Jump to content

கொழும்பு துறைமுக நகர காணி உறுதிப் பத்திரம் சீனாவிடம் கையளிப்பு

Recommended Posts

கொழும்பு துறைமுக நகர காணி உறுதிப் பத்திரம் சீனாவிடம் கையளிப்பு

port-city-1-300x200.jpg

கொழும்பு துறைமுக நகரததின் திருத்தப்பட்ட காணி உறுதிப் பத்திரம், நேற்று சீன நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், இந்தப் பத்திரம் சீன நிறுவன அதிகாரிகளிடம்  சீனத் தூதுவர் செங் ஷியுவான் மற்றும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில்,  ஒப்படைக்கப்பட்டது.

முதலில் இந்த காணி, நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதையடுத்து, சீனாவின்  CHEC போர்ட் சிற்றி கொழும்பு நிறுவனத்துக்கு, குத்தகை உடன்பாட்டின் கீழ், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ளது.

பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலர் நிகால் ரூபசிங்க முதலில் இந்த ஆவணத்தை, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் ரத்நாயக்கவிடம் கையளித்தார்.

அதையடுத்து, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் ரத்நாயக்க, குத்தகை உடன்பாட்டு ஆவணத்தை CHEC போர்ட் சிற்றி கொழும்பு நிறுவனத்தின் முகாமைப் பணிப்பாளர் ஜியாங் ஹோலியாங்கிடம் ஒப்படைத்தார்.

http://www.puthinappalakai.net/2019/10/30/news/40880

Link to comment
Share on other sites

6 minutes ago, Gowin said:

இதில ஒரு தீவும் அடங்கியுள்ளது.

இந்தியாவுக்கு பெப்பே!

அமெரிக்கனுக்கும் பெப்பே 

Link to comment
Share on other sites

1 minute ago, Maharajah said:

அமெரிக்கனுக்கும் பெப்பே 

சீனாக்காரன் கொழும்பு துறைமுக போக்குவரத்தை தனது கட்டுக்குப்பாட்டுக்குள்ள வைச்சிருப்பான்.

இந்தியாக்காரன் பலாலில ஹெலியை இறக்கி ஏத்தி விளையாடலாம்.

Link to comment
Share on other sites

எங்கள் இனத்தை காவு கொடுத்ததட்குரிய பலனை இந்தியா அனுபவிக்கத்தானே வேண்டும்.  அதை நான் இறப்பதற்கு முன்னர் பார்க்க வேண்டும்.  இதுதான் என்னுடைய ஒரே ஒரு அவா. 

Link to comment
Share on other sites

5 hours ago, Gowin said:

இந்தியாவுக்கு பெப்பே!

5 hours ago, Maharajah said:

அமெரிக்கனுக்கும் பெப்பே 

16 செப்டெம்பர் 2014  செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையிலேயே சீனாவின் CHEC Port City Colombo நிறுவனத்துக்கு கொழும்பு துறைமுக நகரத்தின் 20 ஹெக்டேயரை உரித்தாகவும் மிகுதியை 99 வருட கால குத்தகைக்கு கொடுப்பதாகவும் உள்ளது.

பின் 2016 இல் மைத்திரி அரசு உடன்படிக்கையில் சில திருத்தங்களை மேற்கொள்ள நினைத்து உரித்தாக கொடுப்பதை நீக்கி முழுவதையும் 99 வருட குத்தகைக்கு கொடுப்பதாகவும், இன்னும் சில மாற்றங்களையும் பரிந்துரை செய்தது.

இப்பொழுது மேலும் திருத்தியமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது. இது புதிய விடயம் அல்ல. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் ஏற்கனவே தெரிந்த விடயம்.

இப்போதைய செய்தி சற்று விளக்கமாக,

According to the agreement reached between the Sri Lankan Government and CHEC Port City Colombo, all 269 hectares of reclaimed land will be owned by the Sri Lankan Government, with 91 acres for public use, 62 acres of commercial use, and 116 acres to be leased by the UDA to CHEC Port City Colombo, on a 99 year lease for further development.

