கிருபன்

சுமந்திரனுக்கு பாடம் புகட்ட முல்லைத்தீவில் குடியேறப் போவதாக ஞானசார தேரர் எச்சரிக்கை

Recommended Posts

சுமந்திரனுக்கு பாடம் புகட்ட முல்லைத்தீவில் குடியேறப் போவதாக ஞானசார தேரர் எச்சரிக்கை

சுமந்திரனுக்கு பாடம் புகட்ட முல்லைத்தீவில் குடியேறப் போவதாக  ஞானசார தேரர் எச்சரிக்கை

கொழும்பில் நேற்று பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சுமந்திரனுக்கும் நந்திக்கடல் போன்று ஒரு பதில் வேண்டுமெனில் ஒரு மாதத்தில் அந்த பதிலை வழங்க இந்த நாட்டு மக்கள் தயார் என எச்சரித்துள்ள அவர் தாம் முல்லைத்தீவில் குடியேறப் போவதாக தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் பிரிவினைவாதத்திற்கு இன்று வடக்கு முழுமையாக உள்வாங்கப்பட்டுள்ளது. நாம் வணங்கிக் கேட்டுக்கொள்கின்றோம். இந்த பிரிவினைவாதம் வடக்கில் கடந்த மூன்று வருடங்களில் மிக வேகமான வளர்ச்சியடைந்துள்ளது. அதனை முற்றாக இல்லாதொழிக்கவில்லையெனின் துரதிர்ஷ்ட வசமாக தமிழ் மக்கள் பின்னோக்கிச் செல்வார்கள் என்பதோடு சிங்கள மக்களும் இதில் தலையிட வேண்டியேற்படும் என தெரிவித்துள்ளார்.

ஆகவே இந்தப் பிரச்சினையை சுமூகமாக தீர்க்க அனைத்துத் தரப்பும் தலையீடு செய்ய வேண்டும். சுமந்திரனும், விக்னேஸ்வரனும் தென்பகுதிக்கு வந்து சண்டித்தனம் செய்வதில்லை. வடக்கிலேயே அவர்கள் சண்டித்தனம் காட்டுகின்றார்கள். அவர்களது மனிதாபிமானம் அவ்வளவுதானா? பௌத்த பிக்குவின் இறுதியைக் கிரியையைக் கூட சரியாக நடத்த அவர்கள் இடம்கொடுக்கவில்லை.

சாதாரண தமிழ் மக்களுக்கு இங்கு பிரச்சினையில்லை. அது எமக்குத் தெரியும். இந்து சமூகத்திற்கு நாம் மிகவும் பொறுப்புடன் ஒன்றை கூறுகின்றோம். சுமந்திரன் உள்ளிட்ட அமெரிக்க சார்பு மிகவும் ஆபத்தான நாம் ஒரு விடயத்தை மறக்கக்கூடாது. இஸ்லாமிய பிரிவினைவாத்திற்கு அப்பாற்பட்ட மிகவும் ஆபத்தான கிறிஸ்தவ அடிப்படைவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அது தொடர்பில் யாரும் கதைப்பதில்லை.

கிறிஸ்தவ சட்டத்தரணிகள், வழக்குத் தொடுநர்கள் என பலர் இன்று இருக்கின்றனர். எங்களை இனவாதிகள் என தூற்றுகின்றனர். சுமந்திரன் ஒரு போதகர். அவர் இன்று நாடாளுமன்றில் இருக்கின்றார். போதகர் ஒருவரே எனக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்கின்றார். சுமந்திரனுக்கும் நந்திக்கடல் போன்று ஒரு பதில் வேண்டுமெனின் வரட்டும். ஒரு மாதத்தில் அந்த பதிலை வழங்க இந்த நாட்டு மக்கள் தயார். அதனையே அவர்கள் கேட்கின்றனர்.

