Jump to content

இனவாத முதலீடு - பி.மாணிக்கவாசகம்….


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனவாத முதலீடு - பி.மாணிக்கவாசகம்….

October 21, 2019

தேர்தல்தான் ஜனநாயகத்தின் உயிர்நாடி. அதற்கு ஆதாரமாக இருப்பது வாக்குரிமை. மக்கள் தமக்குரிய ஆட்சியாளர்களைத் தெரிவு செய்வதற்கு இந்த வாக்குரிமையின் மூலம்தான் வழிசெய்யப்பட்டுள்ளது. இந்தத் தெரிவுரிமை சுதந்திரமானது. நிர்ப்பந்தங்கள் அற்றதாக அமைந்திருத்தல் அவசியம் என்பது ஜனநாயகத்தின் கோட்பாடு.

ஆட்சியை நிலைநிறுத்தக் கூடிய தேர்தல் முறையிலான இந்த வாக்குரிமையை மக்கள் அடிக்கடி பயன்படுத்த முடியாது. தேர்தல்களின்போது மட்டுமே பயன்படுத்த முடியும். அப்போதுதான் அது மிகவும் வலிமை பெற்றிருக்கும். ஜனநாயகத்தின் இந்த உன்னதமான அம்சத்தை, உன்னதமான உரிமையை மக்கள் பயன்படுத்தத் தவறக்கூடாது. ஏனெனில் ஆட்சிமைப்பதற்கு உள்ள ஒரேயொரு ஆதாரம் இந்த வாக்குரிமை மட்டுமே. அதனால் அதனை வீணடிக்கக் கூடாது.

இருப்பினும் மிக மிக அவசியமான சந்தர்ப்பத்தில் வாக்குரிமையைப் பயன்படுத்தாமல், தேர்தலைப் புறக்கணிப்பதன் ஊடாகவும் வாக்காளர்களாகிய மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்த முடியும். இந்த வகையில் ஆட்சி பொறுப்பை ஏற்று நடத்துகின்ற அரசியல்வாதிகளின் போக்கிற்கு எதிரான தமது நிலைப்பாட்டைப் புலப்படுத்த முடியும்.

பயன்படுத்துவதன் மூலமும், அதனைப் பயன்படுத்தாமல் தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலமும் நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்க வல்ல சக்தியாகத் திகழ்வது வாக்குரிமையே. இது ஜனநாயத்தின் மிகச் சிறப்பான அம்சமாகும்.

இத்தகைய பலம் வாய்ந்த வாக்குரிமையை பயன்படுத்துவதா இல்லையா என்று ஒரு சாராரை தீவிரமாகச் சிந்திப்பதற்கு இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தல் கால அரசியல் நிலைமைகள் உந்தித் தள்ளி இருக்கின்றன.

இந்தத் தேர்தல் கால அரசியல் நிலைமைகள் மட்டுமல்லாமல், நாட்டின் அதிஉயர் தலைவராகிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் களத்தில் இறங்கியுள்ள வேட்பாளர்கள் கொண்டுள்ள நிலைப்பாடுகளும்கூட இதற்குக் காரணமாகி உள்ளன.

கருத்துறவு

தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் மக்களுடைய ஆதரவைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அல்லது மக்களின் ஆதரவைப் பெறக் கூடியவர்களாக இருத்தல் அவசியம். வேட்பாளர்கள் இந்தத் தகுதியைப் பெற்றிராவிட்டாலும், வெற்றி பெறுபவர்கள் தங்களுக்காகச் செயற்படுவார்கள், தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்கள். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வல்லவர்களாக இருத்தல் வேண்டும். இத்தகைய ஒரு நிலையில்தான் வாக்காளர்களாகிய நாட்டு மக்கள் போட்டியிடுபவர்களில் தங்களுக்குச் சரியான ஒருவரைத் தெரிவு செய்து வாக்களிக்க முடியும்.

