பின்கதவால வாங்கி பொக்கெற்றுக்குள்ள போட்ட காசு, பொய் பிரட்டுகளைச் சொல்லி பதவிலை ஒட்டி வைச்சிருக்கும் ஆசைய வளர்த்திருக்கு.
மக்கள் விழிப்படையும் வரை சுமந்திரன் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள் இப்பிடி தான் பிழைப்பை கொண்டுபோவார்கள்.
தவறாக புரிந்துவிட்டீர்கள்!
வர வர அந்த நாட்டில, ஹிந்தியாவில, பெரும்பாலும் எதுக்குமே நீதிநியாமில்லை! இந்த நிலைல என்கவுண்டர் மட்டும் எப்பிடி தப்பா ஆகிவிடும் என்பதே உட்கருத்து.
மேலும், இதிலையும் இவங்க தான் அல்லது இவங்க மட்டும் தான் குற்றவாளி என்று யாருக்கு தெரியும்?
சொறிலங்கால நடக்காத என்கவுண்டரா? அப்பாவிகள் பாதிக்கப்பட்டதில்லையா? எதுக்குமே நீதிநியாமில்லை!
சமூக விரோதிகளை அடையாளம் கண்டு, விசாரித்து, நீதியான தீர்ப்பு வழங்குமளவுக்கு விடுதலைப் புலிகளிடமிருந்த திறமையிலும் நேர்மையிலும் 1% கூட ஹிந்திய, சொறிலங்கா அரசுகளிடம் இல்லை.
Tholar Balan
12 hrs
•ஏழரைக் கோடித் தமிழரில்
உணர்வுள்ள தமிழன் ஒருவன்கூடாவா இல்லை?
ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது என இந்திய வெளியுறவுதுறை இணை அமைச்சர் நித்தியானந் ராய் கூறியுள்ளார்.
அதேவேளை பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பங்களாதேஸ் போன்ற நாடுகளில் இருந்து வந்த இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது.
ஆனால் ஈழத் தமிழ் அகதிகள் இந்துவாக இருந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்திய அரசு மறுக்கிறது.
ஈழத் தமிழ் அகதிகள் இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என்றும் அதனால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்றும் அமைச்சர் கூறுகிறார்.
எந்த ஆவணமும் இன்றி உயிர் பிழைக்க கட்டிய துணியுடன் ஓடி வருபவர்கள்தானே அகதிகள். அவர்கள் எப்படி அனுமதி பெற்று நாட்டிற்குள் வர முடியும்?
இதுகூடத் தெரியாமல் ஒரு அமைச்சர். பரவாயில்லை. ஆனால் இந்த அமைச்சர் தெரிந்துகொள்ள வேண்டியது “லண்டன் கனடா போன்ற நாடுகள் ஆறு லட்சம் ஈழ அகதிகள் சட்ட விரோதமாக நுழைந்திருந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளன”.
ஆனால் ஈழ அகதிகள் தமது தாய் தமிழகத்திற்கு சட்ட விரோதமாக அகதியாக வரக் கூடாது என்று இந்திய அமைச்சர் கூறுகிறார். அதுமட்டுமல்ல தமிழ்நாட்டில் ஈழத்தமிழனுக்கு குடியுரிமை இல்லை என்று இந்திய அமைச்சர் முடிவு செய்கிறார்.
என்னே கொடுமை நிலை தமிழனுக்கு? உலகில் வேறு எந்த இனத்திற்கும் இந் நிலை ஏற்பட்டதுண்டா?
அதேவேளை இன்னொரு விடயத்தையும் தமிழ் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். வங்கதேச முதல்வர் மம்தா பனர்ஜி தனது மேற்கு வங்க மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்க இன மக்களுக்கு குடியுரிமை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
மம்தா பனர்ஜியால் தனது இன மக்களுக்கு குடியுரிமை பெற்றுக்கொடுக்க முடியும் என்றால் எமது தமிழக தலைவர்களால் ஏன் ஈழ தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை பெற்றுக் கொடுக்க முடியவில்லை?
ஏனெனில் மம்தான பனர்ஜி வங்க இனத்தவர். எனவே அவர் தனது இனத்திற்கு விசுவாசமான தலைவராக இருக்கிறார். தமிழக தலைவர்கள் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் இல்லை. அதனால்தான் அவர்கள் தமிழ் இனத்திற்கு விசுவாசமானவர்களாக இல்லை.
அண்மையில் பார்ப்பணர் குருமூர்த்தி தமிழக முதலமைச்சரையும் துணை முதலமைச்சரையும் ஆண்மையற்றவர்கள் என்று பேசினார். ஆனால் தமிழக அரசு அவர் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. மாறாக சீமான் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
இதுகூடப்பரவாயில்லை. நடிகர் ராகவா லாரன்ஸ் என்பவர் சீமான் தமிழர்களுக்காக பேசுவதை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் இனி பேசினால் கடும் விளைவுகள் வரும் என்று மிரட்டுகிறார்.
என்னடா இது தமிழனுக்கு வந்த சோதனை? தமிழ்நாட்டுக்கு பிழைக்க வந்த நடிகர்கள் தமிழனை ஆள நினைப்பது மட்டுமன்றி தமிழனை மிரட்டவும் ஆரம்பித்து விட்டார்களே?
இப்படி ஒருவர் கர்நாடகாவில் இருந்துகொண்டு கன்னடர்களுக்கு எதிராக பேச முடியுமா? அவ்வாறு பேசியிருந்தால் இந்நேரம் பெற்றோல் குண்டு வீசியிருக்கமாட்டார்களா?
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் எப்படி இவர்களால் தமிழனுக்கு எதிராக தைரியமாக பேசவும் செயற்படவும் முடிகிறது? தமிழ்நாட்டில் உப்பு போட்டுச் சாப்பிடுகிற தமிழன் ஒருவன் கூட இல்லை என்று இவர்கள் நினைக்கிறார்களா?