• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
கிருபன்

திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை: விடியவிடிய நடக்கும் மீட்பு பணி

Recommended Posts

கண்ணீர் அஞ்சலிகள்..😢

அடுத்த கிழமை நயன்தாரா தன்ர காதலரை மாற்றினால் இதுவும் கடந்து போகும் .. கடலில் எண்ணெய்-பிளாஸ்ரிக் வாளி, நீராவி-தெர்மோகோல், ஆற்று நீர் அசுத்தம் - சோப்பு நுரை ,டேங்கு காய்ச்சல் - ரெல்லி கொசு முதலான பல்வேறு நினைவலைகள் வந்து போகிறது..

28b.jpg

லெற்றஸ்ற் ரெக்னாலஜி...

 • Sad 1

Share this post


Link to post
Share on other sites

சீ அதுக்குள்ள அவன் இறந்திட்டதா சொல்லிபுட்டாங்கள் இல்லைனா இன்னும் நாலு நாளைக்கு ரீவி சானல்களில் வைரல் நியூஸ்போட்டு காசு பாத்திருக்கலாம் 

சரிவிடு இன்னுமொரு குழந்தை விழாமலா போயிடும்.

சீ அதுக்குள்ள அவன் இறந்திட்டதா சொல்லிபுட்டாங்கள் இல்லைனா இன்னும் நாலு நாளைக்கு ரீவி சானல்களில் வைரல் நியூஸ்போட்டு காசு பாத்திருக்கலாம் 

சரிவிடு இன்னுமொரு குழந்தை விழாமலா போயிடும்.

Share this post


Link to post
Share on other sites

நாலுநாளாக தவித்தமனதுக்கு ஆறுதல் கிடைக்கவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்!!

Share this post


Link to post
Share on other sites

சிறுவன் சுஜித் நான்கு நாட்களின் பின்னர் சடலமாக மீட்பு

 

water

இந்தியாவில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் சுஜித் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளதாகவும் அவரை மீட்கும் பணிகள் கடுமையாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு வந்தன.

நான்கு நாட்களுக்குப் பின்னர் குழிக்குள் இருந்து நேற்றிரவு 10.30 மணியளவில் சிறுவன் உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசுவதாக மீட்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் சிறுவனின் சடலம் மீட்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

http://www.dailyceylon.com/191461/

Share this post


Link to post
Share on other sites

சுஜித் மரணம்: உயிரிழப்புகளுக்குப் பிறகுதான் சட்டம் அமல்படுத்தப்படுமா?: சென்னை உயர்நீதி மன்றம்

சுஜித் Image captionசுஜித்

உயிரிழப்புகளுக்குப் பிறகுதான் சட்டம் அமல்படுத்தப்படுமா என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. ஆழ்துளைக் கிணறு தொடர்பாக தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.

திருச்சி மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டிப்பட்டியில் ஆழ்துளைக் கிணறு ஒன்றில் 2 வயதுச் சிறுவன் சுஜித் விழுந்து, உயிரிழந்தான். அவனை உயிருடன் மீட்கும் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்தால் அவர்களை மீட்க 6 விதமான தொழில் நுட்பங்கள் இந்தியாவில் இருப்பதாகவும் அவற்றைப் பயன்படுத்தி சில மணி நேரங்களிலேயே குழந்தைகளை உயிருடன் மீட்டுவிடலாம் எனவும் சுஜித்தை மீட்கும் விவகாரத்தில் இந்தத் தொழில்நுட்பம் எதையும் பயன்படுத்தவில்லையெனவும் கூறியிருந்தார்.

சுஜித்

ஆழ்துளைக் கிணறுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் 2010ஆம் ஆண்டே பிறப்பித்த உத்தரவுகளைச் சுட்டிக்காட்டியிருந்த பொன்ராஜ், அந்த உத்தரவின்படி ஆழ்துளை கிணறுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை தமிழக அரசு 2015ஆம் ஆண்டு கொண்டு வந்தது என்றும் ஆனால், அரசு அதிகாரிகள் இந்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தவில்லை எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

ஆகவே, இது தொடர்பாக தகுந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்; கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என பொன்ராஜ் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன், ஷேசாய் ஆகியோர் அடங்கிய அமர்வு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

உயர் நீதிமன்றம்

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசிடம் பல கேள்விகளை எழுப்பினர். "ஒவ்வொரு முறையும் யாராவது உயிர் இழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா, ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்காக வழங்கப்பட்ட அனுமதி குறித்த ஆவணங்கள் எங்காவது பராமரிக்கப்படுகின்றனவா? இதுவரை மாநிலம் முழுவதும் எத்தனை ஆழ்துளை கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? தோண்டப்பட்டு, பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் எத்தனை? மாநில அரசு வகுத்த விதிமுறைகளை மீறியவர்கள் எத்தனைபேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?" என நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.

மேலும், சுபஸ்ரீ மரணம் அடைந்ததும் பேனர் தொடர்பான சட்டத்தையும் சுஜித் மரணம் அடைந்ததும் ஆழ்துளை கிணறு சட்டத்தையும் சிறிது காலம் அமல்படுத்தப்படுகிறது. பிறகு அவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை. அரசு கொண்டு வந்த விதிகள் பின்பற்றப்படுகிறதா என அதிகாரிகள் யாரும் எந்த ஆய்வும் செய்வதில்லை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசின் பதிலை நவம்பர் 21ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தவிட்டு, வழக்கை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

https://www.bbc.com/tamil/india-50221615

Share this post


Link to post
Share on other sites

குழந்தை இறந்துவிட்டது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் எப்போதோ தெரிந்திருக்கவேண்டும் இல்லாதுவிடின் அரசும் அதிகாரிகளும் மருத்துவத்துறையும் மூடர்கள் கூட்டம் எனத்தான் கூறவேண்டும் காரணம் குழந்தை உயிருடன் இருந்தால் அக்குழந்தையின் உடலிலிருந்து வெளிப்படும் வெப்பத்தை அளக்கும் கருவி காட்டிக்கொடுத்துவிடும் அக்கருவியை உடனடியாகத் தருவிக்கமுடியாத நிலையின் தமிழக அரசும் அதிகாரிகளும் இல்லை ஆகவே இவர்கள் குழந்தை இறந்தபின்பும் வேண்டுமென்றே நேரத்தை வீணடித்து அழுகிப்போன ஒரு உடல் பிண்டத்தை மீட்டிருக்கிறார்கள். 

