Sign in to follow this  
தமிழ் சிறி

2024இல் அமெரிக்காவை பின்தள்ளும் இந்திய பொருளாதார வளர்ச்சி

Recommended Posts

These-20-countries-will-dominate-global-growth-in-2024-700x450.jpg

2024இல் அமெரிக்காவை பின்தள்ளும் இந்திய பொருளாதார வளர்ச்சி

2024ஆம் ஆண்டு உலக அளவில் வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் முதல் 20 நாடுகளின் பட்டியலை சர்வதேச நாணய நிதியம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் அமெரிக்காவை பின்தள்ளி, இந்தியா முன்னேறும் என கணிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் வெளியீட்டில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு உலக அளவில் வளர்ச்சி என்பது குறைவாகவே இருக்கும். பொருளாதாரமும் மந்தமாகவே இருக்கும். இந்த ஆண்டு உலக அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் வளர்ச்சியில் 3 சதவீதம் சரிவு ஏற்படலாம். இது உலகின் 90 சதவீதம் பகுதியை பாதிக்கும்.

வளர்ச்சி விகித பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் என்றாலும், சர்வதேச பொருளாதார வளர்ச்சியின் சரிவு காரணமாக வளர்ச்சி மந்தமாகவே இருக்கும்.

உலக வளர்ச்சியில் அமெரிக்காவின் பங்கு முக்கியமானதாக இருந்தாலும், 2024இல் வளர்ச்சியடையும் நாடுகள் வரிசையில் இந்தியாவே தொடர்ந்து 3ஆவது இடத்தில் இருக்கும்.

அத்துடன், இந்தோனேசியா 4ஆவது இடத்திலும், ஐரோப்பா 9ஆவது இடத்திலும் இருக்கும். ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி ஜப்பான் 5ஆவது இடம் பிடிக்கும். ஜெர்மனி 7வது இடத்தில் இருக்கும்.

இவை தவிர துருக்கி, மெக்ஸிகோ, பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஸ்பெயின், போலந்து, கனடா ஆகிய நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் முதல் 20 நாடுகள் பட்டியலில் இடம்பிடிக்கும். அதே சமயம் வியட்நாம் அந்த பட்டியலில் இருந்து வெளியேறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

These-20-countries-will-dominate-global-growth-in-2024-2.jpg

http://athavannews.com/2024இல்-அமெரிக்காவை-பின்தள்/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this