வரலாற்று முக்கியத்துவம் மிக்க பௌத்த புராதன சின்னங்கள் அமைந்துள்ள முல்லைத்தீவில் சென்று குடியேறப் போகிறேன். இங்கு வேறு பிரச்சினை காணப்படுகின்றது. இதன் பின்னணியில் அமெரிக்க தூதரகம் இருக்கின்றது. 455 கிறிஸ்தவ அடிப்படைவாத அமைப்புகள் இதன் பின்னணியில் இருக்கின்றன. சுமந்திரன் ஒரு கிறிஸ்தவ போதகர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்தே செயற்படுகின்றது. கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு இந்து ஆலயம் மீது என்ன அக்கறை?

பிரிவினைவாதத்திற்கு தேவையான விடயங்களை செயற்படுத்திக் கொண்டு,கோட்சூட் அணிந்து கொண்டு, தமிழ் இராச்சியமாக்க வேண்டுமெனக் கூறிக்கொண்டு செயற்படுபவர்களின் பொறிக்குள் நாம் சிக்க வேண்டுமா? அதற்கு கீழ்ப்படிய வேண்டுமா?தேர்தல் ஒன்று வருகின்றது. அதன் பின்னர் நாம் முல்லைத்தீவில் சென்று குடியேறுவோம். என்ன நடக்குதென பார்ப்போம். ரணில் அரசாங்கம் வந்தாலும், மஹிந்த அரசாங்கம் வந்தாலும் இரண்டும் ஒன்றுதான். இந்த நாடு யாருடையது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நாட்டின் உரிமையாளர்கள் யார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.(15).

http://www.samakalam.com/செய்திகள்/சுமந்திரனுக்கு-பாடம்-புக/

Share this post


Link to post
Share on other sites

பூனை இல்லாவீட்டில் எலிகள் கொண்டாட்டம் என்பதுபோல் முப்பது வருடங்களாகப் பயந்து பதுங்கி இருந்தவர்கள் இப்போது எழுந்து துள்ளுகிறார்கள். இருந்தும் சம்பந்தர் சுமந்தின்பற்றி தேரர் கூறியவற்றில் உண்மைகள் இல்லாமல் இல்லை.😲

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, கிருபன் said:

சுமந்திரனுக்கும் நந்திக்கடல் போன்று ஒரு பதில் வேண்டுமெனின் வரட்டும். ஒரு மாதத்தில் அந்த பதிலை வழங்க இந்த நாட்டு மக்கள் தயார். அதனையே அவர்கள் கேட்கின்றனர்.

நந்திக்கடலை நீங்க காட்டுவதற்கு 29 - 30 நாடுகளை கூட்டிக்கொண்டு வரனும். ஆனால்.. அதே போல்.. முல்லைத்தீவில் இருந்து உங்கள் இராணுவம் ஓடியதை மறக்க வேண்டாம். சுமந்திரன் கோழையாக இருக்கலாம்.. ஆனால்.. தமிழர்கள் கிடையாது. சிங்களவர்கள் ஒரு குட்டித்தீவுக்குள் இருந்து இந்த நவீன உலகில் எனியும் சண்டித்தனம் செய்து பிழைக்கலாம் என்ற எண்ணத்தை கைவிடாவிட்டால்.. சிங்களவர்கள்.. என்போர்.. சண்டித்தனத்தாலையே அழிந்தோர் ஆவர். 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, Paanch said:

பூனை இல்லாவீட்டில் எலிகள் கொண்டாட்டம் என்பதுபோல் முப்பது வருடங்களாகப் பயந்து பதுங்கி இருந்தவர்கள் இப்போது எழுந்து துள்ளுகிறார்கள். இருந்தும் சம்பந்தர் சுமந்தின்பற்றி தேரர் கூறியவற்றில் உண்மைகள் இல்லாமல் இல்லை.😲

கொட்டியா எண்டு சத்தம் போட்டாலே வெளிக்கிட்டு ஓடின கூட்டம் இப்ப?????