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள் சிறுவனே.

இந்த ஏழைகளின் வாழ்க்கை என்றும் கண்ணீரிதான் ஐயா, நெஞ்சு வெடிக்கின்றதய்யா

Share this post


Link to post
Share on other sites

சுஜித் தந்தை உருக்கம்: "ஆழ்துளையில் விழும் கடைசி குழந்தை என்னுடையதாக இருக்கட்டும்"

மு.ஹரிஹரன்பிபிசி தமிழுக்காக.
சுஜித் மற்றும் அவனின் தாய்

"ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து இறக்கும் கிடைசி குழந்தை சுஜித்தாக இருக்கட்டும்," என்கிறார் சுஜித்தின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியதாஸ்.

வெள்ளிக்கிழமையன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை அங்கு வெட்டி வைத்திருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். பெரும் போராட்டத்திற்கு பிறகு சுஜித் இன்று காலை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான்.

சுஜித்தின் உயிரை பறித்த அந்த ஆழ்துளை கிணறு சுஜித்தின் தாத்தா காலத்தில் தோண்டப்பட்டுள்ளது. அவர்கள் அங்கு குடும்பத்துடன் 10 வருடமாக வாழ்ந்து வருகின்றனர். அங்கு விவசாயம் பார்த்துக் கொண்டிருந்த அந்த குடும்பம் தண்ணீருக்காக 600 அடிக்கு ஆழ்துளை கிணற்றை தோண்டியுள்ளது. ஆனால் அதன் பின் தண்ணீர் வராததால் அதனை மண் போட்டு மூடிவிட்டனர் தனது பெற்றோர் என்று பிபிசி தமிழிடம் கூறியுள்ளார் சுஜித்தின் தந்தை.

"அதன்பிறகு அனைவரும் அந்த குழி குறித்து மறந்துவிட்டனர். அது அடைக்கப்பட்டுவிட்டது என்றே அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். எனவே யாரும் அதை பெரிதாக எண்ணவில்லை" என்கிறார் சுஜித்தின் தந்தை.

சுஜித்தின் தந்தை பிரிட்டோ அரோக்கியதாஸ் மற்றும் தாய் கலா மேரிக்கு 2015ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதே ஆண்டு அவர்களின் மூத்த மகன் புனித் பிறந்தான்.

அதன்பிறகு 2017ஆம் ஆண்டு சுஜித் பிறந்துள்ளான்.

சுஜித் விழுந்த குழி

சுஜித்தின் அண்ணன் புனித் சுட்டியான குழந்தை. ஆனால் சுஜித் அவனைக்காட்டிலும் சுட்டி. தனது தாயிடம் மிகவும் பாசமாக இருக்கக்கூடியவன். அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருப்பான்.

தனது முன்னோர்களை போல சுஜித்தின் தந்தை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் தண்ணீர் இல்லாததால் அதனை விட்டுவிட்டு தற்போது கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

சுஜித் அந்த குழிக்குள் விழுந்த அன்றைய பொழுது எப்போதும் போல் இயல்பானதாகவே விடிந்துள்ளது. அவர்கள் என்றைக்கும் போல் ஒன்றாக அமர்ந்து குடும்பமாக காலை உணவு உண்டுள்ளனர்.

அவர்கள் காலை உணவருந்திக் கொண்டிருக்கும்போதே புனித்தின் பள்ளி வாகனம் வர அவனை அதில் ஏற்றி விட்டு, தனது வீட்டிலிருந்து 20 கிமீட்டர் தொலைவில் உள்ள வையம்பட்டி என்ற இடத்துக்கு தனது பணிக்கு சென்றுள்ளார் பிரிட்டோ.

வீட்டில் சுஜித் எப்போதும் போல் விளையாடிக் கொண்டிருந்தான். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் சுஜித்தின் உறவினர்களே எனவே அவன் அந்த இடத்தில் அங்கும் இங்கும் சென்று ஓடியாடி விளையாடுவதுண்டு.

அன்று சுஜித்தின் தாய் எப்போதும் போல தனது வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். கலாமேரிக்கு அந்த குழி இருப்பது தெரியாது. அங்குதான் ஒரு காலத்தில் சுஜித்தின் தாத்தா விவசாயம் பார்த்து வந்துள்ளார்.

சுஜித்தின் தந்தை அந்த குழி தோண்டும்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.

அன்று சுஜித் எப்போதும் போல விளையாடிக் கொண்டிருக்கும் சம்யத்தில் திடீரென அந்த குழிக்குள் விழுந்தார். அவரின் தாய் கலாமேரி கண் முன்னால் அனைத்தும் நடந்து விட்டது. மாலை 5.30-5.40 மணிக்குள்ளாக இந்த சம்பவம் நடந்துவிட்டது.

அதன்பிறகு அவர்கள் சுஜித்தை காப்பாற்ற முயன்றுள்ளனர். முடியவில்லை. சுஜித்தின் தந்தைக்கு சுமார் 6 மணியளவில் தொலைபேசியில் அழைத்தனர்.

அப்போது அவர் அங்கு வரும்போது குழந்தை 20-22 அடி ஆழத்தில் இருந்துள்ளான்.

அப்போது அந்த குழந்தை அழும் சத்தம் கேட்டதாகவும், சுஜித்திடம் அவனின் தாய் பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறுகின்றனர். பின் அவர்கள் போலீஸார் மற்றும் தீயனைப்பு துறைக்கு தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணிகள் குறித்து ஊர் மக்களில் சிலர் குற்றச்சாட்டுகளையும் வைக்கின்றனர். ஆனால் சுஜித்தின் தந்தை, அரசாங்கம் நல்ல முயற்சி எடுத்தது. அனைவரும் துரிதமாக செயல்பட்டனர் என்றார்.

மேலும், "இம்மாதிரியான சம்பவம் முதலும் கடைசியானதாக இருக்க வேண்டும். இம்மாதிரியான ஆழ்துளை கிணற்றில் விழுந்த கடைசி குழந்தை என்னுடையதாகவே இருக்கட்டும்" என்று அவர் கூறினார்.

