Jump to content
Sign in to follow this  
nunavilan

ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகளால் அமோக வெற்றி

Recommended Posts

ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகளால் அமோக வெற்றி

gary-anandasangaree-300x200.jpg

கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றாரியோ மாகாணத்தில், ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி  21,241 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

ஆளும் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரிக்கு இந்தமுறை 62.3  வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக இறுதி முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் பெற்ற வாக்குகள் விபரம் –

  • ஹரி ஆனந்தசங்கரி – லிபரல் கட்சி     –    31,339 – 62.3 %
  • பொப்பி சிங் – கொன்சர்வேட்டிவ் கட்சி   – 10,088 – 20.1 %
  • கிங்ஸ்லி வோக் – புதிய ஜனநாயக கட்சி – 5,735 – 11.4 %
  • ஜெசிக்கா ஹமில்டன் – கிறீன் கட்சி      –    2,324    – 4.6 %
  • டிலானோ சாலி – மக்கள் கட்சி               –   466 –  0.9 %
  • மார்க் தேடோரூ – கிறிஸ்தவ பாரம்பரிய கட்சி –  353     – 0.7 %
  • பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் – 76,408
  • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  – 50,305
  • http://www.puthinappalakai.net/2019/10/22/news/40761

Share this post


Link to post
Share on other sites

கனடா தேர்தலில் வென்ற இலங்கை தமிழர்: யார் இந்த கெரி ஆனந்தசங்கரி?

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக அந்நாட்டு எம்பியாகியுள்ளார் இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி.

ஆளும் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட கெரி ஆனந்த சங்கரி, இந்த தேர்தலில் 62.3 சதவீத வாக்குகள் பெற்று வென்றுள்ளார்.

அவரை எதிர்த்து கன்சவேடிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட லெஸ்லின் லூயிஸ் மற்றும் கனேடிய தமிழரான என்.டி.பி கட்சி வேட்பாளர் காந்தரட்ணம் சாந்தகுமார் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கெரி ஆனந்தசங்கரி, 34.8 வீத வாக்குகளை பெற்று வெற்றியை தன்வசப்படுத்திக் கொண்டார்.

யார் இந்த கெரி ஆனந்தசங்கரி?

இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரே கெரி ஆனந்தசங்கரி.

கனடா தேர்தலில் வென்ற இலங்கை தமிழர்படத்தின் காப்புரிமைLENOVO TWITTER

இலங்கையில் காணப்பட்ட யுத்த சூழ்நிலையை அடுத்து, தனது 13ஆவது வயதில் புலம்பெயர்ந்து அவர் கனடா சென்றார்.

கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள் சேவை நிலையமொன்றை அவர் ஆரம்பித்துள்ளார்.

கனடாவில் வாழ்கின்ற தமிழ் இளைஞர்களிடம் காணப்படும் முரண்பாடுகளை தீர்ப்பதற்காக முன்னின்று செயற்படுபவராக கெரி ஆனந்தசங்கரி திகழ்கின்றார்.

கனடா தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகளிலும் அவர் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

அத்துடன், கனேடிய தமிழ்க் காங்கிரஸ் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளார்.

கனடாவில் வழக்கறிஞராக செயற்பட்ட கெரி ஆனந்தசங்கரி, பின்னர் சிறந்த அரசியல்வாதியாகவும் பெயரெடுத்துள்ளார்.

கனடா தேர்தலில் வென்ற இலங்கை தமிழர்படத்தின் காப்புரிமைTWITTER

லிபரல் கட்சியின் வளர்ச்சிக்காக செயற்பட்டவர்களில் கெரி ஆனந்தசங்கரிக்கு பெரிய பங்களிப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.

கனடாவில் இந்த முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி, நான்கு தமிழர்கள் போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அரசியலில் தான்கொண்டுள்ள கொள்கையை தனது மகனும் கொண்டுள்ளதால் மகிழ்ச்சி அடைவதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகமும், கெரி ஆனந்தசங்கரியின் தந்தையுமான வீரசிங்கம் ஆனந்தசங்கரியும் தெரிவித்தனர்.

பிபிசி தமிழுக்கு வழங்கிய செவ்வியிலேயே வீரசிங்கம் ஆனந்தசங்கரி இதனைக் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கனேடிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருப்பதால் பெருமிதம் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50148789

Share this post


Link to post
Share on other sites
33 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வாழ்த்துக்கள் ஹரி ஐயா

விட மாட்டீங்களே. தேர்தல்ல ஒருவர் வெண்டால் உடனையே ஐயா போட தொடங்கிவிடுவீங்களே. 

