Jump to content

தீபாவளி பிறந்த கதை


Recommended Posts

பூமியை கவர்ந்து சென்ற இரண்யாட்சகன் என்ற அரக்கன் அதனை கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். (கடல் எங்கு இருந்த‍து என்று அறிவு பூர்வமாக  கேட்க கூடாது, கேட்டால் கடும் கோபம் வரும் எனக்கு)

ஆலிலைஇல் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) அவதாமெடுத்து பூமிக்குள் சென்று1000 வருடங்கள் போர் புரிந்த்து அந்த அசுரனை கொன்றதோடு அந்த பூமியை தனது கொம்பில் தாங்கி வந்தார்.

இதன் போது பூமாதேவியோடு விஷ்ணுவுக்கு ஏற்பட்ட ஸ்பரித‍த்தில் அதாவது உடலுறவில்   நரகாசுரன் என்ற அசுரன் பிறந்தான். (இது எப்படி சாத்திம் என்றும் கேட்க கூடாது)

அவன் தேவர்களையும் பூலோக மக்களையும் கொடுமை செய்தான். அவனது அட்டூழியங்களை பொறுக்க முடியாத பிரமா பெருமாளிடம் முறையீடு செய்தார். நரகாசுரன் தனது தாயை தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் நேரக்கூடாது என்று வரத்தை பெற்றிருந்த்தான். அப்போது பூமாதேவி சத்தியபாமாவாக பிறந்து கிருஜுனரை திருமணம் செய்திருந்தார்.கிரூஜஷ்னர் அவரை அழைத்துக்கொண்டு போருக்கு சென்றார். ஒரு கட்டத்தில் தரகாசுரனால் தாக்கப்பட்டு மூர்ச்சையானவர் போல் நடித்தார். பதறிப்போன சத்திய பாமா தன் கணவரை காப்பார்ர தன் மகன் மீது அம்பு தொடுத்தார். நரகாசுரன் மாண்டான். அவனின் உயிர் துறப்பை எல்லா உலகங்களிலும் தீபம் ஏற்றி கொண்டாடுவதை அவள் பார்த்தாள்.  பெருமாளிடம்  தன் மகன்  இறந்த நாளை தீபாவளி என்றும் மகனின் பெயரால்  தரக சதுர்த்தி எனவும் கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டாள். ஒருவர் இறந்த்தால் எண்ணெய்  தேய்த்து குளிப்பது வழக்க‍ம்.

தீபாவளி பிறந்த கதையாக இந்து மத‍த்தின் பரப்புரைகளில் இதுவும் ஒன்று. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளி யாருடையது? - ஜெயமோகன்

index

அன்புள்ள ஜெ

நலமா? இந்திய மரபு, ஆன்மிக சிந்தனைகள், தத்துவங்கள் என உங்களின் பல தரவுகளை படித்து இருக்கிறேன், படித்தும் வருகிறேன். வெகு நாட்களாக மன ஆழத்தில் இருக்கும் கேள்வி இது, ‘தீபாவளி’ தமிழர் பண்டிகை இல்லையா? இது வட நாடு சென்று தென் நாடு மீண்ட ஒரு பண்டிகையா உண்மையில்? நமது தீப ஒளி பண்டிகையான ‘கார்த்திகை’ தீபத் திருவிழாவின் வட நாட்டு வடிவமா? நரகன் என்பவனே , தேவ அசுர மோதல்கள் என புனையப்படும் ஆரிய திராவிட இன குழுக்களின் மோதல்களில் திராவிட இனச் சார்பாக நின்ற மாவீரனின் படிமமா? நமது இன அழிப்பை (தொன்ம வரலாறு அல்லது புராணத்தின் படி) நாமே கொண்டாடும் ஒரு இழிவான பண்டிகையா? அனைத்துக்கும் மேலாக, ஒருவனது இறப்பை நாம் கொண்டாடலாமா? நாம் பண்பட்டவர்கள் இல்லையா? என்றும் எனக்குள்ளும் எனக்கு வெளியேயும் கேள்விகள் பல, விடை தேடி உங்களிடம் மீண்டும் நான்.

அன்புடன்
சக்திவேல், சென்னை

index

 

அன்புள்ள சக்திவேல்,

பல வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் அரசியலில் சிலவகையான துருவப்படுத்தல்கள் உருவாயின. முதலில் உருவானது பிராமணர்கள் பிராமணரல்லாத உயர்சாதியினர் என்ற துருவங்கள். அன்று பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைத்து எல்லா அதிகாரங்களிலும் ஊடுருவியிருந்த பிராமணர்களுக்கு எதிராக அதிகார விருப்பு கொண்ட பிற உயர்சாதியினர் உருவாக்கிய அரசியல் உத்தி அது.

நிலப்பிரபுத்துவ அதிகாரத்தை ஆயிரம் வருடம் ஆண்டுவந்த பிராமணாரல்லா உயர்சாதியினர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அறிமுகமாக ஆரம்பித்த முதலாளித்துவத்தின் முன் அதை மெல்லமெல்ல இழக்க ஆரம்பித்தார்கள். இன்று பூரணமாக இழந்தும் விட்டார்கள். அதற்கு எதிராக அவர்கள் முன்னெடுத்த கடைசி அரசியல் போராட்டமே பிராமணரல்லா இயக்கம்.பின்னர் அவ்வியக்கம் அன்று பொருளியல் பலத்துடன் உருவாகி வர ஆரம்பித்திருந்த பிற்படுத்தப்படுத்தபட்டோருக்கான இயக்கமாக ஆகியது. பிராமணர் – பிற்படுத்தப்பட்டோர் என்ற துருவப்படுத்தல் உருவாகி இன்றும் நீடிக்கிறது.

இந்த துருவப் படுத்தலுக்கான கருத்துத் தளமாக உருவாக்கப் பட்டதே ஆரிய- திராவிட வாதம். ஓரிரு கிறித்தவப் பாதிரிகளால் உருவாக்கப்பட்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பரப்பப்பட்ட அந்த வாதம் இன்றுவரை எந்த வகையான வரலாற்று ஆதாரமும் இல்லாத வெற்று ஊகம் மட்டுமே. அன்று விவேகானந்தர் முதல் டாக்டர் அம்பேத்கார் வரையிலான ஆய்வாளர்களால் அபத்தம் என முழுமையாகவே மறுக்கப்பட்ட ஒன்று அது. இன்று மார்க்ஸியநோக்குள்ள ஆய்வாளர்கள்கூட அதை ஏற்க தயங்குமளவுக்கு அது விரிவாகவே ஆய்வுத்தளத்தில் மறுக்கப்பட்டுவிட்டது.

அந்த ஆரிய-திராவிட வாதத்தை இன்னமும் எளிமையாக்கி பிராமணர்- திராவிடர் என்று பிரித்து அதனடிப்படையில் மொத்த தமிழ்ப்பண்பாட்டையே ஒன்றுடன் ஒன்று முரண்படும் இரு கூறுகளாக உருவகித்துக்கொண்டார்கள். இந்த உருவகம் எந்தவகையிலும் வரலாற்று அடிப்படைகொண்டதல்ல. முழுக்கமுழுக்க அரசியல் சார்ந்த ஒன்றே. ஆனால் சிறு வயது முதலே நாம் இதைக்கேட்டு வருவதனால் இதைப்பற்றி ஆராய்வதில்லை. இனிமேலாவது கொஞ்சம் தமிழுணர்வுடன், கொஞ்சம் வரலாற்று நோக்குடன் இவற்றையெல்லாம் நாம் பேச ஆரம்பிப்பது நல்லது.