Link to comment
Share on other sites

7 hours ago, nunavilan said:

கொழும்பு துறைமுக நகரததின் திருத்தப்பட்ட காணி உறுதிப் பத்திரம், நேற்று சீன நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழர்களின் பூர்வீக காணியை மட்டும் கொடுக்கமாட்டொம்   😄

Link to comment
Share on other sites

5 hours ago, Gowin said:

சீனாக்காரன் கொழும்பு துறைமுக போக்குவரத்தை தனது கட்டுக்குப்பாட்டுக்குள்ள வைச்சிருப்பான்.

இந்தியாக்காரன் பலாலில ஹெலியை இறக்கி ஏத்தி விளையாடலாம்.

இத்தலைப்பில் உள்ளது கொழும்பு துறைமுக நகரம் பற்றியது.

கொழும்பு துறைமுக அபிவிருத்தி என்பது வேறு. அதையும் சீனா தான் ஆரம்பித்தது. இவ்வருடம் அதில் இந்தியா, ஜப்பான், இலங்கை இணைந்து ஒரு கொள்கலன் முனைய அபிவிருத்தியை செய்ய ஒப்பந்தம் போட்டுக்கொண்டன.

இலங்கையின் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கும் சென்று வருவதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே அமெரிக்காவிடம் உள்ளது. SOFA இல் கையெழுத்து போட்டு விட்டால் இலங்கையின் எப்பகுதிக்கும் எந்நேரமும் அமெரிக்க இராணுவம் வந்து போகலாம்.

இந்தியா பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம், திருகோணமலை துறைமுகம், மத்தல விமான நிலையம் (அதை அவர்களுக்கு குத்தகைக்கு வழங்கவுள்ளதாக கதை) என பலவற்றை அமெரிக்கா, ஜப்பானுடன் இணைந்து பயன்படுத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி கொழும்பு துறைமுக வாசலில் சீன மொழியில் அறிவிப்பு பலகை இருக்கும் விமல் வீர வன்ச என்கிற இனவாத மதன முத்தா என்ன செய்கிறார் என்று பார்ப்பம் .

Link to comment
Share on other sites

39 minutes ago, Lara said:

இத்தலைப்பில் உள்ளது கொழும்பு துறைமுக நகரம் பற்றியது.

கொழும்பு துறைமுக அபிவிருத்தி என்பது வேறு. அதையும் சீனா தான் ஆரம்பித்தது. இவ்வருடம் அதில் இந்தியா, ஜப்பான், இலங்கை இணைந்து ஒரு கொள்கலன் முனைய அபிவிருத்தியை செய்ய ஒப்பந்தம் போட்டுக்கொண்டன.

இலங்கையின் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கும் சென்று வருவதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே அமெரிக்காவிடம் உள்ளது. SOFA இல் கையெழுத்து போட்டு விட்டால் இலங்கையின் எப்பகுதிக்கும் எந்நேரமும் அமெரிக்க இராணுவம் வந்து போகலாம்.

இந்தியா பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம், திருகோணமலை துறைமுகம், மத்தல விமான நிலையம் (அதை அவர்களுக்கு குத்தகைக்கு வழங்கவுள்ளதாக கதை) என பலவற்றை அமெரிக்கா, ஜப்பானுடன் இணைந்து பயன்படுத்தும்.

எவர் எதனை கூறினாலும்,  சீனன் இலங்கைக்குள் வந்துவிட்டான்.  இனி இந்தியாவின் நிலை திரிசங்கு சொர்க்கmதான் .  இது நீண்டகால நோக்கில் இந்தியாவிற்கு பலத்த இழப்பே.  இதனை யாரால் மறுக்க முடியும்  ? 

Link to comment
Share on other sites

8 minutes ago, Maharajah said:

எவர் எதனை கூறினாலும்,  சீனன் இலங்கைக்குள் வந்துவிட்டான்.  இனி இந்தியாவின் நிலை திரிசங்கு சொர்க்கmதான் .  இது நீண்டகால நோக்கில் இந்தியாவிற்கு பலத்த இழப்பே.  இதனை யாரால் மறுக்க முடியும்  ? 

மாலை தீவில் இருந்து சீனர்களை இந்தியா வெற்றிகரமாக வெளியேற்றியது.
இலங்கையிலும் முடியும், காலம் கடந்து இன்னும் போகவில்லை. 

