Jump to content

39 சடலங்கள் லொறியொன்றில் மீட்பு- பிரித்தானியாவில் அதிர்ச்சி


ampanai

Recommended Posts

IMAGE-MIX.png
பிரித்தானியாவில் லொறியொன்றின் கொள்கலனிலிருந்து 39 சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

எசெக்சில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வோர்ட்டர் கிளேட் கைத்தொழில் பூங்காவில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றின் கொள்கலனிலிருந்தே 39 சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

essex_bodiess.jpg

பல்கேரியாவிலிருந்து பிரித்தானியாவிற்குள் நுழைந்த லொறியிலிருந்தே சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

வட அயர்லாந்தை சேர்ந்த லொறிச்சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

https://yarl.com/forum3/forum/34-உலக-நடப்பு/?do=add

 

Link to comment
Share on other sites

பிரிட்டனில் கொள்கலனிற்குள் சடலமாக மீட்கப்பட்டவர்கள் சீன பிரஜைகள்?

பிரிட்டனில் கொள்கலன் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட 39  பேரும் சீனாபிரஜைகள் என தகவல்கள் வெளியாகின்றன.

பிரிட்டனின் முக்கிய செய்தி ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

காவல்துறையினர் இன்னமும் இதனை உறுதி செய்யாத போதிலும் பிரிட்டனின் முக்கிய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டு வருகின்றன.

இந்ததகவலை தங்களால் உறுதி செய்ய முடியாது என எசெக்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ள அதேவேளை சீனாவின் வெளிவிவகார அமைச்சோ அல்லது பிரித்தானியாவிற்கான சீன தூதரகமோ எந்த தகவலையும் வெளியிடவில்லை.

பிரிட்டனில் நேற்று கொள்கலன் ஒன்றிற்குள் 39 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரிட்டனில் 39 உடல்களுடன் மீட்கப்பட்ட கொள்கலன்  பெல்ஜியத்திலிருந்து கடல் வழியாக வந்துள்ளது என தெரிவித்துள்ள அதிகாரிகள் குறிப்பிட்ட கொள்கலனை பொறுப்பேற்ற சாரதியை கைதுசெய்துள்ளதாகவும்  விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

2000 ம் ஆண்டு பிரிட்டனின் டோவர் துறைமுகத்தில் காணப்பட்ட தக்காளி ஏற்றப்பட்ட வாகனத்திற்குள் 58 சீன பிரஜைகள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்தது.

https://www.virakesari.lk/article/67510

Link to comment
Share on other sites

பாவம்கள். ஊர் விட்டு ஊர் பிழைக்க வந்து அநியாயமாக இறந்து விட்டனர். இவர்களை வழி அனுப்பி விட்டு காத்திருக்கும் உறவுகள் துடித்துக் கொண்டு இருப்பார்கள் இப்ப

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, நிழலி said:

பாவம்கள். ஊர் விட்டு ஊர் பிழைக்க வந்து அநியாயமாக இறந்து விட்டனர். இவர்களை வழி அனுப்பி விட்டு காத்திருக்கும் உறவுகள் துடித்துக் கொண்டு இருப்பார்கள் இப்ப

 சீனர்கள் அகதிகளாக செல்வதென்பது நான் இப்பதான் கேள்விப்படுகிறன் 

Link to comment
Share on other sites

பிரித்தானியா: 39 உடல்கள் இழுவைக்கலமொன்றில் (trailer) கண்டுபிடிப்பு!

இறந்தவர்கள் சீன தேசத்தவராக இருக்கலாம்

மத்திய லண்டனிலிருந்து சுமார் 32 கி.மீ. கிழக்கேயுள்ள கிறேய்ஸ் என்னுமிடத்தில் கடந்த புதனன்று (23) பொதி வண்டியொன்றினுள் (trailer) பிணமாகக் காணப்பட்ட 39 பேர்களின் மரணம் தொடர்பாக பிரித்தானிய காவற்துறை கொலை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இறந்தவர்களில் 8 பெண்களும் 31 ஆண்களும் அடங்குவர். இறந்தவர்கள் அனைவரும் சீன தேசத்தவர் என நம்பப்படுகிறது.

