Jump to content

சிரியாவின் வடக்கு பகுதியில் தாக்குதல் – 637 குர்திஷ் போராளிகள் உயிரிழப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF.jpg

சிரியாவின் வடக்கு பகுதியில் தாக்குதல் – 637 குர்திஷ் போராளிகள் உயிரிழப்பு!

சிரியாவின் வடக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இதுவரை 637 குர்திஷ் போராளிகள் உயிரிழந்துள்ளனர்.

துருக்கி இராணுவத்தினை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இதுகுறித்த செய்தியினை வெளியிட்டுள்ளன.

சிரியாவில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்க படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன் இணைந்து குர்திஷ் போராளிகள் குழு போரிட்டது.

மேலும், பிடிபட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த போராளிகள் குழு தனி நாடு அமைக்கும் நோக்கில் சிரியாவில் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சி என்ற அமைப்பை ஏற்படுத்தி நாட்டின் எல்லையில் இருந்து துருக்கி மீது அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வந்தது.

இந்த தனி நாடு கோரிக்கையை விரும்பாத துருக்கி ஜனாதிபதி, தங்கள் நாட்டிலும் சிரியாவிலும் செயல்பட்டு வரும் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சியை ஒழித்துக் கட்ட வேண்டும் என கூறி வருகின்றார்.

இதற்கிடையில், சிரியாவின் வடக்கு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் படைகளை மீளப்பெறுவதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க படைகளை திரும்பப்பெறுவதாக ட்ரம்ப் அறிவித்ததையடுத்து துருக்கி ஜனாதிபதி சிரிய நாட்டு எல்லைக்குள் சுமார் 32 கி.மீ. அளவிலான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி அதில் தங்கள் நாட்டில் உள்ள அகதிகளை குடியமர்த்த திட்டமிட்டார்.

இதனைத் தொடர்ந்து ‘அமைதி வசந்தம்’ என்ற பெயரில் துருக்கி கடந்த 9-ம் திகதி முதல் சிரியா எல்லைக்குள் நுழைந்து அங்குள்ள குர்திஷ் மக்கள் மீது தரைவழி மற்றும் வான்வழி மூலமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

http://athavannews.com/சிரியாவின்-வடக்கு-பகுதிய/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.