Jump to content

யாரிந்த சுரேன் ராகவன்?


Recommended Posts

யாரிந்த சுரேன் ராகவன்? – 

கனடா மூர்த்தி

என் வெளிநாட்டு நண்பர்களுக்கு கனடியத் தமிழர் பேரவையின் தமிழர் தெருவிழா குறித்து பெருமையுடன் தெரியப்படுத்வதுண்டு. அமெரிக்கா, சிங்கப்பூர் நண்பர்கள் பலர் அதனாலேயே ஓகஸ்ட் மாதத்தில் கனடா வந்திருக்கிறார்கள்.

இந்த ஆண்டு முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவனை சந்தித்தபோதும் எங்கட தெருவிழா, அதன் பிரம்மாண்டம் என்பன பற்றியும் கதை போயிற்று.“‘கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஆகஸ்டில் வர முடியுமா தெரியாது. இப்போதுகூட ஜெனீவாவிற்கு போகுமாறு என்னையும் கேட்டிருக்கிறார்கள். முடிவாகவில்லை” . அதன் பின் ஜெனிவா சென்றார் என்பது நாம் அறிந்ததே. 

இங்கு, தமிழர் பேரவையின் முக்கிய புள்ளி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது ஆளுனர் கலாநிதி சுரேனை நான் சந்தித்தது குறித்து பேச்சு வந்தது. அப்போது CTC யின் அந்தப் புள்ளி தான் சம்பந்தப்பட்ட சுவாரஸ்ய கிசுகிசு ஒன்றைக் குறிப்பிட்டார்.

DSC08120-copy-2.jpg
ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவனுடன் அஜித் சபாரட்ணம்

ஜெனீவாவிற்கு கலாநிதி சுரேன் ராகவன் சென்றதையொட்டி, பிரித்தானியா தமிழ் அமைப்பு ஒன்று ஆளுனர் கலாநிதி சுரேனை விமர்சித்து பாரதூரமான அறிக்கை ஒன்றை வெளியிடவிருந்ததாம். CTCயின் இந்த முக்கிய புள்ளி அதைக் கேள்விப்பட்டதும் மிகவும் கடுப்பாகிவிட்டார். “இப்போதுதான் அந்தத் தமிழ் ஆளுனர் செயல்பட ஆரம்பித்திருக்கிறார். ஜனாதிபதியின் பிரதிநிதியேதான் என்றாலும் அவர் இயங்குவதற்கென ஒரு தமிழ் வெளி இருக்கிறது. அதை அவர் சரிவரப் பயன்படுத்துகிறாரா இல்லையா என்பதை நன்கு அவதானித்து அவர் செயல்களை நாம் முதலில் எடை போடவேண்டும். எடுத்ததும் ஒருவரைக் குறைசொல்லுவது தவறு..” என்றெல்லாம் சொல்லி அந்த எதிர்மறை அறிக்கை வெளிவரவிடாமல் தடுத்து விட்டதைக் குறிப்பிட்டார் அந்தப் புள்ளி. இது ஒரு பண்பு.

இவ்வகைப் பண்பு சமூகத்தில் ஆழமாக இருக்கவேண்டியது அவசியமன்றோ. இவ்வகைப் பண்பை வளர்த்தெடுப்பதில் அமைப்புக்கள் பெரும் கவனம் செலுத்த வேண்டும். ‘வரப்புயர நீருயரும் நீருயரக் குடியுயரும்’ என்பதுபோலவே பொது வாழ்க்கையின் தரம் உயர வேண்டுமானால் நமது அமைப்புக்கள் தரம் உயர்ந்திருக்கவேண்டும். சிக்கலான தருணங்களை அமைப்புகள் உணர்ச்சிவசப்படாத, சிந்தனைத் தெளிவுடன் கடக்க வேண்டும். நமது சமூகத்தின் தரமானது, நமக்கிருக்கும் அமைப்புக்களின் தரத்தை வைத்துத்தானே மற்றவர்களால் கணிக்கப்படுகிறது.

MOORTHY-SUREN-2.jpg
கட்டுரை ஆசிரியர் கனடா மூர்த்தி வட மாகாண ஆளுனர் சுரேன் ராகவனுடன்

கடந்த வெள்ளிக்கிழமை கனடாவின் இன்னொரு பெரும் அமைப்பான கனடா வர்த்தக சம்மேளனத்தின் முந்நாள் தலைவர் அஜித் சபாரத்தினம் திடீரென்று அழைத்தார். வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு கனடா வந்திருப்பதாகவும், அவருடனான பிரத்தியேக சந்திப்பொன்றைத் தனிப்பட்ட முறையில் தானே முன்னின்று ஒழுங்குபடுத்தியிருப்பதாகவும் அஜித் கூறினார்.

