Sign in to follow this  
கிருபன்

தனித்துப் பேச்சுக்கு வரமாட்டோம் கூட்டணியாகவே பேச வருவோம் -ரணிலுக்கு விக்னேஸ்வரன் தெரிவிப்பு

Recommended Posts

தனித்துப் பேச்சுக்கு வரமாட்டோம் கூட்டணியாகவே பேச வருவோம் -ரணிலுக்கு விக்னேஸ்வரன் தெரிவிப்பு

நான் தனித்துப் பேசவர முடியாது. நாங்கள் ஐந்து கட்சிக் கூட்டணியாகவே இவ்விடயங்கள் குறித்து பேசுவது என முடிவு செய்துள்ளோம். எனவே, ஐந்து தரப்புகளுக்கும் பொருத்தமான ஒரு நேரத்தில் சந்திக்க அழைப்புக் கிடைத்தால் வருவோம் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.மேலும் தென்னிலங்கைத் தரப்புகள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், வரவேற்றாலும் வரவேற்காவிட்டாலும் ஐந்து தமிழ்க் கட்சிகளின் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 13 அம்சங்கள் அடங்கிய தமிழர்களின் கோரிக்கைப் பட்டியல் ஜனாதிபதித் தேர்தலின் பிரதான வேட்பாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதில் விக்னேஸ்வரன் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

தற்போது கொழும்பில் தங்கியுள்ள விக்னேஸ்வரன், ஏனைய நான்கு தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும், ஏனைய தலைவர்களையும் சந்தித்துப் பேசிய பின்னரே – பெரும்பாலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ். திரும்புவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.ஏனைய நான்கு கட்சிகளின் பிரதானிகளான மாவை சேனாதிராஜா (இலங்கைத் தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்), சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) ஆகியோருடன் உரையாடி அவர்களுக்கு ஏற்ப ஒழுங்குகளைச் செய்யும்படி விக்னேஸ்வரன் தெரிவித்த பதிலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

 

http://www.samakalam.com/செய்திகள்/தனித்துப்-பேச்சுக்கு-வரம/

 

 

Share this post


Link to post
Share on other sites

"தனித்துப் பேச்சுக்கு வரமாட்டோம் கூட்டணியாகவே பேச வருவோம் -ரணிலுக்கு விக்னேஸ்வரன் தெரிவிப்பு" 

இந்த ஐந்து தமிழ் கட்சிகளில் யாரவது ஒருவர் காலை வாரி விடாமல் இருக்கவும் இந்த கொள்கை உதவலாம்  🙂 

Share this post


Link to post
Share on other sites

ஐந்து கட்சிகள் இணைந்த பின்னும் சொறிலங்காவின் திருட்டுப் புத்தி நிறைந்த பிரதமர் றணில் விக்ரமசிங்க தனது கபட குணத்துடன் தமிழ் மக்கள் கூட்டணியின் விக்கியை தனியே பேச்சுவார்த்தைக்கு அழைத்த போது அவர் றணிலுக்கு "என்னையும் கருணா என்டு நினைச்சாயோ" என சாட்டையடி குடுத்திருக்கார்.

ஐந்து கட்சிகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருந்த விக்கிக்கு பாராட்டுக்கள்!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

மகிந்த அண்ட் கோ தமிழர் தரப்புடன் பேச மாட்டோம் என்று கூறிவிட்டது. 

ரணில் / சஜித் தரப்புடன் பேசி ஒரு உடன்பாட்டிற்கு வந்தால், 'அவர்கள் நாட்டை பிரிக்கப் பார்க்கிறார்கள்' என கூறக்கூடும். அதனால், தமிழர் தரப்பு ஒரு 'இரகசிய உடன்பாட்டிற்கு' வரலாம். அதை தமிழ் மக்களும் அறிய முடியாது. சஜித் ஜனாதிபதியான பின்னர் அவர் அதை நிறைவேற்ற வைப்பதும் கடினமே. 
 

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, Rajesh said:

ஐந்து கட்சிகள் இணைந்த பின்னும் சொறிலங்காவின் திருட்டுப் புத்தி நிறைந்த பிரதமர் றணில் விக்ரமசிங்க தனது கபட குணத்துடன் தமிழ் மக்கள் கூட்டணியின் விக்கியை தனியே பேச்சுவார்த்தைக்கு அழைத்த போது அவர் றணிலுக்கு "என்னையும் கருணா என்டு நினைச்சாயோ" என சாட்டையடி குடுத்திருக்கார்.

