Sign in to follow this  
ampanai

புதிய அத்தியாயம் ஆரம்பம்; வடக்கில் பொருளாதார புரட்சி

Recommended Posts

இன நல்லிணக்கத்தின் சின்னம்
சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, மத்திய கிழக்கு
நாடுகளுக்கும் பலாலியிலிருந்து சேவை -  பிரதமர் பெருமிதம்

இலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்றுக் காலை (17) திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், முதலாவது விமானப் பயணத்தை ஆரம்பித்து எயார் இந்தியா எலைன்ஸ் (Air India Alliance) நிறுவனத்திற்குச் சொந்தமான விமானமொன்று சென்னையிலிருந்து அந்நாட்டின் விமான சேவை அதிகாரிகளுடன் நேற்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

எனினும் நாளாந்த விமான சேவைகள் நவம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான அர்ஜுன ரணதுங்க, ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், மாவை சேனாதிராஜா, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு துறை முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

விமான நிலைய அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 

இன நல்லிணக்கத்தின் சின்னமான யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் முழுமையான பலன்களை வடக்கு மக்கள் இன்னும் 3 வருடங்களில் அனுபவிக்க முடியும்.

"இன்று யாழ்ப்பாணத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தினமாகும். கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திலேயே பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்த தீர்மானித்தோம். அதற்கான பணிகள் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு இடையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற போதும் நாம் அதனைக் கைவிடவில்லை.

இத்தகைய சூழ்நிலையிலும், விமான நிலைய பணிகள் இடம்பெறுமா? எனச் சிலர் பிரசாரம் செய்தனர். எனினும், 6 மாத காலத்திற்குள் வெற்றிகரமாக இச் செயற்திட்டத்தை நிறைவு செய்துள்ளோம். இது முதற்கட்டமே. இதனூடாக இந்தியாவின் பல மாநிலங்களுக்கும், விமான சேவையை மேற்கொள்வதே எமது நோக்கம். இரண்டாம் கட்டமாக சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் விமான சேவையை முன்னெடுக்க வாய்ப்பு ஏற்படும்.

இது வடக்கு மக்களின் பொருளாதாரப் புரட்சியாக கருதமுடியும். அத்துடன், வடக்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு இது வாய்ப்பாக அமைவதுடன், அதனூடான பொருளாதாரமும், மேம்படுத்தப்படும். அடுத்து மட்டக்களப்பிலும் சர்வதேச விமான நிலையங்களை நிறுவுவதே எமது எதிர்பார்ப்பு. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இதன் மூலம் வழிவகுக்கப்படும்.

யாழில் ஹோட்டல் பாடசாலை ஒன்றை நிறுவுவதற்கும், சுற்றுலாத்துறை தொடர்பான பயிற்சி நிலையம் நிறுவுவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சர் துறைசார்ந்தவர்களுடன் யாழ்.மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன், சிறந்த திட்டமொன்று தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

காங்கேசன்துறை துறைமுகமும் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. 2015 ஆம் ஆண்டில் நாம் யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி செயற்திட்டங்களை ஆரம்பித்தோம். முதற்கட்டமாக படையினர் வசமிருந்த காணிகளை மக்களுக்கு மீளப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம். அதிலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

இன்னும் 5 வருடங்களில் பாரிய முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் என்பது உறுதி. அரசாங்கத்தின் கடந்த 5 வருட காலமே, மிக கஸ்டமான காலமாக இருந்தது. எனினும், நாம் இது போன்ற செயற்திட்டங்களை ஆரம்பித்து வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம்.

இந்திய அரசாங்கம், எமக்குத் தொடர்ச்சியான உதவிகளைச் செய்து வருகின்றது. நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்திலும், அதன் பின்னரும், இந்தியா தொடர்ச்சியான உதவிகளை எமக்கு வழங்கி வருகின்றது. இரு நாட்டினரும் பொருளாதார மேம்பாட்டிற்காக இணைந்து செயற்படுவோம்" என்றார்.

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம், பலாலியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சர்வதேச விமான நிலையத்திற்கு 2,250 மில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக இலங்கை அரசாங்கம் 1,950 மில்லியன் ரூபாய் நிதியும் இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபாய் நிதியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் தற்போது விமான நெறிப்படுத்தல் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் பிரதான ஓடு பாதை 950 மீற்றர் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கு 72 ஆசனங்களுக்குக் குறைந்த பொம்பார்டியர் - 100 (Bombardier - 100) வகை விமானங்களை ஏற்றி இறக்கக்கூடிய வசதிகள் உள்ளன.

