சில புதுப்பித்தல்கள் செய்ய வேண்டியிருப்பதால் 19.11.2019 இரவு 7மணியில் இருந்து இரவு 07:30 மணிவரை (ஐரோப்பிய நேரம்) கருத்துக்களம் சீராக இயங்காது.
இக்கால கட்டத்தில் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.
Sign in to follow this  
கிருபன்

பிரக்சிட் ஒப்பந்தம் நிறைவேற்றத்தை ஜனவரி வரை ஒத்திவைக்க தீர்மானம்

Recommended Posts

பிரக்சிட் ஒப்பந்தம் நிறைவேற்றத்தை ஜனவரி வரை ஒத்திவைக்க தீர்மானம்

'பிரெக்சிட்' எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்காக புதிதாக செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தை பிரிட்டன் பாராளுமன்றம் நிராகரித்தது. 

britain-s-prime-minister-boris-johnson-s

இதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் தீர்மானத்துக்கு எதிராக அதிக எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் முடிவு செய்துள்ளது. பிரெக்சிட் என்று அழைக்கப்படும் இதற்கான நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 

இந்த நிலையில் இம் மாதம் 31 ஆம் திகதிக்குள் வெளியேறுவதற்கு பிரிட்டனுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 27 நாடுகளின் தலைவர்களுடன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பேச்சு நடந்தினார். 

அதையடுத்து புதிய ஒப்பந்தம் தயாரானது. இந்த ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் பாராளுமன்றம் அனுமதி அளிக்க வேண்டும்.

ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக பிரிட்டன் பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நேற்று கூட்டப்பட்டது. பிரதமர் போரிஸ் ஜோன்சன் புதிய பிரக்சிட் ஒப்பந்தத்துக்கான விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.

அதே நேரத்தில் புதிய பிரக்சிட் ஒப்பந்த விதிமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பதால், ஒப்பந்த காலக்கெடுவை ஜனவரி வரை நீட்டிக்க வேண்டும் என்ற முக்கிய திருத்த தீர்மானத்தை பழமைவாத கட்சி எம்.பி ஆலிவர் லெட்வின் தாக்கல் செய்தார். 

இந்த தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. ஆனால், இதை ஏற்க பிரதமர் போரிஸ் மறுத்து விட்டார். ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் அவர் உறுதியாக இருப்பதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து பேசிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், ‘‘பிரக்சிட் ஒப்பந்தம் தாமதம் குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்துடன் நான் இனி பேசமாட்டேன்’’ என உறுதிப்பட கூறினார். புதிய பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற 320 எம்.பிக்களின் ஆதரவு தேவை.

ஆனால் எத்தனை பேர் புதிய பிரக்சிட் ஒப்பந்தத்துக்கு ஆதரவளிப்பர் என தெரியவில்லை. அயர்லாந்துடன் சுங்க நடைமுறைகள் மற்றும் சோதனை முறைகள் தங்கள் கொள்கைக்கு எதிரானது என்பதால், இந்த புதிய ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவிக்க வடக்கு அயர்லாந்து ஜனநாயக ஒன்றியன் கட்சி மறுத்துள்ளது.

 

https://www.virakesari.lk/article/67221

Share this post


Link to post
Share on other sites
சில புதுப்பித்தல்கள் செய்ய வேண்டியிருப்பதால் 19.11.2019 இரவு 7மணியில் இருந்து இரவு 07:30 மணிவரை (ஐரோப்பிய நேரம்) கருத்துக்களம் சீராக இயங்காது.
இக்கால கட்டத்தில் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.
1 hour ago, கிருபன் said:

பிரக்சிட் ஒப்பந்தம் நிறைவேற்றத்தை ஜனவரி வரை ஒத்திவைக்க தீர்மானம்

'பிரெக்சிட்' எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்காக புதிதாக செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தை பிரிட்டன் பாராளுமன்றம் நிராகரித்தது. 

வீரகேசரியின் சர்வதேச செய்திப்பிரிவுக்கு நோபல் பரிசு அளிக்க வேண்டும். அவ்வளவு திருத்தமாகச் செய்திகளை வெளியிடுகிறார்கள்.

