Jump to content
Sign in to follow this  
nunavilan

தமிழ் மக்கள் என் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் - கோத்தாபய

Recommended Posts

தமிழ் மக்கள் என் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் - கோத்தாபய

Published by J Anojan on 2019-10-28 15:41:02

(இராஜதுரை ஹஷான்)

தமிழ் மக்கள் என் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் கௌரவமாக  வாழும் சூழலை நிச்சயம் உருவாக்குவேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

EH8eK64UYAAXf0r__1_.jpg

வவுனியா நகரில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

நாட்டு மக்களின் எதிர்கால  முன்னேற்றத்தினை கருத்திற் கொண்டு சிறந்த தேர்தல் கொள்கை பிரகடனத்தை வெளிப்படுத்தியுள்ளோம்.  கிராமிய கைத்தொழில், விவசாயத்தை மேம்படுத்துவதற்கான தெளிவான கொள்கை திட்டங்களை உள்ளடக்கியுள்ளோம்.

கடந்த அரசாங்கம் தொடர்பில்  தமிழ்- முஸ்லிம் மக்கள் மத்தியில் போலியான  பிரச்சாரங்கள்  பரப்பட்டது. இதனையும்  தமிழ் மக்கள் நம்பினார்கள். இதன் காரணமாகவே 2015ம் ஆண்டு  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தார். போலியான குற்றச்சாட்டுக்களுக்கும்,  வதந்திகளும் ஏமாற்றமடைய வேண்டாம்.

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை ஆயுதமாக கொண்டு ஒரு தரப்பினர் மீண்டும் அரசியல் செய்தார்கள்.அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து   மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு தீர்வு  பெற்றுக் கொடுக்கப்படும்.  சிறந்த அரசியல் ரீதியான தீர்மானத்தை நாட்டு மக்கள்  முன்னெடுக்க வேண்டும்.  என் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் வழங்கும் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்றும் கூறினார்.

https://www.virakesari.lk/article/67730

Share this post


Link to post
Share on other sites

மதியாதார் தலைவாசல் மிதியாதே  என இந்த கொலைகாரனை விட்டுவிடுவதா ?

இல்லை  இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல், என மன்னித்து விடுவதா ? 

Share this post


Link to post
Share on other sites

கோட்டாபாயவுக்கு எதிராக வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம்

image_fd53a6afe5.jpgக.அகரன்

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய  ராஜபக்ஷ வவுனியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததை கண்டித்து, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

982ஆவது நாளாக காணாமல்போன உறவினர்களால் சுழற்சிமுறை போராட்டம் இடம்பெறும் கொட்டகைக்கு முன்பாக இன்று (28) மாலை 3.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள், அமெரிக்க - ஐரோப்பிய கொடிகளை தாங்கியிருந்ததுடன் “கோட்டாபய, தமிழர்கள் உங்களை ஒருபோதும் மறக்கோம், மன்னிக்கோம், அனுபவித்த துன்பங்களை தமிழர்கள் மறக்க மாட்டார்கள், 145,000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், 80,000 பெண்களை விதவைகளாக்கினாய், 50,000 தமிழ் குழந்தைகள் அனாதைகளானார், 33,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள்” போன்ற பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

 

image_80f9ea6bdb.jpg

 

image_a5da09b1fa.jpg

 

image_70fcac4b01.jpg

http://www.tamilmirror.lk/வன்னி/கடடபயவகக-எதரக-வவனயவலம-ஆரபபடடம/72-240507

Share this post


Link to post
Share on other sites

அரசியல் ரீதியான தவறை தமிழ் மக்கள் மீண்டும் மேற்கொள்ள மாட்டார்கள் 

(இராஜதுரை ஹஷான்)

தமிழ் மக்கள் மீண்டும் அரசியல் ரீதியின் தவறான தீர்மானத்தை மேற்கொள்ளமாட்டார்கள் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, காணி பிரச்சினைக்கு தீர்வு, காணாமல்போனோரது உறவுகளுக்கு நட்டஈடு மற்றும் வடக்கிற்கு முழுமையான அபிவிருத்தி எம்மால்  துரிதகரமாக செயற்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

76727025_10156166493811467_5217758199414

வவுனியா நகரில் இன்று இடம் பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துமக்களுக்கு சேவையாற்றியவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியுள்ளேன். 

சிறந்த  பலமான அரசாங்கத்தை தோற்றுவிக்க அனைவரும் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த ஒன்றினைய வேண்டும். பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் இதன்போது கேட்டுக் கொண்டார்.

https://www.virakesari.lk/article/67741

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, nunavilan said:

தமிழ் மக்கள் என் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் - கோத்தாபய

கொலைகாரக் கும்பல் மேல என்ன நம்பிக்கை வைக்கிறது?