அதே சமயம் "சமூக ஊடகங்களில் நான் அந்த குழியை தோண்டியதாகப் பேசுகின்றனர் ஆனால் அது உண்மையில்லை" என்று அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-50221660

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

நான் உருவாக்கிய கருவியை பயன்படுத்தக் கூடாத நிலை ஏற்பட வேண்டும்: மணிகண்டன் பேட்டி

sujith-reduce-he-will-be-rescued-alive-manikandan
 

2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் குழுவில் தான் தயாரித்த கருவியுடன் ஆரம்பத்தில் முயற்சி செய்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மணிகண்டனிடம் இன்று (அக்.28) காலையில் பேசினேன். அவரிடம் எடுத்த இந்த பேட்டியை எழுதும் சமயத்தில், குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 66 மணிநேரத்தைக் கடக்கவிருந்தது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுடைய மகன்கள் புனித் ரோசன் (வயது 4), சுஜித் வில்சன் (வயது 2). கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணி அளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டான். அன்று தொடங்கிய மீட்புப் பணி 4-வது நாளாக இன்றுவரை முழுவீச்சில் நடந்துவருகிறது

 

மதுரை மணிகண்டன், திருச்சி டேனியல், கோவை விநாயகம் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீதர், தீயணைப்புத்துறை, மாநில பேரிடர் மீட்புத்துறை, தேசிய பேரிடர் மீட்புத்துறை என கிட்டத்தட்ட 8 குழுக்கள் முயற்சித்தும், கடந்த 4 நாட்களாக கேட்க விரும்பும் நல்ல செய்தி இன்னும் காதுகளுக்கு எட்டவில்லை.

15722489132949.jpg

அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரின் இடையறாத பணிகளையும், தீபாவளியன்றும், வீட்டுக்குச் செல்லாமல் மீட்புப்பணிகளை தொடர்வதையும் மாற்றுக்கட்சியினரும், மக்களும் பாராட்டி வருகின்றனர்.

அதேவேளையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை 67 மணிநேரம் கடந்தும் மீட்க முடியாத அளவுக்கு தொழில்நுட்பத்தில் இந்தியா பின்தங்கியிருக்கிறதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

இதனிடையே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை தூக்கும் ரோபோட் போன்ற கருவியை தாயாரித்த மணிகண்டனிடம் பேசினோம். குழந்தை சுஜித்தை மீட்கும் குழுவில் இருந்தவரான மணிகண்டன், மீட்பில் ஏன் பின்னடைவு, எத்தகைய தொழில்நுட்பம் தேவை என்பதை பேசினார்.

உங்களுக்கு குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த செய்தி எப்போது தெரியவந்தது? அப்போது உங்களின் நம்பிக்கை என்னவாக இருந்தது?

எனக்கு குழந்தை விழுந்த அன்றே, கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கே திருச்சி மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அழைப்பு வந்தது. 8 மணிக்கெல்லாம் நிகழ்விடத்திற்கு சென்றுவிட்டேன். அரை மணிநேரத்தில் குழந்தையை மீட்கலாம் என்ற நம்பிக்கையில் சென்றேன்.

ஏற்கெனவே அங்கு டேனியல் என்பவர், குழந்தையின் ஒரு கையில் கயிற்றை கட்டி மற்றொரு கையில் மாட்டுவதற்கான முயற்சியில் இருந்தார். அவருடைய முயற்சியே வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் இருந்தோம்.

பலமுறை முயற்சி செய்து பார்த்தோம். ஆனால், அந்த முயற்சி பலனளிக்கவில்லை. ஆழ்துளை கிணற்றின் ஆழத்திற்கு செல்லச்செல்ல அதன் விட்டம் குறைந்துகொண்டே சென்றது, இதனால் குழந்தை அந்த இடத்தில் இறுக்கிக்கொண்டிருந்தது.

அடுத்ததாக, கோவை விநாயகம் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீதர் என்பவரின் தலைமையில் ஒரு கருவி மூலம் முயற்சி செய்தனர். ஆனால், குழந்தையின் இரு கைகளும் மடங்கியிருந்ததால், அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

அதன்பிறகு தான் நான் முயற்சி செய்தேன். கைபோன்ற ரோபோட் கருவி மூலம் குழந்தையைத் தூக்குவது போன்ற கருவி, கயிற்றால் குழந்தையின் கைகளைக் கட்டி மேலே தூக்குவது போன்ற மற்றொரு கருவி என நான் வடிவமைத்திருந்த இரு கருவிகளையும் கொண்டு சென்றிருந்தேன்.

ரோபோட் போன்ற என்னுடைய கருவி 6*5 என்ற அளவில் இருந்தது. அது குழந்தை இருக்கும் இடத்தில் நுழையாது என்பதால், என்னுடைய இரண்டு கருவிகளையும் 5*5 என்ற அளவுக்கு சுருக்கி மறுநாள் காலையில் கொண்டு வந்தேன்.

ஆனால், அதற்குள் குழந்தை 70 அடிக்குள் சென்றுவிட்டது. இருந்தாலும் கயிற்றின் மூலம் இழுத்துப் பார்த்தோம். ஆனால், குழந்தை இறுக்கமாக இருந்ததால் மேலே வரவில்லை.

குழந்தையை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் பலனளிக்காததற்கான காரணம் என்ன?

இந்த ஆழ்துளை கிணற்றின் விட்டம் 5*5 என்ற அளவில் குறுகி இருப்பதே எந்த முயற்சியும் பலனளிக்காததற்குக் காரணம். குழந்தையின் தலைக்கு மேல் ஒரு குண்டூசியைக் கூட செலுத்த முடியாத அளவுக்கு இடைவெளியே இல்லாமல் இருந்தது. நான் தயாரித்த கருவியை முடிந்த அளவுக்குக் குழந்தையின் கைகளில் இறுக்கித் தூக்க முயற்சித்தோம். ஆனால், பலனளிக்கவில்லை. கருவியை மேலும் இறுக்கித் தூக்கினால் அது குழந்தையின் உயிருக்கு விபரீதமாகும் என்பதால், அம்முயற்சியைக் கைவிட்டோம்.

ரோபோட் போன்ற கருவியை நீங்கள் தயாரித்தது எப்போது, அதன்மூலம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்ட நம்பிக்கையான சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டா?

