Jump to content

பேரம் பேசி உரிமை பெற ஒட்டகம் தான் முஸ்லீம்களின் தெரிவாக இருக்கும் :


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG_ORG_1571581359420.jpeg

 

 

பேரம் பேசி உரிமை பெற ஒட்டகம் தான் முஸ்லீம்களின் தெரிவாக இருக்கும் : 

மகளிரணி தலைவி ஹஸ்மியா !
 
(அபு ஹின்சா )
 
 35 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில் முஸ்லீம்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய ஒருவராக இருப்பவர் முன்னாள் ஆளுநர் எம்.எல். எ. எம். ஹிஸ்புல்லா அவர்கள் மட்டுமே. 
 
பாட்டு போட்டு ஓட்டு கேட்கும் கட்சிகள் இந்த சமூகத்துக்கு செய்த சேவைகளை விட ஆளுநராக இருந்த எமது முஸ்லிம் வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் செய்த சேவைகள் அதிகம்.என பிரச்சார குழு மகளிரணி தேசிய அமைப்பாளர் வைத்தியர் ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். 
 
அக்கரைப்பற்றில் இன்று பகல் நடைபெற்ற மகளிர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றிய போது,
 
கடந்த முறை நாம் சிறுபான்மை இன ஒற்றுமையை வலியுறுத்தி ஜனாதிபதியாக மைத்திரியை கொண்டுவந்தோம். ஆனால் முந்தைய ஆட்சியை விட இந்த ஆட்சியில் தான் மினுவாங்கொட தாக்குதல் நடத்தி அதிக சொத்துக்கள் சேதமானது. செய்வதை எல்லாம் செய்துவிட்டு கோத்தாபாயவை குற்றம் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. 
 
தலைவர் அஷ்ரப் அவர்களின் வழியில் எமது வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பெண்களின் கல்வியறிவு, பாதுகாப்பு ,சேவைகள் என்பவற்றில் கரிசனையுடன் செயலாற்றும் திறன் கொண்டவர். தொடர்ந்தும் எமது பெண்களின் உரிமைகள் பறிபோகும் நிலைக்கு நாம் இடம் கொடுக்க முடியாது. 
 
எமது முஸ்லிம் மக்களுடைய வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஜனாதிபதியை தீர்மானிக்கும் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். எங்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தப்பட்டுள்ளது. அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்க நாம் எமது வாக்கை ஒட்டகத்துக்கு வழங்க வேண்டும்.
 
சமூகத்துக்கு அநீதி நடக்கும் போது ஒற்றுமைபட முடியாத எமது முஸ்லிம் தலைவர்கள் இப்போது அன்னத்தில் ஒற்றுமை பட்டுள்ளார்கள்.  இவர்களின் ஒற்றுமை நிலைக்காது. என்றார்.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ புல்லாவின் உதவியாலை டாக்டராகிட்டா.....ஒட்டகம் இருந்தால்தான் இவவாலை சமாளிக்க முடியும்..இவரைபோல எத்தனையோ டாக்டை ,எந்திரி எல்லாம் இந்த பச்சோந்தி அமைச்சர்களின் உதவியால் உருவாகி இருக்கிறார்கள்... முட்டாக்குப் போட்டபின் பரீட்சை எழுதும் திறமையை இலகுவாக்கியவர்கள்...

Link to comment
Share on other sites

ஹிஸ்புல்லாவுக்கு 20000 - 23000 வரையான வாக்கு வங்கி உள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக எவ்வளவு வாக்குகளை பிரிப்பார் என தெரியவில்லை.

தனக்கு வாக்களிப்போரை இரண்டாம் விருப்ப தெரிவுக்கு கோத்தாவுக்கு போடுமாறு கூறலாம். 

ஹிஸ்புல்லாவுக்கும் கோத்தாவுக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் செய்தி உலாவுகிறது. அதை நாமல் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச போன்றோர் மறுத்துள்ளார்கள்.

ஒப்பந்தம் உண்மையோ இல்லையோ கோத்தாவை வெல்ல வைக்க தான் களமிறங்கியுள்ளார்.

