Jump to content

யாழ் - முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புக்குள்ளாகி 29 வருடத்துயரம் இன்று - மீள்குடியேற்ற கனவு நனவாகுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
0
 

 

 
DSCF5931.jpg
- பஸ்னா இக்பால் -
 
யாழ் மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாம் இன்று எட்டுத் திசைகளிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாழ் மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய நாம் அம்மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டு 30-10 - 2019 ஆம் திகதி இன்றுடன் 29ஆண்டுகளாகின்றன. 29ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த துரதிர்ஷ்டமான கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே சூனியமான நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கோரச்சம்பவத்தை நினைத்துப் பார்த்தால் எம் உள்ளம் கொதிக்கிறது. உடல் சிலிர்த்து கண்கள் நனைகின்றன. எனினும், அத்துரதிர்ஷ்ட நினைவுகளை கொஞ்சம் மீட்டிப் பார்க்கிறோம்.
 
“யாழ்ப்பாணம் என்று சொன்னால் தேன்சுவை ஊறும்; பனையிலையும் புகையிலையும் நன்றாக வளரும்” என்ற இனிய பாடல் வரிகளே யாழ் மண்ணின் இனிமைக்கு சான்றாகும்
 
1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி அதுதான் எம் வாழ்வின் துரதிர்ஷ்ட நாள். இப்படியானதொரு கோரச்சம்பவத்தை எதிர்பார்க்காத எம் முஸ்லிம் மக்கள் அனைவரும் தம் அன்றாட வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சுமார் காலை 8 மணியளவில் 1000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புலிகள் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சுற்றி வளைத்தனர். முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் பகுதிதான் சோனகத் தெரு. புலிகளின் திட்டத்தை அறியாத அப்பாவி மக்களாகிய நாம் அனைவரும் அதிகூடிய புலிகளின் வருகையைப் பார்த்துத் திகைத்தோம். சோனகத் தெருவை சுற்றியிருந்த அயல் கிராமங்களுக்கு வியாபாரத்திற்காக சென்ற எம் முஸ்லிம் சகோதரர்களை அவசரமாக சோனகத் தெருவிற்கு செல்லுமாறு புலிகள் அக்கிராமங்களுக்குச் சென்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு விடுத்தார்கள். வியாபாரத்திற்கு சென்ற எம் சகோதரர்கள் நிகழவிருக்கும் விபரீதம் தெரியாமல் உடனே சோனகத் தெருவிற்கு விரைந்தார்கள். 
 
காலை 10 மணியளவில் புலி உறுப்பினர்கள் வாகனங்களில் ஏறிக்கொண்டு ஒலிபெருக்கியை கையில் வைத்துக்கொண்டு வீதி வீதியாக சென்று அழைப்பு விடுத்தார்கள். “முஸ்லிம்களே! ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் உடனடியாக ஒருவர் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திற்கு இப்போதே வர வேண்டும்” என்று கட்டளையிட்டுச் சென்றனர். நாம் அனைவரும் ஜின்னா மைதானத்திற்கு விரைந்து ஓடினோம். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என ஜின்னா மைதானம் நிரம்பி வழிந்தது. எம்மை ஆயிரக்கணக்கான புலிகள் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். நாம் அனைவரும் என்ன ஏதென்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக் கொண்டிருந்தோம். அப்போது இளம்பருதி என்ற புலி உறுப்பினர் ஒருவன் மைதானத்தின் நடுவே மோட்டார் சைக்கிள் ஒன்றின் மேல் ஏறி நின்று கொண்டு கையில் ஒலிபெருக்கியுடன் பேசத் தொடங்கினான். “முஸ்லிம் மக்களே! உங்களுக்கொரு துயரச் செய்தி. நீங்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை விட்டு உடனடியாக இன்னும் 2 மணித்தியாலங்களில் வெளியேற வேண்டும். இது எம் தலைவரின் உத்தரவு. தமிழீழத்தில் உழைத்தவை எல்லாம் தமிழீழத்திற்கே சொந்தம். உங்கள் சொத்துக்கள் அனைத்தையும் இங்கே விட்டு விட்டு நீங்கள்{ உடனே வெளியேறுங்கள்” என்று இளம்பருதி கூறியதுதான் தாமதம் எமக்கு தலைசுற்றி உலகமே ஒருகணம் இருண்டு விட்டது. இது கனவா? இல்லை நனவா? என்று உணர முடியாமல் தடுமாறி விட்டோம். அடுத்தது என்ன செய்வதென்று புரியாமல் எதிர்காலமே எம் கண்களுக்கு சூனியமாக தென்பட்டது. ஜின்னா மைதானமே கதிகலங்கியது. எம் பெண்கள், ஆண்கள் அனைவரினதும் கண்களிலிருந்தும் கண்ணீர் மாலை மாலையாக ஓடத் தொடங்கியது. செய்வதறியாது அனைவரும் திண்டாடினோம். எம் சகோதரர்கள் சிலர் புலிகளிடம் நியாயம் கேட்டார்கள்; வாதாடினார்கள். “எம் பிறந்த மண்ணை விட்டு நாம் ஏன் போக வேண்டும்? இது எங்களுடைய சொந்த இடம்; நாங்கள் போக மாட்டோம்” என கூச்சலிட்டார்கள். பெண்கள் கதறியழுது கண்ணீர் விட்டு கெஞ்சினார்கள். 
 
புலிகள் மனமிரங்கவில்லை. “இது எங்கள் தலைவரின் உத்தரவு. நீங்கள் அனைவரும் வெளியேறித்தான் ஆக வேண்டும். ஊரை விட்டு நீங்கள் செல்லாவிட்டால் அநியாயமாக அனைவரும் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்” என்று கூறிக்கொண்டு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து புலி உறுப்பினர்கள் அனைவரும் வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்தனர். ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானமே வெடிச் சப்தத்தினால் அதிர்ந்தது. நாம் அனைவரும் பயந்து நடுநடுங்கி விட்டோம். இனி இங்கிருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நன்றாக புரிந்து விட்டது. மனைவி, மக்கள், குழந்தைகளை உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் அனைவரின் உள்ளங்களிலும் நிலைத்திருந்தன. பயந்து, நடுங்கி, அழுது வீங்கிய முகங்களுடன் இனி என்ன நடக்கப் போகிறது என்ற எண்ணத்துடன் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்தை விட்டு அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றோம். எமக்கு நடந்த அநியாயத்தைப்போல இனி யாருக்குமே நடக்கக் கூடாது. சொந்த ஊரை விட்டு, சொந்த வீட்டை விட்டு, சொத்து 
சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எங்கே போவது? என்ன செய்வது? என்று தெரியாமல் நடைபிணமாக ஊரை விட்டு வெளியேறுவது என்றால் சும்மாவா? 
 
ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திலிருந்து வீடுகளுக்கு சென்றதுதான் தாமதம் புலி உறுப்பினர்கள் வீடுகளினுள் புகுந்து எம் சொத்துக்களை சூறையாடத் தொடங்கினார்கள். 2 மணித்தியாலங்களில் வெளியேறுங்கள் என்று மைதானத்தில் வைத்துக் கூறிவிட்டு வீடுகளினுள் புகுந்து உடனே வெளியேறும்படி அவசரப்படுத்தினார்கள். இனி இங்கிருந்து பயனில்லை; மீறி இருந்தால் உயிர்தான் போகும்; எங்கேயாவது போய் உயிரோடாவது இருப்போம்; பிள்ளைகளைக் காப்பாற்றுவோம் என்ற நோக்கில் நாம் அனைவரும் பிறந்த மண்ணை விட்டு பிரிய ஆயத்தமானோம். கண்ணில் நீருடனும் நெஞ்சில் கனச் சுமைகளுடனும் நடைபிணமாக வெளியேறினோம். 
 
பெண்கள் சிலர் தமது பணம், நகைகளை மறைத்துக்கொண்டு ஊரை விட்டு வெளியேற முனைந்தனர். பெண் புலி உறுப்பினர்கள் பெண்களையும் ஆண் புலி உறுப்பினர்கள் ஆண்களையும் உடல் பரிசோதனை செய்து அவர்களின் உடமைகளை பறித்தெடுத்தனர். பெண்களின் நகைகளை கழற்றினார்கள்; காதணிகளைக்கூட விடவில்லை. நகைகளுடன் காணப்பட்ட பெண்கள் ஒரு மஞ்சாடி நகை கூட உடலில் இல்லாத நிலையைப் பார்க்கும்போது மிகுந்த கவலை ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் எண்ணத்தில் இக்காட்சிகள் எவ்வாறு தோன்றினவோ தெரியவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் பேசும் தமிழே எங்களின் தாய்மொழியும்கூட. எங்களுக்கு இந்தக் கதியா? சிறுகுழந்தைகளின் கையில், கழுத்தில், காதில் இருந்த நகையைக்கூட பிடுங்கி எடுத்துக் கொண்டனர். கழற்ற முடியாத நகைகளை வெட்டி எடுத்தனர். ஆண்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கினார்கள். செலவுக்குப் பணம் வேண்டுமே என கெஞ்ச, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருநூறு ரூபா மட்டுமே கொண்டு செல்ல அனுமதித்தனர். இப்படியான ஓர் அவலநிலை இனி இந்த நாட்டில் யாருக்குமே வரக்கூடாது. சொந்த ஊரில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பெருமிதமாக வாழ்ந்துகொண்டிருந்த எம்மை வெளியூர்களில் அகதி எனும் பட்டத்தோடு கூனிக்குறுகி நாலாபுறமும் சிதறி வாழ வைத்துவிட்டார்கள் இந்த தமிழீழ விடுதலைப் புலிகள். 
 
வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கும் தமிழ் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு புலிகள் மாத்திரமே காரணம். முஸ்லிம்களை வெளியேற்றும்போது தமிழ் மக்களின் முக்கியமானவர்கள், இந்து சமய குருக்கள், கிறிஸ்தவ பாதிரிமார்கள் முஸ்லிம்களின் வெளியேற்றத்தினை தடுத்து நிறுத்த விடுதலைப் புலிகளிடம் உடனடி அவசரப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியும்கூட அவை தோல்வியிலேயே முடிவடைந்தன.
 
2002 ஆம் ஆண்டு வட்டக்கச்சியில் நடந்த புலிகள் இயக்கத் தலைவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் பங்குபற்றிய மதியுரைஞரான அன்டன் பாலசிங்கம் முஸ்லிம்களின் வெளியேற்றம் ஒரு துன்பியல் சம்பவம் என்று மட்டும் கூறி இதுதொடர்பில் முஸ்லிம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். 
 
காலம் தாழ்த்தியாவது வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமை தவறு என உணர்ந்தனர் புலிகள். இது எமக்கு ஓரளவு ஆறுதலளித்தது. 
 
முஸ்லிம் மக்களை மீளக் குடியமர்த்த காத்திரமான, அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
29ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் முஸ்லிம்களாகிய நாங்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எவ்வாறு ஒன்றாக இருந்தோமோ அந்நிலைமை ஏற்பட வேண்டும்.
 
தற்போது வடக்கில் முஸ்லிம்கள் தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் பாதுகாப்புடனும் எமது சமய, கலாசாரத்துடனும் வாழ நல்ல சூழல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் காத்திரமான, அர்த்தபுஷ்டியான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுகிறோம். 
 
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசியல் பேதமின்றி ஒற்றுமையுடன் செயற்பட்டு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற திட்டத்தில் கூடிய கவனம் எடுக்குமாறு வேண்டுகிறோம். 
 
யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு29 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற கனவு நனவாக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம். ஆமீன்...!! 
 

http://www.jaffnamuslim.com/2019/10/29_30.html

 
 
 
 
 

0 கருத்துரைகள்:

 

Link to comment
Share on other sites

யூதர்கள் ஹிட்லரின் காலத்தில் நடந்ததைச் சொல்லிச் சொல்லியே உலகை ஏமாற்றுவதுபோல் இலங்கை முஸ்லிம்களும் இதைக் கூறிக் கூறியே தமிழர் முஸ்லிம்களின் சக வாழ்விற்கு தடையாய் இருப்பர் இன்னும் நூறு வருடத்திற்கு. 

Link to comment
Share on other sites

ஈழத்தில் தமிழர்களிடம் இருந்து காணிகளை களவாடி கிழக்கை தமதாக்கிய முஸ்லீம்கள்…

 
இலங்கையின் தமிழர் தாயகப் பகுதியான வடக்குகிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாணம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதொன்றாகும். மிகவும் செழிப்பு மிக்க இம்மாகாணத்தில் கடல் மற்றும் தரை வளங்கள் அதன் முதுகெலும்பாகக் காணப்படுகின்றது. “என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்” என்ற வாசகம் கிழக்கு மாகாணத்திற்கும் பொருந்தும். அந்தளவுக்கு சகல வளங்களும் நிறைந்த மாகாணமாகவே அது விளங்குகிறது . இந்த மாகாணம் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக உள்ளது
கிழக்கு மாகாணத்தின் பூர்வீகக் குடிகளான தமிழர் பண்டைய மன்னராட்சியின் கீழ் சிற்றரசுகளை அமைத்து ஆண்டு வந்தனர். ஆனால் இந்த தமிழர்களுடைய பாரம்பரியமான நிலங்கள் சுதந்திரத்திற்குப் பின்னர் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு சின்னா பின்னமாக்கப் பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள அதேவேளையில் இஸ்லாமியர்களும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலமாகவும் தமிழர்களுடைய நிலங்களை தமதுடைமையாக்கியுள்ளனர் என்பதும் கசப்பான வரலாறாகும்.
கிழக்கு மாகாணத்திற்கு வியாபார நடவடிக்கைக்காகச் சென்ற முஸ்லிம்கள் அப்பகுதியில் தற்காலிகமாகத் தங்கி வியாபாரத்தில் ஈடுபட்டனர். சிலர் நிலச்சுவாந்திரர்களான தமிழர்களிடம் அவர்களின் விவசாய செய்கைக்கு கூலிகளாகவும் இருந்து தொழில் செய்து வந்தனர். ஆனால் பின்னர் வியாபாரத்திற்குச் சென்றவர்களும் விவசாயத்திற்கு கூலிகளாக இருந்தவர்களும் எவ்வாறு அங்கு தமது இருப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்பதும் காணி நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாகி அப்பகுதி தமது தாயகப் பகுதி என எவ்வாறு மாற்றிக் கொண்டார்கள் என்பதும் இன்று மறைக்கப்பட்ட வரலாறாகவே உள்ளது. இன்று முஸ்லிம் புத்தி ஜீவிகளும் அரசியல் வாதிகளும் இந்த வரலாற்றைத் திரித்துக் கூறி கிழக்கை மட்டுமல்ல வடக்கையும் தமது தாயகப் பகுதியாக உரிமை கொண்டாடி வருகின்றனர்.
முஸ்லிம்களின் வரலாறு இவ்வாறு இருக்கும்போது இன்று வடமாகாணத்தில் தமது பூர்வீக நிலத்தில் இருந்து குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். கிழக்கில் இருந்து முஸ்லிம்களின் நிலங்கள் தமிழர்களால் பறிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர் என்றெல்லாம் புதுக்கதை சொல்லுகின்றனர்.
.
இந்த முஸ்லிம் இனத்தவர்கள் தமிழ் மக்களின் பூர்வீக நிலத்தில் இருந்துவிட்டார்கள் அதுவும் சில பகுதிகளில் செறிவாகவும் சில பகுதிகளில் பரந்துபட்டும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இஸ்லாமியத் தமிழர்களாக இருப்பதால் குறிப்பிட்ட பகுதியில் அவர்கள்வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்ற நிலையே தமிழ் மக்களிடமும் தமிழ் அரசியல் தலைவர்களிடமும் இருந்து வந்தது. ஆனால் பிற்பட்ட காலத்தில் குறிப்பாக எண்பதுக்கு பின்னரான காலத்தில் அவர்கள் வடக்குக் கிழக்கு தமது தாயகம் என்று கூறும் அளவிற்கும் வந்துவிட்டதுடன் அத்தமீறிய குடியேற்றங்கள் மூலமாகவும் மிரட்டல்கள் மூலமாக தமிழர்களின் காணிகளை குறைந்த விலையில் சுரண்டியெடுத்தல் மூலமாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தனர். இதனால் தமிழர்கள் படிப்படியாக தமது நிலங்களை முஸ்லிம்களிடம் இழந்தனர்.
முஸ்லிம்களின் இந்த வரலாறு தெரியாமல் தற்போதைய காலகட்டத்தில் சில ஊடகங்களும் சில அறிவாளர்களும் தமிழர்களால் முஸ்லிம்கள் வடக்குக் கிழக்கில் விரட்டியடிக்கப்பட்டனர் என கூறிவருவது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது மாத்திரமல்ல மனக்கிலேசத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்பதுஉண்மை.
கிழக்கில் எவ்வாறு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றதோ அதேபோன்று தாமும் சளைத்தவர்களல்ல என்ற வகையில் முஸ்லிம் குடியேற்றங்களும் தமிழர் நிலப்பறிப்புகளும் இடம் பெற்றுள்ளன என்பதை குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை மையப்படுத்தி எழுதியுள்ள “அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள்” என்ற நூலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள எஸ்.ஜயானந்தமூர்த்தி அவர்கள் இதை எழுதியுள்ளார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 2004 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் ஒரு ஊடகவியலாளராகவும் இருந்தார்.
 