2003-ல் என்னுடைய குழந்தையே ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. குழந்தை 5 அடிக்குள் தான் ஆழ்துளை கிணற்றில் விழுந்திருந்தது. அதனால், என் கைகளைக் கொடுத்தே குழந்தையை மீட்டுவிட்டேன். இருந்தாலும், என் குழந்தை விழுந்த போது நான் அடைந்த வேதனையை வேறெந்த பெற்றோரும் அடையக்கூடாது என்பதால் குழந்தையை தூக்குவதற்கான கருவியை கண்டுபிடிக்க முடிவு செய்தேன்.

ஆரம்பத்தில், குழந்தையை தூக்கும் வகையில் மட்டுமே கருவியை செய்தேன். அதன்பிறகு, அதில் கேமரா பொருத்தி நவீன முறையில் மாற்றினேன். ஆழ்துளை கிணற்றில் உள்ள குழந்தைக்குக் கீழே இந்த கருவியை செலுத்துவதற்கான தொழுல்நுட்பமும் இதில் இருக்கிறது. ஆழ்துளை கிணற்றில் தண்ணீரில் குழந்தை இருந்தாலும் மீட்கும் வகையில் நவீனமாக்கி உள்ளேன். தொடர்ந்து ஒவ்வொரு அனுபவங்களின் போதும் கருவியை சூழலுக்கு ஏற்ப நவீனமாக்கி வருகிறேன்.

சங்கரன்கோவிலில் ஏற்கெனவே 2014-ல் தர்ஷன் என்கிற குழந்தையை உயிருடன் மீட்டுள்ளோம். 20 அடியில் விழுந்த அந்த குழந்தைக்கு இடையே கருவியை செலுத்துவதற்கான இடைவெளி இருந்ததால் மீட்டோம். திருவண்ணாமலையில் இக்கருவி மூலம் மீட்ட குழந்தை, மருத்துவமனைக்கு செல்லும்போது உயிரிழந்தது. 2007-ல் இருந்து பல சம்பவங்களை இம்மாதிரி கருவிகளின் மூலம் மீட்க முயற்சித்திருக்கிறோம்.

நீங்கள் கண்டுபிடுத்த கருவியை அரசே பெற்று, அதனை தமிழகம் முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டீர்களா?

2006 வரை இந்த கருவியை அரசு வாங்கிக்கொள்ள முயற்சி செய்தேன். ஆனால், கருவிக்கு உரிய அங்கீகாரம் வாங்கினால் தான் பெற்றுக்கொள்வோம் என தமிழக தீயணைப்புத் துறை தெரிவித்தது. 2006-ல் சென்னை ஐஐடியில் இந்த கருவியை நிரூபித்துக்காட்டினேன். அங்கு இந்த கருவிக்கு சிறந்த கண்டுபிடிப்புக்கான விருது வழங்கினர்.

அதன்பிறகும், தமிழக தீயணைப்புத்துறையில் இக்கருவியை வாங்கிக்கொள்வதற்காக முயற்சி செய்தேன். அப்போது, இந்த மாதிரியான சம்பவங்கள் நடக்கும்போது என்னை அழைப்பதாக தெரிவித்தனர். அதன்பிறகு, கரூரில் ஆழ்துளை கிணற்றில் 12 அடியில் விழுந்திருந்த குழந்தையை மீட்க அழைத்தனர்.

ஆனால், எனக்கு அழைப்பு வந்தபிறகு செல்வதில் தாமதமானதால், குழந்தை இறந்துதான் மீட்க முடிந்தது. அதன்பிறகு, குழந்தையை உயிருடன் மீட்டால்தான் கருவியை வாங்கிக்கொள்வோம் என தீயணைப்புத்துறை கூறிவிட்டது.

2014-ல் நான் ஏற்கெனவே சொன்னது போன்று குழந்தையை காப்பாற்றிய போது, வேலூர், மதுரை, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் தீயணைப்புத்துறை இக்கருவியை வாங்கியது. அந்த மாவட்டங்களில் தீயணைப்புத்துறையினர் அக்கருவியை எப்படி பயன்படுத்துவது, குழந்தையை எப்படி மீட்பது என தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகின்றனர்.

எல்லா மாவட்டங்களுக்கும் வாங்குவதற்காக இந்த ஆண்டுதான் தமிழக அரசு நிதி ஒதுக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எனக்கு அந்த தகவல் உறுதியாகத் தெரியவில்லை. மாவட்டம் முழுவதற்கும் வாங்குவதற்கான கருவிகளுக்கான விலையின் உத்தேசப் பட்டியலை கேட்டிருக்கின்றனர்.

இந்திய ராணுவம் பெங்களூருவில் இக்கருவியை வாங்கியிருக்கின்றனர். ஹைதராபாத்தில் தேசிய பேரிடர் மீட்புத்துறை வாங்கியுள்ளது. இந்தியா முழுவதும் வாங்குவதற்காகவுன் விலை உத்தேச பட்டியலை தேசிய பேரிடர் மீட்புத்துறை கேட்டுள்ளது.

மீட்புப் பணிகளில் உள்ள குறைபாடுகளே குழந்தை ஆழத்திற்கு சரிந்துகொண்டே செல்வதற்குக் காரணம் எனவும், குழந்தையை ஒரே இடத்தில் நிலை நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என சிலர் கூறுவதையும் எப்படி பார்க்கிறீர்கள்?

குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த போது ஆரம்பத்தில் 5 அடியில் தான் இருந்தது. ஆனால், குழந்தை சரிந்துகொண்டே ஆழத்திற்கு சென்றது. மிகக்கிறுகிய இடைவெளியே இருப்பதால், மீட்புப் பணிகளின் போது, மீட்புக்கருவிகள் ஆழ்துளை கிணற்றில் லேசாக தடுமாறினாலே குழந்தை சரிந்துகொண்டே சென்றது.

அதுதான் குழந்தை ஆழத்திற்கு சென்றுகொண்டே இருப்பதற்கான காரணம். கயிறு கட்டாமல் இருந்தாலும் குழந்தை ஆழத்திற்கு சென்றிருக்கும். மீட்புப்பணியால் குழந்தை ஆழத்திற்கு செல்வதாக சொல்வதை ஏற்க முடியாது.

மீட்புப்பணியில் பொதுமக்கள் மிகவும் எதிர்பார்த்திருந்தது தேசிய பேரிடர் மீட்புத்துறை தான். ஆனால், அவர்களின் முயற்சியிலும் எதிர்பார்த்த பலன் இல்லை. இவை ஏன், இந்தியாவில் நவீன தொழில்நுட்பம் இல்லை என நினைக்கிறீர்களா?