Link to comment
Share on other sites

13 hours ago, alvayan said:

இவ புல்லாவின் உதவியாலை டாக்டராகிட்டா.....ஒட்டகம் இருந்தால்தான் இவவாலை சமாளிக்க முடியும்..இவரைபோல எத்தனையோ டாக்டை ,எந்திரி எல்லாம் இந்த பச்சோந்தி அமைச்சர்களின் உதவியால் உருவாகி இருக்கிறார்கள்... முட்டாக்குப் போட்டபின் பரீட்சை எழுதும் திறமையை இலகுவாக்கியவர்கள்...

ஹிஸ்புல்லா வேறு கல்வித் தந்தையாம். 🤣

EHAEOqeW4AAdi_y?format=jpg&name=medium

Link to comment
Share on other sites

திருநாட்டில் இலவச கல்வியை 'பட்டி காம்பஸ்' மூலம் அடுத்த 'லெவலு'க்கு கொண்டுசென்றதால் இவர் இன்றுமுதல் 'கல்வித்தந்தை' என அழைக்கப்படுவாராக   😜

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
On 10/21/2019 at 4:05 PM, Lara said:

ஹிஸ்புல்லாவுக்கு 20000 - 23000 வரையான வாக்கு வங்கி உள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக எவ்வளவு வாக்குகளை பிரிப்பார் என தெரியவில்லை.

இம்முறை 38,814 வாக்குகளை பெற்றிருந்தார்.

Link to comment
Share on other sites

image_0bb9322108.jpg

புதிய ஜனாதிபதி கோட்டாப ராஜபக்‌ஷவின் பதவியேற்பு விழா, பிரமாண்டமான முறையில், வரலாற்று முக்கியத்துவமிக்க அநுராதபுரம் ருவான்வெலி மகாசாயவில் இன்று (18) நடைபெற்றது. இதில், ஜனாதிபதி வேட்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும் பங்கேற்றிருந்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஹஸபலலஹவம-பஙகறறர/175-241166

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ampanai said:

image_0bb9322108.jpg

புதிய ஜனாதிபதி கோட்டாப ராஜபக்‌ஷவின் பதவியேற்பு விழா, பிரமாண்டமான முறையில், வரலாற்று முக்கியத்துவமிக்க அநுராதபுரம் ருவான்வெலி மகாசாயவில் இன்று (18) நடைபெற்றது. இதில், ஜனாதிபதி வேட்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும் பங்கேற்றிருந்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஹஸபலலஹவம-பஙகறறர/175-241166

அவரை உள்ளுக்குள்ள விடேல்ல என்று ஒரு கதை அடிபடுது 

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

அவரை உள்ளுக்குள்ள விடேல்ல என்று ஒரு கதை அடிபடுது 

ஹிஸ்புல்லா பொதுஜன பெரமுனவுடன் வெளிப்படையாக கூட்டணி வைக்க முயன்ற போது சில பிக்குகள் எதிர்த்ததால் தான் கோத்தபாய அவரை தனி வேட்பாளராக களமிறக்கினார் என முன்பு வாசித்தேன்.

இன்றும் பிக்குகள் அவரை தடுத்ததாக வாசித்தேன். 

Link to comment
Share on other sites

ஹிஸ்புல்லாவின் ஊடகப்பிரிவு இப்படி சொல்லுது. எது உண்மையோ தெரியவில்லை.

“ஜனாதிபதி செயலாளரது உத்தியோகபூர்வ அழைப்புக்கு அமைய அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்துகொண்டிருந்தார்.

அவர் மேற்படி நிகழ்வுக்கு உட்செல்லும்போது எடுக்கப்பட்ட ஒளிப்படமொன்றினை வைத்து போலியான செய்தியொன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கே மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டார்கள். மாறாக கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை மிகவும் மரியாதையுடன், நாகரீகமாக வரவேற்றிருந்தனர்”

https://yarl.com/forum3/topic/234413-ஜனாதிபதியின்-பதவியேற்பு-நிகழ்வில்-பங்கேற்றமை-குறித்து-ஹிஸ்புல்லா-விளக்கம்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.