Jump to content

ட்ரம்ப்பின் பதவிநீக்க விசாரணையை குழப்பிய குடியரசுக் கட்சியின் உறுப்பினர்கள்

ampanai

Recommended Posts

image_a71390e647.jpg

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஐக்கிய அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் பதவிநீக்க விசாரணையானது நேற்று  குழம்பியிருந்தது.

உயர் பாதுகாப்பு விசாரணை அறையொன்றுக்குள் குடியரசுக் கட்சியின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் நுழைந்து சாட்சியொருவரின் சாட்சியத்தை தாமதமாக்கிய நிலையிலேயே குறித்த பதவிநீக்க விசாரணையானது குழம்பியிருந்தது.

உக்ரேனுடனான தனது தொடர்பாடல்கள் தொடர்பில் தன்னை பதவிநீக்க முயலும் ஜனநாயக் கட்சியின் முயற்சிகளுக்கெதிராக கடுமையாகப் போராடுமாறு குடியரசும் கட்சியின் பிரதிநிகள் சபையின் உறுப்பினர்களை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பே ஊக்குவிருந்தார்.

இந்நிலையிலேயே, உக்ரேன் மற்றும் ரஷ்ய விவகாரங்களை பார்வையில் ஐக்கிய அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியான லோரா கூப்பர் விசாரணையொன்றுக்கு செல்ல முன்னர், விசாரணையில் பங்கேற்பதற்கு அனுமதியளிக்கப்படாத இரண்டு டசினுக்கும் மேலான பிரதிநிதிகள் சபையின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் விசாரணைக்குள் சென்றிருந்தனர்.

குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயக் கட்சியின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களுக்கு முன்னால் மூடிய அறைக்குள் லோரா கூப்பர் விசாரிக்கப்படவிருந்தார்.

http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/டரமபபன-பதவநகக-வசரணய-கழபபய-கடயரசக-கடசயன-உறபபனரகள/50-240418

Link to comment
Share on other sites

உள்ளால் உன் மீது சாட்டப்பட்ட குற்றங்களை ஆதாரங்களுடன் வாதாட முடியாத நிலையில் நீ அந்த குற்றச்சாட்டுக்கள் பற்றிய படிமுறைகளை எதிர்த்து வாதாடு. 

அதுவே இப்பொழுது ட்ரம்பின் ஆதரவாளர்களால் நடாத்தப்படுகின்றது.  

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

உள்ளால் உன் மீது சாட்டப்பட்ட குற்றங்களை ஆதாரங்களுடன் வாதாட முடியாத நிலையில் நீ அந்த குற்றச்சாட்டுக்கள் பற்றிய படிமுறைகளை எதிர்த்து வாதாடு. 

அதுவே இப்பொழுது ட்ரம்பின் ஆதரவாளர்களால் நடாத்தப்படுகின்றது.  

கோத்தபாயா மீது தொடுக்கப்பட்ட வழக்கை அமெரிக்கா ஏன் எப்படித் தள்ளுபடிசெய்தது என்பது புரியாத புதிராக இருந்தது.... தற்போது அது நீங்கிவிட்டது. சிறீலங்கா அரசுக்கும், இன்றுள்ள அமெரிக்க அரசுக்கும் உள்ள ஒற்றுமைதான் என்னே... 🤔🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

கோத்தபாயா மீது தொடுக்கப்பட்ட வழக்கை அமெரிக்கா ஏன் எப்படித் தள்ளுபடிசெய்தது என்பது புரியாத புதிராக இருந்தது.... தற்போது அது நீங்கிவிட்டது. சிறீலங்கா அரசுக்கும், இன்றுள்ள அமெரிக்க அரசுக்கும் உள்ள ஒற்றுமைதான் என்னே... 🤔🤔

அது சரி......உந்த ரம்பின்ரை ஆட்சிக்கு கீழை எங்கடை தமிழ்ச்சனம் அமெரிக்காவிலை என்னெண்டுதான் குடியும் குடித்தனமுமாய் சீவியத்தை நடத்தினம் எண்டு எனக்கு விளங்கேல்லை....நானெண்டால் மதில் பாய்ஞ்சு மெக்ஸிக்கோவுக்கு ஓடியிருப்பன்.🤣
 
Link to comment
Share on other sites

Just now, குமாரசாமி said:

அது சரி......உந்த ரம்பின்ரை ஆட்சிக்கு கீழை எங்கடை தமிழ்ச்சனம் அமெரிக்காவிலை என்னெண்டுதான் குடியும் குடித்தனமுமாய் சீவியத்தை நடத்தினம் எண்டு எனக்கு விளங்கேல்லை....நானெண்டால் மதில் பாய்ஞ்சு மெக்ஸிக்கோவுக்கு ஓடியிருப்பன்.🤣
 
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க" என்று வாழும் சனம் எங்கிருந்தாலும் வாழும். உயிருக்கும், இருப்புக்கும் உறுத்தல்தரும் நாடுகளில்கூட வாழ்கிறார்களே....!! 😌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அது சரி......உந்த ரம்பின்ரை ஆட்சிக்கு கீழை எங்கடை தமிழ்ச்சனம் அமெரிக்காவிலை என்னெண்டுதான் குடியும் குடித்தனமுமாய் சீவியத்தை நடத்தினம் எண்டு எனக்கு விளங்கேல்லை....நானெண்டால் மதில் பாய்ஞ்சு மெக்ஸிக்கோவுக்கு ஓடியிருப்பன்.🤣
 
அப்படி நீங்கள் ஓடுவதைத் தடுக்கத்தான் மதில் கட்டப்  படுகின்றது......!   😂 

Link to comment
Share on other sites

கனடாவிற்கு மதில் பாயாமல் நடந்து வரலாம் 

வந்த பின் சும்மா இருக்கலாம் ; படிக்கலாம் ; உழைக்கலாம் ; ....

கஞ்சா வளர்க்கலாம், விற்க்கலாம்; இழுக்கலாம்; உண்ணலாம்; குடிக்கலாம்  🙂 

Link to comment
Share on other sites

ட்ரம்பிற்கு எதிராக, இந்த வியாழக்கிழமை, அவர் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளார் என்ற கொள்கை, சட்ட அடிப்படையின் கீழ் கொண்டுவர உள்ளனர். முதலில், இது அமெரிக்க பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ளது. அங்கு ட்ரம்பின் கட்சிக்கு எதிரான கட்சி பெரும்பான்மை கொண்டுள்ளது. 

ஆனால், இது குடியரசுக் கட்சியை அதிகமாக கொண்ட ட்ரம்பின் ஆதரவாளர்கள் உள்ளனர். அவர்கள் வரும் வாதங்கள் விவாதங்களை வைத்து ட்ரம்பிற்கு எதிராக வாக்களிக்க கூடும். 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நாளை, 13 கார்த்திகை, அதிரப்போகும் வாசிங்டனும் குமுறப்போகும் ட்ரம்பும் 

நாளை ஆரம்பமாக உள்ள பகிரங்க விசாரணை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.