. புதிய ஜோன்சன் - ஈயு பிரக்சிட் உடன்படிக்கை.. அதாவது ஒப்பந்தம்.. இன்னும் வாக்கெடுப்புக்கே வரவில்லை.

. வாக்கெடுப்பு நிகழ்ந்தது.. இணக்கப்பாட்டு வரைபுகள் முதலில் பிரிட்டன் நாடாளுமன்றில்.. சட்டமாக்கப்பட வேண்டும்.. என்பதில் தான். அதுவும் ஐப்பசி 31 இல்..  ஒப்பந்தமற்ற பிரக்சிட்டை தடுக்க.

. பிரக்சிட் வெளியேற்ற கால எல்லையை நீட்டிக்க அரசு விரும்பவில்லை. ஆனால் எதிர்கட்சிகள் தமது பிரக்சிட் எதிரான கொள்கைகளை செயற்படுத்த கால அவகாசம் தேடும் பொருட்டு.. பாராளுமன்றில் தமக்கிருக்கும் பெரும்பான்மையை சாதகமாக்கிக் கொண்டு.. நீட்டிப்புக்கான மனுவை சட்டமாக்கி அரசை நீட்டிப்புக்கான கடிதத்தை.. ஈயு வுக்கு அனுப்பச் செய்துள்ளன.

. பிரக்சிட் கால எல்லை நீட்டிப்புக் கடிதத்தில் பிரதமர் கையெடுத்திடாமலே அனுப்பி உள்ளார்.

. பதிலுக்கு தனது இணைப்புக் கடிதம் ஒன்றை கையெடுத்திட்டு அனுப்பி உள்ளார். அதில் கால நீட்டிப்பு என்பது அநாவசியமற்றது என்ற முன்மொழிவு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

. ஜோன்சன் - ஈயு பிரக்சிட்.. உடன்படிக்கை வரும் கிழமையே பிரிட்டனின் நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் 🙂 

ஒரு நாள் ப்ரெக்சிட் நனவாகவும்   🙂 

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, nedukkalapoovan said:

பிரக்சிட் கால எல்லை நீட்டிப்புக் கடிதத்தில் பிரதமர் கையெடுத்திடாமலே அனுப்பி உள்ளார்.

இதை பிழை என்று கேஸ் பைல் பண்றாங்கள் அதில் இருந்து சீப்பு துளைச்சது தப்புமா என்பது பெரிய கேள்விகுறி . மொத்தத்தில் சிறு தொழில்கள் கடந்த மூன்று மாதத்தில் செமையா அடிவாங்கியுள்ளது .

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் 🙂 

ஒரு நாள் ப்ரெக்சிட் நனவாகவும்   🙂 

இந்த இழுபறியளுக்கு பிறகு ஐரோப்பிய யூனியனிலை இருக்கிற ஒரு நாடும் பிரிஞ்சு போறதை கனவிலையும் நினைச்சுப்பாக்காது 😆

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

இந்த இழுபறியளுக்கு பிறகு ஐரோப்பிய யூனியனிலை இருக்கிற ஒரு நாடும் பிரிஞ்சு போறதை கனவிலையும் நினைச்சுப்பாக்காது 😆

அண்ணேய் uk அடுத்ததா பிரான்ஸ் ஒத்தக்காலில் கொக்கு போல் நிக்குதாம் 

என்னிக்கு ருமேனியாவை இயு க்குள் சேர்த்தியலோ அன்றில் இருந்து எழரை சனி இயு வுக்குள் ஏறி குந்தி இருக்குது இங்கு பாவபட்ட சனத்துக்கு போடும் பழைய துணி டாங்கை கூட ருமேனியன் விடுகிறான் இல்லை . செல்கோ எனப்படும் கட்டிட பொருள்கள் விக்கும் கடைக்கு முன்னாள் காலையில் ஒரு கூட்டம் நிக்கும் அதில் பாதிக்கு மேல் ருமேனியன்  நாள் முழுவது வேலைக்கு கூலி 50 பவுன் மட்டும் காணும் என்பார்கள் அடுத்தநாள் அதே வீட்டுக்கு அவரின் நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளை அடிக்க போவார் இப்படி நிறைய கதைகள் .