109346458_morobinsonpic_touse-e157191977
உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட வண்டியின் சாரதி மோ றொபின்சன்

இறந்தவர்களின் அடையாளங்கள் தொடர்பாக காவற்துறை தகவல்கள் எதையும் அறிவிக்க மறுத்துவிட்டார்கள் எனினும், இந்த வண்டி பெல்ஜியம் நாட்டின் ஜீப்றக் துறைமுகத்திலிருந்து புறப்பட்டிருக்கிறதென்றும் எஸ்ஸெக்ஸ் மாவட்டத்திலுள்ள பேர்ஃப்ளீட் என்னுமிடத்தில் அதைகாலை செவ்வாய் அதைகாலை 12:30 மணிக்கு வந்து சேர்ந்ததென்றும் அறியப்படுகிறது. வண்டியின் இழுவைக் கலததை (trailer), பாதையின் மீது ஏற்றிவிடப்பட்டால் பேர்ஃபிளீட் துறையின் மறுபக்கம் (UK) துறைமுகத் தொழிலாளர்களால் பதையில் கொண்டு வந்து சேர்க்கப்படுவது வழக்கம். சாரதி கூட வருவதில்லை. துறைக்கு அடுத்த பக்கத்தில் வேறொரு சாரதி இழுவைக் கலத்தைப் பொறுப்பேற்பார். ஐரோப்பாவின் பல துறைமுகங்களிலில் இதுவே வழக்கம்.

images-6.jpg
பேர்ஃபிளீட் ஒன் த தேம்ஸ் துறை – எசெக்ஸ்

இச் சம்பவம் தொடர்பாக வட அயர்லாந்தைச் சேர்ந்த 25 வயதுள்ள மோ றொபின்சன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச்செயல்களைத் தொழிலாகக் கைக்கொள்ளும் கும்பலே இதற்குக் காரணமெனவும், இப்படியான ஆட்கடத்தல் கும்பல்கள் உலகம் பூராவும் செயற்படுகிறார்கள் எனவும் காவற்துறை தெரிவிக்கிறது.

இழுவைக் கலம் தற்போது எசெக்ஸிலுள்ள ரில்பெரி துறையில் தரித்து நிற்பதாகவும், விசாரணைகள் முடிவுற்று உடல்கள் அடையாளம் காணப்பட்டதும் அவை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுமெனவும் காவற்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.

இழுவைக் கலம் புல்கேரியாவில் பதிவுசெய்யப்பட்டதெனினும் பெல்ஜியத்திலிருந்தே அது இழுக்கப்பட்டு வந்திருக்கிறது எனவும் அதை இழுத்த வந்த வண்டி (tractor / lorry) அயர்லாந்திலுள்ள டப்லின் நகரிலிருந்து புறப்பட்டிருக்கிறது எனவும் அறியப்படுகிறது. குளிரூட்டப்பட்ட இக் கலத்தின் உள் வெப்பநிலை -25 பாகை செல்சியஸாக இருப்பது வழக்கம். இக் கலத்தினுள் பயணம் செய்யும்போது பயணிகள் இறந்தார்களா அல்லது வேறெங்கோ மரணித்தவர்களின் உடல்கள் இக் கலத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார்களா என்பது பற்றியும் விசாரணகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவதற்கு முன்னர் பலர் அந்நாட்டிற்குள் புகுந்துவிட அவசரப்படுகிறார்கள் எனவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எல்லைகளில் பாதுகாப்பு சம்பந்தமான தேடுதல்களைத் தவிர குடிவரவு சம்பந்தமான தேடுதல்கள் பெரிதளவில் நடைபெறுவதில்லை எனவும் அறியப்படுகிறது.

பெருந்தொகையில் இழுவைக் கலங்களில் பயணிகள் மரணிப்பது இது தான் முதல் தடவையல்ல. ஆகஸ்ட் 27, 2015 இல் அவுஸ்திரியாவின் A4 நெடுஞ்சாலையில் ஒரு இழுவைக் கலத்தில் எட்டுக் குழந்தைகள் உட்பட 71 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பிரித்தானியாவில் 2000 ஆம் ஆண்டு 58 சீன தேசத்தவர்களின் உடல்கள் கெண்ட் நகரில் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் பல மரணங்கள் அறியப்படாமலே மறைக்கப்படுவதுமுண்டு. பிரான்சிலிருந்து பிரித்தானியாவிற்கு மாதம் ஒன்றிற்கு 200 பேர் மட்டில், பெரும்பாலும் படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து வருகிறார்கள்.

