Jump to content

ஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ரணில் அழைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

tamiul-party-1.jpg

ஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ரணில் அழைப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் முன்வைப்பதற்காக 13 அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய ஆவணத்தை தயாரித்துள்ள ஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன், கட்சிப் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒரு சந்திப்பைப் கோரினார். அவர் நேரத்தை வழங்கியதும் அவரைச் சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன், ”முன்வைக்கப்பட்ட 13 கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்கள் நிராகரிப்பதால், தமிழ் கட்சிகள் மனம் தளராது.

எந்தவொரு பிரதான வேட்பாளரும் எங்களை மகிழ்விக்கமாட்டார்கள் என்பதை அறிந்தே இந்த திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் நீண்டகால கோரிக்கைகள் குறித்து சிங்கள மக்களுக்கு அறிவுறுத்துவதே இதன் நோக்கம்.

ஒரு நோய் இருந்தால், அதனைக் குணப்படுத்த சரியான மருந்து கொடுக்க வேண்டும். தவறான மருந்தை வழங்குவதன் மூலம் நோயை குணப்படுத்த முடியாது.

ஒரு சிறுபான்மைக் குழுவான தமிழ் மக்கள், தங்கள் விவகாரங்களைக் கவனிக்கும் உரிமை இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு நெருங்கியவர்கள் தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்துள்ளனர்.

அதாவது எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ சார்பாக அதனை நிராகரித்தார். சஜித் பிரேமதாசாவுக்காக பரப்புரை செய்யும் அமைச்சர் கபீர் காசிம் அத்தகைய நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஐந்து-தமிழ்க்-கட்சிகளின்/

Link to comment
Share on other sites

 

தமிழ்க் கட்சிகளை சந்திக்க ரணில் அழைப்பு

tamil-parties-sign-300x200.jpeg

அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் முன்வைப்பதற்காக 13 கோரிக்கைகளை உள்ளடக்கிய ஆவணத்தை தயாரித்துள்ள ஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்க சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன், கட்சிப் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒரு சந்திப்பைப் கோரினார். அவர் நேரத்தை வழங்கியதும், அவரைச் சந்திப்போம்.” என்று அவர் கூறினார்.

இரண்டு முக்கிய அதிபர் வேட்பாளர்களான கோத்தாபய ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருடன் நெருங்கியவர்கள் தமிழ்க்கட்சிகளின் இந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்து விட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, கோத்தாபய ராஜபக்ச சார்பாக அதனை நிராகரித்தார். சஜித் பிரேமதாசாவுக்காக பரப்புரை செய்யும் அமைச்சர் கபீர் காசிம் அத்தகைய நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று கூறினார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, சி.வி.விக்னேஸ்வரன், ”முன்வைக்கப்பட்ட 13 கோரிக்கைகளை, அதிபர் வேட்பாளர்கள் நிராகரிப்பதால், தமிழ் கட்சிகள் மனம் தளராது.

எந்தவொரு பிரதான வேட்பாளரும் எங்களை மகிழ்விக்கமாட்டார்கள் என்பதை அறிந்தே இந்த திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

வடக்கு,கிழக்கில் உள்ள தமிழர்களின் நீண்டகால கோரிக்கைகள் குறித்து சிங்கள மக்களுக்கு அறிவுறுத்துவதே இதன் நோக்கம்.

ஒரு நோய் இருந்திருந்தால், அதனைக் குணப்படுத்த சரியான மருந்து கொடுக்க வேண்டும். தவறான மருந்தை வழங்குவதன் மூலம் நோயை குணப்படுத்த முடியாது.

ஒரு சிறுபான்மைக் குழுவான தமிழ் மக்கள், தங்கள் விவகாரங்களைக் கவனிக்கும் உரிமை இருக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/10/22/news/40749

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேரம்பேசிக் கிடைப்பது சலுகைகள் மட்டுமே
அதுவும் கூட்டமைப்பினரின் பேரம் என்றால் எதுவென்று மக்கள் நன்கறிவார்கள்

Link to comment
Share on other sites

ஒரு பக்கம் தமிழர் தரப்பிற்கு அழைப்பு 
மறு  பக்கம் தமிழர் கோரிக்கைகளை நிராகரிப்பு என்ற செய்தி 

சிங்களவர்களுக்கு சொல்லும் செய்தி வேறு, தமிழர்களுக்கு சொல்லும் செய்து வேறு.

வெல்லும் வரை தமிழர் வாக்குகள் தேவை. வென்றபின், தமிழ் மக்கள் மறக்கப்பட்டு விடுவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறுபான்மைக் குழுவான தமிழ் மக்கள், தங்கள் விவகாரங்களைக் கவனிக்கும் உரிமை இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் பேச்சு மற்றும் அறிக்கைகளில் தமிழ் அரசியல்வாதிகள் சரியான சொற்பதங்களை பயன்படுத்தவேண்டும். தமிழரை குழு என்பதிலும் இனம் என்றுதான் வழங்கப்படவேண்டும்.

அத்துடன் சஜித் அதிபரானால் ரணில் இன்றுள்ள அரசியல் பலத்துடனோ பிரதமராகவோ இருப்பார் என்று சொல்லமுடியாது. எனவேதான் பல்லு பிடுங்கிய பாம்புடன் பேரம் பேசுவதில் பயனில்லை.

அதிபர் தேர்தலில் வைக்கப்படும் தமிழ்த்தரப்பு கோரிக்கைகளை சஜித்திடமே முன்வைக்கப்பட வேண்டும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும் தமிழர் தரப்புக்கு சஜித் தான் விடுக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

22 hours ago, தமிழ் சிறி said:

எந்தவொரு பிரதான வேட்பாளரும் எங்களை மகிழ்விக்கமாட்டார்கள் என்பதை அறிந்தே இந்த திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் நீண்டகால கோரிக்கைகள் குறித்து சிங்கள மக்களுக்கு அறிவுறுத்துவதே இதன் நோக்கம்.

ஒரு நோய் இருந்தால், அதனைக் குணப்படுத்த சரியான மருந்து கொடுக்க வேண்டும். தவறான மருந்தை வழங்குவதன் மூலம் நோயை குணப்படுத்த முடியாது.

நல்ல கருத்துக்கள்!

 

12 hours ago, vanangaamudi said:

அதிபர் தேர்தலில் வைக்கப்படும் தமிழ்த்தரப்பு கோரிக்கைகளை சஜித்திடமே முன்வைக்கப்பட வேண்டும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும் தமிழர் தரப்புக்கு சஜித் தான் விடுக்கவேண்டும்.

மிக முக்கியமான கருத்து!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.