து வசதிகள் இன்மையால் 45க்கு மேற்பட்ட மாணவர்கள், பாடசாலையை விட்டு இடைவிலகி உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.  

பிரதேச சபையிலும் மாகாண சபையிலும் நாடாளுமன்றத்திலும் தங்களது கதிரைகளைப் பிடிக்க முண்டியடிக்கும் அரசியல்வாதிகளால், அப்பாவிச் சிறுவர்களது போக்குவரத்து வசதிகளைச் சீர்படுத்தி, பாடசாலைக் கதிரைகளில் அவர்களை அமர்த்த முடியாது உள்ளது.  

முல்லைத்தீவு மாவட்டத்தில், இரண்டு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராகத் தமிழர் உள்ளார். இதைவிடத் தமிழ் மக்களது உரிமைகளைக் கடமைகளை நிறைவேற்றவென, பல தமிழ்க் கட்சிகள் உண்டு. ஆகவே, அவர்கள் அனைவரும் இதற்கும் பொறுப்புக் கூறல் வேண்டும்.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மதரசசயன-அரசயல-தலம-எஙகளடம-உணட/91-240139

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.