நண்பர் அஜித் ஒருவகையில் பார்த்தால் ஒரு ‘போராளி’போலத்தான் நடந்துகொள்வார். தனக்கான இலக்கு இதுதான் என்று ஆள் நினைத்தால் பிறகு ரொக்கட்தான்.  எந்த சமரசமும் கிடையாது. எத்தனையோ எதிர்மறை விமர்சனங்கள், சிவப்பு வட்டம் போட்ட படங்கள், மொட்டை கடுதாசிகள்.. அஞ்சாதே.. கெஞ்சாதே.. ம்ஹும்..

இலங்கையில், குறிப்பாக ஈழப்பரப்பில் தொழில் தொடங்கவும், சேவை செய்யவும் ஆர்வம் கொண்டவர்களுடன் மட்டுமே கலந்துரையாட வடமாகாண ஆளுனர் விரும்புவதாகவும் அஜித் சொன்னார். பிறகு “நீயும் வா” என்றும் அழைத்தார். கனடாவின் தமிழ் தொழில் முனைவர்களுடனான சந்திப்பு. எனக்கும் வியாபாரத்திற்கும் எட்டாத தூரம். இருந்தாலும் நண்பேன்டா..! போனேன்.

ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் ஒரு கல்விமான். படித்தவர். தனக்குத் தரப்பட்ட பொறுப்பினை தான் செய்த பூர்வஜென்ம பலனாக, கொடுப்பினையாக நினைக்கிறார். அதன்மூலம் ஏழை எளியவர்களுக்கு தோழனாக மாறியிருக்கிறார். வடமாகாணத்தின் நிலம் நீர்  நிதி வளங்களை மேம்படுத்துகிறார் என்றெல்லாம் எனக்கு மட்டுமல்ல அந்த நிகழ்வுக்கு வந்திருந்த அனைவருக்கும் அன்று தோன்றியது. அங்கு என்ன நடந்தது என விபரித்து அதுபற்றி எழுதுவதற்கு முன்னர்…

அந்த சந்திப்புக்கு வராத பலரும் அந்த சந்திப்புக் குறித்து அரசியல் எழுதுவதுபோல சிலர் சமூகவலைத்தளங்களில் எழுதியிருப்பதை கவனித்தேன். ஒரு அறிவுக் கொழுந்து அந்தச் சந்திப்புப் பற்றி எனது முகப்புத்தத்தில் வந்து இப்படி எழுதுகிறது: “இந்த மொள்ளமாரி, முடுக்கவிச்சி இவர்களின் புகைப்படங்களை போடுங்கடா.. பாக்கணும்.. தெருவில காறி துப்பணும்… ஏன்.. மக்கள் மத்தியில அம்மணமா ஓட விடணுமே..” 

இது எப்படி இருக்கு…? ஆளுனராகியிருக்கும் ஒரு கல்விமானை பகிரங்கமாகச் சந்தித்த நாங்கள் மொள்ளமாரி, முடுக்கவிச்சியாம். எங்களை அம்மணமா ஓட விடணுமாம்.. என்னே அரசியல் ஞானம். இது ஒரு சாம்பிள்தான்.

“பொதுவாழ்க்கையில் இது சகஜம்” என்றுவிட்டு இதைக் கடந்து போய்விட முடியாது. நம்மவர்களில் பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் அனைவரும் ஒரேவகையானவர்கள் அல்லர். ஆத்மார்த்தமான உணர்வுடன் பொதுவாழ்க்கையில் ஈடுபட வருபவர்கள் சிறு தொகையினர்தான். மறுபுறத்தில் சமூகத்தின் மேல் ஏறி சொகுசாக வாழலாம் என்பதை நன்கு புரிந்து பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்களும் இருக்கிறார்கள்.