அந்த வேளையில் அவர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்றும் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாகச் சந்தித்தும் தொடர் கட்டுரையாக இலங்கையில் இருந்து வெளியாகும் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு எழுதியிருந்தார். கடந்த வருடம் முற்பகுதியில் இதை ஒரு ஆவணப்பதிப்பாக நூலுருவில் வெளியிட்டுள்ளார். இந்த நூலே கிழக்கில் முஸ்லிம்களின் அத்துமீறிய குடியேற்றங்களுக்குச் சிறந்த ஆதாரமாக உள்ளது. இந்த நூலில் எழுதப்படாத இன்னும் சில தமிழ் கிராமங்கள் பற்றியும் திருகோணமலையில் தமிழ் கிராமங்கள் எவ்வாறு அழிக்கப்பட்டன என்பன பற்றியும் அவரின் மற்றொரு புத்தகத்தில் வெளிவரவுள்ளதாக நூலாசிரியரான எஸ்.ஜயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். எனினும் இக்கட்டுரையில் திருகோணமலையில் முஸ்லிம்களின் அத்துமீறிய குடியேற்றங்கள் பற்றியும் தொட்டுச் செல்லப்படுகின்றது.
.
 இனி கிழக்கின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் நடந்த அத்துமீறிய குடியேற்றங்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம். முதலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த குடியேற்றங்கள் தமிழ் மக்களின் வெறியேற்றம் என்பன பற்றி ஆராய்வோம்.
மட்டக்களப்பு மாவட்டம் வடக்காக வெருகல் வாவி தொடக்கம் தெற்காக நீலாவணை வரை நீண்டுள்ளது. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் பரந்து கிடக்கின்றது. மேற்கு எல்லையாக பொலனறுவை மற்றம் பதுளை மாவட்டங்களின் சிங்கள கிராமங்கள் அமைந்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் (கோறளைப்பற்று) அமைந்துள்ள அழகிய தமிழ் கிராமம் மிறாவேடை தமிழ் கிராமம். இது மிகவும் பழமை வாய்ந்த கிராமம். இங்கு சுமார் 460 குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. பாடசாலை, பிள்ளையார். காளிஅம்மன், முருகன் ஆலயங்களும் இருந்தன. இதந்த தமிழ் கிராமத்திற்கு அருகில் மிறாவோடை (முஸ்லிம்)மற்றும் மாஞ்சோலை ஆகிய முஸ்லிம் கிராமங்கள் இருந்தன.
இந்த முஸ்லிம் கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு அருகில் இருந்த மிறாவேடை தமிழ் கிராமத்தின் மீது ஒரு கண் இருந்துகொண்டே வந்தது. அங்கிருந்து தமிழ் மக்களை விரட்;டியடித்துவிட்டு அதை அபகரிக்க வேண்டுமென்பதே இதற்குக் காரணம். அதனால் அக்கிராம மக்கள் மீது முஸ்லிம்கள் தொடர்ந்து முறுகல் நிலையை ஏற்படுத்தி வந்தனர். இந்த முறுகல் நிலை மெல்ல மெல்ல அதிகரித்து முதல் தடவையாக 1985 இல் காணித்தகராறு ஒன்று காரணமாக தமிழர்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதலை நடத்தினார்கள். இது பின்னர் இனக்கலவரமாக மாறியது. முஸ்லிம்களுக்கு ஆதரவாக இராணுவத்தினர் பலமாக இருந்தனர் இராணுவத்தினரின் உதவியுடன் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன கொள்ளையடிக்கப்பட்டன. இதனால் அக்கிராம மக்கள் அச்சம் காரணமாக முதல் தடவையாக கிராமத்தைவிட்டு வெளியேறினர்.
சில மாதங்களின் பின்னர் சுமுகநிலை வந்ததை அடுத்து தமிழ் மக்கள் மீண்டும் தமது சொந்தக் கிராமத்திற்குத் திரும்பியிருந்தனர். எனினும் அச்சநிலையும் இரு இனங்களுக்கிடையே முறுகல் நிலையும் இருந்து கொண்டே வந்தன. சில வருடங்கள் இந்த நிலை இருந்தாலும் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமான 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல முஸ்லிம் இளைஞர்கள் இலங்கை படையின் ஒரு பிரிவான ஊர்காவல் படையிலும் பொலிசிலும் இணைந்தனர். இதன் பின்னர் நிலமை மிகவும் மோசமானது. இரண்டாவது தடவையாக முஸ்லிம்களும் ஊர்காவல் படையினரும் இணைந்து மேற்படி தமிழ் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் பெரும் வன்முறையை முஸ்லிம்கள் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்டனர். இந்த வன்முறை இக்கிராமத்து தமிழர்கள் மாத்திரமின்றி மாவட்டத்தில் இருந்த முஸ்லிம் கிராமங்களுக்கு அருகில் இருந்த அனேகமான தமிழ் கிராமங்களில் நடந்தேறின. இவ்வன்முறையினால் மிறாவோடை தமிழ் கிராமம் ஏறக்குறைய முற்றாக அழிக்கப்பட்டது. மக்கள் நிரந்தரமாக இடம் பெயர்ந்து அயலில் இருந்த தமிழ் கிராமங்களான கிண்ணையடி, சுங்கான்கேணி, வாழைச்சேனை, வினாயகபுரம் ஆகிய கிராமங்களுக்குச் சென்றனர். அதன் பின்னர் முஸ்லிம்கள் திட்டமிட்டவாறு பல நூறு ஏக்கர் காணிகளைச் சுவீகரித்துக் கொண்டனர். இதனால் அக்கிராமத்தின் அரைவாசிக்பகுதிக்கு மேல் அத்துமீறிய குடியேற்றங்களைச் செய்தும் பெரும் பகுதியை அபகரித்துக் கொண்டனர். பாடசாலை கோயில்கள் பொதுக் கட்டிடங்கள் அனைத்துமே அழிக்கப்பட்டன.வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்திருந்த மற்றொரு தமிழ் கிராமம் தியாவட்டவான். இக்கிராமமும் மிகவும் பழமைவாய்ந்த தமிழ் கிராமம். ஆனால் அது தற்போது முஸ்லிம்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு முஸ்லிம் கிராமமாக மாற்றப்பட்டுள்ளது. இக்கிராமம் கொழும்பு- மட்டக்களப்பு வீதியில் உள்ளது. இக்கிராமத்திற்கு அருகில் காவத்தமுனை முஸ்லிம் கிராமமும் ஓட்டமாவடி முஸ்லிம் பகுதியின் எல்லையும் அமைந்திருந்தன. தியாவட்டவான் கிராமத்தில் நீண்டகால வரலாற்றைக் கொண்ட தமிழ் கலவன் பாடசாலை மற்றும் ஆலயங்கள் என்பனவும் இருந்தன. அருகில் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை இருந்ததால் இக்கிராமம் மிகவும் வளர்ச்சி கண்டிருந்தது. இதனால் இக்கிராமத்தை அபகரிக்க வேண்டுமென்ற எண்ணம் முஸ்லிம்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்தது, இந்த கடதாசி தொழிச்சாலையைப் பற்றிக் கூறுவதானால் இலங்கையில் ஒரேயொரு கடதாசித் தொழிச்சாலையாக இது இருந்தது. கொழும்பு நாரகென்பிட்டியவில் இதன் உபநிலையம் உள்ளது. எண்பது காலகட்டத்தில் இக்கடதாசி தொழிச்சாலையில் சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வேலை செய்தனர். அதில் சுமார் பத்து வீதத்திற்கும் குறைந்தவர்களே முஸ்லிம் தொழிலாளர்கள். அதிலும் உயர் பதவிகளில் இருந்தவர்கள் அனைவரும் தமிழர்கள். முஸ்லிம்கள் சாதாரண தொழிலாளர்களாகவே இருந்தனர். இக்கடதாசித் தொழிச்சாலையும் தற்போது முஸ்லிம்களின் கைகளுக்குச் சென்று விட்டது.தியாவட்டவான் கிராமத்தில் முதற்தடவையாக 1983 ஆகஸ்ட் மாதத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுவும் முஸ்லிம் காடையர்களால் அரங்கேற்றப்பட்டது. அதன் பின்னர் 1985 ஆம் ஆண்டிலும் மற்றொரு தாக்குதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது. இத்தாக்குதல்கள் காரணமாக பல வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. சிலர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் காரணமாக தமிழ் மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர். இத்தாக்குதல்களுக்குப் பின்னாலும் இலங்கை படையினரின் உதவி இருந்தது. இலங்கை இராணுவத்தில் முஸ்லிம் இளைஞர்களும் இருந்தது மாத்திரமின்றி முஸ்லிம்கள் தமது வியாபாரம்,மரக்கடத்தல் மற்றும் கஞ்சாக் கடத்தல் போன்ற சுயநலத்திற்காக இராணுவத்தினருக்கு உதவிகளை செய்வதும் வழக்கமாக இருந்தது. தியாவட்டவான் கிராமத்தை விட்டு வெளியேறியவர்கள் அயற்கிராமங்களிலேயே நீண்டகாலம் அகதிகளாக இருந்தனர். பின்னர் அவர்கள் 1988 ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தினரின் வருகைக்குப் பின்னர் சொந்த கிராமத்திற்குச் சென்றனர்.
ஆனால் அங்கு தமது பெரும்பாலான காணிகளிலும் வீடுகளிலும் முஸ்லிம்கள் அத்துமீறிக் குடியேறியிருந்தனர். அங்கிருந்த தமிழ் கலவன் பாடசாலை அரபா முஸ்லிம் பாடசாலையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆலயத்தின் அடையாளமே தெரியாமல் குடியேற்றம் இடம் பெற்றிருந்தது. எனினும் மக்கள் எங்கு முறையிட்டாலும் உரிய பலன் கிடைக்கவில்லை. சில தமிழ் வீடுகள் எஞ்சியிருந்தன. அதில் குறைந்த குடும்பங்கள் குடியேறினர். எனினும் மீண்டும் அவர்கள் மீதும் 1990 ஐ{ன் மாதத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டன. இதனால் அவர்களும் முற்று முழுமாக வெளியேற்றி விட்டனர். இதனால் தற்போது இத்தமிழ் கிராமம் முற்று முழுதாக முஸ்லிம் கிராமமாக மாறியுள்ளது. தற்போது கடதாசி தொழிச்சாலை குறைந்த ஊழியர்களுடன் இயங்கினாலும் 90சதவீதமானவர்கள் முஸ்லிம்களே.
ஓட்டமாவடி கிராமம் பற்றியும் கூறவேண்டும். இது ஒரு கலப்புக் கிராமம்தான். ஆனால் கிராமத்தின் அதிகாரமும் அதன் மையப்பகுதியும் தமிழர்களுடையது. ஓட்டமாவடியில் 60 வீதமானவர்கள் முஸ்லிம்களாகவும் ஏனையவர்கள் தமிழர்களும் வாழ்ந்தனர். ஓட்டமாவடி கிட்டத்தட்ட ஒரு உபநகரமாகவே இருந்தது. பல கடைகளும் பெரும் கல்வீடுகளும் நகரின் மையப்பகுதியில் தமிழர்களுடையதாகவே இருந்தன. தமிழர்களின் வழிநடத்தலிலே இக்கிராமம் இயங்கியது. இதன் மையப்பகுதியில் பிள்ளையார் ஆலயம் இருந்தது. அது தமிழர்களின் வழிபாட்டுத்தலம். முஸ்லிம்களுக்குச் சற்றுத் தொலைவில் பள்ளிவாசல் இருந்தது.தமிழர்களின் மயானமும் மையப்பகுதியில் ஒரு புறத்தில் அமைந்திருந்தது. இக்கிராமத்தில் வாழ்ந்தவர்கள் இரு இனத்தினரும் ஆரம்பகாலத்தில் ஒற்றுமையாகவே வாழ்ந்தனர். ஆனால் 83 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிருந்த தமிழர்கள் மீதும் தாக்குதல்கள் ஆரம்பமாகின.இத்தாக்குதல்கள் மெல்ல மெல்ல அதிகரித்து 85, 90 ஆம் ஆண்டுப்பகுதியில் அங்காங்கு நடந்த தமிழர் மீதான தாக்குதல்கள் போன்றே ஓட்டமாவடி தமிழ் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. பெரும் கடைகள் வீடுகள் என்பன அடித்து நொருக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. இதனால் தமிழர்களுக்கு முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த முடியாமல் அப்பகுதியை விட்டு வெளியேறினர். வெளியேறிய தமிழர்கள் கறுவாக்கேணி கிராமத்தில் தற்போது நிரந்தரமாக வாழுகின்றனர். ஓட்டமாவடியில் இருந்த தமிழர்களின் பல காணிகள் வீடுகள் என்பன முஸ்லிம்களினால் அத்துமீறிப் பிடிக்கப்பட்டன. சில காணிகளை மனச்சாட்சியுள்ள சில முஸ்லிம்கள் தமிழர்களிடம் காசு கொடுத்து வாங்கிக் கொண்டனர். அங்கிருந்த பிள்ளையார் அலயம் உடைக்கப்பட்டு தற்போது அதில் மீன்சந்தை கட்டப்பட்டுள்ளது. மயானம் அழிக்கப்பட்டு தபாலகம், பிரதேச செயலகம் என்பன கட்டப்பட்டுள்ளன.
இந்த ஓட்டமாவடி பகுதி 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் வாழைச்சேனை தமிழ் பிரதேச செயலகப் பிரிவுக்குள்ளேயே இருந்தது. ஆனால் 90 ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழல் மற்றும் இனவன்முறைகள் காரணமாக அரசாங்கம் தற்காலிகமாக இந்த பகுதியை நிருவாக ரீதியாக ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவாக (முஸ்லிம்) மாற்றப்பட்டு தற்போது முழுமையான முஸ்லிம் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. உண்மையில் இந்த வன்முறைகள் மற்றும் தனியான செயலக நிருவாக பிரிவுகள் என்பனவற்றை ஏற்படுத்துவதில் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு நிறையவே பங்கிருந்தது. அத்துமீறிய குடியேற்றங்களையும் இவர்களே அதிகம் தூண்டி விட்டனர். முஸ்லிம் ஊர்காவல் படை மற்றும் முஸ்லிம் இளைஞர்களை பொலிஸ் சேவையில் இணைத்தல் போன்றவற்றையும் இந்த அரசியல்வாதிகளே திட்டமிட்டும் செய்தனர்.
இதன் மூலம் தமிழர்களின் பலத்தை அழிப்பது மாத்திரமின்றி போராட்டத்தையும் சிதைப்பதும் அதன் மூலம் கிழக்கில் முஸ்லிம்களுக்கென தனியான மாகாண அலகுகளை ஏற்படுத்துவதும் நோக்கமாக இருந்தது. இந்த வகையில் இந்த அரசியல்வாதிகளினதும் முஸ்லிம் காடையர்களின் நோக்கங்களில் தனியான பிரதேச செயலகம் அமைத்தது முதற்படியாக வெற்றி பெற்றது.
இந்த திட்டமிட்ட நடவடிக்கைகளின் பின்னணியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான எம்.எச்.எம்.அஸ்ரப், தற்போதைய கட்சித் தலைவர் ரவூப் கக்கீம், பசீர் சேகுதாவூத், எம்.எல்.ஏ.எம்.கிஸ்புல்லா உட்பட பலர் செயற்பட்டனர். உண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 85 ஆம் ஆண்டுக்கு முன்னர் முஸ்லிம்கள் பரந்துபட்டோ அல்லது பல இடங்களிலோ வாழவில்லை. அவர்கள் பிரதான நெடுஞ்சாலையை அண்டியதாக கொழும்பு-மட்டக்களப்பு வீதியில் ஓட்டமாவடி, ஏறாவூர்,காத்தான்குடி ஆகிய மூன்று இடங்களிலுமே வாழ்ந்தனர். இந்த இடங்களை ஒட்டியதாக ஒரு சில கிராமங்களும் இருந்தன. ஆனால் தற்போது நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம் போன்றனவற்றால் குறைந்தது ஐம்பது கிராமங்கவரை அமைத்துள்ளனர்.ஓட்டமாவடியில் தமிழர்களை விரட்டியடித்ததுபோலவே ஏறாவூர் தமிழ் கிராமத்தில் இருந்தும் தமிழர்கள் விரட்டடியக்கப்பட்டனர். இந்த சம்பவங்களும் 83, 85, மற்றும் 90 ஜூன் மாதத்திலும் இடம் பெற்றன. ஏறாவுர் தமிழ் கிராமம் மிகவும் செழிப்பான கிராமம். அங்குள்ளவர்களில் அதிகமானோர் பொற்கொல்லர்களாகவும் பெரும் வியாபாரிகளாகவும் இருந்தனர். இதனால் ஏறாவூர் நகர் மிகவும் பரபரப்பாகவே எப்போதும் இருக்கும். அது மாத்திரமின்றி அங்கு வாரச்சந்தை நடப்பதும் வழங்கம். இத்தமிழ் கிராமத்திற்கு அருகில் இருந்தது ஏறாவூர் முஸ்லிம் பகுதி. அது அப்போது பெரியளவில் அபிவிருத்தியடைந்து இருக்கவில்லை.
இதனால் தமிழ் பகுதியைப் பார்த்து ஆத்திரமும் வெறுப்பும் அடைந்திருந்த முஸ்லிம்கள் சந்தர்ப்பம் பார்த்திருந்து தாக்குதல்களை நடத்தினர். இத்தாக்குதல்களில் 90 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்த தாக்குதலே மிகவும் மோசமானதாக அமைந்திருந்தன. இத்தாக்குதலால் ஏறாவூர் தமிழ் கிராமம் முற்றாக அழிக்கப்பட்டன. தற்போதும் அந்த அழிவுகள் அப்படியே கிடப்பதைக் காணலாம். இந்த மக்கள் இன்னமும் மீளக் குடியமரவில்லை. ஆனால் இக்கிராமத்தின் எல்லைப்பகுதிகள் மற்றும் சில பகுதிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமத்துள்ளனர். இதுதவிர அப்பகுதியில் இருந்த தமிழ் மக்களுக்கான பல ஏக்கர்கணக்கான தோட்டக்காணிகள் அரச நிலம் என்பனவற்றை ஆக்கிரமித்து ஐpன்னாநகர், மிச்நகர் என்று பல கிராமங்களை புதிதாக அமைத்துள்ளனர்.
முஸ்லிம்கள் பல தமிழ் கிராமங்களை அபகரித்தது மாத்திரமின்றி பல புதிய கிராமங்களையும் அத்துமீறி அமைத்துள்ளனர். அது மாத்திரமின்றி இன்னும் சில தமிழ் கிராமங்களை அரைகுறையாக அத்துமீறி அபகரித்துள்ளதுடன் மேலும் பல கிராமங்களை குற்றுயிராக்கியுமுள்ளனர்.
கொழும்பு வீதியில் புனாணை கிராமத்திற்கு எதிராக இருந்த தமிழர்களின் காணிகள் மற்றும் வன இலாகாவுக்கான காணிகளில் திட்டமிட்ட முஸ்லிம் குடியேற்றத்தை கிஸ்புல்லா 94 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைச்சராக இருந்தபோது ஏற்படுத்தினார். தற்போது அது பெரும் நகரமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் இந்த பகுதியிலும் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புனாணை கிழக்கு பகுதியிலும் தமிழர்களின் பூர்வீகக் காணிகளைச் சுவீகரித்து அத்துமீறிய குடியேற்றங்களை முஸ்லிம்கள் செய்து வருகின்றனர். இதற்கு பின்னணியில் தற்போது இருப்பவர் அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி.
இதுதவிர முஸ்லிம்களால் குற்றுயிராக்கப்பட்ட பல தமிழ் கிராமங்கள் உள்ளன. ஆறுமுகத்தான்குடியிருப்பு, வாழைச்சேனை தமிழ் கிராமம், நாவலடிச்சந்தி, ஆரையம்பதி எல்லைக்கிராமம், புதுக்குடியிருப்பு, செல்வாநகர் என கிராமங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லுகின்றது.
அம்பாறைமாவட்டம்
 