நிகழ்விடத்திலேயே அனைத்து மீட்புக்குழுக்களையும் சேர்த்து கிட்டத்தட்ட 10 கருவிகள் இருந்தன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய தொழில்நுட்பம் இல்லை. கடந்த மாதம், பஞ்சாபில் இதேபோன்று சம்பவம் நடந்தது, 5 நாட்கள் முயற்சித்துப் பார்த்து குழந்தை இறந்தவுடன் தான் என்னை அழைத்தனர். ஆனால், நாட்கள் கடந்துவிட்டதால் அங்கு செல்லவில்லை. இப்படி, எந்த மாநிலமாக இருந்தாலும் இங்கிருந்துதான் தொழில்நுட்பத்துடன் அங்கு செல்ல வேண்டியுள்ளது.

இருந்தாலும், இம்மாதிரியான சம்பவம் எங்கு நிகழ்ந்தாலும், நாங்கள் நிகழ்விடத்திற்கு செல்வது போல்தான் இன்னும் இருக்கிறது. அப்படியில்லாமல், அங்கேயே கருவிகள் இருக்க வேண்டும்.

சீனாவில் சில நிமிடங்களில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்டதாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உலாவுகின்றன? அதுகுறித்து...

அந்த வீடியோவை நன்றாக கவனித்தால், குழந்தையை மீட்பதற்கான இடைவெளி இருப்பது தெரியும். இந்த சம்பவத்திலும் இடைவெளி இருந்திருந்தால் குழந்தையை மீட்டிருக்கலாம். சீனாவில் இருந்து இந்த தொழில்நுட்பத்தை கொண்டு வந்தாலும் இந்த சம்பவத்தில் குழந்தை சுஜித்தை மீட்பது சிரமம்.

மீட்புப் பணிகளுக்கிடையில் இந்த இக்கட்டான உங்களின் தனிப்பட்ட உணர்வு என்ன மாதிரி இருந்தது? அங்கு எத்தகைய சூழல் நிலவியது?

குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த அந்த இரவிலிருந்து நேற்றுவரை ஒன்றுமே சாப்பிடவில்லை. வேதனையை அனுபவித்தோம். சுஜித்தின் தாயின் வேதனை தாங்க முடியவில்லை. என்னுடைய 14-15 ஆண்டு உழைப்பு சுஜித்தை மீட்பதில் பலனளிக்காததில் வருத்தம்.

குழந்தையை மீட்க வேண்டும் என அனைவரும் போராடுகின்றனர். குழந்தையை உயிருடன் மீட்டு விட்டால் சந்தோஷம். அமைச்சர்களும் குழந்தையின் தாய்க்குரிய கவலையுடன் தான் இருக்கின்றனர். அமைச்சர்கள் என்ற ரீதியில் அமர்ந்திருக்கவில்லை. அமைச்சர்களும் சாப்பிடவில்லை. யார் வந்து, என்ன யோசனை தந்தாலும், அது நன்றாக இருந்தால் முயற்சிக்க அமைச்சர்கள் அனுமதி கொடுக்கின்றனர்.

அனைவரது யோசனைகளையும் சோதிப்பதிலேயே காலதாமதம் ஆவதாகவும், இதற்கான சரியான தொழில்நுட்பம் அரசிடம் இல்லை என்ற விமர்சனத்தையும் எப்படி பார்க்கிறீர்கள்?

தேசிய மீட்புத்துறையிடம் நவீன தொழில்நுட்பங்கள் இல்லை. கயிறு மட்டும்தான் இருந்தது. அதன் மூலம் தான் குழந்தையை மீட்க முயற்சித்தனர். அரசிடம் எந்தக்கருவியும் இல்லை. ஆழ்துளை கிணற்றில் உள்ள மண்ணை உறிஞ்சுவதற்கான தொழில்நுட்பம் கூட அரசிடம் இல்லை.

அதனைக் கண்டுபிடித்தால் தான் அடுத்த சம்பவங்களில் குழந்தையைக் காப்பாற்ற முடியும். ஒவ்வொரு முறையும் இம்மாதிரியான விபத்துகள் நடக்கக் கூடாது என நினைக்கிறோம். ஆனால், அதனை மீறி மாதத்திற்கு ஒரு விபத்து இம்மாதிரி நடந்துகொண்டிருக்கின்றன.

இம்மாதிரியான இரு சம்பவங்கள் அடுத்தடுத்த நாட்களில் நடந்ததையெல்லாம் நானே எதிர்கொண்டிருக்கிறேன். நான் தயாரித்த கருவியை ஆராய்ச்சி செய்வதற்கு நவீனமாக்குவதற்கு உதவி செய்ய வேண்டும். அதன்பிறகு அக்கருவியை அரசாங்கம் வாங்கிக்கொள்ள வேண்டும்.

எந்த மாதிரியான சூழ்நிலையாக இருந்தாலும், குழந்தையை மீட்கக்கூடிய வகையிலான தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு அரசு பொருளாதார உதவி செய்ய வேண்டும்.

எல்லாவற்றையும் தாண்டி கண்டுபிடித்த கருவிகளை பயன்படுத்தாத சூழல் ஏற்பட வேண்டும். இந்த உலகத்திலேயே பயன்படாத கருவி மணிகண்டன் கருவிதான் என்ற நிலை ஏற்பட வேண்டும். இதைத்தான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். மீட்கும் கருவி இருக்கட்டும், ஆனால், அதனை பயன்படுத்தக்கூடாது.

தொடர்புக்கு: Nandhini.v@hindutamil.co.in

https://www.hindutamil.in/news/tamilnadu/522324-sujith-reduce-he-will-be-rescued-alive-manikandan.html

Share this post


Link to post
Share on other sites
21 hours ago, nedukkalapoovan said:

கடைசியில் இப்படி தான் மீட்டிருக்கிறார்கள். இதனை ஆரம்பத்திலேயே செய்திருந்தால்.. பிள்ளை உயிர் பிழைத்திருப்பான்.

குழந்தையின் உடலை மீட்கவில்லை, கையை மட்டும் தான் எடுத்தார்கள் என கூறுகிறார்கள். 

28 ஆம் திகதி அதிகாலையில் பகிர்ந்து வந்த வீடீயோ ஒன்றில் அங்கு நின்றிருந்த worker ஒருவர் குழந்தை இறந்து 18 மணி நேரத்துக்கு மேலாகுது, மீடியா சொல்வதை நம்பாதீர்கள் என கூறுகிறார். அந்த வீடியோ முதல் முதலாக எந்நேரம் பகிரப்பட்டது என தெரியவில்லை.