Link to comment
Share on other sites

4 minutes ago, ampanai said:

மாலை தீவில் இருந்து சீனர்களை இந்தியா வெற்றிகரமாக வெளியேற்றியது.
இலங்கையிலும் முடியும், காலம் கடந்து இன்னும் போகவில்லை. 

மாலைதீவை சிங்களவர் ஆளவில்லையே.  அதுசரி இலங்கையிலிருந்து சீனாவை எப்படி வெளியேறட்ருவதாம். எங்களை மீண்டும் ஆயுதம் தூக்கவைத்தோ  ?????  (தயவு செய்து என்னுடைய கனவில் மண் அள்ளிப்போடவேண்டாம் )😃😃😃

Link to comment
Share on other sites

19 minutes ago, Maharajah said:

அதுசரி இலங்கையிலிருந்து சீனாவை எப்படி வெளியேறட்ருவதாம்

https://economictimes.indiatimes.com/news/international/world-news/china-maldives-clash-over-mounting-chinese-debt-as-india-warms-up-to-male/articleshow/70127479.cms

Link to comment
Share on other sites

4 hours ago, ampanai said:

கடந்த  20 - 30 வருடங்களில் ஏற்பட்ட மார்ரங்களைத்தான் பார்க்கவேண்டும்.  ஏற்கனவே இந்தியா சுற்றிவளைக்கப்பட்டுள்ளதை கவனத்திற் கொள்ளவேண்டும். 

Link to comment
Share on other sites

11 hours ago, Maharajah said:

எவர் எதனை கூறினாலும்,  சீனன் இலங்கைக்குள் வந்துவிட்டான்.  இனி இந்தியாவின் நிலை திரிசங்கு சொர்க்கmதான் .  இது நீண்டகால நோக்கில் இந்தியாவிற்கு பலத்த இழப்பே.  இதனை யாரால் மறுக்க முடியும்  ? 

சீனா இலங்கைக்குள் வந்தது இந்தியாவுக்கு பலத்த இழப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால் அமெரிக்கா இன்னொரு பக்கத்தால் ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையை கைவசப்படுத்துகிறது. இந்தியா அமெரிக்கா பக்கம் என்பதால் இந்தியாவை தனித்து பார்க்க தேவையில்லை என்பது என் கருத்து.

Link to comment
Share on other sites

United States Pacific Command (USPACOM) என்பதை கூட அமெரிக்கா 30 May 2018 அன்று United States Indo-Pacific Command (USINDOPACOM) என பெயர் மாற்றம் செய்திருந்தது.

In symbolic nod to India, U.S. Pacific Command changes name

30 May 2018

The U.S. military on Wednesday renamed its Pacific Command the U.S. Indo-Pacific Command, in a largely symbolic move underscoring the growing importance of India to the Pentagon, U.S. officials said.

U.S. Pacific Command, which is responsible for all U.S. military activity in the greater Pacific region, has about 375,000 civilian and military personnel assigned to its area of responsibility, which includes India.

“Relationships with our Pacific and Indian Ocean allies and partners have proven critical to maintaining regional stability," U.S. Defense Secretary Jim Mattis said in prepared remarks.

"In recognition of the increasing connectivity between the Indian and Pacific Oceans, today we rename the U.S. Pacific Command to U.S. Indo-Pacific Command," Mattis said.

He was speaking during a change of command ceremony. Admiral Philip Davidson was assuming leadership of the command from Admiral Harry Harris, who is President Donald Trump's nominee to be ambassador to South Korea.

The renaming does not mean additional assets will be sent to the region at this time, but rather recognizes India's increasing military relevance for the United States.

In 2016, the United States and India signed an agreement governing the use of each other's land, air and naval bases for repair and resupply, a step toward building defense ties as they seek to counter the growing maritime assertiveness of China.

Speaking in Beijing, Chinese Defense Ministry spokesman Ren Guoqiang said they had noted the name change.

“We will continue to pay attention to developments," he told a regular monthly news briefing.