சம்பந்தன்,சுமந்திரன்,மாவை எண்டு உதுகள் எல்லாம் ஒழுங்காய் இருந்தால் பிக்கு ஏன் உந்த வசனத்தை பயமில்லாமல் சொல்லப்போகுது?
 

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, குமாரசாமி said:

கொட்டியா எண்டு சத்தம் போட்டாலே வெளிக்கிட்டு ஓடின கூட்டம் இப்ப?????

சம்பந்தன்,சுமந்திரன்,மாவை எண்டு உதுகள் எல்லாம் ஒழுங்காய் இருந்தால் பிக்கு ஏன் உந்த வசனத்தை பயமில்லாமல் சொல்லப்போகுது?
 

2500 வருடங்களாக பல்வேறு பண்பாட்டு,  ஆயுத படையெடுப்புக்களைதாண்டி தன்னை தக்கவைத்திக்கும் ஒரு இனம் இன்னும் 5000 வருடங்கள்  தன்னை தக்கவைத்திருக்கும். நாங்கள்தான் இதனை உணர வேண்டும்.  இன்னும் அடுத்த 50 வருடங்ககுக்குள் இலங்கையில் தமிழன் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போகும்.  இதனை எமது கண்களால் நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்.  புலம்பெயர் தமிழரும் உலகத்தமிழரும் ஒருபுள்ளியில் சந்திக்கவிட்டால் இதனை யாராலும் தடுக்க முடியாது.  தமிழ்நாட்டருக்கும் இதுதான் நிலை.  

இதற்கு  நல்லா உதாரணம்  இஸ்ரவேலும் பலஸ்தீனமும் 

Share this post


Link to post
Share on other sites

இதற்காகத்தான் இந்த ரவுடியை அவசர அவசரமாக வெளியில் கொண்டு வந்தார்கள்.  இந்தப் பிற்போக்கு இனவாதி தனது  இனவாதத்துக்கும், எஜமானது தேர்தல் வெற்றிக்கும் இனவாதத்தையும், மதவாதத்தையும் வலிந்து தட்டி எழுப்புது.  இவனை நாடு கடத்த வேண்டும். அல்லது ஆயுள்தண்டனை கொடுக்கவேண்டும்.   பொறுப்பான நாடு என்றால், இது போன்று இனவாதத்தை தூண்டுவோர்   அரசியலில், மாதகாரியங்களில் ஈடுபட தடை போடுவதோடு சிறைத் தண்டனை கொடுத்தால் இந்த வெறியை இலகுவாக அழிக்கலாம்.

ஒரு மதத் தலைவர் இவ்வாறு நடந்தால் அந்த மதத்தில் எப்படி  கருணையை எதிர்பார்க்க முடியும்.

கிறிஸ்த ஆலய குண்டுதாரிகளை இந்த இனவாதி இனங்காட்டி விட்டான்  

Share this post


Link to post
Share on other sites
15 minutes ago, satan said:

இதற்காகத்தான் இந்த ரவுடியை அவசர அவசரமாக வெளியில் கொண்டு வந்தார்கள்.  இந்தப் பிற்போக்கு இனவாதி தனது  இனவாதத்துக்கும், எஜமானது தேர்தல் வெற்றிக்கும் இனவாதத்தையும், மதவாதத்தையும் வலிந்து தட்டி எழுப்புது.  இவனை நாடு கடத்த வேண்டும். அல்லது ஆயுள்தண்டனை கொடுக்கவேண்டும்.   பொறுப்பான நாடு என்றால், இது போன்று இனவாதத்தை தூண்டுவோர்   அரசியலில், மாதகாரியங்களில் ஈடுபட தடை போடுவதோடு சிறைத் தண்டனை கொடுத்தால் இந்த வெறியை இலகுவாக அழிக்கலாம்.

