Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இந்துமா சமுத்திரத்தின் கேந்திரமாக இலங்கை உருவெடுக்க சீனா துணை நிற்கும் - சீன தூதுவர் ஷெங் யுவான்


Recommended Posts

இந்துமா சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்து மையமாக இலங்கை உருவெடுக்க சீனா அனைத்து வகையிலும் ஒத்துழைப்புகளை வழங்கும். டுபாய் - கொழும்பு கப்பல் போக்கு வரத்து அடுத்தகட்ட முக்கிய நகர்வாகவே அமைந்துள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு இன மற்றும் கட்சி அரசியலின் அடிப்படையிலனவையல்ல என சீன தூதுவர் ஷெங் யுவான் தெரிவித்தார்.  

26-China.JPG

இலங்கையை கடன் பொறிக்குள் சிக்க வைத்து சீனா செயற்படுவதாக மேற்குலக நாடுகள் போலி பிரசாரங்களை முன்னெடுக்கின்றன. மறுப்புறம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் போர்தளமெனவும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜப்பான் மற்றும் ஜேர்மன் நாடுகளின் போர்க்கப்பல்களே  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இலங்கை - சீன திட்டங்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் சந்திப்பு இன்று தாமரை கோபுரத்தில் இடம்பெற்றது. 

இதன்போதே சீன தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

https://www.virakesari.lk/article/67803

Link to comment
Share on other sites

  • உருசியா சென்று சென்னையில் இருந்து விளாடிவஸ்தோக் வரை கப்பல் சேவை தொடங்க பணம் கொடுத்த மோடி
  • மாமல்லபுரத்திற்கு சீனாவை கூட்டி வந்த மோடி  
  • இப்பொழுது உருசியாவை தமிழகத்திற்கு அழைக்கும் மோடி
  • பலாலியில் சர்வதேச விமான நிலையத்தை திறந்த இந்தியா


ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை 🙂 
இலங்கையை கடன் பொறிக்குள் சிக்க வைத்து சீனா செயற்படுவதாக மேற்குலக நாடுகள் போலி பிரசாரங்களை முன்னெடுக்கின்றன. மறுப்புறம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் போர்தளமெனவும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜப்பான் மற்றும் ஜேர்மன் நாடுகளின் போர்க்கப்பல்களே  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

மறுப்புறம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் போர்தளமெனவும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அம்பாந்தோட்டையில் கடற்படைத்தளம் அமைக்கும் எண்ணம் சீனாவுக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரிந்தது.

அதனால் தான் இந்தியா மத்தல விமான நிலையத்தை தனக்கு தரும்படி கேட்டது. அருகில் இருந்து சீனாவை கண்காணிக்க.

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்து இந்தியாவுடன் சேர்ந்து இயக்கப்போவதாக மார்ச் மாதம் கூறினார்கள். 40 வருட கால குத்தகைக்கு இந்தியாவுக்கு வழங்கப்போவதாகவும் வாசித்தேன். இப்பொழுது என்ன நிலையில் உள்ளது என தெரியவில்லை. 

1 hour ago, ampanai said:

ஜப்பான் மற்றும் ஜேர்மன் நாடுகளின் போர்க்கப்பல்களே  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

ஈஸ்ரர் தாக்குதலுக்கு இரு நாட்களுக்கு முன்னம் 19 ஏப்ரல் அன்று அமெரிக்க கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டதை சொல்ல மறந்திட்டார்.

Edited by Lara
Link to comment
Share on other sites

இந்தியாவும் சீனாவும் இன்று ஆசிய வல்லரசுகள்.
இவை, நாளைய உலக வல்லரசுகள். 

இருவரும் ஒருவராக பயணிப்பார்கள். பயணிப்பது போன்று காட்டுவார்கள்.
காரணம், வெளித்தனமாக சண்டை பிடிப்பது பேரழிவை தரும்.

ஆகவே, மௌனமான, மென்மையான சண்டைகள் நடக்கும்.
அதற்குள் சிறிய நாடுகள் சிக்கி  தவிக்கலாம்.
 
சில புதிய யன்னல்கள் திறக்கலாம்.
சில திறந்த கதவுகள் மூடப்படலாம். 

Link to comment
Share on other sites

5 hours ago, ampanai said:

இந்துமா சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்து மையமாக இலங்கை உருவெடுக்க சீனா அனைத்து வகையிலும் ஒத்துழைப்புகளை வழங்கும்.

ஹிந்தியன் ஏற்கனவே தங்களின் காட்டுமிராண்டிப் பண்பாடுகளை சிங்களவனுக்கு புகட்டி வருகிறான்!