இவையிரண்டையும் தவிர்த்து, மூன்றாவது ஒரு பகுதியையும் பொதுவாழ்க்கையில் நாம் அடிக்கடி காண்கிறோம். அவர்கள்தான் விமர்சனப் பெருந்தகைகள். பொதுவாழ்க்கைக்கு பகிரங்கமாக வராமலும், ஆனால் பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் குறித்து எதிர்மறைக் கருத்துக்களை பகிரங்கமாக வாரி வழங்குபவர்களுமாக இருக்கும் இந்தப் பெருந்தகைகள் பலே கில்லாடிகள். 
இவர்களுக்கு செக்கென்ன சிவலிங்கமென்ன.. எல்லாம் ஒன்றுதான். “யார் குத்தினாலும் அரிசி வந்தால் போதுமன்றோ” என்று ஒருபோதுமே இந்த விமர்சனப் பெருந்தகைகள் நினைப்பது கிடையாது. பொதுவாழ்க்கையில் ஈடுபடுவோர் எத்தனை அர்ப்பணிப்புக்களின் மத்தியில் தமது வாழ்க்கையை கொண்டுபோகிறார்கள் என்பதை இவர்கள் கவனிப்பது கிடையவே கிடையாது. ஆயுத இயங்கங்கள் காலத்து மிரட்டல், நாட்டாமை போன்ற வெருட்டல், தம்மைத்தாமே நீதிபதியாக்கும் உருட்டல் என இவர்களின் தொல்லை தாங்க முடியவதில்லை.

வேறொரு பதிவு “ஆளுனர் ராகவனின் வருகை சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரல்” என்றது. அப்படியென்றால் அதை எழுதியவர்தான் அரசியல் அறிவாளி. நாங்கள் எல்லோரும் எதுவும் புரியாது சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் போகத்தக்க ஆக்கள்… அப்படித்தானே…?  ம்..ம்..

இன்னொருத்தர் “இனப்படுகொலை குறித்த விசாரணைகளை ஆளுனர் ராகவனின் ரொறன்ரோ விஜயம் நீர்த்துப்போக வைத்துவிடுகிறது” என கருத்திட்டார். அய்க்.. இதற்கே இப்படி என்றால் நாளை கோத்தபாயா ஜனாதிபதியானதும் என்ன நிலைமை என்பதை குறிப்பிட அவர் மறந்துவிட்டார்.

இன்று நாம் ஒரு சிக்கலான கட்டத்தில் இருக்கிறோம். தமிழ் ஆயுத இயக்கங்களின் படுதோல்வி சிங்கள இனவாதிகளுக்கும், இனவாதப் பௌத்த துறவிகளுக்கும் ஒரு தனித் தெனாவெட்டை தந்துவிட்டது. ஒரு நெடிய போரில் வெற்றி கொண்டுவிட்டோம் என்று சிங்கள இனம் தானாகவே பெருமை கொள்கிறது. ‘நாடற்றிருந்த’ சிங்கள இனத்திற்கு இலங்கை என்ற ‘தனி நாட்டைக்’ கையில் கிடைக்க வைத்த பெருமையுடன் நமது போராட்டம் மௌனிக்க வைக்கப்பட்டிருக்கிறது.

இதையெல்லாம் புரிந்துகொண்ட நிலையில் இன்று நாம் எப்படியான அரசியல் செய்ய வேண்டும்? இந்தக் கேள்விக்கு விமர்சனப் பெருந்தகைகளிடம் இருந்து ஒரு தெளிவான பதில் இன்னும் இல்லையே.

ஒரு வேடிக்கைக்காக, ‘துரோகி’, ‘சிங்கள ஏஜன்ட்’, ‘தேசியத்திற்கு எதிரானவர்’ என்றெல்லாம் மற்றவர்களை ரகசிய முத்திரை குத்தி நாஸ்தி பண்ணுபவர்களைக் கவனித்துப் பாருங்கள். யார் இவர்கள்? ஈழம், தமிழ்த்தேசியம் என்பது என்ன என்று சரிவரப் புரியாதவர்களாக இருக்கிறார்கள் அல்லது அதைச் சொல்லுவதன்மூலம் பிழைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஒன்று நிச்சயம். இவர்கள் ஈழம் சார்ந்த சமூக செயல்பாடுகளில் நேர்மறையாக ஈடுபடுபடுபவர்கள் இல்லை.

இந்த வகையறாக்கள் தமது இருப்பை காட்டிக் கொள்வதற்காகவே மற்றவர்களை கேவலப்படுத்துகிறார்கள். இவர்களுக்கு அஞ்சியே பல நல்லவர்களும் பொது வாழ்க்கைக்கு வருவதை தவிர்த்து வருகிறார்கள் என்பது நாம் நேரடியாகக் காணும் உண்மை. 

