(ஆர்.விதுஷா)

எட்டு இலட்சம் பேருக்கு தேர்தல் காலத்தில் புதிதாக சமூர்த்தி  நிவாரணம் வழங்கப்படவிருப்பதாக கூறப்படும் செய்தியில்  எந்தவிதமான  உண்மையும் இல்லை எனவும் அந்த குற்றச்சாட்டை  முற்றாக நிராகரிப்பதாகவும் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக  வலுவூட்டல்  அமைச்சர்  தயாகமகே தெரிவித்தார்.

daya.jpg

இவ்வருடத்தின் ஆரம்பத்தில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி நிவாரணத்தினை வழங்கியிருந்தோம்.  

இருப்பினும் மூன்றரை இலட்சம் பேர் வரையில் சமூர்த்தி நிவாரணத்தை தேவை  உடையவர்களாக  இருந்ததுடன்  விண்ணப்பங்களையும் சமர்ப்பித்திருந்தனர். அவர்களில் மூன்று  இலட்சம்  பேரே  சமூர்த்தி  நிவாரணத்தை  பெறுவதற்கு  தகுதியுடையவர்களாக  காணப்பட்டனர். இந்நிலையில் 8 இலட்சம் பேருக்கு  புதிதாக  சமூர்த்தி  கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுவது எவ்வாறு  உண்மையாக இருக்கும் எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.   

சமூர்த்தி நிவாரணம்  தொடர்பில்  தன்மீது முன்வைக்கப்பட்டிருக்கும்  குற்றச்சாட்டுக்கு மறுப்புத்தெரிவித்தும் விகக்கமளிக்கும்  வகையிலும்  திணைக்களத்தில் இன்று அமைச்சர் கமகே ஏற்பாடு செய்யதிருந்த ஊடகவியலாளர்  சந்திப்பின்  போது அதனை தெரிவித்த  அவர்  தொடர்ந்து கூறியதாவது , 

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல்  குழப்ப நிலையின் காரணமாக நல்லாட்சி  அரசாங்கத்தினால்  முன்னெடுக்கப்பட்டு  வந்த வேலைத்திட்டங்களுக்கு பாரிய பாதிப்பு எற்பட்டிருந்தது.

இருப்பினும்  அவற்றை  ஈடு செய்யும் வகையில்  மீதமிருந்த  8  மாத  காலப்பகுதிக்குள் அனைத்து வேலைத்திட்டங்களையும் பூர்த்தி  செய்யும்  நடவடிக்கைகளை  முன்னெடுத்திருந்தோம். அந்த வகையில் கடந்த மூன்றரை வருடங்கள்  முன்னெடுத்திருந்த  வேலைத்திட்டங்களை எஞ்சிய காலப்பகுதிக்குள் முற்றுமுழுதாக செய்து கொடுப்போம்  என  பொதுமக்களுக்கு  வாக்குறுதியளித்திருந்தோம்.  

அந்த வகையில் அரசியல் குழப்ப  நிலையின் பின்னர் கடந்த ஜனவரி மாதம் அமைச்சை மீண்டும் பொறுப்பேற்றிருந்தேன். இதன்  போது சுமார் 14 இலட்சம்  பேர் சமூர்த்திநிவாரணத்தை பெறுபவர்களாக இருந்தனர். 

இருப்பினும் நாம் கிராமங்களுக்கு  சென்ற போது மக்கள் மூன்று  கோரிக்கைகளை எம்மிடத்தில் முன்வைத்திருந்தனர்.குடி நீர்  ,  மின்சாரம், சமூர்த்தி கொடுப்பனவு ஆகியவற்றையே  எம்மிடத்தில் கேட்டனர்.இதில் மின்சாரம் முழுமையாக  பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.  குடி நீர் 30 வீதம் மானோருக்கு  வழங்கவேண்டியுள்ளது. எமது வேலைத்திட்டங்கள்  தொடர்ந்தும்  முன்னெடுத்துச்செல்லப்படும் பட்சத்தில் அனைவருக்கும் குடி நீரை பெற்றுக்கொடுக்க  கூடியதாகவிருக்கும்.   

சமூர்த்தி நிவாரணத்தை எடுத்துக்கொண்டால்.   எட்டு  இலட்சம்  பேர் வரையில் கட்டாயமாக சமூர்த்தி  கொடுப்பனவிற்கான  தேவையுடையவர்கள்  ஆவர். 

இவர்களில் சமூர்த்தி கொடுப்பனவு கிடைக்கப்பெறுபவர்களும் இன்னமும் கூட வறுமையிலேயே உள்ளனர். சமூர்த்தியை பெறுவோரில்  எவருடைய சமூர்த்தி  கொடுப்பனவையும் நாம் நிறுத்தவில்லை. 

https://www.virakesari.lk/article/67369