Jump to content

பிரக்சிட் ஒப்பந்தம் நிறைவேற்றத்தை ஜனவரி வரை ஒத்திவைக்க தீர்மானம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரக்சிட் ஒப்பந்தம் நிறைவேற்றத்தை ஜனவரி வரை ஒத்திவைக்க தீர்மானம்

'பிரெக்சிட்' எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்காக புதிதாக செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தை பிரிட்டன் பாராளுமன்றம் நிராகரித்தது. 

britain-s-prime-minister-boris-johnson-s

இதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் தீர்மானத்துக்கு எதிராக அதிக எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் முடிவு செய்துள்ளது. பிரெக்சிட் என்று அழைக்கப்படும் இதற்கான நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 

இந்த நிலையில் இம் மாதம் 31 ஆம் திகதிக்குள் வெளியேறுவதற்கு பிரிட்டனுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 27 நாடுகளின் தலைவர்களுடன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பேச்சு நடந்தினார். 

அதையடுத்து புதிய ஒப்பந்தம் தயாரானது. இந்த ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் பாராளுமன்றம் அனுமதி அளிக்க வேண்டும்.

ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக பிரிட்டன் பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நேற்று கூட்டப்பட்டது. பிரதமர் போரிஸ் ஜோன்சன் புதிய பிரக்சிட் ஒப்பந்தத்துக்கான விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.

அதே நேரத்தில் புதிய பிரக்சிட் ஒப்பந்த விதிமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பதால், ஒப்பந்த காலக்கெடுவை ஜனவரி வரை நீட்டிக்க வேண்டும் என்ற முக்கிய திருத்த தீர்மானத்தை பழமைவாத கட்சி எம்.பி ஆலிவர் லெட்வின் தாக்கல் செய்தார். 

இந்த தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. ஆனால், இதை ஏற்க பிரதமர் போரிஸ் மறுத்து விட்டார். ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் அவர் உறுதியாக இருப்பதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து பேசிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், ‘‘பிரக்சிட் ஒப்பந்தம் தாமதம் குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்துடன் நான் இனி பேசமாட்டேன்’’ என உறுதிப்பட கூறினார். புதிய பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற 320 எம்.பிக்களின் ஆதரவு தேவை.

ஆனால் எத்தனை பேர் புதிய பிரக்சிட் ஒப்பந்தத்துக்கு ஆதரவளிப்பர் என தெரியவில்லை. அயர்லாந்துடன் சுங்க நடைமுறைகள் மற்றும் சோதனை முறைகள் தங்கள் கொள்கைக்கு எதிரானது என்பதால், இந்த புதிய ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவிக்க வடக்கு அயர்லாந்து ஜனநாயக ஒன்றியன் கட்சி மறுத்துள்ளது.

 

https://www.virakesari.lk/article/67221

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பிரக்சிட் ஒப்பந்தம் நிறைவேற்றத்தை ஜனவரி வரை ஒத்திவைக்க தீர்மானம்

'பிரெக்சிட்' எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்காக புதிதாக செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தை பிரிட்டன் பாராளுமன்றம் நிராகரித்தது. 

வீரகேசரியின் சர்வதேச செய்திப்பிரிவுக்கு நோபல் பரிசு அளிக்க வேண்டும். அவ்வளவு திருத்தமாகச் செய்திகளை வெளியிடுகிறார்கள்.

. புதிய ஜோன்சன் - ஈயு பிரக்சிட் உடன்படிக்கை.. அதாவது ஒப்பந்தம்.. இன்னும் வாக்கெடுப்புக்கே வரவில்லை.

. வாக்கெடுப்பு நிகழ்ந்தது.. இணக்கப்பாட்டு வரைபுகள் முதலில் பிரிட்டன் நாடாளுமன்றில்.. சட்டமாக்கப்பட வேண்டும்.. என்பதில் தான். அதுவும் ஐப்பசி 31 இல்..  ஒப்பந்தமற்ற பிரக்சிட்டை தடுக்க.

. பிரக்சிட் வெளியேற்ற கால எல்லையை நீட்டிக்க அரசு விரும்பவில்லை. ஆனால் எதிர்கட்சிகள் தமது பிரக்சிட் எதிரான கொள்கைகளை செயற்படுத்த கால அவகாசம் தேடும் பொருட்டு.. பாராளுமன்றில் தமக்கிருக்கும் பெரும்பான்மையை சாதகமாக்கிக் கொண்டு.. நீட்டிப்புக்கான மனுவை சட்டமாக்கி அரசை நீட்டிப்புக்கான கடிதத்தை.. ஈயு வுக்கு அனுப்பச் செய்துள்ளன.