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

ரஷ்யாவில் இரண்டு வயது சிறுமி ஆழமான குழிக்குள் விழுந்தாள். மீட்புப் படையினர் 17 வயது மெலிந்த பெண்ணைத் தலைகீழாக அந்தக் குழிக்குள் அனுப்பிக் குழந்தையை வெளியே இழுத்தனர். நேஷனல் ஜியோகிராஃபிக் சேனல் ஒளிபரப்பிய இந்த வீடியோவைப் பாருங்கள். 👇

 

Share this post


Link to post
Share on other sites

சுஜித்தை நானே காப்பாற்றி இருப்பேன்… படிச்சு படிச்சு சொன்னோம், யாரும் கேட்கல – குமுறும் சிறுவன் மாதேஷ்

pixlr_20191028142237609.jpg?fit=1116%2C6
0SHARES
 

சிறுவன் சுஜித் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் இருந்து, இன்னொரு 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தான். செய்தியாளர் ஒருவர் அந்த சிறுவனிடம், இந்த மீட்பு பணி ஆரம்பித்த நேரத்தில் இருந்து நீ ஒரு இடத்தில் நிற்காமல் எல்லா விடயங்களையும் கவனித்து கொண்டு திரிகிறியே எதற்காக என்று, அதற்கு அந்த சிறுவன் கூறுகின்றான் இங்கே மீட்பு பணியில் இருப்பவர்கள் கூட சில தவறுகள் விடுகின்றார்கள் என்று,

அதற்கு செய்தியாளர் சொன்னார் நீ சிறுவன், அவர்கள் பெரியவர்கள் அவர்கள் செய்வது தவறு என்று எப்படி உனக்கு தெரியும் என்று,

அதற்கு அந்த சிறுவன் சொன்னான் நான் சிறுவன் தான் ஆனால் எனக்கு இந்த விடயத்தில் நிறைய அனுபவம் உள்ளது, எனது வீடு சுர்ஜித் வீட்டிற்கு அருகில் தான் உள்ளது, எனது தந்தை இந்த ஆழ்துளை கிணறுகள் தோண்டும் தொழிலையே செய்து வந்தார் இப்போது அந்த தொழிலை கைவிட்டு விட்டார் அவர் அந்த தொழில் செய்யும் காலத்தில் கிணறு தோண்டும் பொழுது உள்ளே உபகரணங்கள் ஏதும் விழுந்து விட்டால் அதை வெளியே எடுக்க சில உத்திகளை கையாளுவார்.

அது விழுந்த பொருள் இருக்கும் ஆழத்தை பொறுத்தே எந்த உத்தியை கையாள வேண்டும் என்று முடிவெடுப்பார். சாதாரணமாக ஒரு 20 அடிக்குள் விழுந்த பொருள் இருக்குமாயின் நானே அந்த கிணற்றினுள் தலைகீழாக சென்று விழுந்த பொருளை எடுத்து வருவேன், அதை தான் ஆரம்பத்தில் செய்ய நானும் எனது தந்தையும் முடிவெடுத்தோம் ஆனால் இங்கே இருந்தவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை என்றான். மேலும் அவன் கூறுகையில் சிறுவன் சுர்ஜித் கிணற்றில் விழுந்த உடனே அவனுடைய தாயார் ஓடி வந்து எனது தந்தையிடம் கூறினார் நாங்கள் ஓடி வந்து பார்க்கும் போது அவன் குறைந்தது 10 அடி ஆழத்தில் தான் இருந்தான் அவன் மூச்சு விடும் சத்தமே வெளியே இருந்த எங்களுக்கு கேட்டது, உடனே எனது தந்தை ஓடி சென்று கயிறு போன்ற தேவையான பொருட்கள் எடுத்து வர கொஞ்சம் தாமதமாகி விட்டது.

ஏனெனில் அவர் அந்த தொழிலை கைவிட்டதால் பொருட்கள் சரியான இடத்தில் இருக்கவில்லை, ஒரு வழியாக எல்லாம் எடுத்து வருவதற்குள் சிறுவன் கிட்டத்தட்ட 20 அடிக்கு சென்று விட்டான் காரணம் கிணற்றில் உட்பகுதி மழையில் ஊறி ஈர தன்மையில் இருந்ததால் வழுக்கும் தன்மை இருந்து, அப்போது நான் கிணற்றினுள் தலைகீழாக இறங்க நானும் தந்தை தயார் ஆனோம்.

ஆனால் அங்கு இருந்தவர்கள் விடவில்லை, பிறகு ஜேசிபி இயந்திரம் மூலம் பக்கவாட்டில் தோண்ட ஆரம்பித்தார்கள் அப்போது கூட எனது தந்தை சொன்னார் இயந்திரத்தின் அதிர்வால் சிறுவன் இன்னும் கீழே போக வாய்ப்பு உள்ளது என்று யாரும் அதை பொருட்படுத்தவில்லை அதனால் தான் இவ்வளவு கடினமாக உள்ளது என்றான்.
சரி இப்போது உனது தந்தை எங்கே உள்ளார் என்று கேட்க அவன் சொன்னான் இங்கே இருக்கும் வல்லுநர்களின் முட்டாள் தனமான வேலைகளை பார்த்தால் எனக்கு கோபம் வருகிறது நான் இங்கு இருக்கவில்லை என்று வீடு சென்று விட்டார் என்றான்.

ஆதாரம்: புதிய தலைமுறை, சத்தியம் டிவி

https://www.newsu.in/?p=3343&fbclid=IwAR280P5I1pvkeBRB_F5d6k5HE5Tsfl3P0yTX_wvjBhPD_DLmLKJh1hQuajc

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, nunavilan said:

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை தூக்கும் ரோபோட் போன்ற கருவியை தாயாரித்த மணிகண்டனிடம்

மணிகண்டன் என்ற இந்த தனிநபரின் முயற்சி பெரும் பாராட்டுக்கு உரியது.

அவர் தனது ஆள்துளைக் கிணற்றில் வீழ்ந்த தனது குழந்தையைக் காப்பாற்றியதோடு நின்றுவிடாமல் பலவருட முயற்சியில் பயனுள்ள ஒரு கருவியை வடிவமைத்து, அதனை மேலும் மேலும் செம்மையாக்கி வருகிறார்.

