
யாழில் விமான நிலையத்தை அமைத்து நாட்டை பிரித்துவிட்டார்களா? – ஜனாதிபதி வேட்பாளர் சந்தேகம்
By
தமிழ் சிறி, in ஊர்ப் புதினம்
-
Topics
-
Posts
-
எனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா ! எதற்காக இலக்குவைத்துள்ளார் ? அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்கும் . சிவத்தை உணர்ந்தால் உங்களுக்குள் கைலாசா உருவாகும். என்னுடைய அடுத்த இலக்கு ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் தான் என சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி உள்ளார். சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் புதிய வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி இருப்பதாவது:- சிவத்தை உணர்ந்தால் உங்களுக்குள் கைலாசா உருவாகும். என்னுடைய அடுத்த இலக்கு ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் தான். நான் அரசியல் பற்றி பேச வரவில்லை. ஆனால் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்கும். ஏனெனில் சமூகத்துக்கு பங்களிப்பது தான் ராமரின் கொள்கை. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட யார் நிதி அளித்தாலும் அது இந்திய பொருளாதாரத்துக்கு பங்களிப்பது ஆகும். நான் எந்த அமைப்பிலும் இல்லை. எனது சீடர்களும் சந்நியாசிகளும் உங்களால் முடிந்த அளவுக்கு ராமர் கோவில் கட்டுமானத்தில் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் எனது வழியில் ராமர் கோவிலுக்கு பங்களிப்பேன். என்னிடம் ஒன்றும் இல்லை என நான் கூறப் போவது இல்லை. லட்சுமி என்னுடன் இருக்கிறாள். இவ்வாறு வீடியோவில் பேசிய அவர் திடீரென ராவணனை சாடினார். இது தொடர்பாக அவர் வீடியோவில் கூறியதாவது:- இராவணன் நேரடியாக கைலாசத்தை தொட்டு தூக்க முயன்றான். கைலாசத்தில் உள்ள சிந்தாமணி மண்டபம் தான் கைலாசத்தின் அருள் பொலிவுக்கு காரணம் என நினைத்தான். உடனே எனக்கு அந்த மண்டபம் வேண்டும் என சிவனிடம் கேட்டான். சிவனும் எடுத்துக்கொள் என்று கூறிவிட்டார். இந்த முட்டாள் ராவணனும் அந்த சிந்தாமணி மண்டபத்தை எடுத்து ஸ்ரீலங்காவில் தான் வைத்தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/71000
-
இந்திய வம்சாவளியை சேர்ந்த 14 பேர் பிரிட்டன் தேர்தலில் வெற்றி பிரிட்டன் தேர்தலில், கன்சர்வேடிவ் கட்சி மற்றும் லேபர் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 12க்கும் மேற்பட்டோர் வெற்றியை பதிவு செய்துள்ளனர். உள்துறை அமைச்சராக இருந்த பிரீத்தி பட்டேல், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் வெற்றிபெற்றுள்ளார். கருவூல தலைமைச் செயலராக இருந்த, இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் வெற்றிபெற்றுள்ளார். சர்வதேச மேம்பாட்டுத்துறையின் அமைச்சராக இருந்த அலோக் சர்மா வெற்றிபெற்றுள்ளார். சைலேஸ்வரா, சுயெல்லா பிரேவர்மன், பிரீத்தி கவுர் கில், தன்மன்ஜித் சிங் தேசி, வீரேந்திர சர்மா, லிசா நந்தி, சீமா மல்ஹோத்ரா, வலேரி வாஸ் ஆகியோரும் வெற்றிபெற்றுள்ளனர். ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில், ககன் மொஹிந்திரா, கிளேர் கொட்டின்ஹோ, லேபர் கட்சி சார்பில் நவேந்தரு மிஸ்ரா ஆகிய புதுமுகங்களும் வெற்றிபெற்றுள்ளனர். https://www.polimernews.com/dnews/92684/இந்திய-வம்சாவளியை-சேர்ந்த-14பேர்-பிரிட்டன்-தேர்தலில்வெற்றி
-
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை பொலிஸ் விசாரணைக்கு வருமாறு ஏறாவூர் பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர். செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணத்திற்கு எதிராக மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டமை குறித்து பிரதேச செயலாளர் வில்வரெட்ணத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தனை ஏறாவூர் பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் ஊழல் தொடர்பாக செய்திகளை வெளியிட்டு வரும் சுதந்திர ஊடகவியலாளர் நிலாந்தன் மீது கடந்த காலங்களில் பல தடவைகள் இதுபோன்ற பொலிஸ் விசாரணைகள் நான்கு தடவைக்கு மேல் நடைபெற்றுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஊழல் தொடர்பான செய்திகளை வெளியிட்டதற்காக அவரை ஏறாவூர் பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஊடகவியலாளர் நிலாந்தன் மீதான விசாரணைக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. குறித்த கண்டன அறிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் காலத்துக்கு காலம் ஊழல் செய்யும் அதிகாரிகள் தங்களது ஊழல்கள் குறித்த செய்திகள் வெளிவரும் போது அதனை மூடி மறைப்பதற்காக ஊடகவியலாளர்கள் மீது அதிகாரத்தை பயன்படுத்தி தங்களது ஊழல்கள் வெளிவருவதை தடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம் உடனடியாக இதுபோன்ற ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் ஊழல் செய்யும் அரச அதிகாரிகள் தங்களது ஊழல்களை மறைப்பதற்காக பாதுகாப்பு தரப்பையும் சட்டத்தையும் தவறாகப் பயன்படுத்தி ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும். இது குறித்து புதிய ஜனாதிபதியின் கவனத்திற்கு நாம் கொண்டு செல்ல உள்ளோம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது கண்டன அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/70973
-
(ஆர்.யசி) இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும், இலங்கையில் அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கிக்கொடுக்க இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது. 2019 ஆம் ஆண்டு புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை இந்த அரசாங்கம் கொண்டுவந்துள்ள நிலையில் இந்த சட்டத்தின் பிரகாரம் மத ரீதியில் துன்புறுத்தப்பட்ட அகதிகள் தவிர்ந்து ஏனைய அனைவரும் இந்திய பிரஜைகள் அல்ல என்ற நிலைப்பாட்டினை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கை அகதிகள் வெளியேற்றப்பட வேண்டும் என்ற கருத்தும் இந்தியாவில் முன்வைக்கப்பட்டுள்ள காரணத்தினால் தமிழகத்தில் இது குறித்த கருத்து முன்வைப்புகள் மற்றும் விவாதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் இலங்கை அகதிகள் விடயத்தில் தமிழ் தரப்பின் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளதென வினவிய போதே இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், அகதிகள் விடயத்தில் நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகின்றோம். குறிப்பாக இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் விடயத்தில் அவர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம். இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தொடர்புபட்டுள்ள ஒன்றாகும். அதாவது அகதிகள் விடயத்தில் அவர்களின் அக்கறையும் உள்ளது. அத்துடன் இந்திய அரசாங்கமும் இது குறித்து சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நாம் தொடர்ச்சியாக அவர்களிடம் முன்வைத்து வருகின்ற காரணியாகும். இன்றும் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்தியாவில் அகதிகளாக உள்ளனர். அவர்களை இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னைய ஆட்சியின் போதும் நாம் கூறினோம். அவர்களின் முழுமையான விருப்பத்துடன் அவர்களை இங்கு வரவழைக்கும் வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார். https://www.virakesari.lk/article/70998
-