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

பிரிட்டன் எம்பிக்கள் நிராகரித்ததால் மீண்டும் முடங்கிய பிரெக்ஸிட் ஒப்பந்தம்

 

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை மூன்று நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் திட்டம் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்து விட்டதால் நிறைவேறவில்லை.

நேற்று (செவ்வாய்கிழமை) இது தொடர்பான வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான ஒப்பந்தத்திற்கு முதலில் ஆதரவு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சற்று நேரத்திற்கு பின்னர் அதற்கு எதிரான வாக்களித்து விட்டதால் பிரெக்ஸிட்டை முன்னெடுத்து செல்வதில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் எம்பிக்கள் வாக்கெடுப்பு நடைபெற்ற பின்னர் பேசிய ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க், பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு இருக்கும் அக்டோபர் 31ம் தேதி காலக்கெடுவை நீட்டிக்க ஒன்றிய தலைவர்களுக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தார்.

ஆனால், இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டால், பிரதமர் போரிஸ் ஜாண்சன் தேர்தல் நடத்த முடிவெடுக்கக்கூடும் என்று பிரிட்டன் பிரதமர் அலுவலக வட்டாரம் கூறியுள்ளது.

பிரெக்ஸிட்டுக்கு இன்னும் 3 மாத காலம் நீட்டிப்பு கோரி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடிதம் எழுதிய போரிஸ் ஜான்சன், பின்னர் அதில் கையெழுத்திடவில்லை.

நாடாளுமன்றத்தின் பொது அவையில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் நிறைவேறாமல் போனவுடன், பிரெக்ஸிட் காலக்கெடு நீட்டிப்பை அரசு அல்ல, நாடாளுமன்றமே கேட்டுள்ளதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துவிட்டார்.

அக்டோபர் 31ம் தேதியில், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதே தனது கொள்கை நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.

காலக்கெடுவுக்கு முன்னால், தேவையான சட்டங்களை இயேற்றி, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலகுவது மிகவும் கடினம் என்று நாடாளுமன்ற பொது அவையின் தலைவர் ஜேக்கப் ரீஸ்-மோக் எம்பிக்களிடம் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/global-50148624

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, ampanai said:

பிரிட்டன் எம்பிக்கள் நிராகரித்ததால் மீண்டும் முடங்கிய பிரெக்ஸிட் ஒப்பந்தம்

என்னப்பா பிலாக்காய்ப்பால் மாதிரி இழுபட்டுக்கொண்டே போகுது........🤣

Edited by குமாரசாமி
 • Like 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, குமாரசாமி said:

என்னப்பா பிலாக்காய்ப்பால் மாதிரி இழுபட்டுக்கொண்டே போகுது........🤣

பிரிய நினைக்கிறவங்களும் சரி சேர்ந்து இருக்க வேணும்  என்கிறவனும் சரி ஒருத்தனும் விடமாட்டேன் என்று இறுக்கி பிடிக்கிறாங்கள். இந்த சனி மாற்றம், குரு பெயர்ச்சி ஏதாவது பலனை தருமா  என்று பார்ப்பம் (எங்களுக்கு)

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, Ahasthiyan said:

பிரிய நினைக்கிறவங்களும் சரி சேர்ந்து இருக்க வேணும்  என்கிறவனும் சரி ஒருத்தனும் விடமாட்டேன் என்று இறுக்கி பிடிக்கிறாங்கள். இந்த சனி மாற்றம், குரு பெயர்ச்சி ஏதாவது பலனை தருமா  என்று பார்ப்பம் (எங்களுக்கு)

அதில்லை.....இந்தா புடி வெட்டுறன் புடுங்கிறன்  எண்டு   ஒருத்தர் வந்தார்......அவராலையும் எலாமல் கிடக்கு....வாற வரியம் தானாம் எல்லாம் சரிவரும் எண்டு ஒரு பிரிட்டிஷ் அரசியல்  ஆய்வாளர் சொல்லுறாராம்..
அது சரி நீங்கள் எதுக்கு சப்போர்ட்? பிரியுறதுக்கொ இல்லை ஒண்டாய் இருந்து புடுங்குப்படுறதுக்கோ?😀