1940 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பிரிட்டிஸ் ஆட்சியில் உலக யுத்தத்தின் போது, பலாலி விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, எயார் சிலோன் என்ற பெயரில் விமான சேவைகள் நடைபெற்றுள்ளன. அதன்பின்னர் 1980 ஆம் ஆண்டின் பின்பு முற்றாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு விமானப் படை அதனைப் பொறுப்பேற்று சிவில் விமான சேவைகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

யாழிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம், சுமித்தி தங்கராசா

https://www.thinakaran.lk/2019/10/18/உள்நாடு/42252/புதிய-அத்தியாயம்-ஆரம்பம்-வடக்கில்-பொருளாதார-புரட்சி

 

 

Share this post


Link to post
Share on other sites
யாழ்ப்பாண மண்ணில் சர்வதேச விமான நிலையம்
2019-10-18 12:14:20
 
பலாலி விமான நிலையம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த் தப்பட்டு நேற்று 2019ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 17ஆம் திகதி சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தைத் திறந்து வைத்துள்ளனர். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாகத் தரமுயர்த்துவதில் இந்தி யாவின் வகிபங்கு காத்திரமானது. தவிர, பலாலி விமானத்தளம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த்தப்படுவதில் இந்தியாவின் கடும் பிரயத்தனம் இருந்ததை இவ்விடத்தில் கூறித்தானாக வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தற்போது தெற் காசிய நாடுகளிலும் அதனைத் தொடர்ந்து உலக நாடுகளிலும் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் பதிவாகிக் கொள்வது நம் யாழ்ப்பாண மண்ணுக்குப் பெருமை தருவ தாகும்.
 
இதைவிட, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் ஒன்றாகச் சேர்ந்து திறந்து வைத்துள்ளமை, இலங்கை யின் அரசியல் வரலாற்றில் நினைவுக்குரிய விடயமாகும். 
அதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்ற வேளையில், ஒக்ரோபர் 17ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தைத் திறந்து வைத் தமை ஜனாதிபதி மைத்திரியின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நிகழ்வாகும்.

இதை இன்னொரு வடிவத்தில் கூறுவதாயின் யாழ்ப்பாணம் சர்வதேச விமான  நிலை யத்தை ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி திறந்து வைத்து நவம்பர் 17ஆம் திகதி ஜனாதிபதிப் பதவியில் இருந்து விடைபெறுகின்ற நிகழ்வு நடந்தாகப் போகிறது.
 
எதுஎவ்வாறாயினும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என்பது யாழ்ப்பாண மண்ணுக்குப் பெருமை தருவதாக இருந்தால், அந்த விமான நிலையத்தில் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
 
பொதுவில் தமிழர்கள் சிறுபான்மை இனத்தினர் என்ற ஒரே காரணத்தால் இந்த நாட்டின் முக்கியமான நிறுவனங்களில் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு  வழங்கப் படுவதில்லை.
இவ்வாறாக தமிழர்களை வேலைக்கு நியமிக்காத நிறுவனங்களில் இலங்கையிலுள்ள விமான நிலையங்களும் அடங்கும்.
 
எனவே மேற்கூறப்பட்ட குறைபாட்டை நிவர்த்திப்பதற்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்ற தமிழர்களுக்கு அதீத இடம் கொடுக்கப்பட வேண்டும். இதனை தமிழ் அரசியல் தரப்பு வலியுறுத்துவது அவசியம்.  
 

Share this post


Link to post
Share on other sites

 

Jaffna_Internetional_Airport-01.jpg

 

 

Share this post


Link to post
Share on other sites

இது நகைச்சுவையாக இருந்தாலும் சில உண்மைகளை அழகாக கூறுகின்றது. 🙂 

 

Share this post


Link to post
Share on other sites
15 hours ago, ampanai said:
பொதுவில் தமிழர்கள் சிறுபான்மை இனத்தினர் என்ற ஒரே காரணத்தால் இந்த நாட்டின் முக்கியமான நிறுவனங்களில் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு  வழங்கப் படுவதில்லை.
இவ்வாறாக தமிழர்களை வேலைக்கு நியமிக்காத நிறுவனங்களில் இலங்கையிலுள்ள விமான நிலையங்களும் அடங்கும்.
 

