Sign in to follow this  
பிழம்பு

வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை - த.தே.கூ.

Recommended Posts

(ஆர்.யசி)

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது வெற்றியை உறுதிப்படுத்த தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தான் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமே தவிர ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

sumanthiran.jpg

தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள 13 அம்சக் கோரிக்கைகள் எமக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த கோரிக்கைகள் தொடர்பில் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவருடனும் பேச நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். 

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுகொள்ள வேண்டும். 

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழர் பிரதிநிதிகளாகிய எமது நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்ள பிரதான கட்சிகள் ஆவலாக உள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தினமான  31 ஆம் திகதிக்கு முன்னர் எமது  நிலைப்பாட்டை அறிவிப்போம். அதற்கிடையில் நாம் ஐந்து தமிழ் கட்சிகளும் மீண்டும் இந்த வாரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/67316

Share this post


Link to post
Share on other sites

பார்க்கலாம் இது இராசதந்திரமா இல்லை சுமந்திரமா என்று. 


"பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது வெற்றியை உறுதிப்படுத்த தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தான் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமே தவிர ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்."

 

Share this post


Link to post
Share on other sites

தேடிச்சென்று சந்திக்கமாட்டோம் என்ற மார்தட்டல் காண்மின்களோ

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஐந்து தமிழ்க் கட்சி கள் உடன்பட்டு ஒப்பமிட்ட 13 அம்சக் கோரிக்கைகள் பற்றிய எதிர்ப்பிரசாரம் தென்பகுதியில் சூடு பிடித்துள்ளது.

ஐந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு 13 அம்சக்கோரிக்கைகளை முன்வைப்பது ஏதோ தனிநாட்டுக் கோரிக்கைக்கானது போல பிரசாரங்கள் முழங்கத் தொடங்கியுள்ளன.

சுருங்கக்கூறின் இனவாதத் தீயை மூட்டி எரித்து இந்த நாட்டை அழித்துக்கட்டுகின்ற முயற்சிகள் நடக்கின்றன எனலாம்.

நிலைமை இதுவாக இருக்கையில், ஜனாதிபதி வேட்பாளர்களைத் தேடிச் சென்று அவர் களுக்குப் பின்னால் ஓடிப்போய் சந்திக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.

நல்லது தொழுதுண்டு பின்செல்லாப் பண்பாடு நம் தமிழினத்துக்குரியது என்ற வகை யில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்கலாம்.

ஆனால் இந்த நிலைப்பாட்டை கூட்டமைப்பு எப்போது எடுத்தது என்பதுதான் கேள்வி.

ஐந்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு தமிழ் மக்கள் சார்பில் 13 அம்சக்கோரிக்கை களை முன்வைப்பது என்று இணங்கிக் கொண்டன.

இவ்வாறு உடன்பட்ட 13 அம்சக்கோரிக்கை யுடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களைச் சந்திப்பதென்றும் இந்தச் சந்திப்பில், ஒப்பமிட்ட ஐந்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றாகப் பங் கேற்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்துக்குப் பின்னர், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் புளொட் அமைப்பும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று அவரைத் தனித்தனியாகச் சந்தித்தன.
இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது.

ஐந்து தமிழ்க் கட்சித் தலைவர்களும் ஒன் றாகச் சேர்ந்து ஜனாதிபதி வேட்பாளர்களை அல்லது அவர்கள் சார்ந்த கட்சித் தலைவர் களைச் சந்திப்பதாகத் தீர்மானம் இருந்த போதிலும் அதுபற்றி எந்தக் கருசனையும் கொள்ளாமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தனித்தனியாகச் சந்திப்பு நடந்தது.

இதை நாம் கூறும்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதித் தேர்தல் பற்றி நாம் கதைக்கவில்லை என்று கூறலாம். ஆனால் அது நம்பக்கூடிய உண்மை அல்ல.

தவிர, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுட னான சந்திப்பில் கதைக்கப்பட்ட விடயம் என்ன என்பது பற்றி தமிழரசுக் கட்சியோ அல்லது புளொட் அமைப்போ எதையும் வெளிப்படுத்த வும் இல்லை.

நிலைமை இதுவாக இருக்கையில், இப்போது ஜனாதிபதி வேட்பாளர்களை வலிந்து சென்று சந்திக்க மாட்டோம். எங்களின் ஆத ரவு தேவை என்றால் - தமிழ் மக்களின் வாக்குகள் தேவை என்றால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எங்களைத் தேடி வந்து சந்திக்கட்டும் எனக் கூட்டமைப்புக் கூறியுள்ளது.

இங்குதான் ஓர் உண்மை வெளிப்படுகிறது. அதாவது ஐந்து கட்சித் தலைவர்களும் ஒன் றாக ஜனாதிபதி வேட்பாளர்களைச் சந்திப்பதை தமிழரசுக் கட்சி விரும்பவில்லை.

எனவே பிரதமர் ரணிலுடன் தனியாகச் சந்தித்த பின்பு, ஐந்து கட்சித் தலைவர்களும் ஒன் றாகச் சந்திப்பதற்கு ஆப்பு வைக்கப்பட்டு விட்டது.

ஜனாதிபதித் தேர்தல் மூலம் எங்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்றால் தேடிச் சென்று சந்திப்பதும் சமயோசித நடவடிக்கையே.

ஆனாலும் ஐந்து கட்சித் தலைவர்களும் ஒன்றுசேர்வதா? அதைக் தடுக்கவே பின்சென்று சந்திக்கோம் என்ற மார்தட்டல்.

