ampanai

கோரிக்கைகளை ஏற்கும் வேட்பாளருக்கே 2ஆவது விருப்பு வாக்கை அளிப்போம் - ஹிஸ்புல்லா

Recommended Posts

தேர்தல் விஞ்ஞாபனத்திலுள்ள விடயங்களை ஏற்றுக்கொள்ளும் பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு எமது இரண்டாவது விருப்பு வாக்கை வழங்கப் போவதாக ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரும் முன்னாள் கிழக்கு ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். இது தொடர்பில் சிவில் சமூக குழுவினர் நேற்று முன்தினம் முதல் பிரதான வேட்பாளர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் வேட்பாளர்களின் முடிவை அறிவிக்க ஐந்து நாட்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின்

'நமது கனவு 'எனும் 8 பிரதான திட்டங்களைக் கொண்ட தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று முன்தினம் இலங்கை மன்றக்கல்லூரியில் வெ ளியிடப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த அவர், எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுயாட்சியையோ தனி பிராந்தியத்தையோ கோரவில்லை. மாறாக எமது உரிமைகளை பாதுகாத்துக்கொண்டு மார்க்கக் கடமைகளை சுதந்திரமாக மேற்கொண்டு வாழ இடமளிக்கவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்தேசிய ஒருமைப்பாடும் பாதுகாப்பும்,நிலையான அபிவிருத்திக்கான பொருளாதாரக் கட்டமைப்பு, முஸ்லிம் சமூக விவகாரங்களும் பைத்துல்மால் நிதியமும், அதியுயர்சபை, கல்வி,அரபுக் கல்லூரிகளுக்கான பொதுவான பாடத்திட்டம்,நமது உரிமைகள்,புராதன,பாரம்பரிய கலை,கலாசார பண்பாடுகள்,காணிப்பிரச்சினைகள், நிர்வாக அலகு, கலவரங்கள், வன்முறைகளளால் வாழ்வைத் தொலைத்த சகலருக்கும் புனர்வாழ்வு, போன்ற முக்கிய அம்சங்கள் அதில் உள்ளடங்கியுள்ளன.

35 வருடங்களாக நாம் நேரடியாக வாக்குகளை அளித்து இந்நாட்டின் ஜனாதிபதிகளை தெரிவுசெய்துள்ளோம். 1988 இல் ரணசிங்க பிரேமதாசவை ஜனாதிபதியாக்கவும் 1994 இல் சந்திரிக்கா குமாரதுங்கவை ஜனாதிபதியாக்கவும் மர்ஹூம் அஷ்ரப் நிபந்தனையுடன் ஆதரவளித்தார். அதன் பின்னர் நாங்கள் எந்த ஜனாதிபதிகளுக்கும் நிபந்தனைகளை விதிக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக அளுத்கமவில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் 2015 ஜனாதிபதி தேர்தலில் அவரை தோற்கடித்தனர். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்கள் எதிர்பார்த்த மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. இந்த ஆட்சியில் 340 சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இடம் பெற்றுள்ளன.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 97 தடவைகள் தேசிய புலனாய்வுத்துறை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அறிவித்தும் அவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.

ஷம்ஸ் பாஹிம்

https://www.thinakaran.lk/2019/10/30/உள்நாடு/42937/கோரிக்கைகளை-ஏற்கும்-வேட்பாளருக்கே-2ஆவது-விருப்பு-வாக்கை-அளிப்போம்

Share this post


Link to post
Share on other sites

 

ஹிஸ்புல்லாஹ்வின் ‘நமது கனவு’ தேர்தல் விஞ்ஞாபனம்

‘நமது கனவு’ தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு-Our Dream-MLAM Hizbullah Election Manifesto Launch

ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் ‘நமது கனவு’ எனும் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று (28) திங்கட்கிழமை கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் அதற்கான தீர்வுகள் குறித்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடு, பாதுகாப்பு, நிலையான அபிவிருத்திக்கான பொருளாதாரக் கட்டமைப்பு, முஸ்லிம் சமூக விவகாரங்கள், கல்வி, காணி - நிர்வாக பிரச்சினைகள் உள்ளிட்ட பல தலைப்புக்களில் சமூகப் பிரச்சினைகள் அதில் ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கெதிரான கலவரங்களை தடை செய்யவும், வெறுப்பூட்டும் பேச்சைத் தடைசெய்யவும் (Prevention of Riots Act & Prevention of Hate Speech Act) நாடாளுமன்றத்தில் சட்டங்களை நிறுவுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்கான ஆணைக்குழுவொன்றை அமைத்தல் மற்றும் சகல சமூகங்களையும் உள்ளடக்கி பிரதேச ரீதியில் சிவில் பொலிஸ் அமைப்பை உருவாக்கல் போன்ற தேசிய ஒருமைப்பாடு, பாதுகாப்பு விடய யோசனைகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மாவட்ட ரீதியில் விவசாய ஆராய்ச்சி பயிற்சி நிலையங்களை உருவாக்குவதுடன் முதலாவதாக அம்பாறை மாவட்டத்தில் அதனை நிறுவி விவசாயிகளுக்கு நவீன விவசாய தொழிற் பயிற்சிகளை வழங்குதல், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வசதி, தென்னை உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தென்னை பயிர்ச்செய்கை ஆராய்ச்சி அபிவிருத்தி மையங்களை உருவாக்குதல், நீர் வளங்களை மேம்படுத்துவதற்காக விசேட பொருளாதார செயற்குழுவை அமைத்தல், மீன்பிடித்துறையை முன்னேற்ற ஒலுவில், வாழைச்சேனை துறைமுகங்களை வலுவூட்டி, சர்வதேச முதலீட்டாளர்களின் உதவியுடன் குறித்த பிரதேச இளைஞர்களுக்கு கடல்சார் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தல், மன்னார் மற்றும் திருகோணமலையில் கடல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி வலயங்களை அமைத்தல், திருகோணமலை துறைமுகம் நவீன மயப்படுத்தப்பட்டு கப்பல் கட்டும் தொழில் உட்பட பாரிய தொழிற்சாலைகளை நிறுவி தொழில் வாய்ப்புக்களை உருவாக்கல் போன்ற யோசனைகள் நிலையான அபிவிருத்திக்கான பொருளாதார திட்டங்களாக முன்வைக்கப்பட்டுள்ளது.

 

முஸ்லிம் சமூக, விவகாரங்கள் தொடர்பான யோசனைகளில் அரசாங்கத்திற்கும், அமைச்சரவைக்கும் பொறுப்புக் கூறும் வகையில் சட்ட ரீதியாக முஸ்லிம் சமய அலுவல்கள் விவகார அமைச்சினையும், திணைக்களத்தினையும் மீளக்கட்டியெழுப்புதல், சமூக பிரச்சினைகள் - சவால்களுக்கு உடனடித் தீர்மானங்களை எடுக்கும் வகையில் சகல தரப்பினரையும் உள்ளடக்கிய அதியுயர் சபை மற்றும் பைத்துல்மால் நிதியம் சட்டரீதியாக முஸ்லிம் சமய கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் நிறுவுதல், பைத்துல்மால் நிதியத்தினூடாக மாணவ மாணவிகளுக்கு விசேட புலமைப்பரிசில் திட்டங்களையும், சுகாதார வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல், பெண் மகப்பேற்று வைத்திய நிபுணர்களை அதிகரிக்கச் செய்ய விசேட புலமைப்பரிசில் திட்டங்களை அறிமுகம் செய்தல், இலவச புனித உம்ரா பயண வசதிகள், பள்ளிவாசல்களில் பணி புரியும் உலமாக்கள், முஅத்தின்கள் மற்றும் ஊழியர்களுக்கு  உத்தரவாத நிர்ணய சம்பளம் வழங்குதல், வக்பு சொத்துக்களை பாதுகாக்க விசேட ஆணைக்குழு போன்றன குறிப்பிடப்பட்டுள்ளன.