அம்பாறை மாவட்டம் முற்றுமுழுதாக தமிழ் பாரம்பரிய கிராமங்களைக் கொண்டதாகவும் அவர்களே பெரும்பான்மையினத்தவராகவும் இருந்ததுடன் ஆங்காங்கே முஸ்லிம்களும் சிங்களவர்களும் திட்டுத்திட்டாக வாழ்ந்தனர். ஆனால் 1956 ஆம் ஆண்டு அப்போதைய இலங்கையின் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவினால் கல்லோயாத்திட்டம் என்ற பெயரில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக தமிழர்கள் சிங்களவர்களால் விரட்டியடிக்கப்பட்டு பல குடியேற்றங்களை செய்தனர். இதே காலப்பகுதியில் முஸ்லிம்களும் பல இடங்களில் குடியேறியும் தமிழர்களின் நிலங்களை கொள்ளையடித்தும் அத்துமீறியும் தமது இருப்பைப் பலப்படுத்திக் கொண்டனர். எனினும் முஸ்லிம்கள் அம்பாறை மாவட்டத்தில் கண்மூடித்தனமாகக் குடியேற்றங்களைச் செய்தனர். இன்று அந்த மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் அடுத்த படியாக சிங்களவர்களும் அதற்கடுத்ததாகவே தமிழர்களும் உள்ளனர்.மீனோடைக்கட்டு கிராமம் மிக நீண்டகாலத் தமிழ் கிராமம்.
ஆனால்,  தற்போது அது ஒரு முஸ்லிம் கிராமமாக மாறியுள்ளது. இக்கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்தன. இக்கிராமத்திற்கு அயற்கிராமங்களாக முஸ்லிம் கிராமங்கள் இருந்தன. ஆனால், 1978 ஆம் ஆண்டு தொடக்கமே இத்தமிழ்க் கிராமம் மீது முஸ்லிம்கள் தாக்குதல்களை நடத்தினர். இதனால் எல்லைப்பகுதியில் இருந்த மக்கள் படிப்படியாகத் தமது இடங்களை  விட்டு வெளியேறத் தொடங்கினர்.
 
