• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

புளியமரத்து அடியிலே, புஷ்பலதா மடியிலே.... தங்கதுரையின் தற்கொலை ஜோக் புக் வெளியீடு.

Recommended Posts

Thangadurai’s Tharkolai Jokes Book released at Singapore

புளியமரத்து அடியிலே, புஷ்பலதா மடியிலே.... தங்கதுரையின் தற்கொலை ஜோக் புக் வெளியீடு.

கலக்கப்போவது யாரு புகழ் புளியந்தோப்பு தங்கதுரை தன்னுடைய ஜோக்குகளை தொகுத்து தங்கதுரையின் தற்கொலை ஜோக்குகள் என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிட்டுள்ளார் தங்கதுரை. பொதுவாக கவிஞர்கள், எழுத்தாளர்கள் புத்தகம் வெளியிடுவார்கள் அவர்களுக்கு மத்தியில் தங்கதுரை நகைச்சுவை புத்தகம் வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரிய விஷயம் ஆகும்.

புளிய மரத்து அடியிலே, புஷ்பலதா மடியிலே என்ற ஒரு அர்த்தம் புரியாத ஜோக்கை சொல்லி வேற லெவலில் ரீச் ஆன காமெடி நடிகர் யார் தெரியுமா. விஜய் டி.வியின் கலக்கப்போவது யாரு ஷோவின், முதல் சீசன் மூலம் சின்னத் திரைக்கு அறிமுகமாகி இன்று வாழ்க்கையில் எல்லாமே தலைகீழாக மாறிய டைகர் கார்டன் தங்கதுரை தான் அது.

இவர் சென்னை வாசி, அதுவும் வடசென்னை வாசி என்பதால் கானா பாடல்கள் பாடுவதிலும், ஸ்டாண்டப் காமெடி செய்வதிலும் திறமையானவர். அதிலும் இவரும் கிரியும் சேர்ந்து கொண்டு, காந்திமதி, சிவகுமார், வீராசாமி, நவரச நாயகன் கார்த்திக் ஆகியோரின் குரலில் மிமிக்ரி செய்வதற்கு பாடம் நடத்தும் காமெடி காட்சிகளை இன்றைக்கும் பார்த்தால் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும்.

விஸ்வாசம்னா தூக்குதுரை காமெடினா தங்கதுரை என எதுகை மோனை காமெடி மூலம் அதிகம் பிரபலமானவர் தங்கதுரை. சின்னத் திரையில் அவருக்கு கிடைத்த வரவேற்பு வெள்ளித் திரையிலும் கிடைத்தது. இவர் சொல்லிய புளியமரத்து அடியிலே புஷ்பலதா மடியிலே என்ற காமெடி ஐடி கம்பெனி முதல் நைட்டி கம்பெனி வரை இளைஞர்களிடம் பரவி இன்று பட்டி தொட்டி எங்கும் வேடிக்கையாக சொல்வது வாடிக்கையாகிவிட்டது.

எதுகை மோனையில் வசனம் பேசி நம்மை கலக்குபவர் T.R. அவரின் ஸ்டைலில் காமெடி செய்து மக்களின் பேராதரவை பெற்றவர் தங்கதுரை. விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமாகி இன்று வெள்ளி திரையில் வெற்றி நடை போட்டு வரும் சந்தானம், சிவகார்த்திகேயன் போன்றவர்களின் திரைப்படங்களில் ஏற்கனவே தங்கதுரை நடித்துவிட்டார்.