கணிதம், விஞ்ஞானம், தொழிநுட்ப துறைகளில் மாணவர்கள் சித்தியடையும் வீதத்தை அதிகரிக்கவும், விஞ்ஞான, கணித துறைகளில் பல்கலைக்கழக பிரவேச வீதத்தை அதிகரிக்கவும் கல்வி வலயங்கள் தோறும் விசேட செயல்முறைகளை அறிமுகம்  செய்தல், கொழும்பு மற்றும் பிரதான நகரங்களில் உயர்தர பாடசாலைகள் அமைத்தல், சர்வதேச நர்டுகளின் ஒத்துழைப்போடு விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பாடசாலைகள் அமைத்தல், அரபுக் கல்லூரிகளுக்கான பொதுவான பாடத்திட்டம் மற்றும் தொழிற்பயிற்சி அதிகாரி சபையின் NVQ தராதர சான்றிதழை பெற்ற  பாடநெறிகளை அறிமுகப்படுத்தல், வீட்டுக்கு ஒரு பட்டதாரி போன்ற கல்விக்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், நூதனசாலைகள், நூலகங்களை நிறுவுவதன் மூலம் புராதன, பாரம்பரிய கலை, கலாசார விழுமியங்களை வரலாற்று ரீதியாக ஆவணப்படுத்தல் மற்றும் இதனை சாத்தியமாக்க இலங்கை பல்கலைக்கழகங்களில் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தினை நிறுவுதல், அம்பாறை மாவட்ட காணிப் பிரச்சினை உள்ளிட்ட காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக்கொள்ள திருத்தச்சட்ட ரீதியான ஆவணங்களை சமர்ப்பித்து மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் விசேட காணி மீட்பு ஆணைக்குழுவினை நிறுவுதல், கொழும்பு மாநகர் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேச மக்களின் குறைபாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சாய்ந்தமருது நகர சபை கோரிக்கை, கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை, கோரளைப்பற்று மத்தி பிரதேச சபை கோரிக்கை, தோப்பூர் பிரதேச செயலக கோரிக்கை, புத்தளம் அறுவக்காடு குப்பை கொட்டும் பிரச்சினை, கற்பிட்டி, அக்கரைப்பற்று (புத்தளம் மாவட்டம்) பிரதேச சபை கோரிக்கை மற்றும் குச்சவெளி, புல்மூட்டை காணிப் பிரச்சினைகள் உடனடியாக தீர்த்து வைக்கப்படும் அதேவேளை, இனக்கலவரங்களில் அழிக்கப்பட்ட பள்ளிவாசல்கள், சொத்துக்களுக்கு பூரண நட்டஈட்டினை பெற்றுத்தருவதாகவும், கோரளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச சபை எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட்டு நகர சபையாக தரமுயர்த்தல், வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை நவீன மயப்படுத்தி மீள திறக்கப்படுவதாகவும், நுரைச்சோலை வீட்டுத்திட்டம் உடனடியாக மக்களுக்கு வழங்குவதாகவும் வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ்வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

‘நமது கனவு’ எனும் மேற்படி தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள யோசனைகள் - திட்டங்களை கண்காணித்து நடைமுறைப்படுத்த கண்காணிக்கும் விசேட குழுவொன்றும் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(ஆர்.எஸ். மஹி)

‘நமது கனவு’ தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு-Our Dream-MLAM Hizbullah Election Manifesto Launch

https://www.thinakaran.lk/2019/10/29/உள்நாடு/42909/ஹிஸ்புல்லாஹ்வின்-‘நமது-கனவு’-தேர்தல்-விஞ்ஞாபனம்

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, ampanai said:

‘நமது கனவு’ தேர்தல் விஞ்ஞாபனம்

நமது கனவு "லங்காஸ்தான்" கத்தியின்றி ரத்தமின்றி ஜனநாயக வழியிலேயே இன்னும் 20,30 வருடங்களில் சாத்தியப்படும்..? 👍

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

2 ஆம் விருப்பு வாக்கு கோத்தாவுக்கு என கொஞ்ச நாளில் கூறுவார்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.