இஸ்லாம் அழிக்கும் இலங்கை இந்துக் கிராமங்களில் ஒன்று
அதன் பின்னர் 1985.07.12 ஆம் திகதி இக்கிராமத்தின் மீது முஸ்லிம்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தினர். அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கோயில்கள்,  வீடுகள் என்பன முற்றாக அழிக்கப்பட்டன. இதையடுத்து அப்பகுதி மக்கள் முற்றாக வெளியேறிவிட்டனர். அதன் பின்னர் அக்கிராமம் முழுமையான முஸ்லிம் கிராமமாக மாறியது.
 
இஸ்லாமியப் பள்ளிவாசல்கள் கட்ட இடிக்கப்படும் இந்துக்களின் பாடசாலைகள்
தற்போது அங்கு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை உள்ளது. மீனோடைக்கட்டு என்று கூறினால் தற்போது அது எல்லோருக்கும் முஸ்லிம் கிராமமாகவே தெரியும். அவ்வாறு அதன் வரலாறே மாற்றப்பட்டுள்ளது.
மீனோடைக்கட்டைப்போன்றே ஒலுவில், பாலமுனை ஆகிய இரு முஸ்லிம் கிராமங்களை எல்லையாகக் கொண்ட கிராமம் திராய்க்கேணி கிராமம். இக்கிராமத்தையும் அழிக்கும் வகையிலும் அதை முஸ்லிம் கிராமமாக்கும் வகையிலும் பல முயற்சிகள் நடந்தன.
இக்கிராமத்தில் 360 குடும்பங்கள் இருந்தன. இங்கு வாழ்ந்தத் தமிழர்கள் மீது முதல் தடவையாக 1985 இல் தான் தாக்குதல் நடந்தது. இதனால் வழக்கம்போல் மக்கள் இடம் பெயர்ந்தனர். பின்னர் ஒரிரு ஆண்டில் மீண்டும் மீளக்குடியமர்ந்தனர்.
 
எம். ஹெச்.எம். அஷ்ரஃப் – தலைவர், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்
ஆனால், திராய்கேணியின் சில பகுதிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமித்து குடியேறியிருந்தனர். ஆனால்,  இவர்களை எழுப்புவதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தடைப்பட்டன. இதற்குக் காரணமாக இருந்தவர் அமைச்சர் அஸ்ரப்.
அவரின் நோக்கமே மீனோடைக்கட்டு கிராமம் போன்று திராய்க்கேணி கிராமத்தையும் முஸ்லிம் கிராமமாக மாற்ற வேண்டும் என்பதே.
இதற்குப் பின்னர் 06.08.90 ஆம் ஆண்டில் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மற்றும் முஸ்லிம் காடையர்கள் இணைந்து  இக்கிராமத்தைத் தாக்கினார்கள். இத்தாக்குதலின்போது 46 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு பெரியதம்பிரான் ஆலயவளவுக்குள் புதைக்கப்பட்டனர்.
வீடுகள், ஆலயம், பாடசாலை என்பன முற்றாக அழிக்கப்பட்டன. தற்போது இக்கிராமத்தின் பெரும் பகுதியில் முஸ்லிம்களே வாழ்கின்றனர்.கரவாகு கிராமம் மிகவும் தொன்மை மிக்கது. இதைச் சாய்ந்தமருது தமிழ் டிவிசன் என்றும் அழைப்பதுண்டு. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்ட தமிழ் கிராமங்களில் இதுவும் ஒன்று. ஆனால், இக்கிராமம் 1965 ஆம் ஆண்டுக்கு முன்னரே பறிபோய்விட்டது.
இக்கிராமத்தில் 660 குடும்பங்களைச் சேர்ந்த தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். இங்கு கரவாகு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கதிரேசபிள்ளையார் ஆலயம், விஸ்ணு ஆலயம் மற்றும் ஐயனார் ஆலயம் என்பனவும் தொன்று தொண்டு இருந்து வந்தன.
 
தமிழர் வயல்களை வன்முறையால் வயப்படுத்திய இஸ்லாமியத் தலைவர்
அவை  மாத்திரமின்றி இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயிகளாக இருந்ததுடன் கரவாகு வட்டை என்ற பகுதியில் ஆயிரக்காணக்கான பொன்கொழிக்கும் நெல்வயல்கள் இவர்களிடம் இருந்தது. ஆனால், இக்கிராமத்தை 1965 ஆம் ஆண்டு முஸ்லிம் காடையர்கள் தாக்கியதில் அதற்கு ஈடுகொடுக்க முடியாது கிராம மக்கள் வெளியேறினர். அதன் பின்னர் இக்கிராமம் தனி முஸ்லிம் கிராமமாக மாறியது. இதற்கு அப்போது அங்கு அரசியல்வாதியாக இருந்த எம்.எஸ்.காரியப்பர் பின்னணியில்  இருந்தார்.
தமிழ்ப் பாடசாலை 70 ஆம் ஆண்டில் அல்.அமீன் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டது. கோயில்கள் இருந்த இடத்தில் பள்ளிவாசல்களும் அமைக்கப்பட்டன. அவர்களின் வயல்காணிகள் அனைத்தும் முஸ்லிம்களின் உடமையானது.
வீரமுனை கிராமத்தையும் பல தடவைகள் முஸ்லிம்கள் இராணுவத்தினரின் உதவியுடன் அழித்தனர். அக்கிராமத்தின் பெரும் பகுதியில் அத்துமீறிக் குடியேறினார்கள். தற்போதும் முஸ்லிம்கள் தமிழர்களின் காணிகளில் சுதந்திரமாக வாழ்ந்து அனுபவித்து  வருகின்றனர்.
இந்த வீரமுனைக்கிராமம் வரலாற்றைக் கொண்ட கிராமம். இங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மீது முதன் முதலில் 1954 இல் தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் 1958 இல் தாக்குதல் நடத்நதது. இவையனைத்தும் முஸ்லிம்களினாலேயே நடத்தப்பட்டன. பின்னர் 12.081990 இல் தாக்கப்பட்டு பின்னர் முழுமையாக அழிக்கப்பட்டது. இத்தாக்குதலை விசேச  அதிரடிப்படையினரும் முஸ்லிம்களுமே செய்தனர்.850 குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வந்தன. ஆரம்பம் முதல் இறுதிவரையான இத்தாக்குதல்களின் போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். வீரமுனை கிராமம் தற்போதுவரை அதன் பழைய நிலையை அடையவில்லை.
இக்கிராமம் மாத்திரமின்றி அருகில் இருந்த தமிழர்களின் பாரம்பரிய கிராமங்களான சம்மாந்துறை தமிழ்ப்  பிரிவு, கோரக்கர்கோயில் கிராமம், மல்வத்தை புதுநகரம், கணபதிபுரம், வளத்தாப்பிட்டி, மல்லிகைத்தீவு, வீரன்சோலை ஆகிய கிராமங்களும் அழிக்கப்பட்டதுடன் முஸ்லிம் குடியேற்றங்கள் செய்யப்பட்டன.
 
அழிக்கப்பட்ட இந்துக் கோயிலில் அலைபாயும் தமிழ் சிறார்
திருகோணமலை மாவட்டம்
 
திருகோணமலை மாவட்டம் தமிழர்களின் தலைநகராக உள்ளது. இங்கு பல வளங்களும் உள்ளதுடன் இயற்கைத் துறைமுகமும் அமைந்துள்ளது.
இங்குள்ள வளங்கள் மற்றும் புவிசார் அமைப்பைக் காரணங்களாகக் கொண்டு சிங்களக் குடியேற்றங்கள் மிகவும் துரித கதியில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன; மாத்திரமின்றி, உலக நாடுகளும் இங்குத் தமது தளங்களை அமைத்துள்ளன. இந்த வகையில் முஸ்லிம்களும் தங்கள் இருப்பைப் பலப்படுத்தும் வகையில் பல அத்துமீறிய குடியேற்றங்களைத் தமிழ் பகுதிகளில் செய்துள்ளன.
 
