இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்கவுடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களிலிருந்தும் விலகுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை முடிவுசெய்துள்ளது.

chandika-hathurusingha-gett-1548838216.j

அடுத்தவாரம் சந்திக ஹத்துருசிங்க இந்த ஒப்பந்தங்களிலிருந்து நீக்கப்படுவார் என இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணி சோபிக்கத் தவறியதை அடுத்து, பங்களாதேஷுடனான ஒரு நாள் தொடருக்குப் பின்னர், பயிற்றுவிப்பு குழாமை நீக்குமாறு விளையாட்டு அமைச்சரினால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு உத்தரவு விடுக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னணியிலேயே இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஹத்துருசிங்க நீக்கப்பட்டு, புதிய  இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ருமேஸ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டார்.

இந் நிலையில் தற்போது இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மிக்கி ஆர்தர், மார்க் ராம்பிரகாஷ் உள்ளிட்டோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/67286