http://valampurii.lk/valampurii/content.php?id=19574&ctype=news

Share this post


Link to post
Share on other sites

ஆனால்... ரணிலுக்கு பின்னால் சென்று... அவரின் பதவியை காப்பாற்ற  தயார்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் அறிக்­கையில் சிறு­பான்மை மக்கள் தொடர்­பாக சில விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. ஏனைய வேட்­பா­ள­ரான  கோத்­தாபய சிறு­பான்மை மக்­களின் அர­சியல் அதி­கார பகிர்வு விட­யங்கள் பற்றி எது­வுமே குறிப்­பி­ட­வில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்­சியின் பட்­டி­ருப்புத் தொகுதி தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மட்டு. மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பாக்­கி­யச்­செல்வம் அரி­ய­நேத்­திரன், வீரகேச­ரிக்கு அளித்த பிரத்­தி­யேக செவ்­வியில் தெரி­வித்தார் அவ­ரு­ட­னான முழு நேர்­கா­ணலும் வரு­மாறு, கேள்வி :- தமிழ்க் ­கட்­சி­களின் வெளிப்­ப­டை­யான ஆத­ரவைப் பெறும் வேட்­பாளர் தோற்­க­டிக்­கப்­ப­டுவார் என்ற சூழல் தெற்கில் கட்­ட­மைக்­கப்­பட்ட நிலையில், தமிழ் மக்­களின் செல்­வாக்­குள்ள ஒரு வர் தோல்­வியை தழு­வு­வ­தென்­பது யதார்த்­தம்­தானே, இது தொடர்­பாக தங்கள் கருத்து? பதில்:- தமிழ் மக்­க­ளி­னதும் கூட்­ட­மைப்­பி­னதும் இலங்கைத் தமி­ழ­ர­சு­கட்­சி­யி­னதும் ஆத­ரவு ஒரு ஜனா­தி­ப­தி வேட்பாளருக்கு வழங்­கும்­போது, எதிர்­த்த­ரப்பு இன­வாத பிர­சா­ரங்­களை சிங்­கள மக்கள் மத்­தியில் மேற்­கொள்­வது, நாட்டை பிரிக்­கப்­போ­கி­றார்கள் என தவ­றான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுப்­பது எல்லாம் உண்­மைதான். ஆனால் இது இப்­போது சிங்­கள மக்கள் மத்­தியில் எடு­ப­டாது, காரணம் வடக்கு, கிழக்கு மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதில் தென்­ப­கு­தி­களில் உள்ள சிங்­கள மக்கள் விரும்­பு­கின்­றனர். தமிழ்த் தலை­மைகள் தங்­களின் உரி­மை­களை மட்­டுமே கேட்­கி­றார்கள். நாட்டைப் பிரித்துத் தரு­மாறு கேட்­க­வில்லை என்ற உண்­மையைப் பலர் விளங்­கி­யி­ருக்­கின்­ற                                                                           னர். இருந்த போதும் வெளிப்­ப­டை­யாக ஒரு வேட்­பா­ளரை ஆத­ரிக்­கும்­போது இன­வாத பிர­சா­ரங்கள் தென்­ப­கு­தியில் தலை­தூக்கும் என்­பது யதார்த்­தம்­தானே. அதற்­காக எமது இனப்­பி­ரச்­சினை, அன்­றாட பிரச்­சினை, அபி­வி­ருத்தி, காணாமல் ஆக்கப்­ பட்­டோர்கள் விடயம், போரினால் பாதிக்­கப்­பட்ட தலைமை தாங்கும் பெண்கள் தொடர்­பான வாழ்­வா­தாரம், முன்னாள் போரா­ளிகள் தொடர்­பான வாழ்­வா­தாரம், வேலை வாய்ப்­புகள் என்­பன போன்ற விட­யங்­களை முன்­நி­றுத்­தி­ய­தா­க எந்த வேட்­பாளர் கூடிய அக்­கறை காட்­டு­வ­தற் காக பதில் தரு­கி­றாரோ அவரை ஆத­ரிப்­ப­தற்­கான முடிவை எடுப்­பதில் தவ­றில்லை. அதற்­காக எல்லா விட­யங்­க­ளையும் குறிப்­பிட்ட வேட்­பாளர் தருவார் என்றும் இல்லை. கேள்வி :- ஒருவேளை சஜித் வெற்­றி­யீட்­டினால் அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்த செயல்­முறை முன்­னெ­டுக்­க­ப்ப­டு­வ­தென்­பது சாத்­தி­ய­மா­குமா? பதில்:- சஜித் வெற்றி பெறு­வது, வெற்றி பெறா மல் விடு­வது வேறு விடயம். ஆனால் சஜித் பிரே­ம­தாச முன்­வைத்த தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் அர­சியல் தீர்வுகாண சபை­க­ளுக்­கான அதிகாரப்­ ப­கிர்வு கடந்த முன்னாள் ஜனா­தி­ப­தி­யாக இருந்த பிரே­ம­தாச, சந்­தி­ரிகா, மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் எமது தமிழ்த் தலை­மைகள் அவர்கள் ஊடாக முன்­வைத்து அவர்­களால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட அல்­லது அவர்­களும் கலந்துகொண்டு எட்­டப்­படும் தறு­வாயில் இருந்த தீர்வு யோச­னைகள் அடிப்­ப­டையில் பேச்­சு­வார்­த்தைகள் இடம்பெறும் என்ற விடயம் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதற்­காக தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிடும் வாக்­கு­று­திகள் அமுல்­ப­டுத்­தப்­படும் என்றும் இல்லை. இருந்­த­போதும் அது எழுத்து மூல­மான ஆவ­ண­மாக இருக்கும்போது எதிர்­கால பேச்­சு­வார்த்­தைகள் சில­வேளை சர்­வ­தேச மத்­தி­யஸ்தம் ஒன்­றுக்கு வாய்ப்பு ஏற்­பட்டால் இந்த தேர்தல் விஞ்­ஞா­பனம் அடிப்­படை ஆவ­ண­மாக அமைய வாய்ப்­புள்­ளது. யார் ஜனா­தி­ப­தி­யா­னாலும் அர­சி­ய­ல­மைப்பு முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் அதற்­கான அழுத்­தங்கள் சர்­வ­தேசம் ஊடாக வெற்­றி­பெறும் ஜனா­தி­பதிக்கு வழங்­கப்­படும். கேள்வி :- ஜனா­தி­பதி மைத்­திரி பால­சி­றி­சே­ன வின் ஆட்­சிக்­கா­லத்தில் பெய­ர­ள­வி­லேயே அவர் ­ செயற்­பட்ட நிலையில், இடம்­பெ­ற­வுள்ள தேர்­த லில் ஒருவேளை சஜித் வெற்­றி­யீட்­டினால் தமிழ் ­மக்­க­ளுக்­கான சமூக பொரு­ளா­தார வேலை வாய்ப்பு அபி­வி­ருத்தி முன்னெடுக்கப்படுமா? பதில்:- ஜனா­தி­பதி தேர்­தலில் பெரும்­பான்மை சிங்­கள வேட்­பாளர் ஒரு­வரே ஜனா­தி­ப­தி­யாக தெரி­வாவார். எந்த சிறு­பான்மை வேட்­பா­ளரும் ஜனா­தி­ப­தி­யாக இலங்­கையில் கனவில் கூட வர­மு­டி­யாது. அப்­படி வரு­வ­தானால் 50 சத­வீத வாக்­கு­களை பெற வேண்டும் என்ற விதி மாற்­றப்­பட வேண்டும். சஜித் வெற்­றி­யீட்­டினால் சமூக  பொரு­ளா­தார அபி­வி­ருத்தி வீட்­டுத்­திட்டம் என்­பன முன்­னேறும். கேள்வி :- ஐக்­கிய தேசியக் கட்சி 2010, 2015 களில் நிறுத்­திய பொது­வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வ­ளித்த ஜே.வி.பி., தேசிய மக்கள் சக்­தி­யாக களம் இறங்­கி­யுள்­ள­தனால் தமிழ்க் ­கட்­சி­க­ளி­னதும் சஜித்­தி­னதும் நிலை சவால்­க­ளுக்கு உள்­ளாகும் தானே? பதில் :- இலங்கை ஜனா­தி­பதி தேர்­தல்கள் எல்லாம் ஒரே கட்சி ஒரு­வேட்­பா­ளரை ஆத­ரித்த வர­லா­றுகள் இல்லை, ஜே.வி.பி.யை பொறுத்­த­மட்டில் கடந்­த­கால ஜனா­தி­பதி தேர்­தல்­களில் பொது­வேட்­பாளர் ஒரு­வரை ஆத­ரித்­தாலும் இம்­முறை தனி­யாக ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரை இறக்­கி­யுள்­ளது. இதனால் பிர­தான ஏனைய இரண்டு வேட்­பா­ளர்­க­ளுக்கும் ஜே.வி.பி. ஆத­ர­வா­ளர்கள் வாக்­க­ளிக்­கா­விட்­டாலும் 5 வீதம் குறை­வான வாக்­கு­களை மட்­டுமே ஜே.