  • Like 2
Link to comment
Share on other sites

இந்திய பெருங்கடலுக்குள் சீன போர்க்கப்பல்கள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை

இந்திய பெருங்கடலுக்குள் சீனாவின் விமானம் தாங்கி கப்பல்கள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் பசிபிக் கடற்படை கமாண்டரான அட்மிரல் ஜான் அக்கிலினோ டெல்லி வந்துள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய கடற்பகுதிக்குள் சீன போர்க்கப்பல் ஊடுருவினால் அது ஆச்சரியமான விஷயமல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

போர்க்கப்பல்களை மிக அதிக அளவில் சீனா குவித்து வருகிறது. அந்நாட்டு கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள புதிய போர்க்கப்பல்களான 54 ஃபிரிகேட், 52 d destroyer போன்ற கப்பல்களும் கடல் தாக்குதல் தடுப்பு ஏவுகணைகளும் போன்றவை மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களாக இருப்பதாகவும் அட்மிரல் அக்கிலோனோ தெரிவித்துள்ளார்.

கடந்த பத்தாண்டுகளில் சீனா அணு ஆயுதம் தாங்கி நீர்மூழ்கிக் கப்பல்களையும் இந்திய பெருங்கடலுக்குள் ஊடுருவச் செய்துள்ளதை இந்திய கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர். இவை நிறுத்தப்படப் போவதில்லை. இவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகமாகவே வாய்ப்புள்ளது என்றும் அட்மிரல் அக்கிலோனோ தெரிவித்துள்ளார்.

https://www.polimernews.com/dnews/86688/இந்திய-பெருங்கடலுக்குள்சீன-போர்க்கப்பல்கள்-ஊடுருவவாய்ப்புள்ளதாக-அமெரிக்காஎச்சரிக்கை