பாழாக்கப்பட்ட பாலாலி கோவில்
பள்ளிக்குடியிருப்பு கிராமம் மிகவும் செழிப்பான தமிழர்களின் ஆதிக்கிராமம். இதற்கு அருகில் தோப்பூர் கலப்புக் கிராமம் உள்ளது. ஆனால், 1990 ஆம் ஆண்டு முதல் பள்ளிக்குடியிருப்புக் கிராமத்தின் மீது முஸ்லிம்கள் தாக்குதலை நடத்தத் தொடங்கினர். இதனால் அங்கிருந்த மக்கள் அச்சம் காரணமாக வெளியேறத் தொடங்கினர். எனினும், பல குடும்பங்கள் அச்சத்திற்கு மத்தியிலும் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்குடியிருப்பு கிராமத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக இக்பாலநகர் என்ற புதிய கிராமத்தை முஸ்லிம்கள் உருவாக்கியுள்ளனர். இக்கிராமம் தற்போது பரபரப்பான வளமுடைய கிராமமாக மாறியுள்ளது. ஆனால், ஆதிக்கிராமமான பள்ளிக்குடியிருப்பு தற்போது பின்தள்ளப்பட்டுத் தேய்ந்து போய்விட்டது.உப்பாறு கிராமம் பல தடவைகளில் முஸ்லிம்களின் தாக்குதலுக்கு இலக்கானது. இக்கிராமம் கிண்ணியாவுக்கு அருகில் உள்ளது. கிண்ணியாவில் இரு இனத்தவரும் இரு வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இங்கும் அடிக்கடி கலவரங்களை முஸ்லிம்கள் ஏற்படுத்தினாலும், தமிழ் மக்கள் அந்நேரத்தில் இடம் பெயர்ந்தாலும், பின்னர் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பி விடுவது வழக்கம். ஆதலால் உப்பாறு மக்கள் 1983, 1985 ஆண்டுகளில் ஏற்பட்ட கலவரங்களின்போது இடம் பெயர்ந்தபோதிலும் பின்னர் நிலமை சீரானதும் மீளக்குடியேறினர். எனினும், முஸ்லிம் காடையர்களும் ஊர்காவல் படையினரும் தொடர்ந்து இக்கிராம மக்கள் மீது தாக்குதலை நடத்தியே வந்தனர். இறுதியில் 90 ஆம் ஆண்டு இக்கிராமத்தின் மீது பாரிய அளவு தாக்குதல் நடத்தியதால் தமிழர்களின் வீடுகள், பாடசாலை, ஆலயங்கள் சேதமாக்கப்பட்டன.
இந்நடவடிக்கைகளுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திடீர்தௌபீக் மற்றம் அப்துல் மஜீத் போன்றோர் பின்னணியில் இருந்தனர். தற்போது உப்பாறு கிராமம் முஸ்லிம் கிராமமாக மாறியுள்ளது. அங்கிருந்த றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை தற்போது முஸ்லிம் வித்தியாலயமாக மாற்றப்பட்டுள்ளது.
சிவன்கோயில், பிள்ளையார் கோயில்கள் இருந்த இடங்களில் பள்ளிவாசல்களும் பொதுக் கட்டிடங்களும் அமைக்கப்பட்டுச் செறிவான குடியேற்றம் நடத்தப்பட்டுள்ளது. தமிழ் மாணவர்கள் கற்று வந்த றோமன் கத்தோலிக்கத் தமிழ் கலவன் பாடசாலை அயற்கிராமத்திற்கு இடம் பெயர்ந்து இயங்கி வருகின்றது.
குரங்குபாஞ்சான் கிராமமும் அப்பகுதி நிலங்களும் தமிழர்களின் சொத்து. ஆனால், 90 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் இக்கிராமத்தின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்த முஸ்லிம்கள் தற்போது குடியேற்றத்தைச் செய்து வாழ்ந்து வருகின்றனர்.
இறக்கக்கண்டி கிராமத்தின் பெரும் பகுதியும் தற்போது தமிழர்களிடமிருந்து பறிபோயுள்ளது. இங்கிருந்தும் தமிழர்களை விரட்டியடிப்பதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திடீர்தௌபீக் காரணமாக இருந்தார். இவரின் பின்னணியில் முஸ்லிம்கள் மக்களை விரட்டியடித்தனர். இதனால் அங்கும் முஸ்லிம் குடியேற்றம் நடைபெற்றுள்ளது. தமிழர்கள் தற்போது சிறுபான்மையாகவே இக்கிராமத்தில் வாழுகின்றனர்.
மூதூர் திருகோணமலை மாவட்டத்தின் ஒரு உபநகரமாகவே இருந்தது. நீண்ட காலமாகத் தமிழர்கள் அங்கு வாழ்ந்து வந்தனர். சில முஸ்லிம்களும் வாழ்ந்தனர். நகரின் பெரும் வியாபார நிலையங்கள் அனைத்தும் தமிழர்களுடையதாகவே இருந்தன. ஆனால், இந்த நகரைத் தமது கையில் கொண்டுவர வேண்டுமென முஸ்லிம்கள் திட்டமிட்டனர். இந்த நிலையில் பல தடவைகளில் மூதூர் நகரமும் தமிழர்களின் சொத்துக்களும் எரிக்கப்பட்டன. இந்தக் காலகட்டங்களில் மூதூர் மக்கள் அயற்கிராமங்களுக்குப் பாதுகாப்புத்தேடிச் செல்வது வழக்கம். எனினும், தொடர்ந்து இத்தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது இடங்களை முழுமையாக விட்டுவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், தற்போது அங்கு முஸ்லிம்களே அதிகம் வாழுகின்றனர். நகரின் பெரும் வியாபார நிலையங்களின் உரிமையாளர்களாக முஸ்லிம்களே உள்ளனர். தற்போது 40 சதவீதத்திற்கும் குறைவான தமிழர்களே மூதூரில் நிரந்தரமாக வாழுகின்றனர்.இதுபோன்று இன்னும் பல தமிழ் கிராமங்களின் சோக வரலாறும் கறைபடிந்த சம்பவங்களும் உள்ளன. குறிப்பாகப் பார்க்கப்போனால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் கிராமங்களே அழிக்கப்பட்டன; அத்துமீறிக் குடியேற்றங்கள் திட்டமிட்ட முறையில் செய்யப்பட்டன. இது பெரும்பான்மை சிங்களவர்களாலும் சிறுபான்மை முஸ்லிம்களினாலுமே இடம் பெற்றன.
 