Share this post


Link to post
Share on other sites

மச்சான் ஹரி வாழ்த்துக்கள் டா...

  • Haha 4

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் சன் ......!   💐

Share this post


Link to post
Share on other sites

நான் அறிந்தவரையில் ஈழத்தில் இவருடைய அப்பா செய்யும் அரசியலைவிடப் புலத்தில் இவர் செய்யும் அரசியல் மிகவும் வேறுபாடாக
இருக்கின்றது.
அந்தவகையில் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒரு நட்சத்திரமாக இப்போது இவர் இருக்கின்றார்
அவருடைய வளர்ச்சி அவருடைய  கைகளிலும் அவர் சார்ந்த கட்சியிலும்
தங்கியிருக்கின்றது.
காலம் தான் பதில் சொல்லவேண்டும்

வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Sasi_varnam said:

மச்சான் ஹரி வாழ்த்துக்கள் டா...

tenor.gif

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

நுணா... உண்மையில் நானும் ஹரியும் நண்பர்கள் தான் ...நம்புங்க தல 😉

Share this post


Link to post
Share on other sites
8 minutes ago, Sasi_varnam said:

நுணா... உண்மையில் நானும் ஹரியும் நண்பர்கள் தான் ...நம்புங்க தல 😉

நம்பீட்டன் தல.

Share this post


Link to post
Share on other sites

கனடிய தேர்தல்கள் | வற்றாத நீலக்கண்ணீர்…

சிவதாசன்

திருவிழா ஒருவாறு முடிந்துவிட்டது. முடிவு எதிர்பார்த்தது தான். பங்குகாரர்கள் சண்டை இனிமேல்தான். ட்ரூடோவின் சாதகத்தில் வியாழ பகவான் பத்தாம் இடத்துக்குப் போகாமல் பலமான எச்சரிக்கையைக் கொடுத்துவிட்டு வக்கிரப்பட்டுத் திரும்பிவிட்டார். இனி எல்லாம் அவர் கைகளில்.

images-1-4.jpg
கனடிய தேர்தல் முடிவுகள்

ஆசனங்களை இழந்தாலும் லிபரலும், புதிய ஜனநாயகக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. புளக் கியூபெக்குவா கட்சிக்கும் ஒரு வகையில் வெற்றிதான், ஆயுதங்கள் வழங்கப்பட்ட ‘ஆவா’ குழுபோல யாரும் எப்போதும் ‘hire’ பண்ணலாம்.

இதில் கன்சர்வேட்டிவ் கட்சி, கூடிய ஆசனங்களைப் பெற்றிருந்தாலும், தோல்வியுற்ற ஒன்றுதான். தன்னோடு சேர்த்து அல்பேர்ட்டா, சஸ்கச்செவான் மாகாணங்களையும் குழிக்குள் இழுத்து விழுத்தியிருக்கிறது.

லிபரல் கட்சிக்கு, இரண்டாவது தவணை ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு அப்பால், அதைத் திருத்திக்கொள்ள மக்கள் ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கிறார்கள். என்னதான் செய்தாலும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை பீற்றர் மக்கேயுக்குப் போகுமானால், லிபரல் கட்சிக்கு இந்தத் தவணையே முற்றுப்புள்ளி.

லிபரல் கட்சிக்கு எண்ணை மாகாணங்களால் (அல்பேர்ட்டா, சஸ்கச்சேவன்) இரட்டைத் தலையிடி. ஒருபக்கம் சூழலியலாளர், சுதேசிகள் மறுபக்கம் பஞ்சத்தில் வாடும் எண்ணைத் தொழிலாளர்கள். ஒரு காலத்தில் எண்ணை பொங்கி வழிந்தபோது அத்லாந்திக் மாகாணங்களை வழித்துத் துடைத்த அல்பேர்ட்டா கொழுப்பேறித் தன் எல்லாப் பொன் முட்டைகளையும் ஒரே எண்ணைக் கூடைக்குள் போட்டுவந்தனர். அவர்களின் மிகப்பெரிய வாடிக்கையாளரான அமெரிக்காவில் ஒபாமா 8 வருடங்களாக எண்ணை தோண்டிச் சுய நிறைவுக்கு வருமட்டும், அதன் பிறகு ‘அமெரிக்கா முதல்’ என்ற கோசம் போடும் துரும்பர் 4 வருடங்களை நிறைவு செய்யுமட்டும் வெள்ளி பார்த்துக்கொண்டிருந்தது அல்பேர்ட்டா. வெனிசுவேலா மக்களின் வயித்திலடித்த பலன் தான் அம்மாகாண மக்களின் வயிறுகளையும் எரிக்கிறது.