. பிரக்சிட் கால எல்லை நீட்டிப்புக் கடிதத்தில் பிரதமர் கையெடுத்திடாமலே அனுப்பி உள்ளார்.

. பதிலுக்கு தனது இணைப்புக் கடிதம் ஒன்றை கையெடுத்திட்டு அனுப்பி உள்ளார். அதில் கால நீட்டிப்பு என்பது அநாவசியமற்றது என்ற முன்மொழிவு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

. ஜோன்சன் - ஈயு பிரக்சிட்.. உடன்படிக்கை வரும் கிழமையே பிரிட்டனின் நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் 🙂 

ஒரு நாள் ப்ரெக்சிட் நனவாகவும்   🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

பிரக்சிட் கால எல்லை நீட்டிப்புக் கடிதத்தில் பிரதமர் கையெடுத்திடாமலே அனுப்பி உள்ளார்.

இதை பிழை என்று கேஸ் பைல் பண்றாங்கள் அதில் இருந்து சீப்பு துளைச்சது தப்புமா என்பது பெரிய கேள்விகுறி . மொத்தத்தில் சிறு தொழில்கள் கடந்த மூன்று மாதத்தில் செமையா அடிவாங்கியுள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் 🙂 

ஒரு நாள் ப்ரெக்சிட் நனவாகவும்   🙂 

இந்த இழுபறியளுக்கு பிறகு ஐரோப்பிய யூனியனிலை இருக்கிற ஒரு நாடும் பிரிஞ்சு போறதை கனவிலையும் நினைச்சுப்பாக்காது 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இந்த இழுபறியளுக்கு பிறகு ஐரோப்பிய யூனியனிலை இருக்கிற ஒரு நாடும் பிரிஞ்சு போறதை கனவிலையும் நினைச்சுப்பாக்காது 😆

அண்ணேய் uk அடுத்ததா பிரான்ஸ் ஒத்தக்காலில் கொக்கு போல் நிக்குதாம் 

என்னிக்கு ருமேனியாவை இயு க்குள் சேர்த்தியலோ அன்றில் இருந்து எழரை சனி இயு வுக்குள் ஏறி குந்தி இருக்குது இங்கு பாவபட்ட சனத்துக்கு போடும் பழைய துணி டாங்கை கூட ருமேனியன் விடுகிறான் இல்லை . செல்கோ எனப்படும் கட்டிட பொருள்கள் விக்கும் கடைக்கு முன்னாள் காலையில் ஒரு கூட்டம் நிக்கும் அதில் பாதிக்கு மேல் ருமேனியன்  நாள் முழுவது வேலைக்கு கூலி 50 பவுன் மட்டும் காணும் என்பார்கள் அடுத்தநாள் அதே வீட்டுக்கு அவரின் நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளை அடிக்க போவார் இப்படி நிறைய கதைகள் .

Link to comment
Share on other sites

பிரிட்டன் எம்பிக்கள் நிராகரித்ததால் மீண்டும் முடங்கிய பிரெக்ஸிட் ஒப்பந்தம்

 

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை மூன்று நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் திட்டம் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்து விட்டதால் நிறைவேறவில்லை.

நேற்று (செவ்வாய்கிழமை) இது தொடர்பான வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான ஒப்பந்தத்திற்கு முதலில் ஆதரவு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சற்று நேரத்திற்கு பின்னர் அதற்கு எதிரான வாக்களித்து விட்டதால் பிரெக்ஸிட்டை முன்னெடுத்து செல்வதில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் எம்பிக்கள் வாக்கெடுப்பு நடைபெற்ற பின்னர் பேசிய ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க், பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு இருக்கும் அக்டோபர் 31ம் தேதி காலக்கெடுவை நீட்டிக்க ஒன்றிய தலைவர்களுக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தார்.

ஆனால், இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டால், பிரதமர் போரிஸ் ஜாண்சன் தேர்தல் நடத்த முடிவெடுக்கக்கூடும் என்று பிரிட்டன் பிரதமர் அலுவலக வட்டாரம் கூறியுள்ளது.

பிரெக்ஸிட்டுக்கு இன்னும் 3 மாத காலம் நீட்டிப்பு கோரி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடிதம் எழுதிய போரிஸ் ஜான்சன், பின்னர் அதில் கையெழுத்திடவில்லை.