நாட்டின் முக்கியமான நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் நாட்டு மக்களுடன் அவர்கள் மொழியில் தொடர்பு கொள்ளும் ஆற்றல் கொண்டிருக்க வேண்டும். நாட்டின் பெரும்பாலானவர்களுக்கு சிங்களம் மட்டுமே தெரியும். தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு சிங்கள அறிவு இல்லாததால் வேலைவாய்ப்பு  வழங்கப் படுவதில்லை.

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ரணில் மீது குற்றஞ்சுமத்த முடியாது - ஹிருணிகா பிரேமசந்திர Published by J Anojan on 2019-11-21 16:48:32     (நா.தனுஜா) ரணில் விக்கிரமசிங்க மீது நான் குற்றஞ்சுமத்த மாட்டேன். ஏனெனில் அவர் சிறந்ததை செய்யவேண்டும் என்று கருதினாலும், அவருடன் இருப்பவர்கள் அதற்கு வாய்ப்பளிக்காமல் சுயநல நோக்கில் செயற்படுகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் ஹருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். அத்துடன் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கும் தீர்மானத்தை ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட போதும், அவருடன் இருந்த சிலர் அதனை விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பு வொக்ஷோல் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் காரியாலயத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.  எமது கடந்த நான்கு வருடகால ஆட்சியை இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் புறக்கணித்திருக்கின்றார்கள். எனவே எவ்வித சச்சரவுகளுமின்றி அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். தற்போதைய ஜனாதிபதிக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதேவேளை, புதிய ஆளுந்தரப்பின் ஆட்சி எவ்வாறு அமைகின்றது என்பது குறித்து நாம் அவதானத்துடன் இருப்போம்.  2020, 2021 ஆம் ஆண்டுகளில் எமது நாடு பெருமளவான கடன்தொகையை மீளச்செலுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றது. அதனையும் எதிர்கொண்டு, பொருளாதாரத்தையும் ஏனைய துறைகளையும் எவ்வாறு ஸ்திரப்படுத்தப் போகின்றார்கள் என்பது தொடர்பில் கண்காணிப்புடன் செயற்படுவோம் என்றும் அவர் கூறினார்.  https://www.virakesari.lk/article/69449
  • பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறுபான்மை சமூகங்களின் அபிலாஷைகளையும் நிறைவேற்ற வேண்டும் – பைஸர் முஸ்தபா 2:38 pm November 21, 2019 1 Comment 295 Views புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதுடன், சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் அவர் பெற்றுக்கொடுத்து அதனை பலப்படுத்துவார் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பைஸர் முஸ்தபா வெளியிட்டுள்ள விசேட செய்தியில் மேலும் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் துறைசார்ந்த நிர்வாகத்தில் மிக நீண்ட கால பழுத்த அனுபவங்களைக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ்வின் இடைக்கால அரசாங்கம் மிகச் சிறப்பாக இயங்குவதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நாட்டில் மிகவும் தீர்மானமிக்க முக்கியமான சூழல் ஒன்று, புதிய பிரதமரின் ஆட்சிக்குள் வரவேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அத்துடன், பெரும்பான்மைச் சமூகத்தினது உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதைப்போன்று, சிறுபான்மைச் சமூகங்களினது உரிமைகளுக்கும் அவர்களது அபிலாஷகளுக்கும் இயன்றளவிலான பங்களிப்புக்கள் வழங்கப்படவேண்டும் என்பதும் எமது பாரிய எதிர்பார்ப்பாகும். கடந்துபோன 2005, 2010 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதியாக இருந்து அவர் நாட்டுக்கு ஆற்றிய சேவைகளை எம்மால் மட்டிட முடியாது. அவர் அக்காலகட்டத்தில் அமைதியான, சுதந்திரமான, ஆரோக்கியமான நாடு ஒன்றையே எமக்கு வழங்கியிருந்தார். இதனையும் எம்மால் மறந்துவிட முடியாது. மீண்டும் இலங்கைக்குள் புதிய சமூகம் ஒன்றை அவர் உருவாக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். முவ்வின சமூகங்களுக்கு இடையிலும் சமாதானம், செளஜன்யம், சகவாழ்வு மற்றும் நல்லிணக்க உறவுகளைக் கட்டியெழுப்பி, பாதுகாப்பான பலமான வளமான சுபீட்சமான ஐக்கிய இலங்கை ஒன்றைக் கட்டியெழுப்புவார் என்ற நம்பிக்கையும் எம்மிடையே உண்டு. இந்த நாட்டை நேசிக்கும் மக்களது பிரார்த்தனைகள் நிறைவேறியுள்ளன. நாட்டு மக்கள் எதிர்பார்த்த சுபீட்சமான எதிர்காலத்தையும், அபிவிருத்திகளையும் முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தையும் வழியையும் இறைவன் எமக்குத் தந்துள்ளான். புதிய பிரதமர் ஊடாகக் கிடைத்த இந்த வெற்றியிலே தமிழ், முஸ்லிம் மக்களாகிய நாம் அனைவரும் பங்காளிகளாக இருந்து அவரது கரங்களைப் பலப்படுத்த வேண்டும் என தெரிவித்தார். http://www.dailyceylon.com/192761/