லிபரல் கட்சியை முற்றாக நிராகரித்ததனால் அல்பேர்ட்டாவும், சஸ்கச்சேவனும் தமது தலையில் தான் எண்ணையை அள்ளிக் கொட்டியிருக்கிறார்கள். அல்பேர்ட்டாவின் எண்ணையைக் கொண்டு சென்று விற்பதற்கென்று குழாய்களைப் போடுவதற்கு லிபரல் கட்சி சூழலியலாளருடனும், சுதேசிகளுடனும் போராட வேண்டியிருந்தது. பொறுப்புள்ள அரசின் கடமையதுவெனினும் அல்பேர்ட்டா வாக்கு வங்கியும் அவர்களுக்குத் தேவையாக இருந்தது. முற்றாக நிராகரிக்கப்பட்ட நிலையில் இம் மாகாணங்களுக்கு உதவவேண்டுமென்ற ட்ரூடோவின் ஆர்வம் தளர்ச்சியடைய வாய்ப்புண்டு.

இந்தா ‘தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைக்கப் போகிறேன்’ என்று அல்பேர்ட்டாவின் முதலமைச்சர் கெனி தினவெடுக்கலாம். துறைமுகமில்லாத நாடொன்றை (land locked) உருவாக்கிய பின், விமானங்களில் எண்ணை விற்கும் நாடாக வேண்டுமானால் அல்பேர்ட்டாவை விட்டு விடலாம்.

அக்டோபர் 1970 இல் தான் தந்தையார் ட்ரூடோ கியூபெக் பிரிவினைவாதிகளுடன் ‘போரிட்டு’ நாட்டைக் காப்பாற்ற வேண்டி ஏற்பட்டது. அக்டோபர் 2019 இல், கிட்டத்தட்ட 50 வருடங்களில், மகன் ட்ரூடோ அல்பேர்ட்டா பிரிவினைவாதிகளுடன் போரிடவேண்டி ஏற்பட்டிருக்கிறது. வரலாறு சுழலத்தானே வேண்டும்.

எப்படியிருந்தாலும், எண்ணைக் குழாய் விடயத்தில் இருந்த சுமையை இறக்கி விட்டு ‘நீங்க இல்லாமலேயே ஆட்சியமைக்க என்னால் முடியும்’ என்ற திமிரை ட்ரூடோவின் தோளில் அல்பேர்ட்டா, சஸ்கச்சேவன் மாகாணங்கள் ஏற்றியிருக்கின்றன. அது லிபரலின் வெற்றி.

ஜக்மீட் சிங் தலைமையில் புதிய ஜனநாயகக் கட்சி ஆசனங்களைப் பறிகொடுத்திருந்தாலும் அதற்கு ஒரு ‘அதிரடிப்படை’ ஸ்தானத்தைக் கொடுத்ததன் மூலம் ட்ரூடோவைக் காவல் புரியும் பணியை அக் கட்சி எடுத்துக்கொண்டுள்ளது ஒரு வகையில் அதற்கு வெற்றி. ஆட்சியில் அமராமலே தனது கொள்கைகள் சிலவற்றையேனும் அமுல்படுத்த அக் கட்சிக்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் புதிய ஜனநாயகக் கட்சிக்கும் இத் தேர்தல் வெற்றியைத்தான் கொடுத்துள்ளது.

கியூபெக் மாகாணத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கு அமெரிக்கா அருகில் இருப்பதும், துறைமுகங்கள் இருப்பதும் வர்த்தகத்துக்கு மிக அனுகூலமானது. Energy East Pipeline விடயத்தில் லிபரல் அரசுக்கு அழுத்தம் கொடுத்து அத்திட்டத்தை நிறுத்தியதற்கு கியூபெக் மாகாண அரசும் ஒரு காரணம் என்றொரு குற்றச்சாட்டும் உண்டு. சூழலியலாளரின் அழுத்தத்தின் பேரில் ட்ரூடோ தேசிய ஆற்றல் சபையின் (National Energy Board) கட்டுப்பாடுகளை இறுக்கியதும் ஒரு காரணம். ஆனால் அதை விட முக்கியமானது இந்த எண்ணைக்குழாய்த் திட்டத்தின் சொந்தக்காராரான Trans Canada Pipeline என்ற நிறுவனம், எண்ணை விலைகளில் ஏற்பட்ட சரிவினால் நட்டமடைய நேரிடும் என்ற வியாபாரக் காரணத்தால் இத் திட்டத்திலிருந்து மெதுவாக நழுவிவிட்டதே பிரதான காரணி என்றும் பேசப்பட்டது. என்ன இருந்தாலும் கியூபெக் மாகாணத்திற்கு இத் திட்டத்தால் எதுவித பலனுமில்லை. லிபரல் கட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பணியை இத் தேர்தல், புளக் கியூபெக்குவாவுக்குக் கொடுத்ததன் மூலம் அதுவும் வெற்றியையே பெற்றிருக்கிறது.