ஐந்து கட்சிகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருந்த விக்கிக்கு பாராட்டுக்கள்!

இவ்வளவு காலமும் ஏமாற்றி, ஆசை காட்டி காரியம் சாதித்த அனுபவம்தான்.  ஆனால் ஒன்று பிழையான ஆளை நெருங்கி இருக்கிறார் பாவம்.

Share this post


Link to post
Share on other sites

யாழ் மாணவர்களை வளைத்துப் போடும் முயற்சியில் சிங்கள பயங்கரவாத அரசின் குள்ளநரிப் ரணில் சொதப்பல் சுவாமிநாதனை யாழ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியிருக்கார்.

மறுபக்கத்தில் ராஜபக்ச கொலைகாரக் கும்பல் சார்பில் வடமாகாண ஆளுநர் அலுவலகம் யாழ் மாணவர்களுடன் நெருங்கி உறவாட ஆரம்பித்துள்ளனர்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • சாத்தான் ஓதும் வேதம். அதுசரி, ஏன் இப்போது இதைச் சொல்கிறார் இவர்???
  • தொடங்கியிருப்பது கொலைக் கலாசாரத்தின் ஆட்சி. வெள்ளை வான் புகழ் ஜனாதிபதியும், அவரது துணைராணுவக் குழுத் தலைவரும் நடத்தும் ஆட்சியில் அவர்களுக்கெதிராகவே ரட்ணஜீவன் வழக்குப் போடுகிறார் என்றால், கெதியில் வெள்ளைவான் அவரது வீட்டுப் படலையில் வந்து நிற்பதை எதிர்பார்க்கலாம். 
  • ஒரு பெண்ணுரிமைவாதியாக நெடுக்ஸோடு எவ்வளவு மல்லுக்கட்டியிருப்பேன்😟 ஆதிக்க சிந்தனையே இல்லாத நான் ஆணாதிக்க சிந்தனையோடு எப்படி இருக்கமுடியும்?🧐
  • முதன் முதலாக கிழக்கு ஆசியப் பகுதிகளில்தான் காகங்கள் தோன்றியதாக வரலாறு சொல்கிறது. அங்கிருந்து ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களுக்கு காகங்கள் குடியேறின. சுமார் 40 வகையான காகங்கள் இருக்கின்றன. பொதுவாக அவை மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். 17 நாட்களில் குஞ்சு பொரிக்கும். இதன் ஆயுட்காலம் சராசரியாக 20 வருடங்கள். அமெரிக்கக் காடுகளில் வாழும் ஒரு சில இனங்கள் 30 வருடங்கள் வரை வாழ்கின்றன. அத்துடன் அவை 50 சென்டி மீட்டர் வரை வளர்கின்றன. அவற்றில் சிறியது, ‘ஃபிஷ் க்ரோ’ என்ற இனம். அண்டங்காக்கையைப் போல முழுக் கறுப்பாக இருக்கும். தண்ணீரில் உள்ள முட்டைகள், சிறிய பூச்சிகள், புழுக்கள்தான் அதற்குப் பிடித்த உணவு. பொதுவாக காகம் என்றாலே கறுப்பாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறோம்.ஆனால் ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் வசிக்கும் ‘கேரியன் காகம்’ பச்சை, ஊதா கலந்த நிறங்களில் இருக்கும். அவற்றைப் பார்த்த வுடனே கிளி என்று நினைப்போம். தவிர,  நியூசிலாந்து, அயர் லாந்து. பிரிட்டனில் வாழும் ரூக் (Rook)  என்ற இன காக்கையும் ஊதா கலந்த நிறத்தில் இருக்கும். இப்படி காகத்தையும், அதன் இனவகைகளைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம். அதே நேரத்தில் அழிந்து வரும் காகங்களும் இருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளாக ஹவாய் காடுகளில் வாழ்ந்துவந்த ஹவாயன் காகம் 2002-இல் அழிந்து விட்டதாக ஒரு செய்தி வந்தது. பிறகு சில இடங்களில் அவை தென்பட்டன. தற் போதைய கணக்கெடுப் பின்படி 114 ஹவாயன் காகங்கள் எஞ்சியிருக்கின்றன. ஓர் அரிய பறவையாக மாறிவிட்டது ஹவாயன் காகம்.  இந்தக் காகத்தை ஹவாயில் வாழும் பழங்குடி மக்கள் தெய்வமாகக் கும்பிடுகின்றனர். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=541760     Hawaiian crow   https://en.wikipedia.org/wiki/Hawaiian_crow