வி.பி. பெறு­வ­தற்­காக சந்­தர்ப்பம் உள்­ளது. இதனால் தமிழ் கட்­சி­க­ளுக்கோ தமிழ் மக்­க­ளுக்கோ எந்த பாதிப்பும் இல்லை, தமிழ் மக்­களின் வாக்­குகள் பிர­தான இரண்டு வேட்­பா­ளர்­க­ளுக்கும் கிடைக்­கலாம். ஆனால் தமிழ்­ தே­சிய கூட்­ட­மைப்பு, தமி­ழ­ரசு கட்சி ஆத­ரவு வழங்கும் வேட்­பா­ளரே வடக்கு, கிழக்கில் கூடிய வாக்­கு­களை பெற­மு­டியும். இதற்கு நல்ல உதா­ரணம் கடந்த கால அனு­பவம். வடக்கு, கிழக்கு மக்கள் மாவட்ட ரீதி­யாக கடந்த 2010, 2015, ஆம் ஆண்டு தேர்­தல்­களில் எவ்­வாறு வாக்­க­ளித்­தனர் என்ற புள்­ளி­வி­ப­ரத்தை பார்த்தால் தெளி­வாகப் புரியும். மிக முக்­கி­ய­மாக கடந்த 2010, 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தல்­களை நோக்­கும்­போது ­மே­ல­தி­க­மாக வாக்கு வித்­தி­யா­சத்தில் தமிழ்­ தே­சிய கூட்­ட­மைப்பு ஆத­ரவு தெரி­வித்த வேட்­பா­ள­ருக்கு கிடைத்­துள்­ளது என்ற உண்­மையை மறு­த­லிக்க முடி­யாது அல்­லவா? வடக்கு, கிழக்கு மக்­களின் வாக்­க­ளிப்பு ஏறக்­கு­றைய இரண்டு தேர்­தல்­க­ளிலும் ஒரே அள­வான முடி­வா­கவே அமைந்­தி­ருந்­தது. இம்­முறைத் தேர்­தலில் தமிழ் தேசி­ய­ கூட்­ட­மைப்பு (இலங்கை தமி­ழ­ரசு கட்சி) “அன்னம்” சின்­னத்தில் போட்­டி­யிடும் சஜித் பிரே­ம­தா­சவுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக அறி­வித்­துள்­ளது. கடந்த 2010, 2015, இரண்டு தேர்­தல்­களில் வடக்கு, கிழக்கு மக்கள் எப்­ப­டி­யாக தமிழ்­ தே­சிய கூட்­ட­மைப்­புக்கு ஆத­ரவு வழங்­கிய வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளித்­தார்­களோ அதேநிலை தான் இம்­மு­றையும் வரலாம், வித்­தி­யா­சங்கள் பெரி­ய­ளவில் இருக்­காது என்­பதே எனது கருத்து. கேள்வி :- கடந்த 2018 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தலில் மஹிந்த தலை­மை­யி­லான பொது­ஜன பெர­முன, நாடுபூரா­க­வு­முள்ள 340 சபை­களில் 234 சபை­களை கைப்­பற்றி விஸ்­வ­ரூப வெற்றி பெற்­ற­வர்­க­ளுக்கு, ஜனா­தி­பதி தேர்தல் சவா­லாக அமையும் என கரு­து­கின்­றீர்­ களா? பதில் :- உள்­ளூ­ராட்சித் தேர்தல் கலப்பு தேர்தல் முறை அது பர­வ­லாக ஊர், உறவு, வட்­டாரம், இனம், சனம், சொந்தம் என்­ப­வற்றை பார்த்து கட்­சி­க­ளுக்கு அப்பால் தனி­நபர் நற்­பண்பு செல்­வாக்கின் அடிப்­ப­டையில் அந்த உள்­ளூ­ராட்சி சபை தேர்தல் இடம்­பெற்­றது. அதன் முடி­வு­களை செல்­வாக்­கு­களை ஜனா­தி­பதி தேர்­த­லுடன் ஒப்­பிட முடி­யாது. இது தென்­ப­கு­தியில் மட்­டு­மல்ல வடக்கு, கிழக்­கிலும் கடந்த உள்­ளூ­ராட்சி தேர்தல் நிலைமை முடி­வுகள் இப்­ப­டித்தான் அமைந்­தது, கலப்பு தேர்தல் முறை மாற்­றப்­பட்டு விகி­தா­சார தேர்­தல்­முறை உள்­ளூ­ராட்சி தேர்­தலில் கடைப்­பி­டித்­தி­ருந்தால் வடக்கு கிழக்கில் சகல தமிழ் உள்­ளூ­ராட்சி சபை ண­களும் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பே கைப்­பற்­றி­யி­ருக்கும், இதுவே எல்லா இடங்­க­ளிலும் யதார்த்தம். அந்த தேர்­தலை இந்த தேர்­த­லுடன் ஒப்­பிட முடி­யாது. கேள்வி :- சிங்­கள கடும்­போக்­கா­ளர்­களை சீற்­றத்­துக்­குள்­ளாக்­காமல் தமிழ்க்­கட்­சி­களின் "வர்ண சாய ஆத­ரவை" பெற்­றுக்­கொள்­ளத்­தக்க சஜித்தின் விஞ்­ஞா­ப­னத்தை நீங்கள் எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்? பதில் :- சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் அறிக்­கையில் சிறு­பான்மை மக்கள் தொடர்­பாக சில விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. ஏனைய வேட்­பா­ள­ரான கோத்­த­பாய சிறு­பான்மை மக்கள் தமிழ்­மக்­களின் அர­சியல் அதி­காரப் பகிர்வு விட­யங்கள் பற்றி எது­வுமே குறிப்­பி­ட­வில்லை. இதிலே பார்க்க வேண்­டிய விடயம் யாதெனில் இந்த இரண்டு வேட்­பா­ளர்­க­ளிலும் கூடிய கொடூ ரம் செய்­தவர் யார்? குறைந்த கொடூரம் செய்­த வர் யார்? கூடிய கொடூரம் செய்­தவர் இந்த தேர்­தலில் வெற்றி பெறாமல் இருக்க வேண்­டு­மானால் குறைந்த கொடூரம் செய்­த­வரை ஆத­ரிக்க வேண்டும். இந்த தேர்தல் “சூத்­தி­ரம்தான்” கடந்த 2010, 2015 ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பு கடைப்­பி­டித்த கொள்கை. அதைத்தான் இந்த தேர்­த­லிலும் கடைப்­பி­டிக்க வேண்­டுமே அன்றி வேறு உபா­யங்கள் இல்லை. கொடூர கொடுமை செய்­த­வரை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்­க­வில்லை என்ற செய்தி இத் தேர்­தலின் பின்­னரும் வரும். இதுதான் கடந்த 2010, 2015 தேர்தல் முடி­வாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமது தீர்ப்பை வாக்குச்சீட்டு மூலம் நிரூ­பித்­தனர் அதை இம்­மு­றையும் செய்­வார்கள் என்ற நம்­பிக்கை உண்டு. ஆத­ரிப்­ப­வர்கள் வெற்றி பெறு­வதும் இல்லை, வெற்றி பெற்­ற­வ­ரெல்லாம் நாம் ஆத­ரித்­த­வரும் இல்லை. கேள்வி :- வவு­னி­யாவில் தமி­ழ­ர­சுக் ­கட்­சியின் மத்­திய செயற்­குழுக் கூட்டம் முடி­வ­டைந்து, வாக­னத்தில் சென்ற இரா.சம்­பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்­தி­ரனின் வாக­னத்­தொ­ட­ரணி மீது, காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களைச் சேர்ந்த தாயொ­ருவர் செருப்பை கழற்றி எறிய முற்­பட்ட சம்­ப­வத்­தி­லி­ருந்து, தமி­ழ­ர­சுக்­கட்சி ஆதிக்கம் செலுத்­து­கின்ற கூட்­ட­மைப்­பினர் எதிர்­வரும் காலங்­களில் எவ்­வாறு செயற்­பட வேண்டும் என கரு­து­கின்­றீர்கள்? பதில் :- வவு­னி­யாவில் காணாமல் ஆக்­கப்­பட்ட உறவைச் சேர்ந்த ஒரு தாயார் சம்­பந்தன், சுமந்­திரன் வாக­னத்­திற்கு செருப்பைக் காட்ட தூண்­டி­ய­வர்கள், அந்த தாயின் உண்­மை­யான கோரிக்கைக்கு செருப்பு காட்­டி­ய­தா­கத்தான் இதை பார்க்க வேண்டும். உண்­மையில் காணாமல் போனவர்கள் யார் வெள்ளை வானில் கடத்­தி­னார்­களோ, யார் அர­சினால் காணாமல் ஆக்­கப்­பட்­டார்­களோ, யார் அதற்கு கார­ண­கர்த்­தா­வாக இருந்­தாரோ அவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு பன்னீர் தெளிப்­பதும், மாலை இடு­வதும் பொட்டு வைப்­பதும், கட்டி முத்தம் கொடுப்­பதும் இடம்­பெறும் நிலையில் ஒரு­வ­கையில் குற்­ற­வா­ளி­களை தமிழ் மக்­களே காப்­பாற்றும் செய­லாக உள்­ளது. சம்­பந்தன் அல்­லது சுமந்­திரன் ஜனா­தி­ப­தி­யாக அல்­லது பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்­தி­ருந்தால் அவர்­க­ளுக்கு செருப்பு காட்­டு­வது பொம்மை எரிப்­பது ஏற்­றுக்­கொள்­ளலாம். இது ஒரு சாராரின் தூண்­டு­தலால் அந்த அப்­பா­விப்பெண் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார் அவ்­வ­ள­வுதான். உண்­மைகள் ஒருநாள் வெளி­வரும். கேள்வி:- நல்­லாட்­சியில் இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்­கொலைத் தாக்­குதல் சம்­பவம், புதிய ஜன­நா­யக முன்­னணி வேட்­பா­ள­ருக்கு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­துமா ? பதில் :- உயிர்த்த ஞாயிறு சம்­பவம் தேர்­தலில் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என நான் கரு­த­மாட்டேன். இந்த தாக்­கு­த­லுக்கு அப்பால் பல இடங்­க­ளிலும் இஸ்­லா­மிய மக்கள், வர்த்­த­கர்கள் கூடிய பாது­காப்பு சோத­னைக்கு முகம் கொடுத்­தனர் இதனால் தமிழ் பிர­தே­சங்­க­ளிலும் இஸ்­லா­மிய வியா­பார வேலை­க­ளுக்கு தடை ஏற்­பட்­டது என்­ப­தெல்லாம் உண்மை, தற்­போது இஸ்­லா­மிய அர­சியல் தலை­வர்கள் இரண்டு வேட்­பா­ளர்­க­ளுக்கும் ஆத­ரவு வழங்­கு­வ­தனால் யார் வெற்றி பெற்­றாலும் லாபமே அன்றி நஷ்டம் இல்லை. அதனால் தேர்­தலில் எந்த பாதிப்பும் ஏற்­ப­டாது. கேள்வி :- தமிழ்க்­கட்­சிகள் எதிர்­பார்த்துக் கோரி க்கை விடுத்­தவை சஜித்தின் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தென ஒரு சிலரும் சிலர் புறம்­பா­கவும் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். அவ்­வ­கையில் விஞ்­ஞா­­பனத்­தி­லுள்­ளவை நிறை­வேற்­றப்­ப­டுமா? பதில் :- ஐந்து தமிழ் கட்­சிகள் ஒன்­றித்து முன்­வைத்த 13 அம்சக் கோரிக்­கை­களில் ஒரு சிலவற் றையாவது சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ் ஞாபனத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது என்பது உண்மை. ஏனைய வேட்பாளரான கோத்தபாய முழுமையாக நிராகரித்துவிட்டார். அந்தவகை யில் சஜித் எல்லாவற்றையும் ஏற்காத போதும் சிலவை ஏற்றுள்ளதை காணமுடிகிறது. கேள்வி :- முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் மற்றும் கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்த்தல் உட்பட சிறிய சிறிய விவகாரங்க ளுக்கு, தீர்வு பெற்றுத் தராதவர்களுக்கு, வடக்கு கிழக்கு மக்கள் ஆதரவளிப்பார்களா, வெற்றியீட்ட வழிகோலுவார்களா? பதில் :- கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ப தில் மாற்றுக் கருத்து இல்லை, தமிழ் தேசிய கூட்ட மைப்பு ஏற்கனவே எடுத்த முயற்சிகள் நிலுவை யில் உள்ளன. அது தொடரப்படும். எப்படியும் கல் முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்த வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. அதன் செயற்பாடுகள் தொடரும். இருந்தபோதும் இந்த விவகாரம் ஒரு இனம் இரண்டு ஊர் அல்லது பல ஊர் பிரதேசம் சார்ந்த விடயமில்லை, இரு இனம் இரண்டு இனங் கள் வாழும் ஊர்கள் பிரதேசங்கள் என்பது உண்மை. அதனால் ஒரு இனம் வேண்டுகோளை முன்வைக்கும் போது இன்னோர் இனம் எதிர்க் கிறது. இரண்டு இனங்களும் சில விட்டுக்கொடு ப்புகள் புரிந்துணர்வுகள் அடிப்படையில் பேசி இணக்கப்பாட்டு அடிப்படையில் இதற்கான தீர்வை பெறவேண்டுமே அன்றி ஒரு இனம் சார்ந்த அரசியல் தலைவர்கள் மற்றைய இனம் சார்ந்த அரசியல் தலைவர்களும் முட்டி மோது வதாலோ ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேட்பா ளரை ஆதரிப்பதாலோ பரிகாரம் கிடையாது. சஜித் பிரேமதாச வெற்றி பெற்றாலும், கோத் தபாய வெற்றி பெற்றாலும் கல்முனை தமிழ் பிர தேச செயலக விடயம் பேச்சுவார்தைகள் மூலமா கவே தீர்வை பெறலாம் என்பது கசப்பான உண்மை. நேர்காணல் - பாக்கியராஜா மோகனதாஸ் https://www.virakesari.lk/article/68887
    • ஜனாதிபதித் தேர்தல் 2019 நவம்பர் மாதம் 16 ஆம் திக­தி­யன்று நடை­பெற்று ஓரிரு நாட்­களில் புதிய ஜனாதிப­தியும் தெரிவு செய்­யப்­பட்­டு­வி­டுவார். யார் புதிய ஜனாதிப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டுவார் என்ற ஏக்­கத்­திலும் ஊகத்­திலும் மக்கள் உள்­ளனர். அதற்கு காரணம் 35 அபேட்­ச­கர்கள் போட்­டி­யி­டு­வ­தல்ல வேறு கார­ணங்­க­ளாகும். எனினும் பெரும்­பா­லான மக்கள் ஜனாதிபதித் தேர்­தலில் டம்மி அபேட்­ச­கர்­களும் அர­சி­ய­லையே பொழு­து­போக்­காக கொண்ட ஜோக்­கர்­களும் போட்­டி­யி­டு­வதால் அவர்­களில் யார் வெற்றி பெறுவர் என்­பதை தீர்­மா­னிப்­பதில் சங்­க­டப்­ப­டாமல் நிச்­ச­ய­மாக சஜித், கோத்­தபாய, அநுர குமார திசா­நா­யக்க ஆகிய இவர்­களில் ஒரு­வரே ஜனாதிப­தி­யாக வருவார் என்­பதை உணர்ந்தும் உள்­ளனர் என்­ப­தையும் நாம் அவர்­களின் செய­லிலும் பேச்­சுக்­க­ளிலும் இருந்து காணக்­கூ­டி­யதாய் இருக்­கி­றது.     அவர்­களின் கணிப்­பின்­படி மேலே நான் கூறிய அபேட்­ச­கர்­களில் ஒரு­வரே ஜனாதிப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டுவார் என்றும் ஆயினும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் சார்பில் போட்­டி­யிடும் அபேட்­சகர் அநுர குமார திசா­நா­யக்க   பலத்த போட்­டியை கொடுப்பார் என்­பது உண்­மை­யா­யினும் ஏனைய இரு­வர்­களில் ஒரு­வ­ரான சஜித் பிரே­ம­தாச அல்­லது கோத்­தபாய ராஜபக் ஷ அவர்­களில் ஒரு­வரே வெற்றி பெறுவர் என்றும் பொது மக்­களில் பெரும்­பா­லானோர் கணித்­துள்­ளனர். மேலும் இம்­முறை நடை­பெறும் போட்டி நாட்டின் அபி­வி­ருத்தி சம்­பந்­த­மாக இல்­லாமல் நாட்டின் பாது­காப்பு பற்­றி­ய­தாகவும் இன ஐக்­கி­யத்தை வலி­யு­றுத்தும் போட்­டி­யா­கவும்  காணப்­ப­டு­கி­றது. நாட்டின் பாது­காப்பு மற்றும் வேறு சில­வற்றை அடிப்­ப­டை­யாக வைத்தும்  பெரும்­பாலும் நடை­பெ­று­வ­தாலும் மேலும் இன ஐக்­கி­யத்தை வைத்தும் நடை­பெறும்  போட்­டி­யா­கவும் காணப்­ப­டு­கி­றது. இதனால் இம்­முறை ஜனாதிபதித் தேர்­தலில் யார் வெற்றி பெறுவர் என்று முன்­கூட்­டியே தீர்­மா­னிப்­பது கஷ்­ட­மா­யினும் ஓர­ளவு  ஊகிக்க கூடி­ய­தான சூழல் தற்­போது காணப்­ப­டு­கி­றது என்று கூறலாம்.   