The United States is also keen to tap into India's large defense market. It has emerged as India's No. 2 weapons supplier, closing $15 billion worth of deals over the last decade.

https://www.reuters.com/article/us-usa-defense-india/in-symbolic-nod-to-india-us-pacific-command-changes-name-idUSKCN1IV2Q2

Link to comment
Share on other sites

4 hours ago, Lara said:

சீனா இலங்கைக்குள் வந்தது இந்தியாவுக்கு பலத்த இழப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால் அமெரிக்கா இன்னொரு பக்கத்தால் ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையை கைவசப்படுத்துகிறது. இந்தியா அமெரிக்கா பக்கம் என்பதால் இந்தியாவை தனித்து பார்க்க தேவையில்லை என்பது என் கருத்து.

இந்தியா அமெரிக்கனுடைய பக்கம் என்று 100 % அறுதியிட்டு கூறமுடியாது. S400,  ஈரானிய எண்ணைய்,  ரஷ்ய ஆயுத தளபாட விடயத்தில் அமெரிக்கா முரண்படுவதை பாருங்கள்.  எதிருக்கெதிரி நண்பன் இதுதான் தற்போதைய நிலை.  பலம் பொருந்திய  உறுதியான இந்தியாவை யாரேனும்  விற்றும்புமா?  சுதந்திர இந்தியாவின் வரலாறும் நோக்கப்பட வேண்டும்.  தனித் தனி சம்பவங்களை நோக்குதல் சரியானதாகப்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SOFA அல்லது VFA இல் கையெழுத்து போடுவதை தீர்மானிப்பது சீனா.

யாரவது தான்  கட்டிய துறைமுகங்களை, அதுவும் பல்வேறு கண்டனங்கள் மற்றும் கடன்பொறி என்ற குற்றச்சாட்டுக்கு முகம் கொடுத்து கட்டியதை, அப்படி கண்டித்தவர்கள் மற்றும் குற்றம் சாட்டியவர்கள் பாவிக்க விடுவார்களா?    

 முன்பு அமெரிக்காவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்களில், ACSA இன் வலு என்பது, நடைமுறையில் உள்ளது  ஆயினும், ஆகக் குறைந்தது நீதி மன்றத்தில்  சவாலுக்கு உட்படுத்தப்படலாம், ஏனெனில் அதனை ஒப்பமிட்டவர், கோத்த, மகிந்த அல்ல, அதாவது excecutive அதிகாரமில்லாதவர்.

1995/1996 இல் செயப்பட்ட ACSA போன்ற ஒப்பந்தம், முழமையாக காலாவதியாகிவிட்டது, அதை us ம் ஏற்றுவிட்டது, 2007 acsa  ஒப்பந்தம் மூலமாக. 

Link to comment
Share on other sites

17 hours ago, Lara said:

இத்தலைப்பில் உள்ளது கொழும்பு துறைமுக நகரம் பற்றியது.

கொழும்பு துறைமுகம் கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து 1000 km க்கு அப்பால் இருக்கு என்று சொல்லவாறீக என்று விளங்குது.

Link to comment
Share on other sites

1 hour ago, Maharajah said:

இந்தியா அமெரிக்கனுடைய பக்கம் என்று 100 % அறுதியிட்டு கூறமுடியாது. S400,  ஈரானிய எண்ணைய்,  ரஷ்ய ஆயுத தளபாட விடயத்தில் அமெரிக்கா முரண்படுவதை பாருங்கள்.  எதிருக்கெதிரி நண்பன் இதுதான் தற்போதைய நிலை.  பலம் பொருந்திய  உறுதியான இந்தியாவை யாரேனும்  விற்றும்புமா?  சுதந்திர இந்தியாவின் வரலாறும் நோக்கப்பட வேண்டும்.  தனித் தனி சம்பவங்களை நோக்குதல் சரியானதாகப்படவில்லை.

சீனாவுக்கு எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்படுகின்றன என கூறினால் நீங்கள் இந்தியா ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்குவதையும் ஈரானிய எண்ணெய் விடயத்தையும் கதைக்கிறீர்கள். 😀

இந்தியா ஒரு காலத்தில் USSR இன் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. 1991 ராஜீவ் காந்தி கொலையின் பின் இந்தியா, இஸ்ரேல் அமெரிக்க ஆதரவு நாடாக மாறியது. அதற்காக ரஷ்யாவுடனான தொடர்பை துண்டித்து விடப்போவதில்லை. இன்றும் ரஷ்யாவிடம் ஆயுதங்களை வாங்கிக்கொண்டுள்ளது.

