Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

யுத்தத்தை ஆரம்பித்து முடித்தது நானே – சரத்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போரை மாவிலாற்றில் ஆரம்பித்து, முல்லைத்தீவு வரை சென்று யுத்தத்தை நான் வெற்றிகரமாக முடித்தேன். பயங்கரவாதிகளை கொல்லவே நாங்கள் இடங்களை பிடித்தோம். நிலங்களை பிடிக்க யுத்தம் செய்யவில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (18) சற்றுமுன் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

இறுதிப்போரை மாவிலாறில் ஆரம்பித்து சம்பூர், வாகரை, தொப்பிகல முதல் கிளிநொச்சி, முல்லைத்தீவு வரை சென்று யுத்தத்தை நான் வெற்றிகரமாக முடித்தேன்.

சில காரணங்களுக்காக சில விடயங்களை நான் பாதுகாப்பு சபை கூட்டத்தில் கூடச் சொல்லவில்லை. ஆனால் ராஜபக்சவினர் யுத்த வெற்றிகளை கேக் வெட்டிக் கொண்டாடினார்கள்.

நான் இராணுவத்தளபதியாக இருந்த போது, மாதம் நாலாயிரம் பேரை படையில் சேர்த்து அவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி படையை பலப்படுத்தினேன். யாரும் எப்படியும் மோதலில் ஈடுபடலாமென கோத்தாபய நினைத்தார். ஆனால் மோதல் நடக்கும் இடத்தில் இடத்தை சுருக்கி பயங்கரவாதிகளை ஒழித்தோம்.

பயங்கரவாதிகளை கொல்லவே நாங்கள் இடங்களை பிடித்தோம். நிலங்களை பிடிக்க யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதிகளை கொல்லாமல் இடங்களை பிடிப்பதில் அர்த்தமில்லை. நேரகாலம் குறிப்பிட்டே நான் பயங்கரவாதிகளின் இடங்களை கைப்பற்றினேன்.

ரை, கோட் அணிந்து கோத்தாபய உத்தரவிட்டால் படையினர் அதற்கேற்றபடி செயற்பட மாட்டார்கள். தளபதி ஒருவர் சொன்னால் தான் செய்வார்கள். அது தான் நடந்தது. எனக்கு பாதுகாப்பு அமைச்சை வழங்கினால் நான் அதனை திறம்பட செய்வேன். வெளிநாடுகளுடன் தேவையற்ற ஒப்பந்தங்களை செய்யமாட்டேன் – என்றார்.

https://newuthayan.com/?p=8134

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

"சில காரணங்களுக்காக சில விடயங்களை நான் பாதுகாப்பு சபை கூட்டத்தில் கூடச் சொல்லவில்லை."

அவைதான் போர்க்குற்றங்கள் ?

ஆனால், இவர் உயிர்த்த ஞாயிறு அரச விசாரணைக்குழுவில் உள்ளார் 😞 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

'பயங்கரவாதிகளை அழிப்பதற்காகவே யுத்தம்; கோட்டா அறியாமல் பேசுகிறார்’

நிலத்தை மீட்கும் நோக்கில் தான் யுத்தம் செய்யவில்லை என்றும் பயங்கரவாதிகளை முழுமையாக அழிக்கும் நோக்கிலேயே தான் திட்டங்களை வகுத்து யுத்தத்தை வழிநடத்தியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,“முன்னதாக நிலத்தை மீட்கும் நோக்கத்தில் தமிழீழ விடுதலை புலிகளுடன் எமது இராணுவத்தினர் யுத்தம் செய்து நிலத்தை கைப்பற்றினர். எனினும், பின்னர் விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தி இராணுவத்தினரிடம் இருந்து மீண்டும் நிலப்பகுதிகளை கைப்பற்றினர். இவ்வாறான நிலையில், நிலத்தை மீட்கும் நோக்கில் யுத்தம் செய்து அதனை மீண்டும் இழப்பதைவிட, பயங்கரவாதிகளை முழுமையாக அழித்தால் மாத்திரமே மீட்கப்படும் நிலத்தை பாதுகாக்க முடியும் என்று நினைத்தேன்”என்றார்.

“தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை அவதானித்து அவர்களை எதிர்கொள்ளும் வகையில் இராணுவத்தை வலுப்படுத்த முடிந்தமையாலேயே யுத்தத்தை வெற்றிக்கொள்ள முடிந்தது. 35 ஆயிரம் விடுதலை புலிகளில் யுத்தத்தின்போது 23 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 12 ஆயிரம் பேர் சரணடைந்தனர்.” என்றார்.

“இராணுவத்தில் இணைந்து 35 வருடங்கள் கடமையாற்றியதால் பாதுகாப்பு தொடர்பான தெளிவான விளக்கம் எனக்கு உண்டு. ஆனால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவ்வாறு இல்லை. 20 வருடங்கள் இராணுவத்தில் கடமையாற்றிய நிலையில், தனிப்பட்ட காரணம் என, கூறி இராணுவத்தில் இருந்து விலகி அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார்.