எதிர்மறையாக மட்டுமே வரலாற்றையும் பண்பாட்டையும் அணுகுவது, எதிரிகளை கண்டுபிடித்துப்பெருக்கிக் கொண்டே செல்வது, நம்மை தூய மேன்மையான மக்கள் ஆகவே ஒடுக்கப்பட்டோம் என சுயபரிதாபம் கொள்வது, அதை வன்மமாக ஆக்கிக்கொள்வது போன்றவை ஒருவகை மனநோய். சிந்தனையின் ஒருகட்டத்தில் அது நம்மை பீடிக்கிறது. ஏனென்றால் கருத்துலகாக நம்மைச்சூழ்ந்திருக்கும் எண்ணங்களில் பெரும்பகுதி இப்படிப்பட்டவை

அவற்றை நம் பொதுப்புத்தியால், வரலாற்று அறிவால் வென்று மீண்டு வராதவரை நாம் இருப்பது அறியாமை இருளில். மிகையுணர்ச்சிகளின் சேற்றில்.நம் நுண்ணுணர்வு, தர்க்கத்திறன் அனைத்தும் அதில் வீணாகிவிடும். அப்படி அறிவுலகில் செயல்படுவது பெரும் நரகம்.

*

வரலாறு குறித்த ஒரு பொதுப்புரிதல் நமக்குத்தேவை. அது மானுடர் வாழ்வதற்காக நிகழ்த்திய பெரும் போராட்டத்தின் விளைவு. பல்வேறு மோதல்களும் தழுவல்களுமாக உருவாகி வந்த ஒன்று. கொடுத்தும் பெற்றும் உருவானவையே அனைத்துப் பண்பாட்டுருவங்களும். அது ஒரு சிக்கலான முரணியக்கம். அதை முழுக்கப்புரிந்துகொள்வதும் தீர்ப்புகளை அளிப்பதும் எவராலும் இயலாதது.நாம் அதை நாம் வாழும் களத்தில் இன்றையதேவை மற்றும் உணர்ச்சிகளைக்கொண்டே புரிந்துகொள்கிறோம்.

ஆகவே நாம் செய்யக்கூடுவது நாம் புரிந்துகொள்வதன் எல்லைகளைப் பற்றிக் கவனத்துடன் இருப்பதே. வரலாற்றைக்கொண்டு வெறுப்பையும் கசப்பையும் சமைத்துப்பரிமாறாமலிருப்பதே. காலப்பயணம் செய்து வரலாற்றை மாற்றியமைக்க எவராலும் இயலாது. கடந்துசென்ற வரலாற்றிலிருந்து ‘தூய’ சரடுகளை , இன மத மொழி பண்பாட்டுக்கூறுகளை இன்று பிரித்தெடுக்கவும் முடியாது. அவ்வாறு எண்ணுபவர்களைப் பேதைகள் என்றே சொல்வேன்

ஆனால் பேதைகள் பலசமயம் வெறுப்பைப் பரப்பி  நிகழ்காலத்தில் உள்ள வணிகப்போரின் கருவிகளாக ஆகி விடுவார்கள்.பேரழிவை உருவாக்குவார்கள். நாம் நமக்குச் சுற்றும் பார்க்கலாம். கீழைச்சமூகங்களில் ஒரு அறிவுஜீவிக்கும்பல் இனம், மொழி,மதம் என்னும் பெயரால் அழிவு அழிவு என்றே கோரிக்கொண்டிருக்கிறது. மேலும் மேலும் அழிவு வராமல் அவர்களால் அடங்கமுடியாது என்றே தோன்றுகிறது. இந்த ஒளித்திருநாளின் நாம் நம் உள்ளத்தில் ஒளியை ஏற்றிக்கொள்வோம்

*

பொதுவாக பண்டிகைகள் எவையுமே சட்டென்று உருவாவதில்லை. புதிதாக எவராலும் கொண்டு வரப்படுவதும் இல்லை. அவை ஏதோ ஒருவகையில் பழங்குடி வாழ்க்கையில் இருந்துகொண்டிருக்கும். ஆகவே அவற்றுக்கு ஆழ்மனம் சார்ந்த குறியீட்டு முக்கியத்துவம் இருக்கும். பின்னர் அவை புராணக்கதைகளை உருவாக்கிக் கொள்ளும். தத்துவ விளக்கம் பெறும். பலவகையில் அவை மாறி வளர்ந்து சென்றுகொண்டே இருக்கும். எளிமையாக அவற்றை வகுத்துக்கொள்ள முடியாது

தீபாவளியின் தோற்றுவாய் எதுவாக இருக்கும்? பழங்குடி வாழ்க்கையையே பார்க்கலாம். குமரியிலும் மேற்கு மலைகளிலும் உள்ள தொல்தமிழ்ப் பழங்குடிகளிடம் ஒரு வழக்கம் உள்ளது. தொற்றுநோய்க்காலங்களில் அந்த தீயசக்தி தன் வீட்டை அண்டாமலிருக்க வாசலில் விளக்குகளை கொளுத்தி வைப்பது. காலாரா மாதங்களில் அவ்வாறு எங்கள் வீட்டிலும் வைத்த நினைவு உள்ளது. கிராமங்களில் இன்றும் நீடிக்கிறது அது. அதுதான் தொடக்கமாக இருக்க வேண்டும். ஐப்பசி தமிழகத்தின் மழைமாதம். தென்னாட்டின் மிகப்பெரிய நோய்க்காலம்.

தொன்மையான காலகட்டத்தில் இந்த ஆசாரம் வளர்ந்து பண்டிகையாக ஆகியிருக்கலாம். பௌத்தர்கள் இதை தங்கள் மதத்துக்குள் இழுத்துக்கொண்டார்கள். பௌத்தச் சடங்குகளில் தீபவரிசை முக்கியமான ஒன்று. இன்றும் அது பௌத்தம் மருவிய வழிபாடுகளில் தாலப்பொலி என்றவடிவில் கேரளத்தில் நீடிக்கிறது.தட்டுகளில் தீபங்களை ஏந்தி அணிவகுப்பது. [கொற்றவை நாவலில் விரிவான விளக்கம் உண்டு]. சமணர்களும் அதை தங்கள் மதத்துக்குள் இழுத்துக்கொண்டார்கள். தங்களுக்கான விளக்கங்களை அளித்தார்கள்.சமணத்தில் அது வர்த்தமானர் மெய்மையை அடைந்த நாள். பௌத்தத்தில் அறிவொளித்திருநாள்.மாமன்னர் அசோகரால் அவ்வாறு கொண்டாடப்பட்டது.

பின்னர் பெருமதங்களாக ஆன சைவமும் சாக்தமும் இப்பண்டிகையை தங்கள் கோணத்தில் விளக்கி உள்ளிழுத்தன. சைவத்தில் அது கார்த்திகைதீபமாகவும் சாக்தத்தில் தீபாவளியாகவும் ஆகியது.   என் ஊகம் என்னவென்றால் பௌத்ததில் இவ்விழா பிரக்ஞாதாரா தேவியின் [அறிவொளித்தேவி.] பண்டிகையாக இருந்தது. அது சாக்தத்தில் நுழைந்தபோது நரகாசுரனை கொன்ற கொற்றவையின் பண்டிகையாக ஆகியது. தொல்தமிழ்தெய்வமான கொற்றவையின் இன்னொரு வடிவமே துர்க்காதேவி. கேரளத்து தேவிசிலைகளில் கொற்றவையின் துல்லியமான இலக்கணம் உள்ளது.