வாக்காளர்களைக் கவர்ந்திழுத்து வாக்குகளை அள்ளிக் குவித்துக் கொள்வதற்காக வேட்பாளர்கள் தேர்தல் பரப்புரைகளில் தமது கொள்கை விளக்கங்களை அளிப்பார்கள். வாக்காளர்கள் சரியான ஒருவரைத் தெரிவு செய்வதற்கு இந்த கொள்கை விளக்கங்கள் உறுதுணையாக அமைகின்றன.

கொள்கை விளக்கங்களுடன் தமது பிரச்சினைகளுக்கும் எதிர்பார்ப்புக்கள் மற்றும் தமது அரசியல் அபிலாசைகளுக்கும் வேட்பாளர்கள் என்ன வகையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள் என்பiதைத் தெரிந்து கொள்வதற்கும் வாக்காளர்கள் ஆர்வம் கொண்டிருப்பார்கள். இது தேர்தல் கால இயல்பு.

வெறும் கொள்கை மட்டத்திலான பரப்புரைகள் பொதுமக்களைச் சென்றடையமாட்டா. வாக்காளர்களைப் பற்றியும் அவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றியும் தேர்தல் பரப்புரைகளில் அளிக்கப்படுகின்ற முக்கியத்துவத்திலேயே வெற்றியின் இரகசியம் தங்கியுள்ளது.
வாக்காளர்களாகிய பொதுமக்களைப் பற்றியும், அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது பற்றியும் வேட்பாளர்கள் கொண்டிருக்கின்ற அக்கறையும், அவற்றுக்கு அளிக்கின்ற முக்கியத்துவமுமே இரு சாராரையும் ஒன்றிணைக்க முடியும். தேர்தல் காலத்தில் வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் இடையில் இதனடிப்படையில் ஒரு கருத்துறவு நிலவ வேண்டியது அவசியம். நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களையும் தேவைகளையும் அபிலாசைகளையும் வேட்பாளர்கள் எவ்வாறு நிறைவேற்றப் போகின்றார்கள் என்பதிலேயே இந்தக் கருத்தொற்றுமை நிலைகொண்டிருக்க முடியும். இந்தக் கருத்தொற்றுமை இல்லையேல் வாக்காளர்கள் வேட்பாளர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள்.

வாக்காளப் பெருமக்களுடைய எதிர்பார்ப்புக்கள், தேவைகளுக்கு அப்பால் உலக ஓட்டத்திற்கமைவாக புதிய விடயங்களைச் செயற்படுத்த வேட்பாளர்கள் விரும்பக் கூடும். அத்தகைய விடயங்களின் அவசியம், அவற்றால் விளையக்கூடிய நன்மைகள் என்பவற்றை தெளிவுபடுத்தி பொதுமக்களின் ஆதரவையும் அங்கீகாரத்தை வாக்குகளின் ஊடாகப் பெற்றுக் கொள்வதும் வேட்பாளர்களின் சாதுரியமான பிரசாரத்திலேயே தங்கியுள்ளது.

தேர்தலில் சுதந்திரம் நீதி நியாயம்

தேர்தல் சுதந்திரமாகவும், நீதியாகவும் நியாயமாகவும் நடைபெற வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. அதுவே ஜனநாயக விதியும்கூட. சுதந்திரம், நீதி, நியாயம் என்பன தேர்தலில் வாக்களிக்கும் தருணத்தில் மாத்திரம் கடைப்பிடிக்கப்படுவதல்ல. அது தேர்தல் காலம் முழுவதும் நீடித்திருக்க வேண்டும்.

தேர்தலில் பங்கேற்கின்ற சகல தரப்பினருக்கும் இந்த மூன்று நிலைப்பாட்டையும் கைக்கொண்டு அதன்படி ஒழுக வேண்டியது அவசியம். அப்போதுதான் ஒரு தேர்தல் உண்மையான ஜனநாயக முறைப்படி நடந்ததாகவும், சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெற்ற தேர்தல் என்ற முடிவுக்கு வர முடியும்.

