நாட்டில் யுத்தம் நடை­பெற்ற நேரத்தில் ஆயிரக் கணக்­கான அப்­பாவி மக்­களை கொன்று குவித்த ஒருவர் ஜனா­தி­ப­தி­யாக வர வேண்­டுமா அல்­லது மக்­களை வாழ வைக்கத் துடிக்கும் சேவை மனப்­பாங்­கு­டைய ஒருவர் ஜனா­தி­ப­தி­யாக வர வேண்­டுமா என்­பதை மலை­யக மக்கள் ஒப்­பிட்­டு­பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும் என தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வரும் மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான பி.திகாம்­பரம் தெரி­வித்தார்.

thiga.jpg

ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்­பாக தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் நோர்வூட் பகுதி பிர­தேச சபை உறுப்­பி­னர்கள், அமைப்­பா­ளர்கள் மற்றும் தோட்டக் கமிட்டித் தலை­வர்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்கும் கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

நோர்வூட் பிர­தேச சபை உறுப்­பினர் வீ. மஞ்­சுளா தலை­மையில் இடம்­பெற்ற இக்­கூட்­டத்தில் சங்­கத்தின் பிரதித் தலை­வரும், மத்­திய மாகாண சபை முன்னாள் உறுப்­பி­ன­ரு­மான எம். உத­ய­குமார், தேசிய அமைப்­பாளர் ஜி. நகு­லேஸ்­வரன், பிர­தேச அமைப்­பாளர் எஸ். ராஜேந்­திரன், எஸ். ரெங்­கராஜ் உட்­பட பலர் கலந்து கொண்­டார்கள்.

அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

மலை­யக இந்­திய வம்­சா­வளி மக்கள் இந்த நாட்டில் பிர­ஜா­வு­ரி­மையும் வாக்­கு­ரி­மையும் இல்­லா­தி­ருந்த கால கட்­டத்தில் சக­ல­ருக்கும் பிர­ஜா­வு­ரிமை வழங்கி கௌர­வத்­துடன் வாழச் செய்­தவர் அமரர் ரண­சிங்க பிரே­ம­தாச என்றால் அது மிகை­யா­காது. அத்­த­கைய மனி­தா­பி­மானம் கொண்ட தலை­வரின் புதல்வர் சஜித் பிரே­ம­தாச ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கி­யுள்ளார்.

சாதா­ரண மக்கள் வச­தி­யான வீடு­களில் வாழ வேண்டும் என்று வீட­மைப்புத் திட்­டத்தை மேற்­கொண்டு அனைவர் நெஞ்­சங்­க­ளிலும் இடம்­பி­டித்­துள்ளார். அவர் இந்த நாட்­டுக்கு ஜனா­தி­ப­தி­யாக வந்தால் மக்கள் நிம்­ம­தி­யா­கவும் சந்­தோ­ச­மா­கவும் வாழ முடியும் என்­பதில் சந்­தே­கமே இல்லை.

அதே­நேரம், இந்த நாட்டில் யுத்தம் என்ற போர்­வையில் அப்­பாவி மக்­க­ளையும் தமிழ் மக்­க­ளையும் ஆயிரக் கணக்கில் கொன்று குவிக்க கார­ண­மாக இருந்த கோத்த­பாய ராஜ­பக் ஷவும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றார். அதில் மலை­யக அப்­பாவி இளை­ஞர்­களும் கொல்­லப்­பட்­டி­ருந்­தார்கள் என்­பதை இந்த இடத்தில் நினை­வு­ப்ப­டுத்த வேண்டும். அதே­போன்று வெள்ளை வேன் கலா­சா­ரமும் தலை­வி­ரித்­தா­டி­யது. அவர்கள் காலத்தில் மக்கள் பட்ட கஷ்­டங்­களை முழு உல­கமும் அறியும்.

அத்­த­கைய இருண்ட யுகம் மீண்டும் வர வேண்­டுமா என்­பதை மக்­களே தீர்­மா­னிக்க வேண்டும். இன்று மலை­ய­கத்தில் தொழி­லாளர் தேசிய சங்கம் அர­சியல் ரீதியில் பேசப்­படும் ஒரு பாரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. எமது அரசியல் செயற்பாடுகளுக்கு சேறுபூசும் வகையில் சில தனியார் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன.

எனவே, போலியான செய்திகளைக் கேட்டு ஏமாந்து விடாமல் மக்கள் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/67359