தமிழக அரசும், வல்லரசுக் கனவில் நித்தம் மிதக்கும் இந்திய ஹிந்திவெறி அரசும் ஆள்துளைக் கிணறு தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்தும் வக்கிலாதவை. ஊழலில் ஊறிப்போயுள்ள இவர்களால் கையூட்டுகளை வாங்கவும் மனிதகுல அழிவுக்கு துணைபோகவும் மட்டுமே முடிகின்றது என்பது இந்திய வரலாறு.

மோடியின் ஹிந்திவெறிக் காடையர்களின் அரசு தென்னிந்திய தொழிலதிபர்களை அழித்தொழிப்பதில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. எயர்செல், ஸ்பைஸ்ஜெட், கிங்க்பிஷர் போன்ற பல தென்னிந்திய வர்த்தகங்கள் மூடப்படுவதற்கு அல்லது வட ஹிந்தியர்கள் கைகளுக்கு மாறுவதற்கு தேவையான அனைத்தையும் மோடியின் ஹிந்திவெறிக் காடையர்களின் அரசு செய்து முடித்திருந்தது.

ராஜாவை கைது செய்த மோடியின் ஹிந்திவெறிக் காடையர்களின் அரசு தற்போது வடஹிந்தியர்களுக்கு அடிமைச் சேவகம் செய்த சிதம்பரத்தின் மீதும் கைவைத்துள்ளது.

மோடியின் ஹிந்திவெறிக் காடையர்களின் அரசு இதுவரை எத்தனை வட ஹிந்தியர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது?

மோடியின் ஹிந்திவெறிக் காடையர்களின் அரசு இதுவரை எத்தனை வட ஹிந்திய பெரும் வர்த்தகர்களை கைது செய்துள்ளது?

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
26 minutes ago, nunavilan said:

ஜேசிபி இயந்திரம் மூலம் பக்கவாட்டில் தோண்ட ஆரம்பித்தார்கள் அப்போது கூட எனது தந்தை சொன்னார் இயந்திரத்தின் அதிர்வால் சிறுவன் இன்னும் கீழே போக வாய்ப்பு உள்ளது என்று யாரும் அதை பொருட்படுத்தவில்லை

இக் குழந்தை வீழ்ந்த செய்தி காதில் வீழ்ந்து அருகில் ஒரு குழியை / துளையை இடுகிறார்கள் என்று கேள்விப்பட்ட கணத்திலிருந்து எனது மனதிலும் ஓடிய எண்ணம் இதுதான்.

துளையிடும் கருவி அல்லது வாரும் இயந்திரங்களின் அதிர்வுகள் குழந்தையை மேலும் ஆழத்துக்கு தள்ளும் என்ற எண்ணம் தொடர்ந்தும் 2, 3 தினங்களாக மனதை குடைந்து கொண்டே இருந்தது.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

தமிழக அமைச்சர்கள்  பலரும் அந்த இடத்தில் நின்றிருந்தாலும்...
ஒரு அவசரமான நிலையில்....  தகுந்த முடிவை எடுப்பதில் தடுமாறி உள்ளார்கள்.

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, தமிழ் சிறி said:

தமிழக அமைச்சர்கள்  பலரும் அந்த இடத்தில் நின்றிருந்தாலும்...
ஒரு அவசரமான நிலையில்....  தகுந்த முடிவை எடுப்பதில் தடுமாறி உள்ளார்கள்.

அதுகளுக்கு எங்கிருக்கு படிப்பறிவு இல்லை பட்டறிவாவது இருக்கணும் இல்லை திறமையா உழல் செய்யவாவது தெரிந்து இருக்கணும் அதுவும் கிடையாது அடிமைகளா இருப்பது அதுகளுக்கு சுகம் .

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

மிகவும் துயரத்தை கொடுத்த ஒரு நிகழ்வு. 😥 அதனால் எந்த திரியையும் எட்டிப் பார்க்க முடியவில்லை!

எனக்குத் தோன்றுவது என்னவென்றால், கைகள் மேலே தெரிந்தபோதே சுருக்கு கயிற்றை இறக்கி கைகளில் ஒன்றை சுருக்கிட்டிருக்க வேண்டும். குறைந்த பட்சம் 20 அடியில் இருந்து எண்பது அடிகளுக்கு செல்லாமல் தடுத்திருக்கலாம்.

இரண்டாவதாக, குழியின் மேல் vacuum seal செய்து 1.0psi suction கொடுத்தால் குழந்தைக்கு சில கணங்கள் கடினமாக இருந்தாலும், சுற்றுச் சுவர்கள் இறுக்கம் தணிந்து மேலே இழுக்க வசதி ஏற்பட்டிருக்கலாம். இது குறித்து விரிவான செய்முறை வரைந்துதான் விளக்க முடியும்.

ஆழ்ந்த இரங்கல்கள்!

 • Like 3
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, இசைக்கலைஞன் said:

இது குறித்து விரிவான செய்முறை வரைந்துதான் விளக்க முடியும்.

விளக்கினால் நாங்களும் தெரிஞ்சுக்கலாமே!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 10/29/2019 at 8:13 PM, nunavilan said:

 

ரஷ்யாவில் இரண்டு வயது சிறுமி ஆழமான குழிக்குள் விழுந்தாள். மீட்புப் படையினர் 17 வயது மெலிந்த பெண்ணைத் தலைகீழாக அந்தக் குழிக்குள் அனுப்பிக் குழந்தையை வெளியே இழுத்தனர். நேஷனல் ஜியோகிராஃபிக் சேனல் ஒளிபரப்பிய இந்த வீடியோவைப் பாருங்கள். 👇

 

இதை அயல் வீட்டு பையன் தொழிலாகவே செய்து இருக்கிறான் ...
இவர்களுக்கு கஸ்டகாலம் .. அதுதான் இந்த நாதாரிகள் எல்லாம் வந்து எல்லாம்  போய்விட்டது 
அவர்களிடம் விட்டிருந்தால் நிற்சயம் மீட்டிருப்பார்கள் 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, Maruthankerny said:

இதை அயல் வீட்டு பையன் தொழிலாகவே செய்து இருக்கிறான் ...
இவர்களுக்கு கஸ்டகாலம் .. அதுதான் இந்த நாதாரிகள் எல்லாம் வந்து எல்லாம்  போய்விட்டது 
அவர்களிடம் விட்டிருந்தால் நிற்சயம் மீட்டிருப்பார்கள் 

கிட்டத்தட்ட அப்பிள்ளையின் பெற்றோருக்கு 40 லட்சம் ரூபா நன் கொடையாக கிடைத்துள்ளதாம்.