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, குமாரசாமி said:

அதில்லை.....இந்தா புடி வெட்டுறன் புடுங்கிறன்  எண்டு   ஒருத்தர் வந்தார்......அவராலையும் எலாமல் கிடக்கு....வாற வரியம் தானாம் எல்லாம் சரிவரும் எண்டு ஒரு பிரிட்டிஷ் அரசியல்  ஆய்வாளர் சொல்லுறாராம்..
அது சரி நீங்கள் எதுக்கு சப்போர்ட்? பிரியுறதுக்கொ இல்லை ஒண்டாய் இருந்து புடுங்குப்படுறதுக்கோ?😀

எனக்கு சேர்ந்து இருக்கத்தான் விருப்பம். எல்லாம் சுய நலம் தான். ஐரோப்பிய நாடுகளில் உறவினர்கள் இருக்கிறார்கள். காரில் போய் வர சிக்கல்கள் குறைவு. ஒன்றுக்குள்ளை ஒன்றாய் இருக்கலாம் என்ற நினைப்புதான். மற்றும்  பொருளாதாரம், அரசியல் மற்றும் குடியேற்ற வாசிகள் பிரச்னை இவற்றில் எங்களுக்கு தாக்கமும் உண்டு.அங்கே அடித்தால் இங்கே வலிக்கும். நேற்றைய சம்பவத்தை பாருங்கள் 39 பேர் குளிரூட்டி லாரியில் சுவாசிக்க காற்று இல்லாமல் இறந்து போனார்கள். செய்தியை பார்த்ததும் வலித்தது. எங்கள் சனமும் இப்படித்தான் கஷ்ட்டப்படுகிறது , முகம் தெரியாத ஆட்கள் ஆனால் இவர்களுக்காக எத்தனை தாய்மார், தந்தைமார் சகோதரங்கள் மனைவி பிள்ளைகள் சொந்தங்கள் துடிப்பார்கள். மனிதத்தின் நாடோடி வாழ்க்கை ஒன்றும் புதியது அல்ல.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • கனம் மைத்திரி அவர்களே! நீங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றை மட்டுமே நிறைவேற்றியுள்ளீர்கள். அதாவது மீண்டும் ஒருமுறை போட்டியிடமாட்டேன் என்றீர்கள். அதன்படி போட்டியிடாமல் பதவி விலகி செல்கிறீர்கள். நீங்கள் பதவியில் இருந்தபோது கோத்தபாயாவை வழக்குகளில் இருந்து காப்பாற்றினீர்கள். எனவே அவரும் அந்த நன்றிக்கடனுக்காக உங்களுக்கு எந்த தொந்தரவும் தரமாட்டார்.  நீங்கள் பொதுபலசேனா ஞானதேரரை விடுதலை செய்தீர்கள். ஒல்லாந்து நாட்டு பெண்ணை கொலை செய்த கொலையாளியைக்கூட கடைசி நேரத்தில் விடுதலை செய்தீர்கள். ஆனால் நீங்கள் வாக்குறுதி அளித்தபடி அரசியல் கைதிகள் 146 பேரில்,  சுதர்சனையாவது விடுதலை செய்திருக்கலாம். சுதர்சனின் குழந்தைகளுக்கு தந்தையை விடுதலை செய்வதாக நீங்கள்தான் கூறினீர்கள். புதுவருடப்பிறப்பிற்கு முன்னர் தந்தை வீடு வருவார் என்று அந்த குழந்தைகளுக்கு ஆசை காட்டினீர்கள். ஆனால் அந்த சுதர்சனைக்கூட விடுதலை செய்ய உங்களுக்கு மனம் வரவில்லை. இத்தனைக்கும் தமிழ் மக்களின் வாக்குகளினால்தான் நீங்கள் பதவியையே பெற்றீர்கள். போய் விடுங்கள். ! ஆடி அடங்கும் வாழ்க்கையடா !!
  • பொதுத் தேர்தல் நடந்து முடிந்ததும், பொதுபல சேனா அமைப்பு கலைக்கப்படுமென, அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். ராஜகிரிய பிரதேசத்தில் இன்று (19) நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்துரையாற்றிய தேரர், சிறுபான்மையினரின் வாக்குகளின்றி, இந்த நாட்டில் அரசாங்கமொன்றை உருவாக்க முடியாதென்ற கருத்து நிலவியிருந்ததாகவும் ஆனால் இம்முறை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், அந்தக் கருத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளதாகவும் கூறினார். எவ்வாறாயினும், இந்த நாட்டுக்கு இப்போது, சிறந்த தலைமைத்துவமொன்று கிடைக்கப்பெற்று உள்ளதாகக் கூறிய ஞானசார தேரர், பொதுத் தேர்தலின் பின்னர், நல்லதோர் அமைச்சரவையுடன், நல்ல பயணமொன்றை மேற்கொள்ள முடியுமென்றும் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப, இப்போது நல்ல தலைவரொருவர் கிடைத்திருக்கிறார் என்றும் கூறினார். அதனால், பொதுபல சேனா என்ற அமைப்பின் தேவை, இனி தேவைப்படாது எனும் பட்சத்தில், பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, தமது அமைப்பைக் கலைத்துவிடத் தீர்மானித்துள்ளதாக, அவர் மேலும் கூறினார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/பதபல-சன-கலயம/150-241190
  • இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இலங்கையின் நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக அவதானிக்கவுள்ளது என  ஸ்டேட்ஸ்மன் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா பொறுத்திருந்து பார்க்கும் அணுகுமுறையை பின்பற்றும் என தெரிவித்துள்ள இந்திய ஊடகம்  இந்தியாவின் மூலோபாய நலன்களிற்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் விதத்தில் சீனாவின் கடற்கலங்கள் எதனையும் கோத்தபாய ராஜபக்ச தனது நாட்டிற்குள்அனுமதிக்கமாட்டார் என புதுடில்லி நம்பிக்கை கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியாகயிருந்தவேளை மூத்த ராஜபக்ச சீனாவின் நீர்மூழ்கிகளை இலங்கை கடற்பரப்பிற்குள் அனுமதித்தமை குறித்து இந்தியா கடும் சீற்றமடைந்தது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறுதாக்குதலை தொடர்ந்து இலங்கை ஆட்சி மாற்றத்தை நோக்கி நகர்கின்றது ராஜபக்சாக்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வரக்கூடும் என்பது குறித்து புதுடில்லி கடந்த சில மாதங்களாக உறுதியாக நம்பதொடங்கியது என ஸ்டேட்ஸ்மன் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக தாங்கள் ராஜபக்சவிற்கு எதிரானவர்கள் என்ற கருத்தினை அகற்றுவதற்கு புதுடில்லி முயன்று வந்தது எனவும் ஸ்டேட்ஸ்மன் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே மகிந்த ராஜபக்ச கடந்த செப்டம்பரில் இந்தியா விஜயம் மேற்கொண்டவேளை  நரேந்திரமோடி அவரை சந்தித்தார் எனவும் இந்திய செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/69226
  • அதிரடியாக சில நியமனங்களை வழங்கினார் ஜனாதிபதி கோத்தாபய ! இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக நேற்றைய தினம் அனுராதபுரம் ருவன்வெலிசாயவில் கோத்தாபய ராஜபக்ஷ சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். இந்நிலையில் இன்றைய தினம் காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்  இதையடுத்து உடனடியாக சில நியமனங்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், திறைசேரியின் செயலாளராக முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் எஸ்.ஆர் ஆட்டிகல நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளராக பி.பீ ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்தின் தலைவராக ஓசத சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/69235  
  • (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றுள்ளதாக கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். எனினும் பொதுத் தேர்தலுக்கு செல்வதாக இருந்தாலும் அதற்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது தொடர்பிலும் ஏனைய அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பிலும் கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கிடையில் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியமாகும்.  எனவே வியாழக்கிழமை மத்திய செயற்குழுவை கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளதாவும் இதன்போது அது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டும் மத்திய குழு கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அறிவிக்கப்படும். அத்தோடு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கவி;ல்லை. மத்திய குழு கூட்டத்தில் இதனைத் தெரிவிப்பார் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். https://www.virakesari.lk/article/69250