  • சமஷ்டி கோரிக்கைக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர் : சரத் வீரசேகர  Published by R. Kalaichelvan on 2019-11-21 15:48:33   (செ.தேன்மொழி) நாட்டு மக்கள் சமஷ்டி கோரிக்கைக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஒருமித்த நாட்டையே தாம் விரும்புவதாக மக்கள் தமது வாக்குகளின் மூலம் நிரூபித்துள்ளனர் என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைஸ் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். அத்தோடு  தாய்நாட்டை இழக்க வேண்டி ஏற்பட்ட தருணத்திலேயே  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதனை காப்பாற்றியுள்ளார் என்றும் கூறியுள்ளார். மேல்மாகாண அழகியல் நிலையத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, தாய்நாட்டை பாதுகாப்பதற்காகவே கோத்தாபய களமிறங்கினார். தேர்தல் வெற்றிகளை அடுத்து அந்த பாரிய பொறுப்பை அவர் தற்போது ஏற்றுள்ளார். இவரது வெற்றிக்காக வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த 4 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு பணியாளர்கள் இங்கு வந்து வாக்களித்தனர். இவர்களிடம் காணப்பட்ட தேசப்பற்றின் காரணமாகவே இவ்வாறு தமது சொந்த செலவில் இங்கு வந்து வாக்களித்தனர். நல்லாட்சி அரசாங்கத்தின்  ஊழல்கள் மோசடிகளுக்கு எதிராக செயற்படுவதற்காக மக்கள் அவர்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர். கடந்த அரசாங்கத்தின் மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் 13 ஆம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலும் ஆராய்ந்து பார்த்து பல திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும்.  கடந்த அரசாங்கம் ஜெனீவாவுக்கு சென்று எம்மக்கள் மீதும், இராணுவத்தினர் மீதும் பல குற்றச் சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதனால் அவர்கள் எம்மீது கொண்டுள்ள தீய எண்ணத்தை நிவர்த்தி செய்துக் கொள்ளவேண்டும். அதேவேளை இவர்கள் எம் நாட்டு தேரர்களுக்கும் மதிப்பளிக்காமல், அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் செயற்பட்டனர்.  வடக்கு கிழக்கு வாக்குகளை பெறுவதற்காக சஜித் பிரேமதாச தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட 13 கோரிக்கைகளுக்கும் இணக்கம் தெரிவித்தார். ஆனால் மக்கள் தற்போது அவரை நிராகரித்துள்ளனர்.  மக்கள் ஒருமித்த நாட்டையே விரும்புகின்றனர். சமஷ்டி தொடர்பில் அரசியல் வாதிகள் கருத்து தெரிவித்தாலும் மக்கள் அவர்களின் எதிர்ப்பை தற்போது தெரிவித்துள்ளனர். வருங்காலத்தை சிறப்பானதாக மாற்றக் கூடிய அபிவிருத்தியை நோக்கிய பாதையிலேயே இனிமேல் ஆட்சி முன்னெடுக்கப்பட வேண்டும். இதனை எமது ஜனாதிபதி கோத்தாபய சிறப்புற மேற்கொள்வார் என்று எமக்கு நம்பிக்கையுண்டு என அவர் இதன்போது தெரிவித்தார். https://www.virakesari.lk/article/69439
  • To : colombo.general@fco.gov.uk British High Commission Colombo389, Bauddhaloka Mawatha,Colombo 7ColomboSri LankaTo whom it may concern Subject : New president and media freedom    I would like to express my solidarity with media freedom in UK, Sri Lanka and around the world.   The recent pretest about media freedom in UK by the supporters of Sri Lanka's newly elected president does not hold water. He has known for media prosecution and against basic rights.    I encourage UK and others continue to protect media freedom in Sri Lnaka.   Truly,  
  • ஏன் விநாயகமூர்த்தி முரளீதரன் இல்லையா   ????  நெடுக்ஸ்,   ஜுட் நையாண்டி செய்கிறார். நீங்கள் வேறு.