Jump to content

பாழ்நரகத்தில் தீர்மானிக்கப்படும் சில கூட்டணிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாழ்நரகத்தில் தீர்மானிக்கப்படும் சில கூட்டணிகள்

image_610f158958.jpg

 

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாட்டால், கடந்த வாரம் ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து செயற்பட உடன்பட்டனர். ஆறு கட்சிகளுடன் தொடங்கிய பேச்சுவார்த்தை, இறுதியில் ஐந்து கட்சிகள் உடன்பட்ட ஆவணம் ஒன்றில் கையொப்பமிடுவதுடன் நிறைவுற்றது.   

இந்த இணைவு எதைச் சாதிக்கப்போகிறது என்ற கேள்வி ஒருபக்கம் எழுந்தாலும் இதை ஒரு நல்ல தொடக்கமாகக் கருதியோரும் உண்டு. தமிழ்க்கட்சிகள் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளன என்று மகிழ்ந்தோரும் உண்டு.   

இந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அதிககாலம் நிலைக்கவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகை, கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனின் கூற்றொன்றை, மேற்கோள் காட்டியிருந்தது. சுமந்திரன், “ஐந்து கட்சிகள் உடன்பட்ட ஆவணம், ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தையின் அடிப்படையாகக் கொள்ளப்பட மாட்டாது. இதை நாம், எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் அனுப்பவில்லை. இவ்வாவணம் பேச்சுகளின் போது, முக்கிய இடம் பிடிக்காது” என்று தெரிவி
த்திருந்தார்.   

இது புதிதல்ல. ஆனால் இக்கூற்று, சில கேள்விகளை எழுப்புகிறது. முதலாவது, பல்கலைக்கழக மாணவர்கள் கட்சிகளை இணைத்துப் பேச்சுகளை நடத்துவதற்கு அடிப்படையாக இருந்தது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்கள் வாக்களிப்பது என்ற வினாவுக்கு விடை தேடுவதே ஆகும். அதன் அடிப்படையிலேயே, இந்த ஆவணம் கையொப்பமிடப்பட்டது. இன்று இந்த ஆவணம், ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேசுவதற்கான ஆவணம் இல்லை என்றால் இவ்வாவணம் எதற்கு?   

சுமந்திரன் குறிப்பிடுவது போல, ‘இதிலுள்ள கோரிக்கைகள் புதியவையல்ல, இவை தமிழர்களின் வரலாற்றுரீதியான நிலைப்பாடாகும்’ எனில் இவ்வாவணம் புதிதாக எதையும் சொல்லவில்லை என்பது ஒன்று. 

இவ்வாறான ஓர் ஆவணம், தேர்தல் நோக்கமின்றித் தமிழ் மக்களின் உரிமை சார்ந்த ஆவணமாயின் ஏன் பிற தமிழ்க் கட்சிகள் இணைக்கவில்லை என்பது இரண்டாவது.   

இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 13 கோரிக்கைகளுடன் பெரும்பாலான தமிழ்கட்சிகள் உடன்படும். ஆனால், ஏன் இந்த ஆறு கட்சிகளுடன் மட்டும், பேச்சு நடத்தப்பட்டது. ஏனைய கட்சிகள் ஏன் இணைக்கப்படவில்லை. இது தேர்தலுக்கானது இல்லையெனில், குறைந்தபட்சம் ஏனைய தமிழ்க்கட்சிகளுக்கு அழைப்பாவது அனுப்பியிருக்கலாம்.   

அவ்வாறு அழைப்பது அடிப்படையான ஜனநாயகச் செயற்பாடு. அழைப்பை ஏற்பதும் நிராகரிப்பதும் கட்சிகளின் முடிவு. 

ஆனால், பொது உடன்பாடு எட்டப்படும் நோக்கில், இந்த முயற்சி பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டதாக இருந்தால், ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருக்க வேண்டும். இதில் ஏனைய கட்சிகள் பங்கேற்கவோ அல்லது கோரிக்கைகளுடன் உடன்பட மறுத்திருப்பின், அக்கட்சிகளின் நோக்கம் மக்கள் மத்தியில் இயல்பாகவே அம்பலப்படும். எனவே, அனைத்துத் தமிழ்க்கட்சிகளையும் அழைப்பதே பொருத்தமானது. ஆனால் அவ்வாறு நிகழவில்லை.   

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கூட்டணியாக உருப்பெறத் தொடங்கிய ஆறுகட்சிக் கூட்டணி, ஐந்தாக முடிந்துள்ளது. இதன் அர்த்தம், 13 அம்சக் கோரிக்கைகளைக் கூட்டணியில் இருந்து விலகிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையா? கூட்டணிகளும் கூட்டுச் செயற்பாடுகளும் மிகுந்த கவனத்துடனும் மக்கள் நல நோக்கில் செய்யப்பட வேண்டும். தமிழ்த் தேசியவாத அரசியலுக்கு இது புதிது.   

உடன்பட்ட 13 அடிப்படைகளையும் பிரதான இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது வெளிப்படை. இது அனைவரும் அறிந்ததே. இந்தப் பின்னணியில் இவ்வாறான ஓர் ஆவணத்தைத் தேர்தலில் ஆதரவு தருவதற்கான அடிப்படை என்ற ரீதியில் உருவாக்கியமை எதைக் காட்டுகிறது. 

கையொப்பமிட்ட ஐந்து கட்சிகளும் இந்தக் கோரிக்கைகளுக்கு இரண்டு பிரதான வேட்பாளர்களும் உடன்பட மாட்டார்கள் என்பதை நன்கறிவர். அப்படியாயின் இந்தச் செயல் எதைக் காட்டுகிறது.   

ஒற்றுமையின் பெயரால், தமிழ் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்துள்ளார்கள். அதையே தொடர்ந்தும் செயற்படுத்தத் தமிழ்த் தலைமைகள் மீண்டும் முயல்கின்றன. மக்களை மய்யமாகக் கொள்ளாத பிற்போக்கு அரசியலின் இன்னொரு காட்சி, இப்போது ஐந்து கட்சிக் கூட்டணி என்பதன் பெயரால் அரங்கேறுகிறது.   

சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் பலவற்றை இலங்கையில் கண்டுள்ளோம். எல்லாச் சந்தர்ப்பவாதக் கூட்டணிகளிலும், அவற்றின் உறுப்பு அமைப்புகள் தமது அடிப்படைக் கொள்கைகளுக்குத் துரோகமிழைப்பது தவிர்க்க இயலாதது. 

ஏனெனில், இத்தகைய கூட்டணிகள் பொதுப்படக் குறுக்கு வழியில் எதையேனும் சாதிப்பதை வேண்டியே உருவாகின்றன. அவ்வாறு உருவானதொரு கூட்டணியே இப்போது ஏற்பட்டுள்ள கூட்டணி. இவர்கள் மக்களை இன்னொரு முறை ஏமாற்றத் தயாராகி விட்டார்கள். இதற்கான விலையைத் தமிழ் மக்களே கொடுக்க வேண்டி வரும். சில கூட்டணிகள், பாழ்நரகத்தில் தீர்மானிக்கப்படுகின்றன.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பாழ்நரகத்தில்-தீர்மானிக்கப்படும்-சில-கூட்டணிகள்/91-240426

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்?
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.