• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
பிழம்பு

ராஜீவ் கொலை வழக்கு... - எழுவரில் ஒருவரான ரவிச்சந்திரனின் 7 கேள்விகள்!

Recommended Posts

பஞ்சாப்பிற்கும் தமிழகத்திற்கும் வைக்கும் இரட்டை நிலைப்பாடு அந்தப் பிரிவினையை வளர்க்காதா?

ரவிச்சந்திரன்

ரவிச்சந்திரன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக தற்போது சிறையில் இருக்கிறார்கள் ஏழு பேர். பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய இவர்களில், மதுரை சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன், அவர்களின் விடுதலை குறித்து பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதேபோன்று, மே மாதம் அவர் ஆளுநருக்கு தன்னுடைய விடுதலை குறித்துக் கடிதம் எழுதியதும் குறிப்பிடத்தக்கது.

 
ரவிச்சந்திரன்
 
ரவிச்சந்திரன்

அவர் எழுதிய கடிதத்தில், 8 சீக்கிய பிரிவினைவாத போராளிகளின் விடுதலையைப் பற்றி குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். 1995-ம் ஆண்டு பஞ்சாப்பின் முதலமைச்சராக இருந்தவர் காங்கிரஸைச் சார்ந்த பீண்ட் சிங். அவர் சென்ற காரின்மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தி அவரைக் கொன்றதாகப் பலர் இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய பல்வந்த் சிங்க் ரஜோனாவின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும், காலிஸ்தான் தனிநாடு கோரும் 8 சீக்கியப் போராளிகளை விடுவிக்க சம்மதித்தும் அரசு சமீபத்தில் ஒரு முடிவை வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்துதான் ரவிச்சந்திரன் எழுதியிருக்கிறார். பிரதமரிடம் மிகப் பணிவாக முறையிடும் தொனியில் இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. இருப்பினும், இந்தக் கடிதத்தைப் படிக்கும்போது பளிச்சென பல கேள்விகளை இது முன்வைப்பதைப் புரிந்துகொண்டு பார்க்கமுடிகிறது. அந்தக் கேள்விகள் பின்வருமாறு:

1. இந்தியா முழுவதும் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி என்று சமத்துவம் பேணும் கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் மத்திய அரசு, ஆயுள் கைதிகள் விடுதலை விஷயத்தில் மட்டும் அதற்கு நேர்மாறாக நடந்துகொள்வது ஏன்?

   

2. பஞ்சாப்பின் இந்த 8 சீக்கியப் போராளிகள் மீதும், பல்வேறு தீவிரவாத, தேசத் துரோக வழக்குகள் போடப்பட்டு, ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருக்கிறார்கள். இந்நிலையில், சீக்கியப் போராளிகளை விடுவிக்கக் கேட்ட பஞ்சாப்பின் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்டுவிட்டு, எங்கள் ஏழு பேர் விடுதலையைப் பல ஆண்டுகளாகக் கோரும் தமிழகத்தின் கோரிக்கையை நிராகரிப்பது ஏன்?

3. உச்ச நீதிமன்றம் எங்கள் எழுவரின் மீதிருந்த தடா சட்டப் பிரிவுகளின் வழக்குகளிலிருந்தெல்லாம் எங்களை விடுவித்த நிலையிலும்கூட, எங்களுக்கு விடுதலை மறுக்கப்பட்டது. ஆனால், 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் பல்வேறு தடா வழக்கில் கைதாகியிருந்த பல பிரிவினைவாதிகள், பல வட இந்திய மாநிலங்களின் கோரிக்கைகளை ஏற்று விடுவிக்கப்பட்டபோதும் அமைதியான மாநிலமாகத் திகழும் தமிழகத்திலிருந்து வரும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதேன்?

ராஜீவ் காந்தி
 
ராஜீவ் காந்தி

4. ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட, சட்டரீதியாக எங்களை விடுவிக்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியும், சட்டரீதியான விளக்கங்களின்றி பல்வேறு வகையில் எங்கள் விடுதலையைத் தடுத்து, 28 ஆண்டுகளாகியும் சிறையிலிருந்து எங்களை விடுவிக்காதது ஏன்?

 

5. ஆளுநரின் அதிகாரங்களை விளக்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161-ன்படி, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நேரடித் தொடர்பு இல்லையெனினும், தேர்தலின்றி மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர், மத்திய அரசின் உத்தரவுக்காகக் காத்திருப்பதாகவே தமிழகம் நம்புகிறது. அவ்வாறு இல்லையேல், ஆளுநரிடமிருந்து எவ்வித பதிலும் இன்றி நீண்டநாள்களாக நாங்கள் காத்திருப்பது ஏன்?

6. வரலாற்று, கலாசார, பண்பாட்டுரீதியாக வட இந்திய, தென் இந்தியப் பகுதிகளிடையே பல வேறுபாடுகளும், தமிழ்த் திராவிட தென் இந்திய மக்கள் எனவும் ஆரிய கங்கைக்கரை வட இந்திய மக்கள் எனவும் மனத்தளவில் பிரிந்திருக்கும் இந்தியாவில், அதைச் சரிசெய்து ஒன்றுபடுத்த முயலவேண்டிய நிலையில், பஞ்சாப்பிற்கும் தமிழகத்திற்கும் வைக்கும் இரட்டை நிலைப்பாடு அந்தப் பிரிவினையை வளர்க்காதா?

7. தமிழக எம்.பி-க்கள் நாடாளுமன்றத்திலேயே எங்கள் எழுவர் விடுதலை குறித்துப் பேசியும், மத்திய அரசு தலையிட்டு எந்தவித தீர்வும் வழங்காமல் இருப்பது, இந்தியா முழுமைக்கும் சம நீதி இருக்கிறது என்னும் நம்பிக்கையைக் குலைப்பதுபோல ஆகாதா?

ரவிச்சந்திரனின் கடிதம், கேள்விகளை மட்டும் எழுப்பாமல், இவ்விஷயங்களைக் குறிப்பிட்டு, தயவுகூர்ந்து மத்திய அரசு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையாகத்தான் நீள்கிறது. எழுவர் விடுதலையை ஆளுநர் நிராகரிக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன. இந்நிலையில், சட்டத்தை மீறிய அரசியல் காரணங்களுக்காக இன்னும் சிறைக் கம்பிகளுக்குள் இருக்கும் இந்த எழுவருக்கும் நீதி வேண்டும் என்பதே அந்தக் கடிதத்தின் அடிநாதமாக இருக்கிறது.

https://www.vikatan.com/news/politics/rajiv-gandhi-assassination-case-ravichandran-writes-a-letter-to-the-pm

Share this post


Link to post
Share on other sites

மத்திய அரசின்  தமிழர்கள் மீதான இனவெறியை தவிர வேறொன்றும் இல்லை,

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this