ட்ரம்ப் வெளிக்கு சும்மா ரஷ்யாவுக்கு எதிராக கதைப்பவர். உண்மையில் புடினின் நண்பர்.

26 minutes ago, Kadancha said:

SOFA அல்லது VFA இல் கையெழுத்து போடுவதை தீர்மானிப்பது சீனா.

யாரவது தான்  கட்டிய துறைமுகங்களை, அதுவும் பல்வேறு கண்டனங்கள் மற்றும் கடன்பொறி என்ற குற்றச்சாட்டுக்கு முகம் கொடுத்து கட்டியதை, அப்படி கண்டித்தவர்கள் மற்றும் குற்றம் சாட்டியவர்கள் பாவிக்க விடுவார்களா?    

ACSA உடன்படிக்கையின் படி அமெரிக்கா இலங்கையின் அனைத்து விமான நிலையங்கள் துறைமுகங்களுக்கும் செல்ல முடியும்.

Link to comment
Share on other sites

1 hour ago, Kadancha said:

முன்பு அமெரிக்காவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்களில், ACSA இன் வலு என்பது, நடைமுறையில் உள்ளது  ஆயினும், ஆகக் குறைந்தது நீதி மன்றத்தில்  சவாலுக்கு உட்படுத்தப்படலாம், ஏனெனில் அதனை ஒப்பமிட்டவர், கோத்த, மகிந்த அல்ல, அதாவது excecutive அதிகாரமில்லாதவர்.

1995/1996 இல் செயப்பட்ட ACSA போன்ற ஒப்பந்தம், முழமையாக காலாவதியாகிவிட்டது, அதை us ம் ஏற்றுவிட்டது, 2007 acsa  ஒப்பந்தம் மூலமாக. 

1995 இல் செய்யப்பட்ட ஒப்பந்தம் ACSA அல்ல SOFA.

2007 இல் ACSA இல் கையொப்பமிட்டது கோத்தபாய ராஜபக்சவும் ரொபேட் ஓ பிளேக்கும். 2017 இல் அது காலாவதியானதும் அதை நீட்டித்து புதுப்பித்தார்கள். புதிய உடன்படிக்கையில் மைத்திரி கையெழுத்திட்டவர் என நினைக்கிறேன்.

1995 SOFA பழைய உடன்படிக்கை என்பதால் இப்பொழுது புதிய SOFA இல் மேலும் பல விடயங்களை உள்ளடக்கியுள்ளார்கள். எப்படியும் இலங்கை SOFA ஐ ஒப்புக்கொள்ளும். 28 ஓகஸ்ட் 2018 இலிருந்து SOFA இலுள்ள சில விடயங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

1 hour ago, Gowin said:

கொழும்பு துறைமுகம் கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து 1000 km க்கு அப்பால் இருக்கு என்று சொல்லவாறீக என்று விளங்குது.

நக்கல்... 😀

கொழும்பு துறைமுக நகரம் குத்தகைக்கு கொடுக்கப்பட்ட செய்தி தான் இது என கூற வந்தேன். 🙂

Link to comment
Share on other sites

6 minutes ago, Lara said:

கொழும்பு துறைமுக நகரம் குத்தகைக்கு கொடுக்கப்பட்ட செய்தி தான் இது என கூற வந்தேன். 🙂

விளக்கத்துக்கு நன்றி! 😀

Link to comment
Share on other sites

38 minutes ago, Lara said:

சீனாவுக்கு எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்படுகின்றன என கூறினால் நீங்கள் இந்தியா ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்குவதையும் ஈரானிய எண்ணெய் விடயத்தையும் கதைக்கிறீர்கள். 😀

இந்தியா ஒரு காலத்தில் USSR இன் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. 1991 ராஜீவ் காந்தி கொலையின் பின் இந்தியா, இஸ்ரேல் அமெரிக்க ஆதரவு நாடாக மாறியது. அதற்காக ரஷ்யாவுடனான தொடர்பை துண்டித்து விடப்போவதில்லை. இன்றும் ரஷ்யாவிடம் ஆயுதங்களை வாங்கிக்கொண்டுள்ளது.