தென்­னி­லங்கை சிங்­கள மக்­களின் முடிவு ஏற்­க­னவே  ஊறிப்­போ­யி­ருந்த வகுப்­பு­வாதம் சென்ற ஏப்ரல் மாதம் நடை­பெற்ற கல­வ­ரத்தின் பின்னர் இன மத ரீதி­யான கொள்­கை­யையே சிங்­கள மக்கள் அங்­கீ­க­ரித்­துள்­ளனர் என்­பதை காணக்­கூ­டி­ய­தா­யுள்­ளது. அத­னையும் வடக்கு கிழக்கு மாகாண  மக்­களின் அமை­தி­யையும் சாக்­காக வைத்து தென்­னி­லங்­கையில் முக்­கி­ய­மான அர­சியல் கட்­சிகள் இன மத வாதத்தை  முன்­வைத்து சிறு­பான்மை இனங்­க­ளாக தமிழர், முஸ்லிம் இனத்­தவர் மீது வெறுப்­பூட்டும் கொள்­கை­யையே கடைப்­பி­டிப்­ப­தையும் நாம் காணக்­கூ­டி­யதாய் இருக்­கி­றது. சிங்­கள மக்கள் இதனை அங்­கீ­க­ரிப்­ப­வர்­க­ளா­கவும் காணப்­ப­டு­கின்­றனர். இதனால் இக்­கொள்­கையை  அடிப்­ப­டை­யாக கொண்டு இயங்கும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி சிங்­கள மக்கள் மத்­தியில் முன்­னி­லையில் நிற்­கி­றது. விசே­ட­மாக தனிச்­சிங்­கள மக்கள் வாழும் பகு­தியில் அவர்கள் முன்­னி­லையில் நிற்­கின்­றனர் எனலாம். இதனால் தென்­னி­லங்­கையில் உள்ள தனிச்­சிங்­கள மக்­களை கொண்­டுள்ள தேர்தல் தொகு­தி­களின் வாக்­குகள் மேற்­படி கட்­சிக்கே செல்ல இட­மி­ருக்­கி­றது என்று கூறலாம். ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியை நம்பி அர­சியல் நடத்தும் இட­து­சாரிக் கட்­சி­யினர், ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியில் சர­ண­டைந்­துள்­ளனர். ஆகவே ஸ்ரீலங்கா பொது ஜன முன்­ன­ணியும் அக்­கட்­சியை நம்பி அர­சியல் நடத்தும் இட­து­சா­ரி­களும் ஸ்ரீலங்கா பொது ஜன முன்­ன­ணியின் சார்பில் போட்­டி­யிடும் ஜனாதிபதி வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு அளித்து வரு­வதை தென்­னி­லங்­கையில் காணக்­கூ­டி­யதாய் இருக்­கி­றது. இதனால் இட­து­சாரி வாக்­கு­களும் பொது­ஜன முன்­ன­ணிக்கே செல்லும் என எதிர்­பார்க்­கலாம். இன ஐக்­கி­யத்­துக்கு எதி­ரான வாக்­கா­கவே அவை இருக்கும்.   கொழும்பு, நுவ­ரெ­லியா, பதுளை,  கண்டி போன்ற மாவட்­டங்­களின்  முடிவு எப்­ப­டி­யி­ருக்கும்? சகல இன மக்­களும் இணைந்து வாழும் கொழும்பு, நுவ­ரெ­லியா, பதுளை, கண்டி, மாத்­தளை போன்ற பகு­தி­களில் வாழும் சிறு­பான்மை இனத்­த­வர்கள் (தமிழ் – முஸ்லிம்) தாம் சிங்­கள மக்­க­ளுடன் சக­வாழ்வு வாழலாம் என்ற கொள்­கையை கடைப்­பி­டித்து வாழ்­வதால் அவர்­க­ளது  வாக்­குகள் கட்­டாயம் ஐக்­கிய தேசியக் கட்­சியின் அபேட்­சகர் சஜித் பிரே­ம­தாசவுக்கே செல்லும் என எதிர்­பாக்­கலாம். ஏனெனில் இன ஐக்­கியம் அக்­கட்­சியின் கருப்­பொ­ரு­ளாக இருக்­கி­றது. மேலும் ஆர். பிரே­ம­தாசவின் புதல்­வ­ரான சஜித்   ஐக்­கிய தேசியக் கட்­சியின் அங்­கத்­தவர் மட்­டு­மல்ல இந்­திய மக்­களின் நல்­வாழ்­வுக்கு அர­சியல் ரீதியில் வாக்­கு­ரி­மையை பெற்றுக் கொடுத்து பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வெட்­டுப்­புள்­ளியை 5% ஆக குறைத்தும் அம்­மக்­களை ஏனை­ய­வர்­க­ளுக்கு சம­மா­ன­வர்­க­ளாக மாற்­றி­ய­வரின் மக­னுக்கு (சஜித்­துக்கு) நன்றிக் கட­னாக மேற்­படி  இனத்­த­வர்­களின் முழு­வாக்கும் செல்­லக்­கூ­டிய ஒரு நிலையும்  மேற்­படி மாவட்­டங்­களில் காணக்­கூ­டி­ய­தா­யி­ருக்­கி­றது. மேலும் தோட்டப் பகு­தி­களில் விசே­ட­மாக நல்ல குடி­யி­ருப்பு வச­தி­க­ளையும் தொழி­லையும் பிற மாவட்­டங்­களில் சென்று கௌர­வ­மான தொழில்­களை புரி­யவும் ஆர்.பிரே­த­மாச அவர்­களும் தற்­போ­தைய அரசும் பெரும்­பங்கு ஆற்­றி­ய­தற்­காக அவ் இனத்­த­வரின் வாக்­குகள் சஜித்துக்கு கிடைக்கக் கூடிய சூழ்­நிலை மேற்­படி மாவட்­டங்­களில் காணப்­ப­டு­கி­றது என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது   வடக்கு – கிழக்கு மாகா­ணங்­களின் முடிவு எப்­ப­டி­யி­ருக்கும்? தமி­ழ­ரசுக் கட்­சியின் ஆரம்­ப­கால கொள்­கையை தமிழ் மக்கள் இன்றும் ஏற்­றுள்­ளார்கள் என்று கூறலாம். அதில் எந்த மாற்­றமும் இல்லை. அத்­துடன் ஏனைய தமிழ் கட்­சி­களும் தமிழ் இன நலன் சார்ந்த பொது­வான கொள்­கையை கடைப்­பி­டிப்­ப­தையும் காணலாம். மேலும் சமூ­கத்தின் முது­கெ­லும்­புகள் எனக் கரு­தப்­படும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களும் மூத்த கட்­சி­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தையும் காண­மு­டி­கி­றது. தீவி­ர­மாக வெல்ல வேண்டும் புரட்­சி­கர முறையில் இயங்க வேண்டும் என்ற கொள்­கையை தற்­போது சமூ­கத்தில் காண­மு­டி­யாமல் இருக்­கி­றது. ஒற்­று­மையே பலம் என்­பதை உணர்ந்­துள்­ள­துடன் தமிழர் பிரச்­சி­னையை மெது­வாக ஆனால் உறு­தி­யாக அடைய வேண்டும் என்ற கொள்­கையை சக­லரும் ஏற்றுக் கொண்­டுள்­ளது போல் தெரி­வதை நாம் காணக்­கூ­டி­ய­தா­யி­ருக்­கி­றது. ஆகவே தமி­ழர்­க­ளது வாக்­குகள் ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கே பெரும்­பாலும் செல்லும் எனக் கரு­தலாம். வட­மா­கா­ணத்தில் தமிழ் மக்கள் வாக்­க­ளிக்க கூடாது என்ற ஒரு நிலைப்­பாட்டில் ஒரு அர­சியற் கட்சி இருப்­ப­தையும் நாம் மறக்­கக்­கூ­டாது. ஆனாலும் அக்­கட்­சியின் கொள்­கையை ஏற்று மக்கள் வாக்­க­ளிக்­காமல் இருப்­பார்கள் என்­பதை காண முடி­யாமல் இருக்­கி­றது. ஈ.பி.டி.பி கட்­சியின் முக்­கி­யஸ்­த­ர்கள் கூட வாக்­க­ளிப்பை புறக்­க­ணிக்க வேண்டும் என்று கூற­வில்லை. ஆகவே வடக்கு மாகா­ணத்தில் தமிழ் பேசும்  மக்­க­ளது வாக்­க­ளிப்பு உச்­ச­மாகக் காணப்­படும். அவ் வாக்­குகள் ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கே அளிக்­கப்­ப­டலாம் என ஆய்­வா­ளர்கள் திட­மாக கூறு­கின்­றனர். ஆயின் ஈ.பி.டி.பியின் ஆத­ர­வுக்கும் சில வாக்­குகள் கிடைக்­கலாம். கிழக்கு மாகாண நிலை வட மாகா­ணத்தை போன்­ற­தல்ல.  அங்கு முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் கலந்து வாழ்­வதால் தமிழ் சமூ­கத்தின் கட்­டுப்­பாட்டை முஸ்­லிம்கள் ஏற்க வேண்டும் என யாரும் கூறு­வ­தில்லை. அதேபோல் முஸ்­லிம்­களின் தீர்­மா­னத்தை தமி­ழர்கள் ஏற்க வேண்டும் என யாரும் எதிர்­பார்ப்­ப­து­மில்லை. முன்­னைய காலங்­களில் தேர்­தல்­களில் இவ்­விரு சமூ­கத்­த­வரும் தனித்­த­னியே பிரிந்து தமது சமூக நலன்­களை கருத்தில் கொண்டு வாக்­கு­களை அளித்து வந்­ததை நாம் காணலாம். இம்­முறை இந்­நிலை கிழக்கு மாகா­ணத்தில் இல்லை. சகல இன மக்­களும் தமிழ் முஸ்­லிம்­களும் சேர்ந்து ஒரு கட்­சிக்கே வாக்­க­ளிக்க இருப்­ப­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. ஒரு சிலர் மாறு­பட்டு இருப்­பினும் அம்­மா­றுதல் பெரி­தான பாதிப்பு ஒன்றை ஏற்­ப­டுத்­தாது என ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர். ஆகவே வட மாகா­ணத்தை போலவே கிழக்கு மாகாண மக்­களும் ஒரு கட்­சிக்கே வாக்­க­ளிக்க இருப்­ப­தாக தெரி­வதால் அவ்­விரு மாவட்­டத்தின் வாக்­கு­களில் மிகப் பெரும்­பான்மை வாக்­குகள் ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கே கிடைக்கும் எனவும் ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர். ஆகவே புதி­தாக ஆட்சி பீடம் ஏறும் அர­சாங்கம் வடக்கு – கிழக்கு மாகாண மக்­களின் பிரச்­சி­னையை தீர்க்க முற்­படும் நட­வ­டிக்­கை­களை எடுக்கும் போது ஈ.