பதியப்பட்ட அகதிகளாகவிருந்தாலே தவிர, ஒருவர் பிரித்தானிய எல்லைக்குள் வந்தால் மட்டுமே அகதிநிலை கோர முடியும்.

https://marumoli.com/பிரித்தானியா-39-உடல்கள்-இழ/?fbclid=IwAR2XThdNsfWSrZROjMaidDeqUDmrCshFvdOGXvIN7h3wuZG0v38fdgLojPU

Link to comment
Share on other sites

என்னால் சுவாசிக்க முடியாமல் உள்ளது நான் மரணித்துக்கொண்டிருக்கின்றேன் -வியட்நாமிய பெண் குறுஞ்செய்தி-கொள்கலனிற்குள் மரணித்திருக்கலாம் என அச்சம்

என்னால் சுவாசிக்க முடியாமல் உள்ளது என வியட்நாமிய பெண்ணொருவர்  அனுப்பிய குறுஞ்செய்தியை தொடர்ந்து எசெக்ஸ் கொள்கலனிற்குள் வியட்நாமை சேர்ந்தவர்களின் உடல்களும் உள்ளதாக சந்தேகம் வெளியாகியுள்ளது.

தனது 21 வயது மகள் பாம் தி டிரா மையும் கொள்கலனிற்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சுவதாக வியட்நாமை சேர்ந்த நபர் ஒருவர் அந்த நாட்டின் காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

சீனா பிரான்ஸ் ஊடாக பிரிட்டனிற்கு சென்ற தனது மகள் காணாமல்போயுள்ளார் என தந்தை தெரிவித்துள்ளார்.

பாம் தனது தாய்க்கு குறுஞ்செய்திகளை அனுப்பினார்,இறுதியாக அனுப்பிய குறுஞ்செய்தியில் தன்னால் சுவாசிக்கமுடியாமல் உள்ளது என தெரிவித்தார் என தகவல் வெளியாகியுள்ளதுடன் அந்த குறுஞ்செய்தியின் படமும் வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட கொள்கலன் பிரிட்டன் துறைமுகத்தில் காணப்பட்டநேரத்திலேயே அவர் அந்த குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார்.

அம்மாவும் அப்பாவும் என்னை மன்னிக்கவேண்டும்,நான் வெளிநாட்டு செல்ல முயன்றவிதம் வெற்றியளிக்கவில்லை நான் உங்களை நேசிக்கின்றேன்,என்னால் சுவாசிக்க முடியாததால் நான் மரணித்துக்கொண்டிருக்கின்றேன் என அவர் தனது குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வியட்நாமை சேர்ந்த பல குடும்பத்தவர்கள் குறிப்பிட்ட கொள்கலனிற்குள் தங்கள் குடும்பங்களை சேர்ந்தவர்கள் சிக்குண்டனரா என்பதை அறிவதற்காக பிரிட்டனில் உள்ள தூதரகத்தை தொடர்புகொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன.

https://www.virakesari.lk/article/67599

Link to comment
Share on other sites

எங்கள் மகள் பிரித்தானியா செல்வார் எங்கள் வறுமை மாறும் என நினைத்தோம்- கொள்கலனிற்குள் சிக்கினார் என கருதப்படும் யுவதியின்தந்தை

நாங்கள் பணம் வழங்கிய ஆள்கடத்தல்காரர்கள் எங்கள்  மகளை எப்படி பிரிட்டனிற்கு கொண்டு போய் சேர்க்கப்போகின்றோம் என்பதை தங்களிற்கு தெரியப்படுத்தவில்லை என  பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலனிற்குள் சிக்கி இறந்திருக்கலாம் என கருதப்படும் வியட்நாம் யுவதியின் தந்தை தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் சிஎன்என் மேலும் தெரிவித்துள்ளதாவாது.

 வியட்நாமின் ஹாடின் பிராந்தியத்தில்  சிறிய வீடொன்றில் அவர்கள் வசிக்கின்றனர் அவர்கள் பொருளாதார வசதியற்றவர்கள்,மாதாந்தம் 400 அமெரிக்க டொலர்கள்வரையே சம்பாதிக்கின்றனர்.