ஆளுனர் அன்று ‘கெஞ்சாது’ பேசிய விடயங்களை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

தொடரும்

https://marumoli.com/யாரிந்த-சுரேன்-ராகவன்-கெ/?fbclid=IwAR0yispCV_i68ddLSN4Xori2SMLGwCIXvLMtZT7rmyCsqWMWWsfEx8_-mL0

Link to comment
Share on other sites

யாரிந்த சுரேன் ராகவன் – பாகம் 2 | கெஞ்சாதே 09

கனடா மூர்த்தி

ஆளுனர் சுரேன் ராகவன் குறித்து பல விமர்சனங்கள் வருவதற்கு அவர் செய்கின்ற சேவைகள் குறித்து பலருக்கும் இருக்கும் உள்ளார்ந்த ஆர்வமே காரணம் என்று தான் நான் நினைக்கிறேன்.

MOORTHY-SUREN-2.jpg
கட்டுரை ஆசிரியருடன் கலாநிதி ராகவன்

இதன் முகப்புத்தகப் பதிவுக்குக்கூடப் பலரகமான பின்னூட்டங்கள்… ஒரு முகப்புத்தக நண்பர் “எங்களையும் இந்தக் கூட்டத்திற்கு அழைத்திருக்கலாமே” என்று வருந்தினார். (பதிலுக்கு நான் “நீங்கள் தொழில் முனைவரா?” என்று இடக்குமுடக்காகக்  கேட்டேன். ஆள் கடுப்பாகியிருக்கவேண்டும். “அப்ப நீங்க?” என்று Revenue Canada Agency Staff போல என்னை விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்.)

தமிழர் ஒருவர்தான் வட மாகாணத்திற்கு ஆளுனராக வரவேண்டும் என புலம்பியவர்கள் புலம்பெயர்ந்தோர்… அப்படி வந்தபின்னும் புலம்புவது என்ன வகையான டிசைன்? 

இன்னொரு நண்பருக்கு, கலாநிதி சுரேன் ராகவனை ‘ஒரு கல்விமான்’ என்று நாம் குறிப்பிடுவதில் ஏதோ வருத்தம் இருக்கிறது போலும். கல்விமான்களையே அவர் திட்ட ஆரம்பித்துவிட்டார். ஒரு கல்விமானைக் கல்விமான் என்று அழைப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது என்பது புரியவில்லை. இதற்கிடையே இன்னொரு நண்பர், “ஆளுனர் தனது அதிகாரத்தைப் பாவித்து சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்” என்று கருத்திட்டிருந்தார். அடடா..

“சுரேன் ஒரு கல்விமானாக நடந்து கொள்ளாமல், ஸ்ரீலங்கா அரசின் முகவராக நடந்து கொள்கிறார்” என்றார் இன்னொருவர். கிழிஞ்சுது போ.. ஸ்ரீலங்கா ஜனாதிபதி நியமிக்கும் ஆளுனர் வேறெப்படி நடக்க வேண்டும்? தமிழர் ஒருவர்தான் வட மாகாணத்திற்கு ஆளுனராக வரவேண்டும் என புலம்பியவர்கள் புலம்பெயர்ந்தோர்… அப்படி வந்தபின்னும் புலம்புவது என்ன வகையான டிசைன்?  ஒருவர் செய்யும் சேவைகளை – வேலைகளுக்கான  காரண காரியங்களை ஆழமாக ஆராயாமல் வைக்கப்படும் மேலோட்டமான புலம்பல் கருத்துக்களாகத்தான் பலவும் இருக்கின்றன.

DSC08040-1-e1572811995590.jpg
கலாநிதியை ரொறோண்டோவில் சந்தித்த ஆர்வலர் சிலர்

கூட்டத்தில் சுருக்கமாக ஆனால் விளக்கமாக பேசினார் கலாநிதி சுரேன் ராகவன். ஆளுனராக பணியாற்றிய இந்த எட்டு மாத காலத்தில் தன்னால் செய்ய முடிந்தவற்றை கவனமாகப் பட்டியில் இட்டார்.

