Sign in to follow this  
ampanai

கோரிக்கைகளை நிராகரிக்கும் கோத்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லை - மாவை

Recommended Posts

 J Anojan on 2019-10-20 18:02:45

(ஆர்.யசி)

தமிழ் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளை நிராகரிக்கும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன்  பேச்சுவார்த்தை நடத்த தாயரில்லை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.

maavai.jpg

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் நியாயமான நிலைப்பாடுகள், அவர்களின் பிரச்சினைகள், அவர்களின் எதிர்பார்ப்பு என்பவற்றை உள்ளடக்கியதாகவே எமது 13 அம்சக்கோரிக்கைகளை முன்வதோம். அவ்வாறு இருக்கையில் எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர் யாரோ அவர்களுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம். 

இது குறித்து ஆராய எமது கோரிக்கைகளை உருவாக்கிய ஐந்து தமிழ் கட்சிகளும் இந்த வாரத்தில் கூடி ஆராயவுள்ளோம். எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் கூடவுள்ள நிலையில் இந்த வாரத்தில் ஒரு தினத்தில் நாம் ஐந்து கட்சிகளும் கூடி ஒரு உறுதியான நிலைப்பாட்டினை எட்டுவதுடன் அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுக்கவுள்ளோம். 

எம்முடன் பேச தயாராக உள்ள கட்சிகளையும் சந்தித்து நிலைப்பாடுகள் குறித்து ஆராய்வோம். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எமது கோரிக்கைகளை ஆராய்ந்துள்ளாரா  என எமக்கு தெரியவில்லை. ஆனால் எம்முடன் பேச தயாராக உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். எனவே நாம் அவருடன் பேசுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/67248

’TNA யோசனைகளை நிராகரிக்கின்றோம்’: பந்துல

ஜனாதிபதி வேட்பாளரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள யோசனைகள் முற்றாக நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (20) முற்பகல் கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள யோசனைகளை முற்றாக நிராகரிப்பதே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு என்று தெரிவித்த அவர், எதிர்தரப்பு வேட்பாளர்களும் அதே விதமான நிலைப்பாட்டையே வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/TNA-யசனகள-நரகரககனறம-பநதல/175-240214

Edited by ampanai

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ampanai said:

தமிழ் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளை நிராகரிக்கும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன்  பேச்சுவார்த்தை நடத்த தாயரில்லை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.

அப்பிடியே கோரிக்கைகளை ஏற்காத ஆக்களோடையும் பேச்சுவார்த்தை நடத்த தாயரில்லை என்டு அறிவிக்கின்ற தில் இருக்கா மாவைக்கு?

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this