Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

RCS மெசேஜிங் சேவை


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

`SMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..!' - இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை

ஆப்பிளின் iMessage சேவைக்குப் போட்டியாக ஆண்ட்ராய்டு தரப்பில் பல வருடங்களாகத் தயாராகி வந்த மெசேஜிங் முறை RCS. டெலிகாம் நிறுவனங்கள் ஒத்துழைப்புக்காகக் காத்திருந்து காத்திருந்து ஒருவழியாக இந்தச் சேவையை மக்கள் உபயோகத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது கூகுள் நிறுவனம். தற்போதைக்கு டெலிகாம் நிறுவனங்கள் உதவியில்லாமல் மாற்றுவழியில் இந்தச் சேவையை இந்தியாவில் செயல்படுத்தியிருக்கிறது கூகுள்.

இப்போதைய SMS சேவைகள் பல வருடங்களுக்கு (1992) முன்பு அறிமுகப்படுத்தப்பட்டவை. தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ந்துவிட்டாலும் இது மட்டும் பெரிய அளவில் மாறவே இல்லை. அப்போது இருந்த அதே 160 கேரக்டர்கள்தான். அதே எழுத்து வடிவம்தான். போட்டோ, வீடியோ அனுப்பும் வண்ணம் வந்த MMS சேவையும் பெரியளவில் இன்று பயன்பாட்டில் இல்லை. இதற்குத்தான் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்கள் வந்துவிட்டனவே. சொல்லப்போனால் வங்கி, ஷாப்பிங் போன்ற வணிகரீதியான சேவைகளுக்கு மட்டும்தான் இந்த SMS சேவைகள் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதுவும் OTP-க்காகத்தான். இது SMS மூலம் வருமானம் பார்த்துவந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கே பெரிய அடி. இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக முன்மொழியப்பட்ட சேவைதான் RCS எனப்படும் Rich Communication Service. இதில் SMS போல எழுத்துகள் மட்டும் இருக்காது. படங்கள், வீடியோக்கள் ஷேர் செய்யலாம்; க்ரூப் சாட், எமோஜி, ஸ்டிக்கர்கள், QR கோடு என இன்னும் பல வசதிகள் இருக்கும். இவை அனைத்தும் உங்கள் மெசேஜ் ஆப்பிலேயே இருக்கும் இதற்கு டேட்டா சேவையைப் பயன்படுத்த வேண்டியதில்லை.

 

ஏற்கெனவே Allo, Hangouts என்று மெசேஜிங் தொடர்பான சேவைகளை அறிமுகப்படுத்தி தோல்வியைக் கண்ட கூகுள் பல தடைகளைக் கடந்து இந்த RCS சேவை இறுதியாகக் கொடுக்கத்தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதை enable செய்ய உங்கள் கூகுள் Messages ஆப்பின் Settings பகுதிக்குச் செல்லுங்கள் அதில் General பிரிவுக்குச் சென்று Chat Features சென்று Enable Chat Features என்ற ஆப்ஷனைத் தேர்வுசெய்யவும்.

தற்போது சில மொபைல்களில் மட்டும்தான் இதற்கான சப்போர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் இது அனைத்து ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.vikatan.com/technology/tech-news/finally-rcs-messaging-is-here-in-india

 

