Jump to content

'பிகில்' கதையை பறி கொடுத்த உதவி இயக்குநர் கதறல்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'சில்லரைத்தனமா பேசாதீங்க’... 'பிகில்’ கதையைப் பறி கொடுத்த உதவி இயக்குநர் கதறல்..!

b-jpg.jpg

'பிகில்’திருட்டுக்கதை பஞ்சாயத்து தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து முறையான தீர்ப்பு இன்னும் வரவில்லை என்றாலும் இனி என்ன நடக்கும் என்பதை உணர்ந்து கொண்ட கதைக்கார உதவி இயக்குநர், பணம் பறிப்பதற்காகவும், விளம்பரத்துக்காகவும் கடைசி நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக இயக்குநர் அட்லி தரப்பு வாதிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

அப்பதிவில்,...ஒரு தயாரிப்பாளர் கிட்ட கதையை கொடுத்துட்டு வந்ததுக்கப்பறம் அவங்க கிட்ட இருந்து ஒரு கால் வராதா நம்ம வாழ்க்க மாறாதான்னு யோசிக்கிற நிறைய உதவி இயக்குனர்கள்ல நானும் ஒருத்தன்,போன தீபாவளிக்கு இந்த நேரம் எங்களுக்குள்ள இந்த கதை பிரச்னை தொடங்குச்சு !! உங்க கிட்ட நான் காசு கேட்டு வந்தனா இல்ல எதுக்கு வந்தேன்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல.

ஏன்னா நானும் உங்க ஆட்களும் பேசின conversation வாய்ஸ் ரெகார்ட் உங்க கிட்ட இருக்கு. ஒரு வேல மறந்து இருந்தா அத கேளுங்க !! அண்ட் இது விஷயமா ஜனவரி 2019 எழுத்தாளர் சங்கத்துல நான் புகார் கொடுத்தப்ப அவங்க ஷூட்டிங் கூட ஆரம்பிக்கல, அப்புறம் உண்மையாவே அந்த இயக்குனர் ஜூலை 2018 கதை பதிவு பண்ணி இருந்தா ஏன் என்கிட்ட அத பத்தி எழுத்தாளர் சங்கம் என்னோட புகாரை விசாரிக்கும் போதே இத சொல்லல !! எதுக்கு என்ன நீதிமன்றத்துக்கு போங்கன்னு எழுத்தாளர் சங்கம் சொல்லணும் !!

இப்ப வர அவங்க கிட்ட இருந்து எந்த பதிலும் வரல !! நாங்க படத்தை தடை செய்யணும்ன்னு ஒரு விதத்துலையும் நினைக்கல !! எங்க நோக்கமும் அது இல்ல !! காசுக்காக விளம்பரத்துக்காக வர்றான், இவனுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு இவ்ளோ பெரிய இயக்குனர பத்தி பேசன்னு நிறைய பேர் சொல்றீங்க, என் உரிமையை எனக்கான அங்கீகாரத்தை கேக்கணும்ன்னு நெனச்சன். கேட்டன் அவ்ளோதான், இதுக்காக ஒவ்வொரு நாளும் அந்த இயக்குனர் ஆபீஸ் வாசல்ல நிக்கும்போது அவரோட ஆட்கள், செக்யூரிட்டி என்ன பாக்குற விதம் இருக்கே அந்த வலி யாருக்கும் புரியாது, எங்க நோக்கம் இவ்ளோ கோடி இன்வெஸ்ட்மென்ட் பண்ண படத்தை தடை செய்றது இல்ல, அந்த மாதிரி ஒரு கேவலமான எண்ணம் உள்ள ஆட்களும் நாங்க இல்ல,

எனக்கு கடவுள் தொணைக்கு இருக்காரு, நீங்க என்ன பத்தி பொய்யா பேசி உங்க தரத்தை நீங்களே கொறச்சிக்காதிங்க !! Respect your enemy !! அதனால உண்மையா நேர்மையா பேசுங்க !! அதவிட்டுட்டு பணம் கேட்டான் அத கேட்டான்னு சில்ற மாதிரி பேசாதீங்க !!Ignore negativity !! படத்துல கூட negative கேரக்டர் இல்லனா positive character ஹீரோவுக்கு வேலையும் இல்ல valueவும் இல்ல !! So im happy that im in negative shade in your point of view !! End of the day நான் உங்கள ஜெயிக்கல ஆனா உங்களுக்கு நிகரா சண்ட செஞ்சன் !! அது போதும் நெறைய கத்துக்கிட்டு எக்கச்சக்க அனுபவம் இந்த ஒரு வருஷத்துல. இது நீங்க சொல்ற காச விட பெருசு so எல்லாத்துக்கும் நன்றி !!

https://tamil.asianetnews.com/cinema/asst-director-kp-selvah-facebook-status-about-bigil-story-pzjype

டிஸ்கி :

அய்யோ பாவம்கள்.. அட ஏம்பா ஊரான் வீட்டு மாவில் இட்டலி சுடுறீங்க..? 😢

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.