தேர்தலில் சுதந்;திரம் என்பது, தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். தேர்தலுக்கான பரப்புரைகளை மேற்கொள்வது வாக்காளர்களுக்கு உண்மைகளை எடுத்துக் கூறுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் வேட்பாளர்கள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கான சூழல் இருக்க வேண்டும்.

வேட்பாளர்கள் அனைவரும் சுதந்திரமாகவும் தனித்துவத்துடனும் தனித்துவமாகவும் செயற்படக் கூடியதாக இருத்தல் அவசியம். ஒரு வேட்பாளரை மற்றுமொரு வேட்பாளர் அச்சுறுத்தி அடக்கி ஒடுக்கவோ மேலாண்மை கொண்ட நிலையில் செயற்படுவதற்கோ எவருக்கும் உரிமை கிடையாது. உடல் ரீதியான செயற்பாடுகள் மட்டுமன்றி பரப்புரைகளின் ஊடாகக்கூட எவரும் எவரையும் அச்சுறுத்தும் வகையிலோ அல்லது அவர்களின் தேர்தல்காலச் செயற்பாடுகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலோ பிரசாரம் செய்வதற்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கும் உரிமை கிடையாது. அது சுதந்திரமாகாது. தனித்துவமான செய்றபாடாகாது, நியாயமான தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலாகவே அது அமையும். உண்மையில் அது தேர்தல் கால நடைமுறைகளுக்கு சட்டவிரோதமானதாகும்.

தேர்தலில் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்திற்காகப் பொய்யான பரப்புரைகளைச் செய்வதும் உண்மைக்கு மாறான கருத்துக்களைப் பரப்புவதும், பொதுமக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பத் தக்க வகையிலான கருத்துக்களை வெளியிடுவதும்கூட நீதியான நியாயமான தேர்தல் பரப்புரை நடவடிக்கையாக அமைய மாட்டாது. குறிப்பாக நாட்டு மக்களின் ஒரு பிரிவினர் அச்சம் கொள்ளத்தக்க வகையில் கருத்துக்களை வெளியிடுவது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலாகக் கவனத்திற் கொள்ள வேண்டியது அவசியம்.

ஏனெனில் வாக்களிப்பதற்காக எதிர்பார்த்திருக்கின்ற நாட்டு மக்கள் எவரும் பீதியுணர்வுக்கு உள்ளாக்கப்படக் கூடாது. அவ்வாறு பீதியடையச் செய்யும் கருத்துக்களை வெளியிடுவதும், அவற்றையே தமது தேர்தல் வெற்றிக்கான கருப்பொருளாகக் கொண்டிருப்பதும் சுதந்திரமான தேர்தலுக்கு வழிவகுக்க மாட்டாது. அத்தகைய தேர்தல் சூழலை ஏற்படுத்துவது நீதியான நியாயமான தேர்தலுக்கு முரணானதாகவே அமையும். தேர்தல் சட்டவிரோதமாகவும் கருதப்பட வேண்டும்.

கசப்பான அரசியல் யதார்த்தம்

ஆனால் நாட்டின் தேர்தல் நிலைமைகள் சுதந்திரமான நீதியான நியாயமான ஒரு தேர்தலுக்கான சூழலை இல்லாமல் செய்வதற்கே வழிவகுத்து வருவதாகத் தெரிகின்றது. குறிப்பாக பிரதான வேட்பாளர்கள், சிறுபான்மை இன மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கான கருத்துக்களை வெளியிடுவதில் இருந்து விலகி இருப்பதையே அவதானிக்க முடிகின்றது.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வையே சிறுபான்மை இன மக்கள் முக்கிய பிரச்சினையாகவும் அரசியல் அபிலாசையாகவும் கொண்டிருக்கின்றார்கள். அரசியல் தீர்வு காண்பதற்கான வழிமுறை என்ன என்பதுவும், அவர்கள் எதிர்கொண்டுள்ள யுத்தத்தின் பின்னரான அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ன என்பதுவுமே அவர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த அபிலாசைகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் வேட்பாளர்களின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதே அவர்களின் முன்னால் நிமிர்ந்து எழுந்துள்ள முக்கியமான கேள்வியாகும். ஆந்தக் கேள்விக்கு ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடம் இருந்து நேரடியான பதில் எதுவும் வெளியாகவில்லை. நேர்மையான நிலைப்பாடு எதுவும் வெளிப்படுத்தப்படவும் இல்லை.