இந்த இடத்தில் ஒரு கருத்து. ஆளுனர் என்ற பதவியும் அதிகாரமும் கிட்டியவரால் மற்றைய அரசியல்வாதிகளால் அல்லது எம்பிமார்களால் செய்ய முடியாத விடயங்களை செய்விக்க முடியும் என்பது உண்மை. அதுவும் பலருக்கு நம்மவரில் பலருக்கும் கடுப்பாக இருக்கலாம். ஆளுனர் தான் செய்ததாகச் சொன்ன பல விடயங்கள் எங்கள் எம்பிமார் அரசாங்கத்தைக் கேட்டிருந்தால் நடந்திருக்குமோ? சந்தேகம்தான்.

“நாமெல்லாம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பேரன்பு கொண்டவர்கள். எங்களைவிட கரிசனை கொண்டவர்கள் வேறு யாரும் கிடையாது” என்று நினைக்கும் ரகமன்றோ நாம்.. நம்மிடமே வட மாகாண ஆளுனர் போட்டாரே ஒரு போடு: “சொல்லுங்கோ.. வடமாகாணத்தின் சனத்தொகை எவ்வளவு?’ “இதில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வசிப்பவர்கள் எத்தனை பேர்?”

இப்படி வட மாகாண ஆளுனர் கேட்டபோது, யாரும் பதிலளிக்கவில்லை. சத்தியமாக அங்கிருந்த எங்களில் பலருக்கும் பதில் தெரியவில்லை. எனக்கும்தான். “இதுதானடாப்பா எங்கட தாயகம் குறித்த எங்கட அறிவு” என்று எனக்கு வெட்கமாக இருந்தது.. அதுசரி.. அங்கு வராதவர்களாக இருக்கும் உங்களுக்காவது தெரியுமா?

போலித்தனமில்லாத பேச்சாக இருந்தது அவரது பேச்சு. தனக்கு ஆளுனராக கிடைத்த வாய்ப்பு கடவுளின் செயல்தான் என்றார். நமது தமிழ்ச் சமூகத்தில் இருக்கும் பல ‘கள்ளங்களை’ (அரசியல்) வெளிப்படையாக விமர்சனத்திற்கு வைத்தார். தொழில் முனைவர்கள் ஈழநிலப் பகுதியில் தொழில்களை ஆரம்பிக்க தன்னால் செய்யப்பட்டிருக்கும் வசதிகளைப் புரிய வைத்தார். ஆளுனர் என்ற பதவியை வைத்து தன்னால் நிறைவேற்ற முடிந்த ஒரு சிலவற்றை சொன்னார்.

போலிஸ் படையில் தமிழர்கள் சேர்வதற்கு இருந்த தடைகளை தன்னால் எப்படி எடுக்க முடிந்தது பற்றியும் சொன்னார். தனது முன்மொழிவுகளுக்குப் பிறகு, இப்போதுதான் தமிழர்கள் போலிஸ் படையில் ஆர்வத்துடன் சேர்கிறார்கள் என்றார். “எங்கட தாயையும் தங்கச்சியையும் காப்பாத்திறதுக்கு வெளியில் இருந்து ஒருத்தனா வரவேண்டும்?” கேட்டாரே ஒரு கேள்வி. நம் மனச்சாட்சி உலுங்கியது.

இலங்கையில் வீதிப்போக்குவரத்து குற்றங்களுக்கு தரப்படும் குற்றப்பத்திரம் 1951இலிருந்து சிங்களத்தில் மட்டும்தான் இருக்குமாம். தானறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதமன்றோ.. இதை ஒரு பிரச்சனையாக எடுத்து, குற்றப்பத்திரமானது 3 மொழிகளிலும் இருக்குமாறு ஒரு ஆளுனராக அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டு, தரவைக்க தன்னால் முடிந்தது என்றார்.

இளமையில் தான் எதிர் கொண்ட சவால்களைச் சொன்னார். புலமைப்பரிசில் பெற்று லண்டன் சென்று படித்ததை… (இளமைக்காலத்தில் தான் பட்டினியோடு படிக்க சென்றதையும் தனது ஆசிரியர்கள்தான் அவரது பட்டினியை போக்க உணவு தந்தார்களாம். அதனால் வளர்ந்ததும் தானும் ஒரு ஆசிரியராகவேண்டும் என்று ஆசைப்பட்டாராம்.) தான் ஆளுனராகி பொதுவாழ்க்ககைக்கு வந்த கதையை சுவாரஸ்யமாகச் சொன்னார். இன்று 60,000 ரூபா சம்பளம் வாங்கும் ஆளுனரான தன்னைச் சுற்றி மொத்தமாக 6 லட்சம் ரூபா சம்பளம் வாங்கும் ஒரு அணி பாதுகாக்கிறது என்ற அபத்தத்தை சொல்லிச் சிரித்தார்.