ஒரு மதத் தலைவர் இவ்வாறு நடந்தால் அந்த மதத்தில் எப்படி  கருணையை எதிர்பார்க்க முடியும்.

கிறிஸ்த ஆலய குண்டுதாரிகளை இந்த இனவாதி இனங்காட்டி விட்டான்  

எங்கள் சக்தியை இவ்வாறு வெற்று வசனங்களிலும் வீராப்பு பேசியும் ஆயுதப்பபோராட்ட வெற்றிகளை மீள நினைவுபடுத்தியும் திருப்திபட்டுக்கொள்கிறோம்.  சாத்தியமான கொள்கைத்  திட்டமோ இலக்கோ எம்மிடம் இருக்கிறதா? இல்லையே....... 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

வரப்போகும் அரசின் தேர்தல் விஞ்ஞாபனம்.  அங்கே புத்தமதத்தின் தலைவர் இந்தச் சாத்தான். இதன் போதனை என்னவென்று அதே சொல்லிவிட்டது நடைமுறை முதலில் கிறிஸ்தவத்தை அழித்தல், அடுத்து தமிழர்.  போதை பொருள் கடத்துவோருக்கு மரண தண்டனை. பாவிப்போருக்கு என்ன தண்டனை? அதற்கும் மரண தண்டனை கொடுத்தால் இவன் அதில் ஒருவனாவான். 

Share this post


Link to post
Share on other sites
20 hours ago, Maharajah said:

2500 வருடங்களாக பல்வேறு பண்பாட்டு,  ஆயுத படையெடுப்புக்களைதாண்டி தன்னை தக்கவைத்திக்கும் ஒரு இனம் இன்னும் 5000 வருடங்கள்  தன்னை தக்கவைத்திருக்கும். நாங்கள்தான் இதனை உணர வேண்டும்.  இன்னும் அடுத்த 50 வருடங்ககுக்குள் இலங்கையில் தமிழன் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போகும்.  இதனை எமது கண்களால் நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்.  புலம்பெயர் தமிழரும் உலகத்தமிழரும் ஒருபுள்ளியில் சந்திக்கவிட்டால் இதனை யாராலும் தடுக்க முடியாது.  தமிழ்நாட்டருக்கும் இதுதான் நிலை.  

இதற்கு  நல்லா உதாரணம்  இஸ்ரவேலும் பலஸ்தீனமும் 

ஜே.ஆர்.ஜயவர்தனா Mossad ஐ இலங்கைக்குள் விட்டதிலிருந்து இலங்கையை வழிநடத்துவது இஸ்ரேல் தானே.

புலம்பெயர் தமிழர்களும் உலக தமிழர்களும் ஒரே புள்ளியில் சந்தித்தாலும் எதுவும் ஆகாது.

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites
15 minutes ago, Lara said:

ஜே.ஆர்.ஜயவர்தனா Mossad ஐ இலங்கைக்குள் விட்டதிலிருந்து இலங்கையை வழிநடத்துவது இஸ்ரேல் தானே.

 

இதற்கு ஆதாரமிருக்கிறதா? அல்லது எழுந்தமானத்துக்கு சொல்கிறீர்களா??

Share this post


Link to post
Share on other sites
28 minutes ago, nunavilan said:

இதற்கு ஆதாரமிருக்கிறதா? அல்லது எழுந்தமானத்துக்கு சொல்கிறீர்களா??

லாராவுக்கு conspiracy theory என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி என்று தெரிந்தும் ஆதாரம் கேட்கலாமா?😜 இனிப் பக்கம் பக்கமாக வந்து எழுதி எது உண்மை எது புனைவு என்று தெரியாமல் பண்ணி வாசிப்பவர்களைக் குழப்புவதில்தான் முடியும்.😁

ஆனால் இஸ்ரேல் வழிநடத்துகின்றது ஒரு கதைக்கு எடுத்துக்கொண்டால், சிறிலங்காவில் அதிக முதலீட்டைச் செய்யும் சீனாவையும் இஸ்ரேல்தான் வழிநடத்துகின்றது என்றும் சொல்லலாம். 😂

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Lara said:

ஜே.ஆர்.ஜயவர்தனா Mossad ஐ இலங்கைக்குள் விட்டதிலிருந்து இலங்கையை வழிநடத்துவது இஸ்ரேல் தானே.

