Jump to content

திடீர் திருப்பம்: குர்திஷ் போராளிகள் மீதான தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டது துருக்கி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Turkey-to-suspend-Syria-offensive-Mike-Pence-announces-2.jpg

திடீர் திருப்பம்: குர்திஷ் போராளிகள் மீதான தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டது துருக்கி

வடக்கு சிரியாவில் குர்திஷ் மீதான எல்லை தாண்டிய தாக்குதலை நிறுத்துவதற்கு துருக்கி ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க துணைத் தலைவர் மைக் பென்ஸ் அறிவித்துள்ளார்.

பென்ஸ் மற்றும் துருக்கியின் ஜனாதிபதி தயிப் எர்டோகனுக்கு இடையே அங்காராவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் ஐந்து நாட்களுக்கு இடைநிறுத்தப்படும் எனவும், துருக்கியின் எல்லையில் இருந்து குர்திஷ் போராளிகள் பின்வாங்க வேண்டும் எனவும் துருக்கி வலியுறுத்தியது.

இந்த நிலையில் குர்திஷ் தலைமையிலான போராளிகளை பின்வாங்கச் செய்வதற்கு அமெரிக்கா உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி கடந்த வாரம் குர்திஷ் போராளிகள் மீதான தாக்குதலைத் தொடங்கியது. மிலேச்சத்தனமாக இந்த தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கில் மக்கள் இடம்பெயர வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

துருக்கியின் எல்லையில் இருந்த குர்திஷ் மக்களை விரட்டுவதையும், அப்பகுதியில் இரண்டு மில்லியன் சிரிய அகதிகளை மீளக்குடியமர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டு துருக்கி தனது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கப் படைகளை துருக்கியின் எல்லைப் பகுதியிலிருந்து வெளியேற்றிய பின்னரே இந்த எல்லை தாண்டிய தாக்குதல் நடந்தது.

இந்த தாக்குதல்களுக்கு பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, தாக்குதலை நிறுத்துமாறும் வலியுறுத்தின. எனினும் இவற்றை செவிமடுக்காத துருக்கி, தாக்குதலை தொடர்ந்தது.

இந்நிலையில் அமெரிக்கா நடத்திய பேச்சு வார்த்தை வெற்றியளித்ததைத் தொடர்ந்து தாக்குதல் நடவடிக்கை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/திடீர்-திருப்பம்-குர்தி/

Link to comment
Share on other sites

யுத்த நிறுத்தத்தை துருக்கி மீறி தாக்குதலை நடத்துவதாக குர்திஸ் போராளிகள் கூறுகின்றனர்.

The Kurdish-led Syrian Democratic Forces (SDF) told CNN that shelling by the Turkish military and the Syrian rebel proxies supporting them has hit a number of civilian areas in Ras al-Ain, including a hospital.

https://www.cnn.com/2019/10/18/middleeast/syria-turkey-ceasefire-violations-intl/index.html

Link to comment
Share on other sites

NEWS

கண்ணில் படும் அனைவரின் தலையும் துண்டிக்கப்படும்… துருக்கி வீரர்கள் எச்சரிக்கை!

625.500.560.350.160.300.053.800.748.160.
 
 
 
 
 
 
 
 
 

குர்து போராளிகள் பின்வாங்கவிட்டால் அவர்களை தலைகள் துண்டிக்கப்படும் என துருக்கி வீரர்கள் எச்சரிக்கை விடும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு போர் மற்றும் இந்த மாத ஆரம்பத்தில் இருந்து துருக்கி நடத்தி வந்த தொடர் தாக்குதலால் நூறாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதனால் வடக்கு சிரியாவில் பெரும் பதற்றம் நிலவி வந்த நிலையில், அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனுடன் நீண்ட நேர பேச்சு வார்த்தை நடத்தினார்.

அதில், வடக்கு சிரியாவில் அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் ஐந்து நாட்களுக்கு இடைநிறுத்தப்படும் என்றும் அதற்குள் குர்திஷ் தலைமையிலான துருப்புகளை திரும்ப பெற வேண்டும் எனவும் கூறப்பட்டது.

அதற்கு இருநாடுகளும் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை குர்திஷ் தலைமையிலான படைகள் தங்களது வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக துருக்கிய அமைச்சகம் செய்தி வெளியிட்டது.