இத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் அன்ட்ரூ ஷியர் தான். அவரது தீவிர வலதுசாரிக் கொள்கைகள் காலத்துக்கும், இன்றய கனடியர்களுக்கும் ஏற்பானது அல்ல என்பதை அவர் புரிந்துகொள்ளும் நிலையில் இருக்கவில்லை. ட்ரூடோ என்னதான் திமிர் கொண்டிருந்தாலும், பொருளாதாரம் பலமாக இருந்தது. வேலைவாய்ப்பு உயர்வாக இருந்தது. கடனைப் பட்டு மக்களை அவர் மகிழ்வாக வைத்திருந்த நடைமுறையும், வயிற்றைக் கட்டி, வேலைகளைக் குறைத்து பணத்தை மிச்சம்பிடித்து ஆள முயன்ற ஒன்ராறியோ மாகாணத்தின் ஆட்சி முறையும் ஏககாலத்தில் மக்கள் முன் வைக்கப்பட்டன. ஒன்ராறியோவின் ஆட்சிமுறையையே அண்ட்ரூ ஷியரும் பின்பற்றப் போகிறார் என்ற பயம் மக்களைப் பிடித்திருந்தது. அந்த வகையில் பழமைவாதத்தை இறுகப்பிடித்திருந்த கட்சிக்கு இத் தேர்தல் ஒரு பாடம் கற்பித்திருக்கிறது. அண்ட்ரூ ஷியரின் தலைமைக்கு அச்சுறுத்தல் அருகே வந்திருக்கிறது. அதுவே ட்ரூடோவுக்காகவும் காத்திருக்கலாம்.

மற்றும்படி, இத் தேர்தல் மரம் சில பழையவர்களை உலுப்பி விழுத்தியிருக்கிறது. கன்சர்வேட்டிவ் கட்சியின் உபதலைவி லிசா ரெயட் வென்றிருக்க வேண்டியவர். தலைவரில் இல்லாத முறுக்கும், பேச்சும் அவரிடமிருந்தது. SNC Lavalin விவகாரத்தின்போது அவர் மிளிர்ந்தார். அவர் தலைவராக இருந்திருந்தால் சில வேளைகளில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும். ஜோடி வில்சன்-றேபோல்ட் வென்றது மகிழ்ச்சி. ட்ரூடோ ஜோடியின் முகத்தில் தினமும் விழிப்பதுவும் தேவையான ஒன்றுதான். ஆனால் ஜோடியின் தோழி ஜேன் பில்பொட் தோற்றது கொஞ்சம் பாரமாகத்தான் இருக்கிறது.

நம்ம ஆட்களில், கெரி ஆனந்தசங்கரியின் வெற்றி போன தவணையே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. மற்றவர்கள்? ம்…உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்!

https://marumoli.com/கனடிய-தேர்தல்கள்-வற்றாத/?fbclid=IwAR1RrCTxRMHJpiS5Kn2YtF-9ulgtdu1t7mahvUIRD5ezlxRzcnCSe8r9gNg

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் ஹரி 💐

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, tulpen said:

விட மாட்டீங்களே. தேர்தல்ல ஒருவர் வெண்டால் உடனையே ஐயா போட தொடங்கிவிடுவீங்களே. 

என்னில் வயதில் மூத்தவர்களை ஐயா என்பேன் அல்லது அண்ணன் இதில் ஏதும் தவறுகள் உள்ளதோ ??