இருளரக்கனே நரகாசுரனாக ஆகியிருக்கலாம்.அடிப்படையில் பழங்குடியினர் அஞ்சிய அந்த நோய் அல்லது பீடையின் இன்னொரு வடிவமே நரகாசுரன். நரகாசுரனைப்பற்றிய நான்கு வெவ்வேறு தொன்மங்களும் அவன் தற்செயலாக உருவாகி எழுந்த ஒரு இயற்கையான அழிவுச்சக்தி என்றே உருவகிக்கின்றன.

உதாரணமாக வைணவத்தொன்மத்தின்படி திருமாலின் பன்றி அவதாரத்திற்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன் நரகாசுரன். அவனை அழிவுசக்தி என உருவகிக்கும் வைணவம் தெய்வத்தின் மகன் என்றும் சொல்வதைக் கவனிக்கவேண்டும். பூமியிலிருந்து எழுந்தவன் என்பதும் குறியீட்டுரீதியாக முக்கியமானது. நோய் அல்லது பீடை குறித்த மிகத்தொன்மையான பழங்குடி உருவகத்தின் வைணவ இறையியல் விளக்கம் இது.பன்றியால் மண்ணிலிருந்து உருவாவது. ஆனால் வைணவம் அழிவையும் திருமாலின் லீலையாகக் கொள்வது. அந்தத்தத்துவமே இப்புராணமாக ஆகிவிட்டிருக்கிறது.

இத்தகைய விளக்கங்கள் கூட முன்னரே இருந்த தொன்மங்களுடன் இணைத்தே விரிவாக்கம் செய்யப்படும். ஏற்கனவே மகாபாரதத்தில் இருந்த ஒரு வரலாற்றுக்கதை நரகாசுரனுடையது. அவன் காமரூபத்தைச் சேர்ந்த பிரக்ஜ்யோதிஷம் என்னும் நாட்டை [இன்றைய அசாம்]ஆண்ட அசுரச்சக்ரவர்த்தி. அவனை கிருஷ்ணரும் சத்யபாமையும் கொன்றனர். அது இந்த தொன்மத்துடன் இணைந்தது. இவ்வாறுதான் தொன்மங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி வளர்கின்றன.

இந்தியா முழுக்கச்சென்ற சாக்தத்தில் தீபாவளி என்னென்ன மாற்றங்கள் அடைந்தது என்பது தனி ஆராய்ச்சிக்குரியது. பல இடங்களில் இன்று அது ஒரு முக்கியமான சமணப்பண்டிகைதான். சில இடங்களில் பழங்குடிப்பண்டிகை. சைவம் வைணவம் சீக்கியம் எல்லா மதங்களுக்கும் தீபாவளிக்கு அவர்களுக்கான புராண விளக்கம் இருப்பதைப்பார்க்கலாம். நரகாசுரனை கிருஷ்ணன் கொன்றார் என்பது வைணவக்கதை. நரகாசுரன் தன் அன்னையாகிய தேவியால் கொல்லப்பட்டான் என்பது சாக்தத்தின் கதை.

பண்டிகைகள் மாறிக்கொண்டே இருப்பது வரலாறு. தேதிகள்கூட பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கலாம்.மேற்குமலைப் பழங்குடிகள் கொண்டாடிய தீபத்திருநாள் இப்போது சபரிமலை அய்யப்பனின் மகரவிளக்கு விழாவாக உள்ளது என்று ஒரு கேரள ஆராய்ச்சி சொல்கிறது. அது மகரசங்க்ராந்தி என்றபேரில் வட இந்தியாவிலும் கொண்டாடப்படும் பண்டிகை. சோழர்கள் காலத்தில் தமிழகத்தில் சாக்தர்கள் மட்டும் தீபாவளி கொண்டாடினார்கள். சைவர்கள் கார்த்திகையை.

உண்மையில் சோழர் காலத்தின் தமிழகத்தில் மிகப்பெரிய பண்டிகை என்பது திருவோணம்தான். இன்றும் சோழநாட்டுக் கோயில்களில் அது கொண்டாடப்படுகிறது. இன்று அது கேரளத்தில் மட்டும் எஞ்சியுள்ளது. பின்னர் நாயக்கர்களின் காலகட்டத்தில் தீபாவளி அரச ஆதரவு பெற்றது. இன்றைய வடிவில் நாம் தீபாவளியைக் கொண்டாட மாமன்னர் திருமலைநாயக்கர்தான் காரணம்.

ஆக, தீபாவளி வடவர் பண்டிகை, நரகாசுரன் தமிழன், துர்க்கை ஒரு பிராமணமாமி என்பது போன்ற ‘ஆய்வுகளை’ அடிப்படைச் சிந்தனை கொண்டவர்கள் கொஞ்சம் தாண்டிவரலாம் என்று நினைக்கிறேன். அது நம்முடைய தொல்மூதாதையரின் ஒரு நம்பிக்கையில் இருந்து உருவாகி பல்வேறு மதங்கள் வழியாக வரலாறெங்கும் வளர்ந்து பரவி இன்றைய வடிவை அடைந்திருக்கிறது.

*

இன்று, பண்டிகைகளால் ஒரு பொதுவான மனிதனுக்கு என்ன முக்கியத்துவம் உள்ளது? எல்லா பண்டிகைகளும் நம்மை நாமறியாத நீண்ட பழங்காலத்துடன் அறியமுடியாத தொன்மையுடன் இணைக்கின்றன. நம் வாழ்க்கை என்பது நம்மில் தொடங்கி முடிவது அல்ல. அது ஓர் அறுபடாத பெரும் நீட்சி என்று உணர்ந்தால் இவை ஒவ்வொன்றும் முக்கியமானவைதான். நேற்று நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையை நாம் நீடிக்கிறோம் என்ற பேருணர்வு இப்பண்டிகைகளின் சாரம்.

சடங்குகள், பண்டிகைகள் அனைத்துமே குறியீடுகள். அக்குறியீடுகளுக்கு நாம் என்ன பொருள் அளிக்கிறோம் என்பதுதான் நமக்கு முக்கியமானது. தீபாவளியை டிவி முன் குந்தி அமரும் பண்டிகையாக ஒருவர் காணலாம். அதன் வரலாற்று நீட்சியை உணரக்கூடிய ஒரு தினமாக, மதங்களும் மக்களும் கலந்து உருவாக்கிய ஒரு உணர்வெழுச்சியின் நாளாக கொண்டாடலாம். நம் அகவிரிவைப் பொறுத்தது அது.

அனைத்துக்கும் மேலாக எல்லா பண்டிகைகளும் குழந்தைகளுக்கானவை. அவர்கள் உற்சாகம் கொள்வதற்கான தருணங்கள். பெரியவர்கள் தங்கள் உலகை விட்டு கொஞ்சம் குழந்தைகளின் உலகுக்குள் இறங்கிவருவதற்கானவை. நாம் நம் பெற்றோரின் நினைவை நம் பிள்ளைகளுக்கு அளிப்பதற்கானவை. வாழ்க்கை என்பது இம்மாதிரி சில தருணங்கள் மட்டுமே. ஆகவே உற்சாகம் கொள்வதற்கான காரணங்கள் அனைத்துமே முக்கியமானவை.

