பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இராணுவத்தினர் தீவிரவாத முகாம்களை இலக்கு வைத்து மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 6 தொடக்கம் 10 பாகிஸ்தான் இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக இந்திய இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

EHU4p2JVUAAt02T.png

ஜம்முகாஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள தாங்தர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நேற்று இரவிலிருந்து பாகிஸ்தான் இராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வந்தனர். 

இந்த தாக்குதலில் இரு இந்திய இராணுவ வீரர்கள் உள்ளடங்கலகா மூவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்தனர்.

இதையடுத்து, பாகிஸ்தான் இராணுவத்துக்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியது. 

பாகிஸ்தான் இராணுவத்தினர் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியதைப் போன்று இந்திய இராணுவமும் பீரங்கி மூலமும், சிறிய ரக ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் தாக்குதல் நடத்தயுள்ளனர்.

இதில் பாகிஸ்தான் பகுதியிலிருந்த 7 தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இராணுவம் தாக்குதல் நடத்தியது. 

இந்த தாக்குதலினால் மூன்று தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதுடன், ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்தும் உள்ளனர்.

அது மாத்திரமன்றி பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த 6 தொடக்கம் 10 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகவும் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/67254