அதில் ஒரு வீரர் உயிரிழந்துவிட்டதாகவும், மற்றொரு வீரர் காயமடைந்திருப்பதாகவும் கூறியது. இந்த நிலையில் சிரிய ஜனநாயகப் படைகளின் தலைமை செய்தித் தொடர்பாளர் சர்ச்சைக்குரிய ஒரு வீடியோ காட்சியினை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் துருக்கிய வீரர்கள் சிலர், குர்து போராளிகள் யாரேனும் தங்களுடைய கண்களில் தென்பட்டால் அவர்களுடைய தலைகளை துண்டித்துவிடுவோம் என மிரட்டுவதாக உள்ளது.

ஒப்பந்தம் போடப்பட்ட மூன்று நாட்களிலே இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி கொண்டிருப்பதால், மீண்டும் சண்டை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

 

Turkish-backed armed groups threaten to behead any “infidel Kurd” they capture on their way to NE Syria. To all those who are worried that ISIS may come back. ISIS is already back to NE Syria with Turkish protection.

Link to comment
Share on other sites

சிரியா | வஞ்சிக்கப்படும் குர்திஷ் மக்களின் ‘தேசியக் கனவு’

சிவதாசன்
imgres-2.jpg
போரட்டத்துக்கு ஆதரவளிக்கும் குர்திஷ் மக்கள்

சிரியாவில் குர்திஷ் போராளிகள் மீது துருக்கி குண்டு மழை பொழிகிறது. இது அவர்களுக்கு முதலாவது மழையல்ல. இப்படித் தான் முடியுமென்று அவர்களுக்குத் தெரியாவிட்டால் வரலாற்றை அவர்கள் படிக்கவில்லை. வஞ்சிக்கப்படுவதே அவர்களது வாழ்க்கையாகி விட்டது.

குர்திஷ் மக்களில் கணிசமான பங்கு (12.6 மில்லியன்) துருக்கியில் வாழ்கிறார்கள். 6 மில்லியன் ஈரானிலும், 6 மில்லியன் ஈராக்கிலும், 2 மில்லியன் சிரியாவிலும் 1.5 மில்லியன் ஜேர்மனியிலும், மிகுதி தமிழரைப்போல் உலகம் முழுவதிலுமாக ஒரு தேசமாக ஆனால் நாடற்றவர்களாக வாழ்கின்றனர். அவர்கள் ஒரு தேசமாகச் சிந்திக்கிறார்கள். அவர்களிடம் நாடு கடந்த அரசாங்கம் இல்லையென்பது வேறு விடயம்.

வரலாறு

உலகத்திலேயே நாடற்ற பாரிய இனக்குழுமம் ஒன்று உண்டென்றால் அது குர்திஷ் இனம் தான். நாடற்ற தேசமென குர்திஸ்தான் அழைக்கப்படுமானால் அதன் சனத் தொகை 35 மில்லியன், உலகெங்கும் சிதிலமாக்கப்பட்டு வாழும் இனம். மதங்களாலும் குலங்களாலும் பிரிந்துபோயுள்ள இனம்.

பலம் வாய்ந்த ஒட்டோமான் சாம்ராஜ்யம் முதலாம் உலகப்போரின் பின்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது சுவுற்சர்லாந்திலுள்ள லூசான் நகரத்தில் ஒரு ஒப்பந்தம் (Treaty of Lausanne) எழுதப்பட்டது (1920-1923). இழந்துபோனது போக எஞ்சியுள்ள பிரதேசங்களை ‘துருக்கிக் குடியரசு’ க்குள் முடக்கிக் கொடுத்து துருக்கியை ரயிலேற்றி விட்டனர், அப்போதய சண்டியர்களான பிரித்தானியாவும் பிரான்சும். துருக்கியில் பெருமளவு குர்திஷ் மக்கள் வாழ்ந்தும், இலங்கைத் தமிழர்களைப் போலவே அப்போது குர்திஷ் மக்கள் கணக்கிலெடுக்கப்படவில்லை. இச் சண்டியர்களால் அப்போது தமது வசதிக்கேற்பத் துண்டுபோடப்பட்ட குர்திஷ் மக்களும், மத்திய கிழக்கும் கூடவே, இப்போதும் தொடர்கிறது.

imgres-1-1.jpg
ஒட்டோமான் சாம்ராஜ்யம்

1927 இல் துருக்கியிலுள்ள குர்திஷ் மக்கள் குர்திஷ் அரராற் குடியரசைப் (Kurdish Republic of Ararat) பிரகடனப்படுத்தித் தனிநாட்டுப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் சண்டியர்களின் ஆதரவு இருந்தும் துருக்கியின் அழுத்தத்தால் அது கைவிடப்படவே வஞ்சிக்கப்பட்ட குர்திஷ் மக்களின் போராட்டம் துருக்கியால் துடைத்து எடுக்கப்பட்டது.