புலம்பெயர் தமிழர்களும் உலக தமிழர்களும் ஒரே புள்ளியில் சந்தித்தாலும் எதுவும் ஆகாது.

லாரா நீங்கள் கூற வருவது புரிகிறது.  அப்படி பார்க்கவேண்டுமானால் இலங்கையின் ஆரம்பகாலத்தில் உண்டாக்கப்பட்ட இனக் கலவரங்களுக்கு முன்னர் யார் யாரெல்லாம் எந்தந்த நாடுகளுக்குப் போனார்கள் என்பதையும்,  அக்காலப்பகுதியில் உலக அரசியலில் இலங்கை மற்றும் இந்தியாவின் போக்கு எப்படி இருந்தது என்பதிலிருந்து தொடங்க வேண்டும்.  தோண்டத் தொடங்கினால் முடை நாத்தம் எங்கள் பக்கத்தில் இருந்துதான் முதலில் ஆரம்பிக்கும்.  

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, nunavilan said:

இதற்கு ஆதாரமிருக்கிறதா? அல்லது எழுந்தமானத்துக்கு சொல்கிறீர்களா??

July 3, 1984 செய்தி.

The President of Sri Lanka, discussing antiterrorist assistance from Israel, said here today that his Government had asked for the aid after Western nations, including the United States, had rebuffed similar requests.

At the same time, the President, Junius R. Jayawardene, said that his Government was allowing an Israeli interests section to be set up at the American Embassy in Colombo, the Sri Lankan capital.

Sri Lanka does not have formal diplomatic relations with Israel. Like other nations professing nonalignment, it supports the Palestine Liberation Organization. A special interests section in the embassy of a mutually friendly country usually serves as a conduit for contacts between nations that do not have formal relations.

To Fight Tamil Extremists

The Sri Lanka leader did not say when the Israelis would begin working but said that their antiterrorist expertise would be used to assist his security forces in operations against extremists from the minority Tamil community, who are fighting for a separate nation. Mr. Jayawardene is a member of the majority Sinhalese group.

''Once they begin to function,'' President Jayawardene told reporters, ''we will find out from them how they can help us in the investigative process as far as terrorists are concerned.'' ''I understand they are very expert in that,'' he added referring to Israel's antiterrorist record.

https://www.nytimes.com/1984/07/03/world/sri-lanka-strife-and-israeli-aid.html

August 26, 1984 செய்தி.

Israeli intelligence agents and former British Army commandos are training Sri Lanka's security forces as part of a new drive by the Government to combat a violent Tamil separatist movement in the north, the country's National Security Affairs Minister says.

The minister, Lalith Athulathmudali, said in an interview this week that the training programs were aimed at overhauling the organization of intelligence gathering, building an effective information-gathering network and training a paramilitary unit to combat the Tamil insurgents.

Mr. Athulathmudali, reiterating statements made last month by the President of Sri Lanka, Junius R. Jayawardene, said Sri Lanka had turned to the Israelis as a final resort after the United States, Britain and West Germany rejected official requests for aid in improving the intellligence system and training troops in counterinsurgency. Diplomatic Ties Broken in '70

Since June 1 Sri Lanka has allowed Israel, with which it broke diplomatic relations in 1970, to maintain a special interests section under the protection of the United States Embassy here.

''Our intelligence system was not geared to this kind of thing,'' said Mr. Athulathmudali. About 10 Israeli agents have trained about 100 Ceylonese in intelligence tactics in the last two months, he said.

