Jump to content

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம் இது தான்...!

Recommended Posts

விருது வென்ற புகைப்படம் லண்டன், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி முதலிய நாடுகளில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம் இது தான்...!

‘தி மொமண்ட்’ (தருணம்) என பெயரிடப்பட்டுள்ளது இந்த புகைப்படம்

லண்டனின் இயற்கை வரலாற்று (Natural History Museum) அருங்காட்சியகம் ஆண்டுதோறும் சிறந்த வைல்ட்லைப் போட்டோகிராபர் விருதினை வழங்கி வருகிறது. 2019 ஆண்டிற்கான வைல்ட்லைப் போட்டோகிராபர் விருது அக்டோபர் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டின் சிறந்த வைல்ட்லைப் போட்டோகிராபர் விருது சீனாவை சேர்ந்த புகைப்படகாரர் யோங்க்யூங் பவோவிற்கு வழங்கப்பட்டது.

திபெத்திய நரியும் மர்மொட்டும் இருக்கும் புகைப்படம் தான் சிறந்த புகைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சீனாவின் க்விங்ஹாயை சேர்ந்த யோங்க்யூங் இந்த புகைப்படத்தை க்விங்ஹாய்-திபெத் எல்லையில் எடுத்துள்ளார்.

‘தி மொமண்ட்' (தருணம்) என பெயரிடப்பட்டுள்ள இந்த புகைப்படத்தில் நரியை கண்டு மர்மொட் அஞ்சுவது போல் உள்ளது. ‘தக்க தருணத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது' என தேர்வு குழுவின் தலைவர்  ராஸ் கிட்மான் பாராட்டியுள்ளார்.

2019 ஆண்டின் இளம் வைல்ட்லைப் போட்டோகிராப் விருது நியூசிலாந்தின் க்ரஸ் எட்மணுக்கு வழங்கப்பட்டது. இந்தோனேசியாவில் படமெடுக்கப்பட்டது அந்த புகைப்படம்.

ufqifl04

100 நாடுகளை சேர்ந்த சுமார் 48,000 பேரை வீழ்த்தி இந்த விருதை வென்றுள்ளனர் யோங்க்யூங் பவோ மற்றும் க்ரஸ் எட்மண். விருது வென்ற புகைப்படம் லண்டன், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி முதலிய நாடுகளில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.

https://www.ndtv.com/tamil/and-the-wildlife-photographer-of-the-year-award-goes-to-a-china-photographer-2118383?pfrom=home-lateststories

Link to comment
Share on other sites

On ‎10‎/‎17‎/‎2019 at 2:35 PM, ampanai said:

திபெத்திய நரியும் மர்மொட்டும் இருக்கும் புகைப்படம் தான் சிறந்த புகைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சீனாவின் க்விங்ஹாயை சேர்ந்த யோங்க்யூங் இந்த புகைப்படத்தை க்விங்ஹாய்-திபெத் எல்லையில் எடுத்துள்ளார்.

‘தி மொமண்ட்' (தருணம்) என பெயரிடப்பட்டுள்ள இந்த புகைப்படத்தில் நரியை கண்டு மர்மொட் அஞ்சுவது போல் உள்ளது. ‘தக்க தருணத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது' என தேர்வு குழுவின் தலைவர்  ராஸ் கிட்மான் பாராட்டியுள்ளார்.

இதில் நிச்சயம் அரசியல் இல்லை, படத்தை சொன்னேன் 🙂 

திபெத்தை சீனா தனது என உரிமை கொண்டாடுவதும் எல்லையும் பயமும் 'தருணங்கள்' தான்  🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ampanai said:

இதில் நிச்சயம் அரசியல் இல்லை, படத்தை சொன்னேன் 🙂 

திபெத்தை சீனா தனது என உரிமை கொண்டாடுவதும் எல்லையும் பயமும் 'தருணங்கள்' தான்  🙂 

நீங்கள் அப்பிடி, சொன்ன படியால்... 
நாசமாய் போன..... சம்பந்தன்,  சுமந்திரன் அரசியல் நினைப்பு வந்துட்டுது. 😎
அது கிடக்கட்டும்,  மாவை ஐயா...  எங்கே?  :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.