சாதாரண பாமர மக்களுக்கு உதவுவதுதான் தன் கடமை என்பதை அடிக்கடி சொன்னார். “என்னைப்போல இன்னும் எத்தனையோ ராகவன்கள் அவர்களுள் இருப்பார்கள். அவர்கள் முன்னேற வேண்டும்.” “இலங்கையின் முதல் வருமானம் என்ன? தேயிலையா.. இல்லை.. வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம்தான் முதல் வருமானம். அது 7 பில்லியன் அமெரிக்கன் டொலர். அதில் 40 வீதம் வடமாகாணத்திற்கு வரும் பணம்.” என்றார்.

எமது தேசம் நான்கு இராணுவங்கள் நடந்து சென்று கண்ணீரும் இரத்தமும் இன்னும் தேங்கிக் கிடக்கிற ஒரு தேசமாக இருக்கிறது. நாங்கள் மீண்டு எழும்பவேண்டிய ஒரு தேசம்.. மீண்டும் எழும்பும் தேசம்

வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன்

அடுத்து நிதி, நீர், நிலம்… குறுகிய காலத்தில், தனது வழிகாட்டலில் கூட்டுறவு வங்கி முறை ஒன்றை வடமாகாணத்தில் வெற்றிகரமாக நடத்தி வருவதை விளக்கினார் (நிதி). வட மாகாணத்தில் ஏற்படப்போகும் தண்ணீர்ப் பற்றாக்குறையை அறவே தவிர்த்துவிட தன்னால் எடுக்கப்படும் திட்டங்களை விபரித்தார். (நீர்). இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை தனது நேரடித் தலையீட்டின் கீழ், வழிகாட்டலில் எப்படி விடுவித்திருக்கிறார்கள் என்பதை புள்ளிவிபரத்தோடு சொன்னார் (நிலம்). “நிதி நீர் நிலம்… இது போதாது… மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.” என்று சொன்னபோது வந்திருந்தவர்கள் தம்மையறியாது கரவொலி எழுப்பினர். விடுவிக்கப்பட்ட நிலங்கள், அதில் தன்னால் ஆற்றப்பட்ட பங்கு குறித்தும் சொன்னார். இது வெளியே தெரியாத விடயம். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த யதார்த்தமான ‘தெளிவு’ அவரிடம் இருந்தது.

அரசியல் பேசினார்தான். ஆனால் அது ஆன்மீக அரசியலாக இருந்தது. “எமது தேசம் நான்கு இராணுவங்கள் நடந்து சென்று கண்ணீரும் இரத்தமும் இன்னும் தேங்கிக் கிடக்கிற ஒரு தேசமாக இருக்கிறது. நாங்கள் மீண்டு எழும்பவேண்டிய ஒரு தேசம்.. மீண்டும் எழும்பும் தேசம்.” என்று சொல்லும்போது அவரது குரல் உடைந்தது. கண்ணீர்? அது அரசியல்வாதியின் போலிக் கண்ணீர் அல்ல.

ஒரு ஏழைத் தந்தையின் மகனாக வளர்ந்தவர் அவர். அவரிடம் பொய்மை இருக்காது என்றே நம்ப இடம் உண்டு. விருப்பு வெறுப்பற்றுப் பார்த்தால் குறுகிய காலத்தில் அவர் வடமாகாணத்திற்குச் செய்திருப்பது மிக அதிகம். உண்மையில் 13ம் சட்ட திருத்தம் என்ன செய்ய வேண்டும் என வரையப்பட்டதோ அவற்றைத்தான் இந்த ஆளுனர் தனக்குத் தரப்பட்ட வரையறைக்குள் நின்று வாய்ப்புக்களை வீணாக்காமல் செய்கிறார் என்றே நான் புரிந்து கொள்கிறேன்.

ஆளுனர் என்ற அதிகாரமும், அவரை ஆளுனராக நியமித்த ஜனாதிபதியின் ஆசீர்வாதமும் இருப்பதால் அவரால் இவற்றைச் செய்ய முடிகிறது என்று சொல்பவர்கள் நிச்சயம் இருப்பார்கள். அதுவும் உண்மைதான். ராஜிவ் காந்தியின் ஒப்பந்தம் என் மனதில் எழுப்பிய நேர்மறை அதிர்வலைகளுக்கு ஒத்த அதிர்வுகளை ராகவன் சுரேந்திரன் தனது திட்டங்களை விபரித்தபோது நான் உணர்ந்தேன். 