“யுத்தம் தீவிரமடைந்த 15 வருடங்கள் அவர் விடுமுறைக்கு கூட நாட்டு பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. நாடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கூட வெளியிடவில்லை. தனது சகோதரர் ஜனாதிபதியான பின்னர் நாடு திரும்பி பாதுகாப்பு செயலாளராகிவிட்டார்.

“யுத்தத்தை பாதுகாப்பு செயலாளரான தானே வழிநடத்தியதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறுவது தவறான விடயம்.  யுத்தத்தை நானே வழிநடத்தினேன். மாற்று திட்டங்களை வகுத்து யுத்தத்தை வெற்றிக்கொள்ள போராடினேன. 

“யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த போது, முன்னாள்  பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜக்ஷ ஒரு முறை மாத்திரமே ஆலோசனையொன்றை கூறினார். எனினும், அவர் கூறிய விடயத்துக்கு தேவையேற்படாத நிலையில் அதனை செய்யப்படுத்த அவசியம் ஏற்படவில்லை. 

“யுத்தத் திட்டங்களை நான் தனிப்பட்ட முறையில் வைத்திருந்தேன். பாதுகாப்பு சபை கூட்டங்களில் கூட முழுமையான விடயங்களை கூறவில்லை. அவ்வாறு கூறினால் ஊடகங்களில் வெளிவந்து திட்டம் சீர்குலைந்துவிடும். ஒரு வாரத்துக்குரிய விடயங்களை மாத்திரம் நான் தெளிவுப்படுத்தினே்.

“இராணுவத்தினருக்கு கூட எனது நோக்கம் மற்றும் அடுத்தக் கட்ட நடவடிக்கை தெரியாது. நாங்கள் வழங்கிய உத்தரவுகள் ஆவணப்படுத்தப்படவில்லை. தனிப்பட்ட முறையில் திட்டங்களை வைத்திருந்து செயற்படுத்தியமையாலேயே யுத்தத்தை வெற்றிக்கொள்ள எம்மால் முடிந்தது.

" 5 இலட்சம் படைவீரர்களை கொண்டு யுத்தத்தை நடத்தியதாலேயே வெற்றிப்பெற்றதாக கோட்டாபய இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளார். உண்மையில் அவ்வளவு வீரர்கள் எம்மிடம் இருக்கவில்லை. நான் இராணுவ தளபதியாக பொறுப்பேற்ற போது, 1 இலட்சத்து 10 ஆயிரம் இராணுவத்தினர் இருந்தனர். அதனை நான் இரண்டு இலட்சமாக அதிகரித்தேன். கடற்படை, விமானப்படை, பொலிஸார் உள்ளிட சுமார் 3 இலட்சம் வீரர்களே போரில் ஈடுபட்டிருந்தனர். எனினும், 5 இலட்சம் என்றே கோட்டாபய இன்றும் நம்பிக்கொண்டிருக்கின்றார்”. என்றார். 

இதேவேளை, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தன் மீது நம்பிக்கை வைத்து பாதுகாப்பு மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சராக தன்னை நியமிப்பதாக பொதுமக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளதாகவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

“அவ்வாறு பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படும் பட்சத்தில், நாட்டு மக்கள் அனைவரும் அச்சமின்றி பாதுகாப்புடன் வாழும் நிலையை நிச்சயமாக நான் உருவாக்குவேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/பயஙகரவதகள-அழபபதறககவ-யததம-கடட-அறயமல-பசகறர/150-240164

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இவரையே சம் சும் மாவை கும்பல் சனாதிபதியாக ஆக்கவும் நின்றது.

சம் சும் மாவை கும்பலின் சாணக்கியம் என்பது தமிழர்களை தலைநிமிரவே விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ளது. தம் சுயலாபம் மட்டுமே குறிக்கோள். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கம் மகிந்த அண்ட் கோ, தாங்கள் தான் நாட்டை பாதுகாக்கும் வல்லமை படைத்தவர்கள் என சிங்கள மக்களுக்கு காட்ட முனைகிறார்கள். அதற்கு கோத்தா, அவரின் கடந்த கால 'வரலாற்றை' முன்னிலை படுத்த முனைகிறார். அதை சாதாரண சிங்கள மக்களாலும் உள்வாங்க முடிகின்றது. இந்த தலைப்பில் கோத்தாவும் பேசும் 'வல்லமை' கொண்டவராகவும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொழுது 'இலகுவானவராகவும்' காணப்படுகின்றார். (மற்றைய கேள்விகளுக்கு தடுமாறுகின்றார் போலுள்ளது). 

இதை சிங்கள மக்கள் மனதில் நன்றாக பதியமுன் சஜித் தரப்பு சரத்தை முன்னிலைப்படுத்தியுள்ளது. தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்றும், தங்களாலும் பாதுகாப்பை 'உறுதிப்படுத்த' முடியும் என காட்ட முனைகிறார்கள். 

இதனால், தேர்தல் அரங்கத்தில் யார் தமிழர்களை அதிகம் கொன்றவர்கள், அழிக்கக்கூடியவர்கள் என்ற வாதங்களை முன்வைக்கின்றனர்.   

