• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

பலாலியில் இந்திய குழுவுக்கு தேநீர் கொடுக்க மறுத்த சிறிலங்கா விமானப்படை தளபதி

Recommended Posts

பலாலியில் இந்திய குழுவுக்கு தேநீர் கொடுக்க மறுத்த சிறிலங்கா விமானப்படை தளபதி

palaly-airport-1-1-300x200.jpg

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை ஆரம்பிப்பதற்கு சிறிலங்கா விமானப்படைத் தளபதி ஒத்துழைக்கவில்லை என்றும், இந்திய தொழில்நுட்ப குழுவுக்கு தேநீர் கூட வழங்க மறுத்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல், ‘கொழும்பு ரெலிகிராப்’ இணையத்தில் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலைய திறப்பு விழாவில் பங்கேற்றது தொடர்பாக ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

அந்தக் கட்டுரையிலேயே அவர் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார். அவரது கட்டுரையில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளதாவது,

“யாழ்ப்பாண விமான நிலையத்தை ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுவதற்குப் பதிலாக, அந்த திட்டம் இனவாத பொறாமைக்கு உள்ளானது.

விமானப்படைத் தளபதி ஒத்துழைக்க தவறிவிட்டார்.

2019 செப்ரெம்பர் 16ஆம் நாள், வந்திருந்த இந்திய தொழில்நுட்ப குழுவினர் கடுமையான வேலைகளின் பின்னர், தேநீர் கேட்டனர்.

அதற்கு அவர், “இந்தியர்கள் இதனை தமிழர்களுக்காக செய்கிறார்கள். நீங்கள் என்னிடம் தேநீர் பரிமாற வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?“ என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, சோர்ந்து இந்திய குழுவினர், பிற்பகல் 2 மணியளவில் தமக்குப் புத்துணர்ச்சியைப் பெறுவதற்காக ஜீப்பை காங்கேசன்துறைக்கு அனுப்பினர்” என்று அவர் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/10/22/news/40753

Share this post


Link to post
Share on other sites

"இதையடுத்து, சோர்ந்து இந்திய குழுவினர், பிற்பகல் 2 மணியளவில் தமக்குப் புத்துணர்ச்சியைப் பெறுவதற்காக ஜீப்பை காங்கேசன்துறைக்கு அனுப்பினர்” என்று அவர் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்."

 

வேறு ஏதாவது சோமபானம் கொடுத்து புத்துணர்ச்சியை இன்னொரு சிங்கள அதிகாரி வழங்கி இருப்பார். 

இந்தியாவும் தமிழர்கள் மீதான வெறுப்பை, வழமைபோன்று  கண்டும் காணாதமாதிரி  போயிருக்கும். 

Share this post


Link to post
Share on other sites

memees.php?w=650&img=dmFkaXZlbHUvYmVhci1

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, nunavilan said:

பலாலியில் இந்திய குழுவுக்கு தேநீர் கொடுக்க மறுத்த சிறிலங்கா விமானப்படை தளபதி

Oct 22, 2019 | 2:30by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்

 

palaly-airport-1-1-300x200.jpg

 

இதையடுத்து, சோர்ந்து இந்திய குழுவினர், பிற்பகல் 2 மணியளவில் தமக்குப் புத்துணர்ச்சியைப் பெறுவதற்காக ஜீப்பை காங்கேசன்துறைக்கு அனுப்பினர்” என்று அவர் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/10/22/news/40753

இதை நம்பி கே கே ஸ் போகலாமா?
சூறா பிடிக்க போடும் றால் மாதிரி இருக்கு 

Share this post


Link to post
Share on other sites

விமான நிலைய திறப்பு விழா நிகழ்ச்சியில் இத்தனையும் விட மிக மிக கேவலமான பல நிகழ்ச்சிகள் அரங்கேறியுள்ளன.
அனைத்தும் தமிழர்களை ஒரு "தலை மயிருக்கும்" மதிக்காத செயல்களாகவே இருந்துள்ளனவாம். 

Share this post


Link to post
Share on other sites

இந்தியன் ஒரேடியா காலில விழுந்து கும்பிட்டிருப்பான்.
அதான் சைனாட அபிமானிகள் காங்கேசன்துறைக்கு அனுப்பிருக்காங்கள்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

மத்தள விமான நிலையத்தை.... 200 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்டது 
பலாலி விமான நிலையத்துக்கு,  10 மில்லியன் ரூபாய் செலவழித்து கட்டியதையும்... 
பொறுக்க மாட்டாத நிலையில்... தான்,  சிங்களவர்கள் உள்ளார்கள்.

Share this post


Link to post
Share on other sites

ஹிந்தியா எல்லாக் கட்டங்களிலும் சிங்களவர்களுக்கு வலிந்து உதவி வந்தாலும் சிங்களவர்கள் ஹிந்தியாவை தமது நட்பு நாடாகப் பார்ப்பதில்லை.

ஆனால்.. தமிழர்கள்.. ஹிந்தியாவை நட்பு நாடாகப் பார்த்தார்கள்.. எல்லாக் கட்டங்களிலும் ஹிந்தியா தமிழர்களுக்கு எதிராகவே இருந்துள்ளது.

ஹிந்தியாவின் இந்த முரண் அணுகுமுறையால் தான்.. அது பிராந்தியத்தில் சீனாவை - பாகிஸ்தானை.. எதிர்கொள்வதில்.. பல முனைச் சிக்கல்களை எதிர்கொள்கிறது.

ஹிந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு.. யார் நண்பன்.. யார் எதிரி என்பதில் கொஞ்சமும் தெளிவில்லை.

குறிப்பாக ராஜீவ் காந்தி ஆட்சியில் இருந்து.. அதற்குப் பின்னராக அமைந்த எல்லா ஆட்சிகளிலும். 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this