Sign in to follow this  
ampanai

5 தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் பேச்சு

Recommended Posts

5 தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் பேச்சு

 
 
Monday, October 21, 2019 - 6:00am
NW05.jpg?itok=KZqtWM0U

யாரை ஆதரிப்பது?

23ம் திகதி  முக்கிய சந்திப்பு

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை தீர்மானிக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஐந்து கட்சிகள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் எம்.பி நேற்று தெரிவித்தார்.

எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் அன்றைய தினத்தில் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறுமென்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து கூட்டாக தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளன. இதற்கிணங்க ஜனாதிபதி வேட்பாளர்களிடம்

தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பான 13 கோரிக்கைகளை முன்வைத்து, அதனை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதென உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை சம்பந்தமாக இரா. சம்பந்தன் எம்.பியிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி ஐந்து கட்சிகள் இணைந்து தயாரித்துள்ள 13 அம்ச கோரிக்கைகள் தொடர்பில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயங்கும் நிலையே காணப்படுகிறது.

மேற்படி கோரிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இணக்கம் தெரிவிக்கப்படுமானால் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை இழக்க நேருமோ என்ற மனப்பாங்கிலேயே அவர்கள் இதுவரை அது தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லையென அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

https://www.thinakaran.lk/2019/10/21/உள்நாடு/42382/5-தமிழ்-கட்சிகள்-தொடர்ந்தும்-பேச்சு

Share this post


Link to post
Share on other sites

தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்கள் நிராகரிக்க வேண்டும் அஸ்கிரிய பீடம் கோரிக்கை

வடக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள யோசனைகளை ஜனாதிபதி வேட்பாளர்கள் நிராகரிக்க வேண்டும் என அஸ்கிரிய பிரிவின் செயற்குழு உறுப்பினர் கொடகம மங்கள தேரர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன அவரிடம் ஆசீர்வாதம் பெற சென்றபோதே தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்.   
 

குறித்த யோசனையை தனிப் பட்ட ரீதியாக எதிர்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
 

நாட்டை பிளவுபடுத்துவதற்கான வேலைகளை அவர்கள் மேற்கொள்கின்றார்கள் என்பது நன்கு புலப்படுவதன் காரணமாக இதனை ஜனாதிபதி வேட்பாளர்கள் நிராகரிக்க வேண்டும்.
 

இது தொடர்பில் வேட்பாளர்கள் பகிரங்கமாக எதிர்ப்பினை வெளியிட வேண்டும் என அஸ்கிரிய பிரிவின் செயற்குழு உறுப்பினர் கொடகம மங்கள தேரர் தெரிவித்துள்ளார்.        

http://valampurii.lk/valampurii/content.php?id=19582&ctype=news

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this