பண்பாடு என்பது என்ன? சில சடங்குகள், சில ஆசாரங்கள், சில நம்பிக்கைகள், சில வழக்கங்கள் அல்லாமல்? அவற்றின் குறியீட்டு வடிவிலேயே பண்பாடு பாதுகாக்கப்படுகிறது, கைமாறப்படுகிறது. அவை இல்லையேல் பண்பாடு இல்லை. அவற்றை இழந்தால் நாம் சீன மலிவுச்சாமான்களையும் அமெரிக்க பரப்புக்கலைகளையும் நுகர்வதற்காக பிறக்கும் நூறுகோடி சதைத்திரள்கள் மட்டுமே. அப்படி அதில் துளிகளாக உங்கள் பிள்ளைகளை ஆக்குவதென்பதுதான் உங்கள் இலக்கு என்றால் அது உங்கள் விருப்பம்

ஜெ

====================

தீபாவளி மதங்களில்..

தீபாவளி

தீபாவளி – விடுதலையின் ஒளிநாள் 

தீபாவளி கடிதங்கள்

தீபாவளி:கடிதங்கள்


கடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா

நமது கைகளில்….

===================================

மறுபிரசுரம் / முதற்பிரசுரம்   Nov 4, 2010 @ 8:41

 

https://www.jeyamohan.in/9118#.XbWqZS-nxR4

Link to comment
Share on other sites

22 hours ago, கிருபன் said:

இன்று, பண்டிகைகளால் ஒரு பொதுவான மனிதனுக்கு என்ன முக்கியத்துவம் உள்ளது? எல்லா பண்டிகைகளும் நம்மை நாமறியாத நீண்ட பழங்காலத்துடன் அறியமுடியாத தொன்மையுடன் இணைக்கின்றன. நம் வாழ்க்கை என்பது நம்மில் தொடங்கி முடிவது அல்ல. அது ஓர் அறுபடாத பெரும் நீட்சி என்று உணர்ந்தால் இவை ஒவ்வொன்றும் முக்கியமானவைதான். நேற்று நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையை நாம் நீடிக்கிறோம் என்ற பேருணர்வு இப்பண்டிகைகளின் சாரம்.

சடங்குகள், பண்டிகைகள் அனைத்துமே குறியீடுகள். அக்குறியீடுகளுக்கு நாம் என்ன பொருள் அளிக்கிறோம் என்பதுதான் நமக்கு முக்கியமானது. தீபாவளியை டிவி முன் குந்தி அமரும் பண்டிகையாக ஒருவர் காணலாம். அதன் வரலாற்று நீட்சியை உணரக்கூடிய ஒரு தினமாக, மதங்களும் மக்களும் கலந்து உருவாக்கிய ஒரு உணர்வெழுச்சியின் நாளாக கொண்டாடலாம். நம் அகவிரிவைப் பொறுத்தது அது.

அனைத்துக்கும் மேலாக எல்லா பண்டிகைகளும் குழந்தைகளுக்கானவை. அவர்கள் உற்சாகம் கொள்வதற்கான தருணங்கள். பெரியவர்கள் தங்கள் உலகை விட்டு கொஞ்சம் குழந்தைகளின் உலகுக்குள் இறங்கிவருவதற்கானவை. நாம் நம் பெற்றோரின் நினைவை நம் பிள்ளைகளுக்கு அளிப்பதற்கானவை. வாழ்க்கை என்பது இம்மாதிரி சில தருணங்கள் மட்டுமே. ஆகவே உற்சாகம் கொள்வதற்கான காரணங்கள் அனைத்துமே முக்கியமானவை.

பண்பாடு என்பது என்ன? சில சடங்குகள், சில ஆசாரங்கள், சில நம்பிக்கைகள், சில வழக்கங்கள் அல்லாமல்? அவற்றின் குறியீட்டு வடிவிலேயே பண்பாடு பாதுகாக்கப்படுகிறது, கைமாறப்படுகிறது. அவை இல்லையேல் பண்பாடு இல்லை. அவற்றை இழந்தால் நாம் சீன மலிவுச்சாமான்களையும் அமெரிக்க பரப்புக்கலைகளையும் நுகர்வதற்காக பிறக்கும் நூறுகோடி சதைத்திரள்கள் மட்டுமே. அப்படி அதில் துளிகளாக உங்கள் பிள்ளைகளை ஆக்குவதென்பதுதான் உங்கள் இலக்கு என்றால் அது உங்கள் விருப்பம்

அருமையான கட்டுரை. எனது எண்ணங்களைக் கிட்டத்தட்டப் பிரதிபலிக்கிறது. 

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கிருபன். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரக்கன் அசுரன் கதைகளை எல்லாம் நம்பும் அளவுக்கு இன்று உலகம் இல்லை.

இன்று கோவில்களில் கூட தீபம் தான் ஏற்றி தீபாவளியை கொண்டாடுகிறார்கள். அசுரனை வதைத்த இட்டுக்கதைகள் எல்லாம் இன்று எடுபடாது.

கிழக்கில் தீபாவளி.. கார்த்திகை விளக்கீடு.. போல் மேற்கில் ஹலோவின்.

மனிதர்கள்  இருளுக்கு அஞ்சும் குணமுடைய சிறப்பு விலங்குகளாவர். அவர்கள் இராக்காலப் பிராணிகள் அல்லர். நீண்ட இருள் சூழும்.. மாரிகாலத்தில் அந்த இருள் மீதான பயத்தை அகற்றி மனிதர்களிடம் இருக்கும் இருள் பீதியை விலக்க உருவானதே தீபத் திருநாள்.. தீபாவளி... என்பதுவே வெளிப்படை உண்மையாகத் தெரிகிறது.

ஆனால்.. ஒன்று.. தமிழ் சிவ பக்த மன்னனான.. இராவணனை அரக்கன் அசுரன் என்றது போல்.. போரில் வென்றவர்கள்.. எமது தேசிய தலைவரை பயங்கரவாதி என்பது போல்.. நாம் எமக்கான வரலாற்றை சரியாகப் பதிவிட்டு வைக்காவிடில்.. சந்ததிக்கு கடத்தா விடில்.. மே 18 ஓர் நாள்.. புதிய கொண்டாட்ட நாளாக மாறி நிற்கும்.

எமது தேசிய தலைவரும் மடிந்த மக்களும்.. அரக்கர்கள்.. அசுரர்கள் ஆக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை. 

ஏனெனில்.. போரில் வென்றாலும் எதிரியை மதிக்கும் பண்பு தமிழர்களிடம் இருந்தது போல்.. மற்றவர்களிடம் இல்லை. மற்றவர்கள்.. ஒரு வெற்றியை காட்டியே.. இன்னும் இன்னும் தமது வெற்றியைப் பற்றிய பிம்பத்தை அதிகரிப்பதை மட்டுமே செய்வர். காரணம்.. அவர்களின் பலவீனம்.. அந்த ஒரு வெற்றியால்... முற்றாக மூடிமறைக்கப்பட வேண்டும் என்பதில் அவர்கள் ஆர்வமாக இருப்பதால்.

இதுவே இராவணனுக்கும் நடந்திருக்கும்.. பிற அசுரர்.. அரக்கர் என்று வர்ணிக்கப்படுபவர்களுக்கும் நடந்திருக்கும். அன்று.. அதிகார சக்திகளை அரச பயங்கரவாதிகளை.. பிராந்திய.. வல்லாதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடியோர்.. அசுரர்.. அரக்கர்.. இன்று அதுவே பயங்கரவாதிகள். 