பின்னர் 1950 களில் அப்டல் கரிம் காசிம் ஆட்சியின்போது அமெரிக்கா ஈராக்கி குர்திஷ் மக்களை உசுப்பிவிட்டு 1963 இல் காசிம் ஆட்சியைக் கவிழ்த்தது. ஆட்சி கவிழ்ந்தவுடனேயே குர்திஷ் போராளிகளை அமெரிக்கா கைவிட்டுவிட்டது. குர்திஷ் போராளிகள் நிர்மூலமாக்கப்பட்டனர்.

1975 இல் ஈராக்கிய குர்திஷ் மக்களுக்கு மீண்டும் ஆயுதங்கள் வழங்கப்பட்டு அவர்களது தேசியத் தீ யிற்கு மீண்டும் எண்ணையை ஊற்றியது அமெரிக்கா. ஆயுதங்களைக் கொடுத்து மகிழ வைத்தது. குர்திஷ் படையை ஒரு அரிகண்டம் தருவதற்காக ஒரு பிம்ப் பாக மட்டுமே வளர்த்தது. சி.ஐ.ஏ. யின் ஆலோசனைக்கு எதிராக அப்போதய ஜனாதிபதி நிக்சன் குர்திஷ் படைகளை வளர்த்தெடுத்தார். அப்போது ஈரான் – ஈராக் பிணக்கு முற்றியிருந்த நேரம். ஈரான் – ஈராக்கிடையே போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திட்டது கூடத் தெரியாமல் அமெரிக்காவினாலும் ஈரானினாலும் கைவிடப்பட்ட குர்திஷ் படைகளைச் சதாம் ஹுசேன் துடைத்தெடுத்தார். 35,000 பேர் மடிய 200,000 அகதிகளை இது தோற்றுவித்தது.

1978 இல் மீண்டும் தேசிய உணர்வு தலைக்கேறியது. ஆகஸ்ட் 15, 1984 இல் PKK எனப்படும் குர்திஷ்தான் உழைப்போர் கட்சி ( Kurdistan Workers Party) மக்கள் எழுச்சியை ஆராம்பித்து வைத்தது. துருக்கியிலிருந்த குர்திஷ் மக்களில் 40,000 பேர் செத்து மடிந்தார்கள். குர்திஷ் மக்கள் வாழ்ந்த ஒவ்வொரு நாடுகளிலும் அவர்கள் எதிரிகளாகவே பார்க்கப்பட்டார்கள். அவர்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம் அழிவும் கூடவே வாழ்ந்தது.

மார்ச் 1988 இல் ஈராக்கில் ஹலாப்ஜா என்னுமிடத்தில் அமெரிக்காவின் நண்பனான சதாம் ஹுசேன் ‘நரம்பு வாயுவைக்’ கொண்டு குர்திஷ் மக்களைக் கொன்றொழித்தார். அப்போதய ஜனாதிபதி றொனால்ட் றேகன் சொன்னது ‘ அவர் எங்களுடைய …மகன்’ என்று. உலக மனித உரிமைப் படைகள் எதுவும் வாய் திறக்கவில்லை.

images-1-3.jpg
சிரியந் குர்திஷ் போராளிகள்

2007 இல், சதாமின் ஈராக் முடிவுற்றதும், அமெரிக்க நண்பரான துருக்கி எல்லை கடந்துபோய் ஈராக்கிய குர்திஷ் மக்களைத் தாக்க அமெரிக்கா பாதையமைத்துக் கொடுத்தது.