இந்தியர் அறியாத இந்துத் தமிழர் துயர்
போர் நடைபெற்ற வேளைகளில் சில சிங்கள முஸ்லிம் கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகின என்பது உண்மை. ஆனால், திட்டமிட்ட முறையில் எந்த இனத்தவருடைய கிராமங்களும் தமிழர்களினால் அழிக்கப்படவோ அல்லது ஆக்கிரமிக்கப்படவோ இல்லை. சிங்கள, முஸ்லிம் இனத்தவரின் வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள் என்பன அழிக்கப்படவோ அல்லது மாற்றப்படவோ இல்லை. ஆனால் தமிழர்களின் பல வணக்கத்தலங்கள், பாடசாலைகள் என்பன முஸ்லிம்களினால் அழிக்கப்பட்டும் பின் தங்களின் இனத்திற்கென மாற்றப்பட்ட சம்பவங்களே வரலாறாக உள்ளன.
.
.
.
இலங்கைச் சோனகர்கள் சில குறிப்புகள்.
1.ஆரம்பத்தில் மேற்குக்கரையோரமாக இருந்தார்கள்.
2.16 ஆம் நூற்றாண்டில் போத்துக்கேயர் வந்தார்கள்.அவர்களுக்கும் இவர்களுக்கும் மதம்,வியாபாரம் இரண்டிலும் பெரும்பகை.தாக்கிவிரட்டினார்கள்.கண்டி மன்னன் செனரத் என்ற புண்ணியவான் அடைக்கலம் கொடுத்து மலையகத்திலும்,அன்று அவனுக்குக் கீழ் இருந்த கிழக்கு வன்னிமைகளுக்கு உள்பட்ட பிரதேசங்களிலும் குடியேற்றினான்.
தமிழர்களின் ஊர் கல்முனை என்றால் அதற்குப் பக்கத்தில் குடியேற்றப்பட்ட இவர்களின் ஊர் கல்முனைக் குடி.இப்படி ‘குடி’ என்ற பின்னொட்டுடன்
இன்றும் கிழக்கில் முஸ்லிம் கிராமங்கள் இருக்கின்றன.
என்ன பிரச்சனை என்றால் இன்று ஓட்டகத்துக்கு இடம் கொடுத்த கதையாகி இந்த ‘குடி’ கிராமங்கள் பெருத்து தமிழ் ஊர்களையும் விழுங்கத்தொடங்கிவிட்டன.கிழக்கில் நடக்கும் அட்டூழியங்களை அங்குள்ள தமிழர்களிடம் கேட்டால் இரத்தக் கண்ணீர் வரும்.
3.ஆங்கிலேயர் இனங்களின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கியபோது நாம் தமிழர்கள் அல்ல ஆராபிய வியாபாரிகளுக்கு உள்ளூர்ப் பெண்களுக்கும் பிறந்தவர்கள்.தமிழ் தெற்காசியாவின் வணிகமொழியாக இருந்ததால் அதைப் பேசத்தொடங்கியவர்கள்.அது எம் மொழியல்ல.நாம் தனியான இனம்.சோனகர்கள் என்று கூறி தனியான பிரதிநிதித்துவம் பெற்றவர்கள்.
4.சோனகர் என்பது யவனர் என்பதன் திரிபாக இருக்கவேண்டும்.மேற்கில் இருந்து கடல்மூலம் வியாபாரத்துக்கு வந்த கிரேக்கர்,ரோமர்.அராபியர்,சோமாலியர் அனைவரையும் தமிழர்கள் யவனர் என்று அழைத்திருக்கிறார்கள்.எனவே இவர்களையும் அப்படியே யவனர்-சோனகர் என்று அழைத்து அதுவே இவர்களின் பெயராக மாறியிருக்கலாம்
5.ஆங்கிலத்தின் இவர்கள் ஸ்ரீலங்கன் மூர்(Sri lankan moors) என்று அழைக்கப்படுகிறார்கள்.
6.இலங்கையில் தமிழ் சைவர்களும் தமிழ் கிறிஸ்தவர்களும் ஒன்றாகவே இருக்கிறார்கள்.ஏன் முஸ்லிம்களை ஒன்றாகக் கருதுவதில்லை என்பது பலருக்கு(பெரும்பாலும் தமிழகத்தில் இருக்குப்பவர்களுக்கு) ஏற்படும் சந்தேகம்.அதற்கு மிக முக்கிய காரணம் கிறிஸ்தவர்கள் சைவர்களில் இருந்து மதம் மாறியவர்கள்.இன்றும் உறவினர்கள்.
ஆனால் சைவர்கள் முஸ்லிம்களாக மாறவில்லை.அவர்கள் சோனகர்கள் என்ற இனமாக மாறிய பின்னர் தமிழ்ப் பிரதேசங்களில் குடியேறியவர்கள்.இவர்களுக்கு இடையில் நாம் பொது மூதாதையரைக் கொண்டவர்கள்,உறவினர்கள் என்ற ஓர் இனத்துக்கு அவசியமான மன உறவு இதனால் ஏற்படவில்லை.
7.இலங்கைச் சோனகர்களில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கினர் சிங்களப் பெரும்பான்மை பிரதேசங்களையே வாழ்விடமாகக் கொண்டவர்கள்.வீட்டுமொழியாக தமிழைப் பேசினாலும் கல்வி மொழியாகவும் தொடர்பு மொழியாகவும் சிங்களத்தை ஏற்றுக்கொண்டு சிங்களப் பெண்களை மணம்முடித்து சிங்களவர்களுடன் நெருங்கி வாழ்பவர்கள்.
8.மிக இளவயதுத் திருமணங்கள் காரணமாக ஏனைய இனத்தினரைவிட அதிகமான சனத்தொகை அதிகரிப்புக் காணப்படுவதால் 100 வருடங்களில் இவர்களின் சனத்தொகை 5% இல் இருந்து 10% வரை அதிகரித்துவிட்டது.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான தவறான பொது கருத்தொன்று இருப்பதையும் சுட்டிக்காட்டவேண்டும்.முஸ்லிம்கள் பலதாரமணம் செய்பவர்கள் அதனால்தான் சனத்தொகை அதிகரிக்கின்றது என்று கூறுவார்கள்.ஆனால் அது பெருமளவுக்கு உண்மையல்ல.பலதாரமணம் பெரும்பாலான முஸ்லிம்கள் செய்வதில்லை.
சனத்தொகைப் பெருக்கத்துக்கு முக்கிய காரணம் பெண்களின் கல்வியறிவு குறைவாக இருப்பதும்,மிக இள வயதுத் திருமணங்களுமே ஆகும்.
.
9.சிங்களவர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்களின் குடியுரிமையை பறித்து நாடுகடத்தினார்கள்,ஈழத் தமிழர்களை யுத்தம் செய்து குறைத்தார்கள்.ஆனால் அவர்களுக்கு இன்று எதிர்பாராத இடத்தில் இருந்து அச்சுறுத்தல் உருவாகிவிட்டதாக உணர்கிறார்கள்.யுத்தம் முடிந்த பின்னர்தான் அவர்களுக்கு மாறிவரும் இனவிழுக்காட்டுப் பரம்பல் ஓடி உறைத்தது.தமிழர்களை மட்டும் நினைத்துக்கொண்டிருந்ததால் சோனகர்களைப் பொருட்படுத்தாமல் இருந்துவிட்டோம் என்கிறார்கள்.
10.தமிழர்கள் இலங்கையின் ஒரு துண்டைத்தான் கேட்டார்கள்.ஆனால் சோனகர்கள் முழு இலங்கையையும் இஸ்லாமிய மயமாக்கப்போகிறார்கள்.
இந்தோனேசியா,மலேசியாவில் நிகழ்ந்ததுபோன்று இலங்கையிலும் பௌத்தம் அளியப்போகின்றது என்று இன்று சிங்கள இனவாதிகள் ஒப்பாரி வைக்கிறார்கள்.
11.தமிழர்கள் ஒரு போதும் சிங்களப் பண்பாட்டையோ பௌத்த மதத்தையோ எதிரிகளாகவோ அதை இல்லாதொழிப்பது சரியானதென்ற கொள்கையோ உடையவர்கள் என்ற அடிப்படையில் இதை ஆராய்ந்தால் 30 வருடப் போரில் 100,000 மேற்பட்ட சிங்கள இளைஞர்களைப் போரில் பறிகொடுத்து சிங்களவர்கள் அடைந்தது என்ன!உண்மையில் தமிழர்களுடனான யுத்தத்தில் சிங்களவர்கள் வென்றார்களா தோற்றார்களா?
12.இலங்கையின் இனமுரண்பாட்டு வரலாற்றில் ஒரு சுழற்சி இருக்கின்றது.சிங்களவர்கள் முதன்முதலில் இலங்கைச் சோனகர்களுடனேயே மோதினார்கள்.அதுதான் 1915 கண்டிக் கலவரம்.
அதன் பின்னர் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களை எதிரிகளாக்கினர்
பின்னர் நேரடியாகவே ஈழத் தமிழர்களுடக்கு எதிராக இனக் கலவரங்களை நடத்தி எம்மை யுத்தத்துக்குள் தள்ளினர்.
இன்று ஒரு வட்டம் முழுமையடைந்துவிட்டது. மீண்டும் சோனகர்களுடனான முரண்பாட்டை கையில் எடுக்கின்றனர்.
தந்திரமான சோனக அரசியல்வாதிகளோ தமிழர்-சிங்கள முரண்பாடு தீர்ந்துவிடக்கூடாது அப்படி நடந்தால் சிங்களவர்கள் தம்மைத்தான் இலங்குவைப்பார்கள் என்பதனால் தமிழர்களை சிங்களவர்களுக்கு தொடர்ந்து எதிரிகளாகக் காட்டுகிறார்கள்.
அண்மையில் எழுத்தாளர்கள் என்று கூறிக்கொள்ளும் சோனகர்களும்.ஹக்கீம் போன்ற அரசியல்வாதிகளும் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை இனவாதம் செய்கின்றார் என்று குறிப்பிட்டது தற்செயலானதல்ல.தமிழர்கள் சண்டையிட்டு சாகட்டும் நாம் அதைப் பயன்படுத்தி எம்மை வளர்த்துக்கொள்வோம் என்ற கடந்த கால நிலைப்பாட்டின் தொடர்ச்சியான அணுகுமுறையே.
.
.
..தொப்பி தமிழனாக முடியுமா ?……
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் ஒரு இனக்குழுமம் அல்லவே!

அது ஒரு மதக் குழுமம் மட்டுமே....!

Link to comment
Share on other sites

7 hours ago, புங்கையூரன் said:

முஸ்லிம்கள் ஒரு இனக்குழுமம் அல்லவே!

அது ஒரு மதக் குழுமம் மட்டுமே....!

உண்மைதான். நடந்தது மதச்சுத்திகரிப்பு என்கிறீர்கள், இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Jude said:

உண்மைதான். நடந்தது மதச்சுத்திகரிப்பு என்கிறீர்கள், இல்லையா?

ஜுட், நீங்கள் எதற்காக...எனக்குள் வார்த்தைகளை வலிந்து திணிக்கின்றீர்கள்?

நான் எங்கேயாவது....மதச் சுத்திகரிப்பு என்று குறிப்பிட்டுள்ளேனா? 

Link to comment
Share on other sites

2 minutes ago, புங்கையூரன் said:

ஜுட், நீங்கள் எதற்காக...எனக்குள் வார்த்தைகளை வலிந்து திணிக்கின்றீர்கள்?

நான் எங்கேயாவது....மதச் சுத்திகரிப்பு என்று குறிப்பிட்டுள்ளேனா? 

 

7 hours ago, புங்கையூரன் said:

முஸ்லிம்கள் ஒரு இனக்குழுமம் அல்லவே!

அது ஒரு மதக் குழுமம் மட்டுமே....!