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

"இல்லை  இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல், என மன்னித்து விடுவதா ?" 

இல்லை  "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நையப் புடைத்து அனுப்புதல்."  எமது சந்ததியின் எதிர்காலத்துக்கு நல்லது.   

 

 

 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, satan said:

"இல்லை  இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல், என மன்னித்து விடுவதா ?" 

இல்லை  "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நையப் புடைத்து அனுப்புதல்."  எமது சந்ததியின் எதிர்காலத்துக்கு நல்லது.   

 

 

 

நையப்புடைப்பவர்கள் எல்லாம் வெளிநாடுகளிலிருந்து விசைப்பலகைகளில் நையப்புடைக்காமல் 
இலங்கை வந்து நேரடியாக நையப்புடைப்பார்களாயின் எங்களுக்கு  ஓகே ...அதைவிடுத்து வெளிநாடுகளில் ஒளித்துக்கொண்டிருந்து நையப்புடைப்பார்களாயின் அவர்கள் எப்போதாவது தாயகம் எட்டிப்பார்க்கும் போது 
இங்குள்ள மக்களால் நையப்புடைக்கப்படுவார்கள் 

  • Like 1
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நையப்புடைப்பவர்கள் எல்லாம் வெளிநாடுகளிலிருந்து விசைப்பலகைகளில் நையப்புடைக்காமல் 
இலங்கை வந்து நேரடியாக நையப்புடைப்பார்களாயின் எங்களுக்கு  ஓகே ...அதைவிடுத்து வெளிநாடுகளில் ஒளித்துக்கொண்டிருந்து நையப்புடைப்பார்களாயின் அவர்கள் எப்போதாவது தாயகம் எட்டிப்பார்க்கும் போது 
இங்குள்ள மக்களால் நையப்புடைக்கப்படுவார்கள் 

நல்ல கருத்து!

Share this post


Link to post
Share on other sites

‘274 பேருக்கும் விடுதலை; என்னை நம்புங்கள்’

தமிழீழ விடுதலைப் புலிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்ததைப் போன்று, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 274 பேரையும் தான் ஜனாதிபதியானால், புனர்வாழ்வளித்து விடுதலைச் செய்வேன் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 

தம்மிடமும் இந்த உறுதிமொழியை கோட்டாபய வழங்கிதாக,  நல்லை ஆதின குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்தார். 

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்துக்கு யாழ்ப்பாணத்துக்கு நேற்று (28) வருகைதந்திருந்த கோட்டாபய தலைமையிலான குழுவினர், நல்லை ஆதின குருக்களை முதலில் சந்தித்து கலந்துரையாடிலில் ஈடுபட்டனர். 

“சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதாக, கோட்டாபய தன்னிடம் உறுதியளித்துள்ளார். குறிப்பாக அரசியல் கைதிகளை சட்ட ரீதியாக விடுவிக்க முடியும். அதனூடாக அவர்களை விடுவிப்போம் என்று கூறியுள்ளார்” என ஆதின குரு முதல்வர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், றக்கா வீதியிலுள்ள இளங்கதிர் சனசமூக நிலையத்தில் நேற்று (28) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,  'உங்கள் தலைவர்கள் கடந்த கால நிகழ்வுகளை நினைவுபடுத்தி செயற்படுகின்றனர். ஆனால் நான் உங்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு செயற்படுவேன் எனத் தெரிவித்த அவர், என்னை நம்புங்கள் என்றார். 

“இராணுவ வசமிருந்த காணிகளின் 90 சதவீதமான காணிகளை நாங்களே விடுவித்தோம் .எஞ்சியுள்ள காணிகளை விடுவிப்பது குறித்து டக்ளஸ் தேவானந்தவுடன் நான் பேசினேன்” என்றார். 