********

குர்திஷ் மக்களின் அரசியல் மற்றவர்களுக்குப் பாடம் கற்பிக்குமளவுக்கு சிக்கல்களும் புதிர்களும் நிறைந்தது. அவர்களும் தமிழரைப் போலவே (?) படித்தவர்கள், பலவித கலாச்சார விழுமியங்களை இறுகப்பற்றிக்கொண்டிருப்பவர்கள், சுனி, ஷியா, கிறிஸ்தவம், யூதம் என்று பல மதங்களையும் பின்பற்றுபவர்கள். இதனால் அவர்கள் பல கூறுகளாகப் பிளவுபட்டு வாழ்ந்தவர்கள். தீவிர இடதுசாரி அமைப்பான PKK யின் ‘குர்திஷ் தேசியக்’ கனவு ஒன்றினாலேயே இவர்களை இணைக்க முடிந்தது.

‘பிம்ப்’புகளின் பிழைப்பு

பாலியல் தொழிலில் இடைத் தரகு செய்யும் தரகரைப் ‘பிம்ப்’ (pimp) என்றழைப்பது வழக்கம். அரசியலிலும் இப்படியானவர்கள் நிறையவுண்டு.

அனேகமான சண்டிய நாடுகளின் உளவுப் பிரிவுகள் நான் சொல்லும் இந்த பிம்ப் வகைக்குள் அடங்குவார்கள். பாலியல் தொழிலாளியின் நைந்துபோன உணர்வுகளைச் (vulnerability) சாதகமாகப் பயன்படுத்தி அவர்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ளவர்கள் போன்று நடித்துத் தங்கள் அலுவல்கள் முடிந்ததும் தொழிலாளிகளைக் கைகழுவி விட்டுச் செல்வதே இவர்களது வழக்கம். ஈழத்தமிழர் விடயத்தில் இந்திய உளவுப்பிரிவுகள் இதை நன்றாகவே செய்தன.

இப்படியான-வஞ்சிக்கும் நடவடிக்கையே- இன்னுமொரு தடவை குர்திஷ் போராளிகளுக்கு நடந்திருக்கிறது. தமிழர் உள்ளிட்ட உலகம் முழுவதுமான தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் பிசு பிசுத்துப் போவதற்கு முக்கிய காரணம் இப் போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் ‘பிம்பு’களை நம்பி மோசம் போவதினால்தான்.

சிரியாவின் போர்க்களம் பல புதிர்களையும், பிம்புகளையும் கொண்டிருந்தது. சில சண்டியர்கள் நேரடியாகவும் பலர் பிம்புகள் மூலமாகவும் அங்கு பிரசன்னம் கொண்டிருந்தார்கள். சிரிய ஆட்சியில் எனக்கு விருப்பில்லாமல் இருக்கலாம் ஆனால் தங்களினதும் தங்கள் பிம்புகளினதும் இன்பத்துக்காக, ‘சிரிய மக்கள் துன்பப்படுகிறார்கள்’ என்று நீலிக் கண்ணீர் வடிப்பவர்களுக்காகச் சிரியா மீது சாயவேண்டி இருக்கிறது.

சிரியாவை உடைப்பதற்குப் பல சக்திகள் முனைகின்றன. அவற்றின் ஒன்றினதோ அல்லது பலதினதோ பிம்ப், ஐசிஸ். மத்திய கிழக்கின் இதர பிம்புகளைப் போலவே வெற்றி தலைக்கேறியதும் தடம் மாறப் புறப்பட்ட போது அதை ஒடுக்கக் கொண்டுவரப்பட்ட புதிய பிம்ப் தான் குர்திஷ் படை. ‘குர்திஷ் தேசிய’ கனவுடன் அது வந்தது. ஆண்கள் பெண்கள் என்று நிறைய இளைய தலைமுறையினர் இதில் இணைந்தனர். அமெரிக்கா ஆயுதங்களஇ வழங்கியது. ஐசிஸ் போலன்றி, அவர்களின் தேவை கண்ணியமானதென்று நம்பியதால் அர்ப்பணிப்பு இருந்தது, ரஷ்யாவும், சிரியாவும் பலவீனமாக்கிய ஐசிஸ் கொட்டத்தைக் குர்திஷ் படைகள் ஒடுக்கியது.

இப்போது குர்திஷ் பிம்பின் தேவை முடிந்துவிட்டது. அவர்களது தேசியக் கனவைச் சண்டியன் அமெரிக்கா நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மீண்டுமொருதடவை தகர்க்கப்பட்டது. துருக்கி என்ற பெரிய பிம்பின் வருகையால் குர்திஷின் தேவை இல்லாமல் போய்விட்டது.