''They come in batches and give a course,'' the minister said. ''They do not go outside the classroom.'' The training is being conducted in Colombo at a site that Mr. Athulathmudali declined to identify.

NEW DELHI, Aug. 25 (Reuters) - Prime Minister Indira Gandhi said today she was deeply concerned over reports that Israeli aid was being provided to the Sri Lanka Government in its fight against Tamil separatists.

The Press Trust of India news agency quoted Mrs. Gandhi as telling the lower house of Parliament, ''We do not like the presence of foreign troops or any type of interference.'' She said that British experts were also understood to be providing antiguerrilla training to Sri Lanka's security forces.

The news agency quoted the Prime Minister as having said the Indian Government was trying to help bring an early end to the tensions in Sri Lanka.

''We are doing everything possible to try to bring people to the negotiating table, offering our good offices to Sri Lanka as a friendly neighbor,'' she said.

She denied accusations by Sri Lanka that India had planned an invasion of the island republic last year after ethnic violence in which 400 people, mainly Tamils, died. ''There was no such plan,'' she said.

https://www.nytimes.com/1984/08/26/world/israel-said-to-aid-sri-lanka-forces.html

பிரேமதாசா Israeli Interests Section ஐ close பண்ணினார். 

Mossad ஐ சேர்ந்த Victor Ostrovsky எழுதிய By way of deception : The making and unmaking of a Mossad officer என்ற புத்தகத்தில் Mossad இலங்கை அரசுக்கும் தமிழ் போராளிகளுக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கொடுத்ததாக இருந்ததை பார்த்த பிரேமதாசா அது பற்றி விசாரிக்க Mossad Commission ஐயும் அமைத்தவர்.

அவர் கொல்லப்பட்ட பின் இலங்கையில் இஸ்ரேலின் ஆதிக்கம் தான்.

கீழேயுள்ளது Krisna Saravanamuttu எழுதியது. அதையும் வாசியுங்கள்.

Israel Advises Sri Lanka On Slow-Motion Genocide

https://www.colombotelegraph.com/index.php/israel-advises-sri-lanka-on-slow-motion-genocide/

Edited by Lara
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

1984 ம் ஆண்டு முடிந்து ரொம்ப காலமாகி விட்டது. 2018,2019 ல் இஸ்ரேலின் பிரசன்னம் சிறிலங்காவில் எங்கு இருந்தது என்பற்கான ஆதாரம் உள்ளதா??

Share this post


Link to post
Share on other sites
16 minutes ago, nunavilan said:

1984 ம் ஆண்டு முடிந்து ரொம்ப காலமாகி விட்டது. 2018,2019 ல் இஸ்ரேலின் பிரசன்னம் சிறிலங்காவில் எங்கு இருந்தது என்பற்கான ஆதாரம் உள்ளதா??

உளவு அமைப்புகள் அலுவலகதுக்கு வெளிய விளம்பரப்பலகையுடன் இயங்குவதாக நீங்கள் நினைத்துக்கொண்டால் ஒருவராலும் ஆதாரம் தரமுடியாது.  

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, Maharajah said:

உளவு அமைப்புகள் அலுவலகதுக்கு வெளிய விளம்பரப்பலகையுடன் இயங்குவதாக நீங்கள் நினைத்துக்கொண்டால் ஒருவராலும் ஆதாரம் தரமுடியாது.  

சரி நடவடிக்கைகளை அடுக்குங்கள் பார்க்கலாம்.

Share this post


Link to post
Share on other sites
9 minutes ago, nunavilan said:

சரி நடவடிக்கைகளை அடுக்குங்கள் பார்க்கலாம்.

அதுதான் கூறிவிட்டேனே ஆதாரம் தரமுடியாது என்று. 

Share this post


Link to post
Share on other sites

நுணாவிலான், 

உலகின் முக்கியமான உளவு அமளிப்புக்கள் இலங்கையில் இயங்குவது உங்களுக்கு தெரியுமா தெரியாத? பிறகேன் உங்களுக்கு இப்படி ஒரு கேள்வி வருகிறது ? 