இதனாலேயே வடமாகாணத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி சுரேன் ராகவன்மீது பொறாமைக் காய்ச்சலில் நிச்சயம் இருப்பார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களான தம்மால் செய்ய முடியாத விடயங்களை இந்த ஆள் சும்மா சுலபமாகச் செய்கிறாரே என்ற பொறாமை நிச்சயம் அவர்களிடம் இருக்காமல் போகாது. அதாவது ஆளுனரின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் இல்லாமல் இருக்காது. டக்ளஸ் குழுவும் அவ்வாறே…

சிந்தித்துப் பார்த்தால் வட மாகாணத்தில் வாழும் 13 லட்சம் மக்கள் (1.3 மில்லியன் பேர்) அல்லது யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழும் 6 லட்சத்து நாற்பதினாயிரத்து (6,40,000) மக்களுக்கான ஆளுனர் அவர். எமது விமர்சனங்களுக்கான ஆள் அவரல்ல – நாம்தான்! இந்தக் காலகட்டத்தில் எமக்கான ஆளுனராயிருக்கப் பொருத்தமானவர் இவர்.

ஒருவேளை இவர் பதவிக்காலம் வடமாகாணத்தில் முடிந்ததும் வேறு மாகாணங்களுக்கு சேவையாற்ற அவரை அடுத்த ஜனாதிபதி பணித்துவிடலாம். அது வட மாகாணத்திற்கு ஒரு இழப்பு என்றே நான் அடித்துச் சொல்வேன். கலாநிதி சுரேன் ராகவன் ஒரு கல்விமான். படித்தவர். மும்மொழியிலும் புலமை இருக்கிறது, இனங்களின் வாழ்வியல் தெரிந்திருக்கிறது. குறிப்பாக தமிழில், தமிழர் வாழ்க்கையில், தமிழ் அடித்தள மக்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் இருக்கிறது. போர்க்குற்றம், கட்சி அரசியல், இயக்க அரசியல் சிக்கல்களுள் இல்லாதவர் அவர்.

ஒரு காலத்தில் இலங்கையின் ஜனாதிபதியாக வர மிகப் பொருத்தமானவர் கலாநிதி சுரேன் ராகவன்!

(தொடரும்.)

https://marumoli.com/யாரிந்த-சுரேன்-ராகவன்-பா/?fbclid=IwAR2Xt8ChwrG36TM9ST3A3WZ1_MBZPj5R2s4pMdCezVv_mOlCJJb0KZdXmrc

Link to comment
Share on other sites

முக்கியமான கட்டுரை. கலாநிதி ராகவன் வடமாகாணத்தில் பதவியேற்ற முதல் அரசியல் கட்சி சாராத ஆளுனர். ஒரு ஆளுனர் அரச நிர்வாகி மட்டுமே. அவர் அரசியல் தலைவரோ அமைச்சரோ இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு ஆளுனர் அதிகபட்சம் செய்யக்கூடியது மக்களின் சமூக பொருளாதார அரசியல் வெளிகளை கொஞ்சமாவது அகட்டுவதும் நிர்வாகம்பற்றி மக்களுக்கு இருக்கும் அச்சத்தை இடைவெளியை குறைப்பதும் மட்டுமே.  இந்த அளவு கோலின்படி பார்த்தால் இதற்க்குமுன் பதவிவகித்த ஆளுனர்கள் திருவாளர்கள் சந்திரசிறி, பாலிககார, ரெஜினோல்ட் குரே என்பவர்கள்  அகலிக்காத மக்களுக்கான “நல்லிணக்க வெளி” யை தற்போதய ஆளுனர் சுரேஸ் ராகவன் அகட்டி இருக்கிறார். இது போரில் நசிந்துகிடக்கும் நம் மக்களின்  அன்றாட வாழ்வில்   மிக முக்கியமான  அபிவிருத்தியாகும். இதுமட்டுமே ஒரு ஆளுனருக்கு சாத்தியமானது. ஏனையவை அரசியல் தலைமைகளின் பணிகளாகும்.

ஒரு நிர்வாகி என்கிற வகையில் திரு சுரேன் ராகவன் பாராட்டுக்குரியவர் - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.