நாடாளுமன்றத்தின் பொது அவையில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் நிறைவேறாமல் போனவுடன், பிரெக்ஸிட் காலக்கெடு நீட்டிப்பை அரசு அல்ல, நாடாளுமன்றமே கேட்டுள்ளதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துவிட்டார்.

அக்டோபர் 31ம் தேதியில், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதே தனது கொள்கை நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.

காலக்கெடுவுக்கு முன்னால், தேவையான சட்டங்களை இயேற்றி, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலகுவது மிகவும் கடினம் என்று நாடாளுமன்ற பொது அவையின் தலைவர் ஜேக்கப் ரீஸ்-மோக் எம்பிக்களிடம் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/global-50148624

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ampanai said:

பிரிட்டன் எம்பிக்கள் நிராகரித்ததால் மீண்டும் முடங்கிய பிரெக்ஸிட் ஒப்பந்தம்

என்னப்பா பிலாக்காய்ப்பால் மாதிரி இழுபட்டுக்கொண்டே போகுது........🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

என்னப்பா பிலாக்காய்ப்பால் மாதிரி இழுபட்டுக்கொண்டே போகுது........🤣

பிரிய நினைக்கிறவங்களும் சரி சேர்ந்து இருக்க வேணும்  என்கிறவனும் சரி ஒருத்தனும் விடமாட்டேன் என்று இறுக்கி பிடிக்கிறாங்கள். இந்த சனி மாற்றம், குரு பெயர்ச்சி ஏதாவது பலனை தருமா  என்று பார்ப்பம் (எங்களுக்கு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Ahasthiyan said:

பிரிய நினைக்கிறவங்களும் சரி சேர்ந்து இருக்க வேணும்  என்கிறவனும் சரி ஒருத்தனும் விடமாட்டேன் என்று இறுக்கி பிடிக்கிறாங்கள். இந்த சனி மாற்றம், குரு பெயர்ச்சி ஏதாவது பலனை தருமா  என்று பார்ப்பம் (எங்களுக்கு)

அதில்லை.....இந்தா புடி வெட்டுறன் புடுங்கிறன்  எண்டு   ஒருத்தர் வந்தார்......அவராலையும் எலாமல் கிடக்கு....வாற வரியம் தானாம் எல்லாம் சரிவரும் எண்டு ஒரு பிரிட்டிஷ் அரசியல்  ஆய்வாளர் சொல்லுறாராம்..
அது சரி நீங்கள் எதுக்கு சப்போர்ட்? பிரியுறதுக்கொ இல்லை ஒண்டாய் இருந்து புடுங்குப்படுறதுக்கோ?😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

அதில்லை.....இந்தா புடி வெட்டுறன் புடுங்கிறன்  எண்டு   ஒருத்தர் வந்தார்......அவராலையும் எலாமல் கிடக்கு....வாற வரியம் தானாம் எல்லாம் சரிவரும் எண்டு ஒரு பிரிட்டிஷ் அரசியல்  ஆய்வாளர் சொல்லுறாராம்..
அது சரி நீங்கள் எதுக்கு சப்போர்ட்? பிரியுறதுக்கொ இல்லை ஒண்டாய் இருந்து புடுங்குப்படுறதுக்கோ?😀

எனக்கு சேர்ந்து இருக்கத்தான் விருப்பம். எல்லாம் சுய நலம் தான். ஐரோப்பிய நாடுகளில் உறவினர்கள் இருக்கிறார்கள். காரில் போய் வர சிக்கல்கள் குறைவு. ஒன்றுக்குள்ளை ஒன்றாய் இருக்கலாம் என்ற நினைப்புதான். மற்றும்  பொருளாதாரம், அரசியல் மற்றும் குடியேற்ற வாசிகள் பிரச்னை இவற்றில் எங்களுக்கு தாக்கமும் உண்டு.அங்கே அடித்தால் இங்கே வலிக்கும். நேற்றைய சம்பவத்தை பாருங்கள் 39 பேர் குளிரூட்டி லாரியில் சுவாசிக்க காற்று இல்லாமல் இறந்து போனார்கள். செய்தியை பார்த்ததும் வலித்தது. எங்கள் சனமும் இப்படித்தான் கஷ்ட்டப்படுகிறது , முகம் தெரியாத ஆட்கள் ஆனால் இவர்களுக்காக எத்தனை தாய்மார், தந்தைமார் சகோதரங்கள் மனைவி பிள்ளைகள் சொந்தங்கள் துடிப்பார்கள். மனிதத்தின் நாடோடி வாழ்க்கை ஒன்றும் புதியது அல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.