Share this post


Link to post
Share on other sites
On 10/26/2019 at 11:22 PM, Maharajah said:

2500 வருடங்களாக பல்வேறு பண்பாட்டு,  ஆயுத படையெடுப்புக்களைதாண்டி தன்னை தக்கவைத்திக்கும் ஒரு இனம் இன்னும் 5000 வருடங்கள்  தன்னை தக்கவைத்திருக்கும். நாங்கள்தான் இதனை உணர வேண்டும்.  இன்னும் அடுத்த 50 வருடங்ககுக்குள் இலங்கையில் தமிழன் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போகும்.  இதனை எமது கண்களால் நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்.  புலம்பெயர் தமிழரும் உலகத்தமிழரும் ஒருபுள்ளியில் சந்திக்கவிட்டால் இதனை யாராலும் தடுக்க முடியாது.  தமிழ்நாட்டருக்கும் இதுதான் நிலை.  

இதற்கு  நல்லா உதாரணம்  இஸ்ரவேலும் பலஸ்தீனமும் 

தற்போதைய நிலையியில் புலம் பெயர் தமிழரும் ஒரே புள்ளியில் சந்திக்கும் இடம் இரண்டு

ஒன்று  பணம்  - இதில் பாதகமும் சாதகமும் கலந்து உள்ளது. 

மற்றயது தமது தாமே மண்ணை வாரிக்கொள்ளும் இருபகுதி மக்களினதும் தொடர்ச்சியான  நடவடிக்கைகள். 

இவர்களது இரண்டு நடவடிக்கைகளிலும் பாரிய மாற்றம் வர வேண்டும் என்ற உங்களது விருப்பம் சரியானது. 

 

Share this post


Link to post
Share on other sites
On 10/26/2019 at 11:38 AM, கிருபன் said:

சுமந்திரனுக்கு பாடம் புகட்ட முல்லைத்தீவில் குடியேறப் போவதாக ஞானசார தேரர் எச்சரிக்கை

சுமந்திரனையே பார்த்து பயப்படுறார் இந்த ஞானம்சாராத தேரர்!

  • Haha 1
  • Sad 1

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, tulpen said:

தற்போதைய நிலையியில் புலம் பெயர் தமிழரும் ஒரே புள்ளியில் சந்திக்கும் இடம் இரண்டு

ஒன்று  பணம்  - இதில் பாதகமும் சாதகமும் கலந்து உள்ளது. 

மற்றயது தமது தாமே மண்ணை வாரிக்கொள்ளும் இருபகுதி மக்களினதும் தொடர்ச்சியான  நடவடிக்கைகள். 

இவர்களது இரண்டு நடவடிக்கைகளிலும் பாரிய மாற்றம் வர வேண்டும் என்ற உங்களது விருப்பம் சரியானது. 

 

இதற்கு நாங்கள் எல்லோரும் கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்து முதலில் வெளியே வரவேண்டும் 

Share this post


Link to post
Share on other sites
On 10/27/2019 at 10:07 PM, nunavilan said:

1984 ம் ஆண்டு முடிந்து ரொம்ப காலமாகி விட்டது. 2018,2019 ல் இஸ்ரேலின் பிரசன்னம் சிறிலங்காவில் எங்கு இருந்தது என்பற்கான ஆதாரம் உள்ளதா??

கருத்துகளை நீக்கும் போது இதற்கு நான் இணைத்த செய்திகளையும் நியானி நீக்கி விட்டார். நீக்கப்பட முன் அவற்றை வாசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். 

இது ஈஸ்ரர் தாக்குதலின் பின் Nilantha Ilangamuwa என்ற சிங்கள ஊடகவியலாளர் எடுத்த செவ்வி.