Link to comment
Share on other sites

மூடத்தனமான கதைகளை பரப்பும் இந்து மதவாதிகள் அந்த மூடத‍்தனங்களை கேள்வி கேட்காமல் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வரை அந்த கதைகளை அப்படியே  மக்களுக்கும் திணிப்பார்கள். காதில் பூ சுற்றவார்கள். யாராவது என்னப்பா  என்னை முட்டாளாக்குகிறாய் என்று கேள்வி கேட்டால் மட்டும் த‍த்துவம், குறியீடு, உருவகம் என்று கதை விடுவாரகள். காலாகாலமாக நடைபெறுவது தான். ஆனால் நல்ல காலம் ஐரோப்பாவில் வாழும் எமது குழந்தைகளில் பெரும்பாலோனோர் இவ்வாறான மூட மத கல்வியை பயிலுவதில்லை. இந்த தலைமுறையில் பிறந்த நான் கேள்வி கேட்கும் போது இவ்வாறு மூடத்தனங்களுக்கு வக்காலத்து வாங்க த‍த்துவம் என்று குழப்பமாக கதை விடும் இவர்கள் அடுத்த தலைமுறை பிள்ளைகளின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணற போவது நிச்சயம்.  அதனால் தான்அடுத்த தலைமுறைக்கும் மூடர்களை உற்பத்தி செயவதில் முனைப்புடன் உள்ளார்கள்.  

Link to comment
Share on other sites

18 hours ago, tulpen said:

மூடத்தனமான கதைகளை பரப்பும் இந்து மதவாதிகள் அந்த மூடத‍்தனங்களை கேள்வி கேட்காமல் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வரை அந்த கதைகளை அப்படியே  மக்களுக்கும் திணிப்பார்கள். காதில் பூ சுற்றவார்கள். யாராவது என்னப்பா  என்னை முட்டாளாக்குகிறாய் என்று கேள்வி கேட்டால் மட்டும் த‍த்துவம், குறியீடு, உருவகம் என்று கதை விடுவாரகள். 

தத்துவம், குறியீடு, உருவகம் போன்றவை இந்து மதத்தில் சாதாரணமாக உள்ளவை தான். புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல. காலம் காலமாக அதைப் பின்பற்றுவோரின் நம்பிக்கையோடு பின்னிப் பிணைந்தவை. அந்த நம்பிக்கையை அரைவேக்காட்டுத் தனமான அறிவுடன் அதை நம்பாதோர் கேள்வி கேட்க அதற்கான விளக்கத்தை மத நம்பிக்கையாளர்கள் கொடுப்பது மதவாதம் ஆகாது. 

இங்கு கிருபன் இணைத்த கட்டுரையில் பண்டிகைகள் கொண்டாடப்படுவதற்காக் கொடுக்கப்பட்ட விளக்கமும் அப்படியே. 

Link to comment
Share on other sites

19 hours ago, tulpen said:

ஆனால் நல்ல காலம் ஐரோப்பாவில் வாழும் எமது குழந்தைகளில் பெரும்பாலோனோர் இவ்வாறான மூட மத கல்வியை பயிலுவதில்லை. இந்த தலைமுறையில் பிறந்த நான் கேள்வி கேட்கும் போது இவ்வாறு மூடத்தனங்களுக்கு வக்காலத்து வாங்க த‍த்துவம் என்று குழப்பமாக கதை விடும் இவர்கள் அடுத்த தலைமுறை பிள்ளைகளின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணற போவது நிச்சயம். 

ஒரு மத நம்பிக்கையானது அதைப் பின்பற்றும் மக்களின் வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்தது. பண்டிகைகளோ, மதச் சடங்குகளோ, வழிபாடுகளோ அவர்களின் வாழ்வைச் செழுமைப்படுத்துவதாக அவர்கள் உணர்ந்தே அதைத் தொடர்கிறார்கள்.

ஒருவர் ஐரோப்பாவில், அமெரிக்காவில், அவுஸ்திரேலியாவில் பிறத்ததற்காகவோ / வசிப்பதற்காகவோ அந்த மதத்தைப் பின் தொடராதது அவரது இஷ்டம். அவரின் தனிப்பட்ட கொள்கை. ஆனால், அவர் மற்றவர்களின் நம்பிக்கையை முட்டாள்தனம் என்றும், மதவாதம் என்றும் போலியாகச் சித்தரித்து பொதுவெளியில் எழுதுவது சரியாகப்படவில்லை. 

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் சிலருக்கு ஒரு மதம் மீதான நம்பிக்கை இல்லாதபடியால், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வசிப்போரும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அவ்வாறே, புலம்பெயர் நாடுகளில் மதநம்பிக்கையை உள்ளவர்களும் அதை மூடநம்பிக்கையுடன் தான் தொடர்கிறார்கள் என்றும் முடிவு செய்ய முடியாது. இது அவர்களின் வாழ்வியல் உரிமை. 

அவர்களின் வாழ்வை நீங்கள் வாழ்ந்து பார்க்க முடியாது. எனவே, அவர்களின் மதநம்பிக்கையைையும் மூடநம்பிக்கையாகச் சித்தரிக்க முடியாது. ஒரு நம்பிக்கையைப் பின்பற்றாமைக்கும், அதை மூடநம்பிக்கை என்று முத்திரை குத்த முனைவதற்கும் பாரிய வித்தியாசம் உண்டு. பின்பற்றாமை உங்கள் உரிமை. ஆனால் அதை தவறாக முத்திரை குத்துதல் உங்கள் உரிமை அல்ல.

இது வீணான அவதூறாகும். அறிவியலில் முன்னேறிய நாடுகளில் உள்ளவர்கள் பொதுவாக மற்றவர்களின் நம்பிக்கையை அவமதிப்பதை நாகரீகமற்ற ஒன்றாகக் கருதுவதுடன், மற்றவர்களின் நம்பிக்கையை மதிப்பார்கள். உங்கள் கருத்துக்கள் இதற்கு முரணானதாக உள்ளன.

Link to comment
Share on other sites

19 hours ago, tulpen said:

இவ்வாறு மூடத்தனங்களுக்கு வக்காலத்து வாங்க த‍த்துவம் என்று குழப்பமாக கதை விடும் இவர்கள் அடுத்த தலைமுறை பிள்ளைகளின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணற போவது நிச்சயம்.  அதனால் தான்அடுத்த தலைமுறைக்கும் மூடர்களை உற்பத்தி செயவதில் முனைப்புடன் உள்ளார்கள்.  

அடுத்த தலைமுறை என்பது பரந்த மக்கள் தொகையைக் குறிக்கும். பொதுமைப்படுத்திக் கூறமுடியாது. தமது குழந்தைகளுக்கு உரிய முறையில் தம் பண்பாடு, கலாச்சாரங்களைச் சொல்லிக்கொடுக்கும் பெற்றோர், பாட்டன், பாட்டிமார், ஆசிரியர்கள், ஆன்மீகத்தலைவர்கள் இதில் நிச்சயம் வெற்றி பெறுவர்.

மனித வாழ்க்கைக்கான அர்த்தத்தைத் தொலைத்துவிட்ட மேற்குலக மக்கள் இந்தியா, இலங்கை உள்ளடங்கிய கீழைத்தேய நாடுகளுக்கு ஆன்மீகத் தேடலை நோக்கிய பயணத்தை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார்கள். நமது தியானப் பயிற்சி மீதான ஆர்வம் ஒரு சிறு உதாரணம் தான். 