ட்ரம்ப் வெளிக்கு சும்மா ரஷ்யாவுக்கு எதிராக கதைப்பவர். உண்மையில் புடினின் நண்பர்.

ACSA உடன்படிக்கையின் படி அமெரிக்கா இலங்கையின் அனைத்து விமான நிலையங்கள் துறைமுகங்களுக்கும் செல்ல முடியும்.

லாரா,  வரிகுவாரி பார்க்காமல் விடயத்தை நீண்டகால அடிப்படையில் நோக்க வேண்டும் (இறந்த, தட்காலம்,  எதிர்காலம் ) அணிசேரா கொள்கை என்று ஒன்றை மறந்துவிடாதீர்கள்.  அது இன்னும் இறந்து விடவில்லை.  

Link to comment
Share on other sites

5 minutes ago, Maharajah said:

லாரா,  வரிகுவாரி பார்க்காமல் விடயத்தை நீண்டகால அடிப்படையில் நோக்க வேண்டும் (இறந்த, தட்காலம்,  எதிர்காலம் ) அணிசேரா கொள்கை என்று ஒன்றை மறந்துவிடாதீர்கள்.  அது இன்னும் இறந்து விடவில்லை.  

வரிக்குவரி பார்க்கவில்லை. இறந்தகாலத்தையும் குறிப்பிட்டே எழுதியுள்ளேன்.

நிகழ்காலத்தில், இந்தியாவில் மோடி பிரதமராக வந்த பின், அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியாக வந்த பின் இந்திய-அமெரிக்க உறவு முன்னை விட மேலும் வளர்ச்சியடைந்துள்ளது.

இந்தியாவுடன் அமெரிக்கா பல ஒப்பந்தங்களையும் போட்டுள்ளது. இந்தியப்படையும் அமெரிக்கப்படையும் இணைந்து பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளன. இலங்கை விடயத்திலும் இந்தியா, அமெரிக்கா இணைந்து செயற்படுகின்றன.

சீனாவுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து செயற்படுகின்றன. எதிர்காலத்திலும் செயற்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Lara said:

ACSA உடன்படிக்கையின் படி அமெரிக்கா இலங்கையின் அனைத்து விமான நிலையங்கள் துறைமுகங்களுக்கும் செல்ல முடியும்.

அம்பாந்தோட்டையும், port city யும் இதில் பிரச்சனைக்கு உரியவை.

அம்பாந்தோட்டை துறைமுக நில இறைமை சொறி லங்காவிடம் இல்லை.

இதனாலேயே, அம்பாந்தோட்டை துறைமுக பாதுகாப்பை சொறி சிங்களம் வைத்திருக்க வேண்டும் என்று கிந்திய, ஜப்பான், us, ஆஸ்திரேலியா, uk பின்னிருந்து அழுத்தம் கொடுத்தன.

us, uk திரிகோண மலை மீது மிகுந்த அக்கறை காட்டுவது, இதுவவும் ஓர் காரணம், வரலாற்றுக் காரணங்கள் இருப்பினும், கிழக்கில் us இற்கு நிரந்தர உரித்தான கட்டற்ற தளம் இல்லை. 

அம்பாந்தோட்டை முறையாக சீனாவிடம் கையளிக்கப்பட்ட பின், இந்த ஏற்பாட்டை அமெரிக்கா யுத்தக் கப்பல்களை  அனுப்பி சிந்தித்து இருந்தது.  

port city முதலில் சீனாவிற்கு உரித்ததாக இருந்தது. கடந்த 18 மாதங்களில் அது lease hold உரிமையாக மாற்றப்பட்டு uda, chec இடையேயான leasing ஆக மாற்றப்பட்டுள்ளது, க்ஸி ஜின்பிங், மோடி சந்திப்பிற்கு பின்.  இதை முன்பே அதிபர் தேர்தல் திரியில், கடந்த 18 மாதங்களில் கிந்தியா சீனாவை முக்கியமான துறைகளில் இருந்து வெளியேற்றி விட்டதாக குறிப்பிட்டு இருந்தேன்.

ஆனாலும், port city பிரச்சனைக்கு உரியது. 

கோத்த வந்தால், போர்ட் சிட்டி மீண்டும் சீனாவின் உரித்தாகலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.