பி.டி.பி மற்றும் சில கட்­சிகள் பிரச்­சி­னையை தீர்க்க ஒத்­து­ழைப்பை வழங்கும்  என திட்­ட­வட்­ட­மாக கூறலாம்.   இளை­ஞர்­கள – மிதக்கும் வாக்­குகள் எப்­படி இருக்கும்? தற்­கால உலகில் இளை­ஞர்­களின் மனோ­நிலை முதி­ய­வர்­களின் மன­நி­லையில் இருந்து மாறு­பட்டு காணப்­ப­டு­வதை நாம் காணலாம்.  இது இலங்­கைக்கும் பொருந்தும் பல்­லின மத கலா­சா­ரங்­களை அடங்­கிய  நாடாக இலங்கை இருந்த போதும் இளை­ஞர்கள் மன­நிலை புதிய உலக படைப்பை உரு­வாக்க வேண்டும் என்­பதில் வேறு­பட்டு காணப்­ப­டு­வ­தில்லை. ஆகவே இளை­ஞர்கள் மற்றும் மிதக்கும் வாக்­கா­ளர்­களின் மன­நிலை நாம் மேலே கூறி­ய­வாறு இன மத நோக்கம்  கொண்­ட­தாக மட்டும் இருக்­கப்­போ­வ­தில்லை. அவர்­க­ளது அறிவு ஞானம், தொழில்­நுட்ப சாத­னங்கள், கருத்­துக்கள் மற்றும் படிப்­ப­றிவு, பேஸ்புக் போன்ற சாத­னங்­களின் கருத்­துக்கள் நிச்­ச­ய­மாக அவர்­க­ளது மனதை பாதித்­தி­ருக்கும் என்­பதை மறக்­கக்­கூ­டாது. அத்­த­கைய நிலையில் உள்ள இளை­ஞர்கள் ஏனைய இன மதத்தை சார்ந்த இளை­ஞர்­களின் உள்­ளத்தை பாதிக்கும் முறையில் நடக்கப் போவ­தில்லை. தற்­போது இலங்­கையில் 640,000 இளை­ஞர்கள் யுவ­திகள் வாக்­கா­ளர்­க­ளாக வாழ்­வ­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. அவர்­க­ளது மன­நி­லையை பற்­றிய கணிப்பில் ஈடு­பட்­ட­வர்கள் தெரி­வித்­துள்­ளது என்­ன­வெனில் இலங்­கையில் அவர்­க­ளது  வாக்­குகள் தேசத்தில் இன மத ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்தப் பாவிக்க இருப்­ப­தா­கவே உள்­ள­தா­கவும் இன ஐக்­கியம் முக்­கி­ய­மா­ன­தாக அவர்கள் மனதில் கொண்­டுள்­ள­தா­கவும் அவர்கள் கொண்­டுள்­ளனர் என்றும் தெரி­வித்­துள்­ளனர். பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழக  பேரா­சி­ரியர் ஒருவர் இதனை தெரி­வித்­துள்ளார். ஆகவே நடைப் பெறப்­போகும் ஜனாதிபதி தேர்­தலில் தென்­னி­லங்கை சிங்­கள மக்­களின் முடிவு  ஒரு வித­மான நோக்­கத்தை கொண்டும் வடக்கு – கிழக்கு மாகா­ணத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்­களின் முடிவு சிங்­கள மக்­களின் நோக்­கத்தில் இருந்து வேறு ஒரு­வி­த­மான நோக்­கத்தை கொண்டும் இளை­ஞர்கள் மிதக்கும் வாக்­கா­ளர்­களின் வாக்­குகள் வேறு ஒரு நோக்­கத்தை  கொண்டும்  இருக்கப் போவ­தாலும் அதனை ஊக்­கு­விக்க ஜனாதிபதி அபேட்­ச­கர்கள் மூவர் மக்கள் முன்­னி­லையில் வாக்கு கேட்­ப­தையும் பார்க்கும் போது யார் வெற்றி பெற வாய்ப்பு இருக்­கி­றது என்­பதை வாக்­கா­ளர்­களே தீர்­மா­னித்து கொள்­ளலாம். தென்­னி­லங்கை சிங்­கள மக்­களின் எண்­ணத்தை பிர­தி­ப­லிக்க ஜனாதிபதி அபேட்­சகர்  ஒரு­வரும்  இலங்­கையர் என்ற  இன ஐக்­கி­யத்தை வேரூன்றச் செய்ய இன்­னு­மொரு­வரும் இளைஞர் யுவ­தி­களின் “நாம் இலங்­கையர்” என்ற எண்­ணத்தை வளர்க்க இன்­னு­மொ­ரு­வ­ரு­மாக மூன்று அபேட்­ச­கர்கள் தமது பிர­சா­ரங்­களை மேற் கொண்டு வரு­வதை நாம் காணலாம். இதில் யார் வெற்றி பெற இட­மி­ருக்­கி­றது. என்­பதை நீங்­களே தீர்­மா­னித்துக் கொள்­ளலாம். உங்­க­ளது தீர்­மானம் எதுவோ அதுவே எனது தீர்­மா­ன­மு­மாக இருக்கும். ஆனால் எனது தீர்­மா­னத்­திற்கு அடிப்­படை இன­வாதம் வேண்டாம் என்றும் இன ஐக்­கி­யமே வேண்டும் என்­பதும் இளைஞர் யுவ­தி­களின் எதிர்­கால வாழ்வு நல­வாக இருக்­க­வேண்டும் என்று நான் கரு­து­வ­தே­யாகும்.   ஜனாதிபதித் தேர்­தலும் கருத்துக் கணிப்­பு­களும் ஜன­நா­யக நாடு­களில் கருத்துக் கணிப்பு ஒரு முக்­கிய விட­ய­மாக காணப்­ப­டு­கி­றது இதற்கு காரணம் கருத்துக் கணிப்பு ஒரு விஞ்­ஞான ரீதி­யான ஆய்­வாகும். ஆகவே மேலை நாடு­களில் இன ரீதி­யாக மக்கள் பிரிந்து வாக்­க­ளிப்­ப­தில்லை. நாட்டின் நலன் கரு­தியே அவர்கள் வாக்­க­ளிப்­பது உண்டு. கருத்துக் கணிப்­புக்கள் மூலம் வாக்­கா­ளர்­களின் மன­நி­லையை அறிய முடி­கி­றது. வெற்றி பெறு­கின்ற கட்­சிக்கு வாக்­க­ளிக்­க­வேண்டும் என்ற மன­பான்மை மக்­க­ளிடம் காணப்­ப­டு­வது வழக்கம். கருத்துக் கணிப்பை நடத்­து­ப­வர்கள் சாதா­ரண பேர் வழிகள் அல்ல. பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­யர்கள், மாண­வர்கள் மற்றும் அறி­வா­ளிகள் இதனை நடத்­து­கின்­றனர். இதற்கு முதற்­ப­டி­யாக ஒரு வினாக்­கொத்தை தயா­ரித்து அதனை தெரிவு செய்­யப்­பட்ட சில வாக்­கா­ள­ரிடம் கொடுத்து விடையைப் பெற்று இதன் பின்னர் விடையில் இருந்து அவர்கள் கண்ட முடிவை மக்­க­ளுக்கு தெரி­விக்­கின்­றனர். கருத்துக் கணிப்பு பெரும்­பாலும் தவ­று­வ­தில்லை. மேற்­கு­லக  நாடுகள் இதில் முன்­னி­லையில் நிற்­கின்­றன அவை வெளியிடும் கருத்துக் கணிப்பு தவ­று­வ­தில்லை. இந்­தி­யாவில் சமீ­பத்தில் நடந்த லோக் சபா தேர்­தலில் நரேந்­திர மோடியின் தலை­மையில் பார­திய ஜனதா வெற்றி பெற போகி­றது என்­பதை  கருத்துக் கணிப்­புக்கள் எடுத்துக் காட்­டின. தேர்தல் முடிவும் அப்­ப­டியே இருந்­தன. ஆகவே இலங்­கை­யிலும் இந்­நிலை வர­வேண்டும். அமெ­ரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடு­களில் இக்­க­ருத்துக் கணிப்பு நாள்­தோறும் நடை­பெ­று­வதும் உண்டு. கருத்துக் கணிப்பை வெளி­யி­டு­ப­வர்­களில் பத்­தி­ரி­கைகள் முக்­கிய பங்கு ஆற்­று­கின்­றன. “இந்­தியன் இன்ஸ்­டியூட் ஒப் பப்ளிக் ஒப்­டீ­னியன்” என்ற அமைப்­புதான் முதன்­மு­த­லாக தேர்­த­லுக்கு முன்னர் கருத்துக் கணிப்பை வெளி­யிட்­டது. பின்னர் தொடர்ந்தும் திற­மை­யான கருத்துக் கணிப்பை வெளி­யிட்டு வரு­கின்­றன. கருத்துக் கணிப்பு பிழை­பட்­டாலும் பத்­தி­ரி­கை­களை தாக்கும் செயல்கள், ஆசி­ரி­யர்­களை