நமது பண்பாடு, கலாச்சார விழுமியங்களை மறந்த எமது மக்களில் சிலரும் இவ்வாறான தேடலை மேற்கொள்ளும் காலம் ஒருநாள் வருவது உறுதி. 😊

Link to comment
Share on other sites

பண்டிகைகள் தொடர்பாக இந்து மத‍ம் மக்கள் மீது திணித்த அபத்த‍மான எண்ணிலடங்கா மூடத்தனங்கள் குறித்தான ஜதார்த்தமான கேள்விகளுக்கு நேரடியாக தெளிவான பதிலை வழங்கள முடியாத‍தால் வழமை போல் சுற்றி வளைத்து மழுப்பலான குழப்பமான பதில்கள் தரப்பட்டுள்ளன.  தீபாவளி என்ற பண்டிகைக்கான அர்த்த‍ம் என்ன என்றால்  மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக விளக்குகள் ஏற்றுவதன் மூலம் புத்துணர்ச்சியை ஏற்பத்துவதற்காக அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் தமது வாழ்வியலில் இவ்வாறான பண்டிகளைகளை கொண்டாடி இருக்கலாம். ஆனால் இதை  தன்னுள்ளே அபகரிக்க நினைத்த இந்து மதம் நரகாசுரன் என்ற அறிவிலித்தனமாக கதையை மக்கள் மத்தியில் பரப்பியது.  கிரூஷனரின் வராக அவதாரம் நடந்த‍தாக அவர்களால் கூறப்பட்ட அவர்களின் கூற்றுபடி திரேதாயுகத்தில் (1296000 ஆண்டுகள்)பூமாதேவியுடனான கிருஷ்னரின் உறவில் பிறந்த நரகாசுனை கிருஷ்னர் துவாபர யுகத்தில் வதம் செய்த‍தாக கூறப்பட்டது  . திரேதா யுகத்தில் பிறந்த நரகாசுரன்  1296000 ஆண்டுகள் கடந்து துவாபர யுகதில் வாழ்ந்தானா இவை எல்லாம் பொய்கள் புரட்டுகள் தானே என்று கூறினால் அந்த பொய்களை ஒத்துகொள்ள திராணி இல்லாமல் த‍த்துவம், உருவகம் என்று பித்தலாட்டம் வேறு.  பொய் கதையை உருவாக்கும் போது கூட படு முட்டாள்தனமாக  உருவாக்கியுள்ளார்கள். அந்த‍ளவுக்கு மக்களை முட்டாள்களாக பல காலம் வைத்திருக்கலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு. இம்மூடக்கதைகள் எல்லாம் இன்றும் கோவில்களில் பிரசங்கங்ககளில் கூறப்படுகின்றன. (இம்முறை 2019  தீபாவளியில் கூட இங்கு கோவில்களில் இக்கதை இந்து பிரசங்கிகளால் கூறப்பட்டது. கோலிலில் கேள்வி கேட்க ஆளில்லாத‍தால் தததுவம் உருவகம் என்று  பீலா விடாமல் அது நடந்த வரலாறாகவே கூறப்பட்டடது)

அதைவிட  வரலாற்றை மட்டுமல்ல சொந்த நாட்டையே தொலைத்துவிட்ட ஒரு இனத்தில் இருந்து கொண்டு ஐரோப்பியர்கள் மனித வாழ்க்கைகான அர்த்த‍தை தொலைத்துவிட்டார்கள் என்று கொமடி வேறு.  ஐரோப்பாவில் உள்ள நாடுகளுக்கு மேற்கில் இருந்து கிழக்கு வரை  ஒரு முறை சென்று பார்த்தால் தெரியும் எவ்வாறு தமது நாடுகளின் வரலாற்றை பேணி பாதுகாத்து வைத்திருக்கிறார்கள் என்றும் எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்றும்.  எல்லா நாடுகளிலும் கிறீஸ்தவம் பரவி இருந்தாலும் ஒவ்வொரு நாட்டிற்கும் தனி தனி வித்தியாசமான கலாச்சாரத்தை காண முடியும். அவை கிறிஸ்தவ மத‍த்துடன் தொடர்பு பட்டவை அல்ல. மக்களின் வரலாற்று வாழ்வியலை கூறும் கலாச்சாரமாக இருக்கும். மத‍ம் என்பது அவர்கள் வரலாற்றிலும் கலாச்சாரத்திலும்  ஒரு சிறு பகுதியாகவே இருக்கும். 

அதை விட ஐரோப்பிய கிராமங்களில் பழைய காலத்தது மூட கதைகள் நிலவி வந்திருந்தால் அதை இன்று பாடசாலைகளில் அப்போதைய மக்கள் அந்த காலத்து அறிவுக்கு ஏற்ப அப்படி நம்பினார்கள் அது ஒன்றும் உண்மை இல்லை என்று வெளிப்படையாக படிப்பிப்பார்கள். எது வரலாறு எது பழைய மக்கள் நம்பிய புராணங்கள் என்று தெளிவாக கற்பிப்பார்கள். முன்னோர்களின் மூட புராணங்களை நியாயப்படுத்த மாட்டார்கள். இந்து மதவாதிகள் போல மூட புராணங்களை உண்மையில் நடந்த வரலாறு  போல் தமது சந்த‍தியினரின் காதில் பூசுற்ற மாட்டார்கள். 

மூடத்தனங்களை  மூடத்தனம் என்று பொது வெளியில்  சொல்வது என்றும் என்றும் தவறாகாது. அது மற்றவர்களை அவமதிப்பதாகாது. அவை ஏன் மூடத‍்தனங்கள்  என்று காரணங்களோடு தெளிவாக தான் கூறுகிறோம். இனியும் கூறுவோம். எவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் நாம் தலையிட வில்லை. 

Link to comment
Share on other sites

மத தத்துவங்களில் ஒன்று இது மிக முக்கியமானது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, tulpen said:

மத தத்துவங்களில் ஒன்று இது மிக முக்கியமானது. 

 

கண்ட கண்ட களிசறைகளை இங்கே கொண்டுவந்து உதாரணம்  காட்டும் அறிவுஜீவிகளை என்னவென்று சொல்வது? யூரியூப்பில் வருவதை எல்லாம் நம்பக்கூடாது என்று சொல்லும் கூட்டம் தான்  அங்கிருக்கும் களிசறைகளை இங்கே கொண்டுவந்து  பூச்சாண்டி காட்டுகின்றது. 

Link to comment
Share on other sites

10 minutes ago, குமாரசாமி said:

கண்ட கண்ட களிசறைகளை இங்கே கொண்டுவந்து உதாரணம்  காட்டும் அறிவுஜீவிகளை என்னவென்று சொல்வது? யூரியூப்பில் வருவதை எல்லாம் நம்பக்கூடாது என்று சொல்லும் கூட்டம் தான்  அங்கிருக்கும் களிசறைகளை இங்கே கொண்டுவந்து  பூச்சாண்டி காட்டுகின்றது. 

ம்... கனி இருக்கக் காய் கவர்ந்தற்று

நல்ல நிறைய விஷயங்கள் இருக்கும் போது கழிவுகளை இங்கு வந்து கொட்டுவதால் யாழ் களமும் குப்பைத்தொட்டியாகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, குமாரசாமி said:

கண்ட கண்ட களிசறைகளை இங்கே கொண்டுவந்து உதாரணம்  காட்டும் அறிவுஜீவிகளை என்னவென்று சொல்வது? யூரியூப்பில் வருவதை எல்லாம் நம்பக்கூடாது என்று சொல்லும் கூட்டம் தான்  அங்கிருக்கும் களிசறைகளை இங்கே கொண்டுவந்து  பூச்சாண்டி காட்டுகின்றது. 