இனச்சுத்திகரிப்பு பற்றிய இந்த திரியில் ஏன் அவர்களை "மதக் குழுமம் மட்டுமே" என்று எழுதி இருக்கிறீர்கள்? இனத்தை சுத்திகரிதால் இனச்சுத்திகரிப்பு. அது பற்றியதே இந்த திரி. நீங்கள் "முஸ்லிம்கள் ஒரு இனக்குழுமம் அல்லவே!" என்று எழுதி இருக்கிறீர்கள். ஆனால் சுத்திகரிப்பை நீங்கள் நடக்கவில்லை என்றோ, பொய் என்றோ எழுதவில்லை. இனத்துக்கு பதிலாக  "மதக் குழுமம் மட்டுமே" என்றும் எழுதி இருக்கிறீர்கள்.  சுத்திகரிப்பை நீங்கள் மறுக்காத நிலையில், இந்த திரியில் முஸ்லிம்கள் இனக்குழுமம் அல்ல,  மதக் குழுமம் என்று எழுதி உள்ளது  சுத்திகரிப்பை நீங்கள் .மதச் சுத்திகரிப்பு என்று ஏற்று கொள்வதாகிறது. அப்படியில்லாவிட்டால், நீங்கள் சுத்திகரிப்பை மறுத்து இருப்பீர்கள் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Jude said:

 

இனச்சுத்திகரிப்பு பற்றிய இந்த திரியில் ஏன் அவர்களை "மதக் குழுமம் மட்டுமே" என்று எழுதி இருக்கிறீர்கள்? இனத்தை சுத்திகரிதால் இனச்சுத்திகரிப்பு. அது பற்றியதே இந்த திரி. நீங்கள் "முஸ்லிம்கள் ஒரு இனக்குழுமம் அல்லவே!" என்று எழுதி இருக்கிறீர்கள். ஆனால் சுத்திகரிப்பை நீங்கள் நடக்கவில்லை என்றோ, பொய் என்றோ எழுதவில்லை. இனத்துக்கு பதிலாக  "மதக் குழுமம் மட்டுமே" என்றும் எழுதி இருக்கிறீர்கள்.  சுத்திகரிப்பை நீங்கள் மறுக்காத நிலையில், இந்த திரியில் முஸ்லிம்கள் இனக்குழுமம் அல்ல,  மதக் குழுமம் என்று எழுதி உள்ளது  சுத்திகரிப்பை நீங்கள் .மதச் சுத்திகரிப்பு என்று ஏற்று கொள்வதாகிறது. அப்படியில்லாவிட்டால், நீங்கள் சுத்திகரிப்பை மறுத்து இருப்பீர்கள் இல்லையா?

உண்மை தான். ஜுட்!

ஆட்டுக்கு நான்கு கால்கள் இருக்கின்றன!

மாட்டுக்கும்  நான்கு கால்கள் தான் இருக்கின்றன!

எனவே  ஆடு....கட்டாயம்  மாட்டிலிருந்து  தான்.... உண்டாகியிருக்க வேண்டும்!

Link to comment
Share on other sites

13 minutes ago, Jude said:

 

இனச்சுத்திகரிப்பு பற்றிய இந்த திரியில் ஏன் அவர்களை "மதக் குழுமம் மட்டுமே" என்று எழுதி இருக்கிறீர்கள்? இனத்தை சுத்திகரிதால் இனச்சுத்திகரிப்பு. அது பற்றியதே இந்த திரி. நீங்கள் "முஸ்லிம்கள் ஒரு இனக்குழுமம் அல்லவே!" என்று எழுதி இருக்கிறீர்கள். ஆனால் சுத்திகரிப்பை நீங்கள் நடக்கவில்லை என்றோ, பொய் என்றோ எழுதவில்லை. இனத்துக்கு பதிலாக  "மதக் குழுமம் மட்டுமே" என்றும் எழுதி இருக்கிறீர்கள்.  சுத்திகரிப்பை நீங்கள் மறுக்காத நிலையில், இந்த திரியில் முஸ்லிம்கள் இனக்குழுமம் அல்ல,  மதக் குழுமம் என்று எழுதி உள்ளது  சுத்திகரிப்பை நீங்கள் .மதச் சுத்திகரிப்பு என்று ஏற்று கொள்வதாகிறது. அப்படியில்லாவிட்டால், நீங்கள் சுத்திகரிப்பை மறுத்து இருப்பீர்கள் இல்லையா?

 

3 minutes ago, புங்கையூரன் said:

உண்மை தான். ஜுட்!

ஆட்டுக்கு நான்கு கால்கள் இருக்கின்றன!

மாட்டுக்கும்  நான்கு கால்கள் தான் இருக்கின்றன!

எனவே  ஆடு....கட்டாயம்  மாட்டிலிருந்து  தான்.... உண்டாகியிருக்க வேண்டும்!

நான் ஆடும் மாடும் நான்கு கால்கள் உள்ள மிருகங்கள் என்ற முடிவுக்கே வருவேன். "ஆடு....கட்டாயம்  மாட்டிலிருந்து  தான்.... உண்டாகியிருக்க வேண்டும்!" என்ற முடிவுக்கு நீங்கள்  வந்திருப்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கவும் இல்லை.😃 அப்படியான சிந்தனை போக்கு கொண்டவர்கள் எம் மத்தியில் இருப்பதால் தான் எங்கள் மக்களுக்கு இந்த அவல நிலை.

அதே நேரம், இந்த மத சுத்திகரிப்பை நீங்கள் மறுக்க முடியாமல் இந்த திரியில் ஆட்டையும் மாட்டையும் கொண்டு வரும் அவல நிலையில் இருப்பதையும் நாங்கள் காண்கிறோம் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Jude said:

 

நான் ஆடும் மாடும் நான்கு கால்கள் உள்ள மிருகங்கள் என்ற முடிவுக்கே வருவேன். "ஆடு....கட்டாயம்  மாட்டிலிருந்து  தான்.... உண்டாகியிருக்க வேண்டும்!" என்ற முடிவுக்கு நீங்கள்  வந்திருப்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கவும் இல்லை.😃 அப்படியான சிந்தனை போக்கு கொண்டவர்கள் எம் மத்தியில் இருப்பதால் தான் எங்கள் மக்களுக்கு இந்த அவல நிலை.

அதே நேரம், இந்த மத சுத்திகரிப்பை நீங்கள் மறுக்க முடியாமல் இந்த திரியில் ஆட்டையும் மாட்டையும் கொண்டு வரும் அவல நிலையில் இருப்பதையும் நாங்கள் காண்கிறோம் இல்லையா?

அது சரி...!
உங்களைப் போல....சில அவதார புருசர்கள் உருவாகி....எமது மக்களின் இன்னல்களைத் துடைத்தெறிந்தால்...எனக்கும் மகிழ்ச்சியே!
நன்றி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

உண்மை தான். ஜுட்!

ஆட்டுக்கு நான்கு கால்கள் இருக்கின்றன!

மாட்டுக்கும்  நான்கு கால்கள் தான் இருக்கின்றன!

எனவே  ஆடு....கட்டாயம்  மாட்டிலிருந்து  தான்.... உண்டாகியிருக்க வேண்டும்!

புங்கை, விளக்கமில்லாதவர்களுக்கு பதில் எழுதி உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, புங்கையூரன் said:

அது சரி...!
உங்களைப் போல....சில அவதார புருசர்கள் உருவாகி....எமது மக்களின் இன்னல்களைத் துடைத்தெறிந்தால்...எனக்கும் மகிழ்ச்சியே!
நன்றி...!

புங்கையர்! அந்தாள் ஒரு மாதிரித்தான் கதைக்கிறவர். நீங்கள் விட்டுட்டு வெளியிலை வாங்கோ 😎

Link to comment
Share on other sites

முஸ்லீம்கள் யாழ்பாணத்தில்  இருந்து வெளியேற்றப்பட்டது 1990 ம் ஆண்டு. அதற்காக விடுதலைப்புலிகள் தமது தவறை உணர்ந்து வருத்தமும் பல முறை   தெரிவித்து விட்டார்கள். தமிழ்மக்கள்  கூட இதை விரும்பவில்லை என்பதை புலிகளும் பிறகு உணர்ந்தே இருந்தார்கள். 

 1995 ல் இராணுவம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய போது முஸ்லீம் மக்கள் தாராளமாக தமது வீடுகளுக்கு திரும்பி தமது தொழில்களை தொடங்கி இருப்பதற்கு நல்ல சந்தர்ப்பம் இருந்தது. விடுதலைப்புலிகளும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டிய புற சூழலே அங்கு இருந்தது.  அது முஸலீம் மக்களுக்கு  நன்கு தெரியும் அப்போது அதைச் செய்யாமல் புத்தளத்தில்  புதிய இடத்தில் நிரந்தரமாக தங்கி தமது பொருளாதாரத்தையும் குடும்பங்களையும் அங்கு விருத்தி செய்துவிட்டு  தமது அரசியல் தேவைக்காக இப்போதும் அதனை ஒரு தூக்கி படிப்பது சரியானதல்ல.  

யுத்ததின்போது இடம் பெயர்ந்த  தமிழ் மக்கள்  மீள் குடியேற்றத்தின் போது தமக்கு உரிமையான காணிகளை மட்டுமே கோருகின்றனரே தவிர தமது பிள்ளைகளுக்காக சுற்றாடலில் உள்ள மற்றயவர்களின் காணிகளைக்  கோரவில்லை. அதே வேளை கிழக்கு மாகாணத்தில் அதே 1990 களில் தமது வீடுகளை விட்டு வன்முறையுடன் துரத்தப்பட்ட தமிழ்  மக்களின் பல கிராமங்கள் முஸ்லீம் கிராமங்களாக மாற்றப்பட்டு தமிழ் மக்கள் அங்கு  நிரந்தரமாகவே திரும்ப முடியாத நிலை உள்ளதையும் முஸ்லீம்கள் உணரவேண்டும்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.