“கைதான முன்னாள் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு  புனர்வாழ்வளித்து விடுவித்தோம் . பிரச்சினைகளை வைத்து வாழாமல் எதிர்காலத்தை பற்றி யோசித்து செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 
 

http://www.tamilmirror.lk/செய்திகள்/274-பரககம-வடதல-எனன-நமபஙகள/175-240510

Share this post


Link to post
Share on other sites

எடுத்ததுக்கெல்லாம் வெளிநாடுகளில் இருப்பவர்களை எதிர்பார்ப்பதும். குறை கூறுவதும் வழக்கமாகி விட்டது. "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்." வெளிநாட்டுக்காரரா மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பிவைத்தார்கள்? தமிழரின்  வாக்கு மட்டும் நமது வெற்றியை நிச்சயிக்காது என்று வீராப்பு பேசிய  கோத்தாவையாழ்ப்பாணம் வந்து வாக்கு கேக்க வைத்தார்கள்? தன்கையே தனக்கு உதவி. கோத்தா தனது உரையில் சொல்லுக்காகவாவது  நான் தமிழருக்கு தவறிழைத்தேன் என்று ஏற்றுக்கொண்டு மனம் வருந்தி விட்ட தவறுகளை திருத்த ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் என்று கேட்டாரா? நல்லை ஆதீனத்திடம்  தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பேன் என்று  சொன்னதை தெற்கிலும் சொல்லுவாரா?  தெற்கில் படையினரை உடனடியாக விடுவிப்பேன் என்று உரத்துச் சொல்கிறார். அன்று இலங்கையில் இனப்பிரச்சனை என்று ஒன்று இல்லை. இருப்பதெல்லாம் பயங்கரவாதம் என்று பிரச்சாரம் செய்து சாதித்தார்கள். இப்போது இளைஞர்கள் வேலை இல்லாமல் குழம்புகிறார்கள் என்கிறார்.இவ்வளவும் ஏன், இந்து கோவிலுக்குரிய இடத்தில பிக்குவை தகனம் செய்தது தவறு என அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்களுக்கு கோத்தா கொடுத்த விளக்கம், அவர் இன்னும் பழைய குரோத மன நிலையில், அடக்கு முறையில்   இருக்கிறார் என்பதையே காட்டுகிறது. இந்த நிலையில் இன்னா செய்தாரை நாம் ஒறுப்பது பற்றி சிந்திப்போமானால் தான் செய்தவை யாவும் சரியென வடக்கு மக்கள் ஏற்று அங்கீகரித்து ஆணை இட்டுள்ளார்கள் என சர்வதேசத்துக்கு அறிக்கை விடுவதோடு,  விட்ட குறையையும் முடித்துக் காட்டுகிறேன் என  எமது எல்லா முயற்சிகளையும் நீத்துப்போகச் செய்து எங்களை புத்திசாலிகள் என ஒப்புக்கு பாராட்டுவார். ஆனால் எமது இயலாமையையும் முட்டாள்த் தனத்தையும் எண்ணி கொடுப்புக்குள் சிரிப்பார். நாம் பொல்லைக் குடுத்து அடி வாங்க வேண்டியான். ஒரு சிலரின் சுய லாபத்துக்கு எல்லாரும் பலியாக வேணுமா? 

Share this post


Link to post
Share on other sites
On 10/28/2019 at 8:16 AM, ampanai said:

கோட்டாபாயவுக்கு எதிராக வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம்

image_fd53a6afe5.jpgக.அகரன்

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய  ராஜபக்ஷ வவுனியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததை கண்டித்து, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

982ஆவது நாளாக காணாமல்போன உறவினர்களால் சுழற்சிமுறை போராட்டம் இடம்பெறும் கொட்டகைக்கு முன்பாக இன்று (28) மாலை 3.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள், அமெரிக்க - ஐரோப்பிய கொடிகளை தாங்கியிருந்ததுடன் “கோட்டாபய, தமிழர்கள் உங்களை ஒருபோதும் மறக்கோம், மன்னிக்கோம், அனுபவித்த துன்பங்களை தமிழர்கள் மறக்க மாட்டார்கள், 145,000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், 80,000 பெண்களை விதவைகளாக்கினாய், 50,000 தமிழ் குழந்தைகள் அனாதைகளானார், 33,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள்” போன்ற பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

 

image_80f9ea6bdb.jpg

 

image_a5da09b1fa.jpg

 

image_70fcac4b01.jpg

http://www.tamilmirror.lk/வன்னி/கடடபயவகக-எதரக-வவனயவலம-ஆரபபடடம/72-240507

எங்கள் இனத்தின் குணம் (ஒற்றுமை இன்மை ) எல்லோருக்கும் தெரியும்.  தங்கள் நலனுக்காக எல்லோரும் எங்களை பாவிக்கிறார்கள்.  நாம் பிறரை பாவிக்கவிரும்பின் எங்களுக்குள் (பொது நன்மை கருதி ) ஒற்றுமை வேண்டும்.  அதுவரை நாங்கள் எல்லோரும்  கிள்ளுகீரைகள் தான் பிறருக்கு. 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

×
×
  • Create New...