துருக்கியில் வாழும் 12 மில்லியன் குர்திஷ் மக்களின் ‘தேசியக் கனவை’ நிர்மூலமாக்க துருக்கி தொடர்ந்து உழைத்தவண்ணம் உள்ளது. அமெரிக்க ஆயுதங்களத் தாங்கிக்கொண்டு சிரியாவில் இருக்கும் 2 மில்லியன் குர்திஷ் மக்கள் இப்போது துருக்கிக்குப் பெரும் தலையிடி. இதுவே இப்போதைய துருக்கியின் படையெடுப்பு.

குண்டு மழைக்கான சூல் கருக்கொண்டு வெகு நாட்களாகிவிட்டன. எப்படிக் குவெயித்தை அடக்க ஈராக் என்ற பிம்ப் பாவிக்கப்பட்டுப் பின் அதுவும் கொல்லப்பட்டதோ அதுவே குர்திஷ் படைகளுக்கும் நடக்கிறது. பலமான குர்திஷ் ஆயுததாரிகளைத் தன் மண்ணில் வைத்திருப்பது சிரியாவுக்கும் விருப்பமில்லை. ஐசிஸ் குடும்பங்களைப் கைதிகளாக வைத்துப் ‘பாதுகாத்துக்கொண்டு’ வரும் குர்திஷ் பிம்புகளை ஒழிக்க அமெரிக்காவும் ‘மனித உரிமைப் படைகளும்’ விடாது. துருக்கி என்ற பிம்ப்பின் உதவி சிரியாவிற்குக் கிடைத்த வரப்பிரசாதம்.

துரும்பரின் நிலைமை

ட்ரம்ப் (துரும்பர்) ஆட்சிக்கு வருவதற்கு முதலே ‘மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளுக்கு வேலையில்லை, அவர்களைத் திரும்ப அழைப்பேன்’ என்ற தோரணையில் தேர்தல் காலங்களின் போது பேசியிருக்கிறார்.

. துரும்பர் வருவாரா? (ஏப்ரல் 2016)

துரும்பரின் ஆட்சியின் முதலாவது தவணை முடியப்போகிறது. இரண்டாவது தவணையும் வெற்றிபெற அவர் கடுமையாக முயற்சிப்பார். அதற்காக முதலாவது தவணையில் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் பாடுபடுவார். வெளி நாடுகளிலிருந்து அமெரிக்கப் படைகளை மீளப்பெறுவது ஒரு வாக்குறுதி. ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை மீட்கப்படுகிறது. சிரியாவில் அடுத்தது. அமெரிக்கப் படைகளை ஆப்கானிஸ்தானிலும் சிரியாவிலும் குவித்தது துரும்பர் அல்ல. ‘முடியாத நீண்ட போர்களிலிருந்து எங்கள் படைகளைத் திருப்பியெடுப்பேன்’ என்ற தாரகமந்திரத்தை அவர் இப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கிறார்.

துரும்பரின் ஆயுதம் பொருளாதாரத்தடை. அதில் எனக்கு விருப்பமில்லையாயினும் குண்டு மழையை விட அது குறைந்த களப்பலிகளை எடுப்பது. வட கொரியா, வெனிசுவேலா, ஈரான் என்று அடுத்ததாக துருக்கி மீது பொருளாதாரத்தால் படையெடுக்கப்போகிறார். அவர் சொல்வது போல தரகளில் அமெரிக்கச் சப்பாத்துகள் தேவையற்றவை.

மீண்டுமொரு தடவை குர்திஷ் மக்களின் தேசியக் கனவு இடையில் குழப்பப்பட்டிருக்கிறது. நிரந்தரக் கனவில் வாழ்வதும், நிரந்தரமாக வஞ்சிக்கப்படுவதும் அவர்களது வாழ்க்கையாகப் போய்விட்டது.

இழப்புகள் தொடர்ந்தும் எண்ணை ஊற்றிக்கொண்டிருக்கும் மட்டும் மரபணுவிலே நிரந்தரமாக எரிந்துகொண்டிருக்கும் விடுதலைத் தீயை அணைக்க முடியாதுதான்.

https://marumoli.com/சிரியா-வஞ்சிக்கப்படும்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.