இந்த வாதம் தொடர்ந்தால், சில மறைக்கப்பட்ட  உண்மைகள்  சிலவேளைகளில் வெளிவரலாம். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அசையும் பொருளின்... இசையும் நானே!

ஆடும் படையின் நாயகன் நானே!

நான் அசைந்தால்..,அசையும் ஆமி எல்லாமே..!

அறிவாய் கோத்தா...!

உன் ஆணவம் பெரிதா?

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 10/19/2019 at 3:08 AM, ampanai said:

. கடற்படை, விமானப்படை, பொலிஸார் உள்ளிட சுமார் 3 இலட்சம் வீரர்களே போரில் ஈடுபட்டிருந்தனர். எனினும், 5 இலட்சம் என்றே கோட்டாபய இன்றும் நம்பிக்கொண்டிருக்கின்றார்”. என்றார்.

அடேங்க அப்பா இவ்வளவு தொகை படையை வைத்து இலங்கையில்   ஒரு மூன்றாம் உலகப் போரையே நடத்தி முடித்து  விட்டார்கள் போலிருக்கிறதே

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நாமலுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த கோட்டாபய - உடன் நிறைவேற்ற உத்தரவு   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தளத்திற்கு அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். புத்தளம் மதுரங்குளி நகருக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி, மதுரங்குளி மாதிரி பாடசாலைக்கு சென்று மாணவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது, குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை அவசரமாக புனரமைத்துக் கொடுக்குமாறு மாணவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அத்துடன், மதுரங்குளி சிங்கள பாடசாலையையும் வீதியின் மறுபுறம் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலையையையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றையும் அமைத்து தருமாறும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். மாணவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி குறித்த பாடசாலைக்கு விளையாட்டு மைதானத்தை உடனடியாக புனரமைத்து கொடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு தொலைபேசி மூலம் அறிவித்ததுடன், இரண்டு பாடசாலைகளை இணைக்கும் வகையில் அவசரமாக மேம்பாலத்தையும் அமைத்துக்கொடுக்குமாறும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கும் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், புத்தளம் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்ட ஜனாதிபதி, அவற்றுக்கும் தீர்வினையும் பெற்றுக்கொடுத்தார். அத்தோடு, மதுரங்குளி பாலசோலை முதல் தலுவ வரை பயணித்த ஜனாதிபதி, வீதியின் இருபுறமும் கூடியிருந்த மூவின மக்களுடனும் சுமுகமாக கலந்துரையாடினார். மதுரங்குளி பிரதேசத்தில் உள்ள விவசாய தோட்டத்தின் செயற்பாடுகளை பார்வையிட்ட ஜனாதிபதி, அங்கு 10 ஏக்கர் நிலப்பரப்பில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள மாதிரி திராட்சை பயிர்ச் செய்கையையும் பாராட்டினார். இதேவேளை, பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் முயற்சியால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய தொழிநுட்பக் கட்டடத்தையும் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.     Tags : #Sri Lanka #Puttalam #Gotabhaya Rajapaksa https://www.ibctamil.com/srilanka/80/150879?ref=home-imp-flag
  • தமிழர்கள் இழந்த தொன்மையான இசையின் விளைவே பல நோய்களுக்கு காரணம்: ஆச்சரியப்படவைக்கும் உண்மை தமிழ்களின் தொன்மையான இசைகள் மற்றும் இசைக் கருவிகள் மூலம் பல்வேறுபட்ட நோய்களை போக்கக் கூடியதாக இருந்துள்ளது. ஊர்களில் அதிகளவான இசைக்கருவிகள் காணப்படும் போது ஒரே ஒரு வைத்தியர்தான் இருந்துள்ளார். எப்போது தமிழர்களின் இசைக்கருவிகளின் அழிவடைந்ததோ அப்போதே மனிதர்களுக்கு பல்வேறுபட்ட நோய்கள் ஏற்ப்படத் தொடங்கியுள்ளது. இது போன்ற தமிழ்களின் இசைகள் மூலம் ஏற்ப்படக் கூடிய, நன்மைகள் உட்பட ஆதித்தமிழனின் வரலாற்றினை சிவத்திரு.ச.சிவக்குமார் தெளிவாக விளக்குகின்றார்.     https://www.ibctamil.com/india/80/150892
  • உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம் உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தால் பல்வேறு சலுகைகளை அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு உறுதிமொழி அளித்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இந்த தகவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையில் உயிர்த்தஞாயிறு தினத்தில் தாக்குதல் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை அழைத்து உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தால் பல்வேறு சலுகைகளை அளிப்பதாக உறுதிமொழி அளித்துள்ளார்முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன . இதன்படி ஓய்வூதியத்தை அளித்தல் அத்துடன் அவர் விரும்பும் நாட்டில் தூதுவராக நியமித்தல் என்பனவே அவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலரின் இந்த வாக்குமூலம் மைத்திரிபாலவிற்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   https://www.ibctamil.com/srilanka/80/150876?ref=home-imp-parsely
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.