கொலை செய்தல் போன்ற சம்­ப­வங்கள் நடை­பெ­று­வ­தில்லை. ஆகவே இலங்கைப் பத்­தி­ரி­கைகள் தேர்தல் கணிப்­பு­களை வெளி­யிட தயங்­கு­வதில் ஆச்­ச­ரி­ய­மில்லை. கருத்துக் கணிப்பில் முக்­கி­ய­மாக ஏற்­படும் பிரச்­சி­னை­களில் ஒன்று நாட்டில் எழும் அபிப்­பி­ரா­யங்கள் எல்லாப் பக்­கங்­க­ளிலும் ஒரே மாதி­ரி­யாக இருப்­ப­தில்லை. வேறு­பட்டு காணப்­படும். உதா­ர­ண­மாக இலங்­கையில் ஜனாதிபதித் தேர்தல் சம்­பந்­த­மாக எல்லாப் பக்­கங்­க­ளிலும் ஒரே மாதி­ரி­யாக இல்லை. உதா­ர­ண­மாக இலங்­கையில் இம்­முறை வடக்கு – கிழக்கு மற்றும் சிறு­பான்மை இன மக்கள் வசிக்­கின்ற மாகா­ணங்­களில் வாழு­கின்ற எண்­ணமும் வேறு தனி இன மக்கள் வாழு­கின்ற எண்­ணமும் வேறு பட்டு காணப்­ப­டு­கி­றது. ஆகவே நாடு முழு­வதும் இந்­நி­லையே காணப்­ப­டு­கி­றது என்று ஒரு­வ­ராலும் கூற முடி­யாது. உண்மை நிலைமை என்ன என்­பதை கூற முடி­யாத ஒரு நழுவல் நிலையே காணப்­ப­டு­கி­றது. இதனால் வாக்­காளர் நன்கு சிந்­தித்து தமக்கு பிடிக்கும் ஒரு­வ­ருக்கு வாக்­க­ளிப்­பதே நல்­லது. அதற்கு வேறு ஒரு­வரின் அறி­வுரை தேவை என நான் நினைக்­க­வில்லை.     தொகுப்புரை வாக்காளர் என்னிடம் கேட்கும் வினாக்களில் பிரதானமான வினா என்ன வெனில் கட்டாயம் 1, 2, 3 என்ற வாக்குகள் கட்டாயம் எழுத வேண்டுமா என்பது. விடை இல்லை என்பதாகும். நீங்கள் உங்களது வாக்கை மட்டும் [1] பாவித்தால் அது செல்லுபடியாகும். 2, 3 எழுத தேவையில்லை. இவ்விளக்கம் தேர்தல் ஆணைக்குழுவில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் சிறு பிள்ளைகளும் விளங்கக்கூடிய விதத்தில் பிரசுரமாகியுள்ளது. பார்க்கவும். நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு வாக்கும் Vote உம் இரண்டு சலுகை வாக்குகளும் (Preferential Vote) உம் உண்டு. கட்டாயம் வாக்கை பாவிக்க வேண்டும். சலுகை வாக்குகளை பாவிக்க தேவையில்லை. விரும்பினால் மட்டுமே அவற்றை பாவிக்க வேண்டும்.   கே.ஜீ.ஜோன்  https://www.virakesari.lk/article/68880
    • 2005யில் மகிந்தா வந்ததால் தான் ஒரு முடிவு வந்தது. அந்த முடிவு எங்களுக்கு பாதகமாய் இருந்தால் கூட ...ரணில் வந்திருந்தால் போர் பெரிதாய் நடந்திருக்காது...சும்மா இழுத்து ,இழுத்து காலத்தை கடத்தி இருப்பார்....ஒரு தீர்வும் இல்லாமல் ,முடிவும், இல்லாமல் இரண்டு கெட்டான் நிலையில் இருந்ததை விட ஒரு முடிவு வந்தது அங்குள்ள மக்களுக்கு நிம்மதி...மக்களின் நிலை அறிந்து தான் தலைவர் அந்த முடிவை அந்த நேரத்தில் எடுத்தார் . எதிர்காலத்தில் சஜீத்தும், ரணிலை மாதிரித் தான் இருப்பார்....இந்த தாறன்/இப்ப தாறன் என்று சொல்லி ஏமாத்திறதை விட  வெட்டு ஒன்று துண்டு ரென்று என்று பேசுகின்ற கோத்தா எவ்வளவோ மேல்  
    • பாட‌லை கேக்க‌  https://vocaroo.com/i/s05LJTVO0KN9   என‌து ந‌ண்ப‌னே எந்த‌ன் ம‌ன‌சில் நீய‌டா என்றும் உன‌து ஞாவ‌க‌ம் ஈழ‌ நினைவ‌டா நீ துயிலும் க‌ல்ல‌றை தேச‌ உயிர‌டா  என‌து ந‌ண்ப‌னே எந்த‌ன் ம‌ன‌சில் நீய‌டா  நினைவு தெரிந்த‌ நாள் முத‌ல் இருவ‌ரும் உற‌வு அந்த‌ நினைவை அனைக்க‌ தானே அழுகுது உற‌வு இர‌வு ப‌க‌லாய் ஓய்வு இன்றி அசைந்த‌ காற்று நீய‌டா இன‌த்துக்காக‌ தின‌மும் பார‌ம் சும‌ந்த‌து உந்த‌ன் தோள‌டா ந‌ண்ப‌னே ந‌ண்ப‌னே தேச‌த்தின் சொந்த‌மே  என‌து ந‌ண்ப‌னே எந்த‌ன் ம‌ன‌சில் நீய‌டா என்றும் உன‌து ஞாவ‌க‌ம் ஈழ‌ நினைவ‌டா நீ துயிலும் க‌ல்ல‌றை தேச‌ உயிர‌டா என‌து ந‌ண்ப‌னே எந்த‌ன் ம‌ன‌சில் நீய‌டா  ம‌ல‌ரை போல மெல்மை உன்னில் உண்டு எரிமலையை போலே நின்றாய் ப‌கைவ‌ரை வென்று க‌ட‌மை தானே ம‌னித‌ன் என்று க‌ருத்து சொன்னாய் அறிஞ‌னே க‌விதையாலே தேச‌ வாழ்வை காத‌ல் செய்தாய்  க‌விஞ்ஞ‌னே ந‌ண்ப‌னே ந‌ண்ப‌னே தேச‌த்தின் சொந்த‌ம்மே  என‌து ந‌ண்ப‌னே எந்த‌ன் ம‌ன‌சில் நீய‌டா என்றும் உன‌து ஞாவ‌க‌ம் ஈழ‌ நினைவ‌டா நீ துயிலும் க‌ல்ல‌றை தேச‌ உயிர‌டா என‌து ந‌ண்ப‌னே எந்த‌ன் ம‌ன‌சில் நீய‌டா  
    • வோசிங்டன் போஸ்ட் தமிழில் ரஜீபன்             இலங்கையின் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் செயற்பட்ட கொலைகும்பல்களிடமிருந்து தப்புவற்காக நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு நாடு கடந்த நிலையில்வாழும் இலங்கைபத்திரிகையாளர்கள், தங்;கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை வழிநடத்தியவர் இவ்வாரம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடும் என்பதால் ,தாங்கள் மீண்டும்   இலங்கைக்கு திரும்பமுடியாது எனவும் தங்களிற்கு நீதி கிடைக்காது எனவும் அச்சம் வெளியிட்டுள்ளனர். 2005 முதல் 2015 வரையான  மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில்  ஊடகஉறுப்பினர்களிற்கு எதிராக  தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை தற்போதைய அரசாங்கம்  தண்டிக்க தவறியுள்ளமை குறித்து  புலம்பெயர்ந்து வாழும் ஊடகவியலாளர்கள்  ஏமாற்றமும் கவலையும் வெளியிட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் சகோதரரும், ஊடகவியலாளர்கள்மீதான தாக்குதலிற்கு காரணம் என  சந்தேகிக்கப்படுபவரும்-   முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தாபய ராஜபக்ச சனிக்கிழமை இடம்பெறவுள்ள தேர்தலில் வெற்றிபெறுவார் என கருதப்படும் நிலையில் - நிலைமை தங்களிற்கு சாதகமானதாக தற்போதைக்கு மாறாது என நாடுகடந்து வாழும் பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 2015 இல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசாங்கம் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபடுபவர்களிற்கு சட்டத்தின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை முடிவிற்கு கொண்டுவருவதாக உறுதியளித்தது. ஆனால்  கடந்த நான்கு வருடங்களில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களிற்காக இதுவரை எவரும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதில் இந்த அரசாங்கம் செயற்பட்ட விதம் எங்களிற்கு திருப்தியளிக்கவில்லை என்கின்றார், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத். ஊடகங்கள் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் எவரும் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை  நீதியின்முன்நிறுத்தப்படவில்லை என்கிறார் அவர். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் பல பத்திரிகையாளர்கள் இனந்தெரியாத கொலையாளிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.ஏனையவர்கள் மர்மவான்களில் கடத்தப்பட்டுசித்திரவதை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர். இலங்கையின் உள்நாட்டுயுத்தத்தின் இறுதி தருணங்களிலேயே இந்த சம்பவங்;கள் இடம்பெற்றன. எத்தனை பேர் கடத்தப்பட்டனர் கொல்லப்பட்டனர் என்பது குறித்த உறுதியான புள்ளிவிபரங்கள் இல்லாத அதேவேளை 60ற்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் உயிர் அச்சம் காரணமாக நாட்டிலிருந்து வெளியேறினர் என்கி;ன்றார் சம்பத். பத்திரிகையாளர்களும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களும் வெள்ளை வானி;ல் கடத்தப்பட்டமை,மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஒடுக்குமுறைகளிற்கான குறியீடாக விளங்குகின்றது. வெள்ளை வானில் கடத்தப்பட்டு உயிர்தப்பிய ஒரு சில பத்திரிகையாளர்களில் போத்தல ஜயந்தவும் ஒருவர்  . 2009 யூன் மாதம் முதலாம் திகதி வெள்ளை வானில் கடத்தப்பட்ட அவர்  ஈவிரக்கமற்ற முறையில் சித்திரவதை செய்யப்பட்டார். அவரது கால்கள் நசுக்கப்பட்டன, விரல்கள் சேதமாக்கப்பட்டன அதன் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். அவர் அதன் பின்னர் ஒரு மாதகாலத்திற்கு மேல் மருத்துவமனையில்உயிருக்காக போராடினார்.மருத்துவமனையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னரும் அவர் பல மாதங்களாக நடமாட முடியாத நிலையில் காணப்பட்டார். போத்தல ஜயந்த அக்காலப்பகுதியில் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராகயிருந்தார்,ஊடகங்களிற்கு எதிரான ஒடுக்குமுறை குறித்து  பகிரங்கமாக கருத்து வெளியிட்ட அவர்  ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது ஆபத்தான விடயம் என கருதப்பட்ட காலங்களில் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தார். தான்தாக்கப்பட்டு ஆறு மாதங்களிற்கு பின்னர்- தனது உயிருக்கு ஆபத்து அதிகரித்த நிலையில்  அவர் தனது மனைவிமகளுடன் நியுயோர்க்கிற்கு தப்பிச்சென்றார்.     போத்தல ஜயந்த தன் மீதான தாக்குதலிற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது குறித்து ஏமாற்றம் வெளியிட்டார். என் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் இதுவரை எந்தவித குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் காவல்துறையினர் சிலரிடமிருந்து வாக்குமூலங்களை மாத்திரம் பெற்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ச  ஆட்சிக்கு வந்தால் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் அவர்கள் கொலை செய்யப்பட்டமை குறித்த விசாரணைகள் முடிவிற்கு வரலாம் என  போத்தல ஜெயந்த தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களிற்கு எதிரான வன்முறைகள் குறித்த அனைத்து விசாரணைகளும் முடிவிற்கு வந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் யூன் மாதத்தில் மீண்டும் இலங்கை திரும்பி மீண்டும் பத்திரிகை தொழில் ஈடுபட எண்ணியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்தால் என்னால் இலங்கைக்கு மீண்டும் செல்ல முடியும் என நான் கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனது குடும்பத்தவர்கள் நான் இலங்கை செல்ல அனுமதிக்கமாட்டார்கள்,அப்படி வந்தால் கூட என்னால் பத்திரிகையாளனாக பணியாற்ற முடியும் என நான்கருதவில்லை என தெரிவித்துள்ள அவர் என்னை தாக்கியவர்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையில் என்னால் பத்திரிகை தொழில் ஈடுபடமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர் என கருதப்படும் கோத்தபாய ராஜபக்ச  தனது சகோதரரின் ஆட்சிக்காலத்தில்  பாதுகாப்பு செயலாளராக பணியாற்றினார்.இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை முடித்து வைத்தமைக்காக  அந்த நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினரால் கதாநாயகனாக கருதப்படுகின்றார். இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் இடம்பெற்ற உயிர்த்தஞாயிறுகுண்டுதாக்குதல்கள் அவரது செல்வாக்கை அதிகரித்துள்ளன. பலர் நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமைவழங்க கூடிய தலைவரை எதிர்பார்க்கின்றனர். கோத்தாபய ராஜபக்சவின் அலுவலகத்திடம் நாங்கள் கருத்து கேட்டவேளை அவர்கள் பதில் அளிக்கவில்லை. ஆனால் அவர் தன்மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார். எல்லாவிதமான குற்றச்சாட்டுகளையும் மேற்கொள்ளலாம் ஆனால் அதற்கு ஆதாரம் வேண்டுமென கோத்தாபயவின்பேச்சாளர் சரத் அமுனுகம சமீபத்தில் தெரிவித்தார். கோத்தபாய ராஜபக்ச தனது முதல் பிரச்சார கூட்டத்தில் தான் அதிகாரத்திற்கு வந்த மறுநாள் சிறையில் உள்ள அனை;த்து படையினரையும் விடுதலைசெய்வேன் எனதெரிவித்திருப்பது குறித்து சம்பத் கவலை வெளியிடுகின்றார். விசாரணையின்றி அவர்களை விடுதலை செய்வது சட்டத்தின் ஆட்சியை முடிவிற்கு கொண்டுவரும்  நிலைமை இன்னமும் மோசமடையும் என்கின்றார் அவர். ராஜபக்ச ஜனாதிபதியாகலாம் என்பது குறித்து  நாடுகடந்துவாழும் இலங்கை பத்திரிகையாளர்கள் அச்சம் கொண்டுள்ளனர் என்கிறார் பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் ஆசியாவிற்கான ஒருங்கிணைப்பாளர் ஸ்டீவன் பட்லர்.   2009 முதல் பாரிசில் வாழும் இலங்கைபத்திரிகையாளரான அத்துல விதானகேயும் தற்போதைய அரசாங்கத்தின் தோல்வியை  விமர்சிக்கின்றார். 2015 ற்கு பின்னர் நான் இலங்கை;கு வர திட்டமிட்டிருந்தேன் ஆனால் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தோ அவர்கள் மீதான தாக்குதல்களை விசாரணை செய்வது குறித்தோ குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாததால்  இலங்கை திரும்பும் எண்ணத்தை கைவிட்டுவிட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியானால்  நாடுகடந்து வாழும் பத்திரிகையாளர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்ப முடியாது என்கிறார். அவர் பதவிக்கு வந்தால் நாங்கள் இலங்கைக்கு திரும்பும் எங்கள் நம்பிக்கைகள் சிதறடிக்கப்பட்டுவிடும் என்கிறார் அவர். https://www.virakesari.lk/article/68901