மாறாக பிரதான வேட்பாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகின்ற கோத்தாபாய ராஜபக்சிடமிருந்து எதிர்மறையான நிலைப்பாடே வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. அரசியல் கைதிகளாக சிறைச்சாலைகளில் பல ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாகக் கவனிப்பாரின்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

அதேபோன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையும், இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற பிரச்சினையும் நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்சினைகள் மாறி மாறி வந்த அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்தைக் கடந்து நிரந்தரமான நிலையில் நிமிர்ந்து நிற்கின்றன.

இராணுவ நலன்சார்ந்த எதேச்சதிகாரப் போக்கிலான அந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, இரண்டு பிரதான கட்சிகளையும் உள்ளடக்கிய நல்லாட்சி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போதிலும் வாய்ப்ந்தலிடுவதிலேயே புதிய ஆ;ட்சியாளர்கள் கவனமாக இருந்தனர். அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அவற்றைப் புறந்தள்ளிச் செயற்படுவதிலேயே குறியாக இருந்தனர். இதனால் நல்லாட்சி அரசாங்கத்திலாவது விமோசனம் கிடைக்கும் என்ற அவர்களின் எதிரபார்ப்பு ஆகாயக் கோட்டையாகச் சரிந்து போனது.

இத்தகைய பின்புலத்தைக் கொண்ட ஜனாதிபதி தேர்தலும்கூட அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கத்தக்கதாகவோ அல்லது ஆறுதல் அளிக்கத்தக்கதாகவோ அமையவில்லை என்பதே கசப்பான அரசியல் யதார்த்தமாக உள்ளது.

இனவாதத் தேர்தல் முதலீடு

தேர்தல் களத்தில் வலம் வருகின்ற முக்கியமான மூன்று வேட்பாளர்களும் சிறுபான்மை இன மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத வகையிலும், பேரின மக்களின் நலன்கiளில் அதிக நாட்டம் கொண்ட வகையிலுமே கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

தேர்தல் பரப்புரை என்பது ஒருபக்கம் சார்ந்ததாக அமைவது வேட்பாளர்களுக்கு நல்லதல்ல. அதேபோன்று வாக்காளர்களாகிய நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல. அத்தகைய பரப்புரை பெரும்பான்மையான மக்களை பிழையான முறையில் வழிநடத்துவதாகவே அமையும். அது நாட்டின் எதிர்காலத்திற்கும் நாட்டு மக்களின் ஒருமைப்பாட்டுக்கும் பாதகமாகவே அமையும்.

யுத்த நிலைமைகள் தொடர்ந்திருந்த முப்பது வருடங்களுக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் நாட்டின் இனங்களுக்கிடையில் சந்தேகமும், அச்ச உணர்வுமே மேலோங்கி இருந்தன. தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைக்காகவே போராடினார்கள். அந்தப் போராட்டத்தின் வளர்ச்சிப் படிமுறையாகவே ஆயுதப் போராட்டம் கிளர்ந்திருந்தது. அந்த அரசியல் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்த ஆட்சியாளர்கள், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, பயங்கரவாதத்தை முறியடித்துவிட்டதாகக் கொண்டாடினார்கள். இன்னும் கொண்டாடுகின்றார்கள். ஜனாதிபதி தேர்தலிலும் கூட அந்தக் கொண்டாட்டத்தையே பிரசாரப் பொருளாகக் கொண்டிருக்கின்றார்கள்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கமும், ஐக்கியமும், ஒருமைப்பாடும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆட்சியாளர்கள் அவற்றை உருவாக்கவில்லை. ஒழிக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு மாய உருவம் கொடுத்து நாட்டின் பெரும்பான்மை இன மக்களை ஓர் அச்சநிலையில் வைத்து இனங்களுக்கிடையில் பிரிவினையையும், கசப்புணர்வையும், நம்பிக்கையற்ற நிலைமையையும் உருவாக்குவதிலேயே குறியாக இருக்கின்றார்கள்.

நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் உருவாக்கி சுபிட்சத்தை நோக்கி வழிநடத்திச் செல்லவேண்டிய பேரின அரசியல் கட்சிகளும் கட்சித் தலைவர்களும், அரசியல்வாதிகளும் இனவாதத்தையே முதலீடாகக் கொண்டு தேர்தல் வெற்றிக்கான பாதை அமைப்பதில் தீவிரமாக உள்ளார்கள். இந்த இனவாதமே விசுவரூபமெடுத்து தேர்தல் களத்தை விழுங்கிக் கொண்டிருக்கின்றது.

நீண்ட நெடுங்காலமாக சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்ச கரிசனை கொள்ளவில்லை. மாறாக, தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளின் ஊடாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளான இராணுவத்தினரை, தேர்தலில் வெற்றி பெற்ற மறுநாளே விடுதலை செய்யப் போவதாக சூளுரைத்துள்ளார்.

முழுப்பூசணிக்காயை மறைக்கும் முயற்சி

அதனை அவரால் செய்ய முடியுமா முடியாதா என்பது ஒரு புறமிருக்க அவருடைய இந்தக் கூற்றினால் விடுதலைக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்ற அரசியல் கைதிகளினதும், அவர்களது உறவுகளினதும் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை அவர் சிந்திக்கத் தவறிவிட்டார். ஜனாதிபதி என்ற நாட்டின் அதி உயர் அரச தலைவரானவர் நாட்டு மக்கள் அனைவருக்கும் உரியவர். ஆவர் ஓர் இனத்திற்கு மாத்திரம் உரியவர் அல்ல. பெரும்பான்மை இன மக்களுக்கு மாத்திரம் சேவை செய்பவராக நாட்டின் அரசியலமைப்பில் ஜனாதிபதி பதவி வடிவமைக்கப்படவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இறுதி யுத்தத்தின்போது விடுதலைப்புலிகளை வெற்றிகொள்வதற்காக அளவுக்கு மிஞ்சியஇராணுவ பலம் பிரயோகிக்கப்பட்டது. மனித உரிமைகள் மோசமான மீறப்பட்டன. சர்வதேச மனிதாபிமான சட்ட நெறிமுறைகள் மீறப்பட்டன என்பது சரவ்தேசத்தினதும், ஐநா மனித உரிமைப் பேரவையினதும் குற்றச்சாட்டுக்களாகும்.

அந்தப் போர்க்குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே அவற்றுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என்பதற்கான பிரேரணைகள் படிப்படியாக ஐநா மனித உரிமைப் பேரவையில் உறுப்பு நாடுகளாகிய சர்வதேச நாடுகளினால் முன்வைக்கப்பட்டு, அவற்றுக்கு அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கியது. அதன் தொடர்ச்சியாக நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கான பொறிமுறைகளை உருவாக்கிச் செயற்படுவதற்கும் ஒப்புதலும் உத்தரவாதமும் அரசனால் வழங்கப்பட்டன. அதன் வழியில் பல்வேறு நடவடிக்கைகளையும் ஆமை வேகத்தில் அரசு முன்னெடுத்திருந்தது.

ஆனால் தேர்தல் பிரசாரத்தில் செய்தியாளர்களுடனான முதலாவது சந்திப்பில் ஐநா பிரேரணைகளை தான் ஆட்சிக்கு வந்தால் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அந்தப் பிரேரணைகள் சட்டவிரோதமானது என வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்ச அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார். இது .இந்த நாட்டின் இறைமையை மதிக்கின்ற சர்வதேச நாடுகளை முகம் சுழிக்கச் செய்துள்ளது. ஐநாவையும் இலங்கையின் நிலைமைகள் குறித்து யோசிக்கச் செய்துள்ளது.