 

இந்த வீடியோவில் இருப்பவர்கள், கழிசடைகளா?

 

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

கண்ட கண்ட களிசறைகளை இங்கே கொண்டுவந்து உதாரணம்  காட்டும் அறிவுஜீவிகளை என்னவென்று சொல்வது? யூரியூப்பில் வருவதை எல்லாம் நம்பக்கூடாது என்று சொல்லும் கூட்டம் தான்  அங்கிருக்கும் களிசறைகளை இங்கே கொண்டுவந்து  பூச்சாண்டி காட்டுகின்றது. 

குமாரசாமி

 நீங்கள் கூறிய அந்த கழிசடைகள்  சொன்ன கருத்துகளுக்காகவும் தத்துவங்களுக்காகவும் இக்காணொளி இங்கு இணைக்கப்படவில்லை.  அந்த கழிசடைகள் ஆன்மீகம்  என்ற போர்வையில் எப்படி மக்களை ஏமாற்றும் அயோக்கியரகளாக உள்ளர்கள் என்பதை  வெளிக்கொண்டு வரவே அது இணைகப்பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

1 hour ago, மல்லிகை வாசம் said:

ம்... கனி இருக்கக் காய் கவர்ந்தற்று

நல்ல நிறைய விஷயங்கள் இருக்கும் போது கழிவுகளை இங்கு வந்து கொட்டுவதால் யாழ் களமும் குப்பைத்தொட்டியாகிறது.

பலாப்பழத்தைச் சுவைக்க விரும்பும்போது பலாச் சுளையை மட்டும் பழம் தருவதில்லை. மனிதர் உண்ணுவதற்கு ஏற்றதான சுளையோடு தடல், தும்பு, பால், நரம்பு என அனைத்தையுமே தருகிறது. சுளையைத் தவிர மற்றவைகள் உண்ணுவதற்கு ஏற்றதல்ல என்ற அறிவு மனிதர்களுக்கு இருந்தாலே போதுமானது. தடல், தும்பு, பால் இருப்பதைக் கண்டு பழத்தையே தூக்கி எறிவது முட்டாள்தனம் மட்டுமல்ல, மூடத்தனமுமாகும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Paanch said:

பலாப்பழத்தைச் சுவைக்க விரும்பும்போது பலாச் சுளையை மட்டும் பழம் தருவதில்லை. மனிதர் உண்ணுவதற்கு ஏற்றதான சுளையோடு தடல், தும்பு, பால், நரம்பு என அனைத்தையுமே தருகிறது. சுளையைத் தவிர மற்றவைகள் உண்ணுவதற்கு ஏற்றதல்ல என்ற அறிவு மனிதர்களுக்கு இருந்தாலே போதுமானது. தடல், தும்பு, பால் இருப்பதைக் கண்டு பழத்தையே தூக்கி எறிவது முட்டாள்தனம் மட்டுமல்ல, மூடத்தனமுமாகும்.  

அருமையான கருத்து.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/30/2019 at 6:06 AM, மல்லிகை வாசம் said:

மனித வாழ்க்கைக்கான அர்த்தத்தைத் தொலைத்துவிட்ட மேற்குலக மக்கள்

இதன் அடிப்படை மற்றும் உங்களின் புரிதல், மற்றும் விளக்கம் என்ன?

Link to comment
Share on other sites

4 hours ago, Paanch said:

பலாப்பழத்தைச் சுவைக்க விரும்பும்போது பலாச் சுளையை மட்டும் பழம் தருவதில்லை. மனிதர் உண்ணுவதற்கு ஏற்றதான சுளையோடு தடல், தும்பு, பால், நரம்பு என அனைத்தையுமே தருகிறது. சுளையைத் தவிர மற்றவைகள் உண்ணுவதற்கு ஏற்றதல்ல என்ற அறிவு மனிதர்களுக்கு இருந்தாலே போதுமானது. தடல், தும்பு, பால் இருப்பதைக் கண்டு பழத்தையே தூக்கி எறிவது முட்டாள்தனம் மட்டுமல்ல, மூடத்தனமுமாகும்.  

சிறப்பான உவமானம். 😊

 

****
 

Link to comment
Share on other sites

On 10/30/2019 at 7:06 AM, மல்லிகை வாசம் said:

மனித வாழ்க்கைக்கான அர்த்தத்தைத் தொலைத்துவிட்ட மேற்குலக மக்கள் 

 

11 minutes ago, Kadancha said:

இதன் அடிப்படை மற்றும் உங்களின் புரிதல், மற்றும் விளக்கம் என்ன?

அகதிகளாக மேற்குலகுக்கு வந்த பல லட்சக்கணக்கான எமது மக்களை வரவேற்று உண்ண உணவு இருப்பிடம், மருத்துவம் ஆகியவற்றை கொடுத்து வேலை வாய்பபுகளை கொடுத்து, அடுத்த தலைமுறைப் பிள்ளைகளுக்கு கல்வியையும் கொடுத்து,  அவர்கள் இங்கு நலமாக வாழ வழி செய்த மேற்குலக மக்களின் வாழவின்  அர்த்தத்தை தான் அவர் இங்கு குறிப்பிடுகிறார்.  

 இந்து தர்மமும் இந்து தத்துவமும் கோலோச்சும்  நாடான  இந்தியாவுக்கு அகதிகளாக  சென்ற எமது மக்கள் இன்றும் அப்படியே உயர்கல்விகூட மறுக்கப்பட்ட அடிமைகள் போல் அங்கு வறுமையில்்வாடுகின்றார்கள்.  அது தான் இவர்கள் கூறும்  இந்து தத்துவங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, tulpen said:

 அந்த கழிசடைகள் ஆன்மீகம்  என்ற போர்வையில் எப்படி மக்களை ஏமாற்றும் அயோக்கியரகளாக உள்ளர்கள் என்பதை  வெளிக்கொண்டு வரவே அது இணைகப்பட்டுள்ளது. 

மக்கள் போடும் தர்மப் பிச்சையில் கார் வாங்கி ஓடலாம் என்று சரிகாண்கின்றனர் - வீடியோவில் இருப்பவர்கள்.

இவர்களை கழிசடைகள் என்று சொல்கிறார், மிஸ்டர் துல்பன்.

இப்படி சொல்வது தப்பல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

அகதிகளாக மேற்குலகுக்கு வந்த பல லட்சக்கணக்கான எமது மக்களை வரவேற்று

எல்லா நாடுகளும் வரவேற்றன என்று சொல்லமுடியாது. அந்தந்த நாடுகளின் சகிப்பு தன்மைக்கு ஏற்றவாறு, எம்மை சகித்து (அதில் உபசரிப்பும் அடக்கம்) கொண்டார்கள்  என்பதே உண்மை.      

பிரித்தானிய, குறிப்பாக எம்மை சகித்துக்கொண்டதின் காரணம் வரவேற்றல் இல்லை, எமது போராடும் மனித வலு குன்றி, சொறி சிங்களம் எமது ஆயுதப்போராட்டத்தை நசுக்கவதற்கு ஓர் இடை வெளி ஏற்றப்படுத்தப்படும் என்ற நோக்கில்.