விஜய் டிவியில் எந்த ஒரு காமெடி ஷோ என்றாலும் அதில் தங்கதுரை நிச்சயம் ஆஜராவார். இவர் சொல்லிய ஜோக்குகள், எதுகை மோனை காமெடிகள் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாக வந்து பிரபலமடைந்தன. அதுமட்டுமில்லாமல் இவருடைய ஜோக்குகள் காமெடி பஞ்ச்கள் டிக்டாக்கில் இன்றும் பல மில்லியன் மக்களால் நடிக்கப்பட்டு ரசிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

சிலர் ஜோக் சொன்னால் வெறுப்பு ஏற்படும். ஆனால் இவர் ஜோக் சொன்னால் சிரிப்பு ஏற்படும். இவர் ஜோக் சொல்லும் விதம், உடல்மொழி ரசிக்கும்படியாக இருக்கும் என்று நீயா நானா கோபிநாத் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். ஆதி காலத்து ஜோக்குகளையும் இந்த காலத்து மக்களுக்கு ஏற்றார்போல் சொல்வதில் இவர் வல்லவர். இதனால் இவரை நிகழ்ச்சியில் பழைய ஜோக் தங்கதுரை என்று அழைப்பார்கள்.

தங்கதுரையின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அவரது தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் தான். கானா பாடல் பாடி வந்த இவர் தனக்குள் இருக்கும் திறமையை அறிந்து, அதை மேலும் வளர்த்துக் கொண்டு தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள தங்கதுரை மற்ற இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம். இந்த ஆண்டுக்கான விஜய் டிவியின் சிறந்த காமெடியன் விருதையும் பெற்றுள்ளார் தங்கதுரை

Thangadurai’s Tharkolai Jokes Book released at Singapore

இவர் தன்னுடைய ஜோக்குகளை தொகுத்து தங்கதுரையின் 'தற்கொலை ஜோக்குகள்' என்ற புத்தகமாக சிங்கப்பூரில் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தை நடிகை வாணிபோஜன் வெளியிட்டார். பொதுவாக கவிஞர்கள், எழுத்தாளர்கள் புத்தகம் வெளியிடுவார்கள் அவர்களுக்கு மத்தியில் தங்கதுரை நகைச்சுவை புத்தகம் வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரிய விஷயம் ஆகும்.

இந்த புத்தகத்தை வெளியிட்டு பேசிய தங்கதுரை, இதனை படித்தால் தற்கொலை பண்ற எண்ணமே தோன்றாது ஏனென்றால் புத்தகத்தை எழுதிய நானே உயிரோடு இருக்கும்போது நம்ம ஏன் சாகணும் என்று தோணும் என்று நகைச்சுவையாக கூறியுள்ளார். கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடலுக்கு செல்லும் மீனவர்கள் என அனைவரும் படிக்கும் வகையில் எளியமுறையில் புத்தகத்தை எழுதியுள்ளார் தங்கத்துரை இந்த புத்தகம் தமிழ் மட்டும் தங்கிலீஷில் அச்சடிக்கப்பட்டு உள்ளது

சமீபத்தில் வெளிவந்த A1, ஜாக்பாட், ஜீவி, அண்ணனுக்கு ஜே , பப்பி ஆகிய படங்களில் காமெடியனாக நடித்துள்ளார் தங்கதுரை. தற்போது யோகி பாபுவுடன் பன்னிகுட்டி, பார்ட்னர், டிக்கிலோனா மற்றும் ரியோ, ஜிவி பிரகாஷ் படங்களில் நடித்து வருகிறார்.

நகைச்சுவை என்பது அவ்வளவு எளிதான ஒரு கலை அல்ல. ஒருவரை எளிதில் அழவைக்க முடியும். ஆனால் சிரிக்க வைப்பது என்பது மிகவும் கடினமானது. ஒருவர் முகத்தில் இருக்கும் இறுக்கத்தையும், மனதில் இருக்கும் கவலையையும் மறக்கடித்து அவர்களின் மனதை இளகவைக்கும் நகைச்சுவை நடிகர்கள் என்றும் போற்றப்பட வேண்டும். அந்த வரிசையில் டைகர் கார்டன் தங்கதுரையும் இணைந்ததற்கு வாழ்த்துக்கள், சினிமா இயக்குநர்கள் தங்கத்துரையின் நகைச்சுவையை பயன்படுத்திக்கொண்டால் சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்த நகைச்சுவை நடிகர்களில் முக்கிய இடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: https://tamil.filmibeat.com/news/thangadurai-s-tharkolai-jokes-book-released-at-singapore-064495.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-News

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this