திமுக - 10 லட்சம்
ஐஅதிமுக - 10 லட்சம்
தமிழக அரசு - 10 லட்சம்
காங்கிரஸ் - 3 லட்சம்
தேமுதிக - 1 லட்சம்
விசிக -20,000 ஆயிரம்
இப்படி இன்னும் பல கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளும் நிதியுதவி எல்லாத்தையும் சேர்த்தால் 40 லட்சத்திற்கு வரும் .....

 • Confused 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • வாழ்த்துகள், நல்ல தொடக்கம்   
  • ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகளை விரைவில் நிறைவு செய்யுமாறு உத்தரவு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப் பணிகளை விரைவில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்காக 50.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணியை கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஆரம்பித்து வைத்தனர். அதன்பின்னர் தொடர்ந்து இரவு பகலாக கட்டுமாணப் பணிகள் நடந்து வருகின்றன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. எனினும் நினைவு மண்டபத்தில் அமைக்கப்படும் பீனிக்ஸ் பறவைக்கான ராட்சத சிறகு மற்றும் அதனை தாங்கி நிற்கும் கருவிகள் டுபாயில் இருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆய்வு கூட்டம் இடம்பெற்றது. இதன்போது, கட்டுமானங்கள் குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் விளக்கம் அளித்தனர். இதனையடுத்து, நினைவிட பணிகளை செப்டம்பரில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், கடம்பூர் ராஜூ மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். https://athavannews.com/ஜெயலலிதா-நினைவிட-கட்டுமா/
  • கங்கையை சுத்தப்படுத்தும் நமாமி கங்கை திட்டதிற்கு உலக வங்கி கடனுதவி கங்கை நதியைப் புதுப்பிப்பதற்கு முற்படும் ‘நமாமி கங்கே’ திட்டத்திற்காக உலக வங்கியும், இந்திய அரசும் கடன் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன. இரண்டாவது தேசிய சின்னமான கங்கைநதி மாசுபடுவதைத் தடுக்கவும், 500 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நதிப்படுகையின் நிர்வாகத்தை வலுப்படுத்தவும் இந்தத் திட்டம் உதவும் என கூறப்படுகின்றது. 400 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் 381 மில்லியன் கடன் மற்றும் 19 மில்லியன் டொலர் வரை முன்மொழியப்பட்ட உத்தரவாதம் ஆகியவை அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியாவிற்கான உலக வங்கி இயக்குநர் ஜுனைத் அகமட், அரசாங்கத்தின் நமாமி கங்கே திட்டம் கங்கையைப் புதுபிப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்குப் புத்துயிர் அளித்துள்ளது என கூறினார். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அடர்த்தியை கொண்ட கங்கை நதிப் படுகையில் உருவாக்கப்படுகிறது. ஆனால் கங்கை நதி இன்று மனிதர்களின் பொருளாதார நடவடிக்கைகளின் காரணமாக அழுத்தங்களை எதிர்கொள்கிறது. அது அதன் தரத்தையும், நீரோட்டங்களையும் பாதிக்கிறது. கங்கையில் மாசுபாட்டின் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை நதி மற்றும் அதன் துணை நதிகளில் அருகில் உள்ள நகரங்கள் மற்றும் மாநகரங்களிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீரிலிருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/கங்கையை-சுத்தப்படுத்தும/
  • பாலஸ்தீனிய பிரதேசங்களை இணைப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்: இஸ்ரேலுக்கு உலகநாடுகள் எச்சரிக்கை பாலஸ்தீனிய பிரதேசங்களின் சில பகுதிகளை இணைப்பதை எதிர்த்து எகிப்து, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு செய்வது இருதரப்பு உறவுகளுக்கு இடையே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என கூறியுள்ளது. ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு வெளியுறவு அமைச்சர்கள் தங்கள் இணையவழி மாநாட்டுக்கு பிறகு, இன்று (செவ்வாய்க்கிழமை) இதனை தெரிவித்தனர். இதன்போது அவர்கள் கூறுகையில், ‘1967இல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களை எந்தவொரு இணைப்பும் சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், சமாதான முன்னெடுப்புகளின் அடித்தளத்தை சீர்குலைப்பதாகவும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். மோதலில் இரு தரப்பும் ஒப்புக் கொள்ளாத 1967ஆம் ஆண்டு எல்லைகளில் எந்த மாற்றங்களையும் நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம். இது இஸ்ரேலுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தக்கூடும்’ என கூறினர். பாலஸ்தீனத்தை யூத அரசு மற்றும் அரபு அரசு என இரண்டாக பிரிக்க கடந்த 1947ஆம் ஆண்டு ஐ.நா பரிந்துரைத்தது. அதன் பிறகு 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் எனும் தனிநாடு உருவானது. அப்போதே பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் வெடித்தது. இஸ்ரேலுக்கும், எகிப்து, சிரியா, ஜோர்தான், ஈராக் ஆகிய நாடுகளின் கூட்டணிக்கும் இடையே கடந்த 1967ஆம் நடந்த 6 நாள் போரின் முடிவில், மேற்குக் கரை, பாலஸ்தீனம் உள்ளிட்டவற்றில் சில பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது. இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீன எழுச்சி உருவானது. சர்வதேச நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகக் கருதப்படும் இந்தப் பகுதிகளில், யூத மதத்தைப் பின்பற்றும் தங்கள் நாட்டவர்களுக்கான குடியிருப்புகளை இஸ்ரேல் அமைத்துள்ளது. சர்வதேச சட்டம், மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் இரண்டையும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களாகக் கருதுகிறது மற்றும் யூத குடியேற்றத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் அனைத்தும் சட்டவிரோதமானது என்று கருதுகிறது. இந்த ஆக்கிரமிப்பு பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல் அமைத்துள்ள சர்ச்சைக்குரிய யூதக் குடியிருப்புகள், சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என உலக நாடுகள் கூறி வந்தாலும், இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவு அளித்து வருகின்றது. https://athavannews.com/பாலஸ்தீனிய-பிரதேசங்களை-இ/