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33 ஆவது நினைவு தினம் இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33 ஆவது நினைவு தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பிரதி பணிப்பாளர், பிரதம கணக்காளர் தாதியர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என பலரும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இலங்கைக்கு அமைதிப் படையாக வந்த இந்திய இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்த வேளையில், கடந்த 1987ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, மேற்கொண்ட தாக்குதலில் 21 உத்தியோகத்தர்கள் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இந்திய-இராணுவத்தினரால்-2/
  • வணக்கம்... மௌனராகம். வந்த முதல் நாளே.... நல்லதொரு,  சோகமான கவிதையுடன் வந்துள்ளீர்கள். உங்களை... யாழ். களத்தில், அறிமுகப் படுத்திக்க கொண்டு,  நல்ல படைப்புக்களை தாருங்கள். 
  • தமிழகத்தில் இன்று புதிதாக 3,914 பேருக்குக் கரோனா; சென்னையில் 1,036 பேர் பாதிப்பு: 4,929 பேர் குணமடைந்தனர் தமிழகத்தில் கரோனா பாதிப்பின் இன்றைய நிலவரம்   சென்னை தமிழகத்தில் இன்று புதிதாக 3,914 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 87 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று (அக். 18) வெளியிட்டுள்ள விவரங்கள்: "தமிழகத்தில் இன்று புதிதாக 3,914 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 2,319 பேர். பெண்கள் 1,595 பேர். இதனால், பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 87 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 4 லட்சத்து 15 ஆயிரத்து 121 பேர். பெண்கள் 2 லட்சத்து 72 ஆயிரத்து 247 பேர். மாற்றுப்பாலினத்தவர்கள் 32 பேர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 25 ஆயிரத்து 67 பேர். 13-60 வயதுடையவர்கள் 5 லட்சத்து 76 ஆயிரத்து 333 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 86 ஆயிரம் பேர். இன்று 90 ஆயிரத்து 286 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 89 லட்சத்து 46 ஆயிரத்து 566 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று 88 ஆயிரத்து 643 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 86 லட்சத்து 96 ஆயிரத்து 455 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று தனியார் மருத்துவமனைகளில் 29 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 27 பேர் என 56 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 642 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய் அல்லாதவர்கள் ஒருவர். இணை நோய் உள்ளவர்கள் 55 பேர். இன்று மட்டும் 4,929 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 37 ஆயிரத்து 637 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 39 ஆயிரத்து 121 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் அரசு சார்பாக 66 மற்றும் தனியார் சார்பாக 126 என, 192 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. சென்னை நிலவரம் இன்று கரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,036 பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 89 ஆயிரத்து 995 ஆக உயர்ந்துள்ளது. இன்று, 1,359 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 73 ஆயிரத்து 892 ஆக அதிகரித்துள்ளது. இன்று 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,520 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 12 ஆயிரத்து 583 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்". இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. https://www.hindutamil.in/news/tamilnadu/592376-3-914-persons-tested-positive-for-corona-virus-in-tamilnadu-today-3.html
  • பொதுச் சுகாதார அவசர சட்டம் தனிநபர் வரைவு; பாராளுமன்றில் நேற்று சமர்ப்பித்தார் சுமந்திரன் Bharati October 21, 2020பொதுச் சுகாதார அவசர சட்டம் தனிநபர் வரைவு; பாராளுமன்றில் நேற்று சமர்ப்பித்தார் சுமந்திரன்2020-10-21T06:48:54+05:30 FacebookTwitterMore பொதுச் சுகாதார அவசர சட்டம் இயற்ற தனிநபர் சட்ட வரைவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் சமர்ப்பித்துள்ளார். இந்த சட்ட வரைவில் பொதுச் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்படுவதற்கும் பொதுச் சுகாதார அவசர சபை அமைப்பதற்குமான ஏற்பாடுகள் காணப்படுகின்றன. பொதுச் சுகாதார அவசரகால நிலையின் இருப்பு அல்லது உடனடித் தன்மையைக் கருத்தில் கொண்டு, பொதுச் சுகாதார நலன்களுக்காக அதைச் செய்வது மிகவும் பயனுள்ளது. கொரோனா தொற்றுநோய் உலகம் முழுவதும் தொடர்ந்து பரவி வரும் நிலையில் நாட்டில் எதிர்காலத்தில் அதை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை சட்டபூர்வமாக வழங்குவது பயனுள்ளது என்று அதில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் ஒரு பொதுச் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டால், பொதுச் சுகாதார அவசர நிலைப் பேரவை என்று அழைக்கப்படும் ஓர் அமைப்பை உருவாக்க முன்மொழிவும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சுகாதார, சமூக நலன் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல அமைச்சுக்களைப் பொறுப்பானதாக் கொண்டிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பொதுச் சுகாதார அவசரகால சட்டத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் எழுத்துபூர்வ ஆலோசனையின் பேரில் அமைச்சரால் அடிப்படை உரிமைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கான ஏற்பாடுகளும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/81604
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.