Share this post


Link to post
Share on other sites

அப்பர் ஈழத்தில் சொந்த இனத்தைக் காட்டிக்கொடுக்க கடிதம் அறிக்கை எழுதிப் பிழைக்கிறார். மகன் கனடாவில் என்ன செய்கிறார்.. கடந்த தேர்தலிலும் வென்றார்.. என்ன செய்து முடித்தார்.. என்று யாராவது சொல்லுங்களன். அதற்குப் பிறகு தீர்மானிப்போம்.. வாழ்த்துவதா இல்லையா என்று.

அதுசரி.. அந்த ராதிகா அம்மையார் என்னானார்..??! 

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, nedukkalapoovan said:

அதுசரி.. அந்த ராதிகா அம்மையார் என்னானார்..??! 

கனகாலம் கேள்விப்பட்டன் இப்பவும் ஆள் இருக்காவோ என்ன ராதிகா 

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

என்னில் வயதில் மூத்தவர்களை ஐயா என்பேன் அல்லது அண்ணன் இதில் ஏதும் தவறுகள் உள்ளதோ ??

தப்பா நினைக்கதேங்கோ  நான் ஜோக்கா தான் சொன்னேன். 

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

74612377_10157089559314130_5769256077807

முன்னாள் கனேடிய பிரதமர்,இந்நாள் கனேடிய பிரதமர்.

Share this post


Link to post
Share on other sites

92unc-CdWFakK2hQx7xokXqIMGf1_0jaLKbNxwlV

இந்நாள் கனேடிய பிரதமர். பிடல் காஸ்ரோ

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, nedukkalapoovan said:

அப்பர் ஈழத்தில் சொந்த இனத்தைக் காட்டிக்கொடுக்க கடிதம் அறிக்கை எழுதிப் பிழைக்கிறார். மகன் கனடாவில் என்ன செய்கிறார்.. கடந்த தேர்தலிலும் வென்றார்.. என்ன செய்து முடித்தார்.. என்று யாராவது சொல்லுங்களன். அதற்குப் பிறகு தீர்மானிப்போம்.. வாழ்த்துவதா இல்லையா என்று.

அதுசரி.. அந்த ராதிகா அம்மையார் என்னானார்..??! 

அரசியலிலும் சொந்த வாழ்க்கையிலும் அப்பாவுக்கும் மகனுக்கும் வேறுபாடு உண்டு.

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, இணையவன் said:

அரசியலிலும் சொந்த வாழ்க்கையிலும் அப்பாவுக்கும் மகனுக்கும் வேறுபாடு உண்டு.

அரசியலில் அவர் தான்சார்ந்த கட்ச்சியின் வரம்பிட்குள் நின்று முடிந்த அளவு செயட்படுவதாகத்தான் அறிகிறேன்.  தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமாக நான் கருத்து கூற கூடாது (ஆனாலும் கூறுகிறேன்,  அவர் தகப்பனை விட 100 மடங்கு ஒழுகுகமானவர் என அறியமுடிகிறது  ) அரசியலுக்கு வருவதட்க்காக canadian tamil congress இக்குள் பலபேரை வெட்டி ஓடியதாக கூறப்படுகிறது.  இதனை இவரது திறமையாகக்கூட கூறலாம். அக்கக்காலப்பகுதியில் பல திறமையானவர்க்ள் congress ஐ  விட்டு வெளியேறியதாக அறிந்தேன்.  

Share this post


Link to post
Share on other sites

ஹரிக்கு கனெடியத்தமிழ்சமூகத்திற்குள் தனியான மதிப்பு இருக்கிறது. விடுதலையின் பெயரால் இயங்கும் (தாயகத்தின் ஜாம்பவான்கள் தாங்கள் என்று மார்தட்டிக்கொள்ளும்) அமைப்புகள்  2009 இற்குப் பின்னரான காலப்பகுதியில் நிறையவே சேறடித்தார்கள். சேறடித்தவர்களே மண்கவ்வினார்கள். ஹரி போன்ற ஒழுக்கமான பண்புகள் நிறைந்த மனிதர்கள் மக்களால் வாழவைக்கப்படுவார்கள்.

 

தயவு செய்து அவருடைய தகப்பனாரோடு இணைத்து கொச்சைப்படுத்தாதீர்கள்.

வாழ்த்துக்கள் ஹரி இன்றுபோல் என்றும் பண்புடன் மேன்மையுற வாழ்த்துகிறேன்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

கார்த்திகை 20ஆம் திகதி புதிய அமைச்சரவை பதவி  ஏற்கும்.

கரிக்கு குறைந்தது ஒரு துணை அமைச்சர் பதவி கிடைக்கலாம்.  

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

×
×
  • Create New...