இறுதி யுத்தத்தின்போது அரசாங்கத் தீர்மானத்திற்கமைய இராணுவத்தின் அழைப்பில் படை அதிகாரிகளிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் அனைவரும் புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்துவிட்டதாக கோத்தபாயாக இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். இது சோற்றில் முழுப் பூசணிக்காயை மறைக்க முயல்கின்ற ஊசிப்போனதொரு முயற்சியாகும்.

ஜனநாயகத் தேர்தலா அல்லது தீவிரவாதத் தேர்தலா?

இராணுவத்திடம் சரணடைந்தவர்களில் பதினோராயிரம் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை அரசு புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்துள்ளது என்பது உண்மைதான். ஆனால் தங்களது குடும்ப உறவினர்களினால் இராணுவத்திடம் இறுதி யுத்தத்தின்போது கையளித்தவர்களில் பலருக்கு என்ன நடந்தது என்பதற்குப் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு அவருக்கு உள்ளது என்பதை அவர் வசதியாக மறந்துவிட்டார் போலும்.

சுரணடைந்ததன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இருபதுக்கும் மேற்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த விசாரணைகளில் கண்கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ள உறுதியான சாட்சியங்களுக்கு இராணுவத்தினரால் உரிய பதிலளிக்க முடியவில்லை. இந்த நிலையில் சரணடைந்தவர்கள் எல்லோரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள். காணாமல் போனவர்கள் என்று எவரும் கிடையாது என்று வேட்பாளர் கோத்தாபாய சுறியிருப்பதை நியாயமான தேர்தல் பிரசாரத்துக்குரிய கூற்றாகக் கொள்ள முடியாது.

சிறுபான்மை இன மக்களைப் புறந்தள்ளி பெரும்பான்மை இன மக்களின் வாக்குகளில் மட்டுமே தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்க முடியும் என்ற மேம்போக்கிலான பிரசார நடவடிக்கைகளிலும் கருத்து நிலைப்பாட்டிலும் வேட்பாளர்கள் ஈடுபட்டிருக்கின்றார்கள். ஒப்புக்காக சிறுபான்மை மன மக்களின் வாக்குகளில் தங்கியிருப்பது போன்று அவர்கள் காட்டிக்கொண்டாலும் பொதுவாகவே இனவாதம் இழையோடிய தேர்தல் பிரசாரமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் இந்த ஜனாதிபதி தேர்தல் ஜனநாயகத் தேர்தலா அல்லது தீவிரவாதத் தேர்தலா என்ற ஐயப்பாட்டையே எழுப்பியுள்ளது.
 

http://globaltamilnews.net/2019/132167/

Link to comment
Share on other sites

"யுத்த நிலைமைகள் தொடர்ந்திருந்த முப்பது வருடங்களுக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் நாட்டின் இனங்களுக்கிடையில் சந்தேகமும், அச்ச உணர்வுமே மேலோங்கி இருந்தன. தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைக்காகவே போராடினார்கள். அந்தப் போராட்டத்தின் வளர்ச்சிப் படிமுறையாகவே ஆயுதப் போராட்டம் கிளர்ந்திருந்தது. அந்த அரசியல் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்த ஆட்சியாளர்கள், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, பயங்கரவாதத்தை முறியடித்துவிட்டதாகக் கொண்டாடினார்கள். இன்னும் கொண்டாடுகின்றார்கள். ஜனாதிபதி தேர்தலிலும் கூட அந்தக் கொண்டாட்டத்தையே பிரசாரப் பொருளாகக் கொண்டிருக்கின்றார்கள்"

சிங்களத்திடம் வேறு எதுவுமே இல்லை, முதலீடாக மக்கள் முன்னிலையில் வைப்பதற்கு 😞 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.