Interview: Ex-Israeli Intelligence Head on Easter Sunday Bombings

30 May 2019

Yoram Schweitzer, a senior researcher at Institute for National Security Studies (INSS), one of the think tanks in Israel. Before joined the INSS, he was a researcher and head of Educational Curriculum at the International Policy Institute for Counter-Terrorism (ICT) at the Inter Disciplinary Center in Herzliya.

He has specialized on internationalization of suicide terrorism, and Schweitzer's writings include ‘An Expected Surprise; The September 11th Attack and its Ramifications; Al Qaeda and the Internationalization of Suicide Terrorism; and editing and contributing to ‘Female Suicide Bombers: Dying for Equality’.

Recently I had an opportunity to catch up with Schweitzer and listen to his views on global terrorism, counter-terrorism, importance of intelligence, and Easter Sunday attacks in Sri Lanka. 

While denying the recent press reports that the Mossad had foreknowledge on September 11 attacks by Al-Qaeda in the United States of America, he says, “as a former intelligence officer I could assure you that we never hesitate to share the information and prevent any sort of adversaries not only against the friendly nations but also other state parties. Mossad did not have any foreknowledge on the September 11 attack.”

“Manufactured lies by enemies,” he added. 

Schweitzer formerly served as Chief of the Israel Defence Force's Military Intelligence Division's Foreign Terrorism Section and private consultant to the Office of the Prime Minister of Israel. With extensive experiences in counterterrorism, Schweitzer demonstrates his views on Salafi Jihadi terrorism, Easter Sunday attacks in Sri Lanka and how could Israel support in eradicating Jihadi terrorism. 

While commenting on Easter Sunday attacks in Sri Lanka he says, “Vulnerable communities can be easily infected by the germs and spread the terrorist ideologies than others. If you look at the background of the ringleader and his motive behind the attack, it demonstrates the vulnerability of this community”. 

“The military defeat of the Islamic State does not herald the destruction of the organization or the end of its activity - quite the opposite. The Salafi jihadist ideology and the modus operandi represented by the Islamic State, Al-Qaeda, and their affiliates continue to inspire terrorists, whether they are directly or indirectly linked to them, or see them as a model for imitation,” he said while quoting his recent analysis on terrorist attacks in Sri Lanka. 

The “attack, demonstrated anew that the lack of effective cooperation and intelligence sharing between the intelligence, security, and enforcement agencies is a central factor in the success of terror groups to carry out their plans,” Schweitzer observed. 

“These details and the lessons of bombings in Colombo, if properly learned, will help prevent or obstruct future terror plans of the Islamic State and its supporters – plans that are expected to challenge many countries in the years to come,” he said. 

Meanwhile, answering why the terrorist targeted Sri Lanka though it doesn’t have any political impact, he said, “this is how the Salafi jihadist terrorism strikes. Terrorizing society and targeting anywhere vulnerable and killings as much possible are the aim of these terrorists”. 

Meanwhile responding to the allegations against state parties that are targeting civilians in warfare, Schweitzer is confident that not a single state which is bound by the law of war and ratified international law purposely targets unarmed civilians. 

“There are a few fatal incidents, but not a single law-abiding government purposely targeted the civilians in warfare, but terrorists’ prime target is unarmed civilians. No matter what ethnicity or what religious belief you follow, terrorists will eliminate you to propagate social fear and attract attention,” he said. 

“Countries ruled by dictators are different scenarios,” he added. 

Challenges are ahead, “Israel is helping to eliminate the Salafi jihadist terrorism and we will always share intelligence with the state parties to support counter-terrorism. Most importantly, intelligence gathering, analysis, and sharing with correct authority is a need of the hour. We have engaged via third parties or directly with countries to fulfil this need. I have done this before and I’m confident Israel is always standing with the state, not with terrorists”, Schweitzer further said. 

http://www.srilankaguardian.org/2019/05/learn-lessons-of-sri-lanka-attack-to.html?m=1

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.