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சரண்ஜித் சன்னி: பஞ்சாப் முதல்வராகப் போகும் இவரது பின்னணி என்ன? 19 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,TS_SINGH DEO   படக்குறிப்பு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவராக தேர்வாகியிருக்கும் சரண்ஜித் சன்னி (49) திங்கட்கிழமை காலை 11 மணிக்கு அம்மாநில முதல்வராக பதவியேற்கவிருக்கிறார். அந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் மாநில தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிலக பயிற்சித்துறை அமைச்சராக இருந்த அவர், இதற்கு முன்பு பஞ்சாப் சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவராக ஓராண்டுக்கு இருந்திருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தின் ராம்தஸியா சீக்கியர் (பட்டியலினத்தில் உள்ளது) சமூகத்தைச் சேர்ந்தவர் சரண்ஜித் சிங். அங்குள்ள சம்கூர் சாஹிப் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு இவர் தேர்வானார். கேப்டன் அமரிந்தர் சிங் அமைச்சரவையில் 2017ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி சேர்க்கப்பட்ட இவருக்கு தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. முன்னதாக, பஞ்சாப் மாநில முதல்வர் பதவியில் இருந்து அமரிந்தர் சிங் விலகிய பிறகு அந்த பதவிக்கு ரந்தாவா அல்லது சரண்ஜித் சிங் தேர்வாகலாம் என்று கூறப்பட்டது. அமரிந்தர் சிங்: "நவ்ஜோத் சித்துவை முதல்வர் பதவிக்கு ஆதரிக்க மாட்டேன்" பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் ; கரை சேரப்போவது யார் ? இந்த நிலையில், சரண்ஜித் சிங்கே அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்ற அறிவிப்பை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் ஞாயிற்றுக்கிழமை மாலையில் வெளியிட்டார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 காங்கிரஸ் தலைமையின் முடிவைத் தொடர்ந்து இனி பஞ்சாப் சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர்கள் கூடி சரண்ஜித் சிங் சன்னியை முறைப்படி தங்களுடைய குழு தலைவராக தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சி அமைக்க சரண்ஜித் உரிமை கோரினார். இதையடுத்து, திங்கட்கிழமை காலை 11 மணிக்கு பதவியேற்க வருமாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அழைப்பு விடுத்துள்ளதாக இன்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்தார். கட்சி மேலிடத்தின் இந்த முடிவை வரவேற்பதாக மற்றொரு போட்டியாளராக ஊகிக்கப்பட்ட சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா தெரிவித்தார். "முதல்வர் பதவிக்கு என்னை தேர்வு செய்ய ஆதரவாக இருந்த எல்லா எம்எல்ஏக்களுக்கும் நன்றி. கட்சி மேலிடம் சரண்ஜித் சிங்கை தேர்வு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் எனக்கு சகோதரர் போன்றவர்," என்று ரந்தாவா கூறினார். Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 பஞ்சாப் மாநில மொத்த மக்கள் தொகையில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களின் வாக்கு வங்கி 33 சதவீதம் உள்ளது. அந்த சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் முதல்வராக தேர்வாவதன் மூலம் பட்டியலின வாக்குகளை பெறலாம் என்ற திட்டத்துடன் காங்கிரஸ் கட்சி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. முன்னதாக, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான அம்பிகா சோனி, பஞ்சாப் முதல்வராக தேர்வு செய்யப்படுபவர் சீக்கியராக இருந்தால் நல்லது என்று கூறினார். மாநில முதல்வராக அவருக்கு கட்சி மேலிடம் வாய்ப்பளித்ததாகவும் அதை அவர் ஏற்க மறுத்ததாகவும் ஒரு தகவல் பரவியது. அம்பிகா சோனி மட்டுமின்றி காங்கிரஸ் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து (சீக்கியர்), சுனில் ஜாக்கர் (இந்து ஜாட் சமூகம்), சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா (ஜாட் சீக்கியர்) ஆகியோரின் பெயர்களும் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டதாக கூறப்பட்டது. யார் இந்த சரண்ஜித் சிங்? பட மூலாதாரம்,CHARANJIT SINGH CHANNI பஞ்சாப் மாநிலத்தின் மக்ரோனா காலன் என்ற கிராமத்தில் 1972ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி பிறந்தவர் சரண்ஜித் சிங். வறியநிலை குடும்பத்தில் எஸ். ஹர்சா சிங், தாய் அஜ்மீர் கவுருக்கு மகனாக பிறந்தார் சரண்ஜித் சிங். சரண்ஜித் சிங்கின் தந்தை ஹர்சா சிங், ஊராட்சித் தலைவராகவும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்திருக்கிறார். இதனால், சிறு வயதிலேயே சரண்ஜித் சிங்குக்கு அரசியல் ஆர்வம் துளிர் விட்டிருந்தது. இதனால் பள்ளியில் அவர் மாணவர் தலைவரானார். பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சண்டீகரில் உள்ள ஸ்ரீ குரு கோவிந்த் சிங் கல்லூரியில் அவர் இளங்கலையும் பின்னர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பையும் முடித்தார். பிறகு பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்-ஜலந்தரில் எம்பிஏ படிப்பு முடித்தார். கல்லூரி காலத்தில் இவர் சிறந்த கைப்பந்து வீரராகவும் பரிணமித்தார். பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டியில் தங்கம் வென்றார். தேசிய