கிருபன்

ஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது

Recommended Posts

ஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது

10915304_406520089528734_276907822317737

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையினால் வேட்பாளர் ஒருவருக்கோ அல்லது மூன்று வேட்பாளர்களுக்கு முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகளையோ வாக்குச் சீட்டில் அடையாளமிட முடியும்.


குறிப்பாக வாக்காளர் ஒருவர் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிக்க விரும்புவாராயின் தான் விரும்பும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியில் மட்டும் 1 என்ற இலக்கத்தை அல்லது X எனும் புள்ளடியை இடுவது பொருத்தமாகும். அல்லது முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகள் இருக்குமாயின் முதலாவது விரும்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியினுள் 1 எனவும் இரண்டாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 2 எனவும் மூன்றாவது விரும்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 3 எனவும் அடையாளமிடுவது பொருத்தமாகும்.


எவ்வாறாயினும் 1 , 2 , 3ஆம் விருப்பு வாக்குகளை வழங்கும் போது சில விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும். அதாவது பிரதான வேட்பாளர்களாக கருதப்படுபர்களுக்கு 1ஆம் விருப்பை வழங்கிவிட்டு மற்றைய சாதாரண வேட்பாளர்களாக கருதப்படுபவர்களுக்கு 2 , 3ஆம் விருப்பு வாக்குகளை வழங்குவது அர்த்தமற்றதே.

அதாவது யாருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காத பட்சத்தில் 2ஆம் , 3ஆம் விருப்பு வாக்குகளை எண்ணும் போது அதி கூடிய வாக்குகளை பெற்றுள்ள இரண்டு வேட்பாளர்களுக்கு கிடைத்துள்ள 2 , 3ஆம் விருப்பு வாக்குகள் மாத்திரமே எண்ணப்படும்.

இவ்வேளையில் ஏற்கனவே பிரதான வேட்பாளர்கள் இருவருக்கும் கிடைத்துள்ள 1ஆம் விருப்பு வாக்கு எண்ணப்பட்டிருப்பதால் அந்த வாக்கு சீட்டு மீண்டும் வாக்கு எண்ணும் போது எடுத்துக்கொள்ளப்படாது. இதன்போது அவர்கள் இருவர் தவிர்த்த மற்றைய வேட்பாளர்களுக்காக முதலாம் விருப்பு வாக்கு வழங்கப்பட்டுள்ள வாக்கு சீட்டுகளில் 2 , 3ஆம் விருப்பு வாக்குகளே எண்ணப்படும். என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

இதனால் விருப்பு வாக்குகளை வழங்க விரும்பின் சாதாரண வேட்பாளர் ஒருவருக்கு 1ஆம் விருப்பை வழங்கிய பின்னர் பிரதான வேட்பாளருக்கு 2ஆவது விருப்பை வழங்கலாம். இது பிரயோசமானதாக அமையும்.


இதேவேளை எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்கொன்று அடையாளமிடப்படாத அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு X என்ற அடையாளமிடப்பட்டுள்ள அல்லது ஒரு வேட்பாளருக்கு 1 எனவும் மற்றுமொரு வேட்பாளருக்கு X என்ற அடையாளமும் இடப்பட்டுள்ள அல்லது இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்புத் தெரிவித்தல் மாத்திரம் அடையாளமிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுக்கள் செல்லுபடியற்றதானதாகும் என்பதுடன் வாக்கு எண்ணும் போது அவை நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.samakalam.com/செய்திகள்/ஜனாதிபதி-தேர்தலில்-எப்பட/

Share this post


Link to post
Share on other sites

இது பற்றி பத்திரிகைகளிலும் பிரசுரிக்க வேண்டும்.

ஊரிலுள்ள பலர் பத்திரிகைகளை வாசிப்பதுண்டு. 

Share this post


Link to post
Share on other sites

"இதன்போது அவர்கள் இருவர் தவிர்த்த மற்றைய வேட்பாளர்களுக்காக முதலாம் விருப்பு வாக்கு வழங்கப்பட்டுள்ள வாக்கு சீட்டுகளில் 2 , 3ஆம் விருப்பு வாக்குகளே எண்ணப்படும். என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்"

 

எனக்கு புரிந்தது, சரியோ தெரியவில்லை :

அநேகமாக ஒருவரும் 50% த்திற்கு மேலாக முதல் தெரிவில் வாக்குகளை பெற மாட்டார்கள் என்றால், மிகுதி உள்ள வாக்குகளே இங்கு முக்கியமாக்கலாம்.

உதாரணத்திற்கு முதலாவதாக வந்தவருக்கு 47%
இரண்டாவதாக வனத்தாருக்கு 43% வாக்குகள் என்றால்    
மொத்தம் 90% வாக்குகள்; மிகுதி 10% வாக்குகள்.

