ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் ஆண்டி மர்ரே சாம்பியன் பட்டம் வென்றார். 

20007582-0-image-m-53_1571690839547.jpg

பெல்ஜியத்தில் நடைபெற்ற ஐரோப்பிய பகிரங்க தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவர், சுவிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவுடன் மோதினார். 

முதல் செட்டில் அதிரடியாக விளையாடிய வாவ்ரிங்கா 6-3 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். அடுத்த 2 செட்களிலும் கடுமையாகப் போராடிய மர்ரே 3-6, 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று கிண்ணத்தை கைப்பற்றினார்.

இடுப்பு மூட்டு காயத்துக்கு கடந்த ஜனவரியில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட மர்ரே (32 வயது), நீண்ட ஓய்வுக்குப் பிறகு மீண்டும் விளையாட ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/67342