சாரணர் படை, நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவற்றிலும் அவர் பள்ளி, கல்லூரி காலங்களில் பங்கெடுத்திருக்கிறார். இதற்கிடையே, பொருளாதார சூழ்நிலை குடும்பத்தின் செலவினத்தை சமாளிக்க ஒத்துழைக்காததால் ஹர்சா சிங் மலேசியாவுக்கு குடியேறினார். அங்கிருந்தபடி தமது குடும்பத்துக்கு வருவாய் ஈட்டினார். பின்னர் தாயகம் திரும்பி ஒரு டென்ட் ஹவுஸ் தொழிலை தொடங்கினார். அந்த தொழிலில் தந்தைக்கு உதவியாக இருந்தார் சரண்ஜித் சிங். அவரை அங்கிருந்தவர்கள் டென்ட் பாய் என்று செல்லப்பெயரிட்டு அழைத்தனர். அந்த அடையாளத்துடன் அரசியலுக்குள் நுழைந்த அவர் கவுன்சிலர் ஆக மக்கள் மன்றத்தில் பணியைத் தொடங்கினார். சரண்ஜித் சிங் கவுன்சிலர் பதவியில் மூன்று முறை இருந்திருக்கிறார். அவர் காரர் முனிசிபல் கவுன்சில் தலைவராகவும் இருந்திருக்கிறார். 2007இல் அவர் முதல் முறையாக மாநில சட்டப்பேரவைக்கு தேர்வானார். அப்போது முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறார். தொடக்கத்தில் அமரிந்தர் சிங் ஆரவாளராக இருந்த இவர், சில ஆண்டுகளுக்குப் பிறகு அமரிந்தர் சிங்குக்கு எதிராக திரும்பிய அதிருப்தி எம்எல்ஏக்களுடன் சேர்ந்து கொண்டார். காங்கிரஸ் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் ஆதரவாளராகவும் இவர் பஞ்சாப் காங்கிரஸ் அரசியலில் அறியப்படுகிறார். சர்ச்சை புகாரில் சரண்ஜித் சிங் 2018இல் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், அமைச்சர் சரண்ஜித் சிங் தனக்கு விரும்பத்தகாத குறுஞ்செய்தியை அனுப்பியதாக குற்றம்சாட்டினார். அந்த நேரத்தில் #metoo இயக்கம் இந்தியாவில் தீவிரமாக இருந்தது. ஆனால், அந்த ஐஏஎஸ் அதிகாரி சரண்ஜித் சிங்குக்கு எதிராக எழுத்துபூர்வ புகாரை தெரிவிக்கவில்லை. அத்துடன் அந்த பிரச்னை முடிவுக்கு வந்ததாக அப்போதைய முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்தார். ஆனால், இந்த ஆண்டு மே மாதம், அதே பெண் அதிகாரியின் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பஞ்சாப் மகளிர் ஆணையம் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியபோது, பழைய விவகாரம் சூடுபிடித்து பின்பு பரபரப்பு குறைந்து போனது. https://www.bbc.com/tamil/india-58616800
    • பெருங்கடல்களின் சுவாசங்கள்: இதயத்துக்கு இதம் தரும் '2021' சிறந்த படங்கள் 19 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,AIMEE JAN / OCEAN PHOTOGRAPHY AWARDS மேற்கு ஆஸ்திரேலியாவின் நிங்கலூ கடலடி பவளப்பாறை பகுதியில் கண்ணாடி மீன்கள் புடை சூழ வலம் வந்த தோணி ஆமையின் படத்துக்கு 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த பெருங்கடல் புகைப்படத்துக்கான முதல் இடம் கிடைத்திருக்கிறது. இந்த படத்தை எடுத்தவர் எய்மீ ஜான் என்ற புகைப்பட கலைஞர். ஓஷியானிக் இதழ் நடத்திய இந்த போட்டி, பெருங்கடல்களின் அழகையும் அது எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களையும் உலகம் அறிய வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டதாக இருந்தது. பட மூலாதாரம்,HENLEY SPIERS / OCEAN PHOTOGRAPHY AWARDS போட்டியில் இரண்டாவது இடம் பிடித்தது ஹென்லே ஸ்பியர்ஸ் எடுத்த படத்துக்கு கிடைத்தது. அவர், ஸ்காட்லாந்தின் ஷெட்லாந்து தீவு கடலில் கேனட் கடல் பறவையை தனது கேமராவில் பதிவு செய்திருந்தார். பட மூலாதாரம்,MATTY SMITH / OCEAN PHOTOGRAPHY AWARDS மூன்றாவது இடம், குஞ்சு பொறித்த அழுங்காமை (Hawksbill) கடலை விட்டு வெளியே வர முதல் முறையாக நீந்தியபோது எடுத்ததற்காக கிடைத்துள்ளது. இதை எடுத்தவர் மேட்டி ஸ்மித். பட மூலாதாரம்,RENEE CAPOZZOLA / OCEAN PHOTOGRAPHY AWARDS The Female Fifty Fathoms விருது - பெருங்கடல் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் காட்டும் பெண் கலைஞர்களை ஊக்கமளிக்கும் வகையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விருது லாஸ் ஏஞ்சலஸை சேர்ந்த உயிரியல் ஆசிரியர் ரெனீ காப்போஸோலாவுக்கு கிடைத்துள்ளது. இவர் பிரெஞ்சு பொலினீசியாவில் சூரிய அஸ்தமனத்தின்போது அலையுடன் சேர்ந்து பயணம் செய்த சுறா மீனை தமது கேமராவில் பதிவு செய்திருந்தார். பட மூலாதாரம்,HANNAH LE LEU / OCEAN PHOTOGRAPHY AWARDS இளம் பெருங்கடல் புகைப்பட கலைஞருக்கான விருது ஹன்னா லி லியூவுக்கு கிடைத்தது. இவர் ஆஸ்திரேலியாவின் ஹெரோன் தீவில் இரைக்காக வானில் வட்டமடித்த கழுகுகளுக்கு கீழே கடலில் காற்றை சுவாசிக்க மேலெழும்பிய தோணியாமையை பதிவு செய்திருந்தார். இந்த படங்கள் லண்டனில் டவர் பிரிட்ஜ் அருகே தேம்ஸ் நதிக்கரையில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி அக்டோபர் 17ஆம் தேதிவரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும். எல்லா படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை. https://www.bbc.com/tamil/global-58618169
    • பேசுங்க பேசுங்க ஆனால் பேசி பேசியே நாட்கள் வருடங்களாக ஓடுகின்றன. 🙄🙄
    • பொல்லுக்குடுத்து அடிவாங்கின மாதிரி ஆகப்போகுது!
    • அவருக்கு புரியுது? எங்க எதை  விடலாம் என்று?😪 நாம தான்  அங்குள்ளவனைப்பற்றி இங்குள்ளவன் பேசக்கூடாது  என்கிறோம்?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.