ஆனாலும் நாங்கள் எங்கள் மகள் பம் தி டிரா மையை பிரிட்டனிற்கு அனுப்புவதற்கு அவசியமான பணத்தை சிரமப்பட்டு சேகரித்தனர் என குறிப்பிடுகின்றனர்.

அவர் பிரிட்டன் செல்வார் எங்களது வாழ்க்கை மாறும் என நினைத்தோம் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் அந்த பயணம் துயரத்தில் முடிவடைந்துள்ளது போதோன்றுகின்றது.  உடல்களுடன் மீட்கப்பட்ட கொள்கலனிற்குள் அவர்களது மகளும் இருந்திருக்கலாம் என்ற அச்சம் வெளியாகியுள்ளது.

வியாழக்கிழமை இரவு அவர்களின் மகள் குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார், குறிப்பிட்ட கொள்கலன் பிரிட்டனிற்குள் காணப்பட்ட நேரத்திலேயே அவர் அதனை அனுப்பியுள்ளார்.

pham-thi-tra-my-vietnam-parents-02-exlar

பாம் தனது தாய்க்கு குறுஞ்செய்திகளை அனுப்பினார்,இறுதியாக அனுப்பிய குறுஞ்செய்தியில் தன்னால் சுவாசிக்கமுடியாமல் உள்ளது என தெரிவித்தார்

அம்மாவும் அப்பாவும் என்னை மன்னிக்கவேண்டும்,நான் வெளிநாட்டு செல்ல முயன்றவிதம் வெற்றியளிக்கவில்லை நான் உங்களை நேசிக்கின்றேன்,என்னால் சுவாசிக்க முடியாததால் நான் மரணித்துக்கொண்டிருக்கின்றேன் என அவர் தனது குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர்களில் அவரும் இருக்கின்றாரா என்பது உறுதியாகவில்லை ஆனால் மோசமான விடயம் இடம்பெற்றிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் அஞ்சுகின்றனர்.

வியட்நாமிய அதிகாரிகளுடன் இணைந்து உடல்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கொள்கலனிற்குள் மீட்கப்பட்டவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதையோ அவர்களது பெயர் விபரங்களையோ அதிகாரிகள் இன்னமும் உறுதி செய்யவில்லை.

வியட்நாமிலிருந்த சிஎன்என்னிற்கு கருத்து தெரிவித்துள்ள யுவதியின் தந்தை குறிப்பிட்ட குறுஞ்செய்தி கிடைத்ததும் தாங்கள் கடும் துயரத்தில் சிக்குண்டோம் என தெரிவித்துள்ளார்.

pham-thi-tra-my-vietnam-parents-03-exlar

எனது மகளிற்கு அவர் இறக்கப்போகின்றார் என்பது தெரிந்திருக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் எனது பாசத்துக்குரிய மகளையும் பணத்தையும் இழந்துவிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

தாங்கள் பணம் வழங்கிய ஆள்கடத்தல்காரர்கள் தங்கள் மகளை எப்படி பிரிட்டனிற்கு கொண்டு போய் சேர்க்கப்போகின்றோம் என்பதை தங்களிற்கு தெரியப்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் மகன் வியட்நாமிலிருந்து சீனா வழியாக பிரான்ஸ் சென்றுள்ளார்,ஆனால் அதன் பின்னர் அவருடனான தொடர்புதுண்டிக்கப்பட்டது என தந்தை தெரிவிக்கின்றார்.

அதன் பின்னர் தனது மகள் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு செய்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.

vietnam_girll_oct27.jpg

ஆள்கடத்தல்காரர்கள் இது பாதுகாப்பான பாதை என  தெரிவித்தார்கள் விமானம் மூலமும் கார் மூலமும்  ஆட்கள் பயணிப்பார்கள் என தெரிவித்தார்கள் என்கிறார் அவர். 

இது தெரிந்திருந்தால் நான் எனது மகளை அனுமதித்திருக்கமாட்டேன் எனவும்  தந்தை தெரிவிக்கின்றார்.

https://www.virakesari.lk/article/67625

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வியட்நாம்காரர்களாக இருக்கலாம் என நான் முதலே நினைத்திருந்தேன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.