பிரித்தானியாவின்,  ஆட்சிக்கலை மற்றும் ராஜ, ராணுவ தந்திர செல்வாக்கு ஏனைய ஐரோப்பிய நாடுகளின் மீது உள்ளதால், அந்த நாடுகள் 'எம்மை வரவேற்றது' என்பதாக காட்டிக்கொண்டதில் பிரித்தானியாவின் செல்வாக்கின் பங்கும் உள்ளது என்பது பல ஆய்வாளர்களின் கணிப்பாகும்.

Link to comment
Share on other sites

59 minutes ago, Kadancha said:

எல்லா நாடுகளும் வரவேற்றன என்று சொல்லமுடியாது. அந்தந்த நாடுகளின் சகிப்பு தன்மைக்கு ஏற்றவாறு, எம்மை சகித்து (அதில் உபசரிப்பும் அடக்கம்) கொண்டார்கள்  என்பதே உண்மை.      

பிரித்தானிய, குறிப்பாக எம்மை சகித்துக்கொண்டதின் காரணம் வரவேற்றல் இல்லை, எமது போராடும் மனித வலு குன்றி, சொறி சிங்களம் எமது ஆயுதப்போராட்டத்தை நசுக்கவதற்கு ஓர் இடை வெளி ஏற்றப்படுத்தப்படும் என்ற நோக்கில்.

பிரித்தானியாவின்,  ஆட்சிக்கலை மற்றும் ராஜ, ராணுவ தந்திர செல்வாக்கு ஏனைய ஐரோப்பிய நாடுகளின் மீது உள்ளதால், அந்த நாடுகள் 'எம்மை வரவேற்றது' என்பதாக காட்டிக்கொண்டதில் பிரித்தானியாவின் செல்வாக்கின் பங்கும் உள்ளது என்பது பல ஆய்வாளர்களின் கணிப்பாகும்.

கடஞ்சா பிரித்தானியாவின. அரசியல் குறித்து நான் குறிப்பிடவில்லை. மேற்கு நாடுகளுக்கு வந்த எமக்கு கலவியை அவர்கள் மறுக்கவில்லை. இந்து தர்மம் என்று சிலர் பெருமைப்படும் இந்தியாவில்  எமது பிள்ளைகளுக்கு கல்வியும்  மறுக்கப்பட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

மேற்கு நாடுகளுக்கு வந்த எமக்கு கலவியை அவர்கள் மறுக்கவில்லை. இந்து தர்மம் என்று சிலர் பெருமைப்படும் இந்தியாவில்  எமது பிள்ளைகளுக்கு கல்வியும்  மறுக்கப்பட்டது. 

இதை மறுக்கவில்லை. ஆயினும், இந்த உரிமைகள் , மற்றும் சலுகைகள் என்பதை அவர்களால் தடுக்க முடியாமல் இருந்தது, அவர்களின் உள்ளாட்சி கட்டமைப்பில் independent  institutions என்று இருந்த படியால்.

மற்றும் படி, மேற்கு நாடுகள் எம்மை உழவார அனுமதித்ததின் அடிப்படை காரணம் அவர்களின் நலன்களின் அடிப்படையில்.  

Link to comment
Share on other sites

47 minutes ago, Kadancha said:

இதன் அடிப்படை மற்றும் உங்களின் புரிதல், மற்றும் விளக்கம் என்ன?

என்ன தான் வாழ்க்கைத் தரத்தில் முன்னேறியவர்கள் என்று மேலைநாட்டு மக்கள் சொல்லிக்கொண்டாலும், பல மேலைநாட்டு மக்களின் மனங்களில் வாழ்க்கையின் அர்த்தத்துக்கான தேடல் இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது. பொருளாதார வசதி, தனி மனித சுதந்திரம் இவற்றைச் சாதித்துக் கொண்ட அவர்கள் இவற்றுக்கும் மேலேயும் அடைய வேண்டிய ஏதோ ஒன்று உள்ளது என்று உணர்ந்து அதைத் தேடுகிறார்கள். இந்தத் தேடலே இவர்களை meditation, yoga, இந்தியா போன்ற நாடுகளுக்கான wellness tour போன்றவற்றில் நாட்டம் கொள்ள வைக்கிறது. 

இது மிகச் சுருக்கமான விளக்கம் தான். மனித உளவியல் ரீதியாகவும் நோக்கலாம். மேலை நாட்டு self-help புத்தகங்களை வாசித்த போது எவ்வளவு தூரம் அவர்கள் வாழ்வின் அர்த்தத்தைத் தொலைத்திருப்பர் என்று புரிந்தது (உதாரணமாக The 7 Habits of Highly Effective People என்ற புத்தகம்).

இப்படியானவர்களை நாம் வேலைத்தளம், meditation session போன்ற இடங்களில் சந்தித்திருப்போம். சிலர் வெளிப்படையாக இவற்றை எல்லாம் உரையாடுவார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்பதற்கும் ஆட்கள் இல்லயே என்ற ஏக்கம் அவர்கள் பேச்சில் தென்படும்.

இன்னும் விரிவாகப் பலதை எழுதலாம். இப்போதைக்குச் சுருக்கமாக முடிக்கிறேன்.

11 minutes ago, Kadancha said:

மற்றும் படி, மேற்கு நாடுகள் எம்மை உழவார அனுமதித்ததின் அடிப்படை காரணம் அவர்களின் நலன்களின் அடிப்படையில்.  

நமது கடின உழைப்பு, சில குறிப்பிட்ட துறைகளில் எம்மவர்களின் வேலைத் திறன் போன்றவற்றைக் கூறலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, மல்லிகை வாசம் said:

என்ன தான் வாழ்க்கைத் தரத்தில் முன்னேறியவர்கள் என்று மேலைநாட்டு மக்கள் சொல்லிக்கொண்டாலும், பல மேலைநாட்டு மக்களின் மனங்களில் வாழ்க்கையின் அர்த்தத்துக்கான தேடல் இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது. பொருளாதார வசதி, தனி மனித சுதந்திரம் இவற்றைச் சாதித்துக் கொண்ட அவர்கள் இவற்றுக்கும் மேலேயும் அடைய வேண்டிய ஏதோ ஒன்று உள்ளது என்று உணர்ந்து அதைத் தேடுகிறார்கள். இந்தத் தேடலே இவர்களை meditation, yoga, இந்தியா போன்ற நாடுகளுக்கான wellness tour போன்றவற்றில் நாட்டம் கொள்ள வைக்கிறது. 

 

உலகில் உள்ள எந்த இன, மத மக்களும், வாழ்க்கையின் அர்த்தங்களைத் தொலைக்கவில்லை.

மக்கள் எதை விரும்புகிறார்களோ, அவைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் அதை நடைமுறைப்படுத்தி பழகிக்கொள்கிறார்கள்.

மேலைத்தேய  மக்களோ, கீழைத்தேய மக்களோ வாழ்க்கையை உணர்ந்துதான் வாழ்கிறார்கள்.

Meditation, Yoga போன்றவற்றை இலங்கை, இந்தியாவில் உள்ள இந்து மக்களே அதை பின்பற்றுவதில்லை.

மேலைத்தேய மக்கள்,  Meditation, Yoga இன்மையால்,  வாழ்க்கையின் அர்த்தங்களை தொலைத்து விட்டார்கள் என்று சுருக்கிக்கொள்வது, நகைப்பிற்கு இடமானது.  

ஒருவரது அல்லது ஒரு மதத்தின், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகளை மேலைத்தேய மக்கள் பின்பற்றாமல் அல்லது ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால், அவர்கள் வாழ்க்கையின் அர்த்தங்களைத் தொலைத்துவிட்டவர்கள் என்று சொல்வது, ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.