யாருமே 50% பெறாதமையால், மிகுதி 10% வாக்குகள் பார்க்கப்படும் ( அதிலும் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் இருக்கும்) ; 
அதில் யாருக்கு அதிகம் 2 , 3ஆம் விருப்பு வாக்குகளே எண்ணப்படும்.  

Share this post


Link to post
Share on other sites
10 minutes ago, ampanai said:

எனக்கு புரிந்தது, சரியோ தெரியவில்லை :

அநேகமாக ஒருவரும் 50% த்திற்கு மேலாக முதல் தெரிவில் வாக்குகளை பெற மாட்டார்கள் என்றால், மிகுதி உள்ள வாக்குகளே இங்கு முக்கியமாக்கலாம்.

உதாரணத்திற்கு முதலாவதாக வந்தவருக்கு 47%
இரண்டாவதாக வனத்தாருக்கு 43% வாக்குகள் என்றால்    
மொத்தம் 90% வாக்குகள்; மிகுதி 10% வாக்குகள்.

யாருமே 50% பெறாதமையால், மிகுதி 10% வாக்குகள் பார்க்கப்படும் ( அதிலும் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் இருக்கும்) ; 
அதில் யாருக்கு அதிகம் 2 , 3ஆம் விருப்பு வாக்குகளே எண்ணப்படும்.  

இன்னொரு திரியில் நான் எழுதியது.

யாரும் 50% வாக்குகளுக்கு மேல் பெறாவிட்டால் கூடிய வாக்குகளை பெற்ற முதல் இரு வேட்பாளர்களை தவிர ஏனையோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குகளில் இரண்டாம் விருப்பத்தெரிவில் இவ் இரு வேட்பாளர்களில் ஒருவர் பெயர் இருந்தால் அதை சேர்ப்பார்கள், இரண்டாம் விருப்ப தெரிவில் நீக்கப்பட்ட வேறு யாரினதும் பெயரை ஏதும் வாக்காளர்கள் இட்டிருந்தால் அவர்களது மூன்றாம் விருப்ப தெரிவில் இவ்விரு வேட்பாளர்களில் ஒருவரின் பெயர் இருந்தால் அதை சேர்ப்பார்கள். அதன் மூலம் இறுதி முடிவெடுக்கப்படும்.”

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, ampanai said:

 

இதில் இறுதியில் கூறப்படும் சில விடயங்கள் சாதாரண நடைமுறைகளே தவிர இத்தேர்தலில் இந்நடைமுறை பின்பற்றப்படாது.

நான் ஏற்கனவே தந்த விளக்கம் போல் தான் இரண்டாம் சுற்றில் வாக்குகள் சேர்க்கப்படும்.

அதன்படி A, B பெறும் மொத்த வாக்குகளை செல்லுபடியான வாக்குகளாக கொண்டு அதில் அரைவாசிக்கு மேல் (50% இற்கு மேல்) பெறுபவர் வெற்றியாளர் என அறிவிப்பார்கள்.

மகிந்த தேசப்பிரிய முன்னர் இவ்வாறு தான் கூறியிருந்தார்.

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites

நாளை நேர காலத்துடன் வாக்களிக்க செல்லுங்கள் : வாக்காளர்களுக்கு அறிவிப்பு

நாளை நேர காலத்துடன் வாக்களிக்க செல்லுங்கள் : வாக்காளர்களுக்கு அறிவிப்பு

நாளைய தினத்தில் நேர காலத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறு அனைத்து வாக்காளர்களையும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வாக்களிப்பு நேரத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடி நிலைமைகளை தவிர்த்துக்கொள்ளும் வகையிலேயே நேரகாலத்துடன் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிப்புகள் நடக்கவுள்ளன. -(3)

http://www.samakalam.com/uncategorized/நாளை-நேர-காலத்துடன்-வாக்/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • யாழ்ப்பாணத்தை வெற்றி கொண்டதற்காக.. சந்திக்கா அம்மையார்.. அனுரத்த ரத்வத்தைக்கு தங்க முலாம் பூசிய வாள் ஒன்றை பரிசளித்து.. அவரை ஒரு நவீன துட்டகைமுனு லெவலுக்கு காட்டினார். அதன் பின் மகிந்த.. தன்னைத் தானே.. முள்ளிவாய்க்கால் பெரும் இனவழிப்போடு.. நவீன துட்டகைமுனுவாக காட்டிக் கொண்டார். நவீன மகாவம்சத்தையும் வெளியிட்டார். இப்பொ.. கோத்தா.. ருவன்வெலி சயவில் போய் நின்று கொண்டு.. தன்னை அனுராதபுர ராட்சியதின் தொடர்ச்சி துட்டகைமுனுவின் வாரிசாகக் காட்ட முனைகிறார். பொலநறுவையாக இருக்கட்டும்.. அனுராதபுரமாக இருக்கட்டும்.. கண்டியாக இருக்கட்டும்.. யாழ்ப்பாணமாக இருக்கட்டும்.. வன்னியாக இருக்கட்டும்.. எல்லாத்தையும் தலைநகராக்கியதே தமிழ் மன்னர்கள் தான். சிங்களவர்கள் கிடையாது. அதுவும் சைவ மன்னர்கள். அதனால் தான் இங்கெல்லாம்... சைவக் கோவில்களை நிறுவி இருந்தனர். இப்போ அவற்றில் பல சேதமடைந்து விட்டன.  சிகிரியா ஓவியங்கள் கூட காசியப்பன் காலத்தினது.  அங்குள்ள குகை ஓவியப் பெண்கள்.. அழகிய பொட்டணிந்திருப்பதைவ். கூந்தலில் பூ மாலை அணிந்திருப்பதைக் காணலாம். மேலும் காதணி.. மற்றும் அந்தப் பெண்கள் அணிந்திருக்கும்.. அணி கலன்கள் தமிழர் நாகரிகத்துக்குரியவை. மிஸ்டர்.. கோத்தாவும்.. அவரது கும்பலும்.. இந்த ஓவியங்களையும் மாற்றி வரையலாம். அதற்காக வரலாற்றை இப்படியே தமக்கேற்ற வாறு தொடர்ந்து புனைய முடியாது.  இலங்கைத் தீவுக்குள் உள்ள மாதன முத்தாக்களை இனவாதத்தின் பெயரால்.. மயக்கி வைக்கலாம்.. ஆனால்.. நவீன உலகோடு தொடர்புடைய இளைய சமுதாயத்தை அதிக காலம் எனி ஏமாற்ற முடியாது. 
  • தமிழினத்துக்கு ஒரு தலமை என்பதும் அதை மக்கள் ஏற்றுக்கொள்வது என்பதும் கற்பனை நிலையில் கூட தற்போது சாத்தியமற்றது.  முரண்பாடுகள் நிறைந்து சாதி மத பிரதேசவாதமாக பல்வேறு தளங்களில்  ஐக்கியமின்றி சிதைந்துபோன நிலையில் உள்ள இனம் அதே நேரம்  பேரினவாதத்திடம் இருந்து விடுபடவும் வேண்டும்.  இரண்டுக்குமான ஒரு தலைமை எப்படி சாத்தியம் என்பதே  கற்பனைக்கு எட்டாத விசயம். புலிகள் காலத்தில் தமிழினம் விடுதலை அடைந்தால் சரி இல்லையேல் தமிழர்களுக்கென்று ஒரு அரசியலே இருக்காது என்ற நிலை இருந்ததின் காரணம் இதுதான். புலிகளின் முடிவுக்குப் பின்னர் தமிழர்களுக்கான அரசியல் தளமே  கிடையாது. இன்றைய சுமந்திரன் சம்மந்தர் விக்கி சிவாஜிலிங்கம் யாரானுலும் சரி அவர்கள் தளமற்று அந்தரத்தில் நின்று எதையே செய்கின்றார்கள் தவிர அது இனத்துக்கான அரசியல் எல்லைக்குள் வரமாட்டாது. அவர்களிடம் வெறுப்பைக் காட்டுவதும் ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அர்த்தமற்ற ஒன்றுதான்.   
  • MCC and the transition to economic growth W. A. Wijewardena http://www.dailymirror.lk/hard-talk/MCC-and-the-transition-to-economic-growth-W-A-Wijewardena/334-177764
  • பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதவி விலகல் கடிதமானது, ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இன்று பிற்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை, காபந்து அரசாங்கம் ஒன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த காபந்து அரசாங்கத்தின் பிரதமராக, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 15 உறுப்பினர்களைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ள காபந்து அரசாங்கத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் மூவரும் உள்ளடங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இரஜனம-கடததத-அனபபனர-ரணல-மல-வசட-உர/150-241232
  • இன்று நள்ளிரவு முதல் பாண் உட்பட பேக்கரி உற்பத்தி உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி 450 கிராம் பாண் ஒன்றின் விலையானது 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இன்று காலை இடம்பெற்ற அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் பேச்சுவார்த்தையின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 16 ஆம் திகதி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரித்தமையின் காரணமாக தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும் கடந்த 16 ஆம் திகதி கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்